Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசியல் தீர்வுடன் கூடிய சுய கௌரவத்துடன் வாழ வேண்டும் என வலியுறுத்தி கிளிநொச்சியில் போராட்டம் By VISHNU 06 NOV, 2022 | 04:48 PM மக்கள் அரசியல் தீர்வுடன் கூடிய சுய கௌரவத்துடன் வாழ வேண்டும் என வலியுறுத்தி கிளிநொச்சியில் கல்மடு நகர் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு மக்கள் அரசியல் தீர்வுடன் கூடிய சுய கௌரவத்துடன் வாழ வேண்டும் என வலியுறுத்தி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு 100 நாள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகிறது. நில அபகரிப்பு ,தொல்லியல் என்ற பெயரில் வனஇலா காணிகளை சுவீகரிப்பு போன்ற விடயங்களை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி 100 நாள் போராட்டத்தை வலியுறுத்தி…

  2. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை ஆணைக்குழு : சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனத் தன்மைக்கு அவமானம் - பேராயர் By DIGITAL DESK 5 08 NOV, 2022 | 03:39 PM (எம்.மனோசித்ரா) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமல் , சட்டமா அதிபர் திணைக்களமானது அரச அதிகாரிகள் தேவைக்கு ஏற்ப செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. இது சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீன தன்மைக்கு அவமானமாகும் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையின் ஏனைய தொகுதிகளையும் ம…

  3. யாழின் முக்கியமான இடங்களில் இராணுவ சோதனை சாவடிகள் யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முயற்சியாக இன்றிலிருந்து முக்கியமான இடங்களில் இராணுவ சோதனை சாவடிகள் அமைத்து வீதியால் பயணிப்போரை சோதனையிட உள்ளதாக யாழ்ப்பாண ராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் போதை பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து இந்த போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் பொதுவெளியில் அதிகளவாக பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேற்படி விடயம் தொடர்பில் அண்மையில் விஜயம் மேற்கொண்ட நீதி அமைச்சர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநரால் போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முகமாக யாழ்ப்பாணத்தி…

  4. இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் இல்லத்தில் 100 கோடி ரூபா பெறுமதியான பொருட்கள், பணம் திருட்டு! 08 NOV, 2022 | 01:31 PM கொழும்பு 7 இல் அமைந்துள்ள இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் போஜ் ஹன்போலின் உத்தியோகபூர்வ இல்லத்துக்குள் நுழைந்து திருடிய சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து சுமார் 100 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.00 மணிக்கும் 7.00 மணிக்கும் இடையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், திருட்டுச் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதா…

  5. வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியம் - விஜயதாச By DIGITAL DESK 5 08 NOV, 2022 | 03:08 PM (இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்) வடக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண பொறுப்புடன் செயற்படும் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அதற்கு தடையேற்படுத்தும் வகையில் செயற்பட்டமை வெறுக்கத்தக்கது. வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அனைவரும் பொறுப்புடனும், அர்ப்பணிப்புடனும் செயற்படுவது அவசியமாகும் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சபையில் வலியுறுத்தினார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அப…

  6. அம்பாறை - தம்பிலுவில் இரு மாணவர்களுக்கிடையே மோதல் ; மாணவன் ஒருவர் உயிரிழப்பு By T. SARANYA 08 NOV, 2022 | 04:42 PM (கனகராசா சரவணன்) அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் இரு மாணவர்களுக்கிடையே பாடசாலையில் ஏற்பட்ட மோதலில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை பகல் இடம்பெற்றுள்ளது. தம்பிலுவில் ஏ.பி.சி வீதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிவபாலன் கிசாஷாந் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, உயிரிழந்த மாணவன் மற்றொரு மாணவனை தாக்கியுள்ளார். இதனையடுத்து உயிரிழந்த மாணவனை த…

  7. 3 திணைக்களங்களில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை! By T. SARANYA 08 NOV, 2022 | 04:28 PM சுங்கம், இறைவரித் திணைக்களம் மற்றும் கலால் திணைக்களங்களில் காணப்படும் 1,538 வெற்றிடங்களுக்கு தற்போது அரச சேவையில் பணிபுரியும் பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். தற்போது சுங்கத் திணைக்களத்தில் 773 வெற்றிடங்களும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் 434 வெற்றிடங்களும் உள்ளன. கலால் திணைக்களத்தில் 331 வெற்றிடங்கள் காணப்படுகினறன. ஓய்வுபெறும் வயது 65ல் இருந்து 60 ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மூன்று துறைகளிலும் பணி புரியும் அனுபவம…

  8. கிளிநொச்சி - புதுமுறிப்பில் வெட்டுக் காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு By T. SARANYA 08 NOV, 2022 | 04:50 PM (கரைச்சி நிருபர்) கிளிநொச்சி புதுமுறிப்பு குளத்தின் நீர்ப்பாசன வாய்க்காலில் வெட்டுக் காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று (08) காலை வீதியால் சென்றவர்கள் சடலம் வாய்க்காலில் இருப்பதனை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். கிளிநொச்சி கோணாவில் ராஜன் குடியிருப்பை சேர்ந்த ப.சத்தியராஜ் வயது 36 என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பின்னர் புதுமுறிப்பு குளத்தின் கீழ் உள்ள நீ…

  9. சில தமிழ் பிரதிநிதிகளின் எதிர்ப்பை கண்டித்தார் விஜேதாச ! தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையில், அதற்கு எதிராக ஒரு சில தமிழ் பிரதிநிதிகளே எதிர்ப்பினை வெளியிடுவதை வண்மையாக கண்டிப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், “21 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்கிய அனைத்துத் தரப்பிற்…

    • 0 replies
    • 326 views
  10. 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மாவீரர் சிலைகளுக்கு அஞ்சலி! எதிர்வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மாவீரர்களின் சிலைகளுக்கும் மரியாதை செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன, பணிப்புரை விடுத்துள்ளார். சுதந்திர தினத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அமைந்துள்ள மாவீரர்களின் சிலைகளுக்கு அஞ்சலி செலுத்துமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவிக்குமாறு அரச நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் செயலாளருக்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார். 75 ஆவது சுதந்திர தினத்துடன் இணைந்து இலங்கையின் தேசிய மாவீரர்களின் தகவல் பதிவேட்டை தயாரிக்கவும், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூக அமைப்புகளை…

  11. காபன் வெளியேற்றத்தை குறைக்க இலங்கை எடுத்துள்ள நடவடிக்கை COP- 27 மாநாட்டில் பங்குபற்றவதற்காக எகிப்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் கொரிய ஜனாதிபதியின் காலநிலை மற்றும் சுற்றாடல் விவகாரங்களுக்கான விசேட தூதுவரும் அந்நாட்டுத் தூதுக் குழுவின் தலைவியுமான நா குயூங் வொனுக்கும் (Na Kyung-Won) இடையிலான சந்திப்பு நேற்று (07) பிற்பகல் நடைபெற்றது. காலநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்ள இலங்கை எடுத்துள்ள முயற்சிகளுக்குப் பாராட்டுத் தெரிவித்த நா குயூங் வொன், நாட்டில் காபன் வெளியேற்ற வீதம் ஏற்கனவே குறைவாக இருக்கின்றபோதிலும் அதன் வெளியேற்றத்தை மேலும் குறைக்க இலங்கை எடுத்து வரும் நடவடிக்கைகளுக்காகவும் அவர் பாராட்டுத் தெரிவித்தார். …

    • 0 replies
    • 221 views
  12. எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றில் எழுப்பிய கேள்வி! நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் இந்நாட்டில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் நாம் மிகவும் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என்பதை எமக்கு எடுத்துக் காட்டுகின்றது. அத்துடன், இந்நாட்டில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் குழுவும் (UNCRC) சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக சிறுவர் துஷ்பிரயோகம் உட்பட அனைத்து துஷ்பிரயோகங்களில் இருந்தும் இந்நாட்டு சிறுவர்களை பாதுகாத்து அவர்களுக்கு பாதுகாப்பான நாளைய எதிர்காலத்தை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயற்பட வேண்டிய தேவையுள்ளது. இதன் பிரகாரம், இதன…

    • 0 replies
    • 155 views
  13. அதிகாரப் பரவலாக்கல் என்பது நாட்டை பிரிக்கும் யோசனை இல்லை – சாணக்கியன் நீண்ட காலமாக நீடித்து வரும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்காமல் பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வினைக் காண முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றிய அவர், தமிழர்களுக்கு தீர்வை வழங்காமல், அதற்கு தடையாக இருப்பவர்கள் யார் என்பது குறித்து சிங்கள மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என கூறினார். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கங்கள் நிறைவேற்றாத காரணத்தினாலேயே சர்வதேச அழுத்தங்கள் இலங்கை மீது பி…

  14. நாகவிகாரை விகாராதிபதியை சந்தித்த யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள்! கடலட்டை பண்ணை விடயம் தொடர்பாக, யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் ஆரியகுளம் நாகவிகாரை விகாராதிபதி மீகஹஜந்துர சிறிவிமல தேரரை இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) சந்தித்து கலந்துரையாடினர். யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் சம்மேளனத்தின் தலைவர் அ.அன்னராசா, உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் உள்ளிட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். கடலட்டை பண்ணைகளை அமைக்கும் போது அதனை ஆய்வுக்குட்படுத்தி மேற்கொள்ளல், ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கடலட்டை பண்ணை தொடர்பாக பேசுவதற்கான சந…

  15. பொது அமைதியை பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படைகளையும் அழைத்து ஜனாதிபதி உத்தரவு. பொது அமைதியை பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படைகளையும் அழைத்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமான நிலையில், காலை 9.30 மணியளவில் இந்த விடயம் குறித்த ஜனாதிபதியின் மகஜரை சபாநாயகர் சமர்பித்தார். குறித்த மகஜரில் 40வது அதிகாரசபையின் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின்படி தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி பொது ஒழுங்கைப் பேண வேண்டியதன் அவசியத்தைக் கருத்திற்கொண்டு, அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களும் அழைக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிப்பதாக ஜனாதிபதி …

  16. பொது நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்கான திட்டங்கள் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கம்? 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை (SOEs) தனியார்மயமாக்குவதற்கான முக்கிய திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை எதிர்வரும் 14 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதத்திற்காக சமர்ப்பிக்கவுள்ளார். இது முதன்மையாக சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு இணங்க பொருளாதார சீர்திருத்தங்களை செயற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட வரவு செலவுத் திட்டமென தெரிவிக்கப்படுகிறது. தனியார் துறையின் பங்களிப்புடன் அபிவிருத்…

  17. அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்க வேண்டும் - வடமாகாண பட்டதாரிகள் ஒன்றிய தலைவர் By DIGITAL DESK 2 07 NOV, 2022 | 03:12 PM பட்டதாரி நியமனத்தில் 35 வயதிற்கு மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குமாறு வடமாகாண பட்டதாரிகள் ஒன்றிய தலைவர் சிவசுப்பிரமணியம் லோகதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை (நவ.07) ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு கோரிக்கை விடுத்தார். மேலும் தெரிவிக்கையில், 35 வயதிற்கு மேற்பட்ட 8000 பட்டதாரிகள் பாடசாலை ஆசிரியர் பயிற்சிக்காக காத்திருக்கிறார்கள். அரசாங்க சேவையில் 35 வயதிற்கு மேற்பட்ட பட்டதாரிகளை நிய…

  18. சட்ட ரீதியாக திருமணம் செய்யாத மனைவிக்கு கடும் சித்திவதைகளை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அரச நிறுவனம் ஒன்றில் உதவிப்பணிப்பாளராக தொழில் புரியும் நபரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா பதில் நீதவான் வசந்தா குணசேகர இன்று உத்தரவிட்டுள்ளார். சமிந்த குருப்பு நாணயக்கார என்ற நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்ப்டுள்ளார். சட்ட ரீதியாக திருமணம் செய்துக்கொண்ட தம்பதியினர் அல்ல கம்பஹா பிரதேசத்தில் வீடொன்றில் மேல் மாடியில் இருந்து குதித்த நிலையில் காயமடைந்த 40 வயதான பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பெண் கொழும்பில் உள்ள நிறுவனம் ஒன்றில் உயர் பதவியை வகித்து வருவதாக நீதிமன்றத்…

  19. துப்பாக்கியை எடுத்துச்சென்ற சட்டத்தரணி கைது 07 NOV, 2022 | 10:04 PM அனுமதிப்பத்திரமற்ற துப்பாக்கி ஒன்றை வேனில் எடுத்துச் சென்ற குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவர் புத்தளம் குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் இன்று (07) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகத்துக்குரிய சட்டத்தரணி தனது வேனில் சாலியவெவ கலவெவ பகுதிக்குச் சென்று கொண்டிருந்த போது வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோதே துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. https://www.virakesari.lk/article/139387

  20. விலை சூத்திரத்திற்கமைவான எரிபொருள் விலை திருத்த முறைமையில் மாற்றம் இல்லை - வலு சக்தி அமைச்சு By VISHNU 07 NOV, 2022 | 08:07 PM (எம்.மனோசித்ரா) விலை சூத்திரத்திற்கமைய எரிபொருள் விலை திருத்தங்களை மேற்கொள்வதில் எவ்வித மாற்றங்களும் இடம்பெறாது என்று வலு சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. உலக சந்தையில் காணப்படும் விலைக்கு ஏற்பவே உள்நாட்டிலும் எரிபொருள் விலை திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. மாதாந்தம் முதலாம் திகதி மற்றும் 15 ஆம் திகதிகளில் விலை சூத்திரத்திற்கமைய எரிபொருள் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். எனினும் இது நியாயமான விடயமல்ல என்று எரிபொருள் நிரப்பு நிலைய உர…

  21. 300 கிலோ கிராம் நிறையுடைய ஹெரோயின் அம்பாந்தோட்டை கடலில் மீட்பு By DIGITAL DESK 2 07 NOV, 2022 | 09:55 AM அம்பாந்தோட்டை கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 300 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சோதனை நடவடிக்கை இன்று திங்கட்கிழமை (நவ.06) அதிகாலை முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் தடுப்பு பிரிவு, கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரு மீன்பிடி படகுகளும் சிறிய ரக படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை, போதைப்பொருள் …

  22. தமிழ், முஸ்லிம்களின் பூர்வீக நிலங்கள் பறி போகின்றன : சிறுபான்மை தலைமைகள் ஒன்றிணைந்து குரல்கொடுக்க வேண்டும் - கவிஞர் கால்தீன் By VISHNU 06 NOV, 2022 | 04:50 PM கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களின் விவசாய நிலங்களை அரசாங்கம் அபகரித்து, அம்மக்களை விவசாயம் செய்யாமல் தடை செய்து, இனவாத அதிகாரிகளால் விரட்டியடிக்கும் நிகழ்வு அம்பாறை மாவட்டத்தில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வந்தும் எந்தத் தீர்வும் கிடைக்க வில்லை என எழுத்தாளரும், பன்நூல் ஆசிரியருமான கவிஞர் கால்தீன் குற்றம் சாட்டுகின்றார். அக்கரைப்பற்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர். அ…

  23. பேருந்துகள் ஒவ்வொருநாளும் சோதனைக்கு உட்படுத்தப்படும் – வடக்கு ஆளுநர் நெடுந்தூர சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரத்தை சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். பேருந்து விபத்து தொடர்பாக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை குறித்து வினவிய போதே ஆளுநர் ஜீவன் தியாகராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார் மேலும் யாழ்ப்பாணம் – கொழும்பு மற்றும் ஏனைய நெடுந்தூரங்களுக்கு சேவையில் ஈடுபடும் பேருந்துகள் அனைத்தையும் ஒவ்வொரு நாளும் பரிசோதிக்கவுள்ளதாக கூறினார். A-9 பாதையில்பயணம் செய்யும் பேருந்துகளை 10 நிமிடங்கள் நிறுத்தி சாரதிகளை சோர்வு தன்மையில் இருந்து நீக்குவதற்கு முயற்சி எடுத்துள்ளதாக தெரிவித்…

  24. போராட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்ட D.A.ராஜபக்ஷவின் உருவச் சிலை புனரமைக்கப்பட்டது தங்காலையில் போராட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்ட D.A.ராஜபக்ஷவின் உருவச் சிலை மீண்டும் புனரமைக்கப்பட்டுள்ளது. டி.ஏ.ராஜபக்ஷவின் 55வது நினைவு தினம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தங்காலையில் இடம்பெற்றது. இதன்போதே D.A.ராஜபக்ஷவின் உருவச் சிலை புனரமைக்கப்பட்டு மீண்டும் காட்சிக்கு வைக்கப்பட்டடுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சிலையின் மறுசீரமைப்பை உறுதிப்படுத்தும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். கடந்த மே மாதம் 09 ஆம் திகதி தங்காலையில் அமைக்கப்பட்டிருந்த D.A.ராஜபக்ஷவின் சிலை போராட்டக்காரர்களால் உடைத்து சேதமாக்கப்பட்டது. அரசாங்கத்…

  25. தமிழ் பிரதேசங்களை பெரும்பான்மையினருடைய பிரதேசங்களுடன் இணைக்க திட்டம் – செல்வம் எம்.பி. எல்லை நிர்ணயம் மூலம் தமிழ் பிரதேசங்களை பெரும்பான்மையினருடைய பிரதேசங்களுடன் இணைக்கும் செயற்பாடு இடம்பெறுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,எல்லை நிர்ணயம் தொடர்பாக முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தலைமையில் ஐந்து பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வவுனியாவில் பல கிராமங்களை அனுராதப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.