ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
விடுதலைப் புலிகள் மீதான தடையை மேற்குலகம் நீக்க வேண்டும்: கலாநிதி வி.கருணரட்ன மகிந்த ராஜபக்ச அரசிற்கு 4.5 பில்லியன் டொலர் நிதி உதவியை வழங்க இணங்கிய சர்வதேச சமூகம், அந்த நாட்டில் அமைதி உருவாக வேண்டும் என்று விரும்பினால், தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கி பேச்சுவார்தைகளில் அவர்களும் சமதரப்பாகக் கலந்துகொள்ள ஏதுவான நிலையை உருவாக்க முன்வரவேண்டுமென, இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணரட்ன தெரிவித்தார். சிறீலங்காவின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக லண்டனில் வாழும் மக்களுக்கு விரிவான விளக்கத்தை வழங்கும் நோக்கத்துடன், பல்வேறு சந்திப்புகளையும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன நடத்தி வருகிறார். நாட்டின் ஜனாதிபதியால் கூட, தனது மாளிகைக்குள் ச…
-
- 3 replies
- 1.2k views
-
-
உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டிற்கு அதியுயர் மட்ட ராஜதந்திரிகளை அனுப்புமாறு அரசு கேட்டுக்கொண்ட போதும் ஜேர்மன் மறுத்துவிட்டது உதவி வழங்கும் மாநாட்டிற்கு அதியுயர் மட்ட ராஜதந்திரிகள் அனுப்புமாறு அரசாங்கம் கொழும்பிலுள்ள ஜேர்மன் தூதுவரை கேட்ட போதும் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. நீங்கள் எதிர்பார்ப்பது போன்று உயர்மட்ட ராஜதந்திரிகளை அனுப்ப முடியாது என ஜேர்மன் தூதுவர் பதிலளித்ததாக ஐக்கிய தேசிய கட்சி எம்.பி ரவி கருணாநாயக்க சபையில் தெரிவித்தார். அவசரகால சட்ட நீடிப்பு பிரேரணையின் மீது உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டில் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அருமையான சந்தர்ப்பம் இருந்தது. இரு கட்சிகளுக்கும் இடையில் உடன் படிக்கையொன்றும் கைச்சாத்திடப்பட்டது. ஆனால்…
-
- 0 replies
- 880 views
-
-
இடம்பெயர்ந்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்க ஏற்பாடு - இந்த அடையாள அட்டைகள் வாகரைப் பகுதிக்குள் மட்டுமே செல்லுபடியாகும் வாகரையிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன. இதன் முதற்கட்டமாக நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்கள் அனைவரையும் பொலிஸார் பஸ் மூலம் பொலிஸ் நிலையங்களுக்கு அழைத்துச் சென்று புகைப்படம் எடுத்து வருகின்றனர். இதன்போது குடும்பம் குடும்பமாகவும் தனித்தனியாகவும் புகைப்படம் எடுக்கப்படுவதாக தெரியவருகிறது. இந்த தற்காலிக அடையாள அட்டையின்றி மக்கள் எவரும் வாகரையில் மீளக் குடியேற முடியாது என்ற சூழ்நிலை உருவாகியுள்ளதால் பொலிஸ் நிலையங்கள் முன்னால் அடையாள அட்டை பெறுவதை முன்னிட்டு பொதுமக்கள் …
-
- 0 replies
- 671 views
-
-
ஐ.நா. கொழும்பு அலுவலகம் அரசுக்கு எதிராகவும் புலிகளுக்கு ஆதரவாகவும் செயற்படுகின்றது - விமல் வீரவன்ச ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகம் அரசாங்கத்திற்கு எதிராகவும் விடுதலைப்புலிகளுக்கு சார்பாகவும் செயற்பட்டு வருகின்றது என ஜே. வி. பி.யின் பிரசார செயலாளரும் கொழும்பு மாவட்ட எம்.பி.யுமான விமல் வீரவன்ச சபையில் குற்றம்சாட்டினார். கொழும்பிலுள்ள ஐ. நா. அதிகாரிகள், இராஜதந்திரிகளுக்குரிய வரப்பிரசாதங்களை அனுபவித்துக் கொண்டு நாட்டைப்பிரிக்க போராடும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றம் நேற்றுக்காலை 9.30 மணியளவில் சபாநாயகர் வி. ஜே. மு. லொக்குபண்டார தலைமையில் கூடியதும் வழமையான தினப்ப ணிகள் இடம்பெற்றன. அதனையட…
-
- 0 replies
- 884 views
-
-
-சி.இதயச்சந்திரன்- அரசு என்கிற கட்டுமானத்திலிருந்து வெளித்தள்ளப்பட்ட, அரசியலின் ஆளுமைக்குட்படாது சமூக வெளிப்பாடுகளும் தத்துவங்களும் இல்லையென்பதை அறுதியிட்டும் கூறலாம். அதில் நேரடித் தலையீட்டை மேற்கொள்ளாத மக்கள் கூட்டம் பற்றி பேசலாமென எண்ணுகிறேன். அரசியலில் ஊடுருவாத எந்தவொரு சமூகத்தினரும் இல்லையென்பதே யதார்த்தமானதாகும். வாக்களிக்கும் போதும், அதன் பின்னரும் அரசியல்வாதிகள் கூறுவதை கேட்டபடி இருப்பவர்களே வெகுஜன மக்களாவர். அதிகாரத்தை இயக்குவதில் பங்குகொள்ளாத இக்கூட்டம், அந்நியராக வாழ்வதே நாடாளுமன்ற ஜனநாயகம் இவர்களுக்கு கொடுத்த உரிமையாகும். அந்நியராக வாழும் உரிமைகூட முதலாளித்துவ அரசியலில் மட்டுமே காணப்படுகிறது. மதத்தை முன்னிலைப்படுத்தி அரசிய…
-
- 1 reply
- 1.5k views
-
-
''எழுச்சி கொள்ளும் இளையோர்'' சீ. ஆதித்தன் கடந்த சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைவோரது தொகை அதிகரித்துக் கொண்டு செல்வதைக் காணமுடிகிறது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னிப்பிராந்தியத்தில் இருக்கின்ற சகல கிராமங்களில் இருந்தும் தற்போது வீட்டுக்கு ஒருவர் என்ற வகையில் இளைஞர் யுவதிகள் போராட்டத்தில் இணைந்த வண்ணம் இருக்கிறார்கள். நாளிற்கு நாள் இணைவோர் தொகை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. விடுதலைப்புலிகளின் அரசியல்துறைச் செயலகங்களை நிறைக்கும் இளைஞர், யுவதிகளின் மன நிலையில் தெளிவான பார்வை தென்படுவதை அவதானிக்கலாம். இது ஒரு புறம் இருக்க விடுதலைப் போராட்டத்திற்காக தமது பிள்ளைகளை தாமாகவே வந்து போராளிகளிடம் ஒப்படைக்கின்…
-
- 1 reply
- 880 views
-
-
அமைச்சர்களே வீதியில் செல்லமுடியாத நிலை மனம் வெதும்புகின்றார் அமைச்சர் ஜெயராஜ்! அவரது காரையே தட்டித் தர்பார் நடத்தினராம் பொலிஸார் கொழும்பு, பெப். 07 அமைச்சரொருவருக்குக் கூட இன்று வீதியில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியென்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? நேற்று நாடாளுமன்றில் இவ்வாறு கேள்வி எழுப்பியிருக்கின்றார் ஆளும்கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே. நேற்று நாடாளுமன்றம் சபாநாயக்கர் ஜே.எம்.லொக்குபண்டார தலைமையில் கூடியபோது அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே சிறப்புரிமைப் பிரச்சினை யொன்றை எழுப்பி உரையாற்றினார். அவர் அங்கு கூறியதாவது: இன்று காலை பௌத்தலோக மாவத்தை வழியாக நான் நாடாளுமன்றத்துக்கு எனது வாகனத்தில் வந்துகொண்…
-
- 4 replies
- 2k views
-
-
மஹிந்த சிந்தனை இலங்கை மக்களுக்கு வரம் என்கின்றார் அமைச்சர் அமீர்அலி "மஹிந்த சிந்தனை' என்பது இலங்கை மக்களுக்குக் கிடைத்த ஒரு பெரும் வரமாகும் என்று அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சில் கடந்த 2ஆம் திகதி தனது கடமையைப் பொறுப்பேற்கும் வைபவத்தின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்: இந்த அமைச்சை கடந்த வருடம் நான் பொறுப்பேற்ற வேளை ""சரியான ஒருவருக்கே இந்த அமைச்சு வழங்கப்பட்டுள்ளது'' என்று ஜனாதிபதியின் ஊடக ஆராட்சி அதிகாரி எம்.எச்.எம். அஸ்வர் சொன்னார். ஜனாதிபதி இதைப்பொறுப்பேற்றபோது இதைக்கொண்டு என்னசெய்யமுடியும் என்ற வினாவே எ…
-
- 1 reply
- 1.2k views
-
-
புலிகளின் நிலைகள் மீது ஹெலிகள் றொக்கட் வீச்சு!: பிரசாத் சமரசிங்க திருகோணமலையின் வடக்குப் பகுதியில் விடுதலைப்புலிகளின் மறைவிடங்கள் எனச் சந்தேகிக்கப்படும் காட்டுப்பகுதி மீது நேற்று விமானப் படையின் ஹெலிக்கொப்டர்கள் றொக்கட் தாக்குதல்களை நடத்தின என்று கொழும்பில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்றுக்காலை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க கூறினார். தாக்குதலால் ஏற்பட்ட சேத விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை என்று செய்தி ஏஜென்ஸிகள் தெரிவித்தன. -Sudaroli-
-
- 0 replies
- 1.2k views
-
-
நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பை சிதறடித்துவிட்டார் ஜனாதிபதி: ரணில் நாட்டில் நிரந்தரமான ஒரு சமாதானத்தையும் நல்லாட்சியையும் ஏற்படுத்துவதற்கு இடப்பட்ட அத்திபாரத்தை ஜனாதிபதியின் தன்னிச்சையான செயற்பாடுகள் அடியோடு தகர்த்துவிட்டன. ஜனாதிபதியின் நடவடிக்கை பிரதான இரு கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயலிழக்கச் செய்ய வைத்தது மட்டுமல்லாமல், நாட்டின் நல்ல ஒரு எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிட்டது. இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நேற்றுக்காலை நாடாளுமன்றம் கூடியபோது எதிர்க்கட்சித் தலைவர் ரணில் சபையில் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். அப்போதே அவர் இவ்வாறு கவலை தெரிவித்தார்…
-
- 0 replies
- 817 views
-
-
இலங்கையில் மனித உரிமைகள்:சர்வதேசத்தின் பரிசீலனையில்! இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர் பான விவகாரம் சர்வதேச ரீதியில் ஒலிக்கும் கவனிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது. ஐ. நா. பாதுகாப்புக் கவுன்ஸிலின் செயலணிக் குழு ஒன்று நாளை மறுதினம் கூடி இலங்கை விவ காரம் குறித்து ஆராயஇருக்கின்றது. அதேசமயம் அடுத்த மாதத்தில் கூடவிருக் கும் ஐ. நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் கூட் டத் தொடரிலும் மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங் களில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் விவகாரம் விரிவாக ஆராயப்படவிருப்பதாக விடய மறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருக் கின்றன. மேற்படி கவுன்ஸிலின் ஆவணங்களின் படி கூட்டத் தொடரின் நான்காவது அமர்வின் போது மார்ச் 12 ஆம் திகதிக்கும் ஏப்ரல் 5ஆம் திகதிக்கும் இடையில் ம…
-
- 0 replies
- 1k views
-
-
''ஆக்கிரமிப்புக்களும் அவற்றின் நோக்கமும்'' நா.யோகேந்திரநாதன் புத்தரின் சிலையை அல்லது படத்தை சேதப்படுத்துவதோ, முறையற்ற விதத்தில் கையாள்வதோ தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட்டு அதற்கான தண்டனையாக இரண்டு லட்ச ரூபா அபராதம் விதிக்கப்படும். அல்லது ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும். இவ்வாறு சிறீலங்கா பாராளுமன்றத்தில் புதிய சட்டமொன்று விரைவில் கொண்டு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எந்தவொரு மதத்தையோ, மதச்சின்னங்களையோ, சேதப்படுத்துதல், அழித்தல் என்பது சம்பந்தப்பட்ட மதத்தவரின் மதச்சுதந்திரத்தையும், மதவழிபாட்டு சுதந்திரத்தையும் மீறும் செயலாக கருதப்படுகின்றது. இப்படியான செயல்கள் மதங்களுக்கு மட்டுமன்றி மனிதர்களுக்கிடையேயும் விரிசல்களையும், விரோதங்களையும் தோற்று…
-
- 3 replies
- 2.1k views
-
-
''கொக்கட்டிச்சோலைகள் இன்னும் தொடர்கின்றன'' தெ.றஞ்சித்குமார்- சிங்கள ஆட்சியளர்கள் எப்போதும் இன வெறிபிடித்த நிலையிலேயே தமழர்களை வதைத்துவருகின்றனர். கொடூரமான முறையில் தமிழர்களின் பிரதேசங்கள் உள்ளிட்ட தமிழர்கள் வாழும் ஏனைய இடங்களிலும் இது தொடர்கிறது. படுகொலைகள், கடத்தல்கள், பாலியல் வன்முறைகளென பலவித்திலும் மக்கள் வாட்டி வதைக்கப்படுகின்றனர். இன அழிப்பின் வரலாறு தொடர்ந்து கொண்டே செல்கிறது. தென் தமிழீழ மாவட்டமான மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கொக்கட்டிச்சோலையில் தமிழ் மக்கள் மீதான படுகொலையும் வரலாற்றில் முக்கியமானது. 1987 இல் கொலை வெறி பிடித்த இனவாதியான ஜெ.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையிலான அரசு திட்டமிட்ட முறையில் 200 இற்கும் மேற்பட்ட அப்பாவிப் தமிழ் மக்களை கொன்றுகுவ…
-
- 1 reply
- 1.3k views
-
-
எம்.பி. நவரத்தினத்தின் முத்திரை ரத்து கோரிக்கை நிராகரிப்பு [புதன்கிழமை, 7 பெப்ரவரி 2007, 01:49 ஈழம்] [காவலூர் கவிதன்] காவலூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.வி.நவரத்தினத்தின் நினைவாக, கனடாவில் அவரது படத்துடன்கூடிய முத்திரையொன்று வெளியிடப்பட்டது. சிறீலங்கா அரசின் வெளிவிவகார அமைச்சின் சர்வதேச பிரச்சாரக்குழு, கனடிய தூதரக தொடர்புகளுடாக, இதை கடுமையாக எதிர்த்ததுடன், இந்த முத்திரை வெளியீட்டை நிராகரித்து, மீளப்பெறுமாறு கோரிக்கை விடுத்தது. இளைஞர்கள் ஆயுதமேந்திப் போராடுவதன் மூலமே சிறீலங்கா இனப் பிரச்சனைக்கு தீர்வொன்று கிடைக்குமென்று கூறியதன் மூலம், இவர் பயங்கரவாதத்திற்கும் ஆயுதப் போராட்டத்திற்கும் ஆதரவு வழங்கியதாகக் கூறிய இந்த பரப்புரையாளர்கள், இந்த முத்திரை…
-
- 1 reply
- 845 views
-
-
ஹவுஸ் ஒஃப் ரெப்ரசன்டேட்டிவ்ஸ்’ என்றழைக்கப்படும் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய சட்டசபையின் 38 உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு, அமெரிக்க அதிபர் ஜோர்ச் டபிள்யூ. புஷ்ஷிடம் கையளிக்கப்பட்டுள்ள கோரிக்கையில், சிறீலங்கா இனப்பிரச்சனைக்கு சமாதானத் தீர்வை எட்டுவதற்கு ஏதுவாக ஒரு சிறப்பு பிரதிநிதியை அமெரிக்க அரசு நியமிக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது. அவர்களது கடிதத்தில்: சிறீலங்காவில் மீண்டும் அதிகரித்து வரும் வன்முறைகள், கொலைகள் தொடர்பாகவும், குறிப்பாக அங்கு தீர்க்கமுடியாத அளவுக்கு அதிகரித்துள்ள கடத்தல் சம்பவங்கள் தொடர்பிலும் நாம் அதிருப்தியடைந்துள்ளோம். சர்வதேச பிரச்சனைகளில் தலைமைத்துவப் பண்பை நிலைநிறுத்திவரும் அமெரிக்காவுக்கு, சிறீலங்காவில் துன்புறும் மக்களின் இன…
-
- 5 replies
- 1.5k views
-
-
கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப பகுதியில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதன்போது பதினான்கு போர் காயமடைந்துள்ளனர். இதனை ஒரு விபத்தெ ன சிங்களத் தரப்புத் தெரிவித்துள்ளது. மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
-
- 13 replies
- 3.4k views
-
-
[செவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2007, 00:42 ஈழம்] [காவலூர் கவிதன்] இரத்தினபுரம், பாஃம் கார்டன் தோட்டப்பகுதியில் அமைந்துள்ள தமிழருக்குச் சொந்தமான 50 வீடுகள் கொண்ட தொகுதியை, கடந்த வெள்ளிக்கிழமை இரவு அப்பகுதிக்கு வந்த சிங்களக் காடையர்கள் அடித்து நொருக்கி தீயிட்டுக் கொழுத்தியதை எதிர்த்து இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை இரவு 8:30 மணியளவில் கைக்குண்டுகள், ஆயுதங்கள் சகிதம் நவநாகரா என்ற அருகிலுள்ள சிங்களக் கிராமத்திலிருந்து அப்பகுதிக்கு வந்த சிங்களக் காடையர்கள், வீட்டுக் கதவுகளை உதைந்து திறந்து, அதற்குள் இருந்த பெறுமதி வாய்ந்த பொருட்களையெல்லாம் கொள்ளையிட்டுள்ளனர். பின்னர், மீதியானவற்றை அடித்து நொருக்கிய பின்னர், மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டுக் கொழுத்தியுள…
-
- 0 replies
- 819 views
-
-
மன்னாரில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் அதிகரிப்பு. கடந்த வெள்ளிக்கிழமை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் வே.விஸ்வலிங்கம் தலைமையில் இடம்பெற்ற மாவட்ட சிறுவர் அபிவிருத்திக்குழு கூட்டத்தின்போது சிறுவர்கள் பாலியல் மற்றும் உடலிலயல் துன்புறுத்தல் தொடர்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மன்னார் மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுவினால் மன்னார் மாவட்ட சிறுவர்கள் மத்தியில் பாலியல் மற்றும் உடலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள், துன்புறுத்தல்கள் அதிகரித்து வருவதாகவும் கடந்த நான்கு மாத காலப்பகுதியில் இவை தொடர்பில் 38 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் பிரதேச செயலர், வைத்திய அதிகாரிகள், கல்வித் திணைக்கள அதிகாரிகள், சிறுவர…
-
- 2 replies
- 2.1k views
-
-
சிறார்களை படையில் சேர்க்கும் மிக மோசமான ஏழு நாடுகளில் இலங்கையும் அடங்குகின்றது பிரான்ஸ் மாநாட்டில் யுனிசெவ் அறிவிப்பு சிறார்களை பலவந்தமாக படையணிகளில் இணைத்துக் கொண்டு மோதல்கள் யுத்த நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபடுத்தும் செயற்பாடுகள் நடைபெறும் 13 நாடுகளை ஐக்கிய நாடுகளுக்கான சிறுவர் நிதியம் (யுனிசெவ்)வரிசைப்படுத்தியுள்
-
- 3 replies
- 1.7k views
-
-
யாழ்ப்பாணத்தில் பெண்கள் மீது சேட்டை புரியும் சிறிலங்காப் படையினர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் கலட்டிச் சந்தி வீதியில் நிலை கொண்டுள்ள சிறிலங்காப் படையினரும் பொலிசாரும் இவ் வீதியால் சென்றுவரும் பெண்கள் மீது வேண்டத்தகாத சேட்டைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதன் காரணமாக இவ்வீதியால் செல்லும் பெண்கள் பலத்த அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் கடந்த இரு வாரங்களாக இந்நடவடிக்கை மிகவும் அதிகரித்துக் காணப்படுகின்றது குறிப்பாக தொழில் நுட்பக் கல்லூரி பல்கலைக்கழகம் மற்றும் திறந்த பல்கலைக்கழகம் தனியார் கல்வி நிலையங்களுக்குச் செல்லும் மாணவிகள் மீது இத்தகைய செயல்பாடுகள் அதிகரித்துக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். சிற…
-
- 1 reply
- 1.8k views
-
-
ஆட்கடத்தல்களில் கருணா கூலிக்குழு - யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு கிழக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மத்தியில் ஆட்கடத்தல் நடவடிக்கைகளை கருணா குழு மேற்கொண்டு வருவதாக யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு அறிவித்துள்ளது அண்மைய இராணுவ நடவடிக்கை காரணமாக அரச கட்டுப்பாட்டு பகுதிகளை நோக்கி இடம்பெயரும் மக்களை கருணா குழு தீவிர சோதனைகளுக்கு உட்படுத்தி வருவதாகவும் பொதுமக்களுடன் இணைந்து விடுதலைப்புலிகள் ஊடுருவுவதை தடுப்பதற்கே இந்த நடவடிக்கை என தெரிவித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது இவ்வாறு கருணா குழுவால் சோதனையிடப்படுபவர்களில் பலர் பின்னர் கடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது சவுக்கடி பகுதியில் வைத்து கருணா குழுவால் கடத்…
-
- 0 replies
- 1.2k views
-
-
கொழும்பில் ஊடகவியலாளர் வெள்ளைவான் காரர்களால் கடத்தல் [செவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2007இ 08:32 ஈழம்][காவலூர் கவிதன்] சுதந்திர ஊடகவியலாளராகப் பணியாற்றிவரும் பிரபல சமூகசேவையாளரும் சமூகநல ஆர்வலருமான எம்.எல்.செனவிரட்ன, நேற்று திங்கட்கிழமை இரவு 9:30 மணியளவில் வெள்ளைவான் காரர்களால் கடத்தப்பட்டுள்ளார். சிறீலங்காவின் தலைநகர் கொழும்பிலும்இ யாழ் மட்டக்களப்பு திருகோணமலை உட்பட பல்வேறு பகுதிகளிலும் தொடரும் கடத்தல்களின் தொடர்ச்சியாக, கொழும்பில் வைத்து செனவிரட்ன கடத்தப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க காலத்தில், அவரது ஆட்சிக்கு மிகவும் ஆதரவாக அரசியல் கட்டுரைகளை வரைந்து வந்த பத்தி எழுத்தாளரான இவர், தற்போதைய மகிந்த ஆட்சியை விமர்சித்து வந்த ஒரு எழுத்தா…
-
- 3 replies
- 1.6k views
-
-
அச்சுறுத்தும் கடற்புலிகள்! -விதுரன் முழு அளவிலான போரில் புலிகள் குதிக்காத நிலையில் இன்று முப்படைகளையும் எதிர்கொள்ளக் கூடிய ஆற்றல் புலிகளுக்குள்ளதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. வடக்கில் இராணுவத்தினர் புலிகளிடம் பல தோல்விகளைச் சந்தித்துள்ள அதேநேரம், கிழக்கில் புலிகள் வசமுள்ள பெரும்பாலான பகுதிகளை படையினர் கைப்பற்றி வருவது பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது. வடக்கு, கிழக்கு தமிழர் தாயகமாயிருந்த போதிலும் கிழக்கில் அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள படைவலுச் சமநிலையிலான மாற்றங்கள், கிழக்கில் புலிகள் மரபு வழிச் சமரிலிருந்து மீண்டும் கெரில்லாப் பாணியிலான போர் முறைக்குள் தள்ளப்பட்டுள்ளார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது. கிழக்கில் தற்போது தொடரும் படை நடவடிக்கைக…
-
- 17 replies
- 6k views
-
-
யுத்த நிறுத்த உடன்படிக்கை மீறல் தொடர்பாக முழு அளவில் கண்காணிக்க முடியாத நிலைமை குழுவின் பேச்சாளர் தோப்ஃபினூர் ஒமர்ஸன் தெரிவிப்பு வடக்கு கிழக்கில் இடம்பெறுகின்ற யுத்த நிறுத்த உடன்படிக்கை மீறல் தொடர்பாக முழு அளவில் அவதானிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தோப்ஃபினூர் ஒமர்ஸன் தெரிவித்தார். கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் தமது பணியில் சரியான முறையில் ஈடுபடுவதற்கு அரசிடமும் புலிகளிடமும் பாதுகாப்பு உத்தரவாதம் கோரியிருந்ததாகவும் தற்பொழுது அந்த உத்தரவாதம் வார்த்தையளவில் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.தற்போøதய நிலைமைகள் தொடர்பாக கேசரிக்கு விளக்கமளித்த குழுவின் பேச்சாளர் மேலும் தெரிவித்ததாவது; யாழ்ப்பாணம், மட்டக்களப…
-
- 5 replies
- 1.5k views
-
-
[05 - February - 2007] [Font Size - A - A - A] 18,19 ஆம் நூற்றாண்டுகளின் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களில், துரோகியையும் தியாகியையும் இனம் பிரித்து அடையாளம் காண்பது எளிதாக இருந்தது. திப்பு - நிசாம் , மருது- தொண்டைமான் என தியாகத்தையும் , துரோகத்தையும் எளிதாக வரையறுக்க முடிந்தது. ஆனால் இந்த எல்லைக்கோடு இருபதாம் நூற்றாண்டில் மங்கத் தொடங்கியது. எதிர்ப்புகளை நசுக்குவதற்குப் பதிலாக அவற்றை நிறுவனமயமாக்குவதன் மூலமாகவே நமத்துப்போகச் செய்துவிட முடியும் என்ற உத்தியை 1857 எழுச்சிக்குப் பின் அமுலாக்கினார்கள் வெள்ளையர்கள். அதாவது துரோகிகளையே தியாகிகளாகச் சித்ததரித்துக் காட்டுவதன் மூலம் அடிமைத்தனத்துக்குள்ளேயே `விடுதலையைக்' காணுழ்படி மக்களை பயிற்றுவிக்க முடியும் என்பதை …
-
- 0 replies
- 1.7k views
-