ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
சிங்களத்தையே முன்நிறுத்தும் தென்னிலங்கைப் போக்கு இலங்கை அரசுப் படைகளை அல்லது இலங்கை அரசை குறிப்பிடும் சமயங்களில் தமிழர் தரப்பு அதனை "சிங்களப்படை' என்றோ, "சிங்கள அரசு' என்றோ குறிப்பிடுவது வழமை. நடுநிலையாளர் கள் சிலர் இதனைத் தவறு என்று குற்றம் சுமத்து வதும் உண்டு. ஆனால், கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று அரச கரும மொழி ஆணைக்குழுத் தலைவரை மேற்கோள்காட்டி வெளியிட்டிருக்கும் சில தகவல் களும் மற்றும் புள்ளிவிவரங்களும் அப்படி அழைப்பதில் தப்பு ஏதும் இல்லை என்பதைத் தெளிவுபடுத் தியிருக்கின்றன. இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் (தமிழர், முஸ்லிம்கள் உட்பட) எண்ணிக்கை முழு மக்கள் தொகையில் 26 வீதமாகும். அதாவது, நாட்டின் சனத் தொகையில் கால் பங்கிலும் அதிகமானோர் தமிழ்ப் பேசுவோர்…
-
- 0 replies
- 1k views
-
-
தீர்வுக்கும் தயார்- தீர்த்துக் கட்ட விரும்பினால் முகம் கொடுக்கவும் தயார்: க.வே.பாலகுமாரன் [திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2006, 03:53 ஈழம்] [ம.சேரமான்] சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களினூடே தீர்வு காண முன்வந்தாலும், பேச்சுவார்த்தையை இழுத்தடித்து தீர்த்து கட்ட முனைந்தாலும் முகம் கொடுக்க தயாராக உள்ளோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் எச்சரித்துள்ளார். புலிகளின் குரல் வானொலியில் கடந்த சனிக்கிழமை (11.02.06) ஒலிபரப்பாகிய அரசியல் அரங்கம் பகுதியில் க.வே.பாலகுமாரன் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்: இம்முறை ஜெனீவா பேச்சுக்கள் பற்றிய எண்ணப்பாடுகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். ஜெனீவா என்று சொல்லும்போது எங்கள் எண்ணங்களில் மிகப…
-
- 0 replies
- 887 views
-
-
பிளவுக்குக் காத்திருக்கும் ஜே.வி.பி. சிறிலங்கா உள்ளுராட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்று ஜே.வி.பி. முடிவெடுத்துள்ள நிலையில் அக்கட்சியில் பாரிய பிளவு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. உள்ளுராட்சித் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிடலாம் என்ற யோசனையை ஜே.வி.பி.யின் மத்திய குழுவின் சோமவன்ச அமரசிங்க, விமல் வீரவன்ச, நந்த குணதிலக்க மூவரும் முன்வைத்துள்ளனர். இம்மூவரும் முன்னதாக மகிந்தவுடன் நடத்திய ஆலோசனையில் கூட்டாக தேர்தலைச் சந்திக்க ஒப்புக்கொண்டதாகவும் அது தொடர்பில் மத்தியக் குழுவின் ஒப்புதலைப் பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். தீர்மானத்தின் மீது பேசிய ஜே.வி.பி.யினர் கட்சியுடன் செய்து ஒப்பந்தத்துக்கு நேர் எதிராக மக…
-
- 0 replies
- 1.1k views
-
-
மாணவி கடத்தல் மீசாலையில் பரபரப்பு தென்மராட்சி மீசாலைப் பகுதியில் வைத்து பாடசாலை மாணவி ஒருவர் இனம் தெரியாத கும்பல் ஒன்றினால் பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் மீசாலையில் புத்தூர் சந்திக்குச் சமீபமாக நடைபெற்ற இந்தச் சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மீசாலை, புத்தூர் சந்திப் பகுதியில் மில் ஒழுங்கையில் வசித்து வருபவர் த.அனுஷா. இவர் கொடிகாமம் வீரசிங்கம் மகாவித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்விகற்றுவருகின்றார். இம்மாணவி வழமைபோல் நேற்றும் பாடசாலைசென்றுவிட்டு தன் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தார். இம்மாணவி பாடசாலையிலிருந்து வீடு திரும்பும் வழியில் ஆட்டோ ஒன்றில் ஏற்கனவே தயாராக நின்றிருந்த இனம்தெரியாத கும்பல…
-
- 0 replies
- 1.1k views
-
-
படுக்கையில் வைத்து மனைவியை வெட்டிக்கொன்றார் கணவன் திருநெல்வேலி பாற்பண்ணைப் பகுதியில் சம்பவம் தலை மற்றும் பிடரிப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்ட நிலையில் இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் நேற்றுக் காலை திருநேல்வேலி பாற்பண்ணைப் பகு தியில் உள்ள ஒரு வீட்டில் கண்டுபிடிக்கப் பட்டது. இந்தப் பெண்ணை அவரது கண வரே படுக்கையில் வைத்துப் படுகொலை புரிந்துள்ளார் என்று சந்தேகிக்கப்படுகின்றது. பாற்பண்ணை, இரண்டாம் ஒழுங்கை யில் வசித்துவந்த சிவசீலன் ஜெயசுதா என்ற 29 வயதுடைய குடும்பப் பெண்ணே கொலை யுண்டவராவர். குறிப்பிட்ட வீட்டில் இவரும் கணவரும் மட்டுமே தங்கி இருந்தனர் என்று கூறப்படு கிறது. எட்டு வயதேயான இவர்களது மகள் ஒருத்தி தனது போர்த்தியார் வீட்டில் வசித்து வந்தார். …
-
- 2 replies
- 1.5k views
-
-
ஜெனீவாவில் பேச்சு ஸ்ரீலங்கா அரசுக்கு தற்கொலைக்கு ஈடானது; - புலிகளுக்கு அதிர்ஷ்டம் சமாதானப் பேச்சுகளை நடத்துவதற்குரிய நகரமாக சுவிற்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகர் தெரிந்தெடுக்கப்பட்டது விடுதலைப்புலிகள் அமைப்புக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். ஆசியாவைச் சேர்ந்த நாடொன்றில் புலிகள் அமைப்புடனான சமாதானப் பேச்சுகளை நடத்தும் நிலைப்பாட்டையே ஸ்ரீலங்கா அரசு முதலில் கொண்டிருந்தது. இந்த நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டே சமாதான நடவடிக்கைகளுக்கான சபையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளின் பிரதிநிதிகள் சமாதானப் பேச்சுகளை பிரிட்டனிலோ ஜப்பானிலோ அல்லது நோர்வேயிலோ நடத்துவதற்குச் சம்மதித்திருந்தனர். ஆயினும், தற்போது ஜெனீவாவில் பேச்சுகளை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா அரசு இணங்கியிருப்பது புலிகள் …
-
- 0 replies
- 1.4k views
-
-
பிரஞ்சுக் காலனித்துவப் பிடியிலிருந்து தம்மை விடுவிக்கத் தனது இறுதிப் போராட்டத்தை அல்ஜீரிய "தேசிய விடுதலை முன்ணணி" முடுக்கிவிட்டிருந்த காலகட்டமது. பல நூறாயிரம் படையினரைக் கொண்ட பிரஞ்சு இராணுவத்தின் எல்லை கடந்த கொடூரங்களையும் மீறி அல்ஜீரியத் தேசிய விடுதலை முன்ணணி உக்கிரமான தாக்குதல்களை பிரஞ்சு இராணுவத்தின் படைப்பிரிவுகள் மீது தொடுத்துக் கொண்டிருந்தது. ஏகாதிபத்தியக் காலணித்துவச் சக்தியிடமிருந்து விடுபட்டு தனது சுதந்திரத்தை நிலைநிறுத்தும் நோக்கில் அல்ஜீரியர்கள் முன்னெடுத்த சுதந்திரப் போராட்டம் மிகவும் கடினமானதாகவும் பாரிய இழப்புகளைக் கொண்டதாகவும் நகர்ந்துகொண்டிருந்தது. ஒரு தேசத்தின் விடுதலைப்போராளிகளை அடக்கி ஒடுக்கி நசுக்குவதற்கு அநேகமான அடக்குமுறையாளர்கள் அத்தேசத…
-
- 3 replies
- 1.8k views
-
-
டொலருக்காக சமாதானம் பேசினால் அது பேராபத்திலேயே முடியும் - ஐ.தே.க. எச்சரிக்கை சமாதான நடவடிக்கைகளுக்கச் செல்லும் முன்னர் அது பற்றிய அறிவை வளர்த்துக் கொள்வது அவசியம் என்று பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்குச் சுட்டிக்காட்டியுள்ளது. வெளிநாட்டு உதவிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் டொலர் மோகத்தில் சமாதானம் பற்றி பேச முனைந்தால் அது முடியாமல் போவதுடன், பேராபத்தையே உண்டாக்கும் என்றும் சமாதானப் பேச்சுகளுக்கு அர்ப்பணிப்புகளும், பரஸ்பர விட்டுக்கொடுப்புகளும் மிக அவசியமானவை என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சிய…
-
- 0 replies
- 873 views
-
-
இலங்கையின் முதல்தர கோடீஸ்வரர்களில் ஒருவராக திகழ்ந்த ஆணந்தசிவா கொழும்பில் கருணா குழுவால் கடத்தல். வியாழக்கிழமைஇ 9 பெப்ரவரி 2006 பிரபல கோடீஸ்வரனான வர்த்தகர் ஆணந்தசிவா கருணா குழுவால் கொழும்பில் கடத்தபட்டுள்ளார். கோழும்பின் பிரபல வெஸ்ரேன் மற்றும் றஞ்சனாஸ் நகைகடைகளின் உரிமையாளரும்; லண்டனிலும் கொழும்பிலும் பல சொத்துகளின் பங்களானாக செயற்பட்டு வந்த இலங்கையில் முதல்தர கோடீஸ்வரர்களில் ஒருவராக திகழ்ந்த கரவெட்டி துன்னாலை என்ற இடத்தை சோர்ந்த ஆணந்த சிவா கருணா குழுவால் கடத்தப்பட்டுள்ளார். இந்த கடத்தல் கருணா குழுவின் முக்கியஸ்தர் முஸ்தபாவின் உத்தரவிற்கமைய நடைபெற்றதாக சந்தேகிக்கபடுகின்றது. http://www.nitharsanam.com/?art=15127
-
- 10 replies
- 2.1k views
-
-
23 கப்பல்களுடன் விசுவரூபமெடுத்திருக்கும் விடுதலைப் புலிகளின் கடற்படை: டெய்லி மிரர் [புதன்கிழமை, 8 பெப்ரவரி 2006, 18:04 ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்படையானது 23 கப்பல்களுடன் விசுவரூபமெடுத்திருப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் டெய்லி மிர்ரர் ஆங்கில நாளேடு செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளது. அந்தக் கட்டுரையின் தமிழாக்கம்: விடுதலைப் புலிகளின் பல கடற்புலி உறுப்பினர்கள் அண்மைக்காலமாக பயிற்சிகளை முடித்து வெளியேறுகின்றனர். மறவன் மற்றும் திருவடி பயிற்சி முகாம்களிலிருந்து பயிற்சிகளை முடித்து வெளியேறும் நிகழ்வில் முக்கிய கடற்புலிகளான குகன், செஞ்சீரன், விநாயகம், மோகன், மகேந்திரன், மங்களேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். …
-
- 0 replies
- 1.1k views
-
-
சு.ப.தமிழ்ச்செல்வனுடன் பெரும்பான்மை மதத் தலைமைப் பிரதிநிதிகள் சந்திப்பு தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனுடன் பெரும்பான்மை மதத் தலைமைப் பிரதிநிதிகள் குழுவினர் இன்று புதன்கிழமை சந்தித்துப் பேசினர். கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. பெரும்பான்மை மதத் தலைமைப் பிரதிநிதிகள் குழுவுக்கு மைக்கல் டீ வாஸ் தலைமை வகித்தார். சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பேச்சுக்களைத் தொடங்கி பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று அக்குழுவினர் வேண்டுகோள் விடுத்தனர். மதத் தலைமைப் பிரதிநிதிகள் குழுவை வரவேற்றுப் பேசிய சு.ப.தமிழ்ச்செல்வன், அமைதி முயற்சிகளுக்காக அவர்கள் முன்முயற்சிகளை …
-
- 1 reply
- 914 views
-
-
23 கப்பல்களுடன் விசுவரூபமெடுத்திருக்கும் விடுதலைப் புலிகளின் கடற்படை: டெய்லி மிரர் [புதன்கிழமை, 8 பெப்ரவரி 2006, 18:04 ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்படையானது 23 கப்பல்களுடன் விசுவரூபமெடுத்திருப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் டெய்லி மிர்ரர் ஆங்கில நாளேடு செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளது. அந்தக் கட்டுரையின் தமிழாக்கம்: விடுதலைப் புலிகளின் பல கடற்புலி உறுப்பினர்கள் அண்மைக்காலமாக பயிற்சிகளை முடித்து வெளியேறுகின்றனர். மறவன் மற்றும் திருவடி பயிற்சி முகாம்களிலிருந்து பயிற்சிகளை முடித்து வெளியேறும் நிகழ்வில் முக்கிய கடற்புலிகளான குகன், செஞ்சீரன், விநாயகம், மோகன், மகேந்திரன், மங்களேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அரசாங்…
-
- 0 replies
- 954 views
-
-
சந்திரிகா அணிந்திருந்த கைக்கடிகாரத்தின் விலை மட்டும் 20 இலட்சம் ரூபா ஜனாதிபதி சந்திரிகா, ஜனாதிபதிப் பதவி யிலிருந்து ஓய்வுபெறுவதற்கு முன்னர் அவர் தொடர்¬பான எனது அனுபவங்களைத் தொகுத்து நூல் ஒன்றை எழுதவேண்டும் என்ற எண்ணம் 1999 இல் ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த நேரத்தில் உதயமாயிற்று. அந்த நூலை எழுதுவதற்காகப் பெரு¬மளவிலான நேரத்தைச் செலவிட்டதுடன், நான் எதிர்பார்த்தபடி அந்தநூலின் 90 சதவீதமான வேலை¬கள் முடிவடைந்தன. அவ்வாறு தொகுக்கப்பட்ட விவரங்கள் 500 இற்கும் குறையாத தாள்களில் தட்டச்சிடப்பட்டன.ஆனால், எஞ்சியுள்ள 10 சதவீதப் பணிகளை ஏதோ காரணங்களால் என்னால் செய்துமுடிக்க முடியவில்லை. சந்திரிகா பற்றிய நூல் தொடர்பாக 90சதவீதப் பணிகள் முடிவுற்றிருந்த வேளையிலேயே பிரதம¬ நீதியரசர் குறி…
-
- 0 replies
- 911 views
-
-
1987 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஹமாஸ் இயக்கம் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடாவில் தடை செய்யப்பட்டு அதனுடைய, நிதிமூலங்களான தொண்டர் அமைப்புகள் சர்வதேசம் எங்கும் முடக்கப்பட்டமையும் வங்கிக் கணக்குகள் நிறுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். அதே ஹமாஸ் இயக்கம் தான் இன்று பலஸ்தீன அரசை பொறுப்பேற்கிறது. உலகம் இவர்கள் மீதான தடையை என்ன செய்யப்போகின்றது? கா.வே.பாலகுமாரன் உலகின் மனச்சாட்சியை உலுக்கும் வகையில் உலகத்தால் பயங்கரவாத இயக்கம் என தடை செய்யப்பட்ட ஹமாஸ் இயக்கத்திடம் பலஸ்தீன அரசாங்கப் பொறுப்பை பலஸ்தீன மக்கள் ஒப்படைத்துள்ளமை மகிழ்ச்சிக்குரியது என்று புலிகளின் குரல் வானொலியில் கடந்த சனிக்கிழமை அரசியல் அரங்கம் பகுதியில் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே. ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
திராவிடர் கழகத்தின் தலைவர் டாக்டர் வீரமணி அவர்கள் தமிழினம் அறிந்த தலைவர். தந்தை பெரியார் அவர்களுக்கு பிறகு திராவிடர் கழகத்தின் தலைவராக பணியாற்றி வருபவர். ஆரம்பம் தொட்டு இன்று வரை ஈழத் தமிழர்களின் விடிவுக்காக குரல் கொடுத்து வருபவர். சென்ற 29 டிசம்பர் அன்று சென்னையில் ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாட்டை நடத்தி மீண்டும் தமிழ்நாட்டில் ஈழத்தமிழர் ஆதரவு நிலை வருவதற்கு வழிவகுத்தவர். இனவிடுதலையும் பகுத்தறிவும் இரு கண்கள் என வாழும் தலைவர் வீரமணி அவர்களை பேட்டி காண வெப்ஈழம் விரும்பியது. தன்னுடைய வேலைப்பளுக்களின் மத்தியிலும் வெப்ஈழம் மின்னஞ்சல் மூலம் அனுப்பிய கேள்விகளுக்கு தன்னுடைய பதிலை வீரமணி அவர்கள் தந்திருக்கிறார். முகம் சுளிக்கக்கூடிய கேள்விகள் என்று கருதப்பட்டவைகளுக்கும் வீரமணி அவர…
-
- 1 reply
- 1.3k views
-
-
முன்னாள் ரெலோ பொபி பிரிவின் தலைவர் பொபி மரணம். ரொலோ அமைப்பின் முன்னாள் முக்கிய உறுப்பினரான பொபி காலமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 85, 86 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ரொலோ அமைப்பில் பாரிய பிளவு ஏற்பட்டவேளை தாஸ் (தாஸன்)தலைமையிலான குழுவும், பொபி தலைமையிலான குழுவுமாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் வாழ்ந்துவந்த பொபி சுகயீனம் காரணமாக மரணமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. யாழ்ப்பாணம் நல்லூரைச்சேர்ந்த பொபி, 80 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ரொலோ இயக்கத்தில் இணைந்து, சாவகச்சேரி தாக்குதல் உற்பட பல்வேறு பட்ட தாக்குதல்களிலும் முன்னின்று செயற்பட்டவராவார். 85 ஆம் அண்டுகாலப்பகுதியில் எற்பட்ட பிளவுகளை அடுத்து ரொலோ அமைப்பின் இராணுவத்துறை தலைவராக இருந்த தாஸ் உற்பட அவரது கு…
-
- 3 replies
- 2.1k views
-
-
யாழ்.பல்கலை துணைவேந்தர் பதவிக்கு பேராசிரியர் எஸ்.குமாரவடிவேலை சிபார்சு செய்தது பல்கலை மானியங்கள் ஆணைக்குழு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கான புதிய துணைவேந்தராக பேராசிரியர் எஸ்.குமாரவடிவேலை நியமிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சிபார்சு செய்துள்ளது. புதிய துணைவேந்தரை நியமிப்பதற்காக கடந்த மாத பிற்பகுதியில் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேர்தலில் பேராசிரியர்களான எஸ்.கந்தசாமி, எஸ்.குமாரவடிவேல், ரட்ணஜீவன் கூல் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இந்த மூவரில் ஒருவரை தற்போது பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு சிபார்சு செய்துள்ளது. எனினும், மூவரில் எவராவது ஒருவரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதால் இந்த நியமனத்தில் அரசியல் தலையீடு அதிகமிருக்குமென எதிர்பார்க்…
-
- 2 replies
- 986 views
-
-
ஜெனீவாவில் பெப்ரவரி 22-இல் பேச்சு: நோர்வே அறிவிப்பு [திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2006, 22:58 ஈழம்] [ம.சேரமான்] ஜெனீவாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையே பெப்ரவரி 22ஆம் நாள் பேச்சுக்கள் நடைபெறும் என்று நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது. நோர்வே வெளிவிவகார அமைச்சு இன்று திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நோர்வே அனுசரணையுடன் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஜெனீவாவில் பெப்ரவரி 22 மற்றும் 23ஆகிய நாள்களில் பேச்சுக்கள் நடைபெற உள்ளன. ஜெனிவா பேச்சுக்களுக்கு நோர்வே நாட்டை அனுசரணையாளராக இருக்க சிறிலங்கா அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் கேட்டுக்கொண்டுள்ளனர். கடந்த 2002ஆம் ஆண்டு பெ…
-
- 0 replies
- 1.1k views
-
-
புனர்வாழ்வுக் கழகத்தினர் கடத்தலுக்கு நோர்வே அரச சார்பற்ற நிறுவனம் கண்டனம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் கடத்தப்பட்டமைக்கு நோர்வே அரச சார்பற்ற நிறுவனமான 'போரட்' கண்டனம் தெரிவித்துள்ளது. போரட் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை: இலங்கையின் கிழக்குப் பகுதியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் 10 பணியாளர்கள் கடத்தப்பட்டமைக்கு போரட் கடும் கண்டனம் தெரிவிக்கிறது. கடத்தப்பட்டோரில் 5 பேர் கிளிநொச்சியில் போரட் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க இருந்தவர்கள். இதுவரை விடுவிக்கப்படாத அனைவரையும் உடனே விடுவிக்குமாறு போரட் அமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது. இந்தக் கடத்தல் தொடர்பான விசாரணைக்கு சிறிலங்கா காவல்துறை முன்னுரிமை அளிக்க வேண்டும். …
-
- 0 replies
- 964 views
-
-
ஜெனீவா பேச்சு வார்த்தைகளுக்கு புதிய வடிவத்தில் முட்டுக்கட்டை ஜெனீவா பேச்சுகளுக்கு புதிய வடிவில் தடைபோடப்படுகிறதா? இந்தப் பேச்சுகளுக்கு முன்னர், பேச்சுக்கான புறச்சூழல் ஏற்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்ட நிலையிலும், மோதல்களுக்கான புறச்சூழலே ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கருணா குழுவென்ற பெயரில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நடவடிக்கைகளின் பின்னாலும் அரசும், இராணுவமுமே இருப்பதாக தமிழ்த் தரப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன. ஆனால், அரசும் இராணுவமும் இவற்றை மறுத்தாலும் கிழக்கில் நடைபெற்றுவரும் ஒவ்வொரு நிகழ்வும், அரசும் படையினரும் கூறுவது பொய்யென்றே உணர்த்துகின்றன. எவ்வேளையிலும் நாட்டில் மீண்டுமொரு யுத்தம் வெடிக்கலாமென்ற சூழ்நிலையில் நோர்வேயின் தலையீட்டால் பேச்சுகளுக்குச் செல…
-
- 0 replies
- 956 views
-
-
ஜெனீவாவில் முடிவெடுக்கக் கூடாது: மகிந்தவுக்கு ஜே.வி.பி. கட்டளை! அதிர்ச்சியில் சுதந்திரக் கட்சி!! [ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2006, 18:42 ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஜெனீவாவில் பேச்சு நடத்த மகிந்தவுக்கு ஜே.வி.பி.அனுமதி அளித்ததற்கு விலையாக கொடுக்கப்பட்டிருப்பது 'சுதந்திரக் கட்சியின் அழிவு' என்று அக்கட்சியின் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அரச தலைவர் தேர்தலின்போது இனப்பிரச்சனையில் ஜே.வி.பி.யின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வந்தார் மகிந்த ராஜபக்ச. ஆசிய நாடு ஒன்றில் பேச்சு என்றும் நோர்வேயை மத்தியஸ்தராக அனுமதிக்கக் கூடாது என்றும் ஒற்றையாட்சிதான் தீர்வு என்றும் முழங்கிய மகிந்த ராஜபக்சவுக்கு சர…
-
- 0 replies
- 995 views
-
-
போர் நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறியது யார்?: தமிழகத்தில் வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரை இலங்கை போர் நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறியது யார் என்ற தலைப்பில் தமிழகத்தில் செயற்பட்டு வரும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் உத்தியோகபூர்வ வார ஏடான 'புரட்சி பெரியார் முழக்கம்' இல் ஆய்வுக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அந்த இதழின் ஆசிரியரும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர்களில் ஒருவருமான விடுதலை இராசேந்திரன் எழுதியுள்ள கட்டுரை விவரம்: சர்வதேச நாடுகளும்இ ஐ.நா.வும் அங்கீகரித்துள்ள தேசிய சுய நிர்ணய உரிமைக்காக ஈழத் தமிழர்கள் தங்களுக்கான தேசத்தைத் தாங்களே நியமித்துக் கொள்ளப் போராடுகிறார்கள். அரசியலில் ஜனநாயக அமைப்புகள் வழியாகஇ தொடங்கிய இந்த உரிமைப் போராட்ட…
-
- 3 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாணம் போதனா வையித்திய சாலையில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர் ஒருவர் இலங்கை இராணுவத்திலும் பார்க்க மிகவும் மோசமான நடவடிக்கையில் நோயாளர்களுடன் நடந்து கொண்டுள்ளார் 4 ம் இலக்க நோயாளர் விடுதியில் கடமையாற்றும் குறிப்பிட்ட தாதிய உத்தியோகத்தர் அதிகாலை 2.45 மணியளவில் தனது பணம் மூவாயிரம் ரூபா களவு போய்விட்டதாகக் கூறி அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நோயாளர்கள் உட்பட நோயாளர்களபை; பார்வையிட நின்றவர்களையும் உடல் பரிசோதனை உட்பட அவர்களுடைய மேசைகளின் லாச்சிகள் என பலவற்றையும் சோதனை செய்துளார். இதே நேரம் குறிப்பிட்ட தாதிய உத்தியோகத்தர் திடீரென இத்தகைய செயல்பாட்டில் ஈடுபட்டமையால் நோயாளர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கின்றா…
-
- 0 replies
- 999 views
-
-
வீதிக்கு வீதி சந்திக்கு சந்தி நிற்கும் இராணுவத்தினர் தமது துப்பாக்கி ரவைகளைப் போட்டு விட்டு அதனை விடயம் தெரியாமல் எடுக்கும் இளைஞர்கள் மாணவர்களை விரட்டி வருகின்றார்கள். குறிப்பாக பலாலி வீதி மற்றும் காங்கேசன் துறை வீதிப் பகுதிகளில் இத்தகைய செயல்கள் இடம் பெற்று வருகின்றன.இராணுவத்தினர் நிற்கும் நிலைகளுக்கு அண்மையாக துப்பாக்கி ரவைகளைப் போட்டு விட்டு பார்த்துக் கொண்டு நிற்கின்றார்கள். வீதியில் அநாதரவாக குறிப்பிட்ட ரவை கிடக்கின்றது என எண்ணி அதனைப் பற்றிய விபரம் எதுவும் தெரியாமல் யாராவது எடுத்தால் அதனை அவர் வைத்திருந்ததாகக் கூறி விரட்டி வருகின்ற நிலமை காணப்படுகின்றது இதனால் பொது மக்கள் பெரும் கவனத்துடன் வீதிகளில் செல்ல வேண்டியவர்களாகக் காணப்படுகின்றார்கள் …
-
- 0 replies
- 1k views
-
-
மார்க்கன் குழுவினரே மாமனிதர் யோசப்பை சுட்டனர்: தப்பி வந்த சிறுவன் கூறுகிறான் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தை சுட்டுக்கொலை செய்தது சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் ஆயுதக் கும்பல்தான் என ஒட்டுப்படையிலிருந்து விடுதுலைப்புலிகளிடம் சரணடைந்த சிறுவன் தெரிவித்துள்ளான். கொக்கட்டிச்சோலை சோலையகத்தில் நேற்று விடுதலைப்புலிகளிடம் சரணடைந்த சிறுவனான செந்தில்நாதன் அருள்ராஜ் என்பவனே இந்தத் தகவலைத் தெரிவித்தான். ஆயுதக் கும்பலைச் சேர்ந்த மார்க்கன் தலைமையிலான ஆட்கள்தான் இந்தக் கொலையைச் செய்ததாக தெரிவிக்கப்பட்டது. தன்னைப் பிடித்து வைத்திருந்த காலத்தில் மார்க்கனின் இடத்தில் நிற்கிறவர்கள் ஜோசப் பரராஜசிங்கம் எம்.பியை சுட்டுப்போட்டார்கள் என ஒட்டுக்குழுவைச் அடிக்கடி பேசிக் கொள்வார்கள்…
-
- 0 replies
- 1.2k views
-