Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சமாதான நடவெடிக்கையில் சகல தரப்பினரும் இனைந்து தீர்வுகாணவேண்டும் - நிருபமாராவ் இன்று இந்தியாவின் 57வது சுதந்திரதினம் கொழும்பிலுள்ள உயர் ஸ்தானிகர் இல்லத்தில் கொண்டாடப்பட்டது. இதில் பிரதம அதிநிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய நிருபமாரவ் சகலதரப்பினரும் இணைந்து தேசிய பிரச்சனைக்கான தீர்வை காணவேண்டும் என இந்தியா அறிவுருத்தியுள்ளதாக தெரிவித்தார்.. சகல தரப்பினரும் பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா உதவுவதாகவும் . இரத்தம் சிந்தாமல் தீர்வு வெகுசீக்கிரம் எட்டப்படும் என மேலும் தனது உரையில் தெரிவித்தார்.. http://www.virakesari.lk/vira/html/head_vi...ew.asp?key=1778

    • 4 replies
    • 1.6k views
  2. சிறிலங்காவின் தனியார் மற்றும் அரச ஊடகங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்களின் நேர்காணல்கள் இடம்பெறுவதைத் தடுப்பது குறித்து மகிந்த ராஜபக்ச இன்று ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளார். மகிந்தவின் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரச மற்றும் அரச ஊடகங்களின் பொறுப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்களின் நேர்காணல் ஒலி, ஒளிபரப்பாவது நாட்டின் பாதுகாப்பு ஆபத்தானது என்று அண்மையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு சபையில் மகிந்தவிடம் சிறிலங்காவின் முப்படை தளபதிகள் முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து இக்கூட்டத்தை மகிந்த கூட்டியுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் தனியார் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிறுவ…

  3. வவுனியாவிலிருந்து மக்களை பாதுகாப்பான இடத்துக்கு இடம்பெயருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது!!!!! இது வவுனியாவிலும் புதிய கள முனையைத்திறக்கும் முயற்சியாகவும் இருக்கலாம் அல்லது இராணுவத்தை குளப்பும் நடவடிக்கையாகவும் இருக்கலாம்.

  4. வன்னியில் இன்றும் விமானக் குண்டு வீச்சு [புதன்கிழமை, 16 ஓகஸ்ட் 2006, 15:26 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளான வன்னியில் இன்றும் சிறிலங்கா விமானப் படையினர் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். விமானப் படையின் கிபீர் ஜெட் விமானங்கள் இன்று புதன்கிழமை காலை 7.30 மணியளவிலும் பிற்பகல் 1 மணியளவிலும் வன்னி வான்பரப்பினுள் புகுந்கு இருமுறை தாக்குதல்களை நடத்தியுள்ளன. கடந்த திங்கட்கிழமை நடந்த விமானக் குண்டுவீச்சுத் தாக்குதலில் முல்லைத்தீவு பாடசாலை சிறுமிகள் 61 பேர் படுகொலை செய்யப்பட்ட துயரம் ஆறுவதற்குள் மீண்டும் சிறிலங்கா விமானப் படை தொடர்ச்சியாக மீண்டும் தாக்குதலை நடத்தியி…

  5. கொழும்பு குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டோருக்கு அமெரிக்கா இரங்கல் [செவ்வாய்க்கிழமை, 15 ஓகஸ்ட் 2006, 18:35 ஈழம்] [ம.சேரமான்] கொழும்பு குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டோருக்கு அமெரிக்கா இரங்கல் தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சிறிலங்கா சமாதான செயலகத்தின் பிரதிச் செயலாளர் கேதீஸ்வரன் லோகநாதன் ஓகஸ்ட் 12 ஆம் நாள் சுட்டுக்கொல்லப்பட்டமைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவிக்கிறது. மேலும் நேற்று திங்கட்கிழமை பாகிஸ்தானிய தூதரகப் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் கொல்லப்பட்டோருக்கும் எமது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இனப்பிரச்சனையில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருது குறித்து அ…

  6. இலங்கை நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான அமைச்சின் பிரதித் துணைச் செயலாளர் ஸ்டீவ் மான் நாளை வியாழக்கிழமை இலங்கைக்கு வருகை தர உள்ளார். சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் அரசாங்க தரப்பினருடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் தற்போதைய நிலைமை குறித்தும் அமைதி முயற்சிகள் குறித்தும் அவர் விவாதிக்க உள்ளார். ஸ்டீவ் மானின் பயணத்தை அமெரிக்க தூதுவரகப் பேச்சாளர் உறுதி செய்துள்ளார்

  7. மனித உரிமைகளை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுத்துள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்த போது இதனைத் தெரிவித்தனர். இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்தும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ஈடுபாட்டுடன் செயற்படுத்தவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி பேச்சுக்களுக்கு திரும்பவும் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் வலியுறுத்தினர். மனித உரிமைகளை மீறுவோரை சிறிலங்கா அரசாங்கம் தண்டிக்க வேண்டும் என்றும் வன்முறைகள் கைவிடப்பட வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. "சூடான் மற்றும் ஈராக்கில்தான் சர்வதேச அரச சா…

    • 1 reply
    • 937 views
  8. யுத்த நிறுத்தத்திலிருந்து சிறிலங்கா அரசாங்கம் விலகாது என்று ஊடகத்துறை அமைச்சர் அனுரா பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகவியலாளர்களிடம் அனுரா பிரியதர்சன யாப்பா கூறியதாவது: விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியமையால் அரச படைகள் தாக்குதல் நடத்தின. மாவிலாறு மோதலுக்கு புலிகளே பொறுப்பு. அதுவே வடமுனைக்கும் விரிவடைந்துள்ளது. அமைதிப் பேச்சுக்களிலிருந்தும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்தும் சிறிலங்கா அரசாங்கம் விலகாது என்றார் அவர்.

  9. சிறிலங்கா அரசின் நகைப்புக் கிடமான வீடியோ இழவு இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு மிகவும் முக்கியமான classified வீடியோவை வெளியிட்டிருக்கிறது. இந்த வீடியோ முல்லைத்தீவுப் பகுதிக்கு (Naddalamoodankulam) மேலே பறந்து எடுக்கப்பட்டதாம். 28 ஜூலை 2004ல் எடுத்த இந்த ஒளிப்படத்தில் புலிகள் இராணுவ உடுப்புடன் பயிற்சி எடுப்பதும் Camouflage செய்யப்பட்ட ஊர்திகளில் செல்வதும் ஆயுதமேந்திய புலிகளைத் தாங்கிய வண்டிகளையும் “குழந்தைகள் இல்லம்” என்று சொல்லப்படுவதைச் சுற்றிய பாதுகாப்பையும் தெளிவாகக் காணலாம் என்று சொல்லியிருக்கிறது. செய்தி நெட்டார் கண்ணிலே விளக்கெண்ணெய் ஊற்றி ஊற்றி எத்தனை high resolution மானிட்டரில் பார்த்தாலும் ஒன்றுமே தெரியமாட்டேனென்கிறதே. இதெல்லாம் இலங்கை இராணுவத்த…

  10. கடந்த சனிக்கிழமை அதிகாலை 07.00 மணிக்கு முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் செஞ்சோலை பாடசாலையில் பிள்ளைகள் மீது 16 தடவைகளுக்கு மேல் குண்டுகளை வீசி 61 பிள்ளைகளை கொலை செய்து, 150 பிள்ளைகளை படு காயப்படுத்திய சிறீலங்கா அரசின் பயங்கரவாதச் செயலை டேனிஸ் தமிழ் தோழமை ஒன்றியம் வன்மையாகக் கண்டிக்கிறது. முல்லைத்தீவுப் பகுதியில் உள்ள பல்வேறு பாடசாலைகளில் இருந்து ஒன்று கூடி போரினால் புலம் பெயர்ந்த மக்களுக்கு முதலுதவிச் சிகிச்சை செய்வது பற்றிய பயிற்சி நெறியை கற்றுக் கொண்டிருந்த இம்மாணவர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் தற்செயலானதல்ல, நன்கு திட்டமிட்டு குறி தவறாமல் சிறீலங்கா பயங்கரவாத அரசினால் நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலாகும் என்பதை சர்வதேச சமுதாயம் புரிந்துகொள்ள வேண்டும். …

  11. சிறீலங்காப் படையினரால் செஞ்சோலை வளாகத்தில் மாணவிகள் வைத்து கொல்லபட்ட சம்பவத்தைக் கண்டித்து யேர்மனியில் உள்ள யுனிசெவ் நிறுவனத்திடம் மனுக் கையளிக்கப்பட்டுள்ளது.யேர்மனி உள்ள அனைத்து அமைப்புக்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் டுசில்டோவ் நகரில் உள்ள யுனிசெவ் நிறுவத்தின் பணிமனைக்குச் சென்று மனுவினைக் கையளித்துள்ளனர்.இன்று பிற்பகல் 1 மணிக்கு மனு பிரிட்டிகேற மானிடம் BRIGITTE HERZMANN கையளிக்கப்பட்டுள்ளது. நன்றி-பதிவு

  12. சிறீலங்காக படையினரின் கொலை வெறியாட்டத்திற்கு தமிழீழத் தேசியத் தலைவர் பதிலளிப்பார் என தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். வள்ளிபுனத்தில் மாணவிகள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் ஐ.பி.சி தமிழுக்கு தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்.... முன்பொரு காலம் இருந்தது சிங்கள காடையர்கள் எங்களைப் பொல்லுகளாலும் தடியாலும் கத்தியாலும் தாக்கிய போது எம்மால் திருப்பித் தாக்க முடியாத காலம் ஒன்று இருந்தது. தலைவர் தலைநிமிர்ந்த பொழுது அந்த நிலமை எந்தளவு தூரம் மாறியிருக்கிறது என்பதை நாம் அறிவோம். எல்லாவற்றுக்கும் முடிவு உண்டு எங்கள் தலைவரிடம் எல்லாவற்றுக்கும் பதில் உண…

  13. யாழ்தீவகப் பகுதி நோக்கி சென்றுகொண்டிருந்த நோயாளர் காவுவண்டியை அல்லைப்பிட்டி சோதனைச் சாவடியில் வைத்து சோதனை என்ற பெயரில் சிறிலங்காப் படையினர் நேரக் கணிப்புக் குண்டு ஒன்றை காவு வண்டிமீது பொருத்தியுள்ளனர். யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து தீவகம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த நோயாளர் காவுவண்டியிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலை காவுவண்டியில் வைத்து வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியரால் இது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பொலிஸாருக்கு மருத்துவரால் முறைப்பாடு செய்யப்பட்டதன் பின்னர் சம்பவஇடத்திற்கு வந்த பொலிஸார் அதனை மீட்டு வெடிக்கவைத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தினர் படையினரிடம் கேட்…

  14. செஞ்சோலையில் பள்ளி மாணவிகள் சிங்கள வான்படை மேற்கொண்ட கோரகொலை வெறியாட்டத்தைக் கண்டித்து கனேடியத் தமிழர்கள் இன்று 12 மணிநேரப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இன்று ரொறன்ரோ பெரும்பாகத்தில் நான்கு இடங்களில் இந்த கண்டனப் போராட்டத்தை கனேடியத் தமிழர்கள் முன்னெடுத்துள்ளனர். ஸ்காபரோ பகுதியில் அமைந்துள்ள கனடா கந்தசாமி கோவில் வெளியரங்கில் கடும்வெய்யிலையும் பொருட்படுத்தாது பெருமளவான தமிழர்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்நிகழ்விலிருந்து சில படங்கள் நன்றி -சங்கதி

  15. சிங்களப் படைகளால் நேற்று முல்லைத்தீவில் மேற்கொள்ளப்பட்ட கோரக் கொலைவெறி குண்டு வீச்சு மற்றும் தொண்டர் நிறுவனப் பணியாளர்களின் படுகொலை என்பவற்றைக் கண்டித்து திருகோணமலை மாவட்டத்தில் முழுமையான கதவடைப்புப்பும் துக்கமும் கடைப்பிடிக்கப்படவுள்ளது. இதற்கான அழைப்பை திருமலை மாவட்ட பொங்குதமிழ் சமூகம் விடுத்துள்ளது. இது தொடர்பாக நேற்று செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அன்பான தலைநகர்வாழ் தமிழ் பேசும் மக்களே: ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் திட்டமிட்ட முறையில் தமிழர் தாயகப் பகுதிகளில் தொடக்கி விடப்பட்டள்ள இன அழிப்பு போரின் உச்சகட்டமாகவும், வெறித்தனமாகவும் 14.08.2006 அன்று உடையார்கட்டில் உள்ள செஞ்சோலை சிறுவர் இல்லம் மீது மிகக்கொடூரமன முறையி…

  16. கொழும்பு சுடரொளி நாளேடு அலுவகத்திற்குள் சிறிலங்கா கடற்படையினரும் காவல்துறையினரும் இன்று அத்துமீறி உள் நுழைந்து தீவிர தேடுதல் கெடுபிடியினை மேற்கொண்டுள்ளனர். சுடரொளி அலுவலகத்திற்குள் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு நுழைந்த படையினர் அங்குள்ள அனைவரதும் அடையாள அட்டைகளைக் கேட்டு விசாரணை செய்துள்ளனர். மேலும் அங்குள்ள பழைய சுடரொளி நாளேடு கட்டுக்களை புரட்டி அவிழ்த்தும் சோதனை நடத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுடரொளிப் பணியாளர்களிடம் கடுமையான விசாரணையை மேற்கொண்டிருந்தனர். ந்ன்றி-புதினம்

  17. முல்லைத்தீவில் பாடசாலை சிறுமிகள் 61 பேர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து எதிர்வரும் ஓகஸ்ட் 18 ஆம் நாள் முதல் தமிழ்நாடு முழுவதும் கறுப்புப் பட்டிகள் அணிந்தும், கறுப்புக் கொடிகள் தாங்கியும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு தமிழீழ விடுதலை ஆதரவு ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் பழ.நெடுமாறன் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் தமிழர் பகுதியில் வல்லிபுனம் செஞ்சோலை வளாகத்தின் மீது சிங்கள விமானக் குண்டு வீச்சின் விளைவாக 61-க்கும் மேற்பட்ட பள்ளிச்சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டும் 129-க்கும் மேற்பட்ட சிறுமிகள் படுகாயமடைந்தும் உள்ள செய்தி மனித நேயம் கொண்ட அனைவரையும் பதைபதைக்கச் செய்துள்ளது. ஏற்கெனவே போரில் பெ…

  18. சிறிலங்கா விமானப்படையினரின் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை சிறுமிகளின் இறுதி வணக்க நிகழ்வுகள் இன்று நடைபெற்றன. முல்லைத்தீவு மகாவித்தியாலய மாணவிகள் ஏழு பேரின் வணக்க நிகழ்வுகள் நடைபெற்றன. முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வுக்கு பாடசாலை முதல்வர் அருட்தந்தை றொபின்சன் அடிகளார் தலைமை தாங்கினார். இதேபோல் விசுவமடு, தர்மபுரம் மகாவித்தியாலயங்களிலும் வணக்க நிகழ்வுகள் நடைபெற்றன. விசுவமடுப் பாடசாலையில் நடைபெற்ற நிகழ்விற்கு பாடசாலை முதல்வர் ஐ.கே. தவரட்ணமும், தர்மபுரம் பாடசாலையில் நடைபெற்ற நிகழ்விற்கு முதல்வர் சி.பூலோகராசாவும் தலைமை தாங்கினர். ஒட்டுசுட்டான் பாடசாலையில் நடைபெற்ற நிகழ்விற்கு முதல்வர் ச…

  19. சிறிபுரவில் 9 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய ஊர்க்காவல் படையினர் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறிபுர சிறிலங்கா காவல்நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள ஊர்காவல் படையினர் இடத்தில் கவந்திசபுரவைச் சேர்ந்த 9 வயது சிறுமியை மூவர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியுள்ளன

  20. சிறிலங்கா கடற்படையிலிருந்து விலகி தலைமறைவாகி விட்ட கடற்படையினர் மீண்டும் படையில் இணைந்து கொள்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா கடற்படை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2001 ஆம் ஆண்டு யூன் 9 ஆம் நாளுக்குப் பின்னர் கடற்படையிலிருந்து விலகியோர் ஓகஸ்ட் 15 ஆம் நாள் முதல் 31 ஆம் நாள் வரை மீண்டும் இணைந்து கொள்வதற்கான அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அத்தகையோர் பணியில் இணையும் நாள் முதல் அனைத்துவிதமான ஊக்கத்தொகைகளும் வழங்கப்படும். இந்த காலகட்டத்தில் இணைவோர் மீது எதுவித ஒழுங்கு நடடிக்கையும் மேற்கொள்ளப்படமாட்டாது. வெலிசறை, கற்பிட்டி, மதவாச்சி, பூசா, காலி, தங்காலை மற்றும் திருகோணமலை முகாம்களுக்குச் சென்று அவர்கள் தங்களை இணைத…

  21. யாழ். உதயன் நாளிதழின் விநியோகப்பாளர் ஒருவரை சிறிலங்கா இராணுவத்தினர் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். புத்தூர்ப் பகுதியில் இன்று முற்பகலில் விநியோக வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவரை இராணுவத்தினர் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். கொல்லப்பட்டவர் பாஸ்கரன் (வயது 44) என்று தெரியவந்துள்ளதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.

  22. தமிழகத்தின் கோவை மற்றும் திருப்பூர் நகரங்களில் சிங்கள தேசியக் கொடிகள் இன்று எரிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவில் சிறிலங்கா விமானப்படையின் வான் குண்டுத் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் பலியெடுக்கப்பட்டதைக் கண்டித்து தமிழகத்தில் சிங்கள தேசியக் கொடிகள் எரிக்கப்பட்டுள்ளன. கோவையில் பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான கோவை கு.இராமகிருட்டிணன், ஆட்சிக் குழு உறுப்பினர் வெ.ஆறுச்சாமி உள்ளிட்டோர் தலைமையில் செஞ்சிலுவைச் சங்க அலுவலகம் அருகே சிங்கள தேசியக் கொடிகள் எரிக்கப்பட்டன. இதையடுத்து 40 பெரியார் திராவிடர் கழகத்தின் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூரில் பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில களப்பணி ஒருங்கிணைப்பாளர் அங்ககுமார் தலைமையில் சிங்களத் தேசி…

  23. முல்லைத்தீவு செஞ்சோலை வளாகத்தில் அப்பாவி 61 மாணவர்கள் கொல்லப்பட்ட இன அழிப்பு முறையை சர்வதேசத்திற்கு எழுத்துச் செல்லுமாறு மறுமலர்ச்சி முன்னேற்றக் கழகதின் பொதுச் செயலாளர் வை.கோ அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கத்திடம் கேட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் தமது கொள்கையில் எதுவித மாற்றமும் இல்லை என வைகோ ஊடகவியலாளரிடம் தெரிவித்துள்ளார். செஞ்சோலை வாளாகத்தில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதல்கள் முழு உலகையையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி நாகரிகமுள்ள மனித வர்க்கத்தின் மனச்சாட்சியை உலுக்கிவிட வேண்டும் என்றும் வைகோ வேண்டுகோள் விடுத்தார். அண்மைக்கால சரித்திரத்தில் சிறீலங்காவைத் தவிர உலகில் உள்ள எந்தவொரு நாடுமே அப்பாவிச் சிறுவர்கள் மீது அநாகரிகமான கேவலமான ச…

  24. வடக்கில் விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்காப் படையினருக்கும் இடையில் நடைபெற்ற மோதல்களில் உயிரிழந்த படையினரின் சடலங்கள் ரத்மலானை விமான நிலையத்திற்கு எடுத்துவரப்பட்டுள்ளன. அத்துடன் மோதல்களில் காயமடைந்த படையினரும் கொண்டு வரப்பட்டுள்ளனர். தற்பொழுது ரத்மலானை மருத்துமனைக்கு காயமடைந்தவர்கள் மற்றும் சடலங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. பின்னர் அங்கிருந்து காயமடைந்தவர்களை கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு காவு வண்டிகளில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர் என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன

  25. நழுவும் கருணாநிதிபழ. நெடுமாறன் தாக்கு இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தனது கடமையிலிருந்து தமிழக முதல்வர் கருணாநிதி நழுவி வருகிறார் என்று உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். பழ.நெடுமாறன் தலைமையிலான உலகத்தமிழர் பேரமைப்பின் மாநாடு சமீபத்தில் சேலத்தில் நடந்தது. மாநாட்டில் கலந்து கொண்ட நெடுமாறன் பின்னர் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவர்கூறுகையில், இலங்கைத்தமிழர் பிரச்சினையில் மத்திய அரசின் நிலை எதுவோ, அதையே தமிழக அரசும் கடைப்பிடிக்கும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். நீண்ட நெடுங்காலமாக நிலவும் இலங்கைத் தமிழர் பிரச்சினையை தீர்க்க வேண்டிய அவசியத்தை மத்திய அரசிடம் எடுத்துரைத்து, இலங்கை தொடர்பான இந்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.