ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143303 topics in this forum
-
மணலாற்றில் மோட்டார் எறிகணைத் தாக்குதல்: சிங்கள குடியேற்றவாசிகள் தப்பியோட்டம் மணலாற்றில் உள்ள சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட மோட்டார் எறிகணைத் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் அதிகாரி ஒருவர் உட்பட 5 படையினர் காயமடைந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்திருக்கின்றது. நேற்று முன்தினம் புதன்கிழமை காலை மணலாற்றில் உள்ள அதவதுநுவெவப் பகுதியில் உள்ள சிறிலங்காப் படையினரின் காவல் நிலைகளை இலக்குவைத்து இந்த தாக்குதல் நடத்தப்ட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சரமாரியான எறிகணைத் தாக்குதல்களை அடுத்து அப்பகுதியில் உள்ள தமிழ் மக்களின் நிலங்களில் குடியமர்த்தப்பட்ட சிங்கள மக்கள் தப்பி ஓடியுள்ளதாக கூறப்படுகின்றது. தப்பி…
-
- 0 replies
- 1.7k views
-
-
வியாழன் 31-05-2007 01:57 மணி தமிழீழம் [சிறீதரன்] சிறீலங்காவிற்கு ஆயுத உதவி வழங்குவதை நிறுத்தக்கோரிக்கை – டாக்ரர்.ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ இந்தியாவை சிறீலங்கா அரசாங்கம் சமாதான பேச்சுவார்த்தைக்கு சென்று இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும்வரை சிறீலங்காவற்கு ஆயுத உதவிகளை வழங்கக்கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார். தீடீரென இந்தியாவிற்கு விஐயம் செய்த சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராயபக்ச இந்தியாவின் தேசியபாதுகாப்பு ஆலோசகர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதையடுத்தே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இவ்வாறு வழங்கப்படும் உதவியானது சிறீலங்காவில் அப்பாவிப்பொதுமக்களுக்கு எதிராக உபயோகிக்கப்படும் எனவும் 6.5 கோடி இந்த…
-
- 1 reply
- 1.1k views
-
-
இந்தியாவிடம் அவசர ஆயுத உதவி கோரியுள்ள சிறிலங்கா: கோத்தபாய டில்லியில் முக்கிய பேச்சு வான் புலிகளால் உருவாகியிருக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக இந்தியாவிடம் சிறிலங்கா அரசாங்கம் அவசரமான ஆயுத உதவிகளைக் கோரியிருப்பதாக பி.ரி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இடத்துக்கிடம் எடுத்துச்செல்லக்கூடிய ராடார்கள், தரையிலிருந்து வானூர்திகளைத் தாக்கக்கூடிய ஏவுகணைகள் உட்பட பல ஆயுதங்களையே உடனடியாகத் தமக்குத் தந்துதவுமாறு சிறிலங்கா அரசாங்கம் அவசர கோரிக்கையை இந்தியாவிடம் விடுத்திருக்கின்றது. விடுதலைப் புலிகளிடமிருந்து வரக்கூடிய வான்தாக்குதல்கள் உட்பட ஏனைய புதிய தாக்குதல்ககளுக்கு முகங்கொடுக்கக்கூடிய வகையிலேயே இந்த 'அவசர ஆயுத உதவிகளை' சிறிலங்கா அரசாங்கம் கோ…
-
- 4 replies
- 1.3k views
-
-
யாழ். நகரை மீட்க புலிகள் பெரும் திட்டம்; இந்தியாவிடம் ஏவுகணை கேட்கும் இலங்கை! மே 30, 2007 டெல்லி: யாழ்ப்பாணம் தீபகற்பத்தை ராணுவத்திடமிருந்து விடுவிக்க விடுதலைப் புலிகள் பெரும் திட்டம் தீட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விடுதலைப் புலிகளை சமாளிக்க விமானங்களைத் தாக்கும் ஏவுகணைகளை வழங்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது இலங்கை. இந்தியா தர மறுத்தால் பிற நாடுகளை அணுகி ஏவுகணைகளைப் பெறவும் அது திட்டமிட்டுள்ளது. இலங்கை அரசுக்கும் படைகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கி வரும் விடுதலைப் புலிகள் தற்போது விமான பலத்தையும் பெற்றுள்ளனர். மூன்று முறை வெற்றிகரமான தாக்குதலையும் மேற்கொண்டுள்ளனர். இதனால் இலங்கை அரசுக்கும்இ அந்நாட்டு பாதுகாப்புப் படைகளுக்க…
-
- 2 replies
- 967 views
-
-
வியாழக்கிழமை, 31 மே 2007, 17:22 ஈழம்] [அ.அருணாசலம்] தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 2002 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டை அரசு சில வாரங்களுக்குள் தூக்கி வீசிவிடும் என சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது. அனைத்துலக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு இன்று வியாழக்கிழமை கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல மேலும் தெரிவித்துள்ளதாவது: நோர்வேயின் அனுசரணையுடன் கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த உடன்பாடு கடந்த ஆண்டு களத்தில் முறிவடைந்த பின்னர் தற்போது காகிதத்தில் மட்டுமே உள்ளது. விடுதலைப் புலிகள் படையினரை தாக்கி வருவதனால் அது நீண்டகாலம் நீடிக்கப்போவதில்லை. போர்நிறுத்த உடன்பாட்டை அரசு கைவிட எண்ணியுள்ளது. ஏனெ…
-
- 6 replies
- 1.4k views
-
-
மீராவோடையில் தாக்குதல் தமிழ் இளைஞன் உயிரிழப்பு வீரகேசரி நாளேடு மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதுடன் இராணுவ லெப்டினன்ட் ஒருவரும் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் நேற்றுக்காலை 9.40 மணியளவில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தில் மீராவோடை பகுதியைச் சேர்ந்த எம். கோகுலன் (27 வயது) என்றழைக்கப்படுபவரே பலியானவராவார். இவர் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என தெரிவித்த பொலிஸார் இவரின் சடலம் மீட்கப்பட்டு வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் காயமடைந்த இராணுவ லெப்டினன்ட் லந்தலால் (32 வயது) என்றழைக்கப்படுபவர் வாழைச்சேனை வைத்தியசாலைய…
-
- 0 replies
- 1.1k views
-
-
வெளிநாடுகள் சிறிலங்காவின் போர்நடவடிக்கைகளுக்கு உதவிக்கொண்டிருக்கும் வரை மனிதஉரிமை மீறல்களைத் தடுக்க முடியாது. -மனோகரன்- இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்டுவரும் சர்வதேசக்கவனம் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்மக்களுக்குச் சாதகமானதாக, நீதியின்பாற்பட்டதாக அமையுமா என்ற கேள்வி தற்போது பலதரப்பினரிடையேயும் எழுந்திருக்கிறது. ஏற்கனவே வெளிச்சக்திகளின் தலையீடு அல்லது பங்கேற்பு என்பவற்றால் எந்த நன்மையும் பெறாத தமிழ்மக்கள் இப்போது புதிதாக உருவாகிவரும் வேறொரு கவனம் குறித்து இவ்வாறு சிந்திப்பது தவிர்க்க முடியாதது. இருபது ஆண்டுகளுக்கு முன்பான இந்தியத்தலையீடும் பின்னர் அண்மையில் நோர்வேயின் பங்கேற்பும் இலங்கையின் இனப்பிரச்சினைத்தீர்வில் எந்த முன்னேற்றத்தைய…
-
- 0 replies
- 914 views
-
-
புங்குடுதீவில் கண்டெடுக்கப்பட்ட சடலம் காணாமல் போன கிறிஸ்தவ மதகுருவினுடையது. கடந்த மார்ச் மாதம் 14 ஆம் நாள் புங்குடுதீவில் உள்ள கடற் கரைப்குதியில் இராணுவச் சாக்கு ஒன்றிற்குள் கண்டெடுக்கப்பட்ட உடற்பகுதிகள் காணாமல் போன கிறிஸ்தவ மதகுருவான வண. ஜிம் பிறவுண் அடிகளினுடையது என மரபணு (DNA) சோதனைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இத்தகவலை இன்று வியாழக்கிழமை மகரகம மருத்துவனையின் உத்தியோகபூர்வமற்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தமிழ்நெட் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட சடலத்தின் பகுதிகளும், ஜிம் பிறவுண் அடிகளாரினது பெற்றோரின் குருதி மாதிரிகளையும் தாம் பெற்றுள்ளதாகவும் விரைவில் மரபணு சோதனை நடத்தப்படும் எனவும் மருத்துவமனையின் சட்டபூவமான அதிகாரி ஒருவர் முன்…
-
- 2 replies
- 1.3k views
-
-
May 31, 2007 at 06:49 PM வத்தளை, ஹெந்தளை மற்றும் மாபொல பகுதிகளில் பாரிய அளவில் தேடுதல் நடவடிக்கை ஒன்று தற்போது மேற்கொள்ளப்படுகின்றது. இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்தே பாரிய அளவில் இந்த தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். வீதிகள் எங்கும் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டு வீடு வீடாக இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று போயா விடுமுறை தினம் ஆகையால் அனைவரும் வீட்டில் இருக்கும் மற்றும் வாகன போக்குவரத்துக்களும் குறைவாக இருக்கும் இந்த தருணத்தில் இந்த தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த தேடுதல் நடவடிக்கைகளின்போது தமது அடையாளங்களை நிரூபிக்க தவறியுள்ளனர் எனத் தெரிவித்து இதுவரை சுமார் 30மேற்பட்ட இளைஞர் …
-
- 1 reply
- 1.2k views
-
-
வியாழக்கிழமை, 31 மே 2007, 18:57 ஈழம்] [அ.அருணாசலம்] இலங்கையில் பல காலமாக இடம்பெற்று வரும் போர், அங்குள்ள சமூகங்களுக்கு இடையிலான வேற்றுமைகளை அதிகரித்துள்ளது. இருதரப்பும் குற்றம் சுமத்தப்படுகின்றனர். எனினும் சிங்கள மக்களை கொண்டுள்ள அரசானது சிங்கள மொழியையும், பௌத்த மதத்தையும் முதன்மைப்படுத்தி ஏனைய இனங்களையும், மதங்களையும் சிறுமைப்படுத்தி வருகின்றது என ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தி ஆய்வில் ஜோன் றுவிச் தெரிவித்துள்ளார். அதன் முக்கிய பகுதிகள் வருமாறு: தேங்காயை எரியும் பித்தளை எண்ணெய் விளக்கிற்கு அருகில் வைப்பதன் மூலம் சாதாரண மேசையை ஒரு இந்து சமய முறையுள்ள மேசையாக மாற்றியிருந்தனர். அங்கிருந்த பெண் எம்முடன் பேசும் போது தனது எதிர்காலம் தொடர்பாக நம்பிக்கையாக…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஈழப்போரட்டத்துக்கு எதிராக மீண்டும் இந்தியா? ராமேஸ்வரம் பகுதியில் 6 கப்பல்களுன் 500 படையினரும் படைகலன்களும் ஏவுகணைகளுடனும் நிற்பதாக வானொலிச்செய்தி இது உண்மையா?
-
- 46 replies
- 6.3k views
-
-
மணலாறில் எறிகணைத் தாக்குதல்: படைச் சிப்பாய் பலி! மேலும் ஒருவர் படுகாயம் மணலாறு ஆணைவிழுந்தான் பகுதி நோக்கி விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மோட்டார் எறிகணைத் தாக்குதலில் சிறீலங்காப் படையினர் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று முற்பகல் 10.30 மணிக்கு நடத்தப்பட்ட தாக்குதலிலேயே இவர்கள் படுகாயமடைந்தனர். காயடைந்த இருவரும் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அதில் ஒருவர் சிகிற்சைகள் எதுவும் பலனின்றி உயிரிழந்தாகவும் தேசிய பாதுகாப்பு ஊடக மையம் செய்தி வெளியிட்டுள்ளது. பதிவு
-
- 0 replies
- 944 views
-
-
ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் பார்க்கவேண்டிய ஒரு காணொளி
-
- 0 replies
- 1.5k views
-
-
கொள்கை வழிகாட்டிகள் மூலமே சிறிலங்காவிற்கான உதவிகள் வழங்கப்படும்: ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவிற்கான மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி உதவிகளை வழங்குவதற்கு 10 கொள்கை வழிகாட்டிகளை தாம் தயாரித்துள்ளதாகவும், அதில் பிரதான கொடையாளர்கள் கையொப்பங்களை இட்டுள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஆணைக்குழு, ஜேர்மனி, கிறீஸ், ஜப்பான், நெதர்லாந்து, நோர்வே, தென்கொரியா, சுவீடன், சுவிற்சலாந்து, பிரித்தானியா, ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா போன்ற உதவி வழங்கும் நாடுகள் இந்த கொள்கை வழிகாட்டி ஆவணத்தில் மே 20 ஆம் நாள் கையொப்பம் இட்டுள்ளன. இது தொடர்பில் ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் ஜுலியன் வில்சன் தெரிவித்துள்ளதாவது: இந்த கொள்ளை வழிகாட்டியான…
-
- 3 replies
- 1.5k views
-
-
ஹெல உறுமயவின் `வாய்ப்பாடு' [31 - May - 2007] இனநெருக்கடிக்கு துரித தீர்வைக் கண்டு இரத்த ஆறு பெருக்கெடுத்தோடுவதை தடுத்து நிறுத்துமாறு சர்வதேச சமூகமும், உள்நாட்டிலுள்ள நியாய சிந்தை படைத்ததோரும் தொடர்ந்தும் குரல் கொடுத்து வரும் நிலையில் தென்னிலங்கையில் பெரும்பான்மை சிங்கள மக்களின் மதிப்புக்குரியவர்களான பௌத்த மதகுருமாரின் ஜாதிக ஹெல உறுமய இந்த நாட்டில் இனப்பிரச்சினையொன்று இல்லை. தமிழ் மக்களுக்கு துயரங்கள், சிக்கல்கள் இருப்பதாக தமக்குத் தென்படவில்லையென்ற `வாய்ப்பாட்டை' மீண்டும் பாடியுள்ளது. கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் முளைவிட்ட இனநெருக்கடி பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம்பெற்ற பின் அரச நிர்வாக இயந்திரம் பெரும்பான்மைச் சிங்கள மக்களின் பிரதிநிதிகளிடம் கைமாறிய பின…
-
- 1 reply
- 1k views
-
-
மர்ம படகுகள் குறித்த அச்சத்தால் படையினர் கடலை நோக்கி தாக்குதல். வேலனை கடற்பிரதேசத்தில் நேற்று முன்தினம் அதிகாலை 2.00 மணியளவில் கடற்படைமுகாமிலிருந்தும் கடற்படையின் டோராப் பீரங்கிப் படகிலிருந்தும் சரமாரியான துப்பாக்கி பிரயோகங்களும் பீரங்கித் தாக்குதல்களும் இடம்பெற்று இருப்பதாக இப்பிரதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடலில் சில மர்ம படகுகள் நடமாடியதாகவும் இதனைத் தொடர்ந்து குறித்த படகுகள் தொடர்பான அச்சத்தால் கலக்கமடைந்த படைத்தரப்பு கடற்பகுதியை நோக்கி தாக்குதலை மேற்கொண்டு இருப்பதாகவும் அதனைத் தொடர்ந்து இப்பிரதேசத்தின் கடற்படைபரப்பின் மீது காலை 6.00 மணியளவில் இரு தடவைகள் படை உலங்கு வானூர்தி இரண்டு கண்கானிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பதாகவும் இப்பிரதேச மீனவர்கள் தெரி…
-
- 1 reply
- 1.6k views
-
-
Gjd;fpoik, 30 Nk 2007 ] [ yf;];kd; ] Nearly 80 pro-Pillaiyan cadres are held incommunicado in deplorable condition in camps run by Karuna supporters. Also 27 women, who are mostly mothers and wives of Pillaiyan supporters are detained illegally and held by Karuna's cadres. These detained women are wives and mothers of those Pillaiyan supporters who have left Amparai Batticaloa and joined Pillaiyan group in the Trincomalee district. A spokesman for Pillaiyan group told that the Karuna and Pillaiyan began attacking each other soon after Ajith, Devilkanth, Jeyanthan and Seelan joined with Pillaiyan group. The spokesman further said that when the cadres were on their way…
-
- 0 replies
- 672 views
-
-
ராஜீவ் கொலைக்குப் பின் புலிகள் மீது வெறுப்பை ஏற்படுத்திய இரண்டாவது சம்பவம் [31 - May - 2007] கடந்த மார்ச் மாதம் இந்திய மீனவர்கள் புலிகள் இயக்கத்தினரால் பாக்கு நீரிணைக் கடல் பகுதியில் வைத்துப் பிடித்துச் செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் அண்மையில் விடுவிக்கப்பட்ட சம்பவம் இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் அரசியல் ரீதியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது. இது பற்றி இந்தியப் பத்திரிகைகள் தெரிவிக்கையில், இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் அண்மையில் மிக மோசமான அரசியல் குழப்பநிலையை ஏற்படுத்தியுள்ள சம்பவம் இதுவென்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டு மீனவர்களைப் புலிகள் இயக்கத்தினரே பிடித்துச் சென்று தடுத்து வைத்தார்கள் என்ற தகவல் வெளியானதைத…
-
- 2 replies
- 2.4k views
-
-
Posted on : Thu May 31 5:35:59 EEST 2007 போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து அரசு முடிவுசெய்யவேண்டிய காலம் வந்துவிட்டது இன்றைய தள நிலையில் அது அர்த்தமற்றதாகி விட்டதாக அறிவிப்பு அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கைச்சாத்தான போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்துத் தீர்க்கமான முடிவு எடுக்கப்படவேண்டிய காலம் கனிந்துவிட்டது. ஒப்பந்தம் கைச்சாத்தான காலத்தில் நிலவிய சூழ்நிலைக்கும் இன்றைய தள நிலைமைக்கும் இடையில் பெரும் வேறுபாடு உள்ளது. ஆகையால், போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதா என்பது குறித்து அடுத்த வாரத்தில் விசேட பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தவுள்ளோம். அரசாங்கத்தின் சார்பில் இந்தத் தக வலை வெளியிட்டார் அமைச்சர் ஹெகெ லிய ரம்புக்வெல. நேற்றைய ஊடகவ…
-
- 3 replies
- 1.2k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு உதவும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை விமர்சிப்பதன் மூலம் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுதலைப் புலிகளுக்கு நேரடியற்ற விதத்தில் உதவி வருகின்றனர் என்று சிறிலங்கா அரசு குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல கூறியுள்ளதாவது: கொழும்பு நகரில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலை அடுத்து பாதுகாப்பு படையினர் தமது எல்லைகளை மீறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர். தேடுதல் மற்றும் கைது செய்தல் என்பன பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகும். கிழக்கில், விடுதலைப் புலிகள் தோல்வி கண்டதனால் தெற்கில் தாக்குதலை நடத்துகின்றனர்.…
-
- 2 replies
- 1.3k views
-
-
Posted on : Thu May 31 5:40:46 EEST 2007 அநுராதபுரத்தில் இன்று பொசன் விழா; புலிகளின் தாக்குதல் குறித்து எச்சரிக்கை அநுராதபுரத்தில் இன்று பொசன் போயா நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இச்சந்தர்ப்பத்தில் புலிகள் அங்கு குண்டுத்தாக்குதல் நடத்தலாம் என்றும் மக்கள் அங்கு விழிப்புடன் இருக்கவேண்டும் என்றும் இராணுவப் பேச் சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க எச்சரித்திருக்கிறார். நேற்று ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியதா வது: புலிகள் மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரு கின்றனர். கொழும்பில் இரண்டு குண்டுத் தாக்குதல் களை நடத்தி விட்டனர். இரண்டு தாக்குதல்களும் மக் களைக் குறிவைத்தே நடத்தப்பட்டுள்ளன. மக்கள் இதுவரை விழிப்பாக இருந்ததன்…
-
- 1 reply
- 1.1k views
-
-
காட்டுச் சட்டங்களை எல்லாம் நாட்டில் அமுல் செய்யமுடியாது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவேசம் ""காட்டுச்சட்டங்களை எல்லாம் நாட்டில் அமுல் செய்யமுடி யாது. கொழும்பில் குண்டுகள் வெடித்தாலும், வடக்கில் சண்டை நடந்தாலும் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கை ஒருபோதும் ஸ்தம்பிதம் அடையாது.'' இவ்வாறு ஆவேசமாகக் கூறினார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. நேற்று அலரிமாளிகையில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது: இந்த நாட்டில் ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர்களில் நான் மாத்திரமே ஊடகத் தணிக்கையை இதுவரை அமுல் செய்யவில்லை. இந்நிலையில் ஊடகங்கள் நாட்டின் முக்கியமான விடயங்களையெல்லாம் அக்குவேறு ஆணிவேறாக வெளிச்சம் போட்டுக் காட்ட…
-
- 5 replies
- 1.6k views
-
-
லக்பீம பத்திரிகையின் புகைப்பட ஊடகவியலாளர் மீது கடற்படையினர் தாக்குதல். லக்பீம பத்திகையின் புகைப்படப் பிரிவில் பணிபுரியும் சஞ்சீவ சின்ரக சிறீலங்கா கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ளார். நேற்று புதன்கிழமை மாலை தாக்கபட்ட இவர் கொழும்பு தேசிய பொது மருத்துவமனையில் சிகிற்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று கொழும்பு கிரான்பாஸ் பகுதியில் அமைந்துள்ள அவரது பத்திகைப் பணிமனைக்குச் செல்லும் வழியில் உள்ள சிறீலங்காப் படையினரின் சோதனைவடியிலேயே இவர் தாக்கப்பட்டுள்ளார். சிறீலங்காப் கடற்படையினர் இலங்கை தேசிய அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு கேட்டபோது சஞ்சீவ சின்ரக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஊடவியலாளர் அடையாள அட்டையை காண்பித்த போது எழுந்த வாக்குவாதத்திலேயே இவர் படையினரால் தா…
-
- 0 replies
- 1.2k views
-
-
மனித உரிமைகள் விவகாரம்: மேற்குலகின் மீது மகிந்த கடும் பாய்ச்சல் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் விவகாரத்தில் மேற்குலக நாடுகள் கடுமையாக நடந்து கொள்வதாக அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் திங்கட்கிழமை அரச தலைவரின் அதிகாரபூர்வ இல்லத்தில் பதிவு செய்யப்பட்ட அந்த நேர்காணலிலின் போது அல்ஜசீரா தொலைக்காட்சி கேட்ட கேள்விகளுக்கு மகிந்த ராஜபக்ச சிங்களத்தில் பதிலளித்தார். அதனை ஊடக இயக்குநர் லூசியன் ராஜ கருணாநாயக்க ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். நேர்காணலின் போது மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மேற்குலக…
-
- 4 replies
- 1.4k views
-
-
தென்மராட்சி நோக்கி படையினரையும், போர்த்தளபாடங்களையும் நகர்த்தும் படையினர். தென்மராட்சி கிழக்கு படைத்தளங்களுக்கு நேற்று முன்தினமிரவு 8.00 மணியிலிருந்து அதிகாலை 1.00 வரை பாரிய போர்த்தளபாடங்களும் டாங்குகளும் ஏ-9 பிரதான சாலை வழியாக நகர்த்தப்பட்டு இருப்பதாக இப்பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. பாரிய ஊர்திகள் பிரதான இப்பாதை வழியாக நகர்ந்ததால் ஊர்திகள் செல்லும் சத்தம் இப்பிரதேசம் எங்கும் அதிர்ந்ததாகவும் தெரிவிக்கும் மக்கள் இப்போர்த தளபாடங்கள் படைத்தளங்களுக்கு நகர்த்தப்பட்ட சமயம் தென்மராட்சி கிழக்கு படைத்தளங்களிலிருந்தும் கிளாலி படைத்தளத்தில் இருந்தும் படையினரால் அரசகட்டுபாடற்ற பிரதேசங்களை நோக்கி சரமாரியாக எறிகணை மற்றும் பல்குழல் பீரங்கித் தாக்குதல்கள் தொடர்ச்சியாக மேற…
-
- 4 replies
- 2k views
-