ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142779 topics in this forum
-
வான் புலிகளின் தாக்குதலும் இந்தியாவின் பிரதிபலிப்பும் விடுதலைப் புலிகளிடம் விமானப் படையணி இருக்கும் விவகாரம் சர்வதேச ரீதியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பும் என எதிர்பார்த்த கொழும்பு வட்டாரங்கள் ஏமாற்றமடைந்திருக்கின்றன. சட்ட ரீதியான அரசாக இல்லாத ஒரு தரப்பிடம் அதுவும் "பயங்கரவாத இயக்கம் ஒன்றிடம் விமா னப்படை இருப்பது பெரும் ஆபத்தான விடயம் என்று பெரும் பிரசாரத்தை முன்னெடுத்து, அதன் மூலம் சர்வதேச சமூகத்தைப் புலிகளுக்கு எதிராகத் திருப்பி விடும் கொழும்பின் முயற்சி எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்பதையே ஆரம்பகட்டத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. புலிகளிடம் விமானப் படையணி இருக்கும் விவகாரம் முதலில் இந்தியாவில்தான் பெரும் அதிர்வு களையும், அரசியல் எதிர்வினைகளையும் ஏற்ப…
-
- 1 reply
- 1k views
-
-
சிறிலங்கா வான்பரப்பை காப்பதற்கு உதவும் அனைத்துலகம் சிறிலங்கா வான்பரப்பை காப்பதற்கு அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உதவ முன்வந்துள்ளதாக சிறிலங்கா செய்திகள் தெரிவிக்கின்றன. வான்காப்பு கட்டமைப்பை நவீனமயப்படுத்தல், செய்மதி தகவல்களை வழங்குதல், புலனாய்வுத் தகவல்களை வழங்கல் ஆகியன இதில் அடங்கும் எனவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் கட்டுநாயக்க வானூர்தி நிலைய வான்பரப்பை பாதுகாக்க வான்காப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது பழுதாகியுள்ள டி.எம் - 02 ராடாருக்கு பதிலாக டி.எம் - 04, டி.எம் - 06 வகை ராடார்களை பெறுவது தொடர்பாக சீனா, பாகிஸ்தானுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சு நடத்தியுள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட…
-
- 2 replies
- 1.1k views
-
-
போர் நிறுத்தம் 100 விகிதம் கடைப்பிடிக்கப்படும் போதே பேச்சுக்கான வாய்ப்பு: சு.ப.தமிழ்ச்செல்வன் 2002 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின் அடிப்படையில் பேச்சுவார்த்தைக்கு சிறிலங்கா அரசாங்கம் சம்மதிக்கும் வரையிலும் பேச்சக்களை மீள ஆரம்பிப்பது சாத்தியமற்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். சிறிலங்கா அரசாங்கம் போர்நிறுத்த உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவதனை மறுத்து வருமானால் அது முழு அளவிலான போர்ப்பிரகடனமாகவே எடுத்துக் கொள்ளப்படும் என்றும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய மின்னஞ்சல் நேர்காணலின் போது தெரிவித்துள்ளார். இந்த நேர்காணலில் அவர் மேலும் முக்…
-
- 0 replies
- 677 views
-
-
இலங்கை அரசு சமாதான உடன்படிக்கையை இரத்துச்செய்ய முடிவு செய்திருப்பதாக சண் செய்திகள் (இப்போது இலவசமா போகிறது ;) ) தெரிவிக்கிறது. இச்செய்தியை இணயத்தளங்களில் காணமுடியவில்லை.
-
- 17 replies
- 4.8k views
-
-
[Monday April 02 2007 01:40:51 PM GMT] [யாழ் வாணன்] வான்காப்பு கட்டமைப்பை நவீனமயப்படுத்தல், செய்மதி தகவல்களை வழங்குதல், புலனாய்வுத் தகவல்களை வழங்கல் ஆகியன இதில் அடங்கும் எனவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் கட்டுநாயக்க வானூர்தி நிலைய வான்பரப்பை பாதுகாக்க வான்காப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது பழுதாகியுள்ள டி.எம் - 02 ராடாருக்கு பதிலாக டி.எம் - 04, டி.எம் - 06 வகை ராடார்களை பெறுவது தொடர்பாக சீனா, பாகிஸ்தானுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சு நடத்தியுள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதேவேளையில் எந்தவொரு வானூர்தியும் வான்படையினருக்கு அறிவிக்காமல் பறக்கக் கூடாது என சிறிலங்கா வான்படைத்தளபதி எயார் வைஸ் மார்சல் ரொசான் குணதிலக்க பணி…
-
- 4 replies
- 1.7k views
-
-
புலிகள் நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் தாக்குதல் நடத்த முற்படுவார்ளேயானால், அத் தாக்குதல்களை முறியடிப்பதற்கான சரியான பாதுகாப்பு முறைமை அரச கடற்படையினரிடம் உள்ளது என்று கடற்படைப் பேச்சா ளர் கொமாண்டர் டி.கே.பி. தஸ நாயக்க நேற்று உதயன் நாழிதழுக்கு தெரிவித்துள்ளார். புலிகள் நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்கலாம். அல்லது வெளிநாடுகளில் இருந்து கொள்வனவு செய்யலாம் என்று இந்திய கடற்படை அதிகாரி சௌ ஹான் கூறியிருந்தார். இது தொடர்பாகக் கருத்துக் கூறிய இலங்கை கடற்படைப் பேச்சா ளர் மேலும் தெரிவித்ததாவது: புலிகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தயாரிக்கவுள்ளனர். அல் லது கொள்வனவு செய்யவுள்ள னர் என்று இந்தியக் கடற்படை அதிகாரி சௌஹான் கூறியுள்ளார். புலிகள் அவ்வாறு செய்வார் களேயானால் அது நாட…
-
- 7 replies
- 2k views
-
-
திங்கள் 02-04-2007 22:04 மணி தமிழீழம் [செந்தமிழ்] புலிகளுக்கு அவதூறை ஏற்படுத்தும் போலிப் பரப்புரையில் சிறீலங்கா அரசாங்கம் ஈடுபடுகிறது - இளந்திரையன் விடுதலைப் புலிகள் மீது அவப் பெயரை ஏற்படுத்தும் பரப்புரைகளை சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். மயிலாம்பாவெளியில் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்ட 6 சிங்கள தொழிலாளர்கள் மற்றும் இன்று மதியம் கொண்டவெட்டுவான் பகுதியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலுடனும் விடுதலைப் புலிகளைத் தொடர்பு படுத்தி சிறீலங்கா அரசாங்கம் விசமப் பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறதை அடுத்து விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் சிறீலங்கா அரசின் இக்குற்றச் சாட்டை முற்றாக நிராகரித்துள்ளார். தமது விடுத…
-
- 0 replies
- 679 views
-
-
தலைவருக்கு சிறுவயதில் இருந்து பிடித்த பாடல் என்று ஒரு நண்பர் சொல்ல கேட்டது. புலம் பெயர்ந்த தமிழர்கள் நாம் அனைவரும் கேட்டு சிந்திக்க வேண்டிய பாடலும் இதுவே. புலத்தில் வீடு மேலே வீடு வாங்கி, மாடி மேலே மாடி கட்டி வாழ என்னும் ஈழத்தமிழா உனக்கு ஒரு நாடு இல்லாது போனால், உன் மொழியும் அது தந்த கலையும் கலாச்சாரமும் உன் தலைமுறையோடு விடைபெறும் என்று அறிவாயா? வீடு தேடுவதற்கு நீ ஓடி ஓடி உழைப்பதை விட நாடு தேடுவதற்கு நீ ஓடி ஓடி உழைப்பது முக்கியம் என்பதை அறிவாயா. ஏனென்றால் நாடு 1000 ஆண்டுகள் வாழும். உன் தலைமுறைகளும் அதில் தமிழ் போல் அழகாய் வாழும். நீ கட்டும் வீடு எத்தனை ஆண்டுகள் வாழும்? அந்நியர் நாட்டில் உன் மொழியும் கலாச்சாரமும் எத்தனை தலைமுறை தாங்கும். நீ இன்னும் தூங்கினால் ம…
-
- 8 replies
- 4.5k views
-
-
மட்டு மயிலாம்பாவெளியில் 6 சிங்களத் தொழிலாளர்கள் சுட்டுக்கொலை. மட்டக்களப்பு மயிலாம்பாவெளியில் 6 சிங்களத் கட்டிடத் தொழிலாளர்கள் இனம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர
-
- 0 replies
- 932 views
-
-
அம்பாறையில் பஸ்சில் குண்டுவெடிப்பு என்றும், 12 பேர் பலியாகியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
-
- 7 replies
- 2.4k views
-
-
4 கப்பல்கள், 11 படகுகளில் ஒரு வருடத்தில் புலிகள் ஆயுதக் கடத்தல் [02 - April - 2007] கடந்த சுமார் ஒரு வருட காலத்தில் அதாவது 2006 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் புலிகள் இயக்கத்தினரின் 4 ஆயுதக்கப்பல்களும் 11 பெரிய ஆயுதப்படகுகளும் சிறிலங்கா கடற்படையினரால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. அத்துடன், 2 ஆயுதப் படகுகள் கடற்படையினரால் தாக்கி கைப்பற்றப்பட்டதுடன், அதில் பயணம் செய்த புலிகள் இயக்கத்தினரும் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கடற்படையினரால் தாக்கியழிக்கப்பட்ட ஆயுதக்கப்பல்கள் பற்றிய தகவல்களுக் கேற்ப 2006-09-17 ஆம் திகதி கல்முனையை அண்டிய கடற்பரப்பில் வைத்து ஆயுதங்கள் ஏற்றி வந்த கப்பல் ஒன்றும் 2007-02-27 ஆம் திகதி தெய்வேந்திரமுனைக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் வைத்து பு…
-
- 1 reply
- 1.9k views
-
-
'தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதில் விடுதலைப்புலிகளுக்கான தொடர்புக்கான சாத்தியத்தை மறுப்பதற்கில்லை' - இந்திய கடற்படைத் தளபதி தமிழக மீனவர்கள் நான்கு பேர் கடந்த வெள்ளிக்கிழமை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை மறுப்பதற்கில்லை என்று இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் சுரேஷ் மேத்தா தெரிவித்துள்ளார். புதுடில்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். இந்தியா - இலங்கை உறவில், உரசலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் விடுதலைப் புலிகள் இதைச் செய்திருக்கக் கூடும் என்றும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். ஏற்கெனவ…
-
- 27 replies
- 4.2k views
-
-
ஜனநாயகத்தின் பெயரால் யுத்தநிறுத்தத்துக்குச் சாவுமணி? ` இலங்கையின் இனப்பிரச்சினை மிகக் கூர்மை யடைந்தமைக்கு முக்கியமான காரணம், நாட்டின் நிர்வாக விடயங்கள் நீதி, நியாயம், தார்மீகம் ஆகியவற்றின் அடிப்படையில் அணுகப்படாமல், பெரும்பான்மை சிறுபான்மை என்ற எண் ணிக்கை அடிப்படையில் கையாளப்பட்டமைதான் என்பது கண்கூடு. பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்கள் இலங்கை மீதான தங்களின் பிடியைக் கைவிட்டு, ஆட்சி அதிகாரத்தை உள்நாட்டவர்களிடம் சுதேசிகளிடம் ஒப்படைத்தபோது பெரும்பான்மையினர் என்ற அடிப்படையில் அது சிங்களவர் களின் கைகளில் போய் வீழ்ந்தது. சிங்களப் பெரும்பான்மையினரிடம் அரசியல் அதிகாரம் வீழ்ந்ததும், சிங்களப் பேரினவாதம் மேலாண்மை அதிகாரம் பெற்றது. இதனால் சிறு பான்மையினருக்கு எதிரா…
-
- 0 replies
- 900 views
-
-
சிங்களவர்களைப் போன்று தமிழர்களுக்கு அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்படவில்லை - இலங்கை அமைச்சர் குற்றச்சாட்டு பெரம்பலூர் - இலங்கையில் சிங்களவர்களைப் போன்ற தமிழர்களுக்கு அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்படவில்லை என்று இலங்கை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த இராதாகிருட்டிணன் இலங்கை மத்திய பகுதியில் கல்வி மற்றும் தொழில்துறை அமைச்சராக உள்ளார். திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த இவர், தன்னுடைய சகோதரி கவுசல்யாவைப் பார்ப்பதற்காக துறைமங்கலம் புதுக்குடியிருப்பு வந்தார். அவரைச் சந்தித்த செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இலங்கையில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. தமிழகத்திற்கு வருவதற்காக நான் விமான நிலையம் வந்தபோதுதான் விமான…
-
- 1 reply
- 1.3k views
-
-
விமானப்பைடை வான் தாக்குதலும் அரச, ஊடக பதிற்குறிகளும்(பீஷ்மர்) தமிழ்- சிங்கள கணக்கின் படி ஞாயிறன்று அர்த்த சாமத்தில் கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் மீது விடுதலைப்புலிகளின் விமானங்கள் குண்டு போட்டமை அதிர்ச்சி மிகுந்த பாதிப்புகளை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஏற்படுத்திற்று. ஒரு நாட்டிற்குள் இருந்து கொண்டு விடுதலைப் போராட்டமொன்றை நடத்தும் ஓர் இயக்கம் தனக்கென வான் விமான வலுவை பெற்றுள்ளமை இதுவே முதற்தடவை என்ற குறிப்புரை மிக முக்கியமானதாக அமையும். அதேவேளை, இந்த சம்பவம் இலங்கையின் தேசிய பிரச்சினை பற்றிய போராட்டம் எத்துணை ஆழமாகச் சென்றுள்ளது என்பதற்கான ஓர் எடுத்துக்காட்டாகும். இந்த குறிப்பிற் இந்த சம்பவத்தை அரசாங்கமும் பொது நீரோட்ட சிங்கள ஊடகங்களும் எவ்வாறு நோ…
-
- 1 reply
- 1.2k views
-
-
வந்தார்கள் வான்புலிகள்! கடந்த சில நாட்களுக்கு முன்பு கொழும்பு நகரத்தில் இருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலங்கை கட்டுநாயகா விமானப்படைத் தளத்துக்குத் தம்முடைய “வான் புலிகள்” பிரிவைச் சேர்ந்த இரண்டு விமானங்களை அனுப்பி நான்கு குண்டுகளை வீசினார்கள் விடுதலைப் புலிகள். சில உயிர் இழப்புகள், பலர் காயம். தமிழர் பகுதிகளில் தொடர்ந்து குண்டு வீசி பல அப்பாவித் தமிழ் மக்களைக் கொல்லும் இலங்கை விமானப்படையின் ரஷ்ய மிக் ரக விமானங்களும், (இந்தியாவில் வேஸ்ட் என்று தீர்மானிக்கப்பட்டு காலாவதியான அதே மிக்) இஸ்ரேலின் கஃபிர் ரக விமானங்களும் இங்கேதான் நிறுத்தி வைக்கப்படுகின்றன. மொத்தம் 600 கிலோ மீட்டர் தூரத்துக்கு, சுமார் இரண்டு மணி நேரங்கள் பறந்து, இலங்கை ராடார்களின் கண்களில் மண்ணைத் தூ…
-
- 1 reply
- 1.6k views
-
-
துள்ளிக் குதிப்பவர்கள் இதைக் கொஞ்சம் கேளுங்க http://www.pathivu.com/?ucat=alasal&file=300307
-
- 4 replies
- 2.5k views
-
-
கட்டுநாயக்க தாக்குதலும் சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடும் சிவஒளி- அரசாங்கத்தின் இனஅழிப்பு நடவடிக்கை எல்லை மீறி இடம்பெற்றுக் கொண்டு இருந்தமையும் புலிகளின் அசாதாரண பொறுமையும் மக்களிடத்தில் பெரும் குழப்பங்களை உண்டுபண்ணியிருந்தது. புலிகளுடைய பொறுமை தந்திரோபாய நகர்வா அன்றேல் உண்மையிலேயே போராளிகள் பலமிழந்து விட்டனரா என்ற `இக்கட்டு சிந்தனை' சிறீலங்கா அரச புலனாய்வுத் துறை தொடக்கம் பென்ரகன் வரை நிலவியது. புலிகள் எதிர்பார்த்த முதலாவது அடித்தள வெற்றியே பல்வேறு தரப்பினரிடமும் உண்டான `இக்கட்டு சிந்தனை' தான். ஏனெனில், எந்த ஒரு போரிலும் எமது பலவீனத்தையும் எதிரியின் பலத்தையும் பகுப்பாய்வு செய்வதென்பது முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நியதியாகும். தாக்குதலுக்கு முந்திய பகுப்ப…
-
- 0 replies
- 722 views
-
-
விடுதலைப் புலிகளிடம் விமானப் படையணி இருக்கும் விவகாரம் சர்வதேச ரீதியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பும் என எதிர்பார்த்த கொழும்பு வட்டாரங்கள் ஏமாற்றமடைந்திருக்கின்றன. சட்ட ரீதியான அரசாக இல்லாத ஒரு தரப்பிடம் அதுவும் பயங்கரவாத இயக்கம் ஒன்றிடம் விமா னப்படை இருப்பது பெரும் ஆபத்தான விடயம் என்று பெரும் பிரசாரத்தை முன்னெடுத்து, அதன் மூலம் சர்வதேச சமூகத்தைப் புலிகளுக்கு எதிராகத் திருப்பி விடும் கொழும்பின் முயற்சி எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்பதையே ஆரம்பகட்டத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. புலிகளிடம் விமானப் படையணி இருக்கும் விவ காரம் முதலில் இந்தியாவில்தான் பெரும் அதிர்வு களையும், அரசியல் எதிர்வினைகளையும் ஏற்படுத் தும் எனக் கொழும்பு எதிர்பார்த்தது. ஆனால், அப்படி ஒன…
-
- 1 reply
- 1k views
-
-
விடுதலைப் புலிகளை தோற்கடிப்பது மிகவும் கடினமானது: தி எக்கொனமிஸ்ற் சஞ்சிகை. தமிழீழ விடுதலைப் புலிகள் பல முனைகளில் போரிடும் வலுவை உடையவர்கள். கிழக்கில் கெரில்லாக்களாகவும் வடக்கில் மரபுவழிப் படைகளாகவும், தெற்கை ஒரு பயப்பீதியில் வைத்திருக்கும் தாக்குதல்களையும் அவர்களால் நடத்தமுடியும். எனவே எப்போதும் அவர்களை தோற்கடிப்பது மிகவும் கடினமானது. ஆசியாவில் இருந்து வெளிவரும் "தி எக்கொணமிஸ்ற்" சஞ்சிகை தனது ஆய்வுச்செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளது. அந்த ஆய்வின் முக்கிய பகுதிகள் வருமாறு: "போரியலில் தற்கொலைத் தாக்குதலே மிகவும் ஆபத்தான ஆயுதம், ஆனால் விடுதலைப் புலிகள் புதிய வியூகத்திற்கு நகர்ந்துள்ளனர். தற்போது அவர்களிடம் வான்படையும் உண்டு. கடந்த மார்ச் 26 ஆம் ந…
-
- 11 replies
- 2.6k views
-
-
வேறு நாடுகளின் உதவிகள் இன்றி வான்படை அமைத்த விடுதலைப் புலிகள்: கொழும்பு ஊடகம் [ஞாயிற்றுக்கிழமை, 1 ஏப்ரல் 2007, 17:16 ஈழம்] [அ.அருணாசலம்] வேறு நாடுகளின் உதவிகள் இன்றி தமிழீழ விடுதலைப் புலிகள் வான்படையை அமைத்திருப்பதால் அவர்கள் வேறுபட்டுள்ளனர் என்று கொழும்பு ஊடகம் ஒன்று தனது வார ஏட்டின் பாதுகாப்பு நிலவர ஆய்வுப் பத்தியில் குறிப்பிட்டுள்ளது. அதன் சில பகுதிகள் வருமாறு: விடுதலைப் புலிகளுக்கு ஏன் வான்படை அவசியம்? அவர்களின் பலம் என்ன? அரசாங்கத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன? என்பவை தான் இன்றைய கேள்விகள். சிறிலங்கா வான்படையினர் மீதான எதிர்த் தாக்குதல்களுக்கே விடுதலைப் புலிகளுக்கு வான்படை அவசியமானது. சிறிலங்கா வான்படையின் அண்மைக்காலமான வான் தாக்குதலுக்கு …
-
- 4 replies
- 1.7k views
-
-
சுட்டது புதினம் தமிழ்நாடு கன்னியாகுமரி மீனவர்கள் படுகொலையில் எம்மைத் தொடர்புபடுத்துவது விசமப் பிரச்சாரம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் "புதினத்துக்கு" அவர் தொலைபேசி ஊடாக அளித்த நேர்காணல்: கன்னியாகுமரி மீனவர்களை கடந்த 29 ஆம் நாள் சிறிலங்கா அரச படையினர் கொடூரமான முறையில் கொலை செய்ததனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்களது தொப்புள் கொடி உறவுகளான தாய் தமிழக உறவுகளின் வேதனைகளிலே நாங்களும் பங்கு கொள்கின்றோம். சிறிலங்கா அராஜக அரசு, தனது இனவெறித் தனத்தை ஈழத் தமிழர்களுடன் மட்டுமல்லாது இந்தியாவை நோக்கியும் வியாபித்திருப்பது மிகவும் வேதனைக்குரியதும் கண்டிக்க வேண்டிய…
-
- 0 replies
- 821 views
-
-
என்ன செய்யப்போகிறது சர்வதேசம்? -சி.இதயச்சந்திரன்- கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தின் மீது 26 ஆம் திகதி அதிகாலையில் விடுதலைப் புலிகள் வான்படைத் தாக்குதல் தொடுத்த செய்தி சர்வதேசமெங்கும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. உலக ஊடகங்களின் தலைப்புச் செய்தி, சோர்ந்த நிலையிலிருந்த தமிழர்களின் உணர்வுகளுக்கு உரமூட்டியது. புலிகளின் வான்படையினை உருவாக்கிய, கேணல் சங்கர் வீரமரணமெய்திய நாளும் 26 தான். சங்கரின் கல்லறையிலிருந்து கிளம்பிய பேரொளி, முள்ளியவளை துயிலும் இல்லமெங்கும் பரவி தாயகத்தை ஒளிக்களமாக்கியுள்ளது. தற்போது புலிகளுக்கெதிராகப் போராட அனைத்து சிங்கள மக்களும் ஓரணியில் திரளுமாறு அழைப்பு விடுக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. புலிகளின் விமான வெள்ளோட்ட நிகழ்வா…
-
- 0 replies
- 836 views
-
-
கன்னியாகுமரி மீனவர்கள் படுகொலை: புலிகள் மீது பழிபோட இந்திய உளவுத்துறை சதி [ஞாயிற்றுக்கிழமை, 1 ஏப்ரல் 2007, 17:51 ஈழம்] [சி.கனகரத்தினம்] தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மீனவர்கள் படுகொலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பழிபோடும் சதித்திட்டத்தை புதுடில்லியில் இந்திய உளவுத்துறையினர் முனைப்புடன் மேற்கொண்டு வருவதாக புதுடில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீனவர்கள் படுகொலையில் புலிகளை ஏன் பழி போட வேண்டும்? தமிழீழத் தமிழர்களுக்கான தமிழ்நாட்டின் தார்மீக ஆதரவு மற்றும் அதன் எதிர் வினையாக இந்திய அரசியல் தலைவர்கள் நிலைப்பாட்டில் உருவாகி வரும் மாற்றங்களால் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைகளைத் தீர்மானித்துக் கொண்டிருந்த "உளவுத்துறை" அதிகார வர்க்கம் அதிர்ந்து போயிருக்கிறது. …
-
- 3 replies
- 1.2k views
-
-
ஞாயிறு 01-04-2007 20:38 மணி தமிழீழம் [செந்தமிழ்] மந்துவில் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு, சித்திரவதை காயங்களுடன் உடலம் ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணியளவில் தென்மராட்சி உள்ளுர்வாசிகள் மந்துவில் கெருடாவில் பகுதியில் பற்றைக்காடு ஒன்றினுள் சித்திரவதை செய்த காயங்களுடனும் சூட்டுக்காயங்களுடனும் நிர்வாணமான நிலையில் உடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. உள்ளுர்வாசிகள் கிராமசேகவருக்கு அறிவித்து அவர்கள் காவல்துறையினருக்கு அறிவித்து பின் அவ் உடலம் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ் உடலம் 26 அகவையுடைய வடமராச்சி துன்னாலை வேம்படி பகுதியை சேர்ந்த மகாலிங்கம் தேவராஐh என இனம் காணப்பட்டுள்ளார். இவ் இடத்துக்கு சாவகச்சேரி நீதிபதி ஏ பிரேம்சங்கர் விஜயம் செய்து விசாரணைகள…
-
- 0 replies
- 724 views
-