ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
எம்.பி. நவரத்தினத்தின் முத்திரை ரத்து கோரிக்கை நிராகரிப்பு [புதன்கிழமை, 7 பெப்ரவரி 2007, 01:49 ஈழம்] [காவலூர் கவிதன்] காவலூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.வி.நவரத்தினத்தின் நினைவாக, கனடாவில் அவரது படத்துடன்கூடிய முத்திரையொன்று வெளியிடப்பட்டது. சிறீலங்கா அரசின் வெளிவிவகார அமைச்சின் சர்வதேச பிரச்சாரக்குழு, கனடிய தூதரக தொடர்புகளுடாக, இதை கடுமையாக எதிர்த்ததுடன், இந்த முத்திரை வெளியீட்டை நிராகரித்து, மீளப்பெறுமாறு கோரிக்கை விடுத்தது. இளைஞர்கள் ஆயுதமேந்திப் போராடுவதன் மூலமே சிறீலங்கா இனப் பிரச்சனைக்கு தீர்வொன்று கிடைக்குமென்று கூறியதன் மூலம், இவர் பயங்கரவாதத்திற்கும் ஆயுதப் போராட்டத்திற்கும் ஆதரவு வழங்கியதாகக் கூறிய இந்த பரப்புரையாளர்கள், இந்த முத்திரை…
-
- 1 reply
- 845 views
-
-
ஹவுஸ் ஒஃப் ரெப்ரசன்டேட்டிவ்ஸ்’ என்றழைக்கப்படும் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய சட்டசபையின் 38 உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு, அமெரிக்க அதிபர் ஜோர்ச் டபிள்யூ. புஷ்ஷிடம் கையளிக்கப்பட்டுள்ள கோரிக்கையில், சிறீலங்கா இனப்பிரச்சனைக்கு சமாதானத் தீர்வை எட்டுவதற்கு ஏதுவாக ஒரு சிறப்பு பிரதிநிதியை அமெரிக்க அரசு நியமிக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது. அவர்களது கடிதத்தில்: சிறீலங்காவில் மீண்டும் அதிகரித்து வரும் வன்முறைகள், கொலைகள் தொடர்பாகவும், குறிப்பாக அங்கு தீர்க்கமுடியாத அளவுக்கு அதிகரித்துள்ள கடத்தல் சம்பவங்கள் தொடர்பிலும் நாம் அதிருப்தியடைந்துள்ளோம். சர்வதேச பிரச்சனைகளில் தலைமைத்துவப் பண்பை நிலைநிறுத்திவரும் அமெரிக்காவுக்கு, சிறீலங்காவில் துன்புறும் மக்களின் இன…
-
- 5 replies
- 1.5k views
-
-
[செவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2007, 00:42 ஈழம்] [காவலூர் கவிதன்] இரத்தினபுரம், பாஃம் கார்டன் தோட்டப்பகுதியில் அமைந்துள்ள தமிழருக்குச் சொந்தமான 50 வீடுகள் கொண்ட தொகுதியை, கடந்த வெள்ளிக்கிழமை இரவு அப்பகுதிக்கு வந்த சிங்களக் காடையர்கள் அடித்து நொருக்கி தீயிட்டுக் கொழுத்தியதை எதிர்த்து இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை இரவு 8:30 மணியளவில் கைக்குண்டுகள், ஆயுதங்கள் சகிதம் நவநாகரா என்ற அருகிலுள்ள சிங்களக் கிராமத்திலிருந்து அப்பகுதிக்கு வந்த சிங்களக் காடையர்கள், வீட்டுக் கதவுகளை உதைந்து திறந்து, அதற்குள் இருந்த பெறுமதி வாய்ந்த பொருட்களையெல்லாம் கொள்ளையிட்டுள்ளனர். பின்னர், மீதியானவற்றை அடித்து நொருக்கிய பின்னர், மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டுக் கொழுத்தியுள…
-
- 0 replies
- 819 views
-
-
கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப பகுதியில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதன்போது பதினான்கு போர் காயமடைந்துள்ளனர். இதனை ஒரு விபத்தெ ன சிங்களத் தரப்புத் தெரிவித்துள்ளது. மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
-
- 13 replies
- 3.4k views
-
-
ஆட்கடத்தல்களில் கருணா கூலிக்குழு - யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு கிழக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மத்தியில் ஆட்கடத்தல் நடவடிக்கைகளை கருணா குழு மேற்கொண்டு வருவதாக யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு அறிவித்துள்ளது அண்மைய இராணுவ நடவடிக்கை காரணமாக அரச கட்டுப்பாட்டு பகுதிகளை நோக்கி இடம்பெயரும் மக்களை கருணா குழு தீவிர சோதனைகளுக்கு உட்படுத்தி வருவதாகவும் பொதுமக்களுடன் இணைந்து விடுதலைப்புலிகள் ஊடுருவுவதை தடுப்பதற்கே இந்த நடவடிக்கை என தெரிவித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது இவ்வாறு கருணா குழுவால் சோதனையிடப்படுபவர்களில் பலர் பின்னர் கடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது சவுக்கடி பகுதியில் வைத்து கருணா குழுவால் கடத்…
-
- 0 replies
- 1.2k views
-
-
[05 - February - 2007] [Font Size - A - A - A] 18,19 ஆம் நூற்றாண்டுகளின் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களில், துரோகியையும் தியாகியையும் இனம் பிரித்து அடையாளம் காண்பது எளிதாக இருந்தது. திப்பு - நிசாம் , மருது- தொண்டைமான் என தியாகத்தையும் , துரோகத்தையும் எளிதாக வரையறுக்க முடிந்தது. ஆனால் இந்த எல்லைக்கோடு இருபதாம் நூற்றாண்டில் மங்கத் தொடங்கியது. எதிர்ப்புகளை நசுக்குவதற்குப் பதிலாக அவற்றை நிறுவனமயமாக்குவதன் மூலமாகவே நமத்துப்போகச் செய்துவிட முடியும் என்ற உத்தியை 1857 எழுச்சிக்குப் பின் அமுலாக்கினார்கள் வெள்ளையர்கள். அதாவது துரோகிகளையே தியாகிகளாகச் சித்ததரித்துக் காட்டுவதன் மூலம் அடிமைத்தனத்துக்குள்ளேயே `விடுதலையைக்' காணுழ்படி மக்களை பயிற்றுவிக்க முடியும் என்பதை …
-
- 0 replies
- 1.7k views
-
-
மன்னாரில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் அதிகரிப்பு. கடந்த வெள்ளிக்கிழமை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் வே.விஸ்வலிங்கம் தலைமையில் இடம்பெற்ற மாவட்ட சிறுவர் அபிவிருத்திக்குழு கூட்டத்தின்போது சிறுவர்கள் பாலியல் மற்றும் உடலிலயல் துன்புறுத்தல் தொடர்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மன்னார் மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுவினால் மன்னார் மாவட்ட சிறுவர்கள் மத்தியில் பாலியல் மற்றும் உடலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள், துன்புறுத்தல்கள் அதிகரித்து வருவதாகவும் கடந்த நான்கு மாத காலப்பகுதியில் இவை தொடர்பில் 38 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் பிரதேச செயலர், வைத்திய அதிகாரிகள், கல்வித் திணைக்கள அதிகாரிகள், சிறுவர…
-
- 2 replies
- 2.1k views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வைகோவுடன் சந்திப்பு மூன்று பிரதிநிதிகள் அடங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவினர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக தலைவர் வைகோவைச் சந்தித்து தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடினர். மிகுந்த அக்கறையுடன் தமிழ் பிரதேசங்களின் தற்போதைய மனித அவலங்கள் தொடர்பாகக் கேட்டறிந்துகொண்ட வைகோ, தமிழ்நாட்டு அதிகாரிகளும், மத்திய அரசும், ஈழத்தமிழர்களின் துன்பங்கள் தீர்ந்து உரிய விடிவு கிடைக்க விரைவில் உரிய நடவடிக்கைகளை எடுப்பார்களென தான் நம்புவதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. -புதினம்
-
- 15 replies
- 3.1k views
-
-
கொழும்பில் ஊடகவியலாளர் வெள்ளைவான் காரர்களால் கடத்தல் [செவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2007இ 08:32 ஈழம்][காவலூர் கவிதன்] சுதந்திர ஊடகவியலாளராகப் பணியாற்றிவரும் பிரபல சமூகசேவையாளரும் சமூகநல ஆர்வலருமான எம்.எல்.செனவிரட்ன, நேற்று திங்கட்கிழமை இரவு 9:30 மணியளவில் வெள்ளைவான் காரர்களால் கடத்தப்பட்டுள்ளார். சிறீலங்காவின் தலைநகர் கொழும்பிலும்இ யாழ் மட்டக்களப்பு திருகோணமலை உட்பட பல்வேறு பகுதிகளிலும் தொடரும் கடத்தல்களின் தொடர்ச்சியாக, கொழும்பில் வைத்து செனவிரட்ன கடத்தப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க காலத்தில், அவரது ஆட்சிக்கு மிகவும் ஆதரவாக அரசியல் கட்டுரைகளை வரைந்து வந்த பத்தி எழுத்தாளரான இவர், தற்போதைய மகிந்த ஆட்சியை விமர்சித்து வந்த ஒரு எழுத்தா…
-
- 3 replies
- 1.6k views
-
-
யுத்த நிறுத்த உடன்படிக்கை மீறல் தொடர்பாக முழு அளவில் கண்காணிக்க முடியாத நிலைமை குழுவின் பேச்சாளர் தோப்ஃபினூர் ஒமர்ஸன் தெரிவிப்பு வடக்கு கிழக்கில் இடம்பெறுகின்ற யுத்த நிறுத்த உடன்படிக்கை மீறல் தொடர்பாக முழு அளவில் அவதானிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தோப்ஃபினூர் ஒமர்ஸன் தெரிவித்தார். கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் தமது பணியில் சரியான முறையில் ஈடுபடுவதற்கு அரசிடமும் புலிகளிடமும் பாதுகாப்பு உத்தரவாதம் கோரியிருந்ததாகவும் தற்பொழுது அந்த உத்தரவாதம் வார்த்தையளவில் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.தற்போøதய நிலைமைகள் தொடர்பாக கேசரிக்கு விளக்கமளித்த குழுவின் பேச்சாளர் மேலும் தெரிவித்ததாவது; யாழ்ப்பாணம், மட்டக்களப…
-
- 5 replies
- 1.5k views
-
-
சிறார்களை படையில் சேர்க்கும் மிக மோசமான ஏழு நாடுகளில் இலங்கையும் அடங்குகின்றது பிரான்ஸ் மாநாட்டில் யுனிசெவ் அறிவிப்பு சிறார்களை பலவந்தமாக படையணிகளில் இணைத்துக் கொண்டு மோதல்கள் யுத்த நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபடுத்தும் செயற்பாடுகள் நடைபெறும் 13 நாடுகளை ஐக்கிய நாடுகளுக்கான சிறுவர் நிதியம் (யுனிசெவ்)வரிசைப்படுத்தியுள்
-
- 3 replies
- 1.7k views
-
-
''கொக்கட்டிச்சோலைகள் இன்னும் தொடர்கின்றன'' தெ.றஞ்சித்குமார்- சிங்கள ஆட்சியளர்கள் எப்போதும் இன வெறிபிடித்த நிலையிலேயே தமழர்களை வதைத்துவருகின்றனர். கொடூரமான முறையில் தமிழர்களின் பிரதேசங்கள் உள்ளிட்ட தமிழர்கள் வாழும் ஏனைய இடங்களிலும் இது தொடர்கிறது. படுகொலைகள், கடத்தல்கள், பாலியல் வன்முறைகளென பலவித்திலும் மக்கள் வாட்டி வதைக்கப்படுகின்றனர். இன அழிப்பின் வரலாறு தொடர்ந்து கொண்டே செல்கிறது. தென் தமிழீழ மாவட்டமான மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கொக்கட்டிச்சோலையில் தமிழ் மக்கள் மீதான படுகொலையும் வரலாற்றில் முக்கியமானது. 1987 இல் கொலை வெறி பிடித்த இனவாதியான ஜெ.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையிலான அரசு திட்டமிட்ட முறையில் 200 இற்கும் மேற்பட்ட அப்பாவிப் தமிழ் மக்களை கொன்றுகுவ…
-
- 1 reply
- 1.3k views
-
-
''ஆக்கிரமிப்புக்களும் அவற்றின் நோக்கமும்'' நா.யோகேந்திரநாதன் புத்தரின் சிலையை அல்லது படத்தை சேதப்படுத்துவதோ, முறையற்ற விதத்தில் கையாள்வதோ தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட்டு அதற்கான தண்டனையாக இரண்டு லட்ச ரூபா அபராதம் விதிக்கப்படும். அல்லது ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும். இவ்வாறு சிறீலங்கா பாராளுமன்றத்தில் புதிய சட்டமொன்று விரைவில் கொண்டு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எந்தவொரு மதத்தையோ, மதச்சின்னங்களையோ, சேதப்படுத்துதல், அழித்தல் என்பது சம்பந்தப்பட்ட மதத்தவரின் மதச்சுதந்திரத்தையும், மதவழிபாட்டு சுதந்திரத்தையும் மீறும் செயலாக கருதப்படுகின்றது. இப்படியான செயல்கள் மதங்களுக்கு மட்டுமன்றி மனிதர்களுக்கிடையேயும் விரிசல்களையும், விரோதங்களையும் தோற்று…
-
- 3 replies
- 2.1k views
-
-
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி அபகரிப்பு பொலிஸில் முறைப்பாடு யாழ். பல்கலைக்கழகத்தில் சுதந்திரதினத்தை முன்னிட்டு காலை ஏற்றப்பட்ட இலங்கை தேசியக் கொடி இனந்தெரியாதோரால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது. இது பற்றி பதில் துணை வேந்தர், யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. இலங்கையின் 59 ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் திங்கட்கிழமை காலை பதில் துணைவேந்தரால் தேசிய கொடி ஏற்றப்பட்டது
-
- 45 replies
- 6k views
-
-
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் எதிர்காலம் இன்று தீர்மானிக்கப்படும். [செவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2007, 04:14 ஈழம்] [க.திருக்குமார்] இன்று கூடவுள்ள பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சிறீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நிலை என்ன என்பது தொடர்பாக ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவிப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்றத் தலைவர் ஜே. எம் லொக்குபண்டாரா தலைமையில் கூடவுள்ள பாராளுமன்றத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக விசேட அறிக்கை ஒன்றை ரணில் வெளியிட உள்ளார். அதில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தற்போதைய நிலையை அவர் விளக்குவார் என ஐ.தே.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. …
-
- 0 replies
- 765 views
-
-
இரத்தினபுரம் தோட்டத்தொழிலாள்ர்களைத் தாக்கிய கும்பல் தேயிலைத்தோட்டங்கள் யாவும் சிங்களவருக்கு சொந்தமானதாக கூறியுள்ளதே! எங்கே இந்த எலும்பு தின்னும் அமைச்சர்கள்.முன்பு விரட்டியபோது வன்னியில் குடிவைத்தோம்.அவர்கள் தான் இன்று பசுமைப்புரட்சி செய்கிறார்கள்.நினைவு கூரப்படவேண்டியதொன்று;இப்போ இருப்பவர்களை எங்கே போகச்சொல்கிறார்கள்.முதலில் பாதையை திறந்து விடுங்கள். யாழ் வாழ் தமிழர்களை அழித்தீர்கள் நாட்டைவிட்டு துரத்தினீர்கள்.இப்போ இந்தியவம்சாவழியாகையால் இந்தியாவுக்கு போகச்சொல்கிறீர்களா?விளிம்பில் நிக்கிறீர்கள் உங்களை யாரும் காப்பாற்றபோவதில்லை.மீண்டும் புத்தபிரான் தோன்றி சாவறியாத வீட்டில் கடுகு வேண்டி வரச்சொல்லப்போகிரார்.
-
- 1 reply
- 1.1k views
-
-
யாழ் பல்கலைக் கழக வளாகம் சுற்றிவளைப்பு [செவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2007, 00:43 ஈழம்] [காவலூர் சங்கீதன்] யாழ். திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ் பல்கலைக் கழக வளாகத்தை, 500 க்கும் அதிகமான இராணுவத்தினர் இன்று திங்கட்கிழமை சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக வளாகத்தினுள் நிறுத்தப்பட்டிருந்த சிறீலங்கா அரசின் சிங்கக் கொடியொன்று அங்கு வந்த சிலரால் அகற்றப்பட்டதாகவும், அந்த சிங்கக் கொடியைக் கண்டுபிடிக்கும்வரை தமது தேடுதல் தொடருமென்றும் இராணுவத்தினர் அடாவடித்தனம் பண்ணியுள்ளனர். சிறீலங்கா சுதந்திர தினத்தை முன்னிட்டு, பல்கலைக் கழக வளாகத்தில் சிங்கக் கொடியை ஏற்றும்படி இராணுவத்தினர் நிர்ப்பந்தித்ததால், தற்போது தற்காலிக பிரதி பொறுப்பாளராக உள்ள …
-
- 1 reply
- 879 views
-
-
மதவாச்சி பிரதான வீதியில் இரு மணிநேரம் கடும் மோதல் பன்னவெட்டுவான் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை விடுதலைப் புலிகளுக்கும் பொலிஸாருக்குமிடையில் சுமார் இரு மணிநேரம் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. நேற்றுக் காலை 8.30 மணிக்கு ஆரம்பமான இருதரப்பினருக்குமிடையிலான மோதல் சம்பவம் காலை 10.30 மணி வரை நீடித்துள்ளது. இந்த மோதல் சம்பவத்தில் விடுதலைப் புலிகள் தரப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அவரின் சடலத்தை தமது கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு அவர்கள் எடுத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவ இடத்திற்கு மேலதிக படையினர் வரவழைக்கப்பட்டு தேடுதல் மேற்கொண்ட போது ரி-56 ரக துப்பாக்கியொன்றும் அதற்குரிய மகஷின்களும் மீட்கப்பட்டுள்ளதாக முருங்கன் பொலிஸ்…
-
- 0 replies
- 1.1k views
-
-
* வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு விடுதலைப் புலிகளுக்கு நிதி கிடைக்கும் வழிவகைகளை தடுத்து நிறுத்துவது குறித்து இலங்கை அரசாங்கம் உறுதியாகவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார். வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு கொழும்பு திரும்பும் வழியில் டோஹா சர்வதேச விமான நிலையத்தில் கல்வ் டைம்ஸிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஜேர்மனி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்களுடன் தீவிரமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாகவும் இலங்கையில் தேசமொன்றை ஏற்படுத்துவதற்காக வன் முறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிரான யுத்தத்திற்கு அவர்கள் தொடர்ந்தும் ஆதரவை உறுதியளித்ததாகவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை பயங்கரவாதத்திற…
-
- 1 reply
- 1.6k views
-
-
நேற்று அதிகாலை 2 மணியளவில் வவுனியா உயிலங்குளம் இராணுவமுகாம் மீது எறிகணைத்தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதாக சிறீலங்கா பாதுகாப்புமையம் தகவல் வெளியிட்டுள்ளது. இத்தாக்குதலின்போது ஒருஇராணுவத்தினர் கொல்லப்பட்டும் மூவர்காயங்களுக்கும் உள்ளாகியுள்ளதாக அறியமுடிகிறது. காயமடைந்த இராணுவத்தினரை அநுராதபுர வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மேலும் அறியமுடிகிறது. thanks: www.pathivu.com
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணத்தில் பெண்கள் மீது சேட்டை புரியும் சிறிலங்காப் படையினர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் கலட்டிச் சந்தி வீதியில் நிலை கொண்டுள்ள சிறிலங்காப் படையினரும் பொலிசாரும் இவ் வீதியால் சென்றுவரும் பெண்கள் மீது வேண்டத்தகாத சேட்டைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதன் காரணமாக இவ்வீதியால் செல்லும் பெண்கள் பலத்த அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் கடந்த இரு வாரங்களாக இந்நடவடிக்கை மிகவும் அதிகரித்துக் காணப்படுகின்றது குறிப்பாக தொழில் நுட்பக் கல்லூரி பல்கலைக்கழகம் மற்றும் திறந்த பல்கலைக்கழகம் தனியார் கல்வி நிலையங்களுக்குச் செல்லும் மாணவிகள் மீது இத்தகைய செயல்பாடுகள் அதிகரித்துக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். சிற…
-
- 1 reply
- 1.8k views
-
-
பொதுமக்கள் எதிர்நோக்கும் துயரங்கள் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இலங்கை அரசாங்கத்திற்கு கவலை தெரியப்படுத்தியுள்ளார். இலங்கையில் மீண்டும் ஆரம்பித்துள்ள மோதல்களினால் பொதுமக்கள் அனுபவித்து வரும் துயரங்கள் குறித்த தமது அவதானத்தை பிரான்ஸ் ஜனாதிபதி ஜக் சிராக் இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார். இலங்கையின் 59 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஜவிற்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துத் செய்தியில், மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள மோதல்களினால் மக்கள் அனுபவித்து வரும் துயரங்கள் குறித்து பிரான்ஸ் அரசின் அவதானத்தை வெளியிட்டுள்ளதோடு இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்று காணப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடைய…
-
- 0 replies
- 715 views
-
-
மேலும் 10 ஐ.தே.க உறுப்பினர்கள் அரசில் இணைகிறார்கள். சிறீலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கவில் இருந்து மேலும் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசில் இந்த வாரம் இணைந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் கூடும் போது ஐ.தே.கவின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மதும பண்டாரா, ஜீ. ஹரிசன், சந்திரானி பண்டாரா, சம்பிக்கா ஆகிய நான்கு பேரும் அரசில் இணைந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்கள் சிறீலங்கவின் அரச அதிபர் மகிந்த ராஜபக்சாவை ஏற்கனவே சந்தித்து அரசில் இணைந்து கொள்வது தொடர்பாக ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளார்கள் எனவும் மேலும் 6 ஐ.தே.க உறுப்பினர்கள் வாரஇறுதியில் இ…
-
- 2 replies
- 994 views
-
-
ஆயுத உற்பத்தி நிலையம் வலியத்த, அகுல்மருவ பிரதேசத்தில் சிக்கியது! நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆயுதங்களை உற்பத்தி செய்துவந்த தொழிற்சாலை ஒன்று வலியத்த, அகுல்மருவ பிரதேசத்தில் நேற்று பொலிஸாரிடம் சிக்கியது. இப்பகுதியைத் திடீரென சுற்றிவளைத்த வலியத்த பொலிஸார், இந்த ஆயுத உற்பத்தி நிலையத்தில் இருந்து பேனா வடிவத்திலான சிறிய ரக கைத்துப்பாகி ஒன்றையும் அதற்குப் பயன்படுத்தும் தோட்டாக்கள் மற்றும் ஆயுத உற்பத்திக்கான இயந்திரங்கள் என்பவற்றையும் கைப்பற்றினர் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிலையத்தில் இருந்து 40 சிறியரக கைத்துப்பாக்கிகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய…
-
- 0 replies
- 1.3k views
-
-
நாட்டின் சில பகுதிகளில் சுழற்காற்று அபாயம்!! கிழக்கு மாகாணம், மலைநாட்டின் கிழக்குப் பகுதி, காலி, மாத்தறை போன்ற பகுதிகளில் இன்று ரொனேற்றா சுழற்காற்றின் தாக்கம்ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் மாத்தளைப் பகுதியில் ரொனேற்றா சுழற்காற்று வீசியதில் மாத்தளை பஸ் நிலையப் பகுதியும் அதனை அண்டிய பகுதிகளும் சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது. -Sudaroli-
-
- 0 replies
- 1.5k views
-