ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
பெல்ஜியத்தில் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் தமிழர் தரப்பினருக்கும் இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை சந்திப்பு நடைபெற்றது. ஐரோப்பிய ஒன்றியப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வின்சன் கரன், ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசிய வெளிவிவகார அமைச்சர் கீலன் கம்பல் ஆகியோரை பெல்ஜியத் தமிழர்களின் சார்பில் பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் தலைவர் வி.கிருபாகரன் சந்தித்து உரையாடினார். இச்சந்திப்பில் வாகரைப் படுகொலை, கிளிநொச்சி மருத்துவமனை மீதான தாக்குதல், மாமனிதர் ரவிராஜ் படுகொலை, அரச படைகளில் சிறார் ஆட்சேர்ப்பு, ஏ-9 பாதை விவகாரம் உள்ளிட்ட தமிழ் மக்களின் அவல நிலைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து வரும் இன அடக்குமுறையினை மறுப்பேத…
-
- 0 replies
- 1.2k views
-
-
8 புலிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிப்பு புத்தளம் குதிரைமலை கடற்பரப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை விடுதலைப் புலிகளின் ரோலர் படகொன்றை தாங்கள் தாக்கி அழித்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து கடற்படையினர் கூறுகையில், நேற்று மாலை 4.30 மணியளவில் குதிரைமலை கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான ரோலர் படகொன்றின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டது. அந்த ரோலரில் எண்மர் பயணம் செய்தனர். அது மீன்பிடிப் படகுகளின் மத்தியினூடாக வடபகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அந்த ரோலரை நோக்கிச் சென்ற கடற்படையினர் அதன் மீது சந்தேகம் கொண்டு அதனை நிறுத்துமாறு கூறியுள்ளனர். எனினும், படகிலிருந்தவர்கள் அதனை நிறுத்தாததுடன் அதிலிருந்து கடற்படை படகின் மீது சரமாரியா…
-
- 0 replies
- 2.5k views
-
-
திங்கள் இரவு நான்கு இளைஞர்கள் சுட்டுக் கொலை யாழ். குடாநாட்டில் ஊரடங்கு உத்தரவு அமுலிலுள்ள இரவு வேளையில் வெள்ளை வான்களில் திரிவோரால் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்படுவோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவும் யாழ்நகரப் பகுதிக்கு அதற்கு வெளியேயும் நள்ளிரவு நேரத்தில் வெள்ளை வானில் கொண்டு வரப்பட்டு ஆயுதபாணிகளால் நான்கு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களில் இரவு நேரங்களில் இவ்வாறு பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வெள்ளை வான்களில் வருவோரால் கடத்தப்பட்டதுடன் அவர்களில் எட்டுப்பேர் வரை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். யாழ்நகரப் பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை பட்டப் பகலில் ஆயுததாரிகளால் வா…
-
- 0 replies
- 1.4k views
-
-
சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் தமிழின அழிப்பை எத்தகையதொரு நிலையிலும் தொடர்வது எனத் தீர்மானித்துவிட்டது. அதாவது போர் நிறுத்த ஒப்பந்தம், மனிதநேய அமைப்புக்களின் கண்டனம், உலக நாடுகளின் கவலை எவற்றையுமே கண்டுகொள்ளாது தனது நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் இதனை நடத்தி முடிப்பது என முடிவு செய்து விட்டது. இதன் அடிப்படையிலேயே அதன் செயற்பாடுகள் தொடர்கின்றன. ழூ வாகரை மீதான பொருளாதாரத்தடை மற்றும் கொலை வெறித்தாக்குதல்கள். ழூ ஏ-9 பாதையைத் திறக்க மறுத்து ஆறரை இலட்சம் மக்களைப் பட்டினிபோடுவது, அவர்களின் சுதந்திர நடமாட்டத்திற்குத் தடை போடுவது. ழூ யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராசா ரவிராஜ் அவர்கள் படுகொலை செய்யப்பட்டமை எனத்தொடர…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
ரவிராஜின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் சர்வதேசமே கவனத்தை திருப்பென உரத்த கோஷங்கள் படுகொலையுண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. நடராஜா ரவிராஜின் இறுதி அஞ்சலிக் கூட்டமும் கண்டனப் பேரணியும் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றபோது இன, மத வேறுபாடுகளை நிராகரித்து விட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர். படுகொலைக் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்ற திடமான உறுதிப்பாட்டுடன் திரண்டு வந்த மக்கள், கட்டுக்காவலுடன் உள்ள தலைநகரில் பட்டப் பகலில் இடம்பெற்ற இளம் பாராளுமன்ற உறுப்பினரின் படுகொலைக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டுமென உரத்த கோஷங்களை எழுப்பினர். கொழும்பு பொரளையிலுள்ள ஏ.எவ். ரேமன்ஸ் மலர்ச…
-
- 0 replies
- 1.6k views
-
-
மட்டக்களப்பு வாகரையின் எல்லைப் பகுதிகளில் சிறிலங்காப் படையினர் ஊடுருவி நிலைகளை அமைத்து பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரகாலமாக வாகரையின் கிருமிச்சசை, குஞ்சன்குளம், மதுரங்குளம் ஆகிய மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறீலங்காப் படையினர் தொடர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தி அங்கு வசித்து வந்த 350 குடும்பங்களை இடம்பெயரச் செய்துள்ளனர். மதுரங்குளத்தில் உள்ள பாடசாலையில் ஊடுருவிய படையினர் அப்பகுதிகளில் காவலரண்களை அமைத்து தமது நிலைகளை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அரசியல்துறையினரால் இலங்கை போர்நிறுத் கண்காணிப்புக்குழுவினருக்கு முறைப்பாடு செய்யப்ப…
-
- 1 reply
- 1.1k views
-
-
யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சென்ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவனுமான நடராசா ரவிராஐpன் படுகொலையைக் கண்டித்தும் துக்கம் அனுஸ்டித்தும் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவர்கள் கறுப்புப் பட்டி அணிந்து கல்லூரிக்குச் சென்றதை காணக் கூடியதாக இருந்தது யாழ்ப்பாணத்தில் ரவிராஜின் படுகொலையை இட்டு பொது மக்கள் மத்தியில் பலத்த விசனம் காணப்படுவதுடன் துக்கமும் காணப்படுகின்றது. இதே வேளை சென்ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவர்களும் கல்லூரி மாணவர்களும் கறுப்புப் பட்டி அணிந்து தமது துக்கத்தையும் வெளிப்படுத்தி வருகின்றார்கள். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1k views
-
-
யாழ்ப்பாணத்தில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை பயன்படுத்தி பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக எரி பொருள் நிரப்ப நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றார்கள். கொள்கலன்களில்(பவுசர்) கொண்டு வந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருட்கள் நிரப்பப்படும் நிலையில் குறிப்பி;ட்ட எரி பொருட்களின் குறைவுக்காக குறிப்பி;ட்ட தொகை கழிவாக வழங்கப்பட்டு வந்தது தற்போது குறிப்பிட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பெற்றோல் (பரல்கள்) தகரங்களில் அடைத்து கொண்டு வந்து வழங்கப்பட்டுள்ளது இந்த தகரங்களில் அடைத்து எடுத்துவரப்பட்ட பெற்றொல் 210 லீற்றர் எனத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் இதில் பத்து லீற்றர் முதல் பதினைந்து லீற்றர் வரை குறைவாக காண…
-
- 0 replies
- 957 views
-
-
நுவரெலியா – கம்பளை வீதியின் புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் 5 வாகனங்கள் சிக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இரட்டை பாதை பிரதான வீதியில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் இந்த மண்சரிவில் ஏற்பட்டது. சுமார் 100 மீட்டர் நீளத்திற்கு மண்சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே இந்த மண்சரிவில் சிக்கி 20 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர். வீதியின் குறுக்காக வீழ்ந்திருந்த மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களும் இதில் சிக்கியுள்ளனர். இதுவரை இந்த மண்சரிவில் சிக்கி உயிரிழந்த மூன்று பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை ஹட்டன் - கொட்டகலை இடையிலான மலையக தொடரூந்து பாதையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக தொடரூந்து சே…
-
- 0 replies
- 2.2k views
-
-
http://www.alaikal.com/index.php?option=co...3&Itemid=34
-
- 2 replies
- 1.5k views
-
-
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான வாகைரை நோக்கி இராணுவம் முன்னேற முயற்சி Sri Lanka Army moves into Tiger territory in fresh offensive [TamilNet, Tuesday, 14 November 2006, 15:52 GMT] Sri Lankan troops have moved into Liberation Tigers of Tamil Eelam controlled Vakarai region, beyond no-go zone, Tuesday morning, amid heavy artillery shelling, according to civil sources in Vakarai. Civilians have fled Maruthankulam and Kirimichchai villages where SLA troops have camped at the schools, according to the sources. LTTE figheters were engaged in a defensive fight throughout the day, the sources added.
-
- 2 replies
- 2.4k views
-
-
யாழ்பாணத்தில் இராணுவத்தின் பிடியில் இருக்கும் 6 இலட்சம் மக்களின் நிலையைக்கண்டு இந்தியா என்னும் மனிதாபிமான உதவிகள் எதுவும் செய்யமுன்வரவில்லை. அன்று இலங்கை அரசின் அனுமதியில்லாமலே வான்வழியாக உணவுப்பொதிகளைக் போட்டவர்கள் இன்று மெளனமாக இருப்பது ஏன்? தமிழ்நாட்டு முதலமைச்சரும் குரல் கொடுக்காதது எமக்கு ஏமாற்றத்தைத் தருகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்காக அரபுநாட்டில் இருந்து உணவுப்பொருட்கள் விமானமுலம் அனுப்பிவைக்கிறார்கள் ஆனால் இந்தியா என்ன செய்தது? இந்தியா தமிழ்நாட்டில் இருப்பவர்களும் தமிழர்கள் தானே? அவர்கள் தமது இனம் அயல் நாட்டில் அழிந்துகொண்டிருப்பதை இன்னும் பார்துகொண்டிருப்பார்களா?? இதற்கு அவர்கள் தான் செயல்முலம் பதில் செல்லவேண்டு…
-
- 5 replies
- 2.5k views
-
-
மன்னாரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் மூன்று சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் மன்னார் தொடருந்து நிலையத்திற்கு அருகில் இயற்கைக் கடன் கழிப்பதற்காக பற்றைக் காட்டிற்குச் சென்ற போது குண்டு வெடித்துள்ளது. இக்குண்டு வெடிப்பில் மூன்று சிறீலங்காப் படையினரும் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளதாக சிறீலங்காப் படைத் தலையகம் அறிவித்துள்ளது.
-
- 2 replies
- 1.3k views
-
-
இராணுவத்தின் கெடுபிடியால் குழந்தை பிறந்த நிலையில் தாய் பலி இராணுவத்தின் கெடுபிடியால் குழந்தை பிறந்த நிலையில் தாய் பலி மேலும் ஆறுமாதக் குழந்தையும் ஆறு வயது சிறுமி உட்பட இரண்டு கற்பிணித்தாய்களின் நிலை கவலைக்கிடம் சர்வதேச செஞ்சிலுவைக்குழு மற்றும் பிரதி மாகாண சுகாதார அதிகாரி மௌனம். வாகரை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படவேண்டிய நிலையில் அம்புலன்ஸ் வாகனம் கிடைக்கப்பபெறாமையால் வெருகல் முகத்துவாரப் பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் புனிதா (35) என்பவரே குழந்தை பிறந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதேவேளை படையினரின் எறிகணை வீச்சுக் காரணமாக பதுங்கு குழிக்குள் சென்ற மற்றுமொரு எட்டுமாத கற…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கையின் அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைவரப் போக்கைத் தீர்மானிக்கும் திங்களாக இந்த நவம்பர் மாதம் அமையப்போகின்றது. நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்று இந்த மாதத்துடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. நாட்டின் பாதுகாப்புச் செலவினத்தை இரட்டிப்பாக்கி அவரது அரசு சமர்ப்பிக்கப் போகும் வரவு-செலவுத் திட்டம் நாளை மறுதினம் நாடாளுமன்றில் பகிரங்கப்படுத்தப்பவிருக்கி
-
- 5 replies
- 2.7k views
-
-
யாழ்.குடா நாட்டில் தென்னிலங்கைப் படப்பிடிப்பாளர்களின் மோசடி. யாழ்ப்பாணம் குடாநாட்டு மக்களின் பசி பட்டினியை பயன்படுத்தி அவர்களை ஏமாற்றி படம் எடுக்கும் நடவடிக்கையில் தென்னிலங்கைச் சினிமாப் படப்பிடிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள் இத்தகைய ஒரு மோசடியான செயல் நேற்றுக்காலையில் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை இராணுவ உயர்பாதுகாப்பு வலய எல்லையில் இடம் பெற்றுள்ளது. நாளாந்தம் படைத்தரப்பினர் உணவுப் பொருட்கள் வழங்குகின்றார்களா எனப் பார்த்து வாங்குவதற்காக பல நூற்றுக் கணக்கான மக்கள் இந்தப் பிரதேசத்திற்கு சென்று காத்திருப்பது வழமையாகும் இந்த வகையில் நேற்றுக்காலையில் சென்ற மக்கள் பலத்த ஏமாற்றத்திற்கும் மோசடிக்கும் படைத் தலைமையும் மற்றும் தென்னிலங்கையில் இருந்து வருகை தந்த திரைப்படப் …
-
- 12 replies
- 3.2k views
-
-
Dear all, First, please excuse me as I dont know how to type in Tamil, but I will lean that quickly and write it in Tamil BBC has opened a discussion on their 'Have your Say' section about Child recruitment of GOSL and Sinhala Chauvanists are too busy in that discussion to justify/deny the UN accusation by giving false news and arguments. Since BBC is reacing many nationals worldwide, we should tell our side truths and news. We should gifht against barbaric GOSL in all possible fronts including foreigh media This is the link: http://newsforums.bbc.co.uk/nol/thread.jsp...=20061114090536 Please put your comments and shed the light on truth.
-
- 5 replies
- 2.2k views
-
-
வாகரை, ரவிராஜ், இராணுவத்தில் சிறார்... அசைவற்ற நிலையில் சர்வதேசம் தலைகள் கவலை தெரிவிக்க, வால்கள் கண்டனம் செய்கின்றன. வாகரை இனப்படுகொலையோடு, மாமனிதர் நடராஜா ரவிராஜ் மீதான கொலைவெறித் தாக்குதலானது, சர்வதேச சமூகத்தை நிலை தடுமாற வைத்துள்ளது. சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களினூடாக கண்டன அறிக்கைகள் வெளியிடுகின்றது மேற்குலகம். இவர்களால் இதற்குமேல் ஒரு அடிகூட நகரமுடியாது. இவ்வளவு காலமும் நடந்த இன அழிப்பிற்கு சாட்சியாக இருந்த சர்வதேசத்தின் நிலைப்பாட்டினால் உசுப்பேற்றி விடப்பட்ட மகிந்தர், எல்லை மீறிச் செயற்படுவதாக சர்வதேச சமூகம் கவலையடைகின்றது. மகிந்தரின் கட்டுமீறிய அராஜகச் செயற்பாடுகள், விடுதலைப் புலிகளின் அடுத்த நகர்விற்கு, எழுதப்படாத அங்கீகாரத்தை வழங்கி…
-
- 1 reply
- 1.3k views
-
-
யாழ் குடாநாட்டில் இன்று வாழ்ந்து கொண்டு இருக்கும் பொது மக்களைப் பொறுத்தவரையில் வாழ்வியலுக்கு வேண்டிய எந்த வகையான வசதிகளும் இல்லையென்பதே உண்மையாகும். குறிப்பாக பொது மக்களின் வாழ்வுக்கு வேண்டிய உணவுப் பொருட்கள் இல்லை உயிருக்கும் இன்று உத்தரவாதம் இல்லை. இதே போன்று மாணவர்களைப் பொறுத்த வரையில் கல்வியும் இல்லை அவர்களின் உயிர்களுக்கும் கூட உத்தரவாதம் இல்லையென்ற நிலமையே இன்று யாழ் குடாநாட்டில் காணப்படுகின்றது. இவ்வாறு யாழ்ப்பாணம் பல் கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பி;டப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்… சமாதானத்திற்கான பாதையென்று தெரிவித்தே நான்கு வருடங்களுக்கு முன்னர் ஏ9 வீதி திறக்கப்பட்டது. அந்தப் பாதையை மீண்டும் ம…
-
- 1 reply
- 1.2k views
-
-
http://www.nerudal.com/content/view/3207/70/ சீறும் படை என்ற பெயரில் துண்டுப்பிரசுரம்! இன்று காலை கொழும்பில்வைத்து படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் இனுடைய படுகொலைக்கு கருணா குழுவினர் உரிமைகோரியுள்ளனர். மட்டக்களப்பு சீறும்படை என்றபெயரில் இன்றுமாலை துண்டுப்பிரசுரமொன்றை மட்டக்களப்பில் விநியோகித்துள்ளனர். அந்தத் துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது- எமது எச்சரிக்கைகளை மீறி தொடர்ந்தும் வன்னிப்புலிகளின் அடிவருடிகளாகச் செயற்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மற்றுமொரு உறுப்பினர் இன்றுகாலை கொழும்பில் வைத்து தமிழின விடியலுக்காக கொன்றொழிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் 25ஆம் திகதி கிழக்கின் எமது தா…
-
- 14 replies
- 4.8k views
-
-
Dear Friends, You all are aware of the deteriorating situation in the peninsula and elsewhere in the north east. I am copying below an e-mail reply from Dr.N.Sivarajah who is currently the WHO rep in Jaffna and previously of the Medical Faculty in Jaffna. It is very worrying. Please make use of the information to publicise and pressurise for the reopening of the A-9 as a matter of urgency . Feel free to use his name (he is happy with that) but the statement is his own and not WHO. I am also attaching the latest information regarding IDPs. I have made an appointment with my local MP here in England and will be urging him to raise this issue in parliament and with the For…
-
- 3 replies
- 2k views
-
-
மகிந்த ராஜபச்ஸா என்றும் சிங்கள இனவெறி பிடித்த காட்டுமிராண்டி, பதவியேற்று எதிர்வரும் 19ம் திகதி வருடமாகின்றது. 17ம் திகதி வெற்றி பெற்ற அவன், 19ம் திகதி பதவியேற்ற நாளில் இருந்து அப்பாவிக் குழந்தைகள் முதல், முதியவர் வரை வேறுபாடின்றி பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர். தினமும் ஒரு வீட்டில் சாவுக்குரல் ஒலிக்கின்றது. இந்தக் கொலைக்காரன், மன்னாரில் சிறுமி, சிறுவர், வள்ளிபுனம் சிறுவர் பராமிப்பு இல்லம், கடந்தவாரம் வாகரையில் 6 மாதம் கூட அடையாத பல குழந்தைகள், மாமனிதர்கள் ரவிராஜ், யோசப் பரராஜசிங்கம், என்று ஏனைய சிங்களக் கொலைவெறித் தலைவர்களுக்கு நிகராவும் மேலாகவும் கொன்று குவித்தான். குவிக்கின்றான். இது வரை நாளும், அவனால் கொல்லப்பட்ட, மக்களின் தொகையை விபரங்களோடு, அனைவருக்கும் சுட்…
-
- 11 replies
- 3k views
-
-
ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காக கழகத்தின் சார்பில் நாடெங்கும் ஆர்ப்பாட்டம் பட்டினியால் செத்து மடியும் ஈழத் தமிழ் மக்களுக்கு உணவு உள்ளிட்ட பொருள்களை அனுப்பவும்இ வட கிழக்கு மாகாண இணைப்பை இந்தியா வலியுறுத்த வேண்டி, திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் விவரம் வருமாறு: சென்னை நாள்: 12-11-2006 ஞாயிறு காலை 10 மணி; இடம்: மெமோரி யல் ஹால்இ சென்னை; தலைமை: வழக்கறிஞர் கோ. சாமிதுரை எம்.ஏ.இ பி.எல்.இ (திராவிடர் கழகப் பொருளாளர்); முன்னிலை: கலி. பூங்குன்றன் (கழகப் பொதுச்செயலாளர்)இ கு.வெ.கி. ஆசான்இ அ. குணசீலன்இ வழக்கறிஞர் அருள்மொழிஇ மு.அ. கிரிதரன்இ கவிஞர் செ.வை.ரெ. சிகாமணிஇ இரா. வில்வநாதன்இ இர. இராம சாமிஇ ஆவடி ஆர். திருநாவுக்கரசு வட சென்னைஇ தென் சென்னைஇ தாம்பரம்…
-
- 1 reply
- 1.3k views
-
-
கண்ணீரும் புலம்பலும் விட்டு காரியமாற்றத் துணிந்து எழுக! இலங்கையில் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினையைத் தவறான கண்கொண்டு தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை "பயங்கரவாதமாக" சித்திரித்து நோக்கிய இந்தியாவுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இப்போது மெல்ல மெல்ல உண்மை புரியத் தொடங்கியிருக்கின்றது போலும். இலங்கையின் அண்மைக்கால சம்பவங்கள் தொடர்பாக இந்தியாவும் சர்வதேச சமூகமும் காட்டும் பிரதிபலிப்புகள் அதனை வெளிப்படுத்துகின்றன. வாகரையில் கடந்த எட்டாம் திகதி ஐம்பதுக்கும் அதிகமான அப்பாவித் தமிழர்களின் அகதிகளின் உயிர் குடிக்கக் காரணமான இலங்கை இராணுவத்தின் கண்மூடித்தனமான ஷெல், பீரங் கித் தாக்குதல்கள் குறித்து இலங்கை அரசுத் தலைமை கூறிய சமா தானங்கள் சமாளிப்புகள் ஏற்கவே முடியாதவை என்பதை…
-
- 1 reply
- 1.4k views
-