ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
கடுமையான உணவுத் பற்றக்குறையில் வாழும் மட்டக்களப்பு இடம்பெயர்ந்த மக்கள் மட்டக்களப்பில் இடம்பெயர்ந்துள்ள 150,000-க்கும் மேற்பட்ட மக்கள் அங்கு பெய்து வரும் கடும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள அதேசமயம் கடுமையான உணவு பற்றாக்குறைக்கும் முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிலங்கா அரசாங்கத்தினால் மீண்டும், மீண்டும் வழங்கப்பட்ட உறுதிமொழிகளைப் போல் எந்தவிதமான உணவு விநியோகங்களும் இந்த மக்களுக்கு வழங்கப்படவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர். மூன்று வேளைகளும் உணவை உட்கொள்ள வேண்டிய மக்கள் 100 தொடக்கம் 200 கிராம் அரிசியுடன் ஒரு நாளை கழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பால் மா வகைகளின் பற்றாக்குறையினால் சிறார்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சத்துருக்…
-
- 0 replies
- 698 views
-
-
பயங்கரவாதப் பாசறைகள்! 1986_ம் ஆண்டு பெங்களூரில் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாடு நடைபெற்றது. அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தி பங்கு கொண்டார். இலங்கை அதிபர் ஜெயவர்தனேயும் வந்திருந்தார். ஈழம் தனி நாடு ஆகிவிடுமோ என்ற அச்சம் அப்போது சிங்கள இனவாதிகளை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. புல்லாங்குழல் கூட ஈழப் போராளிகளுக்குத் துப்பாக்கியாகப் பயன்பட்ட நேரம். ரத்தக் கறைகளோடு வந்த ஜெயவர்தனே, ராஜிவ் காந்தி அருகில் அமர்ந்தார். ‘தனி ஈழம் அமைந்தால் இந்தியாவிற்கு ஆபத்து’ என்றார். வஞ்சக வலையை விரித்தார். ‘‘எப்படி?’’ என்று ராஜிவ் கேட்டார். ‘தமிழ்நாடும் தனி நாடாகிவிடும். ஆகவே, ஈழப் போராளிகளுக்கு எதிராக இந்தியாவும் போர் தொடுக்க வேண்டும்!’ என்றார் ஜெயவர்தனே. அதனை உண்ம…
-
- 6 replies
- 2.7k views
-
-
திங்கள் 09-04-2007 18:09 மணி தமிழீழம் [செந்தமிழ்] ஆகக்குறைந்தது வெப்பத்தை நாடிச்சென்று தாக்கும் ஏவுகணைகளையாவது வாங்கி அனுப்புங்கள் - மேஜர் ஜெனரல் சந்திரசிறீ யாழ் குடாநாட்டில் உள்ள முக்கிய இராணுவ மையங்களில் கனரக விமான எதிர்ப்பு ஆயுதங்களை விரைவாகப் பொருத்திய சிறீலங்காப் படையினர் தற்பொழுது அவசர அவசரமாக விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்கி அனுப்புமாறு கொழும்பில் அமைந்துள்ள இராணுவத் தலைமைப் பீடத்திற்கு அவசர செய்தியை அனுப்பியுள்ளனர். இதுகுறித்து கொழும்பு இராணுவ பீடத்திற்கு செய்தியை அனுப்பியுள்ள யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீ வல்லைப்பாலம், குடத்தனை, எழுதுமட்டுவாள், நாவற்குளம், கெற்பெலி, வரணி, கிளாலி, பலாலி, காரைநகர், காங்கேசந்துறை போன்ற தளங்களுக்…
-
- 2 replies
- 2k views
-
-
புலிகளா சுட்டார்கள்? - தப்பிய மீனவர் பேட்டி http://www.tamilnaatham.com/pdf_files/2007..._2007_04_08.pdf நக்கீரன் வார இதழ்
-
- 0 replies
- 1k views
-
-
திங்கள் 09-04-2007 17:45 மணி தமிழீழம் [சிறீதரன்] கொக்குவி்ல் அரசியல் செயலகம் படையினரால் சுற்றிவளைத்துத் தேடுதல் சிறீலங்காப் படையினரால் விடுதலைப் புலிகளின் கொக்குவில் அரசியல் செயலகம் சுற்றிவளைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் இத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரு ஜீவ் வண்டிகள் மற்றும் ரக் வாகனத்திலும் வந்த 50 வரையிலான படையினரே இத்தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். தேடுதல் நடவடிக்கை படையினரால் ஒரு மணி நேரம் நடத்தப்பட்டது. இதேநேரம் கொக்குவில் பகுதி நேற்று படையினரால் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும். இதனால் நேற்று முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் பதட்டம் காணப்பட்டதாகவும் குடிசார் தகவல்…
-
- 1 reply
- 1.1k views
-
-
கட்டுநாயக்க விமானத்தளத்தை பார்வையிட கண்காணிப்புக்குழு ஏன் அக்கறை காட்டுகிறது * கேள்வி எழுப்புகிறது அரசு - டிட்டோ குகன் - விடுதலைப் புலிகளால் விமானத் தாக்குதல் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தை பார்வையிட அரசாங்கத்திடமிருந்து இன்னும் அனுமதி கிடைக்கவில்லையென போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ள அதேநேரம், பொதுமக்கள் மத்தியில் நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து கவனம் செலுத்தாத கண்காணிப்புக் குழு கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தின் மீது மட்டும் ஏன் அக்கறை காட்டுகிறதென அரசாங்கம் கேள்வி எழுப்புகிறது. அண்மைக் காலமாகவே நாளாந்தம் வன்முறைகள் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டிய போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு பேச்சாளர் தொபினூர் ஒமர்சன், சம்பந்…
-
- 0 replies
- 1.6k views
-
-
கொழும்பு இந்து காபோ.தா சாதாரணதரப்பரீட்சையில் 10A சித்திகளை 10 மாணவர்களும் 38 மாணவர்கள் 9A சித்திகளையும் பெற்று சாதனை படைத்தது இருகின்றனர்,ஒரு மாணவன் கூட அனைத்து பாடங்களிலும் சித்தியடையாமல் இல்லாமல் இருந்தது மற்றுமொரு சாதனை.கடந்த ஆண்டு 5 பரீட்சையிலும் சிறந்த பெறுபேறுகளை பெற்று தமிழ் மாணவர்களின் பெருமையை இலங்கையின் தலைநகரில் ஏற்படுத்தி கொடுத்துள்ள ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பழைய மாணவன் என்ற ரீதியில் நன்றிகளும் பாராட்டுக்களும்.
-
- 11 replies
- 3.1k views
-
-
வணக்கம் நண்பர்களே.... Youtube.com ல் கட்டுநாயக்க தாக்குதல் (2001) தொடர்பாக ஓர் video பார்த்தன்...நீங்களும் பார்த்மகிழுங்கள்... http://www.youtube.com/watch?v=SFACTcX8Qb8...ser&search=
-
- 1 reply
- 1.8k views
-
-
வான்படையின் பலத்தை உலகிற்கு காட்டிய பின்னர் பேச்சுக்களை மீள ஆரம்பிப்பதற்கு தாம் விரும்புவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இன்று திங்கட்கிழமை வெளிவந்த கொழும்பு ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே விடுதலைப் புலிகள் இதனை தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலுக்கு பின்னர் கண்காணிப்புக் குழுவினர் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு இடையில் நடைபெற்ற முதல் சந்திப்பு இதுவாகும். எனினும் பேச்சுக்களுக்கு முன்நிபந்தனையாக 2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போர் நிறுத்த உடன்பாடு முழுமையா…
-
- 4 replies
- 1.8k views
-
-
[திங்கட்கிழமை, 9 ஏப்ரல் 2007, 05:18 ஈழம்] [க.திருக்குமார்] எம்மிடம் இந்திரா - 2D ரக ராடார்கள் மூன்று உள்ளன. இந்த வகை ராடார்களையே இந்தியாவும் பயன்படுத்தி வருகின்றது. அவை முன்னேற்றகரமான வகையைச் சேர்ந்த ராடார்கள். எனினும் அவற்றைப் புறக்கணித்த பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், வான்படைத் தளபதி ஆகியோர் விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலுக்கு இந்தியாவின் ராடார்களே பொறுப்பு எனக் கூறியுள்ளனர். கட்டுநாயக்கவில் வான் தாக்குதல் இடம்பெற்ற சமயம் எல்லா ராடார்களும் ஓய்விலேயே வைக்கப்பட்டிருந்தன. இது எமது படைத்தரப்பினரின் அறிவற்ற தன்மையைக் காட்டுகின்றது. ராடார்கள் சூழற்சி முறையில் இயக்கப்பட வேண்டும் என்ற பொது அறிவு கூட அவர்களுக்கு இல்லை என நாடாளுமன்ற குழுக் கூட்டத…
-
- 10 replies
- 2.4k views
-
-
திங்கட்கிழமை 9 ஏப்ரல் 2007 05:34 சிறிலங்கா தலைநகர் கொழும்பில் உள்ள வத்தளை பேள்பார்க் அங்காடித் தொகுதியில் அண்மையில் சிறிலங்காப் படையினரால் கைப்பற்றப்பட்ட கிளைமோர் குண்டுடன் கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட 4 கிளைமோர் குண்டுகள் மாயமாக மறைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை சிறிலங்கா இராணுவத்தினரின் புலனாய்வுத் துறையினரும்இ காவற்துறையினரின் புலனாய்வுத்துறையினரும் முடுக்கி விட்டுள்ளனர். வத்தளை உள்ள கேபிள் தொலைக்காட்சி அலுவலகத்தில் அண்மையில் 12 கிலோ எடையுள்ள கிளைமோர் குண்டு கைப்பற்றியதைத் தொடர்ந்து மேலும் 4 குண்டுகள் அதனுடன் கொண்டு வரப்பட்டதாக புலனாய்வுத்துறையினருக்கு தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
-
- 1 reply
- 1.1k views
-
-
33 குடும்பங்களை வெளியேற அறிவுறுத்து உடுப்பிட்டி,ஏப்.9 பருத்தித்துறை, வெளிச்சவீட் டுப் பகுதியில் வசித்துவந்த 33 குடும்பங்களையும் வெளியேறு மாறு படையினர் அறிவுறுத்தியுள் ளனர். அந்த மக்களுக்கு மாற்றிடம் வழங்குவதாகவும் படையினர் அவர்களிடம் தெரிவித்துள்ள னர். ஆழிப்பேரலையால் பாதிக்கப் பட்ட இம்மக்கள் தற்காலிக குடி யிருப்புக்களை அமைத்து வெளிச்ச வீட்டுப் பகுதியில் வசித்துவந்த னர். uthayan.com
-
- 1 reply
- 1.2k views
-
-
சு.க. வின் அறிவிப்பும் ஜே.வி.பி. யின் சமிக்ஞையும் [09 - April - 2007] ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அதன் யோசனைகளை எதிர்வரும் மே தினத்தன்று சர்வகட்சி மாநாட்டு பிரதிநிதித்துவக் குழுவிடம் சமர்ப்பிக்கவிருக்கிறது. அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிப்பதற்கான செய்தியாளர் மாநாட்டில் கடந்த வாரம் இதைத் தெரிவித்த ஊடகத்துறை அமைச்சர் அநுரா பிரியதர்ஷண யாப்பா, இந்த யோசனைகள் இறுதித் தீர்வாக அமையப்போவதில்லை. சர்வகட்சி மாநாட்டுப் பிரதிநிதித்துவக் குழுவினரால் ஆராயப்பட்ட பின்னரே இறுதித் தீர்வு யோசனைகள் வரையப்படும் என்று கூறியிருக்கிறார். இதே செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த சுதந்திரக்…
-
- 0 replies
- 877 views
-
-
`எயார் கனடா' சொர்ணலிங்கம் உருவாக்கிய புலிகளின் விமானங்கள் [09 - April - 2007] புலிகள் இயக்கத்தினர் தமது தாக்குதல் நடவடிக்கைகளை ஆரம்பித்த ஆரம்ப காலகட்டங்களில் சைக்கிள்களில் வந்தே திடீரென்று தாக்குதலை நடத்திவிட்டுச் சென்றனர். பின்னர் மோட்டார் சைக்கிள்களில் வந்தும் அதன் பின்னர் சிறிய, பெரிய வாகனங்களில் வந்தும் தாக்குதல்களை விரிவுபடுத்தினர். இவ்வாறே கடற்பிராந்தியங்களில் ஆரம்ப காலகட்டங்களில் படகுகள் மூலம் தாக்குதல்களைத் தொடங்கிய புலிகள் பின்னர் கப்பல்கள், நீர்மூழ்கிப் படகுகளில் வந்து தாக்குதல்களை மேற்கொள்ளும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்தனர். இன்று விமானங்களில் வந்து தாக்குதலை நடத்துகின்றனர். இது மிகவும் பயங்கரமான விடயமாகும். புலிகள் அமைப்பு ஹெலிகொப்டர்கள், விமான…
-
- 0 replies
- 2.1k views
-
-
மனிதப் பேரவலங்களை உருவாக்கி தெற்குப் போதிக்கும் பாடம் ` "பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து கிழக்கிலங்கையை விடுவித்தல்' என்ற பெயரில் ஜனாதிபதி மஹிந்தரின் அரசு ஆரம்பித்திருக்கும் இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளினால் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள அழிவுகளும் சேதங்களும் நாசங்களும் இழப்புகளும் சொல்லில் அடங்காதவை. கொடூர ஷெல், பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களுக்கும் இராணுவ நடவடிக்கைகளுக்கும் அஞ்சி இடம்பெயர்ந்து வரும் அப்பாவித் தமிழ் மக்கள், தங்கள் வீடு, வாசல்கள் மற்றும் உடைமைகளைத் துறந்து அகதிகளாக அல்லற்படுகின்றனர். * மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் சுமார் 42 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் உள்நாட்டுக்குள் அகதிகளாகியுள்ளனர். அவர்கள் 90 இடம் பெயர்ந்…
-
- 0 replies
- 724 views
-
-
இலங்கையில் இரத்தக் களரிக்கு முடிவு தேவை என்கிறார் புனித பாப்பரசர் இலங்கையில் மோதலில் ஈடுபடும் இரு தரப்பினரும் அதனைக் கைவிட்டு சமரச முயற்சியைக் முன்னெடுக்க வேண்டும் என்று புனித பாப்பரசர் பெனடிக்ட் அவர்கள் தனது உயிர்த்த ஞாயிறு தினச் செய்தியில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இப்போது இலங்கைக்குத் தேவைப்படுவது அமைதிதான் என்று அவர் கூறியுள்ளார். இலங்கையில், பெரும் இரத்தக் களரிக்கு வழிவகுத்த மோதல்களுக்கு முடிவு காண சமரசத் தீர்வு ஒன்றினால் மாத்திரமே முடியும் என்று புனித பாப்பரசர் தனது செய்தியில் கூறியுள்ளார். கிறித்தவ மக்களை அமைதிக்காக உழைக்கும் படியும் அவர் வேண்டியிருக்கிறார். வழக்கமாக பாப்பரசரால் வழங்படுகின்ற உயிர்த்த ஞாயிறு தினத்து உரையில் அவர் உல…
-
- 3 replies
- 971 views
-
-
திருகோணமலை தம்பலகாமம் பகுதி யில் இனந்தெரியாத ஆயுததாரிகளால் வர்த் தகர் ஒருவர் நேற்று சுட்டுக்கொல்லப்பட் டார். நேற்றுப் பி.ப. 4 மணியளவில் இடம் பெற்ற இந்தச் சம்பவத்தில் அதே இடத் தைச் சேர்ந்த பரமகுரு ரமேஸ்பாபு (வயது 35) என்பவரே சுடப்பட்டார் என்று அடை யாளம் காணப்பட்டது. ----uthayan------
-
- 0 replies
- 783 views
-
-
மட்டக்களப்பு அகதி முகாமில் 31 பேர் பொலீஸாரால் கைது அவர்களில் ஒன்பது பேர் விளக்கமறியலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போர்ச்சூழல் காரண மாக இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கியிருந்த இரு பெண்கள் உட்பட ஒன்பதுபேர் விடுதலைப் புலி களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். களுவன்கேணியிலுள்ள அகதி முகாம்களில் நேற்று முன்தினம் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுத லின் போது விடுதலைப் புலிகளுக்கு உதவினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 31 பேர் கைது செய்யப்பட்டு விசா ரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர் என்று கூறப் பட்டது. தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப் பட்ட குறிப்பிட்ட 31 பேரில் இரு பெண்கள் உட்பட 9 பேர் புலிகளுடன் ஆ…
-
- 0 replies
- 559 views
-
-
[08 - ஆப்ரில் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] கடந்த இரண்டு நாட்களாக இலங்கையின் அச்சு, மின்பொறி ஊடகங்களில் பெரிதும் எடுத்துப் பேசப்படுகின்ற விடயம் இந்த ஆய்வுப் புள்ளி விபரங்களாகும். பாக்கியசோதி சரவணமுத்து அவர்களை தலைமைப் பொறுப்பாளராக கொண்டுள்ள சமூகக் குறிசுட்டி (ஸொcஇஅல் ஈன்டிcஅடொர்) எனப்படும் ஆய்வு நிறுவனம், 2007 பெப்ரவரியில் செய்த ஆய்வின் முடிவுகளென இவை தரப்பட்டுள்ளன. மே 2001 இலிருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் 25 ஆவது ஆய்வு முயற்சி இதுவாகும். சமாதான முறைவழி பற்றி அரசாங்கம் பொருத்தமான கொள் நெறியை உருவாக்கும் பொழுது இப்புள்ளி விபரங்கள் பயன்படும் என்பது ஆய்வாளர்களின் நோக்கமாகும். வெளிவந்திருக்கும் இந்த அறிக்கை மிக முக்கியமான ஒரு சூழலிலே வெளிவந்துள்ளது. யுத்த…
-
- 1 reply
- 1.5k views
-
-
அன்றூ இராசையா Tகுர்ச்டய், 05 ஆப்ரில் 2007 கடந்த 2001 ஆம் ஆண்டு, விடுதலைப்புலிகளின் படையணிகளின் பாரிய தாக்குதலுக்கு உள்ளான ஸ்ரீலங்கா விமானப்படைத் தளத்தாக்குதல் - யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கும், சமாதானப் பேச்சுவார்த்தைக்கும் அடித்தளம் ஒன்றை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், ஆறு வருடங்கள் கடந்த நிலையில் விடுதலைப்புலிகளின் வானோடிகள் முதன்முதலாக மீண்டும் நீர்கொழும்பு - கட்டுநாயக்காவில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா விமானப்படையின் பிரதான தளத்திற்கு மூன்று குண்டுகளை விழுத்தியதன் மூலம் புதியதொரு செய்தியை ஸ்ரீலங்கா அரசுக்கும், சர்வதேசத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளனர். ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் உத்தியோகப் பற்றற்ற முறையில் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற ‘ஈழப்…
-
- 0 replies
- 868 views
-
-
: நந்தன குணதிலக்க [ஞாயிற்றுக்கிழமை, 8 ஏப்ரல் 2007, 05:20 ஈழம்] [க.திருக்குமார்] ஜே.வி.பி கட்சியின் உண்மையான தலைவரான குமார மாத்தையா (குமார் ஐயா) என்று அழைக்கப்படும் கே.குணரட்ணத்தை சிறிலங்காவின் தேசிய புலனாய்வுத் துறைக்கு காட்டிக்கொடுக்கவில்லை என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய குழு உறுப்பினருமான நந்தன குணதிலக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: "கட்சியில் குமார் ஐயாவின் உண்மையான அடையாளத்தை நான் காட்டிக் கொடுக்கவில்லை. நான் தான் காட்டிக் கொடுத்ததாக கட்சியின் பிரச்சார செயலாளர் விமல் வீரவன்சவே குற்றம் சாட்டியுள்ளார். எனக்கும் குமார் ஐயாவிற்கும் கருத்து வேறுபாடுகள் தோன்றியதுண்டு. எனினும் அவர் கட்சியி…
-
- 0 replies
- 902 views
-
-
திங்கள் 09-04-2007 03:07 மணி தமிழீழம் [மோகன்] கடவத்தை, பேலியகொட பகுதியில் இரு இளைஞர்கள் காணாமல் போகடிக்கப்பட்டுள்ளார்கள் கடந்த புதன் கிழமை கடவத்தை மற்றும் பேலிய கொட பகுதிகளில் இரு தமிழ் இளைஞர்கள் வெள்ளை வானில் சென்ற ஆயுததாரிகளால் கடத்தப்பட்டு காணாமல் போகடிக்கப்பட்டுள்ளார்கள். மட்டக்குழியவை சேர்ந்த 23 அகவையுடைய பத்மநாதன் பிரதீபன், வத்தளையை சேர்ந்த 24 அகவையுடைய ராமையா ஜெயகுமார் ஆகியோரே கடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதுதொடர்பில் சர்வதேச மனித உரிமைகள் ஆணையகத்திலும் காவல்நிலையத்திலும் முறையடப்பட்டுள்ளது. பிரதீபனின் பெற்றோர் கருத்துத் தெரிவிக்கையில் இவரை கடத்துவதற்கு முதல்நாள் பெலியகொட காவல்துறை சார்ஜன்ட் ஒருவர் இவர்களது வீட்டுக்கு சென்று வியாழக்கிழமை க…
-
- 0 replies
- 695 views
-
-
இராணுவ ஆட்சிமுறைப் போக்கை தொடர விரும்பும் தென்னிலங்கை ` தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீது பெரும் இராணுவ நடவடிக்கைகளைத் தொடுத்து, அவர்களைப் பலவீனப்படுத்தி, இனப்பிரச்சினைத் தீர்வுக்கான சமரச முயற்சிகளில் தமிழர் தரப்பின் பேரம் பேசும் வலுவை உடைத்து நொறுக்கிய பின்னர், தான் விரும்பிய தீர்வு ஒன்றைத் தமிழர் மீது திணிப்பதே மஹிந்த அரசின் உபாயமாகத் தோன்றுகின்றது. குறைந்தபட்ச அதிகாரப் பகிர்வுடன் இலங்கைத் தீவில் பௌத்த சிங்கள அரசின் மேலாண்மைப் பலத்தை நிலைநிறுத்தி, உறுதிப்படுத்தும் சிந்தனைப் போக்கில் அமைந்த இந்தப் பேரினவாதக் கருத்து நிலைப்பாடு யதார்த்தத்தில் சாத்தியமாகப்போவதில்லை என்பதைத் தென்னிலைங்கை அரசியல் பேராசிரியர் ஒருவர் "மௌபிம' சிங்களப் பத்திரிகையில் தான் வெளியிட்ட …
-
- 1 reply
- 906 views
-
-
வான் புலிகளின் அச்சுறுத்தலை அரசு எப்படி சமாளிக்கப் போகிறது? *பாதுகாப்பு நிலைவரம் -விதுரன்- வான் புலிகளின் மீள் வருகைக்காக முப்படையினரும் காத்திருக்கின்றனர். முதல் முறை வான் புலிகள் நடத்திய தாக்குதலால் அதிர்ந்து போயிருக்கும் அரசு, புலிகளின் அடுத்த வான் வழித் தாக்குதலை எப்படியாவது முறியடித்து விடவேண்டுமென்பதில் தீவிரம் காட்டுகிறது. இதற்காக, ஆயிரம் அடிக்குக் கீழ் பறக்கும் வானூர்திகளைக் கண்டுபிடிக்கும் ராடர்களை உலகெங்கும் தேடும் இலங்கை அரசு, இரவு நேரத்தில் வரும் வான் புலிகளை எதிர்கொள்ள முப்படைகளையும் தயாராக்கி வருகின்றது. வன்னியிலிருந்து வரும் விமானங்களை வான்பரப்பில் எதிர்கொள்ள முடியாவிட்டாலும் அவை வன்னிக்குத் திரும்பிச் சென்று தரையிறங்கும் போதாவது தாக்க…
-
- 4 replies
- 1.8k views
-
-
இம்சை அரசன் பிரான்ஸ்ம் 14 ஆவது சார்க் மாநாடும் -சி.இதயச்சந்திரன்- இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையோடு காலூன்றியுள்ள பிராந்திய நலன் தேடும் சக்திகள் ஒன்றுகூடுமிடமாக சார்க் மாநாடு அமைந்துள்ளது. பார்வையாளராக சீனா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டது இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயமாகிறது. ஏற்கனவே சார்க் அமைப்பிலுள்ள பெரும் புள்ளிகளான இந்தியா, பாகிஸ்தானுடன் ஏனைய வல்லரசுகளும் குவிக்கப்படும் இடத்தில், பிராந்திய பயங்கரவாதத்தை முறியடிப்பது குறித்து பேசப்பட்டது இலங்கை அரசின் அடுத்த நகர்விற்கு மூலப்பொருளாக அமையும். சர்வதேசம் திணிக்க முனையும் பேச்சுவார்த்தைப் பாதையைத் திசைமாற்ற, பயங்கரவாதத்திற்கெதிரான நகர்வினை முன்னிலைப்படுத்துவதை எவ…
-
- 2 replies
- 1k views
-