Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐஸ் போதைப்பொருளை உட்கொண்ட 2 வயதான குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளது – யாழ்.போதனா வைத்தியசாலை! ஐஸ் போதைப்பொருள் பாவித்தமைக்கான அறிகுறியுடன் 2 வயதான குழந்தை யாழ். போதனா வைத்திய சாலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியை சேர்ந்த இரண்டு வயதான குழந்தை திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் குழந்தையின் சிறுநீர் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்திய போது, குழந்தை ஐஸ் போதைப்பொருளை உட்கொண்டு இருந்தமைக்கான அறிகுறிகள் உள்ளதன வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக…

  2. யாழில் உணவகங்கள் மீது திடீர் பரிசோதனை..! By T. SARANYA 19 NOV, 2022 | 02:55 PM யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள உணவகங்களில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று நடத்திய திடீர் பரிசோதனை நடவடிக்கையில் தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டதுடன் சுகாதார சீர்கேடுகள் தொடர்பிலும் எச்சரிக்கப்பட்டது. இன்று சனிக்கிழமை முற்பகல் யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மாநகரில் அமைந்துள்ள உணவகங்களில் திடீர் பரிசோதனக்களை முன்னெடுத்தனர். குளிர்சாதனப் பெட்டியில் சுகாதார சீர்கேடாகவும் தீங்கு விளைவிக்கும் வகையில் வைத்திருக்கப்பட்ட மீன், இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் அழிக்கப்…

  3. ஜனாதிபதியின் வவுனியா விஜயம் : எதிர்ப்பு தெரிவித்து உறவுகள் போராட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வவுனியாவிற்கான இன்றைய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஓன்றிணைந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் மாவட்ட செயலகத்தை வந்தடைந்த நிலையில் இந்த போராட்டம் இடம் பெற்றுவருகின்றது. https://athavannews.com/2022/1311225

  4. விசேட பாதுகாப்புக்கு மத்தியில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு விசேட பாதுகாப்புக்கு மத்தியில் எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (திங்கட்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். இதனையடுத்து, வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் 22ஆம் திகதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள…

  5. 2100 ஆவது நாளில் கவனயீர்ப்பு போராட்டம் : தீர்வு தான் எப்போது? By T. SARANYA 19 NOV, 2022 | 02:41 PM வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டம் 2100 ஆவது நாளை எட்டிய நிலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்பாக 2100 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தாய்மார் இன்று (19) அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் போராட்ட பந்தலுக்கு முன்பாக 12 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். எமக்குத்தீர்வு கிடைக்க வேண்டுமாக இருந்தால் வெளிநாடுகளின் தலையீடு அவசியம். அமெரிக்கா, ஜரோப்பிய ஒன்றிய நாடுகள் வந்து எமக்கு உதவி செய்த…

  6. 2023 ஆரம்பத்தில் சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படும் இந்தியா, தாய்லாந்து , சீனாவுடனும் இவ்வொப்பந்தம் மேற்கொள்ளப்படும் - ஜனாதிபதி By T. SARANYA 19 NOV, 2022 | 12:23 PM (எம்.மனோசித்ரா) சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் 2023 ஆரம்பத்தில் நடைமுறைப்படுத்தப்படும். அதனையடுத்து இந்தியா, தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளுடனும் இந்த ஒப்பந்தங்கள் முன்னெடுக்கப்படும். 2023 அல்லது 2024 இல் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மையுடன் ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது நீண்ட கால இலக்காகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் எம்.பி.ஏ பழைய மாணவர் சங்கத்…

  7. முக்கிய செய்தியொன்றுடன் இலங்கை வரும் இந்திய முக்கியஸ்தர்..! இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்றைய தினம் இலங்கை விஜயம் செய்ய உள்ளார். அவர் இன்றும் நாளையம் இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களை அஜித் தோவல் சந்திக்க உள்ளார். நாளைய தினம் அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்திய அரசாங்கத்தின் முக்கிய செய்தி ஒன்றை தாங்கியே அவர் இவ்வாறு இலங்கை விஜயம் செய்கின்றார் என தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்ய மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. …

  8. வெளியார் தலையீடு தேவையில்லை எனக் கூறுவது எந்த விதத்தில் நியாயம்? – ஸ்ரீதரன் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் விடயத்தில் மாத்திரம் வெளியார் தேவையில்லை எனக் கூறுவது எந்த விதத்தில் நியாயம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கேள்வியெழுப்பியுள்ளார். யுத்தத்தை நடத்த, தமிழர்களை அழிக்க, பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மற்றும் நிதியுதவியை மட்டும் பெற்றுக்கொள்ள மட்டும் வெளியாரின் தலையீடு வேண்டும் என சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் நாட்டில் உள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படாமல் சர்வ…

  9. சீன உயர்மட்ட தூதுவர் ஒருவர் இலங்கையில் ! வெளிநாடுகளுடனான நட்புறவுக்கான சீன மக்கள் சங்கத்தின் தலைவர் லின் சோங்டியன் ஐந்து நாள் பயணமாக இலங்கைக்கு வந்துள்ளார். உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு வர நேற்று சனிக்கிழமை இலங்கை வந்ததாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவையும் ஒத்துழைப்பையும் வளர்க்கும் வகையில் அவரது பயணம் அமைந்துள்ளது. இந்த விஜயத்தின் போது, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அரச உயர்மட்ட அதிகாரிகளை சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். https://athavannews.com/2022/1310231

  10. 317 இலங்கை அகதிகளை ஏற்றிய கப்பல் நடுக்கடலில் தத்தளிப்பு..! 317 இலங்கை அகதிகளை ஏற்றிய கப்பல் நடுக்கடலில் தத்தளிப்பு இலங்கையில் இருந்து சென்றதாக கூறப்படும் 317 அகதிகளை ஏற்றிய கப்பல் ஒன்று பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் பழுதடைந்த நிலையில் நடுக்கடலில் தத்தளிப்பதாக தெரியவந்துள்ளது. குறித்த கப்பலில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட 317 பேர் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கப்பல் தொடர்ந்து பயணிக்க முடியாதா நிலையில் பழுதடைந்ததால் கப்பலை செலுத்திய கப்பல் ஓட்டி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டு கடல் படையினருக்கு தகவல் இதேவேளை கப்பலை மீட்கும் பணியில் புலம் பெயர் சமூகத்தில் உள்ள சிலர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற…

  11. முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் ஏற்பாடுகளை மேற்கொண்டவர்கள் மீது விசாரணை! By VISHNU 13 NOV, 2022 | 03:32 PM முல்லைத்தீவு முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்றையதினம் (13) மாவீரர் நாளுக்கான ஏற்பாட்டில் ஈடுபட்டிருந்தவர்களை முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தை ஆக்கிரமித்து படைமுகாம் அமைத்துள்ள 592 ஆவது பிரிகேட் முகாமின் கட்டளை அதிகாரி இராணுவ முகாமுக்கு அழைத்து விசாரணையில் மேற்கொண்டுள்ளார். இன்றுகாலை கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் விஜிந்தன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களான அமலன் , ஜெகன் ஆகியோரும் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இணைந்து முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்ல வள…

  12. ரணிலின் முதல்தெரிவு ஜனாதிபதி தேர்தலே - By RAJEEBAN 18 NOV, 2022 | 03:21 PM ECONOMYNEXT – இலங்கை ஜனாதிபதி முதலில் ஜனாதிபதி தேர்தலையே நடத்துவார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க 2023 நவம்பர் 16ம் திகதிக்கு பின்னர் முதலில் ஜனாதிபதி தேர்தலையே நடத்துவார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நெருக்கடியிலிருந்து மீட்சிபாதையில் மெதுவாக பயணித்துக்கொண்டிருக்கும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக ஜனாதிபதி சர்வதேச நாணயநிதியத்தின் 2.9 மில்லியன் டொலர் நிதி உதவியை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது. …

  13. கிளிநொச்சி கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரிக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் By T. SARANYA 16 NOV, 2022 | 03:39 PM கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரியை இடமாற்றக் கோரி கர்ப்பிணி தாய்மார்கள், பொதுமக்கள் என பலர் ஒன்று கூடி கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று (16) மேற்கொண்டிருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது மதுபோதை பாவித்து விட்டு வைத்தியம் பார்க்காதே, வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களை அவமதிக்காதே, வெளியேறு வெளியேறு விடுதியை விட்டு வெளியேறு, சீரழிக்காதே சீரழிக்காதே எமது சமூகத்தை சீரழிக்காதே என பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய பாதைகளை ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் போராட்டத்தை மேற…

  14. இலங்கை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல லட்சம் கண்ணி வெடிகள், சிறிய ஆயுதங்கள் கண்டுபிடிப்பு - அதிர்ச்சித் தகவல் பட மூலாதாரம்,GETTY IMAGES 53 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடிகளை அகற்றும் அரசாங்கத்தின் அவசர வேலைத்திட்டத்தின் கீழ், இதுவரை 8 லட்சத்து 70 ஆயிரத்து 412 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழுள்ள மீள்குடியேற்றப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 206 சதுர கிலோமீற்றருக்கும் அதிகமான நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு குறித்த காணிகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக விடுவிக்கப…

  15. எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் உலக வங்கி பிரதிநிதிகளுடன் விசேட கலந்துரையாடல் By DIGITAL DESK 2 18 NOV, 2022 | 03:54 PM (எம்.மனோசித்ரா) இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் கொள்கைகள் தொடர்பாக உலக வங்கி பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ஆகியோரின் தலைமையில் வியாழக்கிழமை (நவ.17) நிதியமைச்சில் நடைபெற்றது. உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் பாரிஸ் ஹடட்- ஸ்வோஸ் உள்ளிட்ட குழுவினருட…

  16. எதிர்காலத்தில் ரயில் தடம் புரள்வுகள் அதிகரிக்கும் : காரணத்தை கூறுகிறது ரயில் நிலைய அதிபர் சங்கம் By T YUWARAJ 20 SEP, 2022 | 10:01 PM (எம்.மனோசித்ரா) ரயில்களை முறையாக பராமறிப்பதற்கு தேவையான உதிரிப்பாகங்களுக்கு நிலவும் கடுமையான தட்டுப்பாடு காரணமாக பெருமளவான ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இவை தொடர்பில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் ரயில் தடம் புரள்வுகள் அதிகரிக்கும் என்று ரயில் நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : நாளாந்தம் சேவையில் ஈடுபடுத்தப்படும் ரயில்களில…

  17. யாழ். செம்மணியில் நீரில் மூழ்கி இளைஞன் பலி By DIGITAL DESK 5 18 NOV, 2022 | 10:24 AM யாழ்ப்பாணம் செம்மணி பகுதியிலுள்ள குளத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இளைஞன் திடீரென நீரில் மூழ்கி காணாமல் போனநிலையில் அவரது சடலம் கடற்படையின் உதவியுடன் வியாழக்கிழமை (17) மீட்கப்பட்டது. குறித்த குளத்தினை அண்மித்த பகுதியில் வசித்துவரும் இளைஞன் ஒருவரே தூண்டிலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேளை இவ்வாறு காணாமல் போயிருந்தார். இதனையடுத்து மீன்பிக்கச்சென்ற இளைஞனை காணத நிலையில், அப்பகுதி மக்கள் குளத்தில் தேடுதல் நடாத்தினர். இதையடுத்து மக்களால் இச்சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. கோப்பாய் பொலி…

  18. கொழும்பு துறைமுகத்தில் பாரிய பயணிகள் சொகுசு கப்பல் ! By DIGITAL DESK 5 18 NOV, 2022 | 02:21 PM அமெரிக்காவின் முதலாவது சொகுசு பயணிகள் பயணக் கப்பலான ‘வைக்கிங் மார்ஸ்’ (Viking Mars ) இன்றையதினம் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இன்றையதினம் 900 சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கை வந்துள்ள குறித்த கப்பலானது நாளை வரை கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கின்றது. கப்பலில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகள், இலங்கையின் முக்கிய இடங்களை கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கண்டி, பின்னவெல, காலி போன்ற நகரப் பயணங்கள், கொழும்பின் சில முக்கிய இடங்களுக்கு அழைத்துச் செல்லபப்படவுள்ளனர். முத்துராஜவெல மற்றும்…

  19. விடுதலைப் புலிகள் கொன்றதாக கூறப்படும் 170 முஸ்லிம்கள் உடல்களை தோண்டி மத முறைப்படி அடக்கம் செய்யக் கோரிக்கை கட்டுரை தகவல் எழுதியவர்,யூ.எல்.மப்றூக் பதவி,பிபிசி தமிழுக்காக 58 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சம்மாந்துறையில் தையற்கடை நடத்தி வந்த ஹபீபுர் றஹ்மான் எனும் தமது குடும்பத்தின் மூத்த சகோதரர், குருக்கள் மடத்தில் புலிகளால் கடத்திப் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறுகின்றார் நஸீலா. மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் பிரதேசத்தில் வைத்து கடத்தி, படுகொலை செய்து, அங்கேயே புதைக்கப்பட்ட சுமார் 170 முஸ்லிம்களின் உடல்களையும் தோண்டியெடுத்து, இஸ்லாமிய முறைப்படி மீ…

  20. கடன் வழங்கிய நாடுகள் பல கரிசனைகளை வெளியிட்டதால் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் ஒத்திவைப்பு- ரொய்ட்டர் By RAJEEBAN 18 NOV, 2022 | 11:50 AM வியாழக்கிழமை இடம்பெறவிருந்த கடன்மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை இலங்கை ஒத்திவைத்துள்ளது என ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு கடன்வழங்கியவர்கள் முன்வைத்துள்ள கேள்விகள் சந்தேகங்களிற்கு மத்திய வங்கியும் திறைசேரி அதிகாரிகளும் பதிலளிப்பதற்கான கால அவகாசத்தை வழங்குவதற்காக இலங்கை வியாழக்கிழமை இடம்பெறவிருந்த கடன் பேச்சுவார்த்தைகளை ஒத்திவைத்துள்ளது என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து 2.9 மில்லியன்டொலர் நிதி உதவியை பெறுவதற்கான …

  21. யாழில் சிறுவனை பாலியல் துன்புறுத்தலுக்குட்படுத்திய நபர் கைது By NANTHINI 18 NOV, 2022 | 10:43 AM சிறுவனை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நபரொருவர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் அமைந்துள்ள சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் உள்ள 12 வயது சிறுவனை அதே இல்லத்தில் பணியாற்றும் காப்பாளர் பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை (நவ 17) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரால் சிறுவன் துன்புறுத்தப்படுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்ததையடுத்து, பொலிஸார் சிறுவனிடம் வாக்குமூலத்தை பெற்றுக்…

  22. சட்டவிரோதமாக காலபோக நெற்செய்கை : அழிக்க முற்பட்டவேளையில் அமைதியின்மை - கிளிநொச்சியில் சம்பவம் By DIGITAL DESK 5 18 NOV, 2022 | 10:45 AM கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழான ஒதுக்கீட்டு பிரதேசங்களை ஆக்கிரமித்து பயிர்ச் செய்கை மேற்கொள்வது தொடர்பில் மாவட்ட மட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு வியழக்கிழமை (17) குறித்தசெய்கைகளை அழிப்பதற்காக பொலிஸாருடன் சென்ற வேளை நீர்ப்பாசன திணைக்களத்தினருக்கும் சட்டவிரோதச் செய்கையாளர்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் உள்ள ஒதுக்கீட்டு பிரதேசங்களில் சட்…

  23. கோர விபத்தில் இராணுவ மேஜர் உள்ளிட்ட 3 பேர் பலி, 2 பேர் காயம் By VISHNU 18 NOV, 2022 | 11:18 AM காரொன்று மதிலுடன் மோதி விபத்திற்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 2 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்து இன்று (18) காலை கல்கமுவ, இஹலகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த கார் மதிலுடன் மோதியே விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த இராணுவ மேஜர் 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/140431

  24. அடையாளம் காணப்படாத நிலையில் ஆண், பெண்ணின் சடலங்கள் - யாழ். போதனா வைத்தியசாலையின் வேண்டுகோள் ! By VISHNU 18 NOV, 2022 | 11:28 AM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் , அடையாளம் காணப்படாத நிலையில் ஆணொருவரதும், பெண்ணொருவரதும் சடலம் காணப்படுவதாகவும், அவற்றை அடையாளம் காண உதவுமாறு கோரப்பட்டுள்ளது. இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திருவடி நிலை கடற்கரையில் கடந்த ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி கரையொதுங்கிய ஆணொருவரின் சடலம் யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. அதேவேளை யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திக…

  25. சுமந்திரனின் அழைப்பு : தமிழ் தேசியக் கட்சிகள் புறக்கணிப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்ற கூட்டத்தில் தமிழ் தேசியக் கட்சிகள் எவையும் பங்கேற்கவில்லை. இலங்கைத் தமிழரசுக் கட்சி மட்டும் இதில் பங்கேற்ற நிலையில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் உட்பட ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகள் எவையும் இதில் பங்கேற்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வேண்டுகோளின் பேரில் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இந்தக் கூட்டத்துக்கான அழைப்பை விடுத்திருந்தார். எனினும் இந்தக் கூட்டத்தில் எம்.ஏ.சுமந்திரனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் மாத்திரம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.