Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. லண்டனில் 33 உள்ளுராட்சிப் பகுதிகளில் இன்று உலக சமாதான நாள் (புதன்கிழமை, 20 செப்ரெம்பர் 2006, 17:03 ஈழம்)(ஐரோப்பிய நிருபர்) ஐ.நா சபையின் அனுசரணையுடன் உலகெங்கும் நடைபெற உள்ள "உலக சமாதான நாள்" நிகழ்வுகள் லண்டனில் இன்றூ வியாழக்கிழமை ஈழத்தமிழர்களால் நடத்தப்பட உள்ளன. பிரித்தானியா வாழ் தமிழீழ மக்களை ஒன்றிணைத்து கரோ கவுன்சிலர் தயா இடைக்காடர் தலைமையிலான "பிரித்தானியா தமிழ் கவுன்சிலர் அமைப்பு" இப் பாரிய ஒன்றுகூடலை ஏற்பாடு செய்துள்ளது. லண்டன் உள்ளுராட்சிப் பகுதிகளை பிரதிநிதித்துவம் செய்யும் 33 உள்ளூராட்சி மன்றங்களின் முன்பும் இந்த ஒன்று கூடல் நடைபெற இருக்கிறது. ஒன்று கூடல் நிகழ்வானது இன்று பிற்பகல் 12.00 மணிக்கு தொடங்கி இரவு 8.00 மணிவரை நடைபெற உள்ளது. …

  2. புலிகளின் போர்த்தந்திரம் குழம்பும் சிங்களத் தளபதிகள் இலங்கையில் போர் நிறுத்தம் புறக்கணிக்கப்பட்டு மீண்டும் போர் தொடங்கியுள்ளது. போர் நிறுத்தமும் அமைதிக்கான முயற்சிகளும் அனைத்துலக கண்காணிப்புடன் நடைபெற்றுவரும் காலக்கட்டத்தில் சிங்கள இராணுவ விமானங்கள் தொடர்ந்து திரிகோணமலை, மாவிலாறு, மட்டக்களப்பு, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் குண்டுவீசித் தாக்குதல்கள் நடத்தியுள்ளன. போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு இதைக் கண்டித்துத் தாக்குதலை நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் இதைச் செய்யவில்லை. மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கை என்ற போர்வையில் சிங்கள இராணுவம் கீழ்க்கண்ட இலக்குகளை அடைய முற்பட்டது. 1. மாவிலாறு பகுதியைக் கைப்பற்றுவது. 2. இதன் மூலம் இராணுவத்தி…

  3. புலிகளுக்கான சமதரப்பு நிலைக்கு எதிர்ப்பு: நோர்வேயிடம் மகிந்த ராஜபக்ச தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு "சமதரப்பு" நிலையை அளிக்கக்கூடாது என்று நோர்வேயிடம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். ஐ.நா. ஆண்டுக்கூட்டத்தில் பங்கேற்க நியூயோர்க் சென்றுள்ள மகிந்த ராஜபக்ச அங்கு நோர்வே பிரதமர் ஜென்ஸ் ஸ்டொல்ட்ன்பெர்க்கை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது நோர்வே பிரதமரிடம் மகிந்த ராஜபக்ச கூறியதாவது: நோர்வே மற்றும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு இடையேயான இருதரப்பு உறவு மேம்படுத்தப்பட வேண்டும். இந்த இருதரப்பு உறவானது இரு இறைமையுள்ள அரசுகளுக்கு இடையேயானது. இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நோர்வே அரசாங்கமானது சிறிலங்கா அரசாங்கத்துக்கு இணையா…

  4. கதவடைப்புப் போராட்டதில் ஈடுபட்ட முஸ்லிம்களை தாக்கி கடைகளை திறக்குமாறு கூறிய அதிரடிப்படையினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த முஸ்லிம் மக்கள் மீது அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு. காயம் அடைந்த 10 பேர் பொத்துவில் மருத்துவமையிலும் படுகாயம் அடைந்த 4 பேர் கல்முனை மருத்துவமையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். -Tamilnet.com அம்பாறை உல்லைப் பகுதியில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் 14 பேர் காயம். புதன் 20-09-2006 15:38 மணி தமிழீழம் [மகான்] அம்பாறை உல்லை பகுதியில் இன்று காலை முஸ்லிம் மக்கள் மீது விசேட அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலில் 14 முஸ்லிம்கள் காயமடைந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன. இவர்களில் நால்வரின் நிலை கவலைக்கிடமான ம…

  5. மூதூரில் சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட அரச சார்பற்ற பணியாளர்கள் 17 பேரில் 15 பேரின் உடல்களை மீண்டும் தோண்டியெடுக்க அனுராதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூதூர் படுகொலை வழக்கை சிறிலங்கா நீதித்துறை சேவைகள் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட அனுராதபுரம் நீதிபதி வசந்தா ஜினதாச விசாரித்தார். முன்னர் 17 உடல்களை தோண்டியெடுக்க வசந்த ஜினதாச உத்தரவிட்டிருந்தார். ஆனால் 17 பேரில் இருவரது உறவினர்கள் மட்டுமே அதற்கு ஒப்புதல் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இதர 15 உடல்களையும் தோண்டியெடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கின் சாட்சிகளை கந்தளாய் நீதிமன்றில் ஒக்டோபர் 4 ஆம் நாள் முன்னிலையாகவும் அவர் தாக்கீது…

  6. [புதன்கிழமை, 20 செப்ரெம்பர் 2006, 20:11 ஈழம்] [புதினம் நிருபர்] இந்திய வெளிவிவகார இணை அமைச்சர் அகமதுவை புதுடில்லி சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று புதன்கிழமை சந்தித்துப் பேசினர். மேலும் புதிதாக பொறுப்பேற்க உள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சிவசங்கர் மேனனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் ஈழத் தமிழரின் துயரங்கள் குறித்தும் இந்திய அமைச்சர் மற்றும் செயலாளருக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விளக்கியுள்ளனர். முன்னதாக சர்வதேச விவகாரங்களுக்கான இந்திய சபையின் கருத்தரங்கிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கலந்து கொண்…

  7. உலக மனித உரிமை நிலையத்தின் அறிக்கை http://hrw.org/backgrounder/asia/srilanka0...anka0906web.pdf

  8. தினக்குரல் பத்திரிகை நிறுவனம் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடைபெற்றுவருவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலதிக விபரங்கள் விரைவில்

  9. எருமைக்கும் காளைக்கும் இடையேயான பேச்சுவார்த்தைதான் சு.க.-ஐ.தே.க. பேச்சு: சோமவன்ச அமரசிங்க சாடல் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையேயான பேச்சுவார்த்தை எருமைக்கும் காளைக்கும் இடையேயான பேச்சுகளைப் போன்றது என்று அரசாங்கத்தை ஆதரிக்கும் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க சாடியுள்ளார். மகிந்தவின் அரசாங்கத்தை ஆதரிக்க தமது கட்சி முன்வைத்துள்ள 20 அம்ச திட்டம் குறித்து கல்லூரி மாணவர்களுக்கு விளக்கும் நிகழ்ச்சியை கொழும்பில் ஜே.வி.பி. நேற்று செவ்வாய்க்கிழமை நடத்தியது. இந்நிகழ்ச்சியில் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க பேசியதாவது: மகிந்த சிந்தனைக்கு எதிராக மகிந்த ராஜபக்ச செயற்பட்டால் அரச தலைவர் தேர்தலைச் சந்திக்க நேரிடும். …

    • 3 replies
    • 1.3k views
  10. சந்திரிகாவின் மகளின் திருமணத்திற்கு ஜே.வி.பி. எதிர்ப்பு http://www.nitharsanam.com/?art=20462

  11. நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைகளுக்கு இணங்கியமை தொடர்பாக யாழ் மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நிபந்தனையற்ற பேச்சுக்களுக்கு இணங்கியமையானது இலங்கை வாழும் தமிழ் பேசும் மக்களின் மனங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர்; தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் ஊடக தேசியத் தலைவருக்கு அனுப்பியுள்ள கடித்தில் இதனைத் தெரிவித்துள்ளார். இணைத்தலைமை நாடுகள் நோர்வே அரசின் தலைமையில் கடந்த காலங்களில் ஆற்றிய பணியை பாராட்டியுள்ள அவர் தற்போதைய இக்கட்டான சூழலில் இரண்டு தரப்பினருக்கும் அழுத்தங்களை கொடுத்து நிபந்தனையற்ற பேச்சுக்களுக்கு இணங்க செய்துள்ளம…

  12. காங்கேசன்துரை: விடுதலைப் புலிகளின் முற்றுகையால் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிக்கித் தவித்து வரும் இலங்கை வீரர்கள், எப்போது குடும்பத்தினரைப் பார்ப்போம், ஊர் திரும்புவோம் என்ற ஏக்கத்திலும், விரக்தியிலும் தவித்து வருகின்றனர். விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை படைகளுக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் சில மாதங்களுக்கு முன்பு தவிடுபொடியானது. இரு தரப்பும் கடுமையாக மோதி வந்தது. சில நாட்களாக இந்த சண்டை சற்று மட்டுப்பட்டது. தற்போது மீண்டும் இரு தரப்பினரும் தாக்கத் தொடங்கியுள்ளனர். தொடரும் இந்த சண்டையால் அதிக விரக்தி அடைந்துள்ளனராம் இலங்கை வீரர்கள். யாழ் தீபகற்பத்தில் குவிக்கப்பட்டுள்ள இலங்கை வீரர்கள் நீண்ட காலமாக இங்கே தங…

  13. இணைத்தலைமை நாடுகளின் கூட்டங்களில் தம்மையும் பங் கேற்க அனுமதிக்க வேண்டும் என நோர்வேத் தூதுவருடனான சந்திப்பின்போது அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா விடுத்த கோரிக்கையானது இணைத் தலைமை நாடுகளின் தீர்மானங்களில் செல்வாக்குச் செலுத்த முற்படுவதன் விளைவே ஆகும். இனப்பிரச்சினை விடயத்தில் சிறிலங்கா அரசாங்கத்தையும் - விடுதலைப் புலிகளையும் நோர்வேத்தரப்பும் இணைத்தலைமை நாடுகளும் சம அந்தஸ்தில் உள்ளவர்களாகக் கருதுவது சிறிலங்கா அரசிற்கு தொடர்ந்தும் விசனத்தை ஏற்படுத்தும் ஒன்றாகவே இருந்து வருகின்றது. இம்மாதத் தொடக்கத்திலும் பிரெசல்சில் கூடிய இணைத் தலைமை நாடுகளின் கூட்டத்தில் இரு தரப்பினரையும் சமநிலையில் வைத்தே தமது அறிக்கையை இணைத்தலைமை நாடுகள் விடுத்துள்ளன. எடுத்துக்காட்டாக, இரு தரப…

  14. அம்பாறை மாவட்டம் உல்லை கிராமத்தில் இன்று சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகாயமடைந்துள்ளனர். சிறிலங்கா அதிரடிப்படையினரால் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து முழு அடைப்புப் போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தை முறியடிக்கும் வகையில் கடைகளைத் திறக்குமாறு சிறப்பு அதிரடிப்படையினர் வற்புறுத்தினர். இதனால் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது ஆத்திரமடைந்த முஸ்லிம்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகாயமடைந்துள்ளனர். இதில் படுகாயமடைந்த அகமெட் நூருதீன்(வயது 38) மற்றும் மொகை…

  15. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சிறிலங்காவுக்கு இராணுவ உதவி: அமெரிக்கா சிறிலங்கா அரசாங்கத்துக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இராணுவம் உதவி வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. சிறிலங்காவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவரான றொபேர்ட் ஓ ப்ளேக் கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது: சிறிலங்காவுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மட்டும் இராணுவ உதவி வழங்கப்படும். சிறிலங்காவுக்கு இராணுவ உதவி வழங்கினால் எப்படி விடுதலைப் புலிகளுடனான சமாதான பேச்சுக்களை முன்னெடுப்பது என்ற நோக்கில் செயற்பட முடியும்? பயங்கரவாத மோதல்கள் தொடர்பில் சிறிலங்கா இராணுவத்தை வலுப்படுத்த உதவுவோம். தமிழீழ விடுதலைப் புலிகள் முதல் நடவடிக்கையாக பய…

  16. [ஞாயிற்றுக்கிழமை, 17 செப்ரெம்பர் 2006, 05:23 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா தலைநகரில் இடம்பெறும் கடத்தல்களை உடனடியாக நிறுத்தக்கோரி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (19.09.06) நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கதவடைப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நேற்று சனிக்கிழமை இரவு கேட்டுக்கொண்டதற்கிணங்க மகிந்த நாடும் திரும்பும் வரை பிற்போடுவது என ஏற்பாட்டுக்குழு தீர்மானித்துள்ளது. கியூபாவுக்கு சென்றுள்ள மகிந்த ராஜபக்ச கொழும்பில் கதவடைப்பு மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்படுவதை அறிந்து தனது சகோதரர் பசில் ராஜபக்ச மூலமாக கதவடைப்பிற்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட அரசியல்வாதிகள் சிலருடன் நேற்றிரவு ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனைகளின் போத…

  17. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானத்தில் பழங்கள் கொண்டு வர சிறிலங்கா அரசாங்கம் திடீர் தடை விதித்துள்ளது. இது தொடர்பில் இந்திய ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி விவரம்: இந்தியாவில் இருந்து சிறிலங்காவுக்குச் செல்லும் விமானப்பயணிகள் மாம்பழம் உள்ளிட்ட அனைத்து வகையான பழங்களையும் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து சிறிலங்காவுக்கு விமானத்தில் அதிக அளவிலான பயணிகள் நாளாந்தம் செல்கின்றனர். இதுபோல், அங்கிருந்தும் பயணிகள் இந்தியாவுக்கு வருகின்றனர். இந்தியாவில் இருந்து சிறிலங்காவுக்குச் செல்வோரும், சிறிலங்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்து மீண்டும் திரும்பிச் செல்வோரும் இங்கிருந்து பல்வேறு வகையான பழங்களைக் கொண்டு செல்கின்றார்கள். …

  18. இணைத் தலைமை நாடுகளை எதிர்த்து பரப்புரை நடத்த ஜே.வி.பி.க்கு மகிந்த "நள்ளிரவு" யோசனை: கொழும்பு ஊடகம் [திங்கட்கிழமை, 18 செப்ரெம்பர் 2006, 05:07 ஈழம்] [ச.விமலராஜா] அமைதிப் பேச்சுக்களை நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியிட்ட இணைத் தலைமை நாடுகளை எதிர்த்து பரப்புரைகளை மேற்கொள்ள ஜே.வி.பிக்கு மகிந்த ராஜபக்ச யோசனை கூறியுள்ளார் என்று கொழும்பு ஆங்கில வார ஏடு செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விவரம்: இணைத் தலைமை நாடுகளின் பிரசெல்ஸ் அறிக்கைக்குப் பின்னர் அரசாங்கம் முன்பாக ஜே.வி.பி. வைத்த நிபந்தனைகள் தொடர்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. இணைத் தலைமை நாடுகளின் அறிக்கை மற்றும் சர்வதேச ஊடகங்களில் நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்மின் ந…

    • 4 replies
    • 1.5k views
  19. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை வட்டமேசைக் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொள்ளுமாறு அமரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டப்ளியூ.புஷ் அழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டமேசை மாநாடு ஜனநாயக ஆட்சிகள் நடக்கும் வட்டமேசை மாநாடு என அழைக்கப்படுகிறது. இந்த மாநாடு அமெரிக்க ஜனாதிபதி தலைமையில் நடைபெற உள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

  20. 2006 ஆம் ஆண்டில் சிறிலங்கா இராணுவமே பாரிய வன்முறைகளில் ஈடுபட்டது சர்வதேச மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு இலங்கையில் 2006 ஆம் ஆண்டில் சிறிலங்கா இராணுவமே பாரிய வன்முறைகளில் ஈடுபட்டது என்றும் தமிழர் தாயகத்தில் நிகழ்ந்த படுகொலைகள், காணாமல் போதல்களுக்கு இராணுவமே பொறுப்பு என்றும் சர்வதேச மனித உரிமைகள் ஆணையமாக Human Rights Watch குற்றம்சாட்டியுள்ளது. இலங்கையில் பொதுமக்கள் பாதுகாப்பை மேம்படுத்துதலும் இது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமான பரிந்துரைகள் என்ற தலைப்பில் 60 பக்க அளவிலான ஆய்வறிக்கை அந்த அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: - முல்லைத்தீவில் சிறிலங்கா விமானம் குண்டு வீச்சுத…

  21. சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அளித்த நள்ளிரவு யோசனையை ஏற்று நோர்வே மற்றும் இணைத் தலைமை நாடுகளுக்கு எதிராக ஜே.வி.பி. களமிறங்கியுள்ளது. கொழும்பு ஊடகவியலாளர்களிடம் ஜே.வி.பி.யின் விமல் வீரவன்ச கூறியதாவது: சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக செயற்படும் நோர்வேயின் எரிக் சொல்ஹெய்ம் இங்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.அவர் சிறிலங்காவின் ஆளுநர் போன்று செயற்படுகிறார். சிறிலங்காவின் எதிரியாக எரிக் சொல்ஹெய்மை பிரகடனப்படுத்த வேண்டும். எரிக் சொல்ஹெய்ம் இங்கு வந்தாலும் கிளிநொச்சி செல்ல அனுமதிக்கக்கூடாது. இணைத் தலைமை நாடுகளின் அறிக்கைக்கு சிறிலங்கா அரசாங்கம் மறுப்பு கூறியும் இணைத் தலைமை நாடுகள் ஏன் பதில் தரவில்லை? தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும் அல்லது ச…

  22. யுனெஸ்கோவிருதிர்க்கு எதிரான இலத்திரனியல் கையெழுத்து சேகரிப்பு http://www.youtounesco.underskrifter.dk/ இங்கே கையொப்பம் இடுவதன் ழூலம் வீரசிங்கம் ஆனந்தசங்கரிக்கு யுனெஸ்கோவின் மதன் ஜீத் சிங் விருது வழங்கப்படுதற்கு எமது எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறோம். உலகத்தமிழ்மக்கள் http://www.youtounesco.underskrifter.dk/ http://www.youtounesco.underskrifter.dk/

    • 34 replies
    • 7.4k views
  23. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்திலிருந்து சிறிலங்கா வெளியேற்றம்? ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்திலிருந்து சிறிலங்கா அரசாங்கம் வெளியேற்றப்படக் கூடும் என்று தெரிகிறது. ஆசிய மனித உரிமைகள் ஆணையம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மாநாட்டுத் தீர்மானங்களில் சிறிலங்கா கைச்சாத்திடவில்லை என்றும் அந்த அமைப்புக்களால் சிறிலங்காவை கட்டுப்படுத்த முடியாது என்றும் கடந்த வாரம் சிறிலங்கா தலைமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆகையால் சர்வதேச மனித உரிமைகள் சமூகத்திலிருந்து சிறிலங்காவை வெளியேற்ற வேண்டும். சிறிலங்கா உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் மேற்…

  24. கொழும்பில் கடத்தப்பட்ட கணவனுக்காக போராடும் தமிழ்ப் பெண் சிறிலங்கா தலைநகர் கொழும்பில் தமிழர்களை அடையாளம் தெரியாத குழுவினர் கடத்தி பணம் பறிப்பதும் கொலை செய்வதுமான சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் கடத்தப்பட்ட புதிதாக திருமணமான கணவனை மீட்க கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார். கடந்த மே 26 ஆம் நாளன்று புதிதாக திருமணமான கிளிநொச்சியைச் சேர்ந்த இருதயசாமி பிரான்சிஸ் (வயது 34) என்பவரை அடையாளம் தெரியாத குழு கடத்திச் சென்றுள்ளனர். அவருக்கு பெப்ரவரியில் திருமணம் நடந்ததாகவும் கனடா செல்ல இருந்த நிலையில் கடத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கனடா செல்வதற்கு சில நாட்கள் முன்பாக தனது மனைவியுடன் கொட்டாஞ்சேனை பகுதியில் விடுதி ஒன்றில் அவர் …

  25. உலகிலேயே மிக மோசமான மத சுதந்திர மீறல்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் சிறிலங்கா: அமெரிக்கா அறிவிப்பு உலகின் மிக மோசமான மத சுதந்திர மீறல்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவை அமெரிக்கா இணைத்துள்ளது. இதற்கு ஜாதிக ஹெல உறுமய எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் கூறியதாவது: சிறிலங்காவை தோல்வியடைந்த நாடு என்று முன்னர் அமெரிக்கா அறிவித்தது. ஜாதிக ஹெல உறுமயவை பயங்கரவாத அமைப்பாகவும் அறிவித்தது. மரபுகளுக்கு மாறாக மக்களை நாங்கள் மதம் மாற்றுவதில்லை. தன்னை ஜனநாயக நாடாக வெளிப்படுத்த முயற்சிக்கும் அமெரிக்காவில் பாரிய மனித உரிமை மற்றும் மத சுதந்திர மீறல்கள் உள்ளன. அமெரிக்க மக்கள் தொகையில் 37 விழுக்காடு உள்ள ஸ்பானிஸ் மக்களுக்கு அமெர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.