Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஆறு கடற்படையினருடன் படகு மாயம் - போதைப்பொருள் கடத்தல் தடுப்பு முயற்சியில் ஈடுபட்டிருந்தனர் என தகவல் By RAJEEBAN 14 OCT, 2022 | 08:28 AM ஆறு கடற்படையினருடன் படகொன்று காணாமல்போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட படகில் இருந்தவர்களுடன் தொடர்புதுண்டிக்கப்பட்டுள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தாக ஐலண்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளதுடன் குறிப்பிட்ட கப்பலை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவேளையே கடற்படையினர் காணாமல்போயுள்ளனர். அவர்கள் வழமையான ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் என கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ள அதேவேள…

  2. 18 பில். டொலர் முதலீடு: ஹம்பாந்தோட்டையில் டிஸ்னிலேண்ட்? தெற்காசியாவின் முதலாவது டிஸ்னிலேண்ட் வணிக நோக்கு பூங்காவை ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, அடுத்த மாதம் அமெரிக்கா செல்லவுள்ளார். வோல்ட் டிஸ்னி நிறுவனத்தின் அழைப்பின் பேரில், இலங்கையில் 18 பில்லியன் டொலர் முதலீட்டுக்கான ஆரம்பத் திட்டங்களைப் பற்றி கலந்துரையாடுவதற்காக இராஜாங்க அமைச்சர் அடுத்த மாதம் அமெரிக்காவில் உள்ள பர்பேங்குக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமைச்சரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் டிஸ்னிலேண்ட் பூங்கா ஒன்றை அமைப்…

    • 3 replies
    • 327 views
  3. 53 கஞ்சா செடிகளை வீட்டு தோட்டத்தில் வளர்த்த நபர் கைது By DIGITAL DESK 5 24 OCT, 2022 | 04:17 PM வீடு ஒன்றின் தோட்டத்தில் 53 கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரை சவளக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அன்னமலை பகுதியில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வருவதாக இரகசிய தகவல் ஒன்றை அடுத்து பொலிஸார் திங்கட்கிழமை (24) தீபாவளி தினத்தன்று தேடுதல் மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்தனர். இவ்வாறு கைதானவர் அன்னமலை பகுதியை சேர்ந்த 58 வயதான சந்தேக நபர் என்பதுடன் வீட்டின் தோட்டத்தில் உள்ள பயிர்களுடன் இணைத்து குறித்த 53 கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளார் என பொலிஸா…

  4. கணவன் - மனைவிக்கிடையில் கத்தி வெட்டு : இருவரும் வைத்தியசாலையில் By VISHNU 24 OCT, 2022 | 01:30 PM யாழ். கொடிகாமம் தவசிக்குளம் பகுதியில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் கத்தியால் வெட்டிக்கொண்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடும்ப பிரச்சினை வாய் தர்க்கமாக மாறியதில் கணவன் மனைவியை வெட்டியுள்ளார். அதே கத்தியினை பறித்த மனைவி கணவனை வெட்டியுள்ளார். இருவரும் வெட்டு காயங்களுக்குள்ளான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/138318

  5. காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் சட்டத்தைப் புதுப்பித்து அதன் செயற்பாடுகளை மறுசீரமைக்கவும் - கோப் குழு காணி பணிப்புரை By VISHNU 24 OCT, 2022 | 03:42 PM காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் சட்டத்தைப் புதுப்பித்து அதன் செயற்பாடுகளை மறுசீரமைப்பதற்கு தேவையான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) காணி அமைச்சின் செயலாளர் சூலானந்த பெரேராவிற்குப் பணிப்புரை விடுத்தது. இதற்கமைய ஆறு வாரங்களுக்குள் இது தொடர்பில் எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் குறித்து கோப் குழுவுக்கு அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டது. 2020ஆம் ஆண்டுக்கான காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு குறித்த கணக்காய்வாளர் நாய…

  6. போதைவஸ்து பாவனைக்கு எதிராக அனைவரும் பாடுபட வேண்டும் : யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் By VISHNU 24 OCT, 2022 | 03:15 PM ( எம்.நியூட்டன்) போதைவஸ்து பாவனையில் ஈடுபடுபவர்கள் போதைவஸ்தை கடத்தலில் ஈடுபடுபவர்கள் அனைவரும் அந்த தீய செயற்பாட்டில் இருந்து விலக வேண்டுமென யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் கோரிக்கை யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைபொருள் பாவனை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போத அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எங்கள் சமுதாயத்தை ஆட்கொண்டிருக்கும் பெரும் தீமையாகிய போதைவஸ்து பாவனைக்கு எதிராக அனைவரும் பாடுபட வேண்டும். அதற்கு எதிராக பாடுபடுபவர்களுக்காக நா…

  7. யாழ். பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்ட 19 மாணவர்களுக்கு வகுப்புத்தடை By DIGITAL DESK 5 24 OCT, 2022 | 04:10 PM யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பகடி வதை மற்றும் துன்புறுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்ட 19 சிரேஷ்ட மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி ஆண்டுக்கான கற்றல் செயற்பாடுகளுக்காக மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு, பதிவுகள் இடம்பெற்றுள்ள நிலையில், புதுமுக மாணவர்களைப் பகடி வதைக்குட்படுத்திய சிரேஷ்ட மாணவர்கள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இடம்பெற்ற விசாரணைகளின் போது குற்றம் நிரூபிக்கப்பட்ட கலைப்பீடத்தைச் சேர்ந்த 14 பேருக்கு ஆறு மாத கால வகுப்புத் தடை…

  8. யாழில் களையிழந்த தீபாவளி வியாபாரம் தீபாவளிப் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் யாழ்ப்பாண நகரப்பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் நேற்று குறைவாகக் காணப்பட்டது. ஒவ்வொரு வருடமும் தீபாவளிப் பண்டிகையின் முதல் நாளின் போது சனக்கூட்டத்தால் யாழ் நகரம் நிரம்பி வழியும் நிலையில், நேற்று மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது. புடவைக் கடைகள் மற்றும் ஏனைய கடைகளிலும் பொதுமக்களின் வரவு குறைவாக காணப்படுகின்றது. அத்துடன் அங்காடி வியாபாரமும் எதிர்பார்த்த அளவுக்கு களைகட்டவில்லையென வியாபாரிகள் தெரிவித்தனர். https://thinakku…

  9. இரட்டைக் குடியுரிமை : தேர்தல் ஆணைக்குழுவின் செய்தி -சி.எல்.சிசில்- இரட்டைக் குடியுரிமை தொடர்பான முடிவுகளை நீதிமன்றத் தீர்மானங்கள் மூலம் மட்டுமே எடுக்க முடியும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது. புதிதாக நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தின் கீழ் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகச் செயற்பட முடியாது. பாராளுமன்ற உறுப்பினர் இரட்டைக் குடியுரிமை உள்ளவரா இல்லையா என்பது குறித்து உடனடியாக முடிவெடுக்க முடியாது என்று கூறியுள்ள தேர்தல் ஆணைக்குழு, அத்தகைய நபர்கள் உடனடியாக இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது. எதிர்வரும் தேர்தலுக்கான வேட்புமனுக்களை…

    • 0 replies
    • 291 views
  10. தற்போதைய நெருக்கடிக்கான காரணம் தனது ஆட்சிக் காலத்தில் இருந்தது போன்று தற்போது நாட்டில் நட்புறவான வெளிவிவகாரக் கொள்கை இல்லாமையினாலேயே தற்போதைய நெருக்கடி நிலையை மோசமாக்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கடந்த மூன்று வருடங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மக்கள் மத்தியிலும் அரசாங்கத்திலும் மிகவும் கேள்விக்குரிய நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொலன்னறுவை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார். https://tamil.adaderana.lk/news.php?nid=166964

    • 0 replies
    • 134 views
  11. மானிய விலையில் உரம், மண்ணெண்ணெய் கிடைக்க நடவடிக்கை எடுங்கள் - யாழ் மாவட்ட கமக்கார அமைப்புக்களின் அதிகார சபை தலைவர் By VISHNU 24 OCT, 2022 | 02:02 PM ( எம்.நியூட்டன்) மரக்கறி செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு மானிய விலையில் உரம் மற்றும் மண்ணெண்ணெய் கிடைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ் மாவட்ட கமக்கார அமைப்புக்களின் அதிகார சபை தலைவர் கந்தையா தியாகலிங்கம் கோரிக்கை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மீனவர்களுக்கு ஒரளவுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. மண்ணெண்ணெயை பயன்படுத்தி ஒரளவேனும் கடற்தொழில் செய்கின்றார்கள். ஆனால் விவசாயிகளுக்கு ம…

  12. இலங்கையிலிருந்து மேலும் 4 பேர் இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் By VISHNU 24 OCT, 2022 | 12:43 PM இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளனர். அண்மைக்காலமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை பூர்வீகமாக கொண்ட நூற்றுக்கு மேற்பட்டோர் படகுமூலம் கடல் மார்க்கமாகச் சென்று இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். அந்தவகையில் இன்று திங்கட்கிழமை (24) காலை திருகோணமலையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று படகு மூலம் இந்தியா சென்று தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் ஆகியோரே இவ்வாறு அகதிகளாக சென்றுள்ளனர். த…

  13. மின் கட்டணம் மீண்டும் உயரும் சாத்தியம் ? By DIGITAL DESK 5 24 OCT, 2022 | 11:11 AM ( எம்.எப்.எம்.பஸீர்) மின்சார கட்டணம் மேலும் 30 சத வீதத்தால் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக அறிய முடிகின்றது. இது குறித்து சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளதாகவும், இலங்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள 290 கோடி டொலர் கடன் தொகை தொடர்பில் ஒரு நிபந்தனையாக இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது. எதிர்வரும் டிசம்பர் மாதம் குறித்தப் கடன் தொகை தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்க முன்னர் இந்த மின் கட்டண அதிகரிப்பு அவசியம் என குறித்த நிபந்தனையில் தெரிவிக்கப்ப்ட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இது குறித்து…

  14. நாட்டில் 96 இலட்சம் பேர் வறுமையில் : மரணிக்காமலிருக்க 4 பேர் கொண்ட குடும்பத்தின் செலவு 60 ஆயிரம் ரூபா - ஹர்ஷ By DIGITAL DESK 5 24 OCT, 2022 | 11:09 AM ( எம்.எப்.எம்.பஸீர்) ' இலங்கையின் மொத்த சனத் தொகை 220 இலட்சமாகும். அதில் 96 இலட்சம் பேர் தற்போது வறுமையின் பிடியில் உள்ளனர் என புள்ளிவிபரங்களின் ஊடாக கணிப்பிட முடிந்துள்ளது. அவ்வாறான பின்னணியில், மரணிக்காமல் வாழ ஒரு நபருக்கு தேவைப்படும் தலா வீத சக்தி வள நுகர்வு (கிலோ கலோரி) 2030 ஆகும். அதனை பெற்றுக்கொள்ள மட்டும் கொழும்பில் 4 பேர் கொண்ட ஒரு குடும்பம் 60 ஆயிரம் ரூபாவை மாதம் செலவழிக்க வேண்டியுள்ளது. இவ்வாறான நிலையில், அரசாங்கம் எந்த பகுப…

  15. இலங்கை ஜனாதிபதி அதிகாரத்தை குறைக்கும் 22ஆவது திருத்தச் சட்டம் - முழு விவரம் யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 22வது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அக்டோபர் 21 மாலை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில், இந்தத் திருத்தத்துக்கு ஆதரவாக 179 வாக்குகள் கிடைத்தன. எதிராக ஒரு வாக்கு மட்டும் அளிக்கப்பட்டது. ஜனாதிபதியின் அதிகாரங்களில் சிலவற்றைக் குறைத்து, அவற்றினை நாடாளுமன்றம் மற்றும் அரசியல் பேரவை போன்றவற்றுக்குக் கையளிக்கும் வகையில் இந்தத் திருத்தச் சட்ட மூலம் நாடாளுமன…

  16. நவீன நரகாசூரன் அழிந்தால்தான் இந்துகளுக்கு தீபாவளி! அருட்தந்தை மா. சக்திவேல் இலங்கையில் நவீன நரகா சூரன், சூரன்கள் அழிந்தால் தான் இந்துகளுக்கு தீபாவளி என அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்தார். இந் நாளிலே தீமையை எதிர்த்து நன்மைக்காக யார் போராடுகின்றார்களோ அவர்கள் தீபமாக ஒளிபெறுவார்கள் என்பது இதன் பொருள். நராகா சூரணை வதைத்து கொடிய துன்பத்தில் இருந்து மீண்ட நாளை நினைத்து கொண்டடுவதுதான் தீபாவளி . தமிழர்களின் இனம், நிலம், மொழி, கலாச்சாரம், கல்வியை, பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த பூர்விக நிலங்களை கையகப்படுத்தி, பறித்த நவீன நரகாசூரர்கள் இன்னும் இலங்கையில் வதம் செய்ய படவில்லை. அவர்கள் என்று ஒழிகின்றார்களோ அன்றுதா…

  17. போதைப்பொருள் பாவனையை தடுக்க வேண்டியவர்களே, அதற்கு உடந்தையாக இருக்கிறார்கள்! October 24, 2022 போதைப்பொருள் பாவனையை சட்டரீதியாக தடுக்க வேண்டியவர்களே அதற்கு உடந்தையாக இருப்பது தெரிகிற நிலையில், அது சம்பந்தமாக மிக உயர்ந்த மட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதிகரித்து வரும் போதைபொருள் பாவனை தொடர்பில் கருத்துரைத்த அவர், போதைப் பொருள் பாவனை தற்போது தலைவிரித்தாடுகின்றது. இதன் காரணமாக 10 இளைஞர்களுக்கு மேல் உயிரிழந்துள்ளார்கள். 140 பேர் வரையிலானோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த காலத்தில் “வன்முறை ஒழிப்போம் போதை பொருளை தடுப்போம்” எனும் தொனிப்பொர…

  18. கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவது நாட்டின் கலாசாரத்திற்கு எதிரானது! கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கும் அதிகாரிகளின் நடவடிக்கையை எதிர்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். மருத்துவ நோக்கங்களுக்காக கஞ்சாவை வளர்ப்பதற்கான சட்டத்தை உருவாக்கவுள்ளதாக சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி அறிவித்துள்ளார். கஞ்சா ஆயுர்வேத சட்டத்தின் கீழ் வருவதால், பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது என இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி மேலும் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் நிதி நலன்களின் அடிப்படையில் மாத்திரம் அதிகாரிகள் தீர்மானங்களை எடுக்க முடியாது என திஸ்ஸ அத்தநா…

  19. 18 பில்லியன் டொலர் முதலீட்டில் ஹம்பாந்தோட்டையில் டிஸ்னிலேண்ட் வணிக பூங்கா தெற்காசியாவின் முதலாவது டிஸ்னிலேண்ட் வணிக நோக்கு பூங்காவை ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா தெரிவித்துள்ளார். இலங்கையில் 18 பில்லியன் டொலர் முதலீட்டுக்கான ஆரம்பத் திட்டங்களைப் பற்றி கலந்துரையாடுவதற்காக இராஜாங்க அமைச்சர் அடுத்த மாதம் அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அறியமுடிகின்றது. மேலும் நவம்பர் மாத இறுதியில் ஆய்வுகளை நடத்துவதற்கு டிஸ்னி நிறுவன முதலீட்டாளர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மத்தள விமான நிலையம் உள்ளிட்ட பிரதேசத்தில் உள்ள பா…

  20. பொதுஜன பெரமுனவுடனான உறவுகள் தொடர்ந்து நீடிக்கும்-சீன தூதரகம் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுனவுடன் உறவுகளை மேம்படுத்துவதற்கு ஆர்வம் கொண்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. சீன தூதரகம் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன கம்யுனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக ஜி ஜின்பிங் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறித்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதை தொடர்ந்தே சீன தூதரகம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2022/1306657

  21. நாட்டில் சூழ்ந்திருக்கும் இருளை விரட்டி ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் – ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்து தீபாவளிப் பண்டிகையானது அனைவரது அபிலாசைகளையும் பூர்த்தி செய்து இலங்கையை சௌபாக்கியம் நிறைந்த நாடாக உருவாக்கும் சிறந்த எதிர்காலத்தின் தொடக்கமாக அமைய வேண்டுமென பிரார்த்திப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுள்ள அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இதனை தெரிவித்துள்ளார். மேலும் வண்ண மயமான கலாசார நிகழ்வான தீபாவளி நன்னாளில் வாழ்த்து தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன் என்று தெரிவித்த ஜனாதிபதி அஞ்ஞானம் நீங்கி, மெய்ஞானம் பிறக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அதேபோல நம் தாய்…

  22. யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் 35வது நினைவு தினம்! இந்திய இராணுவத்தினரால் யாழ் போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 35வது நினைவு தினம் இன்று (வெள்ளிக்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டு யாழ் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய இராணுவத்தினரால் யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்த 21பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். அந்த கொடூர சம்பவத்தின் 35ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ் போதனா வைத்தியசாலை ஊழியர்களின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது. இந்திய இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக உயிரிழந்தோரின் உறவுகளால் பொது சுடர் ஏற்றப்பட்டு ப…

  23. கோட்டாவே தற்போதும் ஜனாதிபதி என சிலர் கருதுகின்றனர் - ஆளுங்கட்சியினருக்கு செக் வைத்த ரணில் By NANTHINI 22 OCT, 2022 | 01:03 PM (லியோ நிரோஷ தர்ஷன்) அதிகாரங்கள் உள்ளதாக கூறப்பட்ட போதிலும் அவ்வாறான எந்தவொரு அதிகாரங்களும் எனக்கு இல்லை. கோட்டாபய ராஜபக்ஷ இன்னும் ஜனாதிபதி பதவியில் இருக்கின்றதாக கருதியே சில ஆணைக்குழுக்கள் செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெற்றிலையை கொடுத்து கும்பிட்டுக் கேட்டாலும், தற்போதைக்கு தேர்தல் ஒன்றுக்கு செல்ல மாட்டேன் என ஆளுங்கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது குறிப்பிட்டுள்ளார். உத்தேச தேர்தல்கள் மற்றும் 22ஆவது திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயும்…

  24. பல்கலைக்கழகக் கட்டமைப்பில் ஏற்படும் தாமதம் தவிர்க்கப்படும் : மாணவர்கள் குறித்த காலத்திற்குள் கல்வியை முடிக்க சந்தர்ப்பம் - ஜனாதிபதி ரணில் By VISHNU 23 OCT, 2022 | 08:07 PM கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கும்போதே, இலங்கைப் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் நிலவும் கால தாமதம் தவிர்க்கப்பட்டு மாணவர்கள் குறித்த காலத்திற்குள் கல்வியை நிறைவு செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பு றோயல் கல்லூரியின் மாணவத் தலைவர்களுடன் சனிக்கிழமை (22) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்நிகழ்வில், றோயல் கல்லூரியின் சிரேஷ்ட மாணவத் தலைவ…

  25. கோப்பாயில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை By NANTHINI 23 OCT, 2022 | 01:56 PM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு பொக்கணை பகுதியில் நீண்டகாலமாக இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையமொன்று யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் அதிரடியாக முற்றுகையிடப்பட்டது. அங்கிருந்து கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டதாக கருதப்படும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், 200 லீற்றர் கோடா, 60 லீற்றர் ஸ்பிரிட் மற்றும் கசிப்பு தயாரிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.