ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142769 topics in this forum
-
நாடாளுமன்றில் ஜே.வி.பியினர் பெரும் ரகளை [Friday February 23 2007 04:21:13 AM GMT] [tharan] ரணில் பிரபா யுத்தநிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும் எனக்கோரி ஜே.வி.பியினர் நாடாளுமன்றத்தின் நடுவே நேற்று ஆர்ப் பாட்டம் செய்தனர். இதனால் சபை நட வடிக்கைகள் ஸ்தம்பித்தன. இந்தச் சந்தர்ப் பத்தில் ஜே.வி.பி. உறுப்பினர் ஒருவர் செங் கோலைத் தூக்கிக்கொண்டு சபைக்கு வெளியே ஓட்டம் பிடித்தார். ஜே.வி.பியின் திருமலை மாவட்ட உறுப்பினரான ஜயந்த வீரசேகரவே செங்கோலைத் தூக்கிக்கொண்டு சபைக்கு வெளியே ஓடினார். படைக்கல சேவிதரும் உதவியாளர்களும் அவரைப் பின்னால் துரத்திச் சென்று செங்கோலை அவரிட மிருந்து பறித்து வந்து சபா பீடத்தில் வைத் தனர். நாடாளுமன்றத்தில…
-
- 1 reply
- 1.1k views
-
-
விடுதலைப்புலிகளில் சிங்கள் பெண் போராளிகள் உள்ள்னர்-கோதபாய ராஜபக்ஷ் விசாரணைகளிலிருந்து விடுதலைப்புலிகள் பல சிங்கள பெண் போராளிகளும் காணப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜப்க்ஷ தெரிவித்துள்ளார். பல சிங்கள் பெண் விடுதலைப்புலிகளிடத்தில் பயிற்சிகளையும் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். பயிற்சிகளை பெற்றவர்கள் இன்ரும் கைது செய்யப்படவில்லை கடந்த சில தினங்கலுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட சிங்கள புலி போராளியொருவர் இத்தகவலை தெரிவித்தார். http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews
-
- 6 replies
- 2.2k views
-
-
கண்காணிப்புக்குழுவின் அறிக்கைக்கு கேகலிய ரம்புக்வெல பதில். [வெள்ளிக்கிழமை, 23 பெப்ரவரி 2007, 06:10 ஈழம்] [அ.அருணாசலம்] "போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாதிடப்பட்ட 2002 ஆம் ஆண்டில் இருந்தான முதல் மூன்றரை வருட காலத்தில் நாட்டின் இறைமைக்கு பாரிய அச்சறுத்தல்கள் இருந்தன. ஆனால் தற்போது வன்முறைகள் அதிகரித்துள்ளதால் அது குறைந்துள்ளது" என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிறிலங்காவில் கடந்த 15 மாதங்களில் 4,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கண்காணிப்புக்குழு அறிக்கைக்கு பதில் அறிக்கையாக சிறிலங்கா அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்கு பொறுப்பான பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: "போர் நிறுத்த ஆரம்பத்தின் மூன்றரை வர…
-
- 0 replies
- 720 views
-
-
வெள்ளி 23-02-2007 03:00 மணி தமிழீழம் [சிறீதரன்] புத்தூர் பகுதியில் சூட்டுக்காயங்களுடன் உடலம் அச்சுவேலி காவல்துறையினரால் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரின் உடலம் சூட்டுக்காயங்களுடன் புத்தூர் கிழக்கு வாகரவத்தை பகுதியல் மக்கள் குடியிருப்பு பகுதியில் வியாழன் காலை மீட்க்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் அவ் உடலத்தை பிரேத பரிசோதனைக்காக வியாழன் மதியம் யாழ் ஆசிரியர் வைத்திய சாலையில் கையளித்துள்ளனர். இதேவேளை குடிசார் தகவலின் படி புதன் மாலை சிறீலங்கா படையினரின் நடமாட்டம் அப்பகுதியில் காணப்பட்டதாகவும் துப்பாக்கி சத்தம் கேட்டதாகவும் தெரியவந்துள்ளது. எனினும் அவ் உடலமானது இன்னமும் இனம்காணப்படவில்லை http://www.pathivu.com
-
- 1 reply
- 953 views
-
-
15 மாதங்களில் 4,000 பேர் பலி: இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழு இலங்கையில் கடந்த 15 மாதங்களில் 4,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் நாள் போர் நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்ட பின்னரான முதல் மூன்று வருடங்களில் 130-க்கும் குறைவானவர்களே கொல்லப்பட்டிருந்தனர் என இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அக்குழு போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 5 ஆம் ஆண்டு நிறைவையொட்டி நேற்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: "இலங்கையில் கடந்த 15 மாதங்களில் 4,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பெருமளவானோர் கடுமையாக காயமடைந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் இருந்து இடம…
-
- 0 replies
- 662 views
-
-
யுத்த நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையை உத்தியோக பூர்வமாக இரத்துச் செய்து தேசப்பற்றுள்ளவர்கள் பட்டியலில் தனது பெயரை உள்ளடக்கப் போகிறாரா? அல்லது 5 வருட பூர்த்திக்கு இடமளித்துவிட்டு தேசத்துரோகிகள் பட்டியலில் தனது பெயரைப் பதியப் போகிறாரா? என்பதை ஜனாதிபதி இன்னும் 24 மணித்தியாலங்களுக்குள் தீர்மானிக்க வேண்டும் எனத் தெரிவிக்கும் தேசிய பிக்கு முன்னணி உடன்படிக்கையை இரத்துச் செய்யப்படாவிட்டால் நாட்டில் தோன்றும் அமைதியின்மைக்கும் நெருக்கடிகளுக்கும் அரசதலைவரே பொறுப்பேற்க வேண்டுமென்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐந்து வருடம் பூர்த்தியாகவுள்ள நிலையில் எதிர்வரும் 22ஆம் திகதிக்கு முன்னர் யுத்த நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையை ஜனாதிபதி இரத்துச் செய்யவேண்டுமென வலியுறுத்தி கொழும்…
-
- 12 replies
- 3.4k views
-
-
டி.சிவராம ; (தராக்கி) ஜ வியாழக்கிழமைஇ 22 பெப்ரவரி 2007 ஸ ஜ ஜனனி ஸ புலிகள் சமர்ப்பித்துள்ள இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை திட்டத்திற்கும் நீங்கள் அருந்துகின்ற 'பன்ரா" போன்ற மென்பானங்களில் நிறக் கலவை போத்தலடியில் படியாமலிருப்பதற்கும் என்ன தொடர்பு? (இக்கேள்வியைப் பார்த்தவுடன் 'ஆஹா! கடைசியாக ஆளுக்கு மூளையில் தட்டிவிட்டது" என எண்ணுவோரை சற்றுப்பொறுமையாக மேற்கொண்டு படிக்கும்படி வேண்டிக் கொள்கிறேன்) புலிகள் பல்வேறு நாடுகளில் ஸ்ரீலங்கா அரசுடன் (ஆறுமுறை) பேசி கிடைத்தபலன் ஒன்றுமில்லை. நீண்டகாலமாக ஸ்ரீலங்கா அரசும் சிங்களத் தேசியவாதிகளும் சர்வதேச சமூகத்திடம் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துவந்தனர். 'புலிகள் பேச்சுவார்த்தைகளை தமது போரியல் தயாரிப்புகளை செய்வதற்கான ஒரு சுத…
-
- 3 replies
- 2k views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 21-02-2007 அன்று ஒளிபரப்பாகிய '' காலக்கணிப்பு'' www.tamils.info/index.php?subaction=showfull&id=1172149393&archive=&start_from=&ucat=&
-
- 1 reply
- 1.6k views
-
-
-
தீர்வு திட்டத்தை விரைவில் வெளியிடுமாறு இணைத்தலைமை நாடுகள் வலியுறுத்தியுள்ளன இலங்கை இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் ஸ்ரீலங்கா அரசாங்கம் முன்வைக்கவுள்ள தீர்வு திட்டத்தை விரைவில் வெளியிடுமாறு இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத்தலைமைகள் வலியுறுத்தியுள்ளன நேற்று கொழும்பில் நடைபெற்ற யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் 5 ஆண்டுகள் நிறைவு தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இணைத்தலைமைகளின் பிரதிநிதிகள் இந்த கருத்தை வலியுறுத்தியுள்ளனர் ஸ்ரீலங்கா அரசாங்கம் அதிகார பரவலாக்கல் தொடர்பான தீர்வு யோசனைகளை உடனடியாக முன்வைத்து விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என இணைத்தலைமைகள் கோரிக்கை விடுத்துள்ளன நேற்றைய கருத்தரங்கில் இலங்கையில் …
-
- 0 replies
- 964 views
-
-
எல்லைப்பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பலர் இடம்பெயருகின்றனர் - புலிகள் தரப்பில் பேசவல்ல என்.செல்வி தொலைபேசி மூலமாக ஏ.எப்பி தெரிவித்திருந்தார். சிறிலங்கா அரசு படையினரின் போர் நடவெடிக்கை ஏற்படளாமென பல பொதுமக்கள் இடம் பெயருகின்றனர் . என விடுதலைப்புலிகள் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாக ஏ.எப்பி செய்தி வெளியிட்டுள்ளது . இரு பகுதி எல்லைகளில் உள்ள குழந்தைகள் வயோதிபர்கள் பெயர்கள் உட்பட பலர் வெளியேறி வருவதாகவும் வன்னி மத்திய பகுதியில் பலர் அகதிகள் தஞ்சமடைந்துள்ளார் . என்றும் விடுதலைப்புலிகள் தரப்பில் பேசவல்ல என்.செல்வி தொலைபேசி மூலமாக ஏ.எப்பி தெரிவித்திருந்தார். தொடர்ந்து ஆழ ஊடுறு படையிணிகளால் நடத்தப்படும் கிளேமோர் தாக்குதல் காரணம் தற்போதைய கெடுபிடி நில…
-
- 0 replies
- 1.2k views
-
-
http://sankathi.org/news/index.php?option=...38&Itemid=1
-
- 27 replies
- 7.1k views
-
-
கொழும்பு, கிருலப்பனையில் நேற்று புதன்கிழமை இரவு இனம்தெரியாதவர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர். கிருலப்பனை பொலிஸ் நிலையத்திற்கு பின்னாலுள்ள கிருல வியாபாரய குடிமனைப் பகுதியிலேயே நேற்றிரவு 7.45 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம் இடம்பெற்றதாக கிருலப்பனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம இன்ஸ்பெக்டர் மாலன் பெரேரா தெரிவித்தார். காயமடைந்தவர்களில் இருவர் தமிழர்கள். மற்றவர் சிங்களவராவார். கோபால் மகேந்திரன் (50 வயது) சரோஜினி ரதிதேவி (47 வயது). கே.வி. சமந்த (35 வயது) ஆகிய மூவருமே படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் தமிழர்கள் இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் சிங்கள இளைஞர் களுபோவில ஆஸ்பத்திரியிலும் அனுமதிக…
-
- 3 replies
- 1.9k views
-
-
தேசியத் தலைவரின் தலைமையில் சுதந்திரக் காற்றை விரைவில் சுவாசிப்போம்: சோ.தங்கன். "தமிழீழ தேசியத் தலைவரின் தலைமையில் சுதந்திரக்காற்றை விரைவில் சுவாசிப்போம்" என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ.தங்கன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி அக்கராயனில் சமூக பொருளாதார அபிவிருத்தி வங்கிக் கிளையின் திறப்பு விழா நேற்று புதன்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழீழ தேசியக் கொடியினை அக்கராயன் பிரதேச பொறுப்பாளர் மாறன் ஏற்றி வைத்தார். வங்கியின் பெயர்ப்பலகையினை தமிழர் புனர்வாழ்வுக் கழக உதவிப் பணிப்பாளர் ரவிச்சந்திரன் திரைநீக்கம் செய்து வைத்தார். கிளிநொச்சி மாவட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணிப்பாளர் சீசர் தலைமைய…
-
- 0 replies
- 1.3k views
-
-
இராணுவத் தளபதிகள் மூலமாகவே யுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமெனத் தெரிவித்த ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கா, இலங்கையின் தற்போதைய வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவா அல்லது பசில் ராஜபக்ஷவா எனவும் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை பொதுநிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற குழுவின் அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது; நாடு சீரழிந்து செல்கிறது. பொருளாதாரமும் கீழ்மட்ட நிலையில் காணப்படுகிறது. அதிகாரி தொடக்கம் ஊழியர் வரை எங்குமே ஊழல் தலைவிரித்தாடுகிறது. நாட்டின் கணக்காய்வாளர் நாயகமாக செயற்பட்ட மாயாதுன்ன நடுநிலையாக செயற்பட்டவர் எனினும், அவர் சமர்ப்பித்த அறி…
-
- 1 reply
- 1.1k views
-
-
போர்நிறுத்த உடன்படிக்கையின் மீது நம்பிக்கையில்லையென்றால் அது குறித்து மேடைகளில் விமர்சிப்பதை விடுத்து அதனை முடிவுக்குக் கொண்டு வருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை வலியுறுத்தியிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதியோ அவரது அரசாங்கமோ இதனை ஒருபோதும் செய்யப்போவதில்லை எனவும் அதற்கான தைரியம் அரசிடம் கிடையாதெனவும் சுட்டிக் காட்டியுள்ளது. சமஷ்டிவாதிகளும் ஒற்றையாட்சிவாதிகளும் இரண்டறக் கலந்த அரசாங்கத்தால் தீர்வுக்கான யோசனைகள் எதனையும் முன்வைக்க முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டிருப்பதாகவும் ஐ.தே.க.தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சியின் செய்தியாளர் மாநாட்டின்போதே இத்தகவல்கள் வெளியிடப்பட்டன. கட்சியின் ஊடகப் பேச்சாளர் பாராள…
-
- 0 replies
- 893 views
-
-
இனப்பிரச்சினையில் அரசாங்கம் தனது யுத்தக் கொள்கையை கைவிட்டு அரசியல்தீர்வு குறித்து மீளப் பரிசீலனை செய்து, செயற்படவில்லையெனின் நழுவவிட்ட சந்தர்ப்பங்களுக்காகவும், விட்ட தவறுகளுக்காகவும் ஒரு காலத்தில் வருந்த வேண்டியிருக்குமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான என்.ஸ்ரீகாந்தா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மீள்குடியேற்ற அதிகார சபை சட்டமூலம் மீதான விவாதத்தில் பேசும்போதே ஷ்ரீகாந்தா எம்.பி. இவ்வாறு கூறினார். அவர் இங்கு மேலும் பேசுகையில்; இந்த மீள்குடியேற்ற அதிகார சபை சட்டமூலமானது நகைப்புக்குரிய விடயமாகும். பல வருடங்களாக முடிவில்லாமல் நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு ஜனாதிபதியும், அர சாங்கமும் இராணுவ ரீதியிலான தீர்வுக்கு …
-
- 0 replies
- 1k views
-
-
அம்பாறை கஞ்சிகுடிச்சாறு பகுதியில் நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் பத்திற்கும் மேற்பட்ட விஷேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். கஞ்சிகுடிச்சாறு ரூபஸ் குளம் பகுதியிலேயே இந்தத் தாக்குதல் நேற்றுக் காலை 9.30 மணியளவில் இடம்பெற்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். உழவு இயந்திரமொன்றில் சென்று கொண்டிருந்த அதிரடிப்படையினரை இலக்குவைத்தே இந்தக் கிளேமோர் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் புலிகள் கூறுகின்றனர். இத்தாக்குதலில், உழவு இயந்திரத்தில் சென்று கொண்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கஞ்சிகுடிச்சாறு காட்டுப் பகுதியில் அண்மையில் அதிரடிப்படையினர் பாரிய நடவடிக்கை…
-
- 0 replies
- 1.2k views
-
-
யுத்தநிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் திகதியுடன் காலாவதியாகிவிட்டது. எனவே, புதிதாக இரத்துச் செய்வதற்கான தேவை ஏற்படவில்லையெனத் தெரிவிக்கும் ஜாதிக ஹெல உறுமய அன்றைய தினம் தான் விடுதலைப்புலிகள் மீது எமது படையினர் தாக்குதல் நடத்தி விரட்டியடித்து மாவிலாறு அணைக்கட்டை பாதுகாத்தனர். அன்றே யுத்தநிறுத்தம் மரணித்துவிட்டதென்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் ஓமல்பே சோபித தேரர் மேலும் தெரிவித்திருப்பதாவது: மாவிலாறில் எமது படையினர் கண்ட வெற்றிக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தில் தாக்குதல்களை நடத்தி புலிகளை அங்கிருந்து வெளியேறச் செய்துள்ளனர். அத்தோடு, இன்று கிளிநொச்சி, முல்லைத்தீவு புலிகள் நிலைகள் மீது விமானத் தாக…
-
- 0 replies
- 682 views
-
-
நோர்வே அரசு, விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசிற்கும் இடையில் தொடர்ந்து சமாதான அனுசரணையாளராக தொழிற்பட விரும்புகிறது. அவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப உதவிகள் புரியவும் தயாராக உள்ளது." இவ்வாறு இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் தெரிவித்துள்ளார். இலங்கையில் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை ஐந்தாவது வருடத்தை நிறைவு செய்வதை முன்னிட்டு, தேசிய அமைதி சபையினால் பண்டாரநாயக்க ஞாபகார்த்த அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று புதன்கிழமை ஒழுங்கு செய்யப்பட்ட விழாவில் கலந்து கொண்டு நோர்வேயின் தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையின் முழுவடிவம் வருமாறு. கனவான்களே மற்றும் சீமாட்டிகளே, "இந்த வருடம் பெப்ரவரி 22 …
-
- 0 replies
- 637 views
-
-
'குவந்தனமோ சிறை சிறிலங்காவின் பூசா தடுப்பு முகாமை விட சிறந்தது': றொய்டர்ஸ் "குவந்தனமோ சிறை சிறிலங்காவின் பூசா தடுப்பு முகாமை விட சிறந்தது" என்று அனைத்துலக செய்தி நிறுவனமான ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தனது ஆய்வுக்கட்டுரையில் தெரிவித்துள்ளது. அந்த ஆய்வின் முழுவடிவம் வருமாறு: பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் எமது வாழ்க்கை அழிக்கப்படுகிறது என்று பூசா தடுப்பு முகாமில் உள்ள தனது உறவினர் ஒருவரை காண வந்தவர்களில் ஒருவர் தெரிவித்திருக்கின்றார். சிறிலங்காவின் தென்பகுதி தடுப்பு முகாமான பூசா முகாமில் குற்றங்கள் சுமத்தப்படாது பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் பலர் முகாமிற்கு வெளியில் பலர் நாளாந்தம் காத்திருக்கின்றனர். சிலரது கைகளில் க…
-
- 3 replies
- 1.4k views
-
-
செத்தும் சாகாத நிலையில் செயலிழந்து கிடக்கும் உடன்பாடு. அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்த நிறுத்தத்துக்கு வழிசெய்த புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு இன்றுடன் ஐந்து வயது கடந்து விட்டது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறியிருக்கின்றமை போல செயலிழந்து, செல்லரித்து, உக்கி, உருக்குலைந்து வெறும் காகிதமாகி இருக்கின்றது அந்த உடன்பாடு. என்றாலும் பெயரளவிலேனும் அது நின்று, நிலைத்து, நீடிக்கின்றது என்பதே யதார்த்தம். நிழல் யுத்தம் ஒன்று தனது கோரமான நிஜ முகத்தை மூடிக்கொண்டு இங்கு தொடர்வதற்கு இடமளித்து செயலற்றுச் செத்துக்கிடக்கிறது யுத்த நிறுத்த உடன்பாடு. அதனைக் கிழித்தெறியும்படி பௌத்த சிங்களப் பேரினவாதம் எகிறும் போதும் அப்படிச் செய்யத் தனக்கு விருப…
-
- 0 replies
- 902 views
-
-
போரானது யுத்த நிறுத்த உடன்படிக்கையின் இருப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது ஜப்பானிய தூதுவர் கியோஷி அராகி இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் ஏற்பட்டுள்ள பேரானது யுத்த நிறுத்த உடன்படிக்கையின் இருப்பு நிலைக்கே அச்சுறுத்தலாகஅமைந்துள்ளது. சமூகங்களிடையே சகவாழ்வை உறுதிப்படுத்தி நாட்டை கட்டியெழுப்புவதற்கு இலங்கை அரசாங்கம் எவ்வாறு செயற்படுகின்றது என்பது தொடர்பில் சர்வதேச சமூகம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றது என்று இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் கியோஷி அராகி தெரிவித்தார். ஐந்து வருட யுத்த நிறுத்தஉடன்படிக்கை அடுத்து என்ன என்ற தொனிப்பொருளில் நேற்று புதன்கிழமை இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாட்டில் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்…
-
- 1 reply
- 1.2k views
-
-
வாழைச்சேனையில் சிறிலங்கா காவல்துறையினர் மீது கிளைமோர் தாக்குதல்: 1 அதிகாரி உட்பட மூவர் பலி [Wednesday February 21 2007 02:33:41 PM GMT] [யாழ் வாணன்] மட்டக்களப்பு வாழைச்சேனையில் சிறிலங்கா காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் காவல்துறை அதிகாரி உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளனர். வாழைச்சேனை ஓட்டமாவடியில் இன்று புதன்கிழமை மாலை 5 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காவல்துறை இன்ஸ்பெக்டர் உட்பட இரு காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் உட்பட 16 பேர் காயமடைந்துள்ளனர். இதனிடையே யாழ். பலாலி வீதி இலுப்பையடிச் சந்தியில் சிறிலங்கா இராணுவத்தினரின் இராணுவ ட்றக் மீது கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட…
-
- 1 reply
- 1.1k views
-
-
மகிந்தவும் சகோதரர்களும் வியாழன் 22-02-2007 04:01 மணி தமிழீழம் [சிறீதரன்] ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சராக மகிந்த ராஜபக்சவின் சகோதரரான பசில் ராஜபக்சசே செயல்பட்டு வருவதாக இராஜதந்திர தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன தனது கட்டுப்பாட்டிற்குள் செயல்படக் கூடியவரான ரோஹித போகொல்லாகமவிற்கு வெளிவிவாகர அமைச்சு பதவியை வழங்கி விட்டு வெளிவிவகார அமைச்சருக்குரிய பணிகளை பசில் ராஜபக்சவே மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் சிறப்பு தூதுவராக அறிவிக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்ச இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் மேற்கொண்ட விஜயங்கள் அவருக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர அந்தஸ்திற்கு எடுத்துக் காட்டு என இராஜநத்திர தரப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன ஒரு நாட்டின…
-
- 0 replies
- 1.4k views
-