ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
விடுதலைப் புலிகளின் சர்வதேச பேச்சாளராக அடேல்? அண்மையில் காலமான விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம் புலிகளின் சர்வதேச பேச்சாளராக நியமிக்கப்படவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக இந்தியப் பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது. அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அரசாங்க தரப்பிலிருந்து விடுதலைப்புலிகள் கடுமையான சவால்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், சர்வதேச சமூகத்திற்கு புலிகளின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் பணியை அடேல் சிறப்பாக மேற்கொள்வாரென புலிகள் நம்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. தமிழ் மக்களின் போராட்டத்துடனும் தமிழீழ விடுதலைப்புலிகளுடனும் நீண்டகால தொடர்புவைத்துள்ள அடேல், தமிழீழ விடுதலைப்புலிகள் …
-
- 13 replies
- 3.9k views
-
-
லக்கிலேன்ட் தோட்டத்தில் பெரும்பான்மை இனத்தவர்கள் அட்டகாசம் குடியிருப்புகள் அடித்து நொறுக்கப்பட்டன, தொழிலாளர்கள் விரட்டியடிப்பு. இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள நிவித்திகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்கிலேன்ட் தனியார் தோட்டத்திற்குள் புகுந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புக்களை அடித்து நொறுக்கி சேதமாக்கியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம் பெற்ற இந்த சம்பவத்தினால் தோட்டத்தொழிலாளர்களின் ஆறு குடியிருப்புகள் முற்றாக சேதமடைந்திருப்பதாகவும் இதனால் பல இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தோட்ட நிர்வாகத்தின் உதவியுடனேயே இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது, சம்பள உயர்வு கோரி தோ…
-
- 1 reply
- 1.1k views
-
-
கடல்கோளினால் பெரிதும் சேதமடைந்துள்ள காலி விளையாட்டரங்கை புனரமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து காலிப் பிரதேச மக்கள் கேள்வி எழுப்பியதையடுத்து, இப்பிரச்சினை தொடர்பாக உயர் மட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டரங்கை புனரமைப்பதற்கு அவுஸ்திரேலியா 800 இலட்சம் ரூபாவை வழங்கியிருந்த போதிலும், இந்தப்பணம் புனரமைப்புப் பணிகளுக்கு செலவிடப்படவில்லை என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலியாவில் இருந்து வந்த இரு அதிகாரிகள் இந்த வேலைகள் நடைபெறாதது குறித்து ஆச்சரியப்பட்டதுடன், இந்தப் பணத்துக்கு என்ன நடந்தது எனவும் கேட்டுள்ளனர். இது தொடர்பாக காலி கச்சேரியில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்திலும் இப்பிரச்சினை முன்வைக்கப்பட்ட போது விளையாட்டரங்கின் பொறு…
-
- 0 replies
- 641 views
-
-
அமைச்சரவை மாற்றம் இம்மாத இறுதிக்குள் இடம்பெறுமென தெரிவித்த அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே 52 அமைச்சரவை அமைச்சர்களும், 52 இராஜாங்க அமைச்சர்களும் அங்கம் வகிப்பரெனவும் தெரிவித்தார். இதேவேளை ஐ.தே.க. மற்றும் மு.கா. பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்தால் மாத்திரமே அமைச்சரவை மாற்றம் இடம்பெறுமென அமைச்சர் டி.எம்.ஜயரட்ண தெரிவித்தார். அமைச்சர் ஜெயராஜ் இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும். இதில் 52 அமைச்சர்களும், 52 இராஜாங்க அமைச்சர்களும் இடம்பெறுவர். இதில் ஐ.தே.க.விலிருந்து அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் முஸ்லிம் காங்கிரஸிற்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும். இதேவேளை 2003 ஆம் ஆண்டு எனக்கு ம…
-
- 0 replies
- 538 views
-
-
வவுனியாவில் பொலிஸார் மீது தாக்குதல்! ஒருவர் பலி. வவுனியா குழுமாட்டுச் சந்திப்பகுதி வவுனியா-மன்னார் வீதியில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியொன்றில் இருந்த பொலிஸார் மீது நேற்று மாலை 6:30மணியளவில் இனந்தெரியாதோர் நடத்திய கைத்துப்பாக்கித் தாக்குதலின் போது பொலிஸ்கான்ஸ்ரபிள் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மற்றொருவர் காயமடைந்துள்ளார். சம்பவத்தின் போது காயமடைந்த பொலிஸ்கான்ஸ்ரபிள் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. -Sankathi-
-
- 0 replies
- 662 views
-
-
சிறார் படைச் சேர்ப்பில் துணை இராணுவக் குழுவினருடன் அரசு இணைந்து செயற்படுகின்றது: மனித உரிமைகள் அமைப்பு. சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவினர் சிறார்களை தமது படையில் சேர்ப்பதனை ஊக்கிவிப்பதன் மூலம் சிறிலங்கா அரசு சர்வதேச விதிகளை மீறியுள்ளதாக அமெரிக்கா நியூயோர்க்கை தளமாகக்கொண்டு இயங்கும் கியூமன் றைட்ஸ் வோட்ச் எனப்படும் மனித உரிமைகள் அமைப்பு சிறிலங்கா அரசை சாடியுள்ளது. இந்த அமைப்பு தனது 100 பக்கங்களை கொண்ட அறிக்கையை எதிர்வரும் புதன்கிழமை (24.01.07) வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கருணா குழுவினரால் கடத்திச் செல்லப்படும் சிறார்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் ப…
-
- 0 replies
- 526 views
-
-
வடக்கு, கிழக்கில் தமிழர் தாயகத்தில் ஒரு விடுதலைப் போராட்டம் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது. தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை பெரும் சிக்கலாக விஸ்வரூபம் எடுத்து இலங்கைத் தீவையே தனது வன் முறைத் தீயால் சுட்டெரித்துக் கொண்டிருக்கின்றது. உரிமை வேண்டி கௌரவ வாழ்வு வேண்டி நீதியும் நியாயமும் கோரி சுதந்திரம் கேட்டு தமிழர்கள் நடத்தும் போராட்டம் ஒரு தீர்க்கமான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. சுதந்திர வேள்வியில் தகித்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழரின் உரிமைப் போராட்டத்தின் சூட்டை தகிப்பை சகிக்க முடியாது தடுமாறுகின்றது தென்னிலங்கைப் பேரினவாதம். புறச் சக்திகள், வெளிநாடுகள் போன்ற எவற்றினதும் ஆதரவின்றித் தனித்துத் தன்னந் தனியாக இந்தப் போராட் டத்தை ஈழத்தமிழர் தாயகம் முன்னெடுக்…
-
- 0 replies
- 864 views
-
-
தென் மாகாணத்தில் விளையாட்டுத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு, புதிய நவீன விளையாட்டு அரங்குகளை அமைப்பதற்கு, இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனம் 1.9 மில்லியன் ரூபாவை அம்பாந்தோட்டை மாவட்ட விளையாட்டுச் சங்கத்துக்கு அன்பளிப்புச் செய்துள்ளது. "அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள தங்காலைப் பகுதியிலுள்ள மகிந்த ராஜபக்ஷ விளையாட்டு அரங்கை புனரமைப்புச் செய்வதே எமது முக்கிய குறிக்கோள் என்று, ஆசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பிரதித் தலைவரும், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் நிர்வாகக் குழுத் தலைவருமான மணிலால் பெர்னாண்டோ தெரிவித்தார். அவர் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில்; "மேற்படி விளையாட்டு அரங்கை சர்வதேச தரத்துக்கு உயர்த்துவதற்கான நடவடிக்கைகளில் தற்போது ஈடுபட்டுள்ளோம். இந்த விளையாட்ட…
-
- 1 reply
- 645 views
-
-
[21 - January - 2007] [Font Size - A - A - A] -யாழின்மைந்தன்- 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் திகதி யாழ். குடாநாட்டில் ஏற்பட்ட மோதலை அடுத்து அங்குள்ள சுமார் 6 இலட்சம் மக்களும் இரும்புப் பிடிக்குள் இறுக்கப்பட்டு அவர்களின் அடிப்படைச் சுதந்திரங்கள் முற்றாக மறுக்கப்பட்டுள்ளன. அரசியல், இராணுவ, பொருளாதார நலன்களுக்காக யாழ்ப்பாண மக்கள் திறந்த வெளிச்சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டிருக்கின்றார்க
-
- 0 replies
- 934 views
-
-
பருத்தித்துறையை நோக்கி படையினர் எறிகணை வீச்சு: தாய் பலி- 2 பிள்ளைகள் படுகாயம் சிறிலங்காப் படையினரின் பலாலி படைத்தளத்தில் இருந்து வடமராட்சி வடக்குப் பகுதியை நோக்கி கண்மூடித்தனமாக நடத்திய எறிகணை வீச்சில் 34 வயதுடைய இரு பிள்ளைகளின் தாய் சம்பவ இடத்தில் கொல்லப்பட்டுள்ளதுடன் அவரது இரு பிள்ளைகளும் படுகாயமடைந்துள்ளனர். விடுதலைப் புலிகளின் கடற்புலிகளுக்கும் சிறிலங்கா படையினருக்கும் பருத்தித்துறை துறைமுகப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கடுமையான மோதலை தொடர்ந்து சிறிலங்காப் படையினர் கண்மூடித்தனமாக எறிகணை வீச்சுக்களை நடத்தினர். எறிகணையின் சிதறல்கள் அல்வாய் பாடசாலை வளாகப்பகுதியை தாக்கியதால் 34 வயதுடைய கிறேசியன் பாணுமதி என்ற இரு பிள்ளைகளின் தாயார் கொல்லபட்…
-
- 0 replies
- 849 views
-
-
வாகரை கைப்பற்றலை மகிழ்வுடன் கொண்டாடிய மகிந்த வாகரையை கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்கா அரச படைகள் கைப்பற்றியதை அறிந்ததும் படை அதிகாரிகளை பாராட்டிய அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, தனது மகிழ்ச்சியையும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற தேசிய அமைப்புக்களின் ஒருங்கிணைந்த குழுவுடனான சந்திப்பின் போதே மகிந்த வாகரை வெற்றியை கொண்டாடினார். இது தொடர்பாக அங்கு அவர் கருத்துக் கூறுகையில், கிழக்கு முழுவதும் மிக விரைவில் விடுவிக்கப்படும் எனவும் அரசின் பயங்கரவாதத்திற்கான எதிரான போரை (இதென்ன அமெரிக் சொல்லிக் கொடுத்த சொல்லோ.. உலகில் உள்ள பயங்கரவாதிகள் எல்லாம் ஒருங்கிணைந்து இந்த அமெரிக்கப் பயங்கரவாததையும் அதன் எடுபிடி அரசுகளையும் எதிர்த்துப் போர…
-
- 1 reply
- 1.1k views
-
-
[21 - January - 2007] [Font Size - A - A - A] மட்டக்களப்பு வாகரையை நேற்று முன்தினம் வெள்ளிக் கிழமை கைப்பற்றிய படை யினர் நேற்று கதிரவெளி மற் றும் வெருகல் பகுதிகளை கைப்பற்றியதன் மூலம், திருகோணமலைக்கும் மட்டக் களப்புக்கும் இடையிலான `ஏ-15' தரைவழிப் பாதை திறக்கப் பட்டுள்ளதாக படைத்தரப்பு அறிவித்துள்ளது. திருகோணமலை- மட்டக் களப்பு வீதியில் விடுதலைப் புலிகள் வசம் எஞ்சியிருந்த கதிரவெளி மற்றும் வெருகல் பகுதியையும் படையினர் நேற்று பிற்பகல் கைப்பற்றியதன் மூலம், இந்தப் பிரதேசங்களில் நிலை கொண்டிருந்த விடுதலைப்புலிகள் கதிரவெளி யின் மேற்குப் பக்கமாகவும் மாவிலாறின் தெற்குப் பக்கமாகவும் பின்வாங்கிச் சென்றதாகவும் படைத்தரப்பு நேற்றிரவு தெரிவித்தது. கதிரவெளி மற்றும் வெருகல் பக…
-
- 3 replies
- 1.9k views
-
-
வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் வெறும் பார்வையாளர்களாக இருக்க முடியாது. பங்காளிகளாக இருக்க வேண்டும்: மா.க.ஈழவேந்தன் [ஞாயிற்றுக்கிழமை, 21 சனவரி 2007, 18:53 ஈழம்] [புதினம் நிருபர்] இந்தியாவுடன் செய்துகொண்ட இருநாட்டு ஒப்பந்தத்தையே 19 ஆண்டு முடிவில் தூக்கியெறிய முடியும் என்றால், எதனை நம்பி சிங்கள அரசுடன் நாங்கள் இனி ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும்? என்ற கேள்வியையே பதிலாக்கினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தன். அண்மையில் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் அங்கிருந்து வெளிவரும் 'தமிழ்முரசு' நாளேட்டிடம் பேசும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள், அதாவது வடக்கு - கி…
-
- 0 replies
- 925 views
-
-
யாழ். குடாநாட்டில் அச்சுத்தாள் தட்டுப்பாட்டால் குறைந்த எண்ணிக்கையிலான பிரதிகளையே அச்சிடவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு அங்குள்ள பத்திரிகை நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. இந்த நிலைமையிலும் விற்பனை நிலையமொன்றில் பொதுமக்கள் வாசிப்பதற்காக பத்திரிகைகள் ஒட்டி விடப்பட்டிருப்பதையும் மக்கள் வாசித்துக் கொண்டிருப்பதையும் இங்கு காண்கிறீர்கள். ... விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட குடாநாட்டு `தினசரிகள்' அபகரிப்பு யாழ்.குடாநாட்டிலிருந்து வெளியாகும் தினசரிப் பத்திரிகைகள், நேற்று சனிக்கிழமை காலை விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட போது இனந்தெரியாத சிலரால் அவை அபகரித்துச் செல்லப்பட்டுள்ளன. யாழ்.இந்துக் கல்லூரிக்கு அருகிலேயே நேற்று அதிகாலை 5.30 மணிக்கு இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ள…
-
- 0 replies
- 1k views
-
-
காங்கேசன்துறைக்கு செல்ல இருந்த படைகளிற்கான வழங்கல்களை தடுக்க முயற்சி? http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20990
-
- 78 replies
- 17.1k views
-
-
http://www.tamilnaatham.com/interviews20070119.html புலிகள் இன்னும் 3. 3 மாதங்களினல் சிங்கள படைகளிற்கெதிராக பாரிய பாய்ச்சலை நடாத்துவார்கள்...கஸ்பர்..முழக்
-
- 3 replies
- 3k views
-
-
எதிர்வரும் வாரத்தில் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற உள்ளதாக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தொப்பினூர் ஒமர்சன் தெரியவித்துள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த பேச்சுவார்த்தைகளில் இரண்டு தரப்பிலும் உயர் மட்டத்தினர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரியவருகின்றது. இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் இரண்டு கண்காணிப்பாளர்களை அனுப்பியுள்ளதாகவும், மேலும் இரண்டு கண்காணிப்பாளர்கள் திங்கட் கிழமை அங்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும், அதேவேளை வாகரை பிரதேசத்தில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்குமாறு பாதுகா…
-
- 4 replies
- 1.5k views
-
-
இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும். இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும். இவ்வாறு தமிழக ஆளுநர் பர்னாலா தெரிவித்துள்ளார். தமிழக சட்டப் பேரவையின் இவ்வாண்டுக்கான அமர்வை நேற்று ஆரம்பித்து வைத்துப் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது: அண்மைக் காலத்தில் இலங்கையில் வாழும் தமிழர்கள் தங்கள் உயிருக்கும் உடைமைக்கும் உத்தரவாதம் இன்றிச் சந்தித்துவரும் துயரங்கள் குறித்து இந்த மாநில அரசு ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கும் பிரதமருக்கும் தமிழக முதல்வர் கருணாநிதி எழுதியுள்ள கடிதங்கள், அக்கடிதங்களுக்கு அவர்கள் அளித்த பதில்க…
-
- 0 replies
- 902 views
-
-
வாகரையிலிருந்து இடம்பெயரும் மக்கள் மீது சிறிலங்காப் படையினர் கெடுபிடி - மக்கள் விசனம். வாகரை நகரப் பகுதியிலிருந்து சிறிலங்காப் படையினரின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையினால் ஆயிரக்கணக்கான மக்கள் பலத்த சோதனைக் கெடுபிடிக்களுக்கு பின்னரே பயணத்தைத் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் அகதிகள் பெரும் இடைஞ்சல்களுக்கும் சிரமங்களுக்கும் ஆளாகிவருகின்றனர். அகதிகளுடன் சேர்ந்து விடுதலைப் புலிகளும் நகருக்குள் வரக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டாலுங்கூட, இது ஏற்கனவே நொந்து போனவர்களை மேலும் வேதனைக்கு ஆளாக்குவதாக மக்கள் கவலை தெரிவித்ததாக சர்வதேச செய்தி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. பனையால் விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பது போல, படையி…
-
- 1 reply
- 872 views
-
-
அலரி மாளிகையில் பொங்கல் விழா - டக்ளஸ், தொண்டமான், சந்திரசேகரன் ஆகியோர் பங்கேற்றனர். அலரி மாளிகையில் தைப்பொங்கல் நிகழ்வு நேற்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. இராமகிருஸ்ண மிஷன் சுவாமிகள் ஆத்ம கனானந்த மகராஜ் இந்து சமய வழி பாட்டை நடத்தினார். அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகம் தொண்டமான், பி.சந்திரசேக ரன், அரசில் இணைந்துள்ள தமிழ்க் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத் மற்றும் ஊடக நிறுவனத் தலைவர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர். -Uthayan-
-
- 1 reply
- 1.3k views
-
-
திருநெல்வேலியில் திருட்டுக் கோஷ்டியின் சூட்டுக்கு ஆசிரியர் உயிரிழப்பு. திருநெல்வேலி கிழக்கு பூதவராயர் வீதியில் நேற்று நள்ளிரவு 11 மணியளவில் திருட்டுக் கோஷ்டியின் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்தார். அதேயிடத்தைச் சேர்ந்தவரும் புத்தூர் சோமாஸ்கந்தக் கல்லூரி ஆசிரியருமான மகாலிங்கம் விக்னேஸ்வரன்(வயது 40) என்பவரே உயிரிழந்தவராவார். அவரது வீட்டில் திருட முயன்ற திருடர்களை அயலிலுள்ளவர்கள் சேர்ந்து கலைக்க முயன்ற சமயம் இவரைச் சுட்டு விட்டுத் தப்பிவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. -Uthayan-
-
- 0 replies
- 908 views
-
-
கருணா கூலிக்குழுவால் வாகரையில் இருந்து இடம்பெயர்ந்த இளைஞர்கள் கடத்தல். வாகரை கண்ணன்கிராமத்தில் இருந்து இடம்பெயர்ந்த வாழைச்சேனைப்பகுதிக்கு சென்ற இரு இளைஞர்கள் கருணா கூலி இராணுவத் துணைக்குழுக்களால் நேற்று சனிக்கிழமை மதியம் 2.30 மணியளவில் கடத்தப்பட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை 3 இடம்பெயர்ந்த இளைஞர்கள் இராணுவத்துணைக்கூலிக் குழுவான கருணா குழுவால் கடத்தப்பட்டுள்ளனர். இதேவேளை வாகரைப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து சென்ற 4700 பேர்களில் 1200 பொதுமக்களே கட்டுமுறிவு ஊடாக சிங்கபுர பகுதிக்கு சென்றுள்ளார்கள் ஏனையவர்கள் மாங்கேணி கஐவத்தை பகுதிகளிலும் மற்றும் தற்காலிக இடங்களிலும் தங்கியுள்ளார்கள். எனினும் பெருமளவிலான ஆட்கடத்தல்கள் கஐவத்தை சோதனைச்சாவடி முன்னரங்க நிலைகளை கடத…
-
- 0 replies
- 746 views
-
-
யாழ் அதிபர் - போர் நிறுத்த கண்காணிப்பு குழு சந்தித்து பேச்சு. யாழ் மாவட்ட அரச அதிபர் கணேஷ் - யாழ் மாவட்டத்திற்கான போர் நிறுத்த கண்காணிப்பாளர்கள் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். நேற்று நடைபெற்ற சந்திப்பி யாழின் தற்போதைய சூழ்நிலை குறித்து கலந்துரையாடியதாகவும் யாழ்ப்பாணத்தின் கண்காணிப்பு பணிகள் மீள ஆரம்பிக்கும் நோக்கம் குறித்து ஆராயப்படதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு இ திருகோணமலை ஆகிய இடங்களிலும் தமது பணிகளை நாளை அல்லது மறுதினம் ஆரம்பிக்கவுள்ளதாக கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. -Pathivu-
-
- 0 replies
- 744 views
-
-
போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினருக்கு உலங்குவானூர்தி வழங்க சிறிலங்கா அரசு மறுப்பு. இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினருக்கு இனிமேல் உலங்குவானூர்தி வசதிகளை வழங்குவதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக கடந்த புதன்கிழமை (17.01.07) போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினருக்கு சிறிலங்கா அரசாங்க சமாதான செயலகத்தினூடாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகளுக்க
-
- 1 reply
- 727 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு குழுவினர் ஆதரவு தெரிவிக்கும் அதேவேளை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான சுதந்திரக் கட்சிக்குள் பிளவுகள் உருவெடுக்க ஆரம்பித்துள்ளது. மகிந்த அரசின் மீதான அதிருப்தியை அடுத்து அரசில் உள்ள பல அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்காவினதும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினதும் தலைமையில் திரண்டுள்ளனர். பல அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சமரவீரவை சந்தித்து ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சி தாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகை தொடர்பாகவும் தமது பொறுப்புக்களை மகிந்த, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு வழங்க முயற்சிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடினர். ம…
-
- 1 reply
- 940 views
-