ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142751 topics in this forum
-
தமிழீழ விடுதலைப் புலிகளை பெரிய மகாமேரு என நாம் நினைத்தோம் ஆனால் அவர்கள் ஒரு புஸ்வாணம் என்பதை நாம் இப்போது உணர்கின்றோம். ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றிற்கிடையே ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இவ்வாண்டிறுதிக்குள் நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படல் வேண்டும் என்பதே எனது பேரவாவாகும் என கண்டி மல்வத்த பௌத்த பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே சிறீ சுமங்கள தேரர் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று காலை கண்டி சிறீ தலதா மாளிகைக்கு அல்லி மலர்களை கொண்டு சென்று வழிபட்டார். ரணில் விக்கிரமசிங்கவுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான ருக்…
-
- 20 replies
- 3.3k views
-
-
எதிர்வரும் வாரத்தில் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற உள்ளதாக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தொப்பினூர் ஒமர்சன் தெரியவித்துள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த பேச்சுவார்த்தைகளில் இரண்டு தரப்பிலும் உயர் மட்டத்தினர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரியவருகின்றது. இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் இரண்டு கண்காணிப்பாளர்களை அனுப்பியுள்ளதாகவும், மேலும் இரண்டு கண்காணிப்பாளர்கள் திங்கட் கிழமை அங்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும், அதேவேளை வாகரை பிரதேசத்தில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்குமாறு பாதுகா…
-
- 4 replies
- 1.5k views
-
-
யாழ். குடாநாட்டில் அச்சுத்தாள் தட்டுப்பாட்டால் குறைந்த எண்ணிக்கையிலான பிரதிகளையே அச்சிடவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு அங்குள்ள பத்திரிகை நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. இந்த நிலைமையிலும் விற்பனை நிலையமொன்றில் பொதுமக்கள் வாசிப்பதற்காக பத்திரிகைகள் ஒட்டி விடப்பட்டிருப்பதையும் மக்கள் வாசித்துக் கொண்டிருப்பதையும் இங்கு காண்கிறீர்கள். ... விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட குடாநாட்டு `தினசரிகள்' அபகரிப்பு யாழ்.குடாநாட்டிலிருந்து வெளியாகும் தினசரிப் பத்திரிகைகள், நேற்று சனிக்கிழமை காலை விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட போது இனந்தெரியாத சிலரால் அவை அபகரித்துச் செல்லப்பட்டுள்ளன. யாழ்.இந்துக் கல்லூரிக்கு அருகிலேயே நேற்று அதிகாலை 5.30 மணிக்கு இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ள…
-
- 0 replies
- 994 views
-
-
வாகரையிலிருந்து இடம்பெயரும் மக்கள் மீது சிறிலங்காப் படையினர் கெடுபிடி - மக்கள் விசனம். வாகரை நகரப் பகுதியிலிருந்து சிறிலங்காப் படையினரின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையினால் ஆயிரக்கணக்கான மக்கள் பலத்த சோதனைக் கெடுபிடிக்களுக்கு பின்னரே பயணத்தைத் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் அகதிகள் பெரும் இடைஞ்சல்களுக்கும் சிரமங்களுக்கும் ஆளாகிவருகின்றனர். அகதிகளுடன் சேர்ந்து விடுதலைப் புலிகளும் நகருக்குள் வரக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டாலுங்கூட, இது ஏற்கனவே நொந்து போனவர்களை மேலும் வேதனைக்கு ஆளாக்குவதாக மக்கள் கவலை தெரிவித்ததாக சர்வதேச செய்தி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. பனையால் விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பது போல, படையி…
-
- 1 reply
- 865 views
-
-
இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும். இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும். இவ்வாறு தமிழக ஆளுநர் பர்னாலா தெரிவித்துள்ளார். தமிழக சட்டப் பேரவையின் இவ்வாண்டுக்கான அமர்வை நேற்று ஆரம்பித்து வைத்துப் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது: அண்மைக் காலத்தில் இலங்கையில் வாழும் தமிழர்கள் தங்கள் உயிருக்கும் உடைமைக்கும் உத்தரவாதம் இன்றிச் சந்தித்துவரும் துயரங்கள் குறித்து இந்த மாநில அரசு ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கும் பிரதமருக்கும் தமிழக முதல்வர் கருணாநிதி எழுதியுள்ள கடிதங்கள், அக்கடிதங்களுக்கு அவர்கள் அளித்த பதில்க…
-
- 0 replies
- 893 views
-
-
அலரி மாளிகையில் பொங்கல் விழா - டக்ளஸ், தொண்டமான், சந்திரசேகரன் ஆகியோர் பங்கேற்றனர். அலரி மாளிகையில் தைப்பொங்கல் நிகழ்வு நேற்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. இராமகிருஸ்ண மிஷன் சுவாமிகள் ஆத்ம கனானந்த மகராஜ் இந்து சமய வழி பாட்டை நடத்தினார். அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகம் தொண்டமான், பி.சந்திரசேக ரன், அரசில் இணைந்துள்ள தமிழ்க் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத் மற்றும் ஊடக நிறுவனத் தலைவர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர். -Uthayan-
-
- 1 reply
- 1.3k views
-
-
சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சி தாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உள்வாங்கினால் அரசிற்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ளப்போவதாக ஜே.வி.பி. அறிவித்துள்ளது. கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஜே.வி.பி. உயர்மட்டத் தலைவர்களின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பேசிய ஜே.வி.பியின் தலைவர் சோமவன்சச அமரசிங்க கூறியதாவது: 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற அரச தலைவர் தேர்தலில் மகிந்த வெற்றியீட்டுவதற்கு எமது ஆதரவையும் உதவிகளையும் வழங்கியிருந்தோம். இது மகிந்த சிந்தனையில் உள்ள கொள்கைகள் மற்றும் தத்துவங்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட ஆதரவாகும். ஆனால் தற்போது அரச தலைவர் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய…
-
- 2 replies
- 1.1k views
-
-
திருநெல்வேலியில் திருட்டுக் கோஷ்டியின் சூட்டுக்கு ஆசிரியர் உயிரிழப்பு. திருநெல்வேலி கிழக்கு பூதவராயர் வீதியில் நேற்று நள்ளிரவு 11 மணியளவில் திருட்டுக் கோஷ்டியின் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்தார். அதேயிடத்தைச் சேர்ந்தவரும் புத்தூர் சோமாஸ்கந்தக் கல்லூரி ஆசிரியருமான மகாலிங்கம் விக்னேஸ்வரன்(வயது 40) என்பவரே உயிரிழந்தவராவார். அவரது வீட்டில் திருட முயன்ற திருடர்களை அயலிலுள்ளவர்கள் சேர்ந்து கலைக்க முயன்ற சமயம் இவரைச் சுட்டு விட்டுத் தப்பிவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. -Uthayan-
-
- 0 replies
- 901 views
-
-
போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினருக்கு உலங்குவானூர்தி வழங்க சிறிலங்கா அரசு மறுப்பு. இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினருக்கு இனிமேல் உலங்குவானூர்தி வசதிகளை வழங்குவதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக கடந்த புதன்கிழமை (17.01.07) போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினருக்கு சிறிலங்கா அரசாங்க சமாதான செயலகத்தினூடாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகளுக்க
-
- 1 reply
- 721 views
-
-
கருணா கூலிக்குழுவால் வாகரையில் இருந்து இடம்பெயர்ந்த இளைஞர்கள் கடத்தல். வாகரை கண்ணன்கிராமத்தில் இருந்து இடம்பெயர்ந்த வாழைச்சேனைப்பகுதிக்கு சென்ற இரு இளைஞர்கள் கருணா கூலி இராணுவத் துணைக்குழுக்களால் நேற்று சனிக்கிழமை மதியம் 2.30 மணியளவில் கடத்தப்பட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை 3 இடம்பெயர்ந்த இளைஞர்கள் இராணுவத்துணைக்கூலிக் குழுவான கருணா குழுவால் கடத்தப்பட்டுள்ளனர். இதேவேளை வாகரைப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து சென்ற 4700 பேர்களில் 1200 பொதுமக்களே கட்டுமுறிவு ஊடாக சிங்கபுர பகுதிக்கு சென்றுள்ளார்கள் ஏனையவர்கள் மாங்கேணி கஐவத்தை பகுதிகளிலும் மற்றும் தற்காலிக இடங்களிலும் தங்கியுள்ளார்கள். எனினும் பெருமளவிலான ஆட்கடத்தல்கள் கஐவத்தை சோதனைச்சாவடி முன்னரங்க நிலைகளை கடத…
-
- 0 replies
- 739 views
-
-
யாழ் அதிபர் - போர் நிறுத்த கண்காணிப்பு குழு சந்தித்து பேச்சு. யாழ் மாவட்ட அரச அதிபர் கணேஷ் - யாழ் மாவட்டத்திற்கான போர் நிறுத்த கண்காணிப்பாளர்கள் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். நேற்று நடைபெற்ற சந்திப்பி யாழின் தற்போதைய சூழ்நிலை குறித்து கலந்துரையாடியதாகவும் யாழ்ப்பாணத்தின் கண்காணிப்பு பணிகள் மீள ஆரம்பிக்கும் நோக்கம் குறித்து ஆராயப்படதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு இ திருகோணமலை ஆகிய இடங்களிலும் தமது பணிகளை நாளை அல்லது மறுதினம் ஆரம்பிக்கவுள்ளதாக கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. -Pathivu-
-
- 0 replies
- 738 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தினால் வழங்கப்படும் அமைச்சுப் பதவியை யார் ஏற்றுக்கொள்வது என்ற பிரச்சினையால் ஜாதிக கெல உறுமயவிற்குள் பாரிய விரிசல் வீழ்ந்துள்ளது. அரசிற்கு ஆதரவு வழங்குவதற்கு பதிலாக அரசினால் வழங்கப்படும் அமைச்சுப் பதவி தொடர்பாக கெல உறுமயவின் சோபித தேரர், ரத்தன தேரர், சம்பிக்க ரணவக்க, உதய கமன்பில ஆகியோரைக் கொண்ட குழு, அரச தலைவரின் ஆலோசகரான பசில் ராஜபச்சவுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தனர். இந்த சந்திப்பில் கலாச்சார அமைச்சுப் பொறுப்பை வழங்க அரசு சம்மதித்திருந்தது. அதனை ரத்தன தேரர் ஏற்றுக்கொண்ட வேளை ஏனைய மூன்று உறுப்பினர்களும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். பின்னர் சோபித தேரர், ரணவக்க, கமன்பில ஆகியோர் இயற்கை வளத்துறை அமைச்சுப் பொறுப்பை தரும்படி அரசை கேட்டி…
-
- 0 replies
- 835 views
-
-
[saturday January 20 2007 07:02:20 PM GMT] [virakesari.lk] வாகரையில் இருந்து மாங்கேணியூடாக மட்டக்களப்பு வாளைச்சேனை பகுதிக்கு செல்லும் மக்கள் மீது பெரும் அவதிநிலையடைந்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன நேற்று வாகரை பகுதியை ஆக்கிரமித்த சிறிலங்கா படையினர் தொடர்ந்து அதிரவெளி கோமத்தமடு போன்ற இடங்களை கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கும் நிலையில் அகதிகள் தொடர்ந்தும் இடம் பெயர்ந்து வருகின்றனர் . இவர்களில் 10,000ற்க்கும் அதிகமானோர் மாங்கேனி ஊடாக மட்டகளப்பு இடம் பெயரும் வேளையில் மிகுந்த சோதனை நடவெடிக்கைக்கு முகம் கொடுக்க வேண்டி உள்ளதாக அந்த அகதிகள் தெரிவித்தாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன . மக்களின் சிலர் இராணுவ முகாம் அருகி…
-
- 0 replies
- 844 views
-
-
கடந்த வருடம் ஒக்டோபர் 29ந்திகதி முதல் ஆக குறைந்த 45 படையினரும் 500 புலிகளும் வாகரையை இராணுவம் கைப்பற்றி அடுத்த அடுத்த இராணுவ நடவெடிக்கையில் கொல்லப்பட்டிள்ளனர் என இராணுவ தரப்பில் பேசவல்ல அதிகாரி சமரசிங்க ஏபிக்கு செயதுஇ அளித்துள்ளார். தொடர்ந்து அந்த பகுதிகளில் சண்டை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த மோதல் நிலமைகள் காரணமாக சுமார் 5 இலட்சம் அகதிகள் இலங்கை முழுவதிலும் இருந்த இடம்பெர்ந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது thanks:www.tamilwin.com
-
- 2 replies
- 1.3k views
-
-
[ஞாயிற்றுக்கிழமை, 21 சனவரி 2007, 03:22 ஈழம்] [அ.அருணாசலம்] தொண்டர் அமைப்புக்கள் பணியாற்றுவதற்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் சிறிலங்கா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த வாரம் 'கெயார்' சர்வதேச நிறுவனம் தொண்டர் அமைப்புக்களின் பணியாளர்களின் படுகொலைகளின் அடிப்படையில் மேற்கொண்ட 2006 ஆம் ஆண்டிற்கான தரப்படுத்தலில் உலக நாடுகளின் வரிசையில் ஆப்கானிஸ்தான் முதலாவது இடத்தையும், சிறிலங்கா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. 'கெயார்' சர்வதேச நிறுவனம் மேலும் தகவல் தெரிவிக்கையில், தொண்டர் நிறுவனப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறைகள் கடந்த பத்து வருடங்களில் 2006 இல் அதிகளவு அதிகரித்துள்ளது. கடந்த வருடத்தில் 83 பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது 2003 ஆம் ஆண்டிற…
-
- 0 replies
- 734 views
-
-
ஆளும் தரப்புக்கு தாவும் ஐ.தே.க.வினரை உள்ளடக்கி இந்த வாரம் புதிய அமைச்சரவை [14 - January - 2007] [Font Size - A - A - A] {தினக்குரல்} * வெளிவிவகார அமைச்சு பதவிக்கு கடும் போட்டி * ஜனாதிபதியிடம் ரணில் கேள்வி எழுப்புவார் * முஸ்லிம் காங்கிரஸும் அரசில் இணைய சாதகமான சமிக்ஞை புதிய அமைச்சரவை மாற்றம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், அமைச்சுப் பொறுப்புகளை ஒதுக்கீடு செய்வதில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு மும்முரமாக ஈடுபட்டிருப்பதாக அறியவருகிறது. ஜனாதிபதியுடன் அவரின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் ஜனாதிபதிக்கு நெருக்கமான பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். ஐ.தே.க.வின் 18 பா…
-
- 0 replies
- 649 views
-
-
இலங்கை இராணுவத் தளபதி யாழ் விஜயம் இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் ஈச்சலம்பத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற விடுதலைப்புலிகளின் எறிகணைத் தாக்குதலில் 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் இதில் காயமடைந்துள்ளனர். அதேவேளை வாகரையை நேற்று கைப்பற்றிய இலங்கை இராணுவத்தினர், இன்று தாம் கதிரவெளி வரை முன்னேறியுள்ளதாக அறிவித்துள்ளனர். அதேவேளை இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா அவர்கள் இன்று யாழ் குடாநாட்டுக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன. அங்குள்ள பாதுகாப்பு நிலைமைகள் குறித்து அவர் இராணுவத தளபதிகளுடன் உரையாடியதாகக் கூறப்படுகிறது. பிபிசி. தமிழ். ---------------------------------------…
-
- 4 replies
- 2.2k views
-
-
மாங்கேணி முகாம் மீது எறிகணை வீச்சு - 4 படையினர் பலி - பாண்டியன் Saturday, 20 January 2007 21:02 (சங்கதி) மட்டக்களப்பு மாவட்டம், மாங்கேணிப் படை முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று பகல் நடத்திய ஆட்டிலறி எறிகணைத் தாக்குதலில் நான்கு படையினர் கொல்லப்பட்டுள்ளதாக பொலநறுவையில் உள்ள படைத்துறை வட்டாரங்களை மேற்கொள் காட்டி தமிழ்நெட் செய்தி வெளியிட்டுள்ளது. இன்று பிற்பகல் நடைபெற்ற இத்தாக்குதலில் மேலும் மூன்று படையினர் காயமடைந்துள்ளனர். நேற்று திருமலையில் மகிந்தபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட மோட்டார் தாக்குதலில் நான்கு படையினர் கொல்லப்பட்ட நிலையில் இன்று இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த சனிக்கிழமையும் இதே முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் …
-
- 0 replies
- 726 views
-
-
முஸ்லீம் காங்கிரசின் கட்சித்தாவலுக்கும் அண்மையில் புத்தளத்தில் கைதான இரு ஈரானியருக்கும் இடையில் தொடர்புகள் ஏதும் இருக்குமோ என பாதுகாப்புத்தரப்பு ஆராய வெளிக்கிட்டுள்ளதாம்.நேற்று புத்தளத்தில் நடந்த தேடுதல் இதன் பின்ணணியில் தானாம்.இவர்களின் விசாரணையில் தீவிரவாத வலைப்பின்னல்களில் சம்பந்தப்பட்டவர்களா?பாகிஸ்தான் அரசுடன் தொடர்புகளைவைத்துள்ளார்களா?ஏன் திருடினார்கள்? என்று குழப்பத்துடன் பொலிஸ் விசாரணை ஒரு புறம்?தலைமைபீடம் மறுத்தாலும் எப்படியாவது அரசில் இணையவேண்டும் என்ரு கங்கணம் கட்டிய புத்தளம் பகுதி முஸ்லீம்காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினருக்கும் ஏதாவது தொடர்பிருக்குமோ?(news from puththalam by phone)
-
- 0 replies
- 877 views
-
-
இருவாரத்தில் 57 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர், 27பேர் காணாமற் போயுள்ளனர். 2007ஆம் ஆண்டின் இருவாரங்களுக்குள் தமிழர் தாயகப் பகுதிகளில் சிறிலங்காப் படையினர் மற்றும் துணை இராணுவக் குழுக்களின் தாக்குதல்களில் 57 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 27பேர் கடத்தப்பட்டு காணாமற் போயுள்ளனர். படுகொலை செய்யப்பட்டவர்களில் 14பேர் -மட்டக்களப்பு 17பேர் -மன்னார் 5பேர் -திருகோணமலை 8பேர் -வவுனியா 13பேர் யாழ்ப்பாணத்தையும் சேர்ந்தவர்கள். கடத்தப்பட்டவர்களில் 22பேர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள், (1)பரஞ்சோதி தனஞ்சேயன், (2) முருகானந்தன் பரமநாதன், ஆகிய இருவரும் பாடசாலைய மாணவர்கள். படையினரும் துணை இராணுவக் குழுவினரும் தமிழர் தாயகப் பகுதிகளில் வெளிப்படையாகவும் மறைவாகவும்…
-
- 1 reply
- 948 views
-
-
மன்னார் எண்ணெய்ப் படிவுப் படுக்கை அகழ்வு; இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வழங்கப்பட்டன 105 லட்சம் டொலர்களுக்கு நோர்வேயின் தரவுகள் கொள்முதல் மன்னார் கடல் பிராந்தியத்தில் உள்ள எண்ணெய்ப் படிவுப் படுக்கைகளில் ஒன்றை இலங்கை அரசாங்கம் அகழ்வுப் பணிக்காக இந்தியாவுக்கு வழங்கியுள்ளது. காவேரி நதிப்படுக்கைக்கு அண்மித்த தாக உள்ள படுக்கைகளில் ஒன்றே இந்தியா வின் எண்ணெய் மற்றும் இயற்கைவாயு கூட்டுத்தாபனத்துக்கு (ONஎகு) வழங்கப்பட் டுள்ளது. இதேபோன்ற இரண்டாவது படுக்கை (அதுவும் காவேரி நதிப்படுக்கையை அண் மித்தது) சீனாவுக்கு வழங்கப்பட் டுள்ளது. எஞ்சிய ஆறு எண்ணெய்ப் படிவுப் படுக்கைகளும்எதிர்வரும் மூன்று மாதங் களில் ஏனைய விண்ணப்பதாரிகளுக்கு வழங்கப்படும் என்று இலங்கையின் போக்கு வரத்து …
-
- 6 replies
- 1.7k views
-
-
கிழக்கில் சூழ்ந்துள்ள போர் மேகங்களும் அரசியல் இராணுவ யதார்த்த நிலைகளும்(சிறப்பு அரசியல் பார்வை) எழுதியவர் நமது செய்தியாளர் Thursday, 18 January 2007 இணைந்திருந்த வடகிழக்கு மாகாணத்தை மூன்றாகப் பிரித்து அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்திய கையோடு கிழக்கில் பாரிய இராணுவ நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது. வடகிழக்கு மாகாணத்திலிருந்து மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களை தனியாகவும் திருகோணமலை மாவட்டத்தை தனியாகவும் பிரித்த போது கிழக்கில் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்களிடமிருந்து எதிர்ப்பலைகள் எழாதவாறு மரண அச்சுறுத்தல்களுக்குள் தள்ளி மௌனிகளாக்கி விட்டு கிழக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களை ஆக்கிரமிப்பதற்காக ஸ்ர…
-
- 4 replies
- 2.2k views
-
-
சனி 20-01-2007 14:31 மணி தமிழீழம் [மோகன்] பாதிரியார் கொலையையிட்டு சி.எஸ்.டபிள்யு கேள்வி யாழ் குடாநாட்டில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் சிறீலங்கா இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இங்கிலாந்தை தளமாக கொண்டுள்ள சி.எஸ.டபிள்யு எனும் அமைப்பு தெரிவித்துள்ளது கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் சப்பல் ஒழுங்கையில் வைத்து இவர் மீது சிறீலங்கா படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எந்த விதமான அரசியல் கட்சிகளுடனும் தொடர்புகளை கொண்டிராதவரான கிறிஸ்தவ பாதிரியாரான நல்லதம்பி ஞானசீலனை சிறீலங்கா படைகள் எதற்காக கொலை செய்தார்கள் என்று தெரியவில்லை என்றும் அந்த அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது யாழ் குடாநாட்டில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சட்டவிரோதமான ம…
-
- 0 replies
- 997 views
-
-
சிறீலங்காவின் புதிய அமைச்சரவை இம்மாதம் 29ம் திகதி சிறீலங்காவின் புதிய அமைச்சரவை இம்மாதம் 29ம் திகதி பதவி ஏற்க்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் 52 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என தெரியவந்துள்ளது. ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒரே ஒரு அமைச்சினை மட்டுமே வழங்குவதற்கு ஸ்ரீலங்கா ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் ஏனைய அரசியல் கட்சிகளில் இருந்து அரசாங்கத்தில் இணையவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் 10 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் மாற்றுக் குழுவினரக்கு 8 அமைச்சு பதவிகளும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் ஜாதிக ஹெல உருமய ஆகிய கட்சிகளுக்கு தலா ஒவ்வொரு அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப…
-
- 0 replies
- 845 views
-
-
ரவீந்திரநாத் விரைவில் விடுதலையாவார்: பல்கலை - மானியங்கள் ஆணைக்குழு. கடந்த ஒரு மாத காலமாக சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவினரால் கடத்திச் செல்லப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவீந்திரநாத்தினால் முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட பதவி விலகல் கடிதத்தை சிறிலங்காவின் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது. அவரது பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்டால் கருணா குழுவினர் அவரை விடுதலை செய்யலாம் என பேராசிரியர் ரவீந்திரநாத்தின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே அக் கடிதத்ததை ஏற்றுக்கொண்டதாக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்கா தெரிவித்துள்ளார். அரச தலைவர் மகிந்தவினால் வழங்கப்பட்ட…
-
- 1 reply
- 1.6k views
-