Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மீனவர்கள் படுகொலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பழிபோடும் சதித்திட்டத்தை புதுடில்லியில் இந்திய உளவுத்துறையினர் முனைப்புடன் மேற்கொண்டு வருவதாக புதுடில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீனவர்கள் படுகொலையில் புலிகளை ஏன் பழி போட வேண்டும்? தமிழீழத் தமிழர்களுக்கான தமிழ்நாட்டின் தார்மீக ஆதரவு மற்றும் அதன் எதிர் வினையாக இந்திய அரசியல் தலைவர்கள் நிலைப்பாட்டில் உருவாகி வரும் மாற்றங்களால் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைகளைத் தீர்மானித்துக் கொண்டிருந்த "உளவுத்துறை" அதிகார வர்க்கம் அதிர்ந்து போயிருக்கிறது. அதனால்தான் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டில் தமிழீழ ஆதரவு நிலைப்பாட்டை சீர்குலைக்கும் வகையிலான செயற்பாடுகளை மத்திய உளவுத்துறை முடுக்கிவிட்ட…

    • 1 reply
    • 1.6k views
  2. பொலநறுவைப்பகுதியில் நான்கு சிங்கள விவசாயிகள் சுட்டுக்கொலை. பொலநறுவை மாவட்டம் திம்புல்லாகல பகுதியில் நிடான்வெலவில் இனம் தெரியாத ஆயுததாரிகளால் நான்கு சிங்கள வயலில் வேலை செய்யும் விவசாயிகள் வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் மூவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்கள் மற்றயவர் காயம் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது இறந்துள்ளார். -Pathivu-

  3. சப்புகஸ்கந்தை அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் சாவகச்சேரி இளைஞனின் சடலம் மீட்பு நிலைய அதிபாதுகாப்பு வலயத்திற்குள்ளிருந்து தமிழ் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக சப்புகஸ்கந்தை பொலிஸார் தெரிவித்தனர். இச்சடலத்தில் வெளிக்காயங்கள் காணப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், இவர் கொலை செய்யப்பட்டு சடலம் இங்கு போடப்பட்டிருப்பதாக பொலிஸார் கருதுகின்றனர். இவர் வேவு பார்க்க வந்தவராக இருக்கலாமென சந்தேகிக்கப்பதாக பொலிஸார் குறிப்பிட்டபோதும் அவரின் பெயர் உட்பட மேலதிக விபரங்கள் எதனையும் அவர்கள் வழங்கவில்லை. சடலம் ராகம வை…

  4. கடத்தல்காரர்களிடமிருந்து தப்பியோடிய இளைஞனை சுட்டுக் கொன்ற ஆயுதபாணிகள் -கோண்டாவில் பகுதியில் அக்கிரமம் யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் நேற்று புதன்கிழமை காலை, ஆயுதபாணிகளால் கடத்திச் செல்லப்பட்ட இளைஞனொருவர் அவர்களிடமிருந்து தப்பியோடிய போது ஆயுதபாணிகள் அவரைத் துரத்திச் சென்று சுட்டுக் கொன்றுள்ளனர். கோண்டாவில் மேற்குப் பகுதியில் நேற்றுக் காலை 8.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் கோண்டாவில் புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த தெய்வேந்திரன் சசிதரன் (வயது- 20) என்ற இளைஞரே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கோண்டாவில் இந்து மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இந்த இளைஞன் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அங்கு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு ஆயுதபாணிகள் இவரை பலவந்…

  5. எதிர்க்கட்சிக்கு மீண்டும் திரும்பிய எட்வினுக்கு கொலை மிரட்டலாம்! பிரதிஅமைச்சராகவிருந்து அப்பதவியை துறந்துவிட்டு மீண்டும் ஐக்கியதேசியக்கட்சியுடன் இணைந்துகொண்ட எட்வின் குணசேகரவிற்கு அரச தரப்பிலிருந்து தொலைபேசிமூலம் தொடர்ச்சியாக கொலைமிரட்டல் விடுக்கப்பட்டு வருகின்றது என்று அவர் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார். தனது உயிருக்கும் தனது குடும்பத்தினரது உயிர்களுக்கும் ஏதும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பையும் அரசே ஏற்கவேண்டும் என்றும் அவர் கூறினார். எட்வோர்ட் குணசேகர நேற்று நாடாளு மன்றில் சிறப்புரிமை பிரச்சினை எழுப்பி உரையாற்றினார். நாட்டுமக்களுக்குச் சேவையாற்றவேண்டும். அந்த நோக்கிலேயே நான் அரசு டன் இணைந்து பிரதியமைச்சர் பதவியைப் பெற்றுக்கொண்டேன். ஆனால் சேவ…

  6. பொலநறுவைப்பகுதியில் நான்கு சிங்கள விவசாயிகள் சுட்டுக்கொலை பொலநறுவை மாவட்டம் திம்புல்லாகல பகுதியில் நிடான்வெலவில் இனம் தெரியாத ஆயுததாரிகளால் நான்கு சிங்கள விவசாயிகள் சுட்டுக்கொலை வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் மூவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்கள் மற்றயவர் காயம் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது இறந்துள்ளார் இதேவேளை சிறீலங்கா பாதுகாப்பு ஊடக மையம் விடுதலைப்புலிகளே இத்தாக்குதலை நிகழ்த்தியதாக குற்றம் சுமத்தியுள்ளது tamilwin.com

    • 1 reply
    • 928 views
  7. யாழில் வெவ்வேறு சம்பவங்களில் இரு இளைஞர்கள் சுட்டுக்கொலை யாழில் வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் கோண்டாவிலில் நேற்றுக் காலை இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் கோண்டாவில் புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த தெய்வேந்திரம் சசிதரன் (வயது 20) என அடையாளம் காணப்பட்டுள்ளது. நேற்றுக் காலை 8 மணியளவில் பிரதாப நபர் வீட்டிலிருந்து புறப்பட்ட சமயம் மோட்டார் øகிளில் வந்த ஆயுததாரிகளே இவரை கடத்திச் சென்று நூறு மீற்றர் தூரத்தில் வைத்து சுட்டுக் கொன்று விட்டு தப்பிச் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நேற்று முன்தினம் இரவு சாவகச்…

  8. மூதூர் நலன்புரி நிலையத்தில் 6 தமிழ் இளைஞர்கள் கைது [வியாழக்கிழமை, 5 ஏப்ரல் 2007, 15:12 ஈழம்] [செ.விசுவநாதன்] மூதூர் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த 6 தமிழ் இளைஞர்களை சிறிலங்கா இராணுவம் கைது செய்துள்ளது. திருகோணமலை மாவட்டம் மூதூரில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் இளைஞர்கள் தங்கியிருந்த போது கடந்த மார்ச் 31 ஆம் நாள் நள்ளிரவு இராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்காக இளைஞர்களை அழைத்துச் செல்வதாக அவர்களின் பெற்றோரிடம் தெரிவிக்கப்பட்டிருந்த போதும் இன்னமும் எவரும் விடுவிக்கப்படவில்லை. இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணையத்திடம் இளைஞர்களின் பெற்றோர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். கைது செய்யப்பட்டோர் விவரம்: அருள்நாயகம் யோசப் யேசுதாசன் (வயது 25) …

  9. வவுனியா மருத்துவர்களுக்கு கருணா குழுவினர் கொலை மிரட்டல் [வியாழக்கிழமை, 5 ஏப்ரல் 2007, 08:42 ஈழம்] [அ.அருணாசலம்] வவுனியா பகுதியில் உள்ள மருத்துவர்களை கப்பம் கட்டுமாறு சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினர் விடுத்து வரும் மிரட்டல்களைத் தொடர்ந்து, வவுனியா பொது மருத்துவமனையின் மருத்துவர்கள் சட்டப்படி வேலை செய்தல் என்னும் போராட்டத்தை இரு நாட்களுக்கு நடத்தி வருகின்றனர். இந்த எதிர்ப்புப் போராட்டத்தினால் அவசர சிகிச்சைப் பிரிவு உட்பட மருத்துவமனையின் பல பிரிவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், நோயாளர்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கருணா குழுவினர் என தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோர், தங்களிடம் பெரும…

  10. [Thursday April 05 2007 06:28:56 AM GMT] [யாழ் வாணன்] தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புலி முத்திரை குத்தி நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைக்கே ஆப்புவைக்க முயல்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. நாம் எந்தவிதமான அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியப் போவதில்லை. எந்தவிதமான விசாரணைகளுக்கும் முகம் கொடுக்கத் தயார். இப்படி அரசுக்கு சவால் விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம். நேற்று நாடாளுமன்றம் கூடியபோது சிவாஜிலிங்கம் எம். பி. சிறப்புரிமைப் பிரச் சினை ஒன்றை சபையில் சமர்ப்பித்துப் பேசும்போதே இப்படிக் கூறினார். அவர் தொடர்ந்து பேசும்போது மேலும் கூறியதாவது: நிறைவேற்று அதிகாரங்கள் அனைத்தை யும் தன்கையில் வைத்துக்கொண்டிருக்கும் ஜன…

  11. சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் இருவர் தற்காலிக நீக்கம் [வியாழக்கிழமை, 5 ஏப்ரல் 2007, 08:29 ஈழம்] [க.திருக்குமார்] ஐந்து மில்லியன் ரூபாய்களை லஞ்சமாக பெற்றுக்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படும் மூன்று நபர்களை விடுவித்ததாக சிறிலங்காவின் இரு குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள், தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என மூத்த குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த அதிகாரிகள் தொடர்பாக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் முறைப்பாடுகளை செய்துள்ளனர். மேலும் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளும் அவர்களின் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுத்து அதன் முடிவாக அந்த இரு அதிகாரிகளையும் தற்கா…

  12. இலங்கை அரசு, புலிகளுக்கு இந்தியாவின் அறிவுரை ஏப்ரல் 05, 2007 டெல்லி: இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் சண்டையை நிறுத்தி விட்டு அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். 2 நாள் சார்க் மாநாட்டின் நிறைவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இலங்கை இனப் பிரச்சினைக்கு போர் தீர்வு அல்ல. இரு தரப்பும் உடனடியாக சண்டையைக் கைவிட்டு விட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும். நின்று போயுள்ள பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கப்பட வேண்டும். இலங்கையில் அதிகாரப் பகிர்வை மேற்கொள்வது தொடர்பாக அந்நாட்டு அரசுக்கு இந்தியா சில யோசனைகளைத் தெரிவித்துள்ளது. அதுகுறித்து விவாதித்து விரைவில் ஒ…

  13. எதிர்பார்க்கப்பட்டவற்றை நிறைவேற்றும் மஹிந்த அரசு ` இலங்கைத் தீவின் தேசிய இனப்பிரச்சினையை இராணுவத் திமிர்த்தனத்தோடும், பௌத்த சிங்கள மேலாண்மைச் செருக்கோடும் அணுகி வந்த மஹிந்த ராஜபக்ஷ அரசு, அதன் மூலம் நாட்டை எவ்வாறு குட்டிச்சுவராக்கியுள்ளது என்பதை நாடாளுமன்றத்தில் வார்த்தைக்கு வார்த்தை பிய்த்து உதறி அம்பலப்படுத்தி இருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. ஒரு புறம் அமைதி வழித் தீர்வு என்று வாயால் கூறிக்கொண்டு, மறுபுறம் இராணுவத் தீர்வை நாடும் மஹிந்த அரசின் இரட்டை வேடம் சர்வதேச ரீதியிலும் இப்போது அம்பலமாகிவிட்டது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் மஹிந்தரின் இரட்டை வேட தந்திரோபாய அணுகுமுறை தோற்றுப்போகும் நிலையில், இலங்கை இப்போது சர்வதேச …

  14. [Tuesday April 03 2007 06:51:21 AM GMT] [pathma] இதுவரை ராமேசுவரம், மண்டபம், பாம்பன் பகுதி யில் இருந்து மீன் பிடிக்க செல்பவர்களைதான் சிங்கள கடற்படையினர் தாக்கி வந்தனர்..... சமீபத்தில் குமரி மாவட்டத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சுட்டு வீழ்த்தினர். இந்த தாக் குதலில் 5 மீனவர்கள் பலியாகி விட்டனர். இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை கண்டித்து நாகர்கோவிலில் நேற்று மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம் நடந்தது. சிங்கள கடற்படையினரின் காட்டு மிராண்டி தனத்தை அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் வன்மையாக கண்டித்துள்ளனர். இந்த நிலையில் பாம்பன் மீனவர்கள் 14 பேரை சிங்கள மீனவர்கள் கடத்தி சென்று சித்ரவதை செய்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இத…

  15. ஊரடங்கு அமுலும் இராணுவ அடக்குமுறையும் - பண்டார வன்னியன் Thursday, 05 April 2007 11:10 யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கான ஒரேயொரு தரைவழிப் பாதையான ஏ9 பாதையை திட்டமிட்டு மூடி திறந்த வெளிச்சிறைச்சாலையாக குடாநாட்டை வைத்திருக்கும் சிறிலங்காப் படைகளால் மக்கள் படும் துன்பங்கள் சொல்லிள் அடங்காதவை. வெள்ளைவான் கடத்தல்கள்,படுகொலைகள் என யாழ.;குடாநாட்டு மக்கள் பாரிய மனித அவலத்தில் சிக்கி தவிக்கின்றனர். இராணுவ நலன்களுக்காக அடிக்கடி ஊரடங்கு நேரத்தை மாற்றும் பலாலி சிறிலங்கா படைத்தள அதிகாரிகள் மக்களை சிறைக்கைதிகளை விட மிக மோசமாக மனித நேயமற்று நடாத்துவதாக யாழ்.குடா நாட்டு மக்கள் விசனமடைந்துள்ளனர். இதே போன்றே கடற்றொழிலாளர்களை குறிப்பிட்ட நேரம் குறிப்பிட்ட துரம் கடலுக்க…

  16. மீண்டும் குண்டு மழை பொழிய குருதிநதி பெருக்கெடுத்து ஓடுகிறது ஈழத்துத் தெருக்களில். வான் புலிகளின் விமானத் தாக்குதல் உலகின் புருவத்தை உயர்த்திப் பார்க்க வைத்திருக்க, அதிர்ச்சியுடனும், மிரட்சியுடனும் திகிலடைந்து போயிருக்கிறது இலங்கை ராணுவம். இதன் தொடர்ச்சியாக இராமேஸ்வரம் பகுதிகளில் வைக்கப்பட்டிருக்கும் நவீன ரேடார் கருவிகளை வைத்து இந்திய அரசு இருபத்தி நான்கு மணி நேரமும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் நம்முடைய கேள்விகளுக்கு விடையளிக்க முன்வந்தார். ‘‘இலங்கை ராணுவத்தினர் ஒவ்வொரு முறை எமது மக்களின் மீது கொடூரமான விமானத் தாக்குதல்களை நடத்திய போதும், கொழும்புவில் இருக்கும் அவர்களது ‘கட…

  17. முல்லைத்தீவில் சிறிலங்கா வான்படை குண்டுவீச்சு: 2 பொதுமக்கள் பலி- 4 பேர் காயம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் சிறிலங்கா வான்படையின் மிக் ரக வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். புதுக்குடியிருப்பு பிரதேச மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று புதன்கிழமை பிற்பகல் 1 மணியளவில் வான்படையின் இரு மிக் ரக வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன. இத்தாக்குதலில் ஒரு பிள்ளையின் தந்தையான மூங்கிலாறு உடையார்கட்டைச் சேர்ந்த பே.பிரதீப் என்பவர் கொல்லப்பட்டுள்ளார். மற்றவரின் பெயர் விபரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. வள்ளிபுனத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான இலட்சுமணன் குணரத்தினம் …

  18. அனைத்துலக ஊடகங்கள் சில விடுதலைப் புலிகளுக்கு சார்பானவை: கேகலிய ரம்புக்வெல [புதன்கிழமை, 4 ஏப்ரல் 2007, 20:50 ஈழம்] [க.திருக்குமார்] அனைத்துலக ஊடக நிறுவனங்கள் சில தமிழீழ விடுதலைப் புலிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய செயற்படுவதாக மீண்டும் சிறிலங்கா அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்திற்கு அண்மையில் உள்ள வான்படைத் தளத்தின் மீதான விடுதலைப் புலிகளின் முதலாவது வான்தாக்குதல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்ததாவது: "விடுதலைப் புலிகள் கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்தை தாக்கியதாக ஆரம்பத்தில் சில ஊடகங்கள் செய்தி வெள…

  19. [Wednesday April 04 2007 07:59:52 AM GMT] [uthayan.com] பிராந்தியம் முழுவதுக்கும் அச்சுறுத்தலாக மாறியிருக்கும் பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கான பயங்கரவாத எதிர்ப்புத் தந்திரோபாயத்தில், கூட்டாகச்செயற்பட முன்வருமாறு சார்க் நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. புதுடில்லியில் நேற்று ஆரம்பமாகிய சார்க் நாடுகளின் தலைவர்களது உச்சிமாநாட்டில் உரைநிகழ்த்தியபோதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த அழைப்பை விடுத்தார். புதுடில்லியில் இருதினங்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், இலங்கை, பூட்டான், மாலைதீவு ஆகிய ஏழு நாடுகளின் தலைவர்களும் எட்டாவது நாடாக சார்க் அமைப்பில் சேர்ந்து கொண்ட ஆப்கானிஸ்தானின் அதிபரும் இந்த மாநா…

  20. செவ்வாய் 03-04-2007 23:06 மணி தமிழீழம் [மயூரன்] கடந்த 3 மாதங்களில் 67 பேர் சுட்டுக்கொலை, 29 ஆட்கடத்தல், 68 பேர் காணாமல் போகடிக்கப்பட்டுள்ளார்கள் கடந்த ஜனவரி தொடக்கம் மார்ச் வரையான காலப்பகுதியில் யாழ்பாணத்தில் 67 பேர் கொல்லப்பட்டும் 29 பேர் கடத்தப்பட்டும் 68 பேர் காணாமல் போகடிக்கப்பட்டும் உள்ளதாக மனித உரிமைகள் ஆணையகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இனம் தெரியாத ஆயுததாரிகளால் ஜனவரி 20 பேரும் பெப்ரவரி காலப்பகுதியில் 8 பேரும் மார்ச் காலப்பகுதியில் 39 பேரும் மொத்தமாக கடந்த மூன்று மாதங்களில் 67 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இனம் தெரியாத வெள்ளைவான்கள், சிறீலங்கா இராணுவத்தினர், சிறீலங்கா படைப்புலனாய்வாரள்கள் ஆகியோரால் ஜகவரி மாதம் 10 பொதுமக்களும் மார்ச் மாதம் 19 ப…

  21. வியாழன் 05-04-2007 00:58 மணி தமிழீழம் [மயூரன்] இலங்கைப் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு ஏற்புடையதில்ல - இந்தியா இலங்கை இனப்பிரச்சினைக்கு சிறீலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் மீண்டும் பேச்சுக்களை நடத்த முன்வரவேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். சார்க் நாடுகளின் 14வது மாநாட்டின் இறுதி நிகழ்வில் ஊடகவியலாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு இப்பதிலை முகர்ஜி தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைக்கு இரு தரப்பினரும் அமைதிவழியில் தீர்வு காணவேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பபாடு என முகர்ஜி தெரிவித்துள்ளார். இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு ஏற்புடையதில்லை எனவும் சிறீலங்கா கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்தியா சகல உதவிகளையும் வழங்…

  22. கிழக்கு திமோர், நேபாளம் போன்று இலங்கை விவகாரத்திலும் சர்வதேசம் தலையிட வேண்டும் பொது மக்கள் மீதான குண்டுத்தாக்குதல்கள், படுகொலைகள் தொடர்பாக ஒரு தரப்பை குற்றஞ்சாட்டுவதும், அதற்கு மறுப்பு தெரிவிப்பதும் நாளாந்த நிகழ்வாகிவிட்டமை கவலையளிப்பதாகவுள்ளது. எனவே கிழக்கு தீமோர் மற்றும் நேபா ளத்தில் செயற்பட்டதைப்போன்று சர்வதேச சமூகம் இலங்கை விவகாரத்திலும் தலையிட வேண்டும் என ஆசிய மனித உரிமை ஆணைக்குழு கோரியுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது: பொது மக்கள் மீதான குண்டுத்தாக்குதல்கள், படுகொலை முயற்சிகள், எறிகணை வீச்சுக்கள், பகடைக்காய்களாக பயன்படுத்தல் போன்ற அனைத்துச் சம்பவங்களும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள், மனித உரிமை மற்றும் அடிப்படை உரிமைகள் போன்ற அனைத்து உரிமைகளைய…

    • 0 replies
    • 732 views
  23. பஞ்சாயத்து முறையின் கீழ் அதிகாரப் பகிர்வு அபத்தம் ` தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு ("சார்க்') மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றிருக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு பல்வேறு பிரமுகர்களையும் சந்தித்துப் பேசி வருகின்றார். அவர் களுள் ஒருவர் அவரது நெருங்கிய நண்பரும் பஞ் சாயத்துத் துறைக்கான இந்திய மத்திய அமைச்சரு மான மணிசங்கர ஐயர் என்று தெரிவிக்கப்பட்டது. பஞ்சாயத்து நிர்வாக முறையை குறித்து இந்திய அமைச்சரிடம், இலங்கை ஜனாதிபதி கேட்டுத் தெரிந்துகொண்டார் என்றும் கூறப்படுகின்றது. இலங்கையின் தேசியச் சிக்கலாக உருவெடுத் திருக்கும் இனப்பிரச்சினைக்கு அமைதி வழித் தீர்வு காண்பதற்கான தெற்கின் முன் யோசனைகளை சிபாரிசு செய்யும் நோக்குடன் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு ஒ…

    • 5 replies
    • 2k views
  24. ''அரசின் இராணுவ மூலோபாயம் தோல்வியடைகிறது'' -ச.சங்கரன்- விடுதலைப் புலிப்படைகளுக்கும் சிறீலங்கா அரச படைகளுக்கும் பலப்பரீட்சை ஒன்றக்கான போர் ஆரம்பித்திருக்கின்றது. இதன் வெற்றி தோல்வி பூடகமாக உள்ளது. வெளித்தோற்றத்தில் ஒன்றாகவும், யதார்த்தத்தில் வேறு ஒன்றாகவுமேயுள்ளது. உண்மையிலேயே மகிந்த அரசாங்கத்தின் இராணுவ மூலோபாயம் தோல்வியில் முடிந்திருக்கின்றது. அரசு எதிர்பார்த்த இராணுவத் திட்டமிடலின்படி எதுவும் நடைபெறவில்லை. அரசுக்கு நில மீட்பு என்ற பலகோணத்திட்டத்தின் கீழ் ஒரு கோணத்தில் தான் வெற்றிபோல் காட்டிக்கொள்ள முடிந்துள்ளது. இராணுவ ரீதியில் எதுவித நலன்களையும் சாதிக்க முடியவில்லை. புலிகளைப் பலவீனப்படுத்தவும் முடியவில்லை. அரசாங்கத்தின் பிரதான திட்டம் புலிகளின் வன்…

    • 3 replies
    • 1.9k views
  25. ஜி.சீ.ஈ. பரீட்சை முடிவுகளை இணையத்தில் பார்ப்பதில் நெருக்கடி வேம்படி, யாழ். இந்து முன்னிலையில் யாழ்ப்பாணம்,ஏப்.4 கடந்த டிசெம்பர் மாதம் நடைபெற்ற ஜி.சீ.ஈ. (சாதாரண) தரப் பரீட்சை முடிவுகள் இணைத்தளம் மூலம் திங்கள் இரவு வெளியாகின. பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தில், சாதாரண தர பரீட்சை முடிவுகளை திங்கள் இரவே பார்க்கக்கூடியதாக இருந்தது. ஆனால், நேற்றுக் காலையிலிருந்தே நகரப் பாடசாலைகள், தனிப்பட்ட மாணவர்கள் என்று எல்லோரும் பரீட்சை முடிவுகளைப் பார்ப்பதற்கு முண்டியடித்ததால் நெருக்கடி காரணமாக இணையத்தளத்தின் வேகம் குறைந்து காணப்பட்டது. நாடு முழுவதிலுமுள்ள பாடசாலைகளும், மாணவர்களும் பரீட்சை முடிவுகளை அறிவதற்காக இணையத்தளத்தைப் பார்க்க முண்டியடித்தமையும் அதன் வேகம் குறைந்ததற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.