Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மூதூரில் விமானக் குண்டுத்தாக்குதல்: 2 பொதுமக்கள் பலி- 5 பேர் படுகாயம் [சனிக்கிழமை, 26 ஓகஸ்ட் 2006, 19:30 ஈழம்] [ம.சேரமான்] திருகோணமலை மூதூர் கிழக்கில் சிறிலங்கா விமானப்படையின் கிபீர் விமானங்கள் இன்று பிற்பகல் நடத்திய குண்டுவீச்சில் பொதுமக்கள் இருவர் பலியாகியுள்ளனர். 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். மூதூர் கிழக்கில் சிறிலங்கா விமானப் படையினர் துறைமுகத்தில் இருந்து இன்று சனிக்கிழமை பிற்பகல் 1 மணிமுதல் சரமாரியான எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்தினர். மேலும் விமானப் படையின் கிபீர் விமானங்கள் பலமுறை குண்டுத் தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதல்களில் இலங்கைத் துறைமுகத்துவாரப் பகுதியில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டனர். 5 பொதுமக்கள் படுகாயமடைந்தனர்.

    • 0 replies
    • 862 views
  2. அம்பாறையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். தமிழ்நெட் இணையத்தளத்துக்கு அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் ஜெயா அளித்த நேர்காணல்: அம்பாறை திருக்கோவில் தம்புலுவில் வீதியில் சிறிலங்கா அதிரடிப்படையினர் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடத்திய தாக்குதலில் அரசியல்துறைப் போராளியான சுடர் (வயது 21) வீரச்சாவடைந்துள்ளார். சிறிலங்கா அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அரசியல் பணி தொடர்பாக சென்ற போது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றார் ஜெயா. இதனிடையே தாக்குதல் ஒன்றில் சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த எம். தர்மரட்ண (வயது 35) மற்றும் டபிள்யூ. அபயரட்ண (வயது 33) ஆகியோர் படுகாயமட…

    • 0 replies
    • 893 views
  3. தென்மராட்சி பகுதியில் இன்று நடந்த குண்டுவெடிப்பில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். எழுதுமட்டுவாளுக்கும் முகமாலைக்கும் இடையேயான பகுதியில் வீதி சுற்றுக்காவல் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்த போது சனிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் குண்டு வெடித்தது. இதில் படுகாயமடைந்த 4 பேர் பலாலி இராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

  4. அனுராதபுரத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் சடலங்கள் இரகசியமாக எரிப்பு: ஐக்கிய தேசியக் கட்சி யாழ். சமரில் கொல்லப்பட்ட சிறிலங்கா இராணுவத்தினரின் சடலங்களை இரகசியமாக எரித்து வருவதாக சிறிலங்கா அரசாங்கம் மீது ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றில் வடக்கு-கிழக்கு பிரச்சனை குறித்து கடந்த புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல பேசியதாவது: அனுராதபுரம் விஜயபுர மயானத்தில் பெரும் எண்ணிக்கையிலான சிறிலங்கா இராணுவத்தினரின் சடலங்கள் இரகசியமாக எரிக்கப்பட்டு வருகின்றன. சமரில் கொல்லப்பட்ட படையினர் குறித்த விவரங்களை அவர்களது குடும்பத்தினருக்கு அரசாங்கம் தெரியப்படுத்த வேண்டும். அச்சத்தின் காரண…

  5. தங்களுக்குள் அடிபட்டுக் கொண்டு பேரினவாதிகளின் முன் அமைச்சுக்கு கை குலுக்கும்...அரசியல்வாதிகள்..! இவர்களிடம் மக்களின் நலன் என்பது கை உயருமா..தாழுமா..??! சிங்கள பேரினவாதக் கட்சிகளை உள்வாங்கிச் செயற்படும்..மகிந்த அரசில் இரண்டு பிரதான மலையகக் கட்சிகள் இணைந்து கொண்டுள்ளதுடன் கட்சித் தலைவர்களுக்கு மகிந்த அரசு அமைச்சர் பதவிகளையும் இதர உறுப்பினர்களுக்கு பிரதி அமைச்சர் பதவிகளையும் வழங்கியுள்ளது. ஏற்கனவே சுதந்திரக் கட்சிக்குள் நிலவும் மகிந்தவுக்கு எதிரானவர்களின் எதிர்ப்பைச் சமாளிக்கும் நோக்கோடு மகிந்த இந்த நகர்வைச் செய்திருக்கலாம். இருந்தும் புலிகளோடு நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்த சந்திரசேகரனை அமைச்சரவையில் உள்வாங்கி இருப்பது ஜேவிபி மற்றும் கெல உறுமய போன்ற பேரினவாதக் …

  6. Started by Vanni01,

    INGOs leave Jaffna, ICRC UN Agencies stay [TamilNet, August 26, 2006 11:38 GMT] Several International Non Government Organizations (INGOs) are pulling out their staff from northern Jaffna peninsula following escalation of fighting between the Liberation Tigers and Sri Lankan government troops. Foreign staffs attached to Norwegian Refugee Council (NRC), World Vision, Caritas, PARCK, Danish De-Minning Group and Sewa Lanka staffs left Jaffna by boat flying ICRC flag, sources at the Jaffna Secratariat said. A convoy of vehicles carrying the INGO staffs left Jaffna town for Pt.Pedro, Saturday morning. They will travel to south of Sri Lanka by boat, sources said. …

    • 0 replies
    • 899 views
  7. மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம். ஜோஸப் அனுதாபப் பிரேரணை மீது உரையாற்ற எம்.பிக்கள் எவருமில்லை இதனால் நேற்று நாடாளுமன்றம் ஒத்திவைப்பு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் அமரர் ஜோஸப் பரராஜசிங்கத் தின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணை மீது உரையாற்ற எம்.பிக்கள் இல் லாத காரணத்தால் நேற்று நாடாளுமன்றம் 20 நிமிடங்களே கூடியது. நாடாளுமன்றம் நேற்றுக்காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம். லொக்கு பண்டார தலைமையில் கூடியது. சபாநாயகரின் அறிவிப்புகளுக்குப் பின்னர் வாய்மூல விடைகளுக்கான கேள்வி நேரம் இடம்பெற்றது. கேள்விகளுக்கு எழுத்து மூலம் முன்னறிவித்தல் கொடுத்த எம்.பிக் கள் சபையிலிருக்கவில்லை. இதனால், அனைத்துப் பதில்களும் சபையில் சமர்ப்பிக்கப்பட் டன. …

    • 1 reply
    • 1.4k views
  8. புலிகளின் பாதுகாப்பில் உள்ள இலங்கை காவல்துறை அதிகாரி நாளை விடுவிப்பு. தமிழீழ விடுதலைப் புலிகளின் பாதுகாப்பில் உள்ள இலங்கை காவல்துறை அதிகாரி நாளையதினம் விடுவிக்கப்படுவார் என எதிர்ப்பார்கப்படுகிறது. பந்துஜீவ போபிட்டிய என்ற காவல்துறை அதிகாரியே தமிழிழ விடுதலைப்புலிகளால் கடந்த வருடம்; செப்டம்பர் மாதம் தமிழிழ விடுதலைப்புலிகளால் தடுத்துவைக்கப்பட்ள்ளார். இவரும் ஏனைய இரண்டு காவல்துறை அதிகாரிகளும் மன்னார் முருங்கன் பிரதேசத்தில் வைத்து தமிழீழ விடுதலைப்புலிகளால் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் இவர்களில் பந்துஜீவவை தவிர்ந்த ஏனைய இருவரும் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

    • 75 replies
    • 10k views
  9. முகமாலையில் குண்டு தக்குதல். - 06 சிங்கள அரச பயங்கரவாதிகள் பலி. முகமாலையில் இண்று நடைபெற்ற குண்டுத் தாக்குதலில் 06 சிங்கள அரச பயங்கரவாதிகள் கொல்லபட்டுள்ளனர். மேலும் பல அரச சிங்கள படைப் பயங்கரவாதிகள் படுகாயமடைந்துள்ளனர். முகமாலைக்கும் எழுமட்டுவாள் பகுதிக்கும் இடையில் வீதி றோந்தில் ஈடுபட்ட சிங்கள கூலிப்படைகளின்மீதே தாக்குதல் நடாத்தபட்டதாக அறியமுடிகிறது. எனினும் விடுதலைப் புலிகள் புதைத்த குண்டில் சிங்கள சிப்பாய் காலை வைத்ததால் 06 படையினர் கொல்லப்பட்டதாக இலங்கை பயங்கரவாத அரசு தெரிவித்துள்ளது http://www.nitharsanam.com/

  10. புலிகளுக்கு எதிரான விமானத் தாக்குதல்களுக்கு பாக். விமானப் படையினர் வழிகாட்டுகின்றனர். [சனிக்கிழமை, 26 ஓகஸ்ட் 2006, 01:16 தமிழீழம்] [நிதர்சனம்] தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான விமானத் தாக்குதல்களுக்கு வழிகாட்டியாக பாகிஸ்தானைச் சேர்ந்த விமானப்படை அதிகாரிகள் குழுவொன்று கொழும்பிலிருந்தும் செயற்பட்டு வருவதாக பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய வெளிவிவகார புலனாய்வுத்துறை முன்னாள் தலைமை அதிகாரி பி.ராமன் தெரிவித்துள்ளதாக இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகளை உடைத்தழிக்கும் குண்டுகளைப் பயன்படுத்தி படுகொலை செய்வதற்கும், பதுங்கு குழிகளை அழிப்பதற்கும் பாகிஸ்தான் அதிகாரிகள் குழு திட்டம் தீட்டுவதில் ஈடுபட்டுள்ளதாகவும் பி.ராமனை மேற்கோள் கா…

    • 1 reply
    • 1.4k views
  11. பெட்ரோல் தொடர்பாக ஊடகங்கள் சில வெளியிட்ட செய்திகளுக்கு புலிகள் மறுப்பு அனுராதபுராவில் இருந்து பெட்ரோலை ஏற்றிக் கொண்டு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி வழியாக யாழ் நோக்கிச் சென்ற எண்ணை லாரிகள் சிலவற்றை புலிகள் கடத்திச் சென்று இருக்கக் கூடும் என்று சில தென் இலங்கை ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டிருந்தன. இதை விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் வன்மையாக மறுத்துள்ளார். இது விடுதலைப் புலிகளின் மீது சேறு பூசும் நடவடிக்கை என்றும் அவர் கூறினார். பெட்ரோலைப் பெற தங்களுக்குத் தனி வழிகள் உள்ளன என்றும் லாரிகளைக் கடத்த வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்றும் இளந்திரையன் குறிப்பிட்டார். http://www.nitharsanam.com/2006/08/25/50451.php

    • 10 replies
    • 2.6k views
  12. விடுதலைப் புலிகளை முற்றாக நீக்குவதற்கு இன்னும் சிறிது காலமே தேவை: சரத் பொன்சேகா [புதன்கிழமை, 23 ஓகஸ்ட் 2006, 01:47 ஈழம்] [காவலூர் கவிதன்] தமிழர்களைப் பாதுகாப்பதற்காகவே சிறிலங்கா படைகள் வடக்கு-கிழக்கில் நிலைகொண்டுள்ளன. கடந்த இரண்டு தசாப்த போரில், விடுதலைப் புலிகளே தமிழ்மக்களைக் கொன்றுள்ளனர், படையினரல் அல்ல என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கொழும்பு நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நான் இப்போது மீண்டும் பழைய உடல்நிலையில் மிக சுறுசுறுப்பாக உள்ளேன். ஒரு விடயம் மிக முக்கியமானது, அதாவது சிறிலங்காப் படைகளுக்கு தமிழ் மக்கள் மீது எந்தக் கோபமோ வெறுப்போ கிடையாது. அவர்களைப் பாதுகாப்பதுதான் படைகளின் பிரதான…

  13. தமிழரை கொல்ல துணை பாதுகாப்பு அமைச்சர் பதவி கேட்டாராம் சந்திரசேகரன். - மீண்டும் சந்திரசேகரனின் வங்குரோத்து அரசியல். [சனிக்கிழமை, 26 ஓகஸ்ட் 2006, 01:21 தமிழீழம்] [எஸ்.கே] மலையக மக்கள் முன்னனியின் தலைவர் பொ.சந்திரசேகரன் இன்று இலங்கை அரசுடன் இனைந்துகொண்டுள்ளார். மலையக மக்களை காக்கவும் வாக்கு போட்ட மக்களை காக்கவும் இவ்வாறு இனைந்துள்ளதாக சந்திரசேகரன் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார். இதே நேரம் தமிழர் எல்லாரும் ஒன்றினைந்து ஒரு பொது திட்டத்தின் கீழ் வேலை செய்யவேண்டும் என்று வன்னிக்கு சென்று பகிரங்க ஊடகப் பேட்டி கொடுத்து புலிகளுடன் இணைந்து கொள்வேன் என்று மகிந்த ராஜபக்சவுக்கு மிரட்டல் விட்ட ஆறுமுகம் தொண்டமானும் இன்று தன்னை அரசுடன் இணைத்துள்ளார். இருவரும் மலையக மக்க…

    • 0 replies
    • 1.3k views
  14. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வான்பரப்பில் சிறிலங்கா படையினரின் மிக் போர் விமானம் மூன்று முறை இன்று வெள்ளிக்கிழமை குண்டுத் தாக்குதலை நடத்தியது. புதுக்குடியிருப்பு பிரதேச அண்மித்த பகுதிகளில் இன்று காலை 7 மணிக்கும் 8 மணிக்கும் இடையே இத்தாக்குதல் நடத்தப்பட்டது. மக்கள் குடியிருப்புக்களை மிக் விமானங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ள போதும் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

    • 2 replies
    • 1.4k views
  15. பாகிஸ்தானிய உயர் அதிகாரிகளால் புலிகளுக்கு எதிரான தாக்குதல்கள் முன்னெடுப்பு. விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறீலங்கா அரசின் யுத்த முன்னெடுப்புக்களை பாகிஸ்தான் இராணுவ உயர் அதிகாரிகள் கொழும்பிலிருந்து முன்னெடுப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து இந்தியாவின் வெளிநாட்டு புலனாய்வுத் துறையின் றோவின் முன்னாள் பயங்கரவாத முறியடிப்பு தலைமை அதிகாரி ராமன் சிறீலங்காவின் யுத்த முன்னெடுப்புக்களை நெறிப்படுத்துவற்காக பாகிஸ்தான் படை உயர் அதிகாரிகள் 12 பேர் தொடக்கம் 15 பேர் வரையில் கொழும்பில் தங்கியிருந்து வழிநடத்துவதாக குறிப்பிட்டுள்ளார். இவர்களில் நான்கு தொடக்கம் ஐந்து அதிகாரிகள் பாகிஸ்தான் வான்படையினர் என்றும் இவர்களின் நெறிப்படுத்தலுடன் தமிழர் தாயகப் பகுதிகளி…

  16. வவுணதீவு முன்னரங்க காவலரணில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுவது குறித்து விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அரசியல்துறை பொறுப்பாளர் தயா மோகன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து தமிழ்நெட்டுக்கு அவர் அளித்த நேர்காணல்: வவுணதீவு முன்னரங்க காவலரணுக்கு 80 மீற்றர் தொலைவில் துணை இராணுவக் குழுவினால் அனுப்பி வைக்கப்பட்ட நபர் குண்டு வெடித்து இறந்தார். திமிலத்தீவு சந்தை வீதியைச் சேர்ந்த சத்தியசீலன் தர்சன் (வயது 19) என்று அந்த இளைஞர் அடையாளம் காணப்பட்டுள்ளார். சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் அவர் கடத்திச் செல்லப்பட்ட அப்பாவி இளைஞர். வவுணதீவு முன்னரங்க நிலையை நோக்கி உந்துருளியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் சத்தியசீலன் வந்த போது குண்டுவெ…

    • 0 replies
    • 1.2k views
  17. கருணா குழுவினரால் இளைஞர்கள் கொல்லப்படுவதையிட்டு மக்கள் விசனம். கருணா குழுவினர் அப்பாவி இளைஞர்களை வீணாக கொல்ல கொடுப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள். கடத்தி செல்லப்படும் ஏழை குடும்பத்து இளைஞர்களிடம் பணம் அல்லது தமது இயக்கத்துடன் சேருமாறு மிரட்டுகின்றனர். மறுக்கும் இளைஞர்களை குண்டுகள் மற்றும் ஆயுதங்களை கொடுத்து விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஒரு முறை சென்ற தாக்குதல் நடாத்திவிட்டுவந்தால் உங்களை விடுதலை செய்வதாக கோரி இளைஞர்களை கொண்டு வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றார்கள். நேற்று வியாழக்கிழமை வவுணதீவு விடுதலை புலிகளின் முன்னரங்குக்கு முன்பாக கடத்தி செல்லப்பட்ட இளைஞனிடம் குண்டு பொருத்தி மோட்டார் சைக்கில் கொடுத்து அ…

    • 6 replies
    • 2.8k views
  18. இந்தியாவுக்கு எதிராக சிறிலங்காவில் "களமுனை" திறந்திருக்கும் பாகிஸ்தான் [வெள்ளிக்கிழமை, 25 ஓகஸ்ட் 2006, 20:59 ஈழம்] [ச.விமலராஜா] இந்திய நிர்வாக ஜம்மு-காஸ்மீரைப் போல் சிறிலங்காவில் புதிய களமுனையை திறந்துள்ள வகையில் பாகிஸ்தானின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் தூதுவராக பசீட் வாலி மொகமட் இரண்டு ஆண்டுகாலம் பணியாற்றி ஓய்வு பெற்றுச் செல்கிறார். அவரது "கைங்கர்யத்தில்" சிறிலங்காவுக்கு 2 கப்பல் ஆயுதங்கள் கடைசியாக கிடைத்துள்ளன. அந்தக் கப்பல்கள் வந்த நேரத்தில் கொழும்பில் நடந்த தாக்குதலில் பசீட் வாலி மொகமட் சிக்கிக் கொள்ள, பகிரங்கமாகவே பாகிஸ்தான் தரப்பினர் இந்திய "றோ" மீது குற்றம் சுமத்தினர். ஏனெனில் இந்தியாவின் பல வன்முறைகளுக்குக் காரணமாக குற்றம…

    • 1 reply
    • 990 views
  19. எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் முடிவடையும் பொதுமன்னிப்புக் காலத்திற்குள் சரணடையாத சேவையிலிருந்து தப்பியோடிய கடற்படையினரை கைது செய்வதற்கென நாடளாவிய ரீதியில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சிறிலங்கா கடற்படை அதிகாரி சோமதிலக்க திசாநாயக்க தெரிவித்துள்ளார். சேவையை விட்டுச் சென்றமைக்காக எந்தவித ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்காது அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் கால அவகாசத்தை மேலும் நீடிக்கப் போவதில்லை என்பதால் இந்தக் காலப்பகுதியில் சேவையில் இணைந்து கொள்வதே மதிநுட்பமானது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.eelampage.com/?cn=28398

    • 3 replies
    • 1.4k views
  20. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையால்தான் அமைதிப் பேச்சுக்கள் மீளத் தொடங்கவில்லை என்று நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் குற்றம்சாட்டியுள்ளார். பி.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு இது குறித்து அவர் அளித்த நேர்காணல்: தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத் தடையானது பேச்சுக்கள் மீண்டும் தொடங்குவதற்கான சந்தர்ப்பங்களை சிதைத்துவிட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையால் விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு கடுமையடைந்துதான் உள்ளது. இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரது எண்ணிக்கை பாதியாக குறைந்துவிட்டது. இது போதுமானது அல்ல என்றார் ஹன்சன் பௌயர். http://www.eelampage.com/?cn=28331

  21. சிறார் கடத்தலில் துணை இராணுவக் குழு: மனித உரிமைகள் கண்காணிப்பகம் சிறார் கடத்தலில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினர் ஈடுபடுவதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சட்ட ஆலோசகர் ஜேம்ஸ்ஞ் ரோஸ் குற்றம்சாட்டியுள்ளார். இலங்கைப் பயணம் மேற்கொண்டுள்ள அவர் கூறியதாவது: சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினர் சிறார் கடத்தலில் ஈடுபடுகின்றனர். சிறார் கடத்தலில் ஈடுபடும் அக்குழுவினர் அரசாங்கத்தின் சோதனைச் சாவடிகளுடாக செல்ல முடிகிறது. சிறிலங்கா அரசாங்கத்துக்கும் கருணா குழுவுக்கான தொடர்பு வெளிப்படையானது. ஓகஸ்ட் மாதம் நடந்து கொண்டிருக்கும் சமரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தெரியவி…

    • 0 replies
    • 842 views
  22. இராணுவத்திடம் கொழும்பு பாதுகாப்பு ஒப்படைப்பு ஜவெள்ளிக்கிழமைஇ 25 ஓகஸ்ட் 2006இ 20:47 ஈழம்ஸ ஜகொழும்பு நிருபர்ஸ சிறிலங்கா தலைநகர் கொழும்பின் பாதுகாப்பு இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தல்இ நடவடிக்கைகளை மேற்கொள்ளல்இ புலனாய்வுத் தகவல்களை சேகரித்தல் ஆகிய அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக கூட்டு நடவடிக்கைகள் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் லோரன்ஸ் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பு கூட்டு நடவடிக்கைகளுக்கான பணிப்பாளராக நேற்று வியாழக்கிழமை முதல் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். கொழும்பிற்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் நிலவி வருவதனால் கொழும்பின் பாதுகாப்பினை இராணுவத்தினர் வசம் …

    • 0 replies
    • 829 views
  23. யாழ் தென்மராட்சிப் பகுதியில் மற்றொரு கிறிஸ்தவ பாதிரியார் கடத்தப்பட்டுள்ளார். கடத்தப்பட்டவர் தென்மராட்சி மீசாலைப் பகுதியில் உள்ள கிறிஸ்தவ அப்போஸ்தல போதகரான 32 அகவையுடைய வின்சன் வினோதராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவருடன் இவரது மனைவி தங்கம் வினோதராசாவும் மற்றும் இவரது பிள்ளையும் காணாமல் போயுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

  24. விமானப்படை,ஆட்லறி சூட்டாதரவு..டாங்கிகளின் பாதுகாப்பு..சூட்டாதரவு..பல்கு

    • 0 replies
    • 1.2k views
  25. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினை இரத்து செய்ய முடியாது ஜே.வி.பிக்கு சுதந்திரக்கட்சி பதில். நாட்டில் தற்போது தோன்றியுள்ள இக்கட்டான சூழ்நிலையில் யுத்த நிறுத்த உடன்படிக்கையை இரத்து செய்வது தற்போதைக்கு பொருத்தமானதல்ல என்றுசிறீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. ஜே.வி.பி. சமர்ப்பித்த 20 யோசனைகளுக்கு, சிறீலங்கா சுதந்திரக் கட்சி அனுப்பி வைத்துள்ள பதில் யோசனைகளிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பதில் யோசனைகள் நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டதாக சிறீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

    • 3 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.