ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142623 topics in this forum
-
இராமேஸ்வரம் வான்பரப்பினூடாக பலாலிக்கு சிறிலங்கா விமானப்படை விமானங்கள் [செவ்வாய்க்கிழமை, 22 ஓகஸ்ட் 2006, 19:40 ஈழம்] [தி.நிர்மலா] யாழ். பலாலிக்கு தமிழகத்தின் இராமேஸ்வரம் வான்பரப்பினூடாக சிறிலங்கா விமானப்படையின் விமானங்கள் இயக்கப்படக்கூடும் என்று கூறப்படுகிறது. இரத்மலானைக்கும் பலாலிக்கும் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட விமான சேவைகளை சிறிலங்கா விமானப்படை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக கொழும்பில் உள்ள இராணுவ வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. புறப்படுதல் மற்றும் தரையிறங்கல் என்பன மாலை அல்லது இரவு நேரங்களிலேயே மேற்கொள்ளப்படவுள்ளதுடன் இரண்டுப் பயணங்கள் என சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின் ஆட்லறி தாக்குதல்களினால் கடந்த 12 ஆம் நாள் முதல் பலால…
-
- 0 replies
- 1.2k views
-
-
பொறளையில் 20 கிலோ எடையுள்ள குண்டு மீட்பு. கொழும்பு பொறளைப் பகுதியினுள் 20 கிலோ எடையுள்ள குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணியளவில் பொறளைப் பகுதியில் அநாதரவான நிலையில் சைக்கிள் ஒன்று காணப்பட்டது. மரக்கறி வியாபாரத்திற்காக சைக்கிளில் பொருத்தப்பட்ட பெட்டி ஒன்றினுள் இருந்தே இக்குண்டு மீட்கப்பட்டுள்ளது. இக்குண்டு நாடகம் சிறீலங்காப் படையினராலேயே அரங்கேற்றப்பட்டது என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
-
- 0 replies
- 933 views
-
-
பளைப் பகுதியில் கிபிர் விமானங்கள் குண்டு வீச்சு. விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான பளைப் பகுதியில் சிறீலங்கா விமானப் படையினரின் கிபிர் விமானங்கள் குண்டு வீசியுள்ளன. இன்று முற்பகல் 11 மணியளவில் இக்குண்டு வீச்சுகள் கிபிர் விமானங்கள் நடத்தியுள்ளன. இதன்போது ஏற்பட்ட சேதவிபரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
-
- 0 replies
- 919 views
-
-
மட்டக்களப்பு நகரிலிருந்து விடுதலைப் புலிகளின் நிர்வாக்காப் பகுதிகள் நோக்கிய எறிகணை வீச்சு. மட்டக்களப்பு நகர் பகுதியில் அமைந்துள்ள 233 வது படைப்பரிவில் இருந்து விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளை நோக்கி நேற்று திங்கள் இரவு 10.30 மணியளவில் கடுமையான செல் வீசப்பட்டுள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டியில் உள்ள குறிஞ்சாமுனை தாண்டியடி போன்ற இடங்களில் வீழ்ந்து வெடித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் இரவோடு இரவாக இடம்பெயர்ந்துள்ளனர். உயிர் சேதம் ஏதும் ஏற்படாத போதிலும் குடியிருப்புக்கள் பல சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது. இதேவேளை நேற்று முந்தினம் கடுமையாக செல் தாக்குதல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
-
- 0 replies
- 796 views
-
-
சம்பூர் பகுதி விடுதலை புலி போராளிகளின் கட்டுபாட்டில் இருக்கிறது. இதனால் திருகோணமலை துறைமுகத்துக்கு ஆபத்து என்று இலங்கையின் சர்வதிகாரி தெரிவித்துள்ளார். http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19332 தமிழர் துறைமுகம் வேறு பட்ட பலரின் ஆக்கிரமிக்குள் பல நூறு ஆண்டுகளாய் அடிமைபட்டு கிடக்கிறது. எங்கள் கவலை இந்த சர்வதேசநாடுகளுக்கு விளங்கவா போகுது????
-
- 18 replies
- 2.9k views
-
-
சிறி லங்கா அரசுக்கு எதிரான தமிழக நிலைப்பாடு நாட்டுக்கு ஆரோக்கியமானதல்ல - ராஜித சேனாரட்ன. சிறி லங்கா அரசாங்கம் தொடர்பாக தமிழகத்தில் கிளம்பியுள்ள எதிர்ப்பலையானது ஆரோக்கியமான விடயமல்ல. இது தொடர்பாக அரசாங்கம் சிந்தித்து செயற்படவேண்டும். தமிழக சட்டசபையில் சிறி லங்கத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை தொடர்பாக நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராஜித சேனாரட்ண தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கு யுத்தம் ஒருபோதும் தீர்வல்ல . தற்போதைய நிலைமையில் சர்வதேச சமூகம் அரசாங்கத்திற்கு எதிராகவே உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக கருத்துக்கேட்டபோதே அவர் மேற்…
-
- 1 reply
- 1.2k views
-
-
மட்டக்களப்பு மாஞ்சோலை அரசாங்க மருத்துவமனைப் பகுதியில் உள்ள மருத்துவ அதிகாரிகள் விடுதிக் கட்டடம் அடையாளம் தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி சேதமடைந்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.10 அளவிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றது. சம்பவத்தையடுத்து பணிகளை இடைநிறுத்திய மருத்துவமனை ஊழியர்கள் தமக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு கோரியுள்ளனர். சம்பவம் குறித்து மாவட்ட மருத்துவ அதிகாரி எச்.எம்.சுபைர் வாழைச்சேனை காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். தங்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கப்படும் வரை கடமைக்கு சமூகமளிக்கப் போவதில்லை என மருத்துவமனை ஊழியர்கள் வாழைச்சேனை சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளருக்கு அறிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக …
-
- 0 replies
- 841 views
-
-
"தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா அரசின் வன்முறைகளைக் கண்டித்து சிறிலங்காவுக்கு எதிரான தடைகளை விதிக்குமாறு" சுவிஸ் வாழ் தமிழர்கள் அந்நாட்டு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஒரு மாத காலமாக சுவிசின் மாநிலங்கள் தழுவிய ரீதியாக நடைபெற்று வந்த "சாவிலும் வாழ்வோம்" கவனயீர்ப்பு போராட்டத்தின் நிறைவு நாள் நிகழ்வில் பங்கேற்ற சுவிஸ் வாழ் தமிழர்கள் அந்நாட்டு அரசிடம் இக்கோரிக்கையை விடுத்தனர். சுவிஸ் தமிழர் பேரவை மற்றும் சுவிஸ் தமிழ் இளையோர் ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை (21.08.06) நண்பகல் சுவிஸ் நாடாளுமன்றத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான சுவிஸ் வாழ் தமிழர்கள் பங்கேற்றனர். சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச மற்றும் …
-
- 0 replies
- 802 views
-
-
பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ எனப்படும் புலனாய்வுத்துறையினர் இந்தியாவக்கு எதிரான தமது புலனாய்வு வேலைகளை, ஸ்ரீலங்காவில் மிகவும் ஆழமாக்கும் பணிகளில் முனைப்பாகச் செயல்படுகின்றனர். கடந்த ஓகஸ்ட் 14 ஆம் திகதி பாக்கிஸ்தானின் முன்னாள் தூதுவர் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் முயற்சியின் பின்னர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுவரும் முன்னர் இராணுத்திலும் புலனாய்வுத்துறையிலும் தேர்ச்சி பெற்ற மற்றுமொரு அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. முன்னைய தூதுவர் பஷீர் வாலி மொகமட் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் ஒன்றை தெளிவாக தெரியப்படுத்துகின்றது. அதாவது, பஷீர் வாலி மொகமட்டினால் சீராக புடம்போட்டுள்ள புலனாய்வுக் களத்தினை வழிநடத்துவதற்கான முயற்சியின் ஒரு கட்டமே, இந்த ஓய்வுபெற்ற விமானப்படைத் த…
-
- 3 replies
- 1.4k views
-
-
இலங்கைபோர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் புதிய தலைவராக நோர்வேயின் முன்னாள் இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் லார்ஸ் ஜோஹான் சொல்பேர்க் பதவியேற்கவுள்ளதாக இராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. தற்போதைய கண்காணிப்புக் குழுத் தலைவரான சுவீடன் நாட்டைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் உல்ப் ஹென்றிக்சன் இம்மாத இறுதியுடன் அந்தப் பதவியிலிருந்து விலகவுள்ளார். 54 வயதான மேஜர் ஜெனரல் சொல்பேர்க் நோர்வேஜிய இராணுவத் தளபதிப் பதவிலியிலிருந்து கடந்தாண்டு ஓய்வுப் பெற்றார். அதற்கு முன்னர் இராணுவத்தின் ஆறாம் படைப்பிரிவுத் தலைவராக 4 வருடங்கள் அவர் பணியாற்றியுள்ளார். கடந்த 10 வருட காலத்தில் இராணுவ இடமாற்றங்கள் சம்பந்தப்பட்ட முக்கிய பொறுப்பினை வகித்து வந்த அவர், இராணுவ காலாட்படைப் பிரி…
-
- 0 replies
- 917 views
-
-
தமிழீழ மண் மீட்ப்புப் போரில் வீரச்சாவை தழுவிக் கொணட மாவீரர்களுக்கு என் வீரவணக்கம். எல்லோரும் அவர்களின் கனவை விரைவாக்க இன் நாளில் முழுவீச்சாக செயல்படவேண்டும். - போரியல்(இராணுவம்), அரசியல், பொருளியல்(பொருளாதாரம்), மற்றும் மக்கள் பலப்படுத்தப்படவேண்டும். - சிறீலங்காவின் பொருளியலை பலவீனப்படுத்தப்படவேண்டும். புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் சிறீலங்காவுக்கான ஏற்றுமதி மற்றும் அன்னிய செலவாணியைக் குறைக்க வேண்டும். உங்கள் எல்லோரின் ஆக்க பூர்வமான கருத்துக்களை எதிர்பார்த்து நிற்கின்றேன். - நன்றி -
-
- 13 replies
- 3.1k views
-
-
உலகெங்கும் உள்ள 9 கோடிக்கும் அதிகமான தமிழ் இனத்தை பரிகாசம் செய்வதுபோல வெறும் 75 இலட்சம்பேர் கொண்ட அற்ப சிங்கள இனவெறியர்கள் ?????? திருமாளவன் ஆவேசம்.
-
- 5 replies
- 3.2k views
-
-
இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் அடுத்த தலைவராக நோர்வேயின் முன்னாள் இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் லார்ஸ் ஜோஹான் சொல்பேர்க் பதவியேற்கவுள்ளதாக இராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. தற்போதைய கண்காணிப்புக் குழுத் தலைவரான சுவீடன் நாட்டைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் உல்ப் ஹென்றிக்சன் இம்மாத இறுதியுடன் அந்தப் பதவியிலிருந்து விலகவுள்ளார். 54 வயதான மேஜர் ஜெனரல் சொல்பேர்க் நோர்வேஜிய இராணுவத் தளபதிப் பதவிலியிலிருந்து கடந்தாண்டு ஓய்வுப் பெற்றார். அதற்கு முன்னர் இராணுவத்தின் ஆறாம் படைப்பிரிவுத் தலைவராக 4 வருடங்கள் அவர் பணியாற்றியுள்ளார். கடந்த 10 வருட காலத்தில் இராணுவ இடமாற்றங்கள் சம்பந்தப்பட்ட முக்கிய பொறுப்பினை வகித்து வந்த அவர், இராணுவ காலாட்படைப் ப…
-
- 0 replies
- 864 views
-
-
வடபோர்முனை சண்டைக்காட்சிகள். 17.08.2006 http://www.pathivu.com/?ucat=videonews
-
- 0 replies
- 1.2k views
-
-
வடக்கு கிழக்கில் நடைபெறும் இராணுவத்தின நடவடிக்கைகள் மற்றும் வலிந்த தாக்குதல்களை கொழும்பிலிருந்து ஒருங்கிணைத்து வழிநடத்தும் கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் லோறன்ஸ் பெனான்டோ சிறீலங்கா படைத்துறைச் செயலகத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
- 1 reply
- 1.2k views
-
-
வடக்கில் கடந்த ஒரு வாரகாலத்துக்கு மேலாக கடும் சண்டை நடைபெற்றுவந்த முகமாலை, கிளாலிப் போர்முனைப் பகுதியில் சனிக்கிழமை காலை தொடக்கம் இனம் புரியாத மயான அமைதி நிலவுகின்றது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தப் பகுதியில் கடந்த 24 மணித்தியாலங்களுக்கு மேலாகப் பெரிய மோதல்கள் எதுவும் இடம்பெறவில்லை. விமானக் குண்டு வீச்சு மற்றும் ஷெல், பீரங்கித் தாக்குதல்களும் ஓய்ந்து போயுள்ளன. முகமாலை அடங்கலாக தென்மராட்சி போர் முனையில் அமைதி நீடிப்பதை படைத்தரப் பும் புலிகளின் வட்டாரங்களும் உறுதி செய்தன. இடையிடையே ஓரிரு ஷெல்கள் வெடித்தன. எனினும் அப்பிரதேசத்தில் சண்டை ஓய்ந்துள்ளது என்று கிளிநொச்சி வட்டாரங்கள் தெரிவித்தன. வெள்ளிக்கிழமை காலை முதல் இந்தப் பகுதிகளில் இருதரப்பினரிடையேயும் கடும் சண்…
-
- 15 replies
- 3.3k views
-
-
வவுனியா பகுதியில் இராணுவத்தினர் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்படுகின் றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்னிலங்கையில் பல பகுதிகளிலிருந் தும் ஒன்று சேர்க்கப்பட்ட துருப்பினர் கட்டம் கட்டமாக வவுனியாவுக்கு நகர்த்தப்பட்டு வரு கின்றனர் இவ்வாறு நகர்த்தப்படும் படையினரில் கணிசமானோர் வவுனியாவில் உள்ள படை முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள அதே வேளை, குறிப்பிடத்தக்க அளவிலான படை யினர் முன்னரங்க நிலைகளுக்கு அனுப்பப் பட்டு வருகின்றனர் என்று தகவல்கள் கூறு கின்றன. வடக்கில் முகமாலை, கிளாலி பகுதிகளில் குவிந்துள்ள புலிகளின் பலத்தை உடைப்பதற் காக தெற்கே வவுனியாவில் புலிகளின் கட் டுப்பாட்டுப் பகுதியினுள் அர சுப் படைகள் புதிய போர்முனை ஒன்றை திறக்கக்கூடும் என்று இரா ணுவ ஆய்வாளர்கள் …
-
- 0 replies
- 945 views
-
-
வடபோர்முனையில் தற்காப்புத் தாக்குதல்களே நடத்தப்பட்டன. சர்வதேச சமூகத்திடம் விடுதலைப்புலிகள் எடுத்துரைப்பு. தமிழீழ விடுதலைப் புலிகள் சர்வதேச சமூகத்திடம் முக்கிய தகவல் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரியவருகிறது. விடுதலைப் புலிகளின் அரசியற் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச் செல்வன் நோர்வே தரப்பினர் ஊடாக இந்த தகவலை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக வடகிழக்குப் பகுதிகளில் மாவிலாறு மற்றும் மண்டைதீவுப் பகுதிகளில் தற்காப்புக் கருதிய தாக்குதல்களே தம்மால் நடத்தப்பட்டது எனத் தெரிவித்துள்ள விடுதலைப் புலிகள், அரசாங்கம் வான்தாக்குதல்கள், எறிகணைத் தாக்குதல்கள் உள்ளிட்ட அனைத்து தாக்குதல்களையும் நிறுத்தினால் தாமும் தாக்குதல்களை நிறுத்த தயார் என தகவல் அனுப்பியுள்ளதாக தெரியவருகி…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கைக்கு மேலும் 05 கிபிர் விமானங்கள் கடந்த வருடம் வந்தடைந்துள்ளதாக அறியமுடிகிறது. இலங்கைக்கு முதன் முதல் 1995-1996ம் ஆண்டு காலப்பகுதியில் கிபிர் விமாங்களை அமரிக்காவின் இராணுவ தளபாட வர்த்தக உடன்படிக்கையின்படி விற்றிருந்தது. 1995ம் ஆண்டில் விற்கப்பட்டிருந்த கிபிர் விமாங்கள் சி.2 தரத்திலானவை. ஏனினும் 2005ம் ஆண்டு சி.7 தரத்திலான மேலும் 5 நவீன கிபிர் விமாங்களை இலங்கை அரசு கொள்வனவு செய்துள்ளது. தற்போது இலங்கையில் 9 கிபிர் விமானங்கள் சேவையில் இருப்பதாக அறியமுடிகிறது. 2006ம் ஆண்டு தமிழ் மக்கள்மீது குண்டு போடுவதற்கு 1995ம் ஆண்டு மற்றும் 1996ம் ஆண்டு காலப்பகுதியில் கொள்வனவு செய்யப்பட்ட பழைய கிபிர் விமாங்களையே இலங்கை அரசு பயன்படுத்தி இருந்தது. உலகத்தில் 04நாடுகளில் மட்டும் இந்த நா…
-
- 0 replies
- 1.1k views
-
-
கோட்டைப் படைமுகாமிலிருந்து பொதுமக்களின் குடிமனைகள் நோக்கி எறிகணைத் தாக்குதல். பொதுமக்களின் குடிமனைகளை இலக்கு வைத்து, கண்மூடித்தனமான எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. நேற்று மாலை தொடக்கம், யாழ் கோட்டை - பலாலி படைத் தளங்களில் இருந்து, பொதுமக்களின் குடிமனைகளை இலக்கு வைத்து, சிங்களப் பயங்கரவாதப் படைகளால் கண்மூடித்தனமான எறிகணை தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன. கோட்டைப் படைத் தளத்தில் இருந்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளை நோக்கி, சிங்களப் பயங்கரவாதப் படைகளால் பல்குழல் உந்துகணைகள் ஏவப்படுகின்றன. சிங்களப் பயங்கரவாதப் படைகளால் ஏவப்படும் எறிகணைகள், தென்மராட்சி மந்துவில், மிருசுவில், கொடிகாமம், வரணி ஆகிய பகுதிகளில் வீழ்ந்து வெடிப்பதாக, தமிழீழ வ…
-
- 0 replies
- 818 views
-
-
வலிகாமத்தின் வடமேற்கேயுள்ள சித்தங்கேணி, சுழிபுரம் காளவன் சந்தி, மாவடி, வடலியடைப்பு ஆகிய பகுதிகளில் அமைந்திருந்த சிறீலங்கா படை முகாம்கள் மூடப்பட்டுள்ளன. குறிப்பிட்ட நான்கு படை முகாம்களிலும் நிலைகொண்டிருந்த சிறீலங்கா படையினர், காரைநகர், பொன்னாலை, பண்டத்தரிப்பு ஆகிய பகுதிகளில் உள்ள படை முகாம்களுக்கு நகர்த்தப்பட்டுள்ளனர். எனினும் மாலை வேளைகளில் சித்தங்கேணி, வழக்கம்பிராய், காளவன் சந்தி, மாவடி, வடலியடைப்பு ஆகிய பகுதிகளுக்கு உந்துருளிகளில் செல்லும் சிறீலங்கா படையினர், வீதிகளில் நிற்போரை கண்மூடித்தனமாக தாக்கி வருகின்றனர். நாளாந்தம் பத்து உந்துருளிகளில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்லும் இருபது வரையான சிறீலங்கா படையினர், பிரதான வீதிகளிலும், குச்சொழுங்கைகளிலும் மக்களை…
-
- 0 replies
- 978 views
-
-
வடபோர் முனையில் சிறீலங்கா இராணுவத்தினரால் வலிந்த தாக்குதல் ஆரம்பிக்கப்பட்ட போதும் அதனை புலிகள் முறியடித்து இராவத்தினரின் முன்னணி நிலைகளை விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர். தற்பொழுது மோதல்கள் தணிந்திருப்பதாகக் கூறப்படுகின்றபோதும் யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளிடம் இழந்த பகுதிகளை மீளக் கைப்பற்றுவதற்கு தொடர்ந்து இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப் போவதாக சிறீலங்கா படைத்தரப்பு அறிவித்துள்ளது.
-
- 8 replies
- 2.5k views
-
-
வங்காலை வெறிச்சோடியது: தமிழகத்துக்கு அகதிகளாக ஒரேநாளில் 543 பேர் மன்னார் வங்காலை கிராம மக்கள் அங்கிருந்து ஒட்டுமொத்தமாக வெளியேறி தமிழகத்துக்கு அகதிகளாகச் சென்றுள்ளனர். தனுஸ்கோடி அரிச்சல்முனைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை அனைவரும் சென்றடைந்தனர். பிற்பகல் 3.30 மணி வரை 48 படகுகளில் 124 குடும்பங்களைச் சேர்ந்த 543 பேர் அகதிகளாக அரிச்சல்முனை கடற்கரைக்கு சென்றடைந்துள்ளனர். தமிழக காவல்துறையினர் விசாரணை நடத்தி அவர்கள் அனைவரையும் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமிற்கு அனுப்பி வைத்தனர் http://www.eelampage.com/?cn=28335
-
- 0 replies
- 1k views
-
-
ஐரோப்பியத் தடை: நோர்வேக்கு கேகலிய ரம்புக்வெல எதிர்ப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத் தடையை விமர்சனம் செய்திருந்த நோர்வே சிறப்புத் தூதுவருக்கு சிறிலங்கா அமைச்சர் கேகலிய ரம்புக்வெல கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: 25 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியமானது விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்த நீண்ட விஞ்ஞானப்பூர்வமான ஆராய்ச்சிக்குப் பின்னர் தடை விதிக்கும் முடிவை மேற்கொண்டது. ஐரோப்பியத் தடை குறித்து தொடக்கத்தில் விடுதலைப் புலிகள் கூறி வந்த கருத்தையே நோர்வேத் தரப்பும் தெரிவிக்கிறது. இத்தகைய கருத்தை நோர்வே சிறப்புத் தூதுவர் ஹன்சன் பௌயர் வெளியிட்டமை வருத்தமளிக்கிறது என்றார் கேகலிய ரம்புக்வெல http://www.eelampage.c…
-
- 1 reply
- 950 views
-
-
யாழ். குடாவிலுள்ள இராணுவ முனைகளில், கடந்த ஒருவாரகாலமாக இடம்பெற்றுவந்த சண்டையின்போது,விடுதலைப்புலி
-
- 5 replies
- 1.3k views
-