ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
கோட்டாவின் நிலையே காஞ்சனவிற்கும் ஏற்படும் – நாளின் பண்டார எச்சரிக்கை எதிர்ப்புக்களை மீறி மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சர் காஞ்சன விஜேசேகர நடவடிக்கை எடுத்தால், கோட்டாபய ராஜபக்ஷவின் நிலைமையே அவருக்கும் ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். நிலக்கரி இறக்குமதியில் இடம்பெறும் மோசடிகளை முகாமைத்துவம் செய்தால் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவையோ அல்லது மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய தேவையோ ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டார். எது எவ்வாறாயினும் கூறியதை போன்று மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால், தொழிற்துறைகள் முற்றாக வீழ்ச்சியடையும் என்றும் இது பொருளாதார நெருக்கடியில் கடுமையான தாக…
-
- 1 reply
- 654 views
-
-
தந்திரிமலை பொலிஸ் நிலையத்தில் திருடப்பட்ட துப்பாக்கியுடன் வேட்டைக்குச் சென்றவர் கைது! By T. SARANYA 03 JAN, 2023 | 11:47 AM தந்திரிமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரால் பொலிஸ் நிலைய ஆயுதக் களஞ்சியத்திலிருந்து திருடப்பட்டதாக கூறப்படும் T-56 துப்பாக்கியுடன் வேட்டையாடச் சென்ற நபர் ஒருவர் நேற்று (02) வனவிலங்கு அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். வில்பத்து தேசிய பூங்காவில் வைத்தே இந்நபர் கைது செய்யப்பட்டதுடன் வேட்டையாடப்பட்ட மான் ஒன்றின் இறைச்சி, T56 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. தந்திரிமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவரினால், சந்தேகத்தில் க…
-
- 0 replies
- 635 views
- 1 follower
-
-
அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய வர்த்தக வலையமைப்பை கொண்டிருந்த தமிழர் – அரசியல்வாதிகளுடன் முக்கிய சந்திப்பு! அமெரிக்காவின் மிகப்பெரிய வர்ததக வலயத்தின் நிறுவுனரான தமிழர் சிறிலங்காவின் முக்கிய அரசியல்வாதிகளை சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெட்ஜ்-நிதி நிறுவனத்தின் நிறுவுனரான ராஜ் ராஜரத்தினம் என்பவரே இவ்வாறு அரசியல்வாதிகளை சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் யாழ். போதனாவைத்தியசாலைக்குச் சென்று அதன் செயற்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்துள்ளார். இது தொடர்பில் மேலம் தெரியவருகையில், அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய ஹெட்ஜ்-நிதி, உள் வர்த்தக வலயங்களின் பிரதான வகிபாகத்தை கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படும் இலங்கையில் பிறந்த கேலியன் …
-
- 136 replies
- 9k views
- 1 follower
-
-
அதிகளவில் ஓய்வு பெற்றுள்ள ஊழியர்கள் – புகையிரத சேவைகள் இரத்து! நாட்டில் இன்று (திங்கட்கிழமை) காலை இயக்கப்படவிருந்த 6 அலுவலக புகையிரதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. களனிவெளி மார்க்கத்தில் பயணிக்கும் 2 புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தவிர கடலோர, புத்தளம் மற்றும் பிரதான வழித்தடங்களில் தலா ஒரு புகையிரத சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, இன்றும் பல புகையிரதங்கள் இரத்து செய்யப்படலாம் என புகையிரத தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் ஒரே நேரத்தில் ஓய்வு பெற்றுச் சென்றுள்ளமையே இதற்கான பிரதான காரணம் எனவும் குறிப்பிடப்படுகின்றது. சுமார் 500 பணியாளர்கள் ஓய்வு பெற்ற…
-
- 13 replies
- 900 views
- 1 follower
-
-
கடல் அட்டைப்பண்ணை வேண்டுமென யாழில் போராட்டம் கடற்தொழில் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு கடலட்டை பண்ணைகள் வேண்டுமென இன்று (30) வெள்ளிக்கிழமை யாழ் கோட்டை பகுதியில் இருந்து யாழ் பஸ் தரிப்பு நிலையம் வரை பேரணி முன்னெடுக்கப்பட்டது. இதன் போது பேரணியில் ஈடுபட்டவர்களால் கடற்தொழில் அமைச்சுக்கு மகஜரும் கையளிக்கப்பட்டது. பேரணிகள் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், கடத்தொழில் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அட்டை பண்ணைகள் பெரிதும் உதவுகின்றது. தற்போதைய பொருளாதார நெருக்கடியில் நாட்டுக்கும் மக்களுக்கும் அன்னிய செலாவணியை பெற்றுக் கொடுக்கும் ஒரு தொழிலாக அட்டைப்பண்ணை காணப்படுகின்றது. சிலர் தமது குறுகிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக கடல் தொழிலும…
-
- 28 replies
- 2k views
-
-
முட்டை மாஃபியாவுடன் அமைச்சர்களுக்கு தொடர்பு? முட்டையை அதிக விலைக்கு விற்கும் மாஃபியாவுக்கு சில அமைச்சர்கள் துணைபோவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றம் சாட்டுகிறது. குளிர்சாதன அறைகளில் சேமித்து வைக்கப்படும் முட்டைகளை குறைந்த விலைக்கும், மீண்டும் அதிக விலைக்கும் விற்கும் மோசடி கும்பல் நடப்பதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் எச். எம். பீ. ஆர் அழஹகோன் தெரிவித்துள்ளார். அதற்கு சில அரசியல்வாதிகளினதும் ஆதரவு இருப்பதாக அழஹகோன் மேலும் குற்றம் சாட்டினார். “உண்மையில் முட்டை வர்த்தக சங்கங்களே இதற்கு பொறுப்பேற்க வேண்டும். அன்று வர்த்தமானியில் 43 ரூபாவுக்கு விற்கலாம் என்று கூறியவர்கள் தற்போது 65, 60 ரூபாவுக…
-
- 7 replies
- 765 views
-
-
யாழ்.மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் இராஜினாமா! யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை இராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார். நாளை (சனிக்கிழமை) தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கடிதம் முலம் யாழ் மாநகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு மணிவண்ணன் தெரியப்படுத்தியுள்ளார். யாழ்.மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏழு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டதையடுத்து அவர் தனது பதவியை துறக்க முன்வந்துள்ளார். இரண்டாவது தடவையாக வரவு செலவுத் திட்டம் சமர்பிப்பதற்கான வாய்ப்பு இருந்தபோதும் கட்சிகளின் ஆதரவு கிடைக்காத நிலையில் மணிவண்ணன் இராஜினாமா முடிவை எடுத்ததாக மணிவண்ணனுக்கு நெருக்கமான வட…
-
- 73 replies
- 4.2k views
- 2 followers
-
-
போதைப்பொருள் பாவனையாளரின் திருமணத்திற்கான விண்ணப்பம் அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசலால் நிராகரிப்பு! போதைப்பொருள் பாவனைக்கு உள்வாங்கப்பட்ட நபர் ஒருவரின் திருமணத்திற்கான சமய அங்கீகாரத்தை அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் நிராகரித்துள்ளது. அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் பிரதேசத்திற்குள் வசித்து வரும் நபர் ஒருவரின் திருமணத்தை நடாத்தி வைக்குமாறு ஜும்மா பெரிய பள்ளிவாசலுக்கு விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது. குறித்த விண்ணப்பத்தை பரீசீலனைக்காக எடுத்துக் கொண்ட ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை குறித்த நபர் போதை பொருள் பாவனைக்கு உள்வாங்கப்பட்பட்டவர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எனவே திருமண சடங்கை நிறைவேற்றி வைப்பதை தவ…
-
- 2 replies
- 431 views
- 1 follower
-
-
வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு கியூ.ஆர். குறியீடு அறிமுகம் By DIGITAL DESK 2 02 JAN, 2023 | 03:03 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) இந்த ஆண்டு முதல் வாகன சாரதி அனுமதி பத்திரங்களை புதுப்பிக்கும் ஒவ்வொரு சாரதிக்கும் கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய புதிய வாகன சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் -அபிவிருத்தி குசலானி டி சில்வா தெரிவித்தார். தற்போது இலங்கையர்களுக்கு நான்கு வகையான வாகன சாரதி அனுமதிப் பத்திரங்கள் உள்ளன. அந்த சாரதி அனுமதிப் பத்திரங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்படும் போது, புதிய கியூ.ஆர். குறியீடு முத்திரையிடப்பட்ட வாகன சாரதி அனுமதிப் பத்திர…
-
- 0 replies
- 204 views
- 1 follower
-
-
எரிபொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு By RAJEEBAN 02 JAN, 2023 | 09:38 PM நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்கள் சிலவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளன. ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவினாலும் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 10 ரூபாவாலும் விலைக் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, புதிய விலையாக ஒட்டோ டீசல் ஒரு லீற்றர் 415 ரூபாவுக்கும், ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 355 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பெற்றோல் உள்ளிட்ட ஏனைய எரிபொருட்களின் விலையில் மாற்றமில்லை எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள…
-
- 0 replies
- 337 views
- 1 follower
-
-
கடன் நெருக்கடிக்கு தீர்வு காண கடுமையாக உழைத்து வருகிறோம் இலங்கை உள்ளிட்ட கடன் நெருக்கடியை எதிர்நோக்கும் நாடுகளுக்கு தீர்வைக் கொண்டுவர சர்வதேச நாணய நிதியம் கடுமையாக உழைத்து வருவதாக அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோஜியேவா தெரிவித்துள்ளார். அமெரிக்க சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார். கேள்வி - சர்வதேச நாணய நிதியம் தெரிவிக்கும் வகையில் குறைந்த வருமானம் கொண்ட பல நாடுகள் கடன் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளமை உலக நிதி நெருக்கடியில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும்? "இதுவரை, இந்த நாடுகள் எதிர்கொள்ளும் கடன் நெருக்கடி உலகளாவிய நெருக்கடியை உருவாக்கும் அளவுக்கு குறிப்பிடத்தக்க அளவை எட்டவில்லை. செட் (Chad), எத்தியோப்பியா, ச…
-
- 0 replies
- 359 views
-
-
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிரடி அறிவிப்பு சுற்றுலா வீசாவில் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் சென்ற அனைத்து பெண்களையும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கத் தீர்மானித்துள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக பணியக சட்டத்தின் விதிகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 ஆம் திகதி முதல் 8 பெண்களைக் கொண்ட குழு இலங்கை வந்தடைந்ததாகவும், மேலும் 6 பெண்கள் இன்று (02) இலங்கைக்கு வரவுள்ளதாகவும் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது. தூதரகத்தால் பணியகத்தில் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்படாத சுற்றுலா வீசாக்களுடன் ஓமனுக்கு வேலைக்குச் சென்ற 18 பேர் சிக்கித் தவிப்பதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது…
-
- 0 replies
- 205 views
-
-
மாத இறுதிக்குள் அமைச்சரவையில் மாற்றம்! மாத இறுதிக்குள் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதோடு ஆளுநர்களையும் நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆரம்ப கட்ட இணக்கப்பாட்டுடன் இந்த அமைச்சரவை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. புதிதாக 12 அமைச்சர்களை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதுடன், ஆளும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு மேலதிக அமைச்சு பதவிகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக வஜிர அபேவர்தன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஆறு ஆளுந…
-
- 3 replies
- 662 views
-
-
அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ் எம்.பியை நியமிப்பதில் இழுபறி! அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிப்பதில் தொடர்ந்தும் இழுபறிநிலை நிலவுகிறது. அரசியலமைப்பு பேரவைக்கு 7 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 3 சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் நியமிக்கப்படவுள்ளனர். அவர்களில் தற்போது 5 சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களும், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், எஞ்சிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனின் பெயரை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்மொழிந்ததுடன், தமிழ்கட்சிகளும் ஆதரவு வழங்கியுள்ளன. இதற்கு உத்தர ல…
-
- 1 reply
- 416 views
-
-
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு இம்மாதம் கிடைப்பது சாத்தியமற்றது - ஹர்ஷ டி சில்வா By DIGITAL DESK 2 01 JAN, 2023 | 03:56 PM (இராஜதுரை ஹஷான்) 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை முகாமைத்துவம் செய்ய அரசாங்கத்திடம் நடைமுறைக்கு சாத்தியமான எந்த திட்டமும் கிடையாது. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை இம்மாதம் கிடைப்பது சாத்தியமற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச.31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் க…
-
- 2 replies
- 283 views
- 1 follower
-
-
மைதானத்திற்கு தமிழர் பெயரா? வெடித்த எதிர்ப்பு! கோறளைப்பற்று பிரதேச சபையின் பொது விளையாட்டு மைதானத்திற்கு முன்னாள் தவிசாளர் கனகரெத்தினம் அவர்களின் பெயர் பொறிக்கப்பட்ட பெயர் பலகை இடுவதற்கு தவிசாளர் சோபா ஜெயரஞ்சித்தினால் இன்று ஞாயிற்றுக் கிழமை (01) முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு சகோதார இனத்தவர்கள் விடுத்த கடும் எதிர்ப்பினை தொடர்ந்து குறித்த நடவடிக்கை கைவிடப்பட்டு பிரிதொரு தினத்தில் இடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ் மைதானத்திற்கு தனி நபர்களது பெயர் எதுவும் வைக்காமல் முன்பு இருந்தமை போல் பொது விளையாட்டு மைதானம் என பெயர் வைக்கும்படி அவர்கள் கேட்டுக் கொண்டனர். குறித்த விடயம் தொடர்பாக கேள்வியுற்றவர்கள் மைதானத்திற்கு முன்பாக ஒன்று கூடி எதிர்ப்…
-
- 4 replies
- 537 views
-
-
மட்டக்களப்பில் 180 தற்கொலை சம்பவங்கள் பதிவு – திடீர் மரண விசாரணை அதிகாரி நஸீர் Posted on January 1, 2023 by தென்னவள் 12 0 மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு சுமார் 180க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்திருக்கின்றனர் என தகவல் தெரிவிக்கப்படுகிறது. தற்கொலைகளை தடுப்பதற்கான விழிப்புணர்வுகள் மாவட்டத்தின் எந்தவொரு கிராம மற்றும் நகர மட்டத்திலும் நடைபெறாமை குறித்து உண்மையில் கவலையளிக்கிறது என மட்டக்களப்பு மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வயது வித்தியாசமின்றி சிறியோர், பெரியோர், படித்தவர்கள், பாமரர்கள் என்ற…
-
- 2 replies
- 735 views
-
-
கூட்டமைப்பு முன்வைக்கும் தீர்வை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் Posted on January 1, 2023 by தென்னவள் 14 0 புதுவருட தினமான இன்றும் (ஜன 1) காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். வவுனியா, ஏ9 வீதியில், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக 2142ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தாய்மாரால் குறித்த கவனயீர்ப்பு போராட்டம், அவர்களது போராட்ட பந்தலுக்கு முன்பாக இடம்பெற்றது. இதன்போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட மற்றும் வெள்ளை வேனில் கடத்தப்பட்ட தமது பிள்ளைகளுக்கு நீதி தேவை என்பதோடு அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் தெரிவித்த போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், …
-
- 0 replies
- 287 views
-
-
அதிபர் - ஆசிரியர்களின் “குருசெத” கடனுக்கான வட்டிவீதம் அதிகரிப்பு : இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஜனாதிபதிக்கும் கடிதம் By NANTHINI 01 JAN, 2023 | 03:37 PM அதிபர் - ஆசிரியர்கள் குருசெத கடனுக்கான கடன் மற்றும் வட்டி தவணைகளை செலுத்தும்போது 9.5 வீதமாக இருந்த வட்டியை 15.5 வீதம் வரை அதிகரிக்க எடுத்த தீர்மானத்துக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் நேற்றைய தினம் (டிச. 31) இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கையின்போது தெரிவித்துள்ளார். அதிபர்களும் ஆசிரியர்களும் பல பிரச்சனைகளை எதிர்கொண்டுவரும் இச்சந்தர்ப்பத்தில், அரச வங்கிகள் மூலம் குருசெத்த கடன் திட்டத்த…
-
- 0 replies
- 258 views
- 1 follower
-
-
இன்று முதல் அமுலாகும் வரி திருத்தம் உள்ளிட்ட பல தீர்மானங்கள் By DIGITAL DESK 2 01 JAN, 2023 | 12:58 PM (இராஜதுரை ஹஷான்) 2023ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட வரி திருத்தம் உள்ளிட்ட பல தீர்மானங்கள் ஞாயிறு (டிச.1) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய தனியார் வருமான மாத வரி அறவிடல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மற்றும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இந்த வரி விதிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிடப்படுகிறது. மாதம் ஒரு இலட்சத்திற்கு அதிகமாக சம்பளம் பெறுபவர் மாத வரி செலுத்த வேண்டும். இதற…
-
- 0 replies
- 570 views
- 1 follower
-
-
ஜனாதிபதி மாளிகையில் இருந்து பெறுமதியான 39 ஓவியங்கள் காணாமல் போயுள்ளன ! போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையில் பிரவேசித்த பின்னர் அங்கிருந்த 39 மர மற்றும் கேன்வாஸ் ஓவியங்கள் காணாமல் போயுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி மாளிகையின் 209 ஓவியங்கள் மற்றும் சித்திரங்கள் பாதுகாப்பிற்காக தொல்பொருள் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், அதிகாரிகள் குழுவொன்று அரண்மனைக்கு சென்று தற்போது அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் (இரசாயனப் பாது…
-
- 1 reply
- 211 views
-
-
அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் வட்டாரப்பிரிப்பில் முரண்பாடு : செவ்வாய் மீண்டும் திட்டவரைபை சமர்பித்தவர்களை சந்திக்கிறார் அரசாங்க அதிபர் ! kugenDecember 31, 2022 (நூருல் ஹுதா உமர்) அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேச உள்ளுராட்சி மன்ற எல்லை நிர்ணயங்களிலும், வட்டார பிரிப்பிலும் மாவட்ட எல்லை நிர்ணயக்குழுவினால் முஸ்லிங்களுக்கு அநீதி இடம்பெற்றுள்ளதாகவும் அதன்காரணமாக இந்த வட்டார பிரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் புதிதாக எல்லைநிர்ணய அறிக்கையை தயாரிக்க வேண்டும் என்று தேசிய எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் வேண்டுகோள் விடுத்தார். தேசிய எல்லை நிர்ணய க…
-
- 0 replies
- 195 views
-
-
”2023 புதிய தீர்க்கமான ஆண்டாக இருக்கும்” 2023 புதிய ஆண்டு நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு புதிய திருப்புமுனையைக் குறிக்கும் ஒரு தீர்க்கமான ஆண்டாக இருக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் இதனை தெரிவித்துள்ளார். அவரின் வாழ்த்துச் செய்தி வருமாறு, புத்துணர்ச்சியுடன் புதிய வருடம் ஒன்று பிறக்கிறது. புதிய சிந்தனைகள், திடமான நோக்கு என்பவற்றுடன் எண்ணங்களைப் புதுப்பித்துக் கொள்ள இதுவொரு சிறந்த சந்தர்ப்பமாகும். எண்ணிலடங்கா சிரமங்கள், நிச்சயமற்ற சூழ்நிலைகள், ஏமாற்றங்களுடனான ஒரு வருடத்தை முடித்துக்கொண்டு, நாம் 2023 என…
-
- 0 replies
- 322 views
-
-
திலீபனை நினைவு கூர்ந்த விவகாரம்: கொழும்பில் சிவாஜிக்கு எதிராக வழக்கு ! தியாகதீபம் திலீபனை நினைவு கூர்ந்தமை தொடர்பான வழக்கிற்காக எம்.கே. சிவாஜிலிங்கத்தை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் அவரது வீட்டிற்குச் சென்ற வல்வெட்டித்துறை பொலிஸார் எதிர்வரும் 11 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என்ற நீதிமன்ற கட்டளையை வழங்கியுள்ளனர். நீதிமன்ற தடையை மீறி தியாகதீபம் திலீபனை நினைவு கூர்ந்தமைக்காக கடந்த 2020 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் 15 ஆம் திகதி எம்.கே. சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டிருந்தார். கோண்டாவிலில் வைத்து கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்ற எக்காரிகையை அடுத்து 2 இலட்சம் ரூபாய் சரீர…
-
- 0 replies
- 385 views
-
-
2022 இல் 240 மில்லியன் டொலர் உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது – ஜூலி சுங் 2022 ஆம் ஆண்டில் மட்டும் இலங்கைக்கு 240 மில்லியன் டொலருக்கும் அதிகமான உதவிகளை அமெரிக்கா அறிவித்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார். இவ்வாறு வழங்கப்பட்ட உதவியால், அடிப்படை உணவுப் பாதுகாப்பு, மாணவர்களுக்கான மதிய உணவு, விவசாயிகளுக்கு உரம் போன்றவற்றுக்கு உதவியாக இருந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பண உதவி உள்ளிட்ட மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் தேவைகளை நிவர்த்திகூடியதாக அமைந்தது என அமெரிக்க தூதுவர் கூறியுள்ளார். இந்த உதவியானது அரசாங்கம், தனியார், சிவில் சமூகம் மற்றும் இலங்கை மக்களுடன் இணைந்து …
-
- 0 replies
- 241 views
-