ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142742 topics in this forum
-
இந்தியாவுடன் இணைந்து திருகோணமலை சம்பூரில் அனல்மின் உற்பத்தி நிலையம் ஒன்றை அமைக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் நோக்கத்தை இந்தியா முற்றாக நிராகரித்துள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்களிலிருந்து தெரியவந்திருக்கின்றது. திருகோணமலை சீனன்குடாவில் தெரிவு செய்யப்பட்ட மூன்று இடங்களைத் தவிர்த்து வேறு இடமொன்றில் அனல்மின் நிலையத்தை அமைக்கும் யோசனைக்கு இந்தியா உடன்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்திய அரசின் தேசிய அனல் சக்திக் கூட்டுத்தாபனமும், சிறிலங்கா மின்சார சபையும் இணைந்து திருகோணமலையில் 500 மெகா வார்ட் அனல் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கத் திட்டமிட்டிருந்தது. இத்திட்டம் தொடர்பான யோசனை, ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்திலேயே முன்வைக்கப்பட்டது. இத…
-
- 1 reply
- 824 views
-
-
நாளை செவ்வாய்க்கிழமை இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி இருநாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை செல்லவுள்ளார். இலங்கை செல்லும் இவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரைசந்தித்து பேசவுள்ளார். இலங்கையின் தற்போதைய நிலை சமாதான முயற்சி குறித்து இலங்கை தலைவர்களுடன் பிரணாப் முகர்ஜி கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது http://pathivu.com/index.php?subaction=sho...amp;ucat=1&
-
- 0 replies
- 835 views
-
-
2 ஆம் லெப். ஜீவன் பயிற்சிப் பாசறையின் 23 ஆம் அணியின் பயிற்சி நிறைவும் பெற்றோர் சந்திப்பும் நேற்று எழுச்சியுடன் நடைபெற்றது. நேற்று சனிக்கிழமை முற்பகல் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரை கொள்கை முன்னெடுப்புப் பிரிவுப் பொறுப்பாளர் இளங்கோவும் தமிழீழ தேசியக்கொடியினை மணலாறுப் பகுதி தளபதி குமரன் ஏற்றிவைத்தனர். 2 ஆம் லெப். ஜீவனின் திருவுருவப்படத்துக்கான ஈகச்சுடரை தேசிய எழுச்சிப் பேரவைப்பொறுப்பாளர் சஞ்சை ஏற்றிவைத்தார். திருவுருவப்படத்துக்கான மலர்மாலைகளை புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன், கிளிநொச்சி மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கலைவாணன் ஆகியோர் அணிவித்தனர். தொடர்ந்து பெற்றோர் தமது பிள்ளைகளை சந்தித்து அளவளாவியுள்ளதுடன்…
-
- 1 reply
- 1.8k views
-
-
காலிப் பகுதியில் இன்று மதியம் 2.30 மணியளவில் பேருந்தில் பொருத்தப்பட்ட குண்டு ஒன்று வெடித்ததில் 6 பேர் பலியாகியுள்ளனர். 15க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இனியும் தமிழர்களின் உயிர் பறிக்கப்பட்டால் சிங்களவர்களின் உயிரும் பறிக்கப்படவேண்டும். இனியாவது சிங்கள அரசு தமிழ்ப்பகுதிகள்மீது குண்டுவீசுவதை நிறுத்துமா?
-
- 26 replies
- 5.9k views
-
-
சிறீலங்கா அரசுக்கு எதிராக ஐ-நா பேரவையில் தீர்மானம்? சிறீலங்கா அரசுக்கு எதிராக தீர்மானம் ஒன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பபு பேரவையால் இம்மாதம் 15ம் திகதி நிறைவேற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் இலங்கைக்கு பயணம் செய்த ஐ-நா சிறப்புத் தூதுவர் அலன் றொக் முன்வைத்த கருத்துக்கள் அடிப்படையில் இத் தீர்மானம் நிறைவேற்ற தயாராகி வருவதாக அறியமுடிகிறது. சிறீலங்கா துணைப்படை கருணா குழுவால் மேற்கொள்ளப்பட்டு வரும் பலவந்த சிறுவர் ஆட்சேர்ப்புக்கு சிறிலங்கா படையினர் ஒத்துழைப்பு வழங்கி வருவதாக அலன் றொக் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இது குறித்து சிறீலங்கா அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் எனவும் இதனை ஆராய அதிபர் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்…
-
- 1 reply
- 1.1k views
-
-
சென்னையிலும் டில்லியிலும் நடந்ததென்ன?:சு-ப-வீ வழங்கிய பிரத்தியேகப் பேட்டி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் ஆகிய ஐவரும் அண்மையில் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களையும், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களையும் சந்தித்து ஈழத்தமிழர்கள் மீது ஷ்ரீலங்கா அரசு கட்டவிழ்த்து விட்டுள்ள 'அரச பயங்கரவாதம்' குறித்து மனம் விட்டுப் பேசியுள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன்னர் இதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழக முதல்வரையும் பிரதமரையும் சந்திப்பதற்குப் பகீரத முயற்சிகளை மேற்கொண்டும் கைகூடாமல் போனது. இது தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமை…
-
- 1 reply
- 1.4k views
-
-
போர் நிறுத்த உடன்படிக்கை காலத்தில் 1475 பொதுமக்கள் பலி, 545 பேர் காணாமல் போயுள்ளார்கள். கடந்த 5 வருட போர்நிறுத்த காலப்பகுதியில் மிகமோசமான மனிதஉரிமை மீறல்களை சிறீலங்கா படைகள் மேற்கொண்டுள்ளதாக விடுதலைப்புலிகள் குற்றம் சுமத்தியுள்ளார்கள் தமிழீழ செயலகத்தால் விடப்பட்டிருக்கும் அவ் அறிக்கையில் கடந்த 5 வருடத்தில் 1475 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் 545 பொதுமக்கள் காணாமல் போயுள்ளதாகவும் சிறீலங்கா படை நடவடிக்கைகளால் 2 10,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் 300 000 பேர் பலவந்தமாக குடிபெயர்க்கப் பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்ப்பட்டுள்ளது. -Pathivu-
-
- 1 reply
- 794 views
-
-
யாழ்குடாவில் உணவு நிலை சீரடையும் வரையில் இந்தியாவில் இருந்து உணவு இறக்குமதி செய்யப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இலங்கையின் வடக்கில் யாழ்குடா நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு பற்றாக்குறையை அடுத்து, தமிழகத் தலைநகர் சென்னையில் இருந்து உணவுப் பொருட்களை கப்பல் மூலமாக இலங்கை அரசு இறக்குமதி செய்து யாழ் குடாநாட்டில் விநியோகிக்கும் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இது தொடர்பாக தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்குடா நாட்டில் உள்ள உணவு பற்றாக்குறை நிலை சீரடையும் வரை இலங்கை அரசு தமிழ்நாட்டில் உள்ள தனியார் வியாபாரிகளிடம் இருந்து உணவுப் பொருட்களை கொள்முதல் செய்து மக்களுக்கு விநியோகம் செய்யும் என்றார். இது குறித்து செவ்வாய்கிழமையன்று கொழும…
-
- 6 replies
- 1.5k views
-
-
ஐந்து பேர் கொண்ட ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸ் குழு இன்று இலங்கை வருகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் படுகொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஐந்து பேர் அடங்கிய ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸ் குழு இன்று இலங்கை வரவுள்ளது. கொழும்பில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்ட ரவிராஜ் தொடர்பான விசாரணைகளுக்காக ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸாரின் ஒத்துழைப்பு பெறுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்தார். ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய வெளிநாட்டு அமைச்சு மேற்கொண்ட துரித நடவடிக்கைகளை அடுத்தே ஐந்து பேர் அடங்கிய ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸார் இன்று இலங்கை வரவுள்ளனர் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது த…
-
- 5 replies
- 1.4k views
-
-
மணிசங்கர ஐயரின் மகளின் திருமணத்தில் ராஜபக்ஸ. கிழே உள்ள சண்டே டைம்ஸின் கட்டுரையில் மணிசங்கர் ஐயரின் மகளின் திருமணத்தில் ராஜபக்ஸ் கலந்து கொண்டுள்ளது பற்றி வந்துள்ளது.அத்தோடு சர்வதேச ரீதியாக,பிராந்திய ரீதியாக சிறிலங்கா அரசுக்கு எழப்போகும் நெருக்கடிகள் பற்றிக் கூறப்படுள்ளது. சிறிலங்கா இராணுவம் ஏன் தமிழ்மக்களைத் தாக்கி விடுதலைப் புலிகளைச் சீண்டி அவர்களை பாரிய யுத்ததை ஆரம்பிக்க வைக்க எத்தனிக்கிறது என்பதற்கான காரணங்கள் என்ன என்பதை இந்தக் கட்டுரை காவி வந்துள்ளது. விடுதலைப் புலிகள் ஏன் மவுனம் காக்கிறார்கள் என்பதற்கான பதிலும் இதில் பொதிந்து இருக்கிறது. பொறுத்திருப்போம் , தலமையின் முடிவுகளில் நம்பிக்கை வைப் போம்.காலம் கனியும். Year of crisis for Rajapaksa I…
-
- 3 replies
- 2.1k views
-
-
வன்முறையைப் புலிகள் தேர்ந்தெடுத்தால் அதற்குப் பதிலடி கொடுக்க அரசு தயார் அமைச்சர் ரம்புக்வெல கூறுகின்றார். பேச்சு மூலம் தீர்வு காண அரசு திறந்த மனத்துடன் செயற்படுகின்றது. ஆனால் வன்முறைகளை விடுதலைப் புலிகள் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்று தெரிகின்றது. அதனைத் தக்க முறையில் எதிர்கொள்ள பதிலடி கொடுக்க அரசு தயாராகவுள்ளது அமைச்சரும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளருமான ஹெகலிய ரம்புக்வெல இவ்வாறு தெரிவித்துள்ளார். பி.பி.ஸிக்கு அவர் வழங்கிய செவ்வியில் அவர் மேலும் கூறியதாவது: கடந்த 25 ஆண்டு காலமாகப் புரையோடிப் போயுள்ள தீவிரவாதத்தை இந்த நாடு சந்தித்து வருகின்றது. ஒரு தீர்வினைக் கொண்டுவர பேச்சு நடத்தி வருகின்றோம். ஆனால் விடுதலைப் புலிகள் குறிப்பாக வன்முறைப் பாதையில் செல…
-
- 2 replies
- 1.5k views
-
-
அரசும் விடுதலைப் புலிகளும் போரையே எதிர்பார்க்கின்றன [ஞாயிற்றுக்கிழமை, 7 சனவரி 2007, 20:26 ஈழம்] [பூ.சிவமலர்] புத்தாண்டில் முழுப்போர் வெடிக்கக்கூடும் என்று சிறிலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தன. அந்த எச்சரிக்கை கடந்த ஒரு வார காலமாக வன்முறைச் சம்பவங்களாக வெடித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அரசாங்கம் போர் முரசம் கொட்டுகிறது. கேகலிய ரம்புக்கவெல, சரத் பொன்சேகா போன்ற உயர் அரச அதிகாரிகள் பேச்சில் முழுமையான போர் குறித்த அறிகுறிகள் வெளிப்படுத்திக்கொண்டிருப்
-
- 0 replies
- 885 views
-
-
வாகரைப் பகுதியில் இன்னும் 1..2 நாட்களில் உணவுகள் முற்றாக தீர்ந்துவிடும் அபாயநிலைக்கு வந்திருப்பதாக அவசர வேண்டுகோளை விடுத்திருக்கிறது சர்வதேசம் நோக்கி. SOS from Vaharai [TamilNet, Sunday, 07 January 2007, 13:49 GMT] Tamils Rehabilitation Organization (TRO) its press release on Thursday said that the 15,000 Internally Displaced Persons (IDPs), denied food by the Sri Lanka Army (SLA) obstruction of the transport of food to Vaharai, are on the verge of death due to starvation. The TRO besides sending an urgent request to the to the Government of Sri Lanka (GoSL) and the International Committee of Red Cross (ICRC) to send food, medicine and and other essentials …
-
- 0 replies
- 1.1k views
-
-
அரசாங்கம் போர் முரசம் கொட்டுகிறது: சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன். புத்தாண்டில் முழுப்போர் வெடிக்கக்கூடும் என்று சிறிலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தன. அந்த எச்சரிக்கை கடந்த ஒரு வார காலமாக வன்முறைச் சம்பவங்களாக வெடித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அரசாங்கம் போர் முரசம் கொட்டுகிறது. கேகலிய ரம்புக்கவெல, சரத் பொன்சேகா போன்ற உயர் அரச அதிகாரிகள் பேச்சில் முழுமையான போர் குறித்த அறிகுறிகள் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதால் இலங்கையின் எதிர்காலம் மிகவும் இருண்டிருக்கிறது என்று விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீவரத்தினம் புலித்தேவன் கூ…
-
- 0 replies
- 807 views
-
-
1987 ஆம் ஆண்டு மறக்க முடியாத ஒன்றாகும். சுதந்திரம் அடைந்த பின்னர் எமது நாடு வேறு எந்த ஒரு ஆண்டிலும் அவ்வாறு கீழான சிறுமைப்படுத்தலுக்கு உள்ளாகாத அளவுக்கு அந்த ஆண்டில் நாட்டின் மதிப்பு கீழ்த்தள்ளப்பட்டது. அந்த துரதிர்ஷ்டமான நிகழ்வு ஏற்படுவதற்குப் பெருமளவில் காரணமாக நமது தவறான செயற்பாடுகளே இருந்தன. அன்று ஜே.ஆர்.ஜயவர்தன அரசாங்கமும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, மக்கள் விடுதலை முன்னணி உட்பட ஏனைய தென்பகுதிக் கட்சிகளும் தமது அரசியல் நடவடிக்கைகளை மிகுந்த தொலை நோக்குடனும் ஒற்றுமையுடனும் நடுநிலையுடனும் மேற்கொண்டிருந்தால் 1987 ஆம் ஆண்டில் நாம் அந்த அளவுக்கு ஆபத்தான அபத்தமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்க மாட்டோம். புதிய வருடத்தில் காலடி எடுத்து வைத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அந்த …
-
- 1 reply
- 2.2k views
-
-
2007 –மகிந்தவிற்கு பிரச்சனைகள் நிறைந்த ஆண்டு. எழுதியவர் சாத்வீகன் Sunday, 07 January 2007 2007ம் வருடம், ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ்வைப் பொறுத்த வரையில் நிறைய சவால்களை எதிர்கொண்டாக வேண்டிய பிரச்சனைகள் நிறைந்த ஒரு ஆண்டாக அமைய இருக்கின்றது என்று தென்பகுதி ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அவர் ஆரம்பித்துள்ள யுத்தத்தின் சுமைகளையும், வெளிநாட்டு அழுத்தங்களையும், பொருளாதார நெருக்கடிகளையும் அரசியல் நெருக்கடிகளையும் எதிர்கொள்ளவேண்டிய ஒரு ஆண்டாக இருக்கும் என்றும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. ஐ.நா. சபை, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா என்ற புதிய சர்வதேச அழுத்தங்களையும் இவ் ஆண்டில் மகிந்த எதிர்கொள்ளவேண்டி ஏற்படலாம் என்றும் சுட்டிக்காண்பிக்கப்பட்ட…
-
- 0 replies
- 1.1k views
-
-
அம்பாறை மத்தியமுகாம் கிராமத்தில் குண்டுதாக்குதல் 5பேர் காயம் எழுதியவர் R.Thurai Sunday, 07 January 2007 அம்பாறை சென்ரகாம் நகரில் இன்று 10.30மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. விவசாய பொருள் விற்பனை நிலையத்திற்கு அருகே இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இரு சிங்களவர் இரு முஸ்லீம் ஒரு தமிழர் என மொத்தம் 5பேர் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் கல்முனை அம்பாறை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கல்முனை நகரிலிருந்து மேற்காக 20கிலோ மீற்றருக்கு அப்பால் இக்கிராமம் அமைந்துள்ளது. நூறுவீதம் தமிழர்களை கொண்ட இப்பகுதி 1981,1983,1990 ஆகிய ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிராக சிங்கள காடையர்களாலும் ஸ்ர…
-
- 0 replies
- 859 views
-
-
வவுனியா பண்டாரிக்குளம் பொலிஸ் காவல் அரண்மீது இன்று காலை 7மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நான்கு பொலிஸார் இச்சம்பவத்தில் காயமடைந்ததாக ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. சுமார் ஒரு மணிநேரமாக இப்பகுதியில் துப்பாக்கி வேட்டுச்சத்தங்கள் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதேவேளை வவுனியா மாமடு மகாரம்பைக்குளம் காவல் அரண்மீதும் இன்று காலை 7.30மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் 3படையினர் காயமடைந்ததாக ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் படையினர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர். இதில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். இவரின் சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது. வவுனியா குரும்ம…
-
- 0 replies
- 955 views
-
-
திருமலை தமிழர்புனர்வாழ்வுக்கழக அலுவலகம் துணை இராணுவக் குழுவால் சூறையாடல். திருமலை தமிழர்புனர்வாழ்வுக்கழக காரியாலயம் நேற்றிரவு 10.30 மணியளவில் சிறிலங்காப் படையினரின் துணைஆயுத கூலிக் கும்பலினால் சூறையாடப்பட்டுள்ளது. அங்கிருந்த கணணிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் பக்ஸ் மெசின், போட்டோக் கொப்பி மெசின் மற்றும் ஒரு தொகைப் பணம் அத்துடன் தளபாடங்கள், காரியாலய ஆவணங்கள் என அத்தனையும் ஆயுதக் கும்பலால் களவாடப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு வார காலத்துக்குள் வவுனியா, மற்றும் கொழும்பு அலுவலகமும் காவற்துறையினரால் சோதனையிடப்பட்டு ஆவணங்களும் எடுத்துச் செல்லப்பட்டிருந்தன. ஏற்கனவே கடந்த வருடம் யாழ் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பல முறை குண்டுத் தாக்குதலுக்கும் இலக்காகி ஊழ…
-
- 0 replies
- 635 views
-
-
பயணிகள் பஸ் குண்டுவெடிப்பை தொடர்ந்து இராணுவம், பொலிஸ் தீவிர தேடுதல்; 24 பேர் கைது [07 - January - 2007] [Font Size - A - A - A] நித்தம்புவ, கலல்பிட்டிய 24 ஆம் கட்டையடியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை ஐவரை பலி கொண்ட தனியார் பஸ் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து பொலிஸாரும், இராணுவத்தினரும் கூட்டாக அப்பகுதியில் மேற்கொண்ட தேடுதலில் 24 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழர்கள் 19 பேரும் முஸ்லிம்கள் நால்வரும் சிங்களவர் ஒருவருமே கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்குட்படுத்தப்பட
-
- 0 replies
- 823 views
-
-
யாழ்ப்பாணத்தில் போல் பொயின்ற் பேனை 250 ரூபா, பென்சில் 100 ரூபா: பெரும் பரிதாப நிலையில் மாணவர்கள். யாழ். குடாநாட்டில் பாடசாலைகள் ஆரம்பமான நிலையில் அங்கு ஒரு குமிழ்முனைப் பேனா 250 ரூபாவாகவும் பென்சில் ஒன்று 100 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதால் மாணவர்கள் பெரும் அவலங்களை எதிர்நோக்கியுள்ளனர். குடாநாட்டுக்கான தரைவழிப்பாதை மூடப்பட்டு சுமார் ஐந்து மாதங்களாகும் நிலையில் அங்கு உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களுக்கும் மிகப்பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், புத்தாண்டு பிறந்து முதலாம் தவணைக்கான பாடசாலைகளும் ஆரம்பமாகியுள்ளன. எனினும், மாணவர்களுக்குத் தேவையான எழுது கருவிகளும் கொப்பிகளும் இல்லாது மாணவர்களும் பெற்றோரு…
-
- 0 replies
- 721 views
-
-
ஆழஊடுருவும் அணியை வழிமறித்து விடுதலைப்புலிகள் தாக்குதல் - ஒருவர் கயம். வவுனியா நாவற்குளம் ஊடாக ஊடுருவ முயன்ற சிறிலங்காப்படையினரின் ஆழஊடுருவும் அணியை வழிமறித்து விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் படையினர் ஒருவர் காயமடைந்துள்ளார். இராணுவ உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று மதியம் 12.00மணியளவில் நாவற்குளம் உடாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவ முயன்ற ஆழஊடுருவும் அணியினரை வழிமறித்து விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். -Sankathi-
-
- 0 replies
- 1k views
-
-
[06 - January - 2007] [Font Size - A - A - A] முன்னாள் ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹுசெய்ன் கடந்த சனிக்கிழமை பாக்தாத்தில் தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து 13 அரசியல் கட்சிகள் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தியிருந்தன. மருதானை முஸ்லிம் பள்ளிவாசலில் ஜும்மா தொழுகைக்குப் பிறகு சதாம் ஹுசெய்னுக்கான ஜனாசா தொழுகை நடத்தப்பட்டதையடுத்து ஆரம்பித்த பேரணியில் ஆயிரக்கணக்கானவர்கள் அமெரிக்கத் தூதரகம் வரை ஆக்ரோஷமாகக் கோஷங்களை எழுப்பிய வண்ணம் ஆர்ப்பாட்ட ஊர்வலமாகச் சென்றனர். இறுதியில் பேரணியை ஏற்பாடு செய்த அரசியல் கட்சிகளின் சார்பில் அமெரிக்கத் தூதரகத்தில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. இந்தப் பேரணிக்கான ஏற்பாடுகள் தொடர்பில் அறவிப்பதற்காக கடந்த புதன்கிழமை அச…
-
- 1 reply
- 1.2k views
-
-
வடக்கு - கிழக்கு இணைப்புக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கும். 1987 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட இலங்கை - இந்திய உடன்படிகக்கைக்கமைய வடக்கு - கிழக்கு மாகாணங்கள் தொடர்ந்தும் இணைக்கப்பட்டிருப்பதை சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என இந்தியா கேட்டுக்கொள்ளவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்திருக்கின்றார். அண்மையில் புதுடில்லி சென்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழுவில் இடம்பெற்றிருந்த மாவை சேனாதிராஜா, இதற்கான உறுதிமொழி தமக்கு இந்தியப் பிரதமரால் வழங்கப்பட்டது எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்…
-
- 0 replies
- 730 views
-
-
அரசு - ஐ.தே.க. உடன்படிக்கை: எந்தவித நன்மையும் இல்லை என்று மக்கள் விசனம். அரசுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான உடன்படிக்கையினால் மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லை என்று மக்கள் விசனமடைந்துள்ளதாக கரு ஜயசூர்ய தெரிவித்துள்ளார். அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் கரு ஜயசூர்யவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது மகிந்தவிடம் கரு ஜயசூர்ய இதனை தெரிவித்தார். கருவின் கூற்றுக்கு பதிலளித்த மகிந்த, அரசுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி செயற்பட தீர்மானித்தற்காக மக்கள் ஒருபோதும் மனம் வருந்த மாட்டார்கள். ஓன்றிணைவது மட்டுமன்றி ஒன்றிணைந்து செயற்படுவதே சிறந்தது. புதிய சட்டங்களை இயற்றுவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் தேவை என்று அவர் தெரிவித்து…
-
- 0 replies
- 628 views
-