ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142769 topics in this forum
-
5 போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்கள் [திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2007, 18:54 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைக்காக களப்பலியாகிய 5 போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். மன்னார் கற்பிட்டி கடற்பரப்பில் கடந்த புதன்கிழமை (21.02.07) சிறிலங்கா கடற்படையினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது 2 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். 2 ஆம் லெப். அரசன் அல்லது அரவிந்தன் என்றழைக்கப்படும் முல்லைத்தீவு முள்ளியவளை சொந்த முகவரியாகவும் வவுனியா மாவட்டத்தை தற்காலிக முகவரியாகவும் கொண்ட சுந்தரமூர்த்தி சசிகரன், 2 ம் லெப். யாழ்வீரன் என்றழைக்கப்படும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சிமியோன் விஜயானந்தன் ஆகிய போராளிகளே வீரச்சா…
-
- 0 replies
- 1k views
-
-
ரணிலை தோற்கடிக்க புலிகளுடன் மஹிந்த செய்த இரகசிய ஒப்பந்தத்தை ஐ.தே.க. பகிரங்கப்படுத்தும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெறுவதற்கு புலிகளுடன் செய்துகொண்ட இரகசிய ஒப்பந்தம் வழிசமைத்தது என்ற உண்மையை ஆதாரங்களுடன் ஐக்கியதேசியக்கட்சி விரைவில் நிரூபிக்கும். ஐக்கியதேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க் கட்சியின் பிரதம கொரடாவுமான ஜோசப் மைக்கல் பெரேரா நேற்று இதைத் தெரிவித்தார். நேற்று எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இது குறித்து மேலும் கூறியதாவது: ஜனாதிபதித் தேர்தலில், வெற்றியீட்டுவதற்காக விடுதலைப் புலிகளுடன் மஹிந்த இரகசிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்திருந்தார் என்பதை அவரது கட்சிஉறுப்பினர்…
-
- 3 replies
- 1.6k views
-
-
மனித உரிமை மீறல்கள் குறித்து தகவல் தரக் கோருகிறது ஐ.தே.க "பக்ஸ்', மின்னஞ்சல் வழியாக அனுப்ப வசதி நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக பாதிக்கப்படுவோர் மற்றும் தகவல் தெரிந்தவர்கள் அவற்றை உடனடியாகத் தமக்கு அறிவிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி கேட்டிருக்கிறது. தகவல்களை வழங்குவதற்கான பக்ஸ் இலக்கம், மின்னஞ்சல் முகவரி என்பனவற்றையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக விடுக்கப்பட்ட செய்திக்குறிப்பு வருமாறு: நாட்டிற்குள் இன்று நீதிக்கு முரணான கடத்தல், கப்பம் பெறுதல், காணாமல் போதல், அதிகம் பயத்துடன் நடமாடுதல் உட்பட்ட மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றவண்ணமேயுள்ளன. இவ்வாறான அசம்பாவிதங்கள் உங்களுக்கோ, உங்களுக்கு அறிந்தவர்களுக்கோ ஏற்பட்டிருந்தால் அதை ஐக்க…
-
- 4 replies
- 1.1k views
-
-
விடுதலைப்புலிகள் இன்னமும் இலங்கையில் தடைசெய்யப்படவில்லை, இந்த நிலையில் விடுதலைப் புலிகளுடனான எவ்விதமான தொடர்பும் சட்ட விரோதமானதல்ல. விடுதலைப் புலிகளுடன் மட்டுமன்றி எந்த அரசியற் கட்சியுடனும் ஆயுதக் குழுவுடனும் தொடர்பு வைத்திருப்பவர் சட்டவிரோதமான காரியங்கட்காகக் கைது செய்யப்படலாமே ஒழிய அவரது அரசியல் தொடர்புகட்காக அல்ல. இது பொதுவாகச் சட்டமும் ஒழுங்கும் பேணவிரும்புகிற எந்த அரசாங்கமும் கடைப்பிடிக்கத்தக்க ஒரு நல்ல நடைமுறை. இலங்கையில் இவ்விதி அண்மையில் மூன்று சிங்களப் பத்திரிகையாளர்களின் ஆட்கடத்தலும் அதை அடுத்து அவர்களின் கைது என்று அறிவிக்கப்பட்டமையும் தொடர்பாக மீறப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் மட்டுமன்றி, எதேச்சாதிகார ஆட்சி நடத்துகிற எவருக்கும், தங்களது குழறுபடிகளை வெளிவெள…
-
- 0 replies
- 843 views
-
-
தமிழ்மொழி அமுலாக்கலுக்கு வழிகாட்டும் சுற்று நிருபம் நடைமுறைப்படுத்தப்படுமா? [26 - February - 2007] _ த. மனோகரன்_ தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை வழங்கி சொந்த மொழியில் கருமமாற்றும் நிலையை உருவாக்க வேண்டுமென்று தேசிய நல்லிணக்க, அரசியலமைப்பு அமைச்சர் டியூ குணசேகர அண்மையில் இரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டமொன்றில் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று பல உயர்மட்ட தலைவர்கள் இதே கருத்தை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இவை வெறும் மேடைப் பேச்சுக்களாக இருப்பதால் பயனொன்றும் ஏற்படப் போவதில்லை. இனப்பிரச்சினைக்கு மூல வேராக இருப்பது மொழிப் பிரச்சினையே. தனிச்சிங்கள அரச கருமமொழிச் சட்டம் கொண்டுவரப்பட்டதன் பின்னரே இந்நாட்டின் தமிழ், சிங்கள மக்களுக்கிடையே பிளவுகள் ஏற்பட்டு பல அவலங்க…
-
- 0 replies
- 799 views
-
-
எயிட்ஸால் பீடிக்கப்பட்ட குறைந்த எண்ணிக்கையான சிறுவர்கள் வாழும் நாடுகளில் இலங்கை 18 ஆம் இடத்தில் உலகிலுள்ள 287 நாடுகளில் எச்.ஐ.வீ./எயிட்ஸ் தொற்றுக்குள்ளான 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் மிகக் குறைந்தளவில் வாழும் நாடுகளின் வரிசையில் இலங்கைக்கு 18 ஆவது இடம் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. யுனிசெவ் அமைப்பு உலகளாவிய ரீதியில் மேற்கொண்ட ஆய்வொன்றின் மூலமே இத்தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சு மேலும் தெரிவிக்கையில்; சார்க் பிராந்தியத்தில் எச்.ஐ.வீ./எயிட்ஸ் தொற்றுக்கு குறைந்தளவில் உள்ளான நாடுகளின் வரிசையில் பூட்டான், மலேசியா ஆகிய நாடுகளுக்கு அடுத்த படியாக இலங்கையுள்ளது. உலகளாவிய ரீதியில் எயிட்ஸ் தாக்கத்திற்கு உட்பட்ட நா…
-
- 0 replies
- 718 views
-
-
விசேட அதிரடிப் படைத் தளபதியை அப்பதவியிலிருந்து நீக்க முயற்சி? விசேட அதிரடிப் படையின் கட்டளைத் தளபதியை அப் பதவியிலிருந்து நீக்கவும், வெற்றிடமாகும் அப்பதவிக்கு புதிதாக நியமனம் பெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்கவும் இரகசிய திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல் ஒன்று தெரிவிக்கிறது. இந்த நடவடிக்கையில் அரசியல்வாதிகள் சிலரும் பாதாள குழுக்களுடன் தொடர்புடையோர் சிலரின் பின்னணியும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து பொலிஸ் தலைமையகத் தகவல்கள் மேலும் கூறுகையில்; பாதாள உலக குழுக்களை ஒழித்துக் கட்டும் நடவடிக்கைகளில் விசேட அதிரடிப் படையின் கட்டளைத் தளபதி கடந்த காலத்தில் திறம்பட செயலாற்றி வந்துள்ளார். இதன் காரணமாக பாதாள உலக…
-
- 0 replies
- 805 views
-
-
முகமாலையில் மோதல் தொடர்கிறது ஷெல் வீச்சில் 3 படையினர் படுகாயம் தென்மராட்சி முகமாலைப் பகுதியில் படையினரும் விடுதலைப் புலிகளும் பரஸ்பரம் கடும் ஷெல் தாக்குதலை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற கடும் ஷெல் வீச்சில் மூன்று படையினர் படுகாயமடைந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். முகமாலையில் இராணுவ முன்னரங்க நிலைகள் மீது நடாத்தப்பட்ட ஷெல் வீச்சிலேயே இவர்கள் படுகாயமடைந்ததாகவும் படையினர் தெரிவிக்கின்றனர். படையினரின் பதில் தாக்குதலில் இரு புலிகள் கொல்லப்பட்டு அல்லது படுகாயமடைந்திருக்கலாமெனவும
-
- 0 replies
- 785 views
-
-
இலங்கை சீன ராஜீக உறவின் 50 வருட பூர்த்தி விழாவில் ஜனாதிபதி இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் ராஜீக உறவுகள் ஆரம் பிக்கப்பட்டு ஐம்பது வருடங்கள் பூர்த்தி அடைவதை ஒட்டிய விழா வில் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ கலந்து கொள்வார். அவரது சீன விஜயத்தின் போது இடம்பெற உள்ள முக்கிய நிகழ் வுகளில் இதுவும் ஒன்றாகும். இலங்கைக்கும் சீனாவுக் கும் இடையிலான வர்த்தகத்தை அபிவிருத்தி செய்யும் வகை யில் இரு நாடுகளுக்கும் இடை யிலான வர்த்தக பொருளாதார கூட்டு ஒப்பந்தம் ஒன்றும் கைச் சாத்திடப்படவுள்ளது. இதன் காரணமாக இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதிநிதிகளை யும், முன்னணி வர்த்தகப் பிரமுகர் களையும் ஜனாதிபதி அழைத்துச் செல்கிறார் என்று கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவினால் கடுமையாக …
-
- 0 replies
- 749 views
-
-
வடமராட்சி, தென்மராட்சிப் பிரதேசத்தில் சிறு குழந்தைகள் உணவுகளுக்குத் தட்டுப்பாடு வடமராட்சி,தென்மராட்சிப் பிரதேசங்களில் சிறு குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் பிஸ்கற்றுகள் பால்மாவகைகள், ஆகியவற்றுக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவுவதால் அந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த குழந்தைகள் போசாக்குக் குறைபாட்டால் பாதிப்படைந்து வருவதாகப் பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர். தாய்மாரõல் பாலுட்டப்படும் குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து மிக்க பிஸ்கற் வகை கள், பால்மா வகைகளுக்குப் பொது வாகவே குடாநாட்டில் தட்டுப்பாடு ஏற்பட் டுள்ளது. குறிப்பாக வடமராட்சி, தென்மராட்சிப் பிரதேசங்களில் அவற்றை சிறிதளவேனும் பெற்றுக்கொள்ள முடியாத நிலை தோன்றியுள்ளது. இந்த நிலை தொடருமானால் இப்பிரதேசங்களைச் ச…
-
- 0 replies
- 751 views
-
-
ரணிலின் ஆட்சியில்-130பேர் மஹிந்த ஆட்சியில்-4,000 பேர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானது முதல் இன்றுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் ஆக 130 பேர் மட்டுமே கொல்லப்பட்டனர். ஐ. தே. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல நேற்று நாடாளுமன்றில் உயிரிழப்புகள் குறித்து இப்படிக் கணக்குக்காட்டி உரையாற்றினார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அமரர் ரவிராஜுக்கான அனுதாபப் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியதாவது: 56 இல் தமிழர்கள் வேறு ராஜ்யம் கேட்கவில்லை. கலாசார மற்றும் மொழி உரிமையையே கேட்டனர். அவை மறுக்கப்பட்டதன் காரணத்தாலேயே போராட்டம் தொடங்கப்பட்டது. அதன் பிறகே அவர்கள் தனிநாடு …
-
- 0 replies
- 653 views
-
-
கிழக்குப் பல்கலைக்கழகம் அருகே கிளைமோர் தாக்குதலின்பின் கைதான 16 பேர் மீது தொடர்ந்து விசாரணை கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு அருகில் அண்மையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள 16 பேர் தொடர்ந்தும் பொலிஸாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள சிலரை விடுவிப்பது குறித்து பாதுகாப்புப் படையினர் கவனஞ்செலுத்தி வருகின்றனர் என்று மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கூறியிருக்கிறார். குறிப்பாக கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்களை விடுதலை செய்யுமாறு பல்கலைக்கழக அதிகாரிகள் தம்மிடம் கோரினர் என்று அவர் தெரிவித்தார். தடுத்து…
-
- 0 replies
- 569 views
-
-
யாழ்ப்பாணத்தில் காணமற்போன வண.பிதா குறித்து விசாரணை ஆறு மாதங்களுக்கு முன்னர் காணமற்போன கத்தோலிக்க மத குருவான வண. பிதா ஜிம் பிறவுண் தொடர்பான விசாரணைகளை, மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணை ஆணைக்குழு மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. படையினருக்கும், விடுதலைப் புலிகளிற்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த தருணத்தில், கடந்த ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி 34 வயதான வண. பிதா ஜிம் பிறவுண் யாழ்ப்பாணத்தில் தன்னுடைய உதவியாளருடன் பயணம் செய்துகொண்டிருந்தபோது காணமல்போனார். படையினரின் முழுமையான கட்டுப்பாட்டிலுள்ள அல்லைப்பிட்டிப் பகுதியிலுள்ள இராணுவச்சோதனைச் சாவடி ஒன்றின் முன்பாகவே …
-
- 0 replies
- 695 views
-
-
ஒற்றை ஆட்சி மற்றும் ஐக்கிய ராஜ்யம் என்ற கொள்கைகளில் இருந்து விடுபட்டு சமஷ்டி மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முயற்சி செய்து வருகிறார் என்று அமைச்சர் டிலான் பெரேரா கூறினார். நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற அமரர் ரவிராஜுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது: நல்லதொரு ஜனநாயகவாதியான ரவிராஜ் கொல்லப்பட்டதானது துரதிஷ்டமானது. அவர் தனது கடமைகளைத் தெளிவாகப் புரிந்துகொண்டு செயற்பட்டவர். அவரது இறுதி அஞ்சலியில் நான் கலந்துகொண்டதன் காரணமாக நான் புலி என்று வர்ணிக்கப்பட்டேன். இந்தச் சபையில் உள்ளவர்கள் என்னைப் புலி என்று கூறிவிட்டு ரவிராஜின் அனுதாபப் பிரேரணையில் கலந்துகொண்டு உரைய…
-
- 0 replies
- 1.4k views
-
-
மோசமான கட்டத்தை அடைந்திருக்கின்றது இலங்கை இனப்பிரச்சினை. யுத்த நிறுத்த உடன்பாடு எந்நேரமும் முறிந்து போகலாம் என்ற நிலைமை. பிரகடனப்படுத்தப்படாத, "ஈழப்போர் 4' இப்போது நிழல் யுத்தமாகத் தீவிரமடைந்து வருகின்றது. அது எந்நேரமும் முழு அளவிலான பெரும் யுத்தமாக வெடிக்கலாம் என்ற ஏதுநிலை சூழ்ந்து வருகின்றது. இந்தப் பேரழிவு ஆபத்துத் தவிர்க்கப்படவேண்டும். நீதி, நியாயமான அரசியல் அதிகாரப்பகிர்வுத்திட்டம் ஒன்றை சிறுபான்மையினரான ஈழத் தமிழர்களுக்கு வழங்குவதன் மூலமே இந்தப் பேராபத்தைத் தவிர்க்க முடியும். இந்த உண்மை நிலையை மெய்மை யதார்த்தத்தை சர்வதேச சமூகம் நன்கு உணர்ந்திருக்கின்றது. அதனால்தான், இனிமேலும் தாமதிக்காமல் நியாயமான தீர்வுத்திட்டத்தை நீதியான அரசியல் யோசனைகளை முன்வையுங்கள் என்ற கடும்…
-
- 0 replies
- 673 views
-
-
அமைதியை உருவாக்குவதற்கு இந்தியா இலங்கைத் தலைவர்களுக்கு ஆலோசனை: அப்துல் கலாம் இலங்கைப் பிரச்சினையில் அமைதியை ஏற்படுத்த நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை அரசியல் தலைவர்களுக்கு இந்தியா யோசனை தெரிவித்துள்ளது என இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தகவல் வெளியிட்டுள்ளார்.வெலிங்டன் இராணுவ வீரர் பயிற்சிக் கல்லூரியில், பயிற்சி வீரர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். வெலிங்டன் இராணுவ வீரர் பயிற்சிக் கல்லூரியில் 23 நாடுகளைச் சேர்ந்த 33 வீரர்கள் இந்திய வீரர்களுடன் இணைந்து பயிற்சி பெறுகின்றனர். இவர்களில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த வீரர் குணவர்த்தன, தெற்காசிய நாடுகளில் அமைதி ஏற்படுத்துவதில் இந்தியாவின் பங்கு குறித்து கலாமிடம் கேட்டதற்கு.…
-
- 0 replies
- 686 views
-
-
தனி இராஜ்ஜியத்துக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக புலிகள் முன்வைத்துள்ள வரைவிலக்கணத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா? - ஜே.வி.பி. கேள்வி எழுப்பியுள்ளது போர்நிறுத்த உடன்படிக்கைக்கு ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ளமையை முன்னிட்டு புலிகள் தமது தனி இராஜ்ஜியத்துக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக முன்வைத்துள்ள வரைவிலக்கனத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா? என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஜே.வி.பி. கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து ஜே.வி.பி. விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஐந்து வருடங்கள் பூர்த்தியாவதனை முன்னிட்டு விடுதலை புலிகள் தெரிவித்துள்ள விடயங்கள் இந்த நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கஅரப்பணிப்புடன் இருக்கும் அனைவரினதும் அவத…
-
- 2 replies
- 1.2k views
-
-
மங்கள, சூரியாராச்சி ஆகியோர் மீண்டும் அரசில் இணைய வேண்டுமாயின் இராணுவத்தினரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்: மகிந்த. சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவால் பதவி நீக்கப்பட்ட அமைச்சர்களான மங்கள சமரவீர, சிறீபதி சூரியாராச்சி ஆகியோர் மீண்டும் அரசில் இணைய வேண்டுமாயின் இராணுவத்தினரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என மகிந்த நிபந்தனை விதித்துள்ளார். 'ஜனபதி ஜனகமுவ' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மகிந்த இந்த நிபந்தனையை விதித்துள்ளார். இந்நிகழ்வில் அவர் ஆற்றிய உரையில் கூறியதாவது: "இராணுவத்தினர், விடுதலைப் புலிகளுடன் வீரமாக போரிட்டுக் கொண்டிருக்கும் போது, விடுதலைப் புலிகளுக்கும் அரசிற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் …
-
- 2 replies
- 1k views
-
-
ஏப்பிரல் மாதத்திற்கு முன்னர் உரிய தீர்வினை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் - ஜப்பான் எதிர்வரும் ஏப்பிரல் மாதத்திற்கு முன்னர் இலங்கை இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வினை ஸ்ரீலங்கா அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என ஜப்பான் வலியுறுத்தியுள்ளது கடந்த வாரம் நடைபெற்ற இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத்தலைமைகிள் தொலைபேசி கலந்தரையாடலில் கலந்து கொண்ட ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி இந்த கருத்தை முன்வைத்துள்ளார் இலங்கையின் இனப்பிரச்சினை தொடாந்தும் முடிவற்ற நீண்டு செல்வதை அனுமதிக்க முடியாது என்றும் ஸ்ரீலங்கா அரசாங்கம் தீர்வு திட்டம் ஒன்றை உடனடியாக முன்வைக்க வேண்டும் என இணைத்தலைமை நாடுகள் வலியுறத்த வேண்டும் என்றம் அகாசி தெரிவித்துள்ளார் இதேவேளை ஜப்பானுக்கு விஜயம…
-
- 4 replies
- 1k views
-
-
India is to grant the Sri Lanka Navy another ocean-going warship as part of greater cooperation between the two countries, media reports in Colombo said Sunday. The Nation newspaper said India `will either grant or lease a coast guard vessel` to the Sri Lanka Navy. The former Indian Coast Guard vessel, `Varaha`, is similar to the Offshore Patrol craft (OPC) which India provided in 2000 and which is now the flagship of the SLN, the paper said. The Varaha will be the third large `blue water` warship in the SLN`s fleet along with the US-supplied cutter. The Varaha has already been serving with the SLN as a substitute while the SLNS Sayura, the flagship o…
-
- 18 replies
- 2.7k views
-
-
இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆண்டு தோறும் கூடி தனது நிர்வாக சபையைத் தெரிவு செய்கிறது. இடையிடையே சில தமிழ் ஊடகவியலாளர்கள் பாதிக்கப்படும் பொழுது அறிக்கை விடுவதோடு அது முடிந்து விடுகிறது. தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் மீது பல ஊடகவியலாளர்கள் அதிருப்தியிலேயே இருக்கிறார்கள். குறிப்பாக தமிழர் தாயகப் பகுதியில் இருந்து செயற்படும் ஊடகவியலாளர்களிற்கு விடுக்கப்படும் கொலை அச்சுறுத்தல் தொடர்பாக தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கவனத்தில் எடுப்பதே இல்லையென ஊடகவியலாளர்கள் மத்தியில் விசனம் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக தென்தமிழீழத்தில் செயற்படும் ஊடகவியலளர்கள் சிலருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டபோது சுதந்திர ஊடக இயக்கம் அந்த ஊடகவியலர்கள் மீது கொண்ட கரிசனை கூட தமிழ் ஊடவியலாளர் ஒன்றிய…
-
- 0 replies
- 744 views
-
-
திருமலையில் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீளக்குடியமர முடியாத நிலை [திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2007, 03:28 ஈழம்] [திருமலை விசேட நிருபர்] யுத்த அனர்த்தம் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தமிழ்க் கிராமங்களிலில் இருந்து இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக சிறிலங்காஅரசாங்கம் எடுத்திருக்கும் முடிவுகள் காரணமாக 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமரும் வாய்ப்பை இழந்துள்ளனர். மூதூர், சேருவில மற்றும் ஈச்சிலம்பத்தை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள கிராமங்களில் இருந்து வெளியேறிய 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்க்குடும்பங்கள் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஏனைய மாவட்டங்களிலும் யுத்த அகதிகளாக தங்கியிருக்க…
-
- 1 reply
- 792 views
-
-
T.ராஜேந்திரன் அவர்களின் ஈழப்பிரச்சினை பற்றிய ஒலிப்பதிவை கேட்க்க இங்கே அழுத்துங்கள் முதலில் தன்னை பற்றியும் பின் ஈழப்பிரச்சினை பற்றிய அவரின் உணர்சிவசப்ப்பட்ட்ட கருத்து http://www.mandaitivu.com/
-
- 18 replies
- 5.4k views
-
-
ஊடகம் ஒன்றிற்கு தொலைபேசி மூலம் வழங்கிய பேட்டியில் சிறீ லங்காவுக்கான அமெரிக்கத்தூதுவர் போர் புரிந்து கொண்டு சமாதானம் பேச வேண்டுமென்ற மகிந்து சிந்தனைக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் வெறும் போரின் மூலம் தோற்கடிக்கப்பட முடியாதவர்கள் என்றும், இதன் காரணமாக பேச்சுவார்த்தைக்கு அவர்களை இழுத்து, அதே நேரம் போரையும் அவர்களுடன் சமகாலத்தில் புரிந்து தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் பகிரங்கமாக அறிவித்துள்ளார். இச்செய்தி ஆங்கிலத்தில் கீழே இணைக்கப்பட்டுள்ளது. Describing the situation in Sri Lanka as 'serious', the US envoy to the island nation has warned against attempts to underestimate the Tamil Tigers and asserted t…
-
- 10 replies
- 3.3k views
-
-
திங்கள் 26-02-2007 02:06 மணி தமிழீழம் [மோகன்] வடமராட்சியில் இரு மாணவர்களை காணவில்லை வடமராட்சி உடுப்பிட்டி பகுதியில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் பாடசாலையை சேர்ந்த இரு 15 வயது மாணவர்களை சனிக்கிழமை மதியம் 1.30 மணியில் இருந்து காணவில்லை என வல்வெட்டித்துறை காவல்நிலையம், மற்றும் மனித உரிமைகள் ஆணையகத்தில் முறையிடப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தனியார் கல்வி நிலையம் ஒன்றில் கல்விகற்க ஈருருளியில் சென்றதாகவும் அதன்பின் காணவில்லை எனவும் தெரியவந்துள்ளது. காணாமல் போகடிக்கப்பட்டவர்கள் பூவதாசன் ஐசீதரன் மற்றும் அவரது நண்பன் குணசேகரலிங்கம் சிவரூபன் எனவும் இருவம் 15 ம் மைல் கல்லை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. குடும்ப உறுப்பினர்களின் தகவலின்படி சிறீலங்கா இராணுவ…
-
- 0 replies
- 776 views
-