ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
4 ஆம் இணைப்பு) வாகரையை நோக்கி சிறிலங்காப் படையினர் படை நகர்வு: 12 போராளிகள் வீரச்சாவு- 45 படையினர் பலி- 150 படையினர் காயம் [செவ்வாய்க்கிழமை, 16 சனவரி 2007, 15:03 ஈழம்] [தாயக செய்தியாளர்] வாகரையை ஆக்கிரமிக்கும் நோக்கில் சிறிலங்காப் படையினர் மும்முனைகளில் பாரிய நகர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இன்று மாலை படையினரின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக வான் குண்டுத் தாக்குதல்களை நடத்த பல்குழல் ரொக்கட்டுக்கள் மற்றும் ஆட்டிலெறிகள் செறிவாக எறிகணைகளை பொழிய படையினர் இன்று செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு நகர்வு ஆக்கிரமிப்புத் தாக்குதலை தொடக்கினர். வாகரையை ஆக்கிரமிக்கும் நோக்கில் அதன் வடபகுத…
-
- 6 replies
- 2.5k views
-
-
குருநாகல் கூட்டத்தில் ஹக்கீம் வேதனை அரசுடன் இணைவது பற்றிய பேச்சுவார்த்தைகள் வெற்றிபெற வேண்டுமானால் எம்முடன் புரிந்துணர்வும், இணக்கப்பாடும் ஏற்படுத்திக் கொள்ளப்பட வேண்டும். எமது நேர்மைக்கு சமமான பிரதிபலிப்புகள் காட்டப்படுகின்றன. ஆனால், அதைச் சீர்குலைக்க சில சக்திகள் அல்லது தனிநபர்கள் முன்வந்தால் அதனை அரசாங்கம் பகிரங்கமாக நிராகரிக்க வேண்டும். இவ்வாறு ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மக்களிடமிருந்து பெற்ற ஆணைக்கு அமைவாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த சில விடயங்கள் இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ள ரவூப் ஹக்கீம் அங்கு எடுக்கப்படும் முடிவு மாவட்ட மட்டமாக அன்றி தேசிய ரீதியில் கூட்டாக எடுக்கும் முடிவாக இருக்கும் என்றும் தெரிவித…
-
- 0 replies
- 860 views
-
-
[Tuesday January 16 2007 05:38:44 AM GMT] [uthayan.com] ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் செய்துகொள் ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் முறிந்துவிடாதவாறு செயற் படவேண்டும். இவ்வாறு இந்தியாவும், அமெரிக்காவும் தனித்தனியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக ராஜதந்திர வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. * ஆளுங்கட்சியின் பிரதான கட்சியாக விளங்கும் ஸ்ரீ.ல.சு.கட்சிக்கும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் கடந்த ஒக்ரோபரில் செய்துகொள்ளப்பட்ட புரிந் துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய முதன்மை நோக்கம் இனப்பிரச்சினைக்கு தீர்வு ஒன்றைக் காண்பதில் இரு தரப்புகளும் ஒத்துழைத் துச் செயற்படுவது என் பதே ஆகும். * அது …
-
- 0 replies
- 993 views
-
-
யாழ். குடாநாடு நோக்கிச் சென்ற கப்பலில் விமான உதிரிப்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணைகள் முடியும் வரை கப்பலை நகர்த்த வேண்டாம் என சிறிலங்காவின் குற்றப்புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. அதேவேளை கப்பலின் உரிமையாளரான ஐக்கிய தேசியக் கட்சியின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான தியாகராஜா மகேஸ்வரன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல அரசியல் கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. அத்தியாவசிய சேவைகள் ஆணையகத்தின் ஆணையாளரால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட இந்த கப்பல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அத்தியாவசியப் பொருட்களுடன் யாழ்பாணம் செல்லவிருந்த வேளை தடுத்து நிறுத்தப்பட்டது. எனினும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர், விசாரணைகளை குழப்புவதாகவும் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த கப…
-
- 17 replies
- 3.5k views
-
-
வெருகலில் பொது மக்கள் குடியிருப்பு மீது ஸ்ரீலங்கா விமானப் படை குண்டு வீச்சு. எழுதியவர் ஆரையம்பதி கார்த்திகா Tuesday, 16 January 2007 வெருகலில் பொதுமக்கள் குடியிருப்பு மீது ஸ்ரீலங்காவின் வான்படைக்குச் சொந்தமான கிபீர் மிகையொலி விமானங்கள் இன்று காலை தாக்குதலை மேற்கொண்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் வெருகல் பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த வான் வாக்குதலில் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. தம்மீது தாக்குதல் நடத்த திரண்டிருந்த புலிகள் மீதே விமானங்கள் குண்டு வீசியதாக ஸ்ரீலங்காவின் வானப்படைப் பேச்சாளர் தெரிவித்தள்ளார். http://tamilnews24.com//index.php?option=c...15&…
-
- 0 replies
- 831 views
-
-
கண்காணிப்புக்குழுவின் எதிர்காலச் செயற்பாடுகள் புதிய தீர்மானங்களின்படியே அமையும். - தோப்பனூர் ஒமர்சன். - பண்டார வன்னியன் வுரநளனயலஇ 16 துயரெயசல 2007 08:07 இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் எதிர்காலச் செயற்பாடுகள் பயிற்சிப்பட்டறையில் எடுக்கப்பட்ட புதிய தீர்மானங்களுக்கு அமையவே இருக்கும் எனக் கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் தோப்பனூர் ஒமர்சன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகள் தரப்பினரை தனித்தனியாக இவ்வாரம் இலங்கை போர்நிறுத்தக்கண்காணிப்புக்
-
- 0 replies
- 761 views
-
-
வவுனியாவில் கிளேமோர் - இரண்டு பொலிஸார் பலி. - பண்டார வன்னியன் வுரநளனயலஇ 16 துயரெயசல 2007 09:43 வவுனியாவில் இன்று காலை 8.10மணியளவில் கச்சேரிக்கு அருகாமையில் பொலிஸாரை இலக்கு வைத்து கிளேமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் இரண்டு பொலிஸார் சம்பவ இடத்திலே கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. http://www.sankathi.org/news/index.php?opt...66&Itemid=1
-
- 0 replies
- 726 views
-
-
வாகரைநோக்கி படையினர் முன்னேற்ற முயற்சி. - பண்டார வன்னியன் வுரநளனயலஇ 16 துயரெயசல 2007 09:27 வாகரை நோக்கி இன்று அதிகாலை மாங்கேணி, கஜூவத்தை ஆகிய படைமுகாம்களிலிருந்து கடும் எறிகணை வீச்சுடன் படையினர் பெருமெடுப்பிலான முன்னேற்ற முயற்சி நடவடிக்கைகளை மேற்கெண்டவண்ணமுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. . http://www.sankathi.org/news/
-
- 6 replies
- 1.9k views
-
-
செவ்வாய்க்கிழமை, 16 சனவரி 2007, 05:19 ஈழம் (அ.அருணாசலம்) மட்டக்களப்பு காத்தான்குடியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான அறிக்கை ஒன்றை மட்டக்களப்பு சிறிலங்கா காவல்துறையினர் கொழும்பு காவல்துறை தலைமையகத்திற்கு அனுப்பியுள்ளனர். அந்த அறிக்கையில், மட்டக்களப்பில் சமீப காலமாக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களும் காணிப்பிரச்சனை தொடர்பாக தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு இடையில் காத்தான்குடியில் இடம்பெற்ற பதற்றம் தொடர்பாகவும் கூறப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நகரில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவினர் ஆயுதங்களுடன் நடமாடுவது, மக்களை அச்சுறுத்துவது, காத்தான்குடியில் வன்முறையில் ஈடுபடுவது தொடர்பாக மட்டக்களப்பு காவல்துறை சுப்பிரின்டற் மக்சி …
-
- 0 replies
- 796 views
-
-
சந்திரிகா குமாரதுங்க மீண்டும் அரசியலில்!? [செவ்வாய்க்கிழமை, 16 சனவரி 2007, 08:21 ஈழம்] [கொழும்பு நிருபர்] புதினம் சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க எதிர்வரும் பெப்ரவரி 16 ஆம் நாள் முழுமையான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகின்றது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலர் அரசுடன் இணையத் தயாராகியுள்ள நிலையில், சுதந்திரக் கட்சியில் அதிருப்தியடைந்துள்ள சிலருடன் இணைந்து மீள் அரசியல் பிரவேசத்துக்கு சந்திரிகா குமாரதுங்க தயாராகி வருவதாகவும், அதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டிருப்பதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிய வந்திருக்கின்றது. சந…
-
- 1 reply
- 881 views
-
-
சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து கட்சி தாவத் தயாராகவுள்ள 11 நாடாளுமன்ற உறுப்பினர்களை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நேற்று திங்கட்கிழமை மாலை மகிந்தவை சந்தித்து, அரசுக்கு ஆதரவு வழங்கும் தமது திட்டம் தொடர்பாக 11 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பு தொடர்பாக 11 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் தெரிவித்துள்ளதாவது: எமது குழுவில் சிலருக்கு அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்படவுள்ளன. அது தொடர்பாகவும் கலந்துரையாடினோம். எமது தரப்பில் முன்னாள் பிதித்தலைவர் கரு ஜெயசூர்ய உட்பட 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சில நாட்களில் அரசில் இணையவுள்ளனர். அடுத்த வாரம் நடைபெறவுள்ள அமைச…
-
- 1 reply
- 730 views
-
-
"சந்திரிக்கா குமாரதுங்காவின் அதிகாரங்களை ஒழிப்பதற்கும் விடுதலைப் புலிகளுடன் போராடவும் நாம் பிரச்சாரங்களை மேற்கொண்டோம். அதன் பயனாக இடைக்கால தன்னாட்சி சபை என்ற இடைக்கால தீர்வுத்திட்டத்தை நிறுத்திவிட்டோம்" என ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற குழுத்தலைவரும் அந்த அமைப்பின் பிரச்சாரச் செயலாளருமான விமல் வீரவன்ச 'போரும் சமாதானமும்' என்ற தலைப்பில் மாத்தளை நகர மண்டபத்தில் பேசும் போது தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் நாள் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்பாடு விரைவில் 5 வருடங்களை பூர்த்தி செய்யவுள்ளது. இந்த சட்டவிரோத உடன்பாட்டை 5 வருடங்கள் பூர்த்தி செய்யவிடாது தடுக்கும்படி நாம் அரசை கேட்டுக்கொள்கிறோம்" எனவும் தெரிவித்தார். …
-
- 0 replies
- 738 views
-
-
வடக்கு- கிழக்கு இணைப்புக்கு நிபந்தனை விதிக்கும் முஸ்லிம் தலைவர்கள் பிரிப்புக்கு உதவ விதித்த நிபந்தனைகள் எவை? [15 - January - 2007] [Font Size - A - A - A] ஜ{தினக்குரல்} -ஏ.சீ.எம். கலீல்- வடக்கு- கிழக்கு இணைப்புக்கு நிபந்தனை விதிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வடக்கு- கிழக்கு பிரிப்பின் மூலம் முஸ்லிம் மக்கள் பெறப்போகும் நன்மைகளையும் பகிரங்கப்படுத்த வேண்டிய கடப்பாடு கொண்டவராக இருப்பதை உணர வேண்டும். கிழக்கை வடக்கிலிருந்து பிரிப்பதன் மூலம் கிழக்கில் முஸ்லிம்களின் செல்வாக்கும் நலன்களும் உறுதிப்படுத்தப்படும் என்பதற்கு என்ன அத்தாட்சி உள்ளது என்பதை முஸ்லிம் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் . வடக்கு- கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் ஆதரவில்லை …
-
- 2 replies
- 1.4k views
-
-
''பணம் பறிக்கும் ஒட்டுபடைகள்....'' வவுனியாவில் சில நாட்களாக மக்களை விரட்டி பணம் பறிக்கும் நிலையில் பல ஒட்டுகுழுக்கள் ஈடு பட்டுள்ளதாக அந்த நகர வாசிகள் எமக்கு தெரிவித்தனர். அதன் விபரம் வருமாறு.... வெளிநாடுகளில் இருந்து தமது உறவுகளின் தேவைக்காக பணம் அனுப்பும் அந்த உறவினரது வங்கிகணக்கை வங்கி அதிகாரிகள் ஊடாக பெற்று அதன் அடிப்படையில் அந்த பணத்தை பெற்று கொண்டவர்களிடம் சென்று இன்று உனக்கு பணம் வந்துள்ளது எனவே நீ எமக்கு பணம் தர வேண்டும் இல்லை என்றால் உனக்கு தண்டனை எதுவோ அது அளிக்கப்படும் எனமிரட்டி பண பறிப்புகளில் ஈடுபடுவதாக அந்த பணத்தொகையை இழந்த அயலவர்களில் சிலர் எமக்கு தெரிவித்தனர். அத்துடன் நிற்காது வெளிநாட்டில் உள்ள உறவுகளிற்கு தொலைபேசி எ…
-
- 2 replies
- 1.6k views
-
-
திங்கள் 15-01-2007 22:21 மணி தமிழீழம் [செந்தமிழ்] வடமராட்சி கரவெட்டியில் இளைஞர் கடத்தல் நேற்று மாலை வீட்டில் இருந்து நெல்லியடி நகரிற்கு சென்ற 21 அகவையுடைய வடிவேலு சதீஸ்கரன் என்ற இளைஞர் இதுவரை வீடுதிரும்பவில்லை எனவும் வீதியில் வைத்து படைப்புலனாய்வாரள்கள் கடத்திச் சென்றுள்ளதாக குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com
-
- 0 replies
- 993 views
-
-
நெதர்லாந்து நாட்டு தொண்டர் நிறுவனமான ZOA என்றழைக்கப்படும் அகதிகளுக்கான பாதுகாப்பு தொண்டர் அமைப்புக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதுவித தொடர்புகளும் இல்லை என்பதை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுக்கு தெளிவுபடுத்தியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், எமது தொண்டர் நிறுவனம் மீது முழு நம்பிக்கை கொண்டுள்ளார் எமது பணியை தொடர ஊக்கப்படுத்தியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோத்தபாய ராஜபக்சவுடன் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டதுடன் விடுதலைப் புலிகளின் ஸ்ரான்லி முகாமிலிருந்த பொருட்களுக்கு நாம் பொறுப்பாளிகள் அல்ல என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கஞ்…
-
- 0 replies
- 938 views
-
-
தேசியத்தலைவரின் எண்ணத்தின் பிரதிபலிப்பினை பாடசாலைக் கல்வி மூலம் காட்ட வேண்டும்: வெ.இளங்குமரன். தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் எண்ணத்தின் பிரதிபலிப்பினை பாடசாலைக்கல்வி மூலம் மாணவர்கள் காட்டவேண்டும் என்று தமிழீழ கல்விக்கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை புதிதாக ஆரம்பிக்கப்பட்ட 'தமிழ்ச்சோலை' இடைநிலைப்பள்ளி ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழர் திருநாளாம் தைத்திருநாளில் தமிழர் புத்தாண்டில் இந்த பாடசாலையை ஆரம்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். திருவள்ளுவர் ஆண்டு 2038 ஆவது ஆண்டு தொடக்கத்தில் பாடசாலை ஆரம்பிக்கப்படுகிறது. இந்த பிரதேச மாணவர்களின் கல்வியின் தேவையை உணர்ந்துதான் இந்…
-
- 0 replies
- 893 views
-
-
உலக யுத்தங்களும் அத்தியாவசியப்பொருட்களுக்கா
-
- 0 replies
- 931 views
-
-
புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து ஐக்கிய தேசியக் கட்சி விலகும்? உத்தேச முக்கிய சந்திப்பிலிருந்து ரணில் வெளிநடப்புச் செய்யக்கூடும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடை யில் கடந்த ஒக்ரோபர் மாதம் 23ஆம் திகதியன்று கைச்சாத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் முறிவடையலாம். அதாவது அந்த ஒப்பந்தத்திலிருந்து ஐக்கிய தேசியக் கட்சி அனேகமாக விலக்கிக்கொள்ளும் என்று அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தொடர்ந்து முன்னெடுப்பதா அல்லது முறித்துக் கொள் வதா என்பது தொடர்பான பேச்சுக்கள் இன்று அல்லது நாளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நடை பெற உள்ளது. இதற்கிடையில் உத்தேச சந்திப்புக்…
-
- 1 reply
- 876 views
-
-
தென்னிலங்கைத் தாக்குதல்கள்! யாரால் ? ஏன் செய்யப்பட்டது? -By Andrew http://www.sooriyan.com Sunday, 14 January 2007 தமிழர் தாயகத்தில் அறிவிக்கப்படதா ஒரு யுத்தம், ஒரு முழுமையான யுத்தமாக மாறிவரும் நிலையில், தென்னிலங்கையின் சுமூகமான வாழ்வியல், அரசியல் என்பன வேறொரு பரிமாணத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. தென்னிலங்கையின் கரப்பிட்டிய – நித்தம்புவப் பிரதேசத்திலும், ஹிக்கடுவப் பிரதேசத்திலும் நிகழ்ந்த குண்டு வெடிப்புக்குள் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு மட்டுமல்ல கட்சி சாரா இராணுவப் புலனாய்வாளர்களுக்கும் பாரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இந்தக் குண்டுவெடிப்புகளுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் வழமைபோல புலிகளைக் குற்றஞ்சாட்டியிருந்தால…
-
- 7 replies
- 3k views
-
-
மட்டக்களப்பு அரச நிர்வாகத்தை கட்டுப்படுத்த முனையும் கருணா குழு. மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச நிர்வாகத்தை கருணாகுழு தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முனைகிறது. அண்மைக்காலமாக மட்டக்களப்பில் அரச சிவில் அதிகாரிகள் உட்பட ஒரு பொலிஸ் அதிகாரியையும் கருணா குழு மிரட்டியுள்ளதாக டெய்லி மிரர் பத்திரிகை தெரிவித்துள்ளது. பதினெட்டு முஸ்லீம் நபர்கள் தமக்கு கருணாகுழுவால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக சிறிலங்கா பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பாக பத்திரிகை நிருபர்கள் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கெகலிய ரம்புக்வெலவிடம் கேள்வி எழுப்பிய போது ஒருவரும் சட்டத்திற்கு மேலே கிடையாது எனக் கூறியுள்ளார். ஆனால் ஆயுதங்களுடன் கருணாகுழு இராணுவத்துடன் இணைந…
-
- 0 replies
- 953 views
-
-
பேராசிரியர் ரவீந்திரநாத் குடும்பம் மீண்டும் விடுக்கும் வேண்டுகோள் [15 - January - 2007] [Font Size - A - A - A] (தினக்குரல்) கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் தலைநகர் கொழும்பில் வைத்து கடத்திச் செல்லப்பட்டு இன்றுடன் சரியாக ஒருமாதம் கடந்து விட்டது. பேராசிரியரின் நிலை குறித்து ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும் குடும்பத்தவர்களும் அவரின் நலன்களிலும் பாதுகாப்பிலும் அக்கறைகொண்ட கல்விச் சமூகமும் மனித உரிமைகள் அமைப்புகளும் அவர் பத்திரமாக விடுவிக்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக விடுத்துவரும் வேண்டுகோள்களுக்கு இதுவரை எந்தப்பயனும் கிடைக்கவில்லை. அவரின் கடத்தல் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்டுவரும் விசாரணைகளில் முன்னேற்றம் காணப்படவில்லை.…
-
- 4 replies
- 1.5k views
-
-
நானூறுக்கும் அதிகமான தமிழர் பூசா முகாமுக்கு அனுப்பி வைப்பு [15 - January - 2007] [Font Size - A - A - A] ( தினக்குரல்) கொழும்பு மாநகர் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த பத்து நாட்களில் கைது செய்யப்பட்ட எழுநூறுக்கும் மேற்பட்ட தமிழர்களில் நானூறுக்கும் மேற்பட்டோர் `பூசா' உட்பட பல்வேறு சிறைச்சாலைகளிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். தெற்கில் நித்தம்புவ மற்றும் ஹிக்கடுவ பகுதிகளில் தனியார் பயணிகள் பஸ்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளையடுத்து நாடு முழுவதும் ஆரம்பமான பாரிய சுற்றிவளைப்புகளும் தேடுதல்களும் தினமும் நடைபெற்று வருகின்றன. இந்த சுற்றிவளைப்புகளில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்படுகின்றனர். முன்னைய காலங்களைப் போலன்றி இவர்கள் உடனடியா…
-
- 3 replies
- 1.1k views
-
-
'பொங்கலை நினைக்கக் கூட முடியவில்லை'- வாகரை அகதிகள் வாகரை அகதிகள் இலங்கையின் கிழக்கே போர் நடக்கும் மூதூர், ஈச்சிலம்பத்தை, வாகரைப் பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்து அகதிகளாக இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள். நாளை பொங்கல் திருநாள் நடக்க உள்ள நிலையில் தாங்கள் இம் முறை பொங்கலைக் கொண்டாடுவதை நினைத்தே பார்க்க முடியாத நிலையில் உள்ளோம் என்று கூறுகிறார்கள். எறிகணை வீச்சுகளுக்கு உறவுகளைப் பலி கொடுத்து, ஊரும் உறவுகளும் சிதறி வீடு, மாடு, வயல் அனைத்தையும் விட்டு இடம் பெயர்ந்துள்ள தாங்கள் அடுத்த ஆண்டாவது சொந்த நிலத்தில் பொங்கலைக் கொண்டாட உலக நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்று மன்றாடுகிறார்கள். கூடவே வாகரைப் பகுதியில் உணவின்றித் தவிக்கும் மக்களு…
-
- 1 reply
- 1.2k views
-
-
தேசியத் தலைவர் சொன்னது போன்று, உலகத்தை ஏமாற்றும் வண்ணம் சிறிலங்கா அரசால் அமைக்கப்பட்ட சர்வகட்சிக் குழு எதிர்வரும் தை 19ம் திகதி தனது 1வருட முடிவினை எட்டுகின்றது. இந்த ஒரு வருடத்தில் உருப்படியான முடிவுகள் ஏதும் அதனால் எடுக்கமுடியவில்லை. திஸ்சவிதாரண சமீபத்தில் சொன்ன அடிப்படைத் தீர்வு கூடக் கிடையாத ஒரு திட்டத்தைக் கூட ஜேவிபி,ஹெல உறுமய, மகிந்த ராஜபக்சா கூட ஏற்றுக் கொள்ளவில்லை. மகிந்த ராஜபக்சா அது தனது அரசின் திட்டமல்ல என்று சொல்லி அதை நிராகரித்தார். ஆனால் உண்மையில் அது இந்தியப் பஞ்சாயத்து முறையை விடக் குறைவான அதிகாரம் கொண்டதாகவே இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. அப்படியிருந்தும் அத் தீர்வைக் கூடத் தரமனமில்லாத சிங்கள அரசு, எவ்வகையில் தமிழனுக்கு உருப்படியான தீர்வைத் தரும். …
-
- 0 replies
- 1.1k views
-