ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142604 topics in this forum
-
ஈழத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் அமெரிக்க இராணுவ உதவியையும் எதிர்க்க வேண்டும் சோஷலிச சமத்துவக் கட்சியின் தலைவர் விஜே டயஸ் ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர் ஈழத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் அமெரிக்காவின் இராணுவ ரீதியான உதவியினையும் எதிர்க்க முன்வர வேண்டுமென சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவர் விஜே டயஸ் தெரிவித்தார். கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பிலுள்ள வர்த்தக சமூகத்தினர் மத்தியில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜெப்ரி லான்ஸ்ரட் ஆற்றிய உரை குறித்து கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது பற்றி தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அமெரிக்கத் தூதுவரின் கருத்தானது தமிழ் மக்களைப் போலவே சிங்கள மக்களையும் புண்படுத்தியுள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்கா சென்ற…
-
- 1 reply
- 1.1k views
-
-
குடாநாட்டில் படையினருடன் தொடர்புகள் வைத்திருப்போருக்கு எல்லாளன் படை எச்சரிக்கை யாழ் குடாநாட்டில் படையினருடன் தொடர்பு வைத்திருப்போருக்கு எச்சரிக்கை விடுக்கும் துண்டுப் பிரசுரங்களை எல்லாளன் படை வெளியிட்டுள்ளது. யாழ். குடாநாட்டில் படையினரின் கைக்கூலிகளாகவும் அடிவருடிகளாகவும் இருந்து தொடர்ந்து செயற்படுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கையினை எடுக்க உள்ளதாக தெரிவிக்கும் துண்டுப்பிரசுரங்களே எல்லாளன் படை என்ற பெயரில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. படையினருடன் உறவைப் பேணுவோர், உளவு சொல்வோர், படையினர் வழங்கும் ஆபாச இறுவெட்டுகளை இளைஞர்களுக்கு விநியோகிப்போர். இராணுவத்தின் அப்பக் கடைகளில் காலம் கழிப்போர், பெண்களை படையினருக்கு தொடர்பை ஏற்படுத்திக் கொடுப்போர் மற்றும் படையினரின் துணையுடன்…
-
- 0 replies
- 1.1k views
-
-
பெண் உட்பட மூவரின் மரணங்களுக்கு மக்கள் படை உரிமை கோரியது குடாநாட்டில் சமீபத்தில் கொல்லப்பட்ட ஒரு பெண் உட்பட மூன்று பேரின் மரணங்களுக்கு பொங்கியெழும் மக்கள் படை உரிமை கோரியுள்ளது. பருத்தித்துறையில் வெதுப்பக உரிமையாளர் சின்னராசா இராசையா, திரு நெல்வேலியில் பஞ்சரத்தினம் பிரணவன், மட்டுவில் சமுர்த்தி உத்தியோகத்தர் கணபதிப்பிள்ளை பவளராணி ஆகியோரின் கொலைகளுக்குத் தாமே பொறுப்பு என்று பொங்கி எழும் மக்கள் படையின் பெயரில் தெரிவிக்கப்பட்டது. கொல்லப்பட்ட மூவரும் இராணுவப் புலனாய்வாளர் மற்றும் ஒட்டுக் குழுக் களின் உறுப்பினர்களுடன் இணைந்து செயற்பட்டவர்கள் என்றும் அதற்காகவே இத்தண்டனை வழங்கப்பட்டதாகவும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது. http://www.uthayan.com/pag…
-
- 0 replies
- 1.1k views
-
-
கோப்பாய்ப் பகுதியில் சற்று முன் இராணுவத்தினர் மீது தாக்குதல் ஒன்று நடைபெற்றுள்ளதாகவும் அதில் இராணுவத்திற்கு இழப்புகள் ஏற்பட்டதாகவும் இத்தாக்குதலை அடுத்து பொதுமக்கள் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதே வேளை பருத்தித்துறையிலும் தாக்குதல் சம்பவம் ஒன்று நடைபெற்றதாக உர்ஜிதப்படுத்ததப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான கெடுபிடிகள் பொலிஸாரும் படையினரும் மேற்கொண்டு வருகின்ற பாதுகாப்பு நடவடிக்கைகளின்போது தமிழ் ஊடகவியலாளர்கள் அநாவசியமாக எதிர்நோக்க வேண்டியிருக்கின்ற நெருக்கடிகள் குறித்து தொடர்ச்சியாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டு வந்திருக்கின்றபோதிலும், அரசாங்கம் அது விடயத்தில் உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதில் அக்கறை காண்பிக்காமல் அலட்சிய மனோபாவத்தையே கடைப்பிடித்து வந்திருக்கின்றது. அண்மைக்காலமாக தலைநகர் கொழும்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் படையினரின் தேடுதல் வேட்டைகளின் போது தமிழ் ஊடகவியலாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட சம்பவங்களையடுத்து அவர்களின் பிரச்சினை மீண்டும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஊடகத்துறை, தகவல் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தம…
-
- 11 replies
- 2.1k views
-
-
புலிகளுக்கு எதிராக பிரச்சாரம்: 10 அமைச்சர்களை வெளிநாட்டுக்கு அனுப்ப மகிந்த முடிவு! [வியாழக்கிழமை, 12 சனவரி 2006, 18:15 ஈழம்] [கொழும்பிலிருந்து சி.செந்தூரன்] இலங்கை அமைதி முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதற்கான அரசாங்கத்தின் பங்களிப்பு பற்றி சர்வதேச சமூகத்திற்கு விளக்கமளிப்பதற்காக அமைச்சர்கள் குழுவை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளார். சுமார் 10 அமைச்சர்களை இந்த வெளிநாட்டுப் பயணத்தில் அனுப்புவதற்கு மகிந்த தீர்மானித்திருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன. அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது. சமாதான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான அரசாங்கத்தின் பங்களிப்பு க…
-
- 2 replies
- 1.3k views
-
-
வியாழன் 12-01-2006 22:53 மணி தமிழீழம் [நிருபர் வாவிமகன்] மட்டக்களப்பு நகர் மற்றும் புறநகர் பகுதிகளும் திடீரென இராணுவத்தினரால் சுற்றி வளைப்பு. மட்டக்களப்பு நகரும் மற்றும் புறநகர் பகுதிகளும் இன்று மாலை சிறிலங்கா படையினரால் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தப்பட்டதுடன். கடுமையான சோதணை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. வியாழன் அன்று மாலை வவுனியாவில் சிறிலங்கா கடற்படையினர் மீது இனம் தெரியாதோரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து மட்டக்களப்பில் மலை 4.30 மணியலவில் மட்டக்களப்பு நகர் பகுதியில் இராணு;ம் பொலிஸ் கூட்டாக சேர்ந்து சோதணை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அரச அதிகாரிகள் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என வேன் மோட்டார் சைக்கில் துவிச்சக்கரவண்டி மற்றும் வீதியால் சென்றவர்…
-
- 0 replies
- 1.2k views
-
-
வியாழன் 12-01-2006 23:38 மணி தமிழீழம் [நிருபர் கோபி] வவுனியா கிளைமோர் தாக்குதலை அடுத்து ஒரு பொதுமகன் பலி மேலும் இருவர் காயம். வவுனியா கிளைமோர் தாக்குதலை அடுத்து இராணுவத்தினரின் தாக்குதலில் ஒரு பொதுமகன் பலி மேலும் இருவர் காயம். மன்னார் மதவாச்சி வீதியில் செட்டிக்குளத்திற்கும் அடம்பன்குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியான சிலுவைச் சந்தியில் இன்று மாலை 4.10 மணியளவில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 10 கடற்படையினர் கொல்லபட்டதோடு மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இத்தாக்குதலை அடுத்து சிறீலங்கா கடற்படையினர் திருப்பித் தாக்கியதில் ஒரு பொதுமகன் உயிரிழந்ததோடு மேலும் இரு பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர் மருதமடு என்ற கிராமத்தைச்சேர்ந்த ஜயசிங்க என அ…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறிலங்காவின் சனாதிபதியாக மகிந்த ராஜபக்ஷ பதவி ஏற்று 50 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் சமாதானப் பேச்சுவார்த்தை தொடர்பாக அவர் மேற்கொண்ட நடவடிக்கையானது விடுதலைப் புலிகள் இயக்கம் பேச்சுவார்த்தைக்கு முன்வருதல் வேண்டுமென விடுத்த அழைப்பு மட்டுமே. இவ்அழைப்பு ஒன்றோ அன்றி இரண்டோ அதற்கு மேற்பட்ட தடவையோ அவரால் விடுக்கப்பட்டிருக்கலாம். இதேவேளை இவ் அழைப்புடன் சனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் நிபந்தனைகள் இணைக்கப்பட்டதொன்றாக வராதுவிடினும் பேச்சுவார்த்தை, தொடர்பான நிபந்தனைகளாக ஆசிய நாடொன்றிலேயே பேச்சுவார்த்தை, யுத்த நிறுத்த உடன்;பாட்டில் மாற்றங்களைச் செய்தல் என்ற நிபந்தனைகள் அறிவுறுத்தப்பட்டுக்கொண்டே இருந்தது. அத்தோடு, நோர்வே மத்தியஸ்துவத்திற்கு மாறாக வேறு நாடு ஒன்றைத் தெரிவு செய்தல் குறித்…
-
- 0 replies
- 1.1k views
-
-
வியாழன் 12-01-2006 19:17 மணி தமிழீழம் [நிருபர் மயூரன்] விடுதலைப் புலிகள் படையினருக்கு சேறு பூசும் நடவடிக்கை ஆரம்பித்துள்ளனர் - நிமால் சிறிபால டி சில்வா. தமிழீழ விடுதலைப் புலிகள் அரசாங்கப் படைத்தரப்பினருக்கு சேறு பூசும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக, அமைச்சரவைப் பேச்சாளர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார். இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மகாநாட்டில் அறிவிக்கும் பொழுதே, அவர் இதனைத் தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்த செயல்பாடுகளை, அரசாங்கம் கண்டிப்பதாக தெரிவித்த அவர், நோவேயின் இலங்கைக்கான சமாதான அமைச்சர் எரிக் சொல்ஹேமின் இலங்கை வருகையின் பின்னர், சமாதான பேச்சு வார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான புதிய முன்னெடுப்புக்கள் ம…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கை கடற்படை அதிகாரிகள் இந்திய கடற்படையின் உதவியை கேட்டு இருக்கிறார்கள்.விடுதலைப்புல
-
- 0 replies
- 1.1k views
-
-
விடுதலைப் புலிகள் அல்கைதாவினர் அல்ல: இரா.சம்பந்தன் [வியாழக்கிழமை, 12 சனவரி 2006, 07:36 ஈழம்] [ச.விமலராஜா] தமிழ்த் தேசிய இனப் பிரச்சனையை 'அல்கைதா மன நிலையில்' அமெரிக்கா அணுகினால் அது எந்த வகையிலும் பயன்படாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்ன் இரா.சம்பந்தன் கூறியுள்ளார். இது தொடர்பில் பி.பி.சி. சிங்கள சேவையான சந்தேசியாவுக்கு அவர் அளித்த நேர்காணல்: விடுதலைப் புலிகள் வன்முறைக்குத் தயாராவதாக அமெரிக்க தூதுவர் ஜெஃரி லான்ஸ்ரெட் கூறியுள்ளார். வன்முறை என்பது ஒரு பக்கத்திலிருந்து உருவாவது அல்ல. தமிழ்த் தேசிய இனப் பிரச்சனையை அல்கைதா மன நிலையில் அமெரிக்கா அணுகினால் அது எந்த வகையிலும் பயன்படாது. விடுதலைப் புலிகள் அல்கைதாவினர் அல்…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவு இலங்கை ராணுவம் அட்டூழியம், அகதிகள் தமிழகம் வருகை ஜனவரி 12, 2006 ராமேஸ்வரம்: இலங்கையில் எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவுவதால் அங்கிருந்து தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வர ஆரம்பித்துள்ளனர். புலிகள்ராணுவம் இடையே போர் வெடிக்கும் சூழல் நிலவுவதால் வடகிழக்குப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே பெரும் பீதி பரவியுள்ளது. இதையடுத்து குடும்பம், குடும்பமாக தப்பி தமிழகம் வர ஆரம்பித்துள்ளனர். 24 தமிழர்கள் ஒரு படகில் அரிச்சமுனை கடல் பகுதியில் வந்து சேர்ந்தனர். இதில் 8 பேர் ஆண்கள், 7 பேர் பெண்கள், 9 பேர் குழந்தைகள் ஆவர். அரிச்சமுனையில் இருந்து பல கி.மீ. தூரத்தை நடந்தே கடந்து ராமேஸ்வரத்தின் முகுந்தராயர் சத்திரம் வந்த…
-
- 8 replies
- 2.1k views
-
-
இலங்கை வருகிறார் பாலசிங்கம்? [வியாழக்கிழமை, 12 சனவரி 2006, 06:37 ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இம்மாத இறுதியில் இலங்கைக்கு வருகைத் தரக்கூடும் என்று கொழும்பு நாளேடு தெரிவித்துள்ளது. இம்மாத இறுதியில் நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு வருகை தரும் நிலையில் அவருடன் பேச்சுக்களை நடத்த பாலசிங்கமும் இலங்கை வருகை தரக்கூடும் என்று கூறப்படுகிறது. ஜனவரி 23 ஆம் நாள் இலங்கை வரும் எரிக் சொல்ஹெய்ம் சிறிலங்கா அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் முக்கிய பேச்சுகளை நடத்த உள்ளார். இந்த நிலையில் சிறிலங்கா அரசாஙக்த்தைத் தொடர்பு கொண்ட பாலசிங்கம் சிறிலங்கா பண்டாரநாயக்க விமான நிலையம் ஊடாக கிளிநொச்சி…
-
- 0 replies
- 1.1k views
-
-
சொல்ஹெய்மின் வருகை எதையும் சாதிக்காது அவர் வரும்போது களம் கடுமையாக இருக்கும் "நிலவரம்' நிகழ்ச்சியில் பாலகுமாரன் கருத்து சொல்ஹெய்மின் வருகையால் எதையும் பெரிதாகச் சாதிக்க முடியாது. அவர் இங்கே வரும் போது களநிலைமை கடுமையாக இருக்கும். இவ்வாறு கருத்து வெளியிட்டுள் ளார் விடுதலைப் புலிகளின் முக்கிய பிரமுகர் கா.வே.பாலகுமாரன். தமிழீழத் தேசியத் தெலைக்காட்சி யில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒளி பரப்பாகிய "நிலவரம்' நிகழ்ச்சியில் ""சிறிலங்கா அரசாங்கத்தின் படுகொலை அரசியல் சர்வதேச நிலைப்பாடுகள்'' என்ற தலைப்பில் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே.பாலகுமா ரன் மற்றும் மூத்த ஆய்வாளர் திருநா வுக்கரசு ஆகியோர் தங்களது கருத்து களைப் பகிர்ந்து கொண்டனர். இதன்போது கா.வே.பாலகுமாரன்…
-
- 0 replies
- 991 views
-
-
நிலைமை மேலும் மோசமடைந்தால் கண்காணிப்புப் பணி கைவிடப்படும் கண்காணிப்புக் குழுத் தலைவர் ஹொக்லன்ட் எச்சரிக்கை நிலைமை மேலும் மோசமடைந் தால் கண்காணிப்பு நடவடிக்கைகளை இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு கைவிட நேரிடும். இவ்வாறு எச்சரித்துள்ளார் கண்காணிப்புக் குழுத் தலைவர் ஹக்ருப் ஹொக்லன்ட். "ரொய்டர்' செய்தி நிறுவனத்துக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்: அதிகரித்துவரும் வன்முறைகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளும் இராணுவமும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் வடக்கிலிருக்கும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதுடன் அவர்களில் அநேகர் தங்களின் இடங்களில் இருந்து வெளியேறி வருகின்ற னர். கடந்த டிசெம்பர் மாதம் முதல் நிலைமை …
-
- 0 replies
- 920 views
-
-
மட்டு. சட்டவாளர்கள் - விடுதலைப் புலிகள் சந்திப்பு மட்டக்களப்பு மாவட்ட சட்டவாளர்களிற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் இடையி லான சந்திப்பு கொக்கட்டிச்சோலை சோலையகத்தில் நேற்றுக் காலை 10.00 மணியளவில் நடைபெற்றுள்ளது. இதில் மட்டக்களப்பு மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு. தயாமோகன் மற்றும் மட்டு நகர அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு. அன்புமாறன் ஆகியோர் விடுதலைப் புலிகள் சார்பில் கலந்து கொண்டனர். அண்மைக் காலமாக படையினரால் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்படுவது, தடுத்து வைத்தல் போன்ற சம்பவங்கள் அதிகரித்துச் செல்லும் நிலையில் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு விடுதலைக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பாகவும் எதிர்காலத்தில் எவ்வாறான நடவடிக்கைகளைக் கையாள…
-
- 0 replies
- 1.2k views
-
-
மட்டு. அம்பிளாந்துறையில் தமிழ் தேசிய எழுச்சிப் பேரணி மட்டக்களப்பு மாவட்டம் அம்பிளாந்துறையில் எதிர்வரும் 20ம் திகதி தமிழ்த் தேசிய எழுச்சிப் பேரணி நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட வெகுஜன அமைப்புக்கள் இணைந்து இந்த எழுச்சிப் பேரணியை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளன. எதிர்வரும் 20ம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு அம்பிளாந்துறை பொது விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த எழுச்சி நிகழ்வில் பல்லாயிரக் கணக்கான மக்கள் அணிதிரண்டு உணர்வு ரீதியாக தமது உரிமைக் குரலை உலகறியச் செய்ய வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு
-
- 11 replies
- 1.9k views
-
-
புதன் 11-01-2006 21:21 மணி தமிழீழம் [நிருபர் மயூரன்] விடுதலைப் புலிகளும் அரசாங்கமும் சமதன்மையுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவேண்டும் என்ற அச்சமே பேச்சுக்களை தொடங்க முட்டுக்கட்டையாக இருக்கிறது - ஹிந்துஸ்தான் டைம்ஸ். தமிழீழ விடுதலைப் புலிகளும் அரசாங்கமும் சமதன்மையுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவேண்டும் என்ற அம்சமே தற்சமயம் சமாதான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படுவதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது. தமிழ் தரப்புக்களை ஆதாரம் காட்டி இந்த கருத்தை ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. ஆசிய நாடு ஒன்றிலோ அல்லது தென்னாபிரிக்காவிலோ பேச்சுவார்த்தை நடத்தப்படும் போது அங்கு தமக்கு சம உரிமைத்தன்மை வழங்கப்படாது என தமிழீழ விடுதலைப் புலிகள் எண…
-
- 0 replies
- 1.3k views
-
-
யுத்தம் தொடங்கினால் "விடுதலைப் புலிகளின் இலக்கு யாழ்ப்பாணம்": ரொய்ட்டர்ஸ் [புதன்கிழமை, 11 சனவரி 2006, 16:33 ஈழம்] [ச.விமலராஜா] இலங்கையில் மீண்டும் யுத்தம் தொடங்கினால் யாழ்ப்பாணம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று ரொய்ட்டர்ஸ் செய்தி ஸ்தாபனம் கூறுகிறது. ரொய்ட்டர்ஸ் செய்தி ஸ்தாபனத்தின் ஊடகவியாலாளர் பீற்றர் ஆப்ஸ் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரை: இலங்கையின் இரு தசாப்த கால யுத்தம் மீண்டும் கொழுந்து விட்டெரிந்தால் வடபகுதியான யாழ்ப்பாணத்தின் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் இராணுவ விநியோகப் பாதைகள் மீது கொரில்லாத் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்ற அச்சம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. தமிழர் தாயகத்தின் மையமான பகுதிய…
-
- 0 replies
- 1.4k views
-
-
அமைதிப் பேச்சுக்கு புலிகள் திரும்ப வேண்டும்: அமெரிக்கா ஜசெவ்வாய்க்கிழமைஇ 10 சனவரி 2006இ 22:43 ஈழம்ஸ ஜம.சேரமான்ஸ இலங்கையில் விடுதலைப் புலிகள் வன்முறைகளை கைவிட்டுவிட்டு சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்று அமெரிக்கா கடும் தொனியில் எச்சரித்துள்ளது. கொழும்பில் வர்த்தகர்களுடனான சந்திப்பில் சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதர் ஜெப்ரி லுன்ஸ்டெட் பேசியதாவது: அமைதிப் பேச்சுகளை கைவிட விடுதலைப் புலிகள் முடிவு செய்தால் அவர்கள் அதிக வலுவுள்ள சிறிலங்கா இராணுவத்துக்குக் கடுமையாக முகம் கொடுக்க நேரிடும் என்பதை தெளிவாக நாம் சொல்லுகிறோம். இலங்கை அமைதி முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபாட்டுதான் இருக்கிறது. பயங்கரவாதத்துக்கு பதிலடி கொடுக்கும் யுத்த…
-
- 13 replies
- 2.9k views
-
-
குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை: விடுதலைப் புலிகளைத் தடை செய்ய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எதிர்ப்பு! [செவ்வாய்க்கிழமை, 10 சனவரி 2006, 22:09 ஈழம்] [ம.சேரமான்] ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்ய அதன் உறுப்பு நாடுகள் சில எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்படுகிற குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு ஆகக் கூடியதான ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில் தடை செய்வது என்பது சரி அல்ல என்றும் அந்த நாடுகள் வாதிட்டுள்ளன. அமைதிப் பேச்சுகளைக் காரணம் காட்டி ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதப் பட்டியல் தொடர்பான வழிகாட்டுதலை நோர்வே அரசாங்கம் அண்மையில் நிராகரித்திருந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு ந…
-
- 9 replies
- 2.7k views
-
-
செவ்வாய் 10-01-2006 17:13 மணி தமிழீழம் [கனடா நிருபர்] சர்வதேசமே விழித்துக்கொள்! ஈழத் தமிழ் மாணவர்கள் மீது இலங்கை இராணுவத்தினரால் தொடர்ந்து பிரயோகிக்கப்பட்டு வரும் மனித உரிமை அத்து மீறல் நடவடிக்கைகள் குறித்து கால்ற்றன் பல்கலைக் கழக தமிழ் மாணவர் அமைப்பு பெரும் விசனத்துக்கு உள்ளாகி இருப்பதுடன் தமது கடும் எதிர்ப்பையும் தெரிவிக்கிறது. இந்த ஜனநாயக அத்து மீறல்களை இலங்கை அரச படைகள் உடனடியாக நிறுத்த வேண்டும். இது சார்ந்த அழுத்தத்தினை கனேடிய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று எமது கோரிக்கையினையும் இப்பிரசுரம் வழியாக சர்வதேச சமூகத்திற்கு புலம் பெயர்ந்த தமிழ் மாணவர்களாகிய நாம் முன் வைக்கின்றோம். இலங்கை இராணுவத்தினரின் வன்முறைகளில் இருந்து எமைப் பாதுகாத்து கொள்ளவே …
-
- 0 replies
- 1.3k views
-
-
திருநெல்வேலியில் பாலியல் பலாத்காரம் Written by Pandara Vanniyan Tuesday, 10 January 2006 இன்று பகல் 1.30 மணியளவில் திருநெல்வேலி பால் பண்ணையடியில் இளம் பெண்னொருவர் மீது இரானுவத்தினர் பாலியல் பலாத்காரத்தினைப் புரிந்துள்ளனர். இதனை தடுக்கச் சென்ற மக்களை துப்பாக்கி முனையில் விரட்டியடித்துள்ளனர். (இது தொடர்பான மேலதிக விபரங்கள் மிக விரைவில்) http://www.sankathi.com/
-
- 128 replies
- 13.5k views
-
-
தனியான சந்திப்பில் மன்மோகன் சிங்கிடம் மகிந்த விடுத்த இரு வேண்டுகோள்கள் இந்தியாவிற்கான தனது அண்மைய பயணத்தின் பொழுது மீண்டும் இலங்கையில் யுத்தம் வெடித்தால் இந்திய `அமைதி காக்கும்' படைகளை அனுப்ப வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கேட்டுக் கொண்டதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று தெரிவித்துள்ளது. மன்மோகன் சிங்குடனான சந்திப்பினைத் தொடர்ந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவருடன் இரகசிய சந்திப்பொன்றை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டதாகவும் அதற்கு முதலில் தயங்கிய இந்தியப் பிரதமர் பின்னர் குறுகிய சந்திப்பிற்கு இணங்கியதாகவும் தெரிவித்துள்ள அப்பத்திரிகை, அச்சந்திப்பின் போதே இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. ஆயினும…
-
- 2 replies
- 1.3k views
-