Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ் உணர்வாளர்கள் அமைப்பிடம் ஜனாதிபதி அளித்த வாக்குறுதி! மட்டக்களப்பு மாவட்டத்தின் அறுவடைக் காலத்தையும், விதைப்புக் காலத்தையும் கருத்திற் கொண்டு உரமானியம், நெல் விலை நிர்ணயம் மற்றும் நெல் கொள்வனவு மேற்கொள்ளப்படும் என தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகனிடம் ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பிற்கு தனிப்பட்ட திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே இவ்வாறான உறுதியளிப்பு மேற்கொள்ளப்பட்டதாக தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட ரீதியில் …

    • 0 replies
    • 606 views
  2. நாமலுக்கும் சமலுக்கும் புதிய பதவிகள்: நன்றி தெரிவித்து நாமல் டுவீட்! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, நாமல் ராஜபக்ஷ மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தின் சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ‘புதிய நியமனம் கிடைத்தமை பெருமையாக உள்ளது’ என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாடாளுமன்றத்தின் நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ ஏகமனத…

  3. நான்கு வருடங்களில் 08 சந்தர்ப்பங்களில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து உதவி கிடைக்கும் – நிதி இராஜாங்க அமைச்சர் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்காக சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நான்கு வருடங்களில் 08 தடவைகளில் 03 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகை பெறப்பட உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு ஒதுக்கப்பட்ட தொகை தொடர்பாக பொருளாதாரப் பேராசிரியர் ஒருவர் வாரப் பத்திரிகையில் வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இம்மாத இறுதிக்குள் அதற்கான கடன் தொகைக்கான முதற்கட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அதனை பெற்றுக் கொள்வதற்கான உடன்படிக்…

  4. ஜனாதிபதியின் செயற்படுகள் வெறுக்கத்தக்கவை – வாசுதேவ குற்றச்சாட்டு தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் பாரிய தடைகளை ஏற்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சாட்டியுள்ளார். உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடையுத்தரவை தற்போது சவாலுக்கு உட்படுத்த முயற்சிப்பது தேர்தலை பிற்போடுவதற்கான முயற்சி என்றும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு நாடாளுமன்றத்திற்கும் நீதிமன்றத்திற்கும் இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயற்படுகள் வெறுக்கத்தக்கவை என வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், ஆளும் தரப்பினர் நாட்டு மக்கள…

  5. இலங்கைக்கு வரவுள்ள வட இந்திய தொழிலதிபர்கள் குழு Published By: NANTHINI 12 MAR, 2023 | 11:12 AM வட இந்திய தொழிலதிபர்கள் சுமார் 92 பேர் அடங்கிய குழு ஒன்று இலங்கைக்கு வரவுள்ளது. எதிர்வரும் 17ஆம் திகதியன்று இந்திய நகையக சம்மேளனத் தலைவர் சுலானி தலைமையில் இந்த குழுவினர் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பில் இவர்கள் எதிர்வரும் 18ஆம் திகதியன்று இலங்கையின் தொழிலதிபர்களை சந்திக்கவுள்ளனர். இந்த தொழிலதிபர்களின் வருகை மற்றும் சந்திப்பு ஏற்பாடுகளை இலங்கை - இந்திய தொடர்பாளர் மனவை அசோகன் மேற்கொண்டு வருகிறார். https://www.virakesari.lk/article/15029…

  6. நியாயமற்ற உயர் வரியறவீட்டு வீதம் வரி ஏய்ப்புக்கு வழிவகுக்கும் - நிபுணர்கள், புத்திஜீவிகள் எச்சரிக்கை Published By: DIGITAL DESK 5 11 MAR, 2023 | 07:31 PM (நா.தனுஜா) நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் வேளையில், ஒரே தடவையில் வரிவருமானத்தை 200 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு முற்படுவது பொருத்தமற்றதாகும். வரியறவீட்டு வீதம் நியாயமற்றவகையில் மிகவும் உயர்வாகக் காணப்படும்போது வரி ஏய்ப்பில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். இது பல்வேறு வழிகளிலும் நாட்டின் பொருளாதாரத்தை வெகுவாகப் பாதிக்கும் என்று துறைசார் நிபுணர்கள் மற்றும் புத்திஜீவிகள் எச்சரித்துள்ளனர். இலங்கைக்கு ஏற்றவாறான நியாயமானதும், வ…

  7. தமிழ் கட்சிகள் ஒருமித்து செயற்பட முஸ்தீபு : ஆரம்பகட்ட பேச்சுக்களில் 4 தரப்பிடையே கொள்கையளவில் இணக்கம் Published By: Nanthini 11 Mar, 2023 | 06:41 PM (ஆர்.ராம்) பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் ஒருமித்துச் செயற்படுவதற்கு முஸ்தீபு செய்து வருகின்ற நிலையில் தற்போது வரையில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளில் கொள்கை அளவில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தமிழரசு கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறியுள்ள புளொட், ரெலோ, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய தரப்புக்களுக்கிடையில் முதற்கட்ட ப…

  8. ஜெனிவா செல்கிறார் கஜேந்திரகுமார்! இலங்கையில் தற்போது நடைபெறுகின்ற பிற்போக்குத் தனமான ஜனநாயக விரேத செயற்பாடுகளை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அதற்காக எதிர்வரும் 15ஆம் திகதி ஜெனிவாவுக்குச் செல்லவுள்ளதாகவும் இதன்போது தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதையும் இலங்கையை சர்வதேச நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தவுள்ளதாக கூறியுள்ளார். தன்னை ஜனநாயகவாதியாக காட்டிக்கொள்ளும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டை சர்வாதிகாரத்தினை நோக்கி நகர்த்திச் செல்லும் அதேவேளை ச…

  9. பழி வாங்கும் எண்ணங்களே தமிழரசுக் கட்சியின் முதல்வர் வேட்பாளரை ஏனைய கட்சியினர் நிராகரிக்க காரணம் - சிறீதரன் Published By: Digital Desk 5 10 Mar, 2023 | 04:58 PM ( எம்.நியூட்டன்) 70 வருட வரலாற்றை கொண்ட தமிழரசு கட்சியின் மாநகர சபை முதல்வர் வேட்பாளரை அரசியல் விரோதங்களும், குரோதங்களும் பழி வாங்கும் எண்ணமும் தான் ஏனைய கட்சியினர் நிராகரிப்பதற்கு காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். யாழ் மாநகர சபையின் இடைக்கால முதல்வர் தெரிவு கோரமின்மையால் ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கைய…

    • 2 replies
    • 624 views
  10. ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்திய கண்ணீர்ப்புகைக் குண்டுகள் காலாவதியானவையா ? - பொலிஸார் விளக்கம் Published By: DIGITAL DESK 5 11 MAR, 2023 | 12:18 PM (எம்.மனோசித்ரா) காலாவதியான கண்ணீர்ப்புகைக் குண்டுகள் செயலிழந்தவையாகவும் , செறிவு குறைந்தவையாகவுமே காணப்படும். அவற்றைக் கொண்டு ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த முடியாது. சில தரப்பினரால் தெரிவிக்கப்படுவதைப் போன்று கடந்த வாரங்களில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கு பிரயோகிக்கப்பட்ட கண்ணீர்ப்புகைக் குண்டுகள் காலாவதியானவையல்ல என்று பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். கடந்த வாரம் கொழும்பிலு…

  11. யாழில் போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிப்பதற்கு நடவடிக்கை! வட பகுதியில் போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிப்பதற்கு யாழ் நகருக்கு அண்மையில் புனர்வாழ்வு நிலையம் அமைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி மணிவண்ணன் தெரிவித்தார். பப்ரல் அமைப்பின் மாற்றத்திற்கான பாதை கற்கை நெறியின் யாழ் மாவட்ட பெண்கள் குழு நடாத்தும் போதையினால் பாதை மாறும் இளையோரை நல்வழிப்படுத்தி நற்பிஜைகளாக உருவாக்வோம் எனும் தொனிப் பொருளிலான போதை ஒழிப்பு விழிப்புணர்வு செயற்பாட்டு நிகழ்வு திருநெல்வேலி முத்து தம்பி இந்து மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது. குறித்த விழிப்புணர்வு செயற்பாட்டில் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் பெண்கள் அமைப்பின்…

  12. உலகின் துணிச்சலான பெண்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்ட சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா விருது வழங்கி கௌரவிப்பு அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் உலகில் துணிச்சலான பெண்களாக 2023 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட பெண்களை கௌரவிக்கும் நிகழ்வு வௌ்ளை மாளிகையில் நடைபெற்றது வருடாந்தம் இந்த நிகழ்வு நடத்தப்படுவதுடன், 2021 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்டவர்களும் இம்முறை கௌரவிக்கப்பட்டனர். COVID பெருந்தொற்று காரணமாக 2021 ஆம் ஆண்டு இந்நிகழ்வு நடத்தப்படவில்லை. இதன்போது, 2021 ஆம் ஆண்டு உலகின் துணிச்சலான பெண்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்ட சட்டத்தரணி ரனித்தா ஞானராஜாவிற்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. …

    • 6 replies
    • 916 views
  13. 1894 சுற்றுலாப்பயணிகளுடன் கொழும்பு வந்தடைந்த அதிசொகுசு சுற்றுலாப்பயணக் கப்பல் Published By: DIGITAL DESK 5 11 MAR, 2023 | 03:41 PM (எம்.மனோசித்ரா) சுற்றுலாப்பயணிகள் 1894 பேர் மற்றும் 906 ஊழியர்களுடன் பிரின்ஸஸ் குரூஸ் அதிசொகுசு சுற்றுலாப்பயணக் கப்பலொன்று சனிக்கிழமை (11) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இக்கப்பல் தாய்லாந்திலிருந்து வருகை தந்துள்ளது. இக்கப்பலில் வருகை தந்துள்ள சுற்றுலாப்பயணிகளில் 159 பேர் கொழும்பு துறைமுகத்தில் இறங்கியுள்ளதோடு , அவர்கள் கண்டி, பின்னவல, நீர்கொழும்பு மற்றும் இங்கிரிய ஆகிய பிரதேசங்களுக்கு செல்லவுள்ளனர். குறித்த கப்பல் சனிக்கிழமை மாலை கொழும்பு துறைமுகத்திலிருந்து ட…

  14. வர்த்தகர்கள், பல்துறைசார்ந்த கடன்பெறுநர்களுக்குப் புதிய சலுகைகள் - இலங்கை மத்திய வங்கி Published By: DIGITAL DESK 5 11 MAR, 2023 | 01:12 PM (நா.தனுஜா) பல்துறைசார்ந்த வர்த்தகர்கள் மற்றும் தனியார்துறையினர் ஏற்கனவே பெற்ற கடன்களை மீளச்செலுத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த சலுகைக்காலம் முடிவடைந்திருக்கும் நிலையில், அவர்களின் கடன்மீள்செலுத்துகை செயன்முறையை இலகுபடுத்தும் நோக்கில் மேலதிக சலுகைகளை வழங்குமாறு நிதியியல் கட்டமைப்புக்களுக்கு அறிவுறுத்தியிருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தாம் ஏற்கனவே பெற்ற கடன்களை மீளச்செலுத்துவதில் வர்த்தகர்கள் மற்றும் பல்துறைசார்ந்தோர் பலதர…

  15. முகக்கவசம் அணிந்து செல்லுமாறும் அறிவுறுத்தல் - இது தான் காரணம் ! Published By: DIGITAL DESK 5 11 MAR, 2023 | 03:34 PM (எம்.மனோசித்ரா) நாடளாவிய ரீதியிலுள்ள பல மாவட்டங்களில் வளி மாசடைவு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய கொழும்பில் காற்று தரக்குறியீடு 712 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இளம் ஊதா நிறத்தில் அடையாளப்படுத்தப்படும் இக்குறியீட்டு எண் கடும் சுகாதாரமற்ற நிலையைக் காண்பிக்கின்றது. இதே வேளை மன்னார் மாவட்டத்தில் காற்றின் தரக் குறியீடுகள் 103 ஆகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சிவப்பு நிறத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதோடு , சுகாதாரமற்ற நிலையைக் காண்பிக்கின்றது. …

  16. எரிபொருளுக்கான QR கோட்டா முறைமை தொடர்பில் இன்று வெளியான அறிவித்தல்! Published By: VISHNU 08 MAR, 2023 | 06:22 PM இன்று (08) முதல் அமுலுக்குவரும் வகையில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு (QR) கோட்டா முறைமை புதுப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் தளத்தில் இது தொடர்பில் அவர் பதிவிடட்டுள்ளதாவது, (QR) கோட்டாவின் ஊடாக வாரத்துக்குப் பெறப்படும் எரிபொருளில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. இதற்கு முன்னர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நள்ளிரவில் எரிபொருள் (QR) கோட்டா புதுப்பிக்கப்பட்டது என்றும் அவர் கூற…

  17. சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டமை இனவாதத்தையே காட்டி நிற்கின்றது – அருட்தந்தை மா.சக்திவேல்! சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டமை இனவாதத்தையே காட்டி நிற்கின்றது என மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்(வியாழக்கிழமை) ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இருந்த வலி.வடக்கில் போர்த்துக்கீசர் கால மிக தொன்மை வாய்ந்த கீரிமலை சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டுள்ளது. இது இனவாத, மதவாத அரச பயங்கரவாதத்தினதும் அதற்கு துணை நிற்கும் இயந்திரமான இராணுவத்தினதும் …

  18. மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பம்! வெளிநாட்டு ஊழியர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட வாகனங்களை விடுவிக்கும் பணியை சுங்கத்துறை ஏற்கனவே ஆரம்பித்துள்ள நிலையில், நேற்று (வியாழக்கிழமை) முதல் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சட்டரீதியாக வெளிநாட்டு தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தின் அடிப்படையில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த தொழிலாளி இலங்கைக்கு அனுப்பப்பட்ட ப…

  19. தற்போது ஓய்வூதியம் பெறும் ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் – முழு விபரம் இதோ தற்போது ஓய்வூதியம் பெறும் ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை நாடாளுமன்றம் வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான மதுர விதானகே மற்றும் கருணதாச கொடிதுவாக்கு ஆகியோர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விடுத்துள்ள கோரிக்கைக்கு அமையவே இந்த பட்டியல் வெளியாகியுள்ளது, அதன்படி கடந்த பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி தகவல் அறியும் உரிமையின் கீழ் இவ்விரு உறுப்பினர்களும் நாடாளுமன்ற பொதுச் செயலாளரிடம் உரிய தகவல்களைக் கோரியுள்ளனர். 1977 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க நாடாளுமன்ற ஓய்வூதிய சட்டத்தின் பிரகாரம் தற்போது ஓய்வு பெறும் உறுப்பினர்களின் பட்டியல் பின்வருமாறு வெளி…

  20. வாக்குச் சீட்டு அச்சடிக்க இன்னும் பணம் வழங்கப்படவில்லை – மீண்டும் தள்ளிப்போகுமா தேர்தல் ? வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான பணம் இல்லாத காரணத்தினால் தபால் மூல வாக்கு சீட்டை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரச அச்சம் தெரிவித்துள்ளது. வாக்குச் சீட்டுகள் அச்சிடுவதற்கு செலவாகும் பணம் இதுவரை செலுத்தப்படாததால், அதற்கான பணிகளைத் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என அரசாங்க அச்சக அலுவலகத்தின் பிரதானி தெரிவித்துள்ளார். வாக்குச் சீட்டுக்களை அச்சிட 152 மில்லியனும் ஊழியர்களின் கொடுப்பனவிற்காக 52 மில்லியன் ரூபானும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் இதுவரை தம்மால் பூர்த்தி …

  21. இராணுவ அதிகாரிகள் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்தது அரசாங்கம் இலங்கை இராணுவ அதிகாரிகள் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது என ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக தெரிவித்துள்ளார். மனித உரிமைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட சில இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் தொடர்பான உண்மை அல்லது நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் ஏற்பாடுகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறது என்பது குறித்த மீளாய்வுக்கூட்டத்தில் குறித்த குழு முன்வைத்த குற்றச்ச…

  22. இலங்கை உட்பட 6 நாடுகள் குறித்த ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் மீளாய்வு கூட்டத் தொடர் நாளை ஆரம்பம் Published By: VISHNU 26 FEB, 2023 | 10:41 AM (எம்.மனோசித்ரா) இலங்கை உள்ளிட்ட 6 நாடுகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவின் மீளாய்வு கூட்டத் தொடர் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகி, மார்ச் 24ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இலங்கை, எகிப்து, துர்க்மெனிஸ்தான், ஜாம்பியா, பேரு மற்றும் பனாமா உள்ளிட்ட நாடுகள் தொடர்பான மீளாய்வு கூட்டத்தொடரே நாளை ஆரம்பமாகவுள்ளது. அதற்கமைய இலங்கை குறித்த மீளாய்வு கூட்டத் தொடர் மார்ச் 8 மற்றும் 9ஆம் திகதிகளில் 3 கட்டங்களாக இடம்பெறவுள்ளது. மார்ச் 8ஆம் தி…

  23. அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அரசு வேலை இல்லை? அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரச சேவையில் வேலை வாய்ப்பு வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற போராட்டங்கள் அல்லது நாசவேலைகளில் ஈடுபடுபவர்கள் அடையாளம் காணப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பதிவுகள் டேட்டா பேங்க் வடிவில் பராமரிக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது. அத்தகையவர்கள் அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும்போது, அவர்கள் சம்பந்தப்பட்ட வேலைக்குத் தகுதியற்றவர்களாகக் கருதுவதற்கான அடிப்படை ஆவணம் தயாரிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. https://a…

  24. கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியல் பீடம் ஆரம்பிக்க இந்திய அரசின் உதவியுடனான கேட்போர் கூடம் அமைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவிப்பு! kugenMarch 11, 2023 (சரவணன்) கிழக்கு பல்கலைகழகத்தில் பொறியல் பீடம் ஆரம்பிக்க மற்றும் இந்திய அரசின் உதவியுடனான கேட்போர் கூடம் அமைப்பதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதுடன் உரமானியம், நெல்விலை நிர்ணயம் மற்றும் நெல் கொள்வனவு மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் தெரிவித்தார். மட்டக்களப்பிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (10) விஜயம் மேற்கொண்டுடபோது மட்டக்களப்பு விமான நிலையத்தில் தமிழர் உணர…

  25. பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் கிழக்கு மாகாணத்தில் 1000 பேருக்கு புலமைப்பரிசில்கள் வழங்குவதன் நோக்கம் என்ன? - செல்வம் சபையில் கேள்வி Published By: Vishnu 10 Mar, 2023 | 01:12 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) கொழும்பில் உள்ள பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் கிழக்கு மாகாணத்தில் ஒரு குறித்த பிரதேசத்தில் உள்ள 1000 பேருக்கு மாத்திரம் புலமை பரிசில்கள் வழங்குவதன் நோக்கம் என்ன? அரசாங்கத்துடன் தொடர்பு கொள்ளாமல் இவ்வாறு புலமைபரிசில்கள் வழங்கப்படுவது தவறான நிலைமையை தோற்றுவிக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். பா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.