ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142742 topics in this forum
-
ஜே.வி.பி.யின் லங்கா அச்சகம் தீப்பிடித்து முற்றாக எரிந்தது நாசமாகியுள்ளது. கோட்டே ரஜமஹா விகாரை முன்பாக அமைந்திருக்கும் அச்சகம் மூடப்பட்டிருந்த நிலையிலேயே நேற்று திங்கட்கிழமை தீப்பற்றி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இந்த தீ விபத்துச் சம்பவத்தில் பத்திரிகை அச்சகம் முற்றாக எரிந்துள்ளதுடன் அருகிலிருந்த வாகன விற்பனை நிலைய கட்டிடத்திற்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது. இத் தீ விபத்து சம்பவம் எவ்வாறு ஏற்பட்டது என்பது உடனடியாக தெரியவர வில்லையென தெரிவித்த தீயணைப்பு படையினர் அது தொடர்பாக மிரிஹானை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர் www.tamilwin.com
-
- 0 replies
- 978 views
-
-
ஈழப் பிரச்சினையில் மன்மோகன் சிங் அரசின் கொள்கை [02 - January - 2007] [Font Size - A - A - A] * இருட்டு வீட்டில் குருட்டுப் பூனையை தேடிய கதை ஈழப் பிரச்சினையில் மன்மோகன் சிங் அரசின் கொள்கை, இருட்டு வீட்டில் குருட்டுப் பூனையைத் தேடிய கதையாக இருக்கிறது. இலங்கை அரசும் ஈழப் போராளி களும் கூடிப்பேசி, பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்று தொடர்ந்து உபந்நியாசம் செய்து வருகிறார்கள். அதே சமயத்தில், ஈழப் போராளிக ளுக்கு எதிராக இலங்கை அரசிற்கு எந்த அளவிற்கு ஆயுத உதவி, உணவுப் பொருள் உதவி அளிக்கவேண்டுமோ, அந்த அளவிற்கு உதவி செய்து வருகிறார்கள். அப்போதெல்லாம், இவர்களுடைய நடுநிலை நாடகம் அம்பலத்திற்கு வந்துவிடுகிறது. இந்த நாடகத்திற்கு, இப்போது ஐக்கிய முன்னணியின் த…
-
- 2 replies
- 1.6k views
-
-
ஜே.வி.பி பிரச்சார செயலாளர் விமல் வீரவன்ச மீது ஒழுக்காற்று நடவடிக்கை? ஜே.வி.பி கட்சியின் உள்வீட்டு சண்டை அம்பலத்திற்கு வந்துள்ளது. அந்த கட்சியின் பிரச்சார செயலாளர் விமல் வீரவன்ச மீதான பாலியல் குற்றச்சாட்டக்களை சண்டே லீடரும் அதன் சகோதர பத்திரிகையான இருடினவும் வெளியிட்டதைத் தொடர்ந்து கட்சிக்குள் சலசலப்பு தொடங்கியுள்ளது. ஜே.வி.பியின் கீழ்மட்ட உறுப்பினர்களிடையே இந்த விவகாரம் விவாதங்களை ஏற்படுத்தியிருப்பினும் அதன் தலைமைப்பீடம் மௌனமாகவே இருந்து வருகின்றது. எனினும் கடந்த வாரம் இந்த பிரச்சினை புதிய திருப்பத்தை சந்தித்துள்ளது. கட்சியின் செயலாளர் ரில்வின் சில்வாவுக்கு விமல் வீரவன்ச மீது ஓழுங்கு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கட்சி அமைப்பாளர்களிடம் இருந்து ஏராளமான கட…
-
- 1 reply
- 1.4k views
-
-
வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் · வவுணதீவு இராணுவமுகாம் மீது மோட்டார் தாக்குதல் வவுனியா தோணிக்கல் பிரதேசத்தில் இன்று காலை 9.30மணியளவில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் இரு சிப்பாய்கள் காயமடைந்துள்ளனர். இவர்கள் ஆபத்தான நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டதாக வவுனியா தகவல்கள் தெரிவிக்கின்றன. வீதிரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே வீதியோரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கிளைமோர் வெடிக்கவைக்கப்பட்டதாக தெரியவருகிறது. மட்டக்களப்பு வவுணதீவு இராணுவமுகாம் மீது இன்று காலை 5.45மணி முதல் எம்.எம் 81ரக மோட்டார்கள் மூலம் விடுதலைப்புலிகள் தாக்குதல்களை நடத்தி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை நேற்…
-
- 0 replies
- 1.1k views
-
-
விமானதாக்குலுக்கு உள்ளான படகுத்துறை கிராமத்திற்கு மன்னார் ஆயர் நேரில் சென்று பார்வையிட்டார். · விடுதலைப்புலிகளின் தளங்கள் எதுவும் அங்கு இல்லை ஸ்ரீலங்கா வான்படையின் கிபிர் விமானத்தாக்குதலால் பாதிக்கப்பட்ட படகுத்துறை கடற்கரையோரகிராமத்திற்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்திரு இராயப்பு ஜோசப் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். படகுத்துறை கிராமத்தில் விடுதலைப்புலிகளின் எந்த தளங்களும் இருந்ததற்கான தடயங்கள் அங்கு இல்லை என தெரிவித்த ஆயர் மீனவர்களின் குடிசைகளே தாக்குதல்களுக்கு உள்ளாகி அழிந்திருப்பதாக தெரிவித்தார். விமானப்படையின் கோரத்தாக்குதலில் 3பிள்ளைகள் கற்பிணிதாய் தந்தை என ஒரேகுடும்பத்தை சேர்ந்த ஐந்துபேர் குண்டுவீச்சினால் உடல்சிதறி பலியாகியிருப்பதாக ஆயர் ம…
-
- 1 reply
- 1.3k views
-
-
பாலசிங்கம் மறைவு....சமாதானத்தின் மரணமா? ஆன்டன் ஸ்டானிஸ்லாஸ் பாலசிங்கம் இறந்து விட்டார். இது எதிர்பாராமல் நடந்ததல்ல. புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவரது நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தன. ஆனாலும் அவரது இழப்பு, ஈழத்தமிழர் களால் தாங்கிக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. எதற்கும் கலங்காத விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைக்கூட கொஞ்சம் அசைத்திருக்கிறது பாலசிங்கத்தின் மரணம். ‘‘துயரத்தின் சுமை என் ஆன்மாவை அழுத்துகிறது. என் உள்ளத்தை உடைத்து நெஞ்சத்தை பிளக்கிறது. கட்டுக்கடங்காத காட்டாறுபோல சீறிப்பாயும் உணர்ச்சிப் பெருவெள்ளத்தை என்னால் வார்த்தைகளால் கொட்ட முடியாது. மனித மொழியில் இதற்கு இடமும் இல்லை’’ என்று பிரபாகரன் துடித்துப் புலம்பியிருக்கிறார். ஒரு மூ…
-
- 4 replies
- 1.9k views
-
-
"சண்டே லீடர்" ஆசிரியரின் கைது முயற்சியும் பின்னனியும்: "சண்டே லீடர்" வெளிட்ட தகவல்கள் கடந்த வாரம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் பதுங்கு குழி விவகாரத்தை அம்பலப்படுத்திய காரணத்தால் சிறிலங்கா அரசு, "சண்டே லீடர்" வார ஏட்டின் ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்கவை கைது செய்ய முயற்சித்த போதும் ஊடகத்துறை, அரசியல்வாதிகள், மற்றும் ஆதரவாளர்களின் கடும் எதிர்ப்பின் மத்தியில் பின்னர் அது கைவிடப்பட்டது. அண்மையில் கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அரசு மேற்கொண்ட முயற்சி கைகூடாமல் போனது எப்படி என்பதை "சண்டே லீடர்" வார ஏடு கடந்த ஞாயிற்றுக்கிழமை (31.12.06) இதழில் வெளியிட்டிருந்தது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் அமுலாக்கலின் பின்னர் "சண்டே லீடர்" வார எட…
-
- 0 replies
- 1.1k views
-
-
வடக்கு கிழக்கில் உள்ள தமிழீழ மக்களை தமிழீழ தேசிய பதிவேட்டில் பதியும் நடவடிக்கை ஆரம்பித்துள்ளது. தமிழீழ சிவில் நிர்வாக பிரிவு வடக்கு கிழக்கில் உள்ள மக்களை தமிழீழ தேசிய பதிவேட்டில் பதியும் நடவடிக்கையை ஜனவரி முதலாம் திகதி முதல் ஆரம்பித்துள்ளன. இதன் முதலாவது பதிவாக தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தமிழீழ பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் எஸ்.ஜெயந்தன் கருத்து தெரிவிக்கையில் ஒவ்வொரு பிரயையின் பதிவும் கணணிமயப்படுத்தி தமிழீழ நிர்வாக நடவடிக்கை வலிமைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். www.pathivu.com
-
- 5 replies
- 2.4k views
-
-
போர் மேகம் சூழ்வதால் பொருளாதாரமும் பாதிப்பு பழையன கழிதலும், புதியன புகுதலும் இயற்கையின் நியதி. அதன் வழி 2006 கழிய, 2007 இல் பூமிப் பந்து காலடி எடுத்துவைக்கின்றது. புதிய வருடப் பிறப்புடன் புது வாழ்வு கிட்டுமா என்று ஏங்குவது மனித இயல்பு. அதுவும் அவலத்திலும், அபத்தத் திலும் சிக்கி அந்தரப் பட்டு, அர்த்தம் இழந்து நிற்கும் இலங் கைத் தீவு, புத்தாண்டிலாவது போர் மேகம் கலைந்து, அமை தித் தென்றல் வீசாதா என்று ஏங்கி நிற்பது புரிந்துகொள்ளத் தக்கது. ஒருபுறம் சமாதான முயற்சிகள் கானல் நீராகிக் கலைந்து போகும் அவலநிலை. மறுபுறம், போர்ச் சூழல் கவிந்து, பொருளாதாரம் சீர்குலைந்து, வாழ்வுக்கு அல்லாடும் கையறு நிலை. திசை தெரியாது, போக்கிடம் புரியாது தடுமாறுகிறது இலங்கைத் தீவு. …
-
- 0 replies
- 881 views
-
-
புதுவருட கொண்டாட்டங்களினால் கொழும்பில் 435பேர் காயம் வடக்கு கிழக்கில் அமைதியான புதுவருட கொண்டாட்டங்கள் புதுவருட கொண்டாட்டங்களினால் கொழும்பு நகரில் மோதல்களினாலும் விபத்துக்களினாலும் 435பேர் காயமடைந்திருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஊடகப்பேச்சாளர் புஸ்பா டிசொய்சா தெரிவித்துள்ளார். நேற்று நள்ளிரவு புதுவருட கொண்டாட்டங்களில் கலந்து விட்டு வீடு திரும்பிய சிலர் மது போதையில் இருந்த காரணத்தாலும் வீதிவிளக்குகள் சரியாக எரியாத காரணத்தாலும் விபத்துக்களில் சிக்கியுள்ளனர். அதிகமான வீதி விபத்துக்கள் மதுபோதை காரணமாகவே இடம்பெற்றிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர புதுவருட கொண்டாட்டங்கள் கேளிக்கைகளின் போது ஏற்பட்ட கைகலப்புக்களில…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜேர்மனியிடம் கைமாறும் ஐரோப்பிய ஒன்றிய தலைமைப் பதவி: நெருக்கடியில் சிறிலங்கா [ஞாயிற்றுக்கிழமை, 31 டிசெம்பர் 2006, 13:31 ஈழம்] [பா.பார்த்தீபன்] ஐரோப்பிய ஒன்றிய தலைமைப் பொறுப்பை நாளை திங்கட்கிழமை முதல் ஜேர்மனி பொறுப்பேற்கவுள்ளதால் சிறிலங்கா அரசிற்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையில் ஜேர்மனியின் பொருளாதார ஒத்துழைப்பு அபிவிருத்தி அமைச்சர் கெய்டி விக்சொரெக் சோல் சிறிலங்கா அரசு பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்ப வேண்டும் என்று அழுத்தமாக ஊடகமொன்றுக்கு பேட்டி வழங்கியிருந்தார். இலங்கையில் இடம்பெற்று வரும் வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் வடக்கு - கிழக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகளை பெருமளவில் பாதித்துள்ளது. எனவே அமைதிப் பேச்சுக்களை மீள ஆரம்பிக்கும் வ…
-
- 3 replies
- 1.9k views
-
-
செங்கலடி வவுணதீவு இராணுவ முகாம்கள் மீது மோட்டார் தாக்குதல். மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாம்கள் மீது இன்று காலையில் மோட்டார் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது. செங்கலடி கறுப்பு பாலத்தில் உள்ள இராணுவமுகாம் , ரமேஷ்புரம் இராணுவமுகாம், வவுணதீவு இராணுவமுகாம் ஆகியவற்றின் மீதே இன்று தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. 81எம்.எம் ரக மோட்டார் மூலமே தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இராணுவத்தரப்பு தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா இராணுவமும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி எறிகணைத்தாக்குதல்களை நடத்தியது. நேற்றுமாலை ஞாயிறுக்கிழமை மாலை பதுளை சந்தியில் உள்ள விசேட அதிரடிப்படைகளின் நிலைகள் மீதும் மோட்டார் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப…
-
- 1 reply
- 1.4k views
-
-
கிரானில் மூன்று இளைஞர்கள் சுட்டுக்கொலை. மட்டக்களப்பு கிரானில் மூன்று இளைஞர்கள் இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஞாயிறு மாலை 7.30மணியளவில் கிரான் விஷ்ணு கோவில் வீதியில் உள்ள கத்தோலிக்க மயானத்தடியில் வைத்து இந்த இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கிரானைச்சேர்ந்த 22வயதுடைய வீரசிங்கம் செந்தூரன் வந்தாறுமூலையைச்சேர்ந்த 27வயதுடைய யோகநாதன் மயூரன், கிரானைச்சேர்ந்த 24 வயதுடைய நமசிவாயம் புவனேஸ்வரன் ஆகியோரே கொல்லப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மயூரனும் புவனேஸ்வரனும் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் வேலை செய்பவர்கள் என்றும் செந்தூரன் மட்டக்களப்பு தொழில்நுட்ப கல்லூரி மாணவன் என்றும் விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tamilwebr…
-
- 0 replies
- 1.1k views
-
-
புத்தாண்டில் உலகம் தமிழ் மக்களோடு சேர்ந்து நிற்கும்: விடுதலைப் புலிகள். புத்தாண்டில் உலகம் தமிழ் மக்களோடு சேர்ந்து நிற்கும் என்று தமிழ் மக்கள் நம்புகின்றனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை விடுத்துள்ள தனது புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அரசியல்துறை விடுத்துள்ள அறிக்கை: 2006 ஆம் ஆண்டு முழுவதிலும், இலங்கைத் தீவில் நிரந்தரமான சமாதானத்தைத் தமிழ் மக்கள் தொடர்ச்சியாகவும் உறுதியாகவும் கோரி வந்தனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழு அளவில் அமுல்படுத்துவதன் ஊடாகவே இந்த இலக்கை அடையலாம், அடைய முடியும் என்று அவர்கள் நம்பினர். இதன் பிரதிபலிப்பாகவே விடுதலைப் புலிகளும் தொடர்ச்சியாக முழு அளவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்ப…
-
- 5 replies
- 1.9k views
-
-
வடமராட்சியில் படையினர் மீது கிளேமோர்த் தாக்குதல். வடமராட்சி வியாபாரி மூலை நாவலடிச் சந்தியில் இன்று காலை 7.50மணியளவில் படையினர் மீது கிளேமோர்த்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதல் சம்பவத்தில் ஒருபடைச்சிப்பாய் கொல்லப்பட்டதாகவும் இரண்டுபடையினர் மட்டும் காயமடைந்ததாகவும் படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். எனினும் 5படையினர் கொல்லப்பட்டதாகவும் 8படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர். இக் கிளேமோர் வெடிப்பின் பின் படையினர் அப்பகுதியில் தேடுதலை மேற்கொண்டனர் இத் தோடுதலின் போது இளைஞர் யுவதிகள் படையினரினால் தாக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது. www.sankathi.com
-
- 0 replies
- 990 views
-
-
எந்தச் சின்னத்தில் போட்டியிட்டாலும் அத்தனகல்ல மக்கள் பண்டாரநாயக்க குடும்பத்தினருக்கே இதுகாலவரை வாக்களித்து வந்துள்ளனர். முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ, ஆர்.டி.பண்டாரநாயக்க முதன் முதல் 1931 ஆம் ஆண்டு அத்தனகல்ல தொகுதிக்காகப் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டார். பின்னர் அவர் 1947 ஆம் ஆண்டில் அத்தனகல்லவுக்குத் தெரிவு செய்யப்பட்ட போது அவர் போட்டியிட்டது யானைச் சின்னத்திலாகும். 1952 இல் அவர் யானைச் சின்னத்துக்குப் பதில் கை.சின்னத்தை தெரிந்தெடுத்தபோது அந்தனகல்ல மக்கள் சின்னத்தைப் பற்றிக் கருதாமல் அவருக்கே வாக்களித்தனர். இவ்வாறே 1956 இல் சில்லுச் சின்னத்தில் அத்தனகல்ல தொகுதிகளில் போட்டியிட்டார் எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக்க. இதன் பின்னர் கதிரை பண்டாரநாயக்க குடும்பத்தின் தேர்தல்…
-
- 0 replies
- 1.4k views
-
-
பாகிஸ்தானிடம் இருந்து ரூ.450 கோடிக்கு இலங்கை அரசு ஆயுதம் வாங்குகிறது. மகிந்தா ராஜபக்சே அதிபராக பொறுப்பேற்ற பிறகு உள்ள தமிழர் பகுதிகள் மீது போர் விமானங்கள் அடிக்கடி குண்டு வீசுகின்றன. இதில் ஏராளமான அப்பாவி தமிழர்கள் உயிரிழந்து வருகின்றனர். புலிகளை ஒடுக்க இலங்கை அரசு பாகிஸ்தானிடம் இருந்து ரகசியமாக ஆயுதங்களை வாங்கி குவிப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது. இந்த தகவலை ஜேன் என்ற பாதுகாப்பு துறை பத்திரிகை தற்போது உறுதி செய்து உள்ளது. அந்த பத்திரிகையில் கூறி இருப்பதாவது:- இலங்கை அரசு பாகிஸ்தானிடம் இருந்து 450 கோடி ரூபாய் மதிப்புக்கு ஆயுதங்களை வாங்க ஒப்பந்தம் செய்து உள்ளது. இதில் ஆளில்லா விமானங்கள், கவச வாகனங்கள், பீரங்கிகள், வெடிபொருட்கள், பல்வேறு வகையான வெடிகுண்டுகள், ஏவ…
-
- 3 replies
- 1.4k views
-
-
போர் நிறுத்த கண்காணிப்புக்குழு தனது பணியைக் குறைத்துக்கொள்கிறது. இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு தனது கண்காணிப்பு நடவடிக்கைகளை குறுகிய காலத்துக்கு குறைத்துக்கொள்ளவுள்ளது. சிறிலங்காப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளும் இடையே போர் தொடர்வதால் தனது செயற்பாடுகளையும் குழுவையும் மறு ஆய்வு செய்ய கண்காணிப்புக்குழு முடிவெடுத்துள்ள காரணத்தால் சிறிது காலத்துக்கு தனது நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ள குழு தீர்மானித்துள்ளது. தனது செயற்பாடுகளை மாற்றியமைப்பது குறித்த பயிற்சிப் பட்டறை ஒன்றை இந்த மாதத் தொடக்கத்தில் கண்காணிப்புக்குழு நடத்தவுள்ளது. பயிற்சிப் பட்டறை நடைபெறும் சமயத்தில் கண்காணிப்புக்குழுவின் மாவட்ட அலுவலகங்கள் திறந்தே இருக்கும். கண்காணிப்பு நடவடிக்கை…
-
- 0 replies
- 891 views
-
-
திருமலையைத் தனியாக பிரித்தெடுத்து வடக்கு - கிழக்கு மாகாணங்களை பிளவுபடுத்த அரசு வகுத்துள்ள வியூகம் நாடு முழு அளவிலான யுத்தத்துக்குள் இழுத்துவிடப்பட்டுள்ளது. வடக்கு - கிழக்கைப் பிரித்து கிழக்கிற்கு தனி மாகாணத்தை உருவாக்கி அதற்காகத் தேர்தலொன்றை நடத்துவதற்காக கிழக்கில் பாரிய தாக்குதலொன்றுக்காக படைத்தரப்பு முழு அளவில் தயாராகியுள்ளது. விடுதலைப் புலிகள் வசமுள்ள வாகரையை அடுத்த சில தினங்களுக்குள் அல்லது அடுத்த ஓரிரு வாரங்களுக்குள் கைப்பற்றிவிடுவோமென இராணுவம் மீண்டும் மீண்டும் கூறிவருவதன் மூலம், எவ்வேளையிலும் வாகரையை இலக்கு வைத்து பாரிய படை நடவடிக்கை ஆரம்பமாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பாரிய படை நடவடிக்கை மூலம் திருகோணமலைக்கும் மட்டக்களப்புக்குமிடையிலான பிரத…
-
- 4 replies
- 3k views
-
-
கற்பிட்டி கடற்பரப்பில் தென்பட்ட மர்மப் படகு தொடர்பாக பொலிஸார் விசாரணை. சிலாபம் கற்பிட்டிக் கடற்பரப்பில் மர்மமான முறையில் தரித்து நின்ற மீன்பிடிப் படகு தொடர்பான விசாரணை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட பிரதேச மீனவர்கள் நேற்றுமுன் தினம் இரவு இந்த மர்மப் படகை அவதானித்து அதுபற்றிய தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்த மீன் பிடிப்படகில் வருகை தந்தவர்கள் எனக் கூறப்படும் 7 பேர் கற்பிட்டிப் பிரதேச மீனவர்களிடம் தமது படகுக்குத் தேவையான எரிபொருள்களைக் கேட்டனர் என்றும் எரிபொருள் இல்லையெனத் தெரிவித்ததையடுத்து வேறு எங்கு எரிபொருள்களைப் பெறலாம்? என்று விசாரித்தனர் எனவும் மீனவர்கள் கூறுகின்றனர். மர்மப் படகு தொடர்பான விசாரணையைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். நேற…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவின் அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவரப்படும்: மகிந்த ராஜபக்ச. சிறிலங்காவின் அமைச்சரவையில் உரிய நேரத்தில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். எதிர்வரும் ஜனவரி மாதம் இரண்டாம் வாரம் இந்த மாற்றம் ஏற்படலாம் என்று ஊடகங்கள் ஊகம் வெளியிட்டள்ளன. அமைச்சர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதுடன் சில அமைச்சர்களுக்கு வேறு பொறுப்புக்களும் வழங்கப்பட உள்ளன. உல்லாசப் பயணத்துறை அமைச்சர் அனுரா பண்டாரநாயக்காவின் அமைச்சுப் பொறுப்பும் மாற்றப்படலாம் என்று தெரியவருகின்றது. www.puthinam.com
-
- 0 replies
- 743 views
-
-
நாளை முதல் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் உள்ள சகல அரசாங்க செயலகங்களும், காலை 8:15 மணிக்கு சிங்கள தேசிய கீதத்தை இசைத்து கடமைகளை ஆரம்பிக்க வேண்டும் என, றியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம உத்தரவு பிறப்பித்துள்ளார் இதேவேளை சிறீலங்கா அரசாங்கத்தின் வடக்கு மாகாணத்திற்கான ஆளுநரான, முன்னாள் காவல்துறை தலைமையதிகாரி சந்திரா பெர்னான்டோ பொறுப்பேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரது ஆளுகையின் கீழ், வடக்கு மாகாணத்திற்கான முதன்மை செயலாளராக யு.ரங்கராஜா என்ற தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநரான சந்திரா பெர்னான்டோ பொறுப்பேற்கும் வரை, பதில் ஆளுநராக தற்போதைய கிழக்கு மாகாண ஆளுநர் றியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம கடமையாற்றவுள்ளார். http://www.pathiv…
-
- 0 replies
- 987 views
-
-
தன்னம்பிக்கையோடும் மன உறுதியோடும் உலகில் உள்ள அனைத்துத் தமிழரும் ஒற்றுமையாக கை கோத்து எதிர்கொள்ள வேண்டிய ஆண்டு 2007. http://www.eelamist.com/podcast/index.php?d1=NTT&p=49 என்ன விலை கொடுத்தும் விடுதலையை வென்றெடுப்போம் என்பதை சர்வதேசத்திற்கு நிரூபிக்கும் மிக முக்கியமான ஆண்டு.
-
- 0 replies
- 968 views
-
-
யாழ் வர்த்க நிலையங்களில் சிங்களத்தில் பெயர்ப்பலகைகளை பொறிக்கச் சொல்லி மிரட்டும் படையினர். வடமராட்சி நெல்லியடிப்பகுதியிலுள்ள வர்த்தகர்களுக்க நெல்லியடி பொலிஸாரும் படையினரும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். வர்த்தக நிலையங்களில் சிங்களத்தில் பெயர்ப்பலகைகளை பொறிக்கவேண்டும் எனவும் சிங்களத்தில் பெயர்ப்பலகை இல்லாவிட்டால் பெயர்ப்பலகைகளை முற்றாகக் அகற்றுமாறும் எச்சரித்துள்ளனர். அத்துடன் நெல்லியடி வீதிஉடாக போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களை வழிமறிக்கும் பொலிஸார் சிங்களத்தில் பெயர்ப்பலகைகளை இடுமாறும் எச்சரித்துள்ளனர். www.sankathi.com
-
- 1 reply
- 1k views
-
-
மண்டூரில் அதிரடிப்படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு: 2 அதிரடிப்படையினர் பலி. மட்டக்களப்பு மாவட்டம் மண்டூர் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் முன்னேற்ற முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. இந்த முறியடிப்புச் சமரில் சிறப்பு அதிரடிப்படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மண்டூர் 38 ஆம் கிராமப் பகுதியின் உடாக இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் சிறப்பு அதிரடிப்படையினருடன் துணை இராணுவக் குழுவினரும் இணைந்து முன்னேற்ற முயற்சியினை மேற்கொண்டனர். விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த் தாக்குதலை நடத்தி அவர்களது முயற்சியினை முறியடித்துள்ளனர் www.puthinam.com
-
- 0 replies
- 848 views
-