ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142769 topics in this forum
-
சிறிலங்காவில் மனித உரிமை மீறல்களில் ஐ.நா தலையிடலாம் ஜபுதன்கிழமைஇ 7 மார்ச் 2007இ 05:44 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புப் பிரிவை ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் சிறிலங்காவில் அமைப்பது தொடர்பாக அமெரிக்காவின் நியூயோர்க்கை தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் எனப்படும் ஹியுமன் றைட்ஸ் வோட்ச் அமைப்பு உட்பட பல முன்னணி மனித உரிமை அமைப்புக்கள் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் எதிர்வரும் வாரம் ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் சபைக்கான மனித உரிமைகள் ஆணையத்தின் (யு.என்.எச்.சி.ஆர்) நான்காவது அமர்வின் போது ஆராயப்படும் என அதிகாரிகள் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பில் மனித உரிமைகள் கண்காணி…
-
- 0 replies
- 802 views
-
-
தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தின் பின்புலத்தை இராஜதந்திரிகள் தெளிவாக தெரிந்து கொள்வது அவசியம் வி.திருநாவுக்கரசு- இலங்கையில் சாந்தி சமாதானம் நிலவ வேண்டுமென அங்கலாய்க்கும் எல்லா மக்களும், நாட்டு வளங்கள் யாவும் முழுமையாக அபிவிருத்திக்குப் பயன்படுத்தி நாடு சுபிட்சப் பாதையில் பயணிக்க வேண்டுமென ஆவல் கொண்டுள்ள சகல மக்கட் பிரிவினரும், நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு அன்றி அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென்றே ஆதங்கப்படுகின்றனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பதவியேற்ற நாள் முதல் விடுதலைப் புலிகளுடன் எந்த நேரமும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராயிருப்பதாகக் கூறி வந்துள்ளார். ஆனால், இன்று வரை தீர்வுக்குரிய யோசனைகள் எவையும் ஸ்ரீலங்கா சுதந்தி…
-
- 2 replies
- 938 views
-
-
ஆட்கடத்தல்களில் படையினர் ஈடுபட்டிருப்பதை ஒப்புக்கொள்கிறார் பொலிஸ் மா அதிபர் சிறீலங்காவின் பொலீஸ் மா அதிபர் சிறீலங்காவில் நடந்துவரும் பெருமளவிலான ஆட்கடத்தல்கள், கொலைகள் பணப்பறிப்புகள் ஆகியவற்றில் சிறீலங்கா இராணுவத்தினர மற்றும் காவல்துறையின் உறுப்பினர்களும் பெருமளவில் சம்பந்தப்பட்டிருபதாகவும் ஏற்றுக் கொண்டுள்ளார். ஆட்கடத்தல்கள் தொடர்பாக கடந்த செப்ரம்பர் முதல் 433 பேரை தாம் கைது செய்துள்ளதாகவும் கூறிய அவர், அவர்களில் பலர் காவல்துறை உறுப்பினர்கள், இராணுவத்தினர் அல்லது இராணுவத்தில் இருந்து தப்பி ஓடியர்கள் என்று குறிப்பிட்டார். இவர்களில் இராணுவத்தினர் எவ்வளவு பேர், காவல்துறையினர் எவ்வளவு பேர் என குறிப்பிட மறுத்துள்ளதோடு அவர்குறிப்பிட்ட கைதுகள் தொடர்பில் மே…
-
- 2 replies
- 1.1k views
-
-
கொழும்பில் பிரித்தானிய ஹரோவாசி கடத்தல் - பிரித்தானிய அமைச்சருக்கு சவால் விடும் "சர்வாதிகார மகிந்த குடும்பக்கும்பல்". பிரித்தானியாவில் ஹரோ மேற்கை வதிவிடமாகக் கொண்ட சிவபாதம் சிவசொரூபன் எனும் வர்த்தகர், கடந்த ஒரு மாதங்களுக்கு முன் கொழும்பு வெள்ளவத்தையில் வைத்துக் இலக்கத்தகடற்ற வெள்ளை வானில் வந்த சிங்களப் புலனாய்வுத்துறையினருடன் சேர்ந்தியங்கும் கருணா ஒட்டுக்குழுவால் கடத்தப்பட்டு, பின் சிங்கள விசேட அதிரடிப்படையால் பொறுப்பேற்கப்பட்டு, காணாமல் போன சம்பவமானது, பிரித்தானியா அரசின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும், பிரித்தானிய அரசின் இலங்கை விவகாரங்களுக்குப் பொறுப்பானவரும், ஹரோ மேற்கைப் பிரதிநிதித்துவம் செய்யும் மாண்புமிகு திரு கரத் தோமஸ் அவர்களுக்கு சவால் விடும் வகையில் ந…
-
- 1 reply
- 1.1k views
-
-
புரிந்துனர்வு ஒப்பந்ததை இரத்துச் செய்யக் கோரி தாக்குதல் செய்த மனு மேல் நீதி மன்றத்தால் நிராகரிப்பு சிறீலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இரத்துச் செய்யக் கோரி ஜாதிக ஹெல உறுமயஇ மக்கள் விடுதலை முன்னனி உட்பட மூன்று கட்சிகள் தாக்கல் செய்த மனுவை மேல் முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது . விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட பலர் பிரிதி வாதிகளாக இம் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தனர். இரு தரப்பும் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசியலமைப்புக்கு முரணானது ஒன்றென இம்மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தம
-
- 6 replies
- 1.5k views
-
-
இலங்கையின் முதலாவது இணைய சேவை நிறுவனம் வங்குரோத்து [06 - March - 2007] [Font Size - A - A - A] இலங்கையில் முதலாவதாக இணையத்தள சேவையை வழங்கிவந்த லங்கா இன்ரர்நெற் சேவிசஸ் வங்கு ரோத்து நிலையை அடைந்துவிட்டது. கம்பனி முகாமைத்துவமும் காணாமற்போய்விட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக் கிழமை தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை முதல் கம்பனி தனது சேவையை நிறுத்தியுள்ளது. இந்தக் கம்பனி 1994 இல் இணையத்தள சேவையை ஆரம்பித்தது. அதன்பின் பல நிறுவனங்கள் இணைய சேவையை நடத்த ஆரம்பித்ததால் இந்தக் கம்பனி கடும் போட்டியை எதிர்நோக்கியது. இலங்கையில் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் இணையத் தொடர்புகள் உள்ளன. http://www.thinakkural.com/news/2007/3/6/i...s_page22737.htm
-
- 0 replies
- 1.1k views
-
-
அனைத்துலக சமூகத்திற்கு புலிகளின் செய்தி செவ்வாய் 06-03-2007 02:17 மணி தமிழீழம் [மயூரன்] 'சிறீலங்கா அரசு அனைத்துலக ஆதரவுடன் உருவான போர்நிறுத்த உடன்படிக்கையை அப்பட்டமாக மீறி தமிழர்தாயகம் மீது ஆக்கிரமிப்பை கட்டவிழ்த்து விட்டு தமிழர்களை அவலத்தில் தள்ளியுள்ள இந்நிலையில் சிறீலங்கா அரசை கண்டிக்க தவறியுள்ள அனைத்துலக சமூகம், தமிழர்களளின் தாயகம் மீதான சிறீலங்கா அரசின் ஆக்கிரமிப்பை முறியடிக்க விடுதலைப்புலிகள் சமரை தொடங்கும் போதும் கண்டிக்க கூடாது' இதுவே அனைத்துலக சமூகத்திற்கான எங்களின் செய்தி என்று தமிழீழ அரசியல்துறைப்பொறுப்பாளர் நோர்வே தூதுவரிடம் தெரிவித்துள்ளதாக விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகத்தின் இணையத்தள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Pathiv…
-
- 1 reply
- 1.6k views
-
-
06 - March - 2007 அமெரிக்காவும் இலங்கையும் தத்தமது படையினருக்கு பரஸ்பரம் இராணுவத்தினர் மற்றும் இராணுவத் தளபாடங்களை வழங்குவதற்கான உடன்படிக்கையில் நேற்று திங்கட்கிழமை கைச்சாத்திட்டுள்ளன. இந்த உடன்படிக்கை 10 ஆண்டு காலப் பகுதிக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. "பெற்றுக்கொள்ளுதலும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளுதலும்" என்ற இந்த உடன்படிக்கையில் பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவும் அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் பிளாக்கும் நேற்று கைச்சாத்திட்டிருப்பதாக அமெரிக்கத் தூதரகம் நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. விநியோகம், ஆதரவு, எரிபொருள் நிரப்புதல் போன்றவற்றை அமெரிக்காவும் இலங்கையும் பரஸ்பரம் மேற்கொள்ள இந்த உடன்படிக்கை வழியமைத்திருப்பதாகவும் தூதரக அறிக்கை…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழீழ தாயகத்தை எதிரிகளிடமிருந்து மீட்பதற்கான விடுதலைப் வேள்வியில் சனவரி திங்களில் தம்மை ஆகுதியாக்கிய வீரமறவர்களின் விபரங்கள்: நன்றி: சங்கதி
-
- 1 reply
- 827 views
-
-
பிரித்தானியாவில் ஹரோ மேற்கை வதிவிடமாகக் கொண்ட சிவபாதம் சிவசொரூபன் எனும் வர்த்தகர், கடந்த ஒரு மாதங்களுக்கு முன் கொழும்பு வெள்ளவத்தையில் வைத்துக் இலக்கத்தகடற்ற வெள்ளை வானில் வந்த சிங்களப் புலனாய்வுத்துறையினருடன் சேர்ந்தியங்கும் கருணா ஒட்டுக்குழுவால் கடத்தப்பட்டு, பின் சிங்கள விசேட அதிரடிப்படையால் பொறுப்பேற்கப்பட்டு, காணாமல் போன சம்பவமானது, பிரித்தானியா அரசின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும், பிரித்தானிய அரசின் இலங்கை விவகாரங்களுக்குப் பொறுப்பானவரும், ஹரோ மேற்கைப் பிரதிநிதித்துவம் செய்யும் மாண்புமிகு திரு கரத் தோமஸ் அவர்களுக்கு சவால் விடும் வகையில் நிகழ்ந்திருப்பதாக தெரிகிறது. ......... http://www.neruppu.org/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 1.4k views
-
-
அநுராதபுரப் பகுதியில் 5 உடலங்கள் கண்டெடுப்பு அநுராதபுரம் சேமக்குளம் கிராமசேகவர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் செவ்வாய் காலை 5 உடலங்கள் ஒருமிக்க கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவ்உடலங்களின் மேற்பகுதி ரயர்களால் எரிந்து காணப்படுவதாகவும் கிராமவாசிகள் கொடுத்த தகவலையடுத்து திரப்பேன் காவல்துறையினர் அவ் உடலங்களை காலை 6.30 மணியளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை கந்தானை காவல்துறையினரின் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 6 உடலங்கள் கண்டெடுக்கப்பட்டது தெரிந்ததே. அநுராதபுர நீதிபதி வசந்த ஜனதாஸ அவ்இடத்திற்கு விஜயம் செய்துள்ளார். இவ் உடலங்கள் அனைத்தும் ஆண் உடலங்கள் என தெரியவருகிறது. இவ்உடலங்கள் இன்னமும் இனம்காணப்படவில்லை என்பது நோக்கத்தக்கது http://www.pathivu.com/in…
-
- 0 replies
- 817 views
-
-
முதல்வர் கருணாநிதி வைகுண்டம் காட்டுவார் என்று யாரும் கனவு காண வேண்டாம்! பிரதமர் மன்மோகன் சிங் முதல்வர் கருணாநிதியின் காதில் பூ வைக்கிறாரா? அல்லது மன்மோகன் சிங் கருணாநிதி இருவரும் சேர்ந்து எங்களது காதில் பூ வைக்கிறார்களா? இலங்கையின் இறைமை மற்றும் ஆடபுல கட்டுப்பாடுகளுக்கு ஊறு நேராதவகையில் ஒன்றுபட்ட நாட்டில் தமிழ் மக்கள் உரிமைகளோடு வாழ இந்தியா தொடர்ந்து ஸ்ரீலங்கா அரசை வற்புறுத்தும் என்பதே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையாகும். மேலும் ஸ்ரீலங்காவோடு இந்தியா எந்தவித பாதுகாப்பு உடன்பாடும் செய்து கொள்ளாது. அழிவு ஆயுதங்களையும் விற்பனை செய்யாது என்ற உறுதி மொழியும் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் தமிழகத் தலைவர்களுக்கு அளிக்கப்பட்டது. இலங்கை சிக்கல் குறித்து தமிழ…
-
- 3 replies
- 2.8k views
-
-
மட்டு.முதலிக்குடா, கொக்கட்டிச்சோலை பகுதியில் படையினர் தொடர் எறிகணை வீச்சு. - பண்டார வன்னியன் Tuesday, 06 March 2007 09:51 இன்று காலை 6.00 மணிதொடக்கம் வவுனதீவு சிறிலங்காப் படைமுகாமில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளான முதலிக்குடா, கொக்கட்டிச்சோலை ஆகிய மக்கள் குடியிருப்புக்கள் மீது தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களை படையினர் நடாத்திவருகின்றனர். இதன் போது ஏற்ப்பட்டுவரும் சேதவிபரங்கள் தெரியவரவில்லை.
-
- 0 replies
- 970 views
-
-
முல்லைத்தீவில் மக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து கிபீர் விமானங்கள் தாக்குதல். இன்று காலை மணியளவில் சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான கிபீர் விமானங்கள் இரண்டு முல்லைத்தீவு மக்கள் குடியிருப்புக்களை அண்டிய பகுதிகளை இலக்குவைத்து தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. இத் தாக்குதலின் போது ஏற்பட்ட சேதவிபரங்கள் தெரியவில்லை. இக் கிபீர் விமானங்களின் குண்டு வீச்சுத் தாக்குதலினால் பாடசாலை மாணவர்கள் பதுங்கு குழிகள் இல்லாத காரணத்தால் என்னசெய்வதென்று அறியாமல் தரையில் வீழ்ந்து பாதுகாப்பை தேடினர் இதனால் பாடசாலைகளின் கல்விச்செயற்பாடுகள் முற்றாகத் பாதிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா விமானப்படையினரின் இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் காரணத்தால் மக்களின் அன்றாடச் செயற்பாடுகள் பாதிக்…
-
- 0 replies
- 1.1k views
-
-
''உண்மையிலேயே வலுவாக இருக்கிறதா பொன்சேகவின் படை? -பு. சத்தியமூர்த்தி- சிறிலங்கா இராணுவத்தின் போர்முனைச் செயற்பாடுகள் மிக அதிகமாக காணப்படுகின்றன அங்கிங்கெனாதபடி ஒவ்வொரு நாளும் அது நகருவதாகவும் நிலையெடுப்பதாகவும் பாதுகாப்பை ஸ்திரப்படுத்துவதாகவும் பாய்ந்து பரந்து புலிகளை பஸ்மீகரம் செய்துவிடப் போவதாகவும் அதனது தரப்பு ஊடகங்கள் படாடோபமாகப் பிரசாரம் செய்து வருகின்றன. இந்தக் கருத்துருவாக்கம் சிறிலங்காவின் அதிகாரபீடத்தை முற்றாகக் கபளீகரித்துள்ளது. அதன் காரணமாக ஆழ்ந்த பொருள் பொதிந்த பிரதாபங்களை அது தினந்தினம் வெளியிட்டு வருகிறது. இந்த எண்ண அலைகள் கொழும்பு மையச் சிங்கள, ஆங்கில ஊடகங்களையும் வெகுவாகப் பாதித்துள்ள காரணத்தால் அவை வெளியிடும் செய்திகளும் பத்திகளும் கட்டுரைகளும…
-
- 3 replies
- 2.1k views
-
-
'வன்னி மக்களே- இனிவரப் போகும் பெரும் போரையும் முறியடிப்பர்': விடுதலைப் புலிகள் ஏடு [வியாழக்கிழமை, 1 மார்ச் 2007, 16:14 ஈழம்] [கிளிநொச்சியிலிருந்து ந.கிருஸ்ணகுமார்] "கொடூரமான முற்றுகை போர் முறையுடன் கிழக்கு மாகாணத்தில் தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்கும் இராணுவ நடவடிக்கைகள் நடைபெற்று வரும் அதே நேரத்தில் வடக்குப் போர் முனையிலும், வன்னி மாநிலம் மீதும் பெரும் முற்றுகைப் போர் நடவடிக்கையை தொடக்க சிங்களப் படைகள் முன்தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளன" இன்று வியாழக்கிழமை வெளிவந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஏடான 'விடுதலைப் புலிகள்' ஏட்டின் முதன்மைச் செய்தியானது மேற்கண்டவாறு தெரிவிக்கின்றது. அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: "மகிந்த ராஐபக்ச…
-
- 8 replies
- 2.6k views
-
-
சர்வதேச கப்பற் போக்குவரத்து மற்றும் கடல் மார்க்க வர்த்தக நடவடிக்கைகள் பற்றிய உத்தியோகபூர்வமான தகவல்கள் ஆய்வு, மற்றும் அறிக்கைகள் சமர்ப்பித்தல் போன்ற சர்வதேச கடற்பிராந்தியங்களினூடாக நடைபெறும் அனைத்துச் செயற்பாடுகளையும் பதிவு செய்யும் சர்வதேச நிறுவனமாகிய லொயிட்ஸ் சர்வதேச அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் விடுதலைப்புலிகள் அமைப்புக்குச் சொந்தமானதும் சர்வதேச கடற்பிராந்தியத்தில் போக்குவரத்து செய்து வருவதான கப்பல்களைப் பற்றிய முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளது. மேற்படி அறிக்கைக்கு ஏற்ப சிறிலங்காவிலுள்ள புலிகள் அமைப்புக்குச் சொந்தமானதும் சட்டவிரோதமாகப் போக்குவரத்துச் செய்து வருவதுமான கப்பல்கள் சர்வதேச கடற்பிராந்தியங்களில் பயணம் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது. மேலும்,…
-
- 0 replies
- 1.1k views
-
-
என்கிறார் வெளிவிவகார அமைச்சர் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு சர்வதேச சமூகம் முழுமையான ஆதரவை வழங்கவேண்டும். அதற்கான நேரம் வந்துள்ளது. அதேவேளை விடுதலைப்புலிகள் பயங்கரவாதத்தை கைவிட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு வருவதற்கு சர்வதேச சமூகம் பாரியளவில் அழுத்தம் கொடுக்கவேண்டும். இலங்கையின் வரைபடத்தில் புலிகள் வலயம் என்று ஒன்று இல்லை என வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார். இனிவரும் காலங்களில் வெளிநாட்டு தூதுவர்கள் கொழும்புக்கு வெளியே செல்ல வேண்டுமாயின் வெளிவிவகார அமைச்சின் அனுமதியை பெறவேண்டும் என்ற சம்பிரதாயபூர்வமான விதிமுறை கடுமையாக அமுல்படுத்தப்படும். எந்தவொரு இக்கட்டான நிலைமையிலும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது. கடந்த காலங்களில் ப…
-
- 3 replies
- 1.5k views
-
-
கருணா அணியினரின் அலுவலகம் தாக்குதலுக்கு உள்ளானது ஜஆழனெயல ஆயசஉh 05 2007 07:28:35 Pஆ புஆவுஸ ஜயாழ் வாணன்ஸ மயிலம்பாவெளியில் கருணா அணி எனப்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அலுவகம் நேற்றிரவு விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்கானதாக ஏறாவூர் பொலிசார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் அலுவலகம் அமைந்திருந்த கட்டிடடம் முற்றாக சேதமடைந்துள்ளதோடுஇ அந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவர் மற்றும் அருகிலுள்ள பாடசாலையொன்றில் தங்கியிருந்த ஒரு பெண் உட்பட 4 சிவிலியன்கள் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலில் தரைமட்டமான அலுவலகம் டிடிஉ.உழஅ http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews
-
- 4 replies
- 1.8k views
-
-
சிறிலங்கா அரசாங்கம் தான் துணை இராணுவக் குழுவை வளர்த்து வருகின்றது: ரொய்ட்டர்ஸ் ஜசெவ்வாய்க்கிழமைஇ 6 மார்ச் 2007இ 07:04 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ சிறிலங்கா இராணுவத்தினரின் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரின் அணியில் சிறார்களை சேர்ப்பதில் இராணுவத்தில் உள்ள சில பிரிவினர் உதவி வருவதாக ஐக்கிய நாடுகளுக்கான பிரதிநிதிகள் தெரிவிப்பதாகவும் அரசாங்கம் தான் கருணா குழுவினரை வளர்த்து வருகின்றது என அவதானிகளும் கூறுவதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தனது ஆய்வுச் செய்தியில் தெரிவித்திருக்கின்றது. சைமன் கார்டினர் என்பவரால் எழுதப்பட்ட செய்தியில் குறிப்பிடப்பட்ட சில பகுதிகள் வருமாறு: இலங்கையில் மீண்டும் ஆரம்பமாகியுள்ள உள்நாட்டு போரில் காணாமல் போன மற்றும் கடத்தப்பட்ட நுற்றுக்கண…
-
- 2 replies
- 923 views
-
-
செவ்வாய் 06-03-2007 01:05 மணி தமிழீழம் [மயூரன்] அமெரிக்காவின் உயர் பிரதிநிதிகள் குழு சிறீலங்காவிற்கு விஜயம் இந்தவாரம் இருநாள் விஜயமாக அமெரிக்காவின் உயர்குழுவினர் சமாதான நடவடிக்கைகள் தொடர்பாகவும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பிலும் சிறீலங்கா ஐனாதிபதி மற்றும் உயர் மட்ட அமைச்சர்களுடன் பேச்சுநடத்துவதற்காக இருநாள் விஐயம் ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக நேற்று அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. இதன்போது அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான முதன்மை துணைச்செயலர் ஸ் ரீவன் மான் (Steven Mann) அவர்களும் செல்லவிருப்பதாக தெரியவருகிறது. இதேவேளை சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலருடன் சிறீலங்காவிற்கான அமெரிக்க தூதுவர் றொபேட் பிளேக் அவர்கள் இருநாடுகளுக்கும் இட…
-
- 3 replies
- 1.1k views
-
-
வட கொரியாவை தளமாகக் கொண்டு விடுதலைப் புலிகளுக்கு ஆயுத விநியோகம்: சிங்கள நாளேடு [திங்கட்கிழமை, 5 மார்ச் 2007, 20:05 ஈழம்] [கொழும்பு நிருபர்] வட கொரியாவை பிரதான தலைமையகமாகக் கொண்டு விடுதலைப் புலிகளுக்கு பெருமளவு ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் கப்பலில் கொண்டு வரும் விநியோகப் பாதையை சிறிலங்கா படைத்தரப்பினர் அடையாளம் கண்டுள்ளதாக சிங்கள நாளேடான 'திவயின' தெரிவித்துள்ளது. இன்றைய 'திவயின' நாளேடு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்த விநியோகப் பாதையினூடாக கடல் வழியில் எறிகணைகள் மற்றும் மோட்டார் பீரங்கிகள் பெருமளவில் கொண்டு வரப்படும் வாய்ப்புகள் உள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கிழக்குப் பிராந்திய இராணுவ நடவ…
-
- 0 replies
- 611 views
-
-
செவ்வாய் 06-03-2007 00:41 மணி தமிழீழம் [மயூரன்] நீர்கொழும்பு பகுதியில் 15 வயது சிறுமி கடத்தல் இனம் தெரியாத குழுவினரால் நீர்கொழும்புப் பகுதியில் தமிழ் வர்த்தகர் ஒருவரின் 15 அகவையுடைய அவரது மகளை கடத்தி அவரது விடுதலைக்கு 4 மில்லியன் பணம் கொடுக்குமாறு கேட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை இவரது மகளையும் மற்றும் மகனையும் பாடசாலையைவிட்டு வரும்போது வழியில் வெள்ளை வானில் சென்றோரால் 1.30 மணியளவில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை அவரது மகன் அக்குழுவினரிடம் இருந்து தப்பி பத்திரமாக வீடுசென்று சேர்ந்துள்ளதாக தெரியவருகிறது. பதிவு.கொம்
-
- 0 replies
- 798 views
-
-
சிறிலங்காப் படையினரின் கடல்வழி வழங்கலை தடுப்பதற்கான தாக்குதல்களை உடனடியாகவே தொடங்ககவுள்ளதால் பொதுமக்கள் அவற்றில் பயணிப்பதை தவிர்க்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர். யாழ். குடாநாட்டில் உள்ள பொதுமக்களின் போக்குவரத்து எனக்கூறிக்கொண்டு குறைந்தளவிலான பொதுமக்களை ஏற்றிக்கொண்டு பெருமளவு படையினரையும் ஆயுதத் தளபாடங்களையும் சிறிலங்காப் படையினர் கப்பல்களில் கொண்டு செல்கின்றனர். பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி படையினர் பாரிய படையெடுப்புகளை முன்னெடுக்க தயாராகி வருகின்றது. படையினரின் கடல்வழி வழங்கலை தடுப்பதற்கான தாக்குதல்களை உடனடியாகவே ஆரம்பிக்கவுள்ளதால் பொதுமக்கள் அவற்றில் பயணிப்பதை தவிர்க்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது…
-
- 5 replies
- 2.5k views
-
-
மிருசுவிலில் இன்று அதிகாலை ஏதோ பயங்கரமாக நடந்துள்ளது. படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அவர்கள் வெளியிட்ட தகவலில் ஒரு மணித்தியாலங்களாக கடும் மோதல்கள் நடைபெற்றதாக தெரிகிறது. அது தொடர்பான சங்கதியின் செய்தி: யாழில் புலிகள் - படையினர் கடும் மோதல்?? - பாண்டியன் Monday, 05 March 2007 11:16 இன்று அதிகாலை யாழ். தென்மராட்சியில் உள்ள மிருசுவில் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையே கடுமையான மோதல்கள் நடைபெற்றுள்ளதாக சிங்களப் படைத்தரப்பு வெளியிட்டுள்ள தகவலின் மூலம் அறியப்படுகிறது. இன்று அதிகாலையில் படையினரின் முகாம் ஒன்றின் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாகவும் அதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்குமிடையே ஒரு …
-
- 4 replies
- 3.7k views
-