ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142604 topics in this forum
-
சேருவில் பிரதேசம் நோக்கி விடுதலைப் புலிகள் இன்று தமது படைநகர்வை நடத்தியுள்ளனர். இன்று காலை ஆரம்பமான தாக்குதல் தற்பொழுதும் தொடர்கிறது. சேருவிலப் பகுதியில் அமைந்துள்ள பல இடங்களை விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர். பிந்திக் கிடைத்த தகவலின் படி சேருவிலவையும் சேருநுவர பகுதியையும் இணைக்கும் பாலம் விடுதலைப் புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. விடுதலைப் புலிகளின் படையணிகள் சேருநுவரப் பகுதி நோக்கி முன்னேறுகின்றன. ஏனைய தகவல்கள் விரைவில்
-
- 8 replies
- 2k views
-
-
மூதூரில் விடுதலைப் புலிகளிடம் அனுமதி கேட்டு காயமடைந்தவர்களை மீட்கும் படையினர் ஜ வியாழக்கிழமைஇ 3 ஆகஸ்ட் 2006 ஸ ஜ ஜெயராசா ஸ மூதூர் மருத்துவமனைக்கு இராணுவம் கிபீர் தாக்குதலையும் ஆட்லறி எறிகணைத்தாக்குதலையும் மேற்கொண்டது. இந்த எறிகனைகள் ஊழியர்களின் அறைகளுக்குள் வந்து விழுந்தது ஸ்தலத்திலையே மூதூர் மருத்துவமனை ஊழியர்கள் 9 பேர் பலியாகினர். மூதூர் நகரத்திற்குள் சுமார் 2 ஆயிரம் விடுதலைப் புலிகள் நிலைகொண்டிருக்கிறார்கள். இவர்கள் இராணுவத்தினரை நோக்கி தாக்குதல்களை தொடர்ந்தவண்ணம் உள்ளனர். தரைவழி போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன. இன்று பிற்பகல் 4 மணிக்கு உலங்கு வானூர்தி ஒன்று அங்குள்ள பாடசாலை மைதானத்திற்குள் இறங்கி காயமடைந்த இராணுவத்தினரை ஏற்றிச்சென்றது. அவர்கள் திருமலை கொ…
-
- 0 replies
- 1k views
-
-
மன்னாரில் புலிகள் பதில் எறிகணைத் தாக்குதல் படையினர் இருவர் படுகாயம். மன்னாரில் படையினரால் ஏவப்பட்ட ஆட்லறி எறிகைணத் தாக்குதல்கள் விடுதலைப் புலிகளின் ஆட்லறி மற்றும் மோட்டார் எறிகணைத் தாக்குதலை அடுத்து முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணியளவில் உயிலங்குளம் மற்றும் தள்ளாடி இராணுவ முகாம்களிலிருந்து ஏவப்பட்ட எறிகணைகளுக்கு பதிலடியாகவே விடுதலைப் புலிகளின் மோட்டார் படையினர் தாக்குதலைத் தொடுத்துள்ளனர். மன்னார் முருங்கன் இராணுவ முகாமை இலக்கு வைத்து விடுதலைப் புலிகளால் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதலில் 2 படையினர் படுகாயமடைந்துள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 0 replies
- 802 views
-
-
வவுயாவில் தாக்குதல் இரு படையினர் பலி! வவுனியாவில் சிறீலங்காப் படையினர் மீது இனம் தெரியாத தாக்குலாளிகளால் நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில் இரு இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று மதியம் 1 மணியளவில் வவுனியா வேப்பங்குளப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலிலேயே இவ்விரு படையினரும் கொல்லப்பட்டுள்ளதோடு மேலும் சிலர் காயங்களுக்கு உள்ளாகினர். இதனை அடுத்து வவுனியா நகரம் படையினரால் முழுமையான தேடுதல் வேட்டைக்கு உள்ளாகியது. அத்துடன் பொதுமக்கள் பலந்த சோதனைக்கு உள்ளாக்கிப்பட்டுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 0 replies
- 807 views
-
-
அமைச்சர் ஒருவரின் அதிகாரியும் மூதூhரில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் அகப்பட்டுள்ளார். ஜ வியாழக்கிழமைஇ 3 ஆகஸ்ட் 2006 ஸ ஜ ஜெயராசா ஸ இலங்கையின் அமைச்சு ஒண்றின் மிக முக்கிய அதிகாரியான எம்.ஜ.எஸ்.எம்.அமீர்அலி விடுதலைப் புலிகளினால் மூதூர் நகரம் மீட்கப்பட்டபோது அருகில் உள்ள அரபிக் கல்லுரியில் தஞ்சமடைந்துள்ளார் என்று அறியமுடிகிறது. http://www.nitharsanam.com/?art=19835
-
- 0 replies
- 1k views
-
-
2 ஆம் இணைப்பு) திருமலை கடற்படைத் தளம் மீது எறிகணைத் தாக்குதல்- டோராப்படகு தாக்கியழிப்பு: 8 கடற்படையினர் பலி [செவ்வாய்க்கிழமை, 1 ஓகஸ்ட் 2006, 14:52 ஈழம்] [புதினம் நிருபர்] திருகோணமலை நகரில் உள்ள சிறிலங்கா கடற்படை தலைமையக தளம் மீது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் படைத்தரப்புக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இத்தாக்குதல் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.25 மணிமுதல் நடத்தப்பட்டுள்ளது. சிறிலங்கா கடற்படையினரின் டோராப்படகு மீது விடுதலைப் புலிகளின் ஐந்து தாக்குதல் படகுகள் நடத்திய தாக்குதலில் டோராப் படகு முற்றாக அழிந்துள்ளது. இதில் எட்டு கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். கடற்படைத் தலைமையகத்துக்குள் 36 எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின…
-
- 44 replies
- 7.9k views
-
-
வடமராட்சி கிழக்கில் விமானக் குண்டுவீச்சு: 2 பொதுமக்கள் காயம் [வியாழக்கிழமை, 3 ஓகஸ்ட் 2006, 15:44 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் மீது சிறிலங்கா விமானப்படையின் கிபிர் விமானங்கள் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் இருவர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணயிளவில் நடந்தது. வன்னி வான்பரப்பில் நுழைந்த சிறிலங்கா விமானப்படையின் கிபிர் ரக விமானங்கள் இரண்டு முல்லைத்தீவுப் பகுதியை வட்டமிட்டு தாழப் பறந்து சென்றன. இதனை அடுத்து அதே கிபிர் விமானங்கள் வடமராட்சி கிழக்கு வான்பரப்பிற்குள் நுழைந்து கட்டைக்காட்டுப் பகுதியில் பெருநாள் நிகழ்விற்காக கூ…
-
- 0 replies
- 816 views
-
-
மூக்குக் கண்ணாடி கொடுப்பதில் தகராறு; பிரதமரின் மகன் தாக்கி ஒருவர் காயம்! புளத்சிங்கள தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் வைபவமொன்றில் கலந்துகொண்ட பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் மகன் விதுர விக்கிரமநாயக்க, நிகழ்ச்சி அமைப்பாளரொருவரைத் தாக் கிக் காயப்படுத்தினார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை மாதம் 21ஆம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தம்மால் சிபார்சு செய்யப்பட்ட சிலருக்கு இலவச மூக்குக் கண்ணாடி வழங்கப்ப டாமையால் கோபமடைந்தே விதுர விக் கிரமநாயக்கா அந்த நிகழ்ச்சியின் அமைப் பாளர்களுள் ஒருவரை தாக்கினார் என்று தெரிய வருகின்றது. சம்பந்தப்பட்ட அமைப்பாளர் தமக் கேற்பட்ட காயங்களுக்கு வைத்திய சிகிச்சை பெற்றுக்கொண்ட போதிலும், விதுர…
-
- 5 replies
- 3.2k views
-
-
போர் நிறுத்தம் இனி சாத்தியமில்லை நோர்வேயின் சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் நாளை இலங்கை வரவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. போர் நிறுத்தம் முடிவுக்கு வந்து விட்டது. போன்றதொரு நிலையில் இருதரப்புக்கு மிடையில் உக்கிர மோதல் வெடித்திருக்கும் நிலையில் நோர்வே சிறப்புத் தூதுவரின் வரவுகள் எந்தளவு திருப்பத்தை கொண்டு வரப் போகின்றது என்பது கேள்விக்குறி. ஏன் எனில் போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட காலத்திலிருந்து அது மெல்ல மெல்ல சாகடிப்பதற்கான முயற்சிகளை சிங்கள அரசும் பேரினவாத சக்திகளும் மேற்கொண்டன.அதே வேளை சமாதான அனுசரணையாளராக செயற்பட்ட நோர்வே மீதும் சிறிலங்கா அரச தரப்பிலிருந்தும் இனவாத சக்திகளிடமிருந்தும் வெறுப்புணர்வுடனான கருத்துக்களே வெளி வந்தன. நா…
-
- 0 replies
- 1.3k views
-
-
சரத் பொன்சேகாவின் அராஜகத்தனம் கொழும்பு இராணுவத் தலைமையகத்துக்குள் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த சரத் பொன்சேகா மீண்டும் இராணுவ அதிகாரியாகப் பொறுப்பெடுத்திருக்கிறார். மிக உயிராபத்தான கட்டத்தில் இருந்து தப்பி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற சரத் பொன்சேகா மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்று அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் நாடு திரும்பினார். அடுத்த கட்டமாக அவர் கடமையைப் பொறுப்பெடுத்துள்ளார். இராணுவத் தளபதியாக மீளவும் பொறுப்பெடுத்த நிலையில் தமிழர் தாயகம் மீதான விமான மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. சரத் பொன்சேகா தற்கொலைத் தாக்குதலில் படுகாயமடைந்த போது சிங்களப் படைகளிடையே ஏற்பட்ட உளவியல் ரீதியான பாதிப்புக்க…
-
- 0 replies
- 1.6k views
-
-
மூதூர் நிலவரம் தொடர்பாக மூதூரில் படிக்கும் அப்துல் நவுவ் தரும் தகவல். தமிழீழ விடுதலைப் புலிகள் மூதுர் நகரத்திற்கு வந்துவிட்டார்கள். இராணுவம் முகாமுக்குள்ளே இருக்கின்றது. வெளியிலை வருகிறார்கள் இல்லை. மக்கள் அகதிமுகாமல் இருக்கிறார்கள். பள்ளிவாசல் அரபிக் கல்லுரி அவற்றியல் தங்கியுள்ளனர். எனது கல்லூரிக்கு முன்னாலும் ஒரு போராளியின் வீரச்சாவடைந்த உடல் இருக்கின்றது இராணுவம் விலகி தமது முகாங்களுக்கு போய்விட்டார்கள். நான் இருக்கும் இடத்தில் இருந்து இராணுவ முகாம் 1கிலோ மீட்டருக்குள் இருக்கின்றது. கிராமத்திற்குள் ஒவ்வொரு மூலையிலும் முகாம் இருக்கிறது. விடுதலைப் புலிகள் இராணுவத்தினரையும் பொலிசாரையும் சரண் அடையுமாறு கொடுத்த காலக்கெடு இன்று இரவுடன் முடிவடைகிறது. தற்போது பாரிய…
-
- 0 replies
- 1.4k views
-
-
மாவிலாறு அணையைக் கைப்பற்ற 10 நிமிடம் நடையே உள்ளது - இராணுவப் பேச்சாளர் சேருநுவர மாவிலாறு அணையை திறப்பதற்கான படை நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். அணையை 10 நிமிடங்களில் செல்ல கூடிய தொலைவிலேயே உள்ளதாக அவர் குறிப்பிட்டார். எனினும் பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ள வெடிப்பொருட்களினால் இந்த தூரத்தை கடந்து செல்ல முடியாதுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். நேற்று அதிகாலை அடையாளம் காணப்பட்ட இடங்களின் மீது வான் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அணையை மீடப்பது சுலபமான போதிலும் அதனை பாதுகாக்க படையினர் கடுமையான சிரத்தையை மேற்கொள்ள வேண்டும் எனவும் இராணுவ பேச்சாளர் தெரிவித்தார். கொழும்பில…
-
- 7 replies
- 2.5k views
-
-
மாவிலாறு அணைக்கட்டைத்திறந்து அதனை மூடமாட்டோம் என புலிகள் உறுதியளித்தால் தாக்குதல்கள் நிறுத்தப்படும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல வீரகேசரி நாளேடு அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த உடன் படிக்கையை கூட்டமைப்பு அரசாங்கம் தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகின்றது. விடுதலைப்புலிகள் மாவிலாறு அணைக்கட்டை திறந்து அதனை ஒருபோதும் மூட மாட்÷டாம் என்று உறுதியளித்தால் படையினரால் மேற்கொள்ளப்படுகின்ற சகல விதமான தாக்குதல் நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்படும். என்று பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார் http://www.virakesari.lk/vira/html/pol_vie...ew.asp?key=100…
-
- 17 replies
- 5.8k views
-
-
மன்னார் உயிலங்குளம் நிலாச்சேனையில் பகுதியில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் சிறீலங்கா படைச்சிபாய் பலியானதோடு மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று காலை 8 மணியளவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட சிறீலங்காப் படையினரை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
-
- 0 replies
- 762 views
-
-
ஓயாத அலைகள் 5 !!!!???? .......மாவிலாறு மற்றும் அதை அண்டியுள்ள ஈச்சிலம்பற்று போன்ற பகுதிகளை சிறிலங்கா அரசு கைப்பற்ற விரும்புவதற்கு வேறு காரணங்களும் உண்டு. வெருகல் பகுதியில் உள்ள இந்த இடங்களை கைப்பற்றி தக்க வைப்பதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விடுதலைப்புலிகளின் பிரதேசத்திற்கும் திருகோணமலையில் உள்ள விடுதலைப்புலிகளின் பிரதேசத்திற்குமான தரைவழித் தொடர்பை துண்டாட முடியும். இதன் மூலம் இரு மாவட்டங்களிலும் உள்ள விடுதலைப்புலிகளை தனிமைப்படுத்த முடியும். ஆகவே தற்பொழுது சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கையானது மாவிலாறு அணை சம்பந்தப்பட்ட விடயமாக மட்டும் கருத முடியாது......... .......சிறிலங்கா இராணுவம் வடக்கில் இருந்து படையினரையும் கனரக ஆயுதங்க…
-
- 0 replies
- 1.7k views
-
-
மூதுர் பொலிஸ் நிலையம் முற்றுகை, இராணுவம் மூதூரில் இருந்து படிப்படியாக வெளியேற்றம். - கத்தோலிக்க தேவாலயம் இராணுவத்தால் தகர்ப்பு புதன்கிழமைஇ 2 ஆகஸ்ட் 2006 ஸ ஜ யோககுமார் ஸ மூதூர் நகரம் தற்போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வந்திருக்கிறது. இதேவேளை இலங்கை இராணுவத்தின் சிறு அச்சுறுத்தல்களும் காணப்படுகின்றன. மூதூர் பொலிஸ் நிலையம் விடுதலைப் புலிகளால் சுற்றி வளைக்கபட்டு இருப்பதாக பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மூதூரில் இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் முடக்கபட்டுள்ளனர். பொலிசார் பொலிஸ் நிலையங்களுக்குள் முடக்கப்பட்டுள்ளனர் பொதுமக்கள் எவரும் வீதியில் நடமாடவில்லை மூதூர் நகரம் விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டில் இருக்கின்றது எனினும் இராணு…
-
- 15 replies
- 2.6k views
-
-
854 பேருடன் தத்தளிக்கும் சிங்கள கடற்படைக்கு இந்தியா உதவினால் மன்னிக்க முடியாத அக்கிரமம்: மன்மோகனுக்கு வைகோ எச்சரிக்கை [புதன்கிழமை, 2 ஓகஸ்ட் 2006, 16:14 ஈழம்] [புதினம் நிருபர்] தமிழீழ கடற்பரப்பில் நுழைந்து முற்றுகைக்குள்ளாக்கி தற்போது சர்வதேச கடற்பரப்பில் தத்தளிக்கும் 854 சிங்கள இராணுவத்தினரைக் கொண்ட கப்பலை பாதுகாப்பாக மீட்க இந்தியா உதவக் கூடாது என்று தமிழ்நாட்டின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வைகோ இன்று புதன்கிழமை அனுப்பிய கடிதம்: இலங்கை தீவில் போர் மேகங்கள் சூழ்ந்து உள்ளன. போர்நிறுத்த ஒப்பந்தத்தை திட்டமிட்டே மீறி உள்ள இலங்கையின் இனவாத சிங்கள அரசு, தமி…
-
- 2 replies
- 1.2k views
-
-
தொடர்ந்தும் முற்றுகைக்குள் கப்பல்- மேலும் ஒரு டோராப்படகு தாக்கியழிப்பு: இளந்திரையன் [புதன்கிழமை, 2 ஓகஸ்ட் 2006, 05:04 ஈழம்] [கொழும்பு நிருபர்] தொடர்ந்தும் முற்றுகைக்குள்ளேயே சிறிலங்கா கடற்படையினரின் கப்பல் உள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் தெரிவித்துள்ளதாவது: திருகோணமலை துறைமுகத்திற்கு 854 சிறிலங்காப் படையினரை ஏற்றிவந்த கப்பலை புல்மோட்டை கடற்பரப்பில் தரையிறக்க முற்பட்ட போது கடற்புலிகள் கடுமையாக தாக்கியதனால் கப்பல் மீண்டும் சர்வதேச கடற்பரப்பினை நோக்கிச் சென்று விட்டது. குறித்த கப்பல் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில் திருமலை துறைமுகத்தில…
-
- 3 replies
- 2.2k views
-
-
தமிழ்நாட்டில் பயிற்சி பெற்று வரும் சிங்களக் காவல்துறையினரை உடனே திருப்பி அனுப்புக: இந்திய அரசுக்கு இராமதாஸ் வேண்டுகோள் [புதன்கிழமை, 2 ஓகஸ்ட் 2006, 13:51 ஈழம்] [புதினம் நிருபர்] தமிழ்நாட்டில் பயிற்சி பெறுவதற்காக வந்துள்ள சிங்களக் காவல்துறையினரை சிறிலங்காவுக்கு உடனே திருப்பி அனுப்ப வேண்டும் என்று இந்திய அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் போர் மேகம் திரண்டிருக்கிறது. நோர்வே நாட்டின் முன்முயற்சியால் நடந்து வந்த அமைதிப் பேச்சுவார்த்தையை இலங்கை அரசு திட்டமிட்டு குலைத்துப் போட்டு விட்டது. பன்னாட்டுக் கண்காணிப்பு குழுவினரின் எச்சரிக்கையையும் ம…
-
- 1 reply
- 998 views
-
-
2002ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட யுத்தநிறுத்த ஒப்பந்தம் இல்லாமல் போய் விடுதலைப்புலிகள் சுதந்திரப் போரை ஆரம்பித்துள்ளனர். இராணுவத்தினர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் மேற்கொண்ட தாக்குதலே இதற்கு காரணம். போர் தொடங்கி விட்டதாகவும் தாங்கள் தயாராக உள்ளேம் என திருகோணமலை அரசியல் துறை பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில். அரசாங்கமே போரை தொடங்கியது. எமது பிரதேசத்திற்குள் இராணுவம் துழையும் பட்சத்தில் நாங்கள் திருப்பித்தாக்குவதாக முடிவு செய்துள்ளோம். 50 ஆயிரம் விவசாயிகளிற்கு நீர் இல்லாமையே தாங்களின் தாக்குதற்கு காரணம் என அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
- 1 reply
- 1.1k views
-
-
மாவிலாறு அணை பிரச்சினை: பாலசிங்கத்துடன் எரிக்சொல்ஹெய்ம் ஆலோசனை [புதன்கிழமை, 2 ஓகஸ்ட் 2006, 08:30 ஈழம்] [ச.விமலராஜா] மாவிலாறு அணைக்கட்டுப் பிரச்சனை குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்துடன் நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் சந்தித்துப் பேசியுள்ளார். லண்டனில் கடந்த வியாழக்கிழமை இச்சந்திப்பு நடந்துள்ளது. இச்சந்திப்பின் போது கண்காணிப்புக் குழுவினருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் விதித்துள்ள கெடு குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதி மீதான பொருளாதாரத் தடைகளை செயற்படுத்தியும் விமானக் குண்டுவீச்சுக்களை நடத்தியும் வரும் சிறிலங்கா அரசாங்கமே தற்போதைய நிலைமைகளுக்கு காரணம் என்ற…
-
- 2 replies
- 1.2k views
-
-
இராணுவ லெப்டினனும் தமிழ்ப் பெண் டாக்டரும் ஒன்றாக இருந்தபோது கைது அநுராதபுரம் நகரத்திலுள்ள விடுமுறை விடுதி ஒன்றில் சிங்கள இனத்தைச் சேர்ந்த இராணுவ லெப்டினன் ஒருவர் தமிழ் இனத்தைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவருடன் ஒன்றாகத் தங்கியிருந்த சந்தர்ப்பத்தில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் பொலிஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரையும் அநுராதபுரம் பொலிஸ் தரப்பு கடந்த 26 ஆம் திகதி அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ததைத் தொடர்ந்து நீதிபதி வசந்த ஜினதாச அவர்களை 31 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். மேற்படி சிங்கள இராணுவ லெப்டினனையும் தமிழ் பெண் டாக்டரையும் ஆஜர்செய்த பொலிஸ் தரப்பு அவர்கள் இருவரும் பயங்கரவாத நடவட…
-
- 0 replies
- 1.1k views
-
-
மோதலுக்கு உண்மையான காரணம் தண்ணீர் அல்ல' [02 - August - 2006] [Font Size - A - A - A] திருகோணமலையில் இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் மோதலிற்கான உண்மையான காரணம் நீராக இருக்காது என யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் உல்ப் ஹென்றிக்சன் தெரிவித்துள்ளார். வடகிழக்கில் கடந்த ஆறு நாட்களுக்கும் மேலாக நடைபெற்றுவரும் மோதல்களை சுட்டிக்காட்டியுள்ள ஹென்றிக்சன் நீரே உண்மையான காரணமாக இருந்தால் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்றிருக்காது என குறிப்பிட்டுள்ளார். கடற் புலிகளின் இலக்கந்தை தளம் நீரிற்காக தாக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.thinakkural.com/news/2006/8/2/i...ws_page7655.htm
-
- 2 replies
- 1.3k views
-
-
புதன்கிழமை, 2 ஓகஸ்ட் 2006, 07:55 ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தம் பிரகடனப்படுத்தப்படவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல கூறுகையில், மாவிலாறு அணைக்கட்டு விடயத்தினால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசாங்கம் யுத்தத்தை பிரகடனப்படுத்தவில்லை என்றார். "நீர் பிரச்சனைக்காக நாம் யுத்தத்துக்குச் செல்லவில்லை. மனிதாபிமான பிரச்சனைக்காக இதை மேற்கொண்டுள்ளோம். யுத்த நிறுத்தத்திலிருந்து நாம் விலகுவதாக இருந்தால் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் தெரிவித்துள்ளபடியாக 14 நாள் முன் அறிவிப்பை நாம் அளிப்போம்" என்றார் கேகலிய ரம்புக்வெல. சேருநுவெர ராஜ மகா விகார…
-
- 3 replies
- 1.1k views
-
-
இழப்புக்களை மூடிமறைக்க நேரடியாக கொழும்பு கொண்டுசெல்லப்படும் காயமடைந்த படையினர் - பாண்டியன் Tuesday, 01 August 2006 20:11 திருகோணமலை கடற்படைத் தளம் மீதான உக்கிர ஆட்டிலறி எறிகணைத் தாக்குதலில் ஏற்பட்ட இழப்புக்களை மூடிமறைக்கும் நோக்குடன் படுகாயமடைந்த படையினரை நேரடியாக கொழும்பிற்கு கொண்டுசெல்லும் முயற்சியில் ஸ்ரீலங்கா படைத்தரப்பு ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. கடற்படையினர் தரப்பில் 30 பேரளவில் படுகாயமடைந்ததாக படைத்தரப்பு அறிவித்திருந்தது. ஆனால் இவர்களில் அறுவர் மாத்திரமே திருமலை பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர். மற்றைய காயமடைந்த படையினர்; இரு தடவைகளில் உலங்குவானூர்திகள் மூலமும், மருத்துவக் காவு வண்டிகள் மூலமும் நேரடியாகக் கொழும்பிற்குக் கொண்டு…
-
- 2 replies
- 1.6k views
-