Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எங்களை அடக்கியாள சிங்கள அரசுகள் பயன்படுத்திய சட்டம் நீக்கப்பட வேண்டும் - வேலன் சுவாமிகள் 28 Feb, 2026 | 04:48 PM காலம் காலமாக எங்களை அடக்கி ஆள்வதற்கு சிங்கள அரசுகள் பயன்படுத்திய சட்டங்கள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும். அவ்வாறு நீக்கி எமக்கான சுமூகமான, நல்லிணக்கமான சூழல் ஏற்படுத்தப்பட்டால் மட்டும்தான் நாங்கள் அரசியல் தீர்வு பற்றி கதைக்க முடியும் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர்களில் ஒருவரான தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். யாழில் சனிக்கிழமை (28), பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவி…

  2. எரிபொருள் விலை உயர்வு: ஒட்டோ டீசல், சூப்பர் டீசல் மற்றும் 92 ஒக்டேன் அதிகரிப்பு Published By: Vishnu 28 Feb, 2026 | 10:17 PM மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின்படி சனிக்கிழமை (28) முதல் அமுலுக்கு வரும் வகையில் விலை மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை ரூ. 4 அதிகரிக்கப்பட்டு புதிய விலை ரூ. 281 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லங்கா சூப்பர் டீசல் ரூ. 6 உயர்ந்து ரூ. 329 ஆக விற்பனை செய்யப்படும். மேலும், 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லிட்டரின் விலை ரூ. 1 அதிகரித்து ரூ. 293 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், 95 ஒக்டேன் பெற்றோல் (ரூ. 340) மற்றும் மண்ணெண்ணெய் (ரூ. 182) விலைகளில் மாற்றம் இல்லை என அறிவிக்க…

  3. தையிட்டி விகாரை விவகாரம் - யாழில் திறந்த கலந்துரையாடல் 28 Feb, 2026 | 04:32 PM யாழ்ப்பாணத்தில் தனியார் காணியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள தையிட்டி விகாரையை முன்னிறுத்திய கலந்துரையாடல் “அரச மதமும் தனியார் காணியும்” எனும் பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் ஒழுங்கமைப்பில் வெள்ளிக்கிழமை (27), பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. வடக்கு – கிழக்கில், சிங்கள பௌத்த மதச் சின்னங்களை முன்னிறுத்திய நில ஆக்கிரமிப்புக்களில் முதன்மையான தையிட்டி விவகாரத்தில் அரச மதத்தை மையமாகக் கொண்ட தனியார் காணி உரிமைகள் தொடர்பாக எழுந்துள்ள சமூக, சட்ட, அரசியல் மற்றும் மனித உரிமை பரிமாணங்கள் மற்றும் இனத்துவ அரசு என்பவை தொடர்பில் இக்கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டது. யா…

  4. பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிராக யாழில் போராட்டம்! 28 Feb, 2026 | 04:55 PM பயங்கரவாதத்திலிருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிராக சனிக்கிழமை (28) யாழ்ப்பாணத்தில் மாபெரும் கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டத்தை அரசு கொண்டுவருவதற்கு முயற்சிக்கின்ற நிலையில், அந்த சட்டமானது மிகவும் மோசமானது என தெரிவித்து, புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம் என்று இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நூலகத்திற்கு முன்பாக ஆரம்பமான இந்த போராட்டம் ஏ-9 வீதியூடாக பேரணியாக சென்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தை சென்றடைந்து அங்கு நிறைவுற்றது. ப…

  5. பொலிஸ் கண்காணிப்பு பிரிவிற்கு நவீன தொழில்நுட்ப கெமரா வாகனங்கள்! Published By: Digital Desk 1 28 Feb, 2026 | 10:33 AM பொலிஸ் மா அதிபரின் எண்ணக்கருவிற்கு அமைவாக, நவீன தொழில்நுட்ப கெமரா அமைப்புகளுடன் மேம்படுத்தப்பட்ட 02 வேன்களை பொலிஸ் கண்காணிப்பு கெமரா பிரிவிற்கு கையளிக்கும் நிகழ்வு, பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தலைமையில் கடந்த 02ஆம் திகதி பிற்பகல் பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது. பொலிஸ் கண்காணிப்பு கெமரா பிரிவு 2010.12.02ஆம் திகதியன்று நிறுவப்பட்டதுடன், அந்த காலப்பகுதியில் அதன் கடமைகளுக்காக கெமராக்கள் பொருத்தப்பட்ட 02 வேன்கள் பயன்படுத்தப்பட்டன. அந்த வாகனங்களின் செயல்பாடுகளை மிகவும் திறமையாகவும் பயனுள்ளதாகவும் முன்னெடுப்பதற்காக, 'பிரிமா' நிறுவனத்தின…

  6. 2026 ஜனவரியில் சரிந்த இலங்கை ஆடை ஏற்றுமதி! இலங்கையின் ஆடை ஏற்றுமதி 2025 ஜனவரியில் 437.07 மில்லியனாக இருந்த நிலையில், 2026 ஜனவரியில் 2.66 சதவீதம் சரிந்து 425.44 மில்லியன் டொலர்களாக குறைந்துள்ளதாக ஒரு தொழில்துறை அமைப்பு தெரிவித்துள்ளது. இது நாட்டின் முக்கிய ஏற்றுமதி சந்தைகளில் தொடர்ச்சியான அழுத்தத்தை பிரதிபலிக்கிறது. அதன்படி, ஜனவரி செயல்திறன் சீரற்ற உலகளாவிய தேவையை எடுத்துக்காட்டுவதுடன், பன்முகத்தன்மை மற்றும் போட்டித்தன்மையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலுப்படுத்துகிறது என்று கூட்டு ஆடை சங்க மன்றம் (JAAF) தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்கான ஆடை ஏற்றுமதி 2.73 சதவீதம் குறைந்து 165.11 மில்லியன் டொலர்களாக உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி (இங்கிலாந்து தவிர்த்து) 1…

  7. பொலிஸ் மா அதிபரிடம் நேரடியாக முறைப்பாடு செய்யலாம்: 2026 இல் மேம்படுத்தப்பட்ட ‘‘Tell IGP’ சேவை! Published By: Digital Desk 1 27 Feb, 2026 | 04:13 PM நாட்டில் குற்றச்செயல்களைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பொலிஸ் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட “Tell IGP” (பொலிஸ் மா அதிபருக்குக் கூறுங்கள்) எனும் இணையவழி முறைப்பாட்டுச் சேவை 2026ஆம் ஆண்டிலும் புதிய மேம்படுத்தல்களுடன் செயற்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக, பொதுமக்கள் தமக்கு ஏற்படும் அசௌகரியங்கள் அல்லது அவசர சம்பவங்கள் குறித்து நேரடியாக பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்குக் கொண்டு செல்ல முடியும். இச்சேவையின் ஊடாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கி…

  8. தலங்கம -அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு-இருவர் உயிரிழப்பு! தலங்கம -அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், கார் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் உயிரிழந்துள்ளனர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான குறித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1464739 #################### ############################ அக்குரேகொட கொலை: 10 பொலிஸ் குழுக்கள் விசாரணைக்கு. அக்குரேகொடவில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை ம…

  9. பலாலி அம்மன் ஆலயத்துக்குச் செல்லும் வீதியை சித்திரை புத்தாண்டுக்குள் விடுவிக்குமாறு மக்கள் கோரிக்கை ; தனியார் காணிக்குள் தற்காலிக பாதை அமைக்க இராணுவம் முயற்சி 17 Feb, 2026 | 05:46 PM பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்குச் செல்லும் வீதி இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் உள்ளமையால், தற்காலிகமாக தனியார் காணிகள் ஊடாக ஆலயத்துக்குள் செல்லும் பாதையை நிரந்தர பாதையாக மாற்றியமைக்கும் பணிகளை இராணுவத்தினர் முன்னெடுத்த நிலையில், அதற்கு காணி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தமையையடுத்து இராணுவத்தினர் தமது பணிகளை நிறுத்தியுள்ளனர். உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி பலாலியில் இருந்து மக்கள் வெளியேறியிருந்தனர். அதனை தொடர்ந்து அப்பகுதி இராணுவ உயர் பாத…

  10. இந்தியாவில் கைதான பொடி லெசி நாளை நாட்டுக்கு? Feb 26, 2026 - 07:23 PM இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க நாளை (27) அதிகாலை இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ளார். நீதிமன்றில் பிணை வழங்கப்பட்டதன் பின்னர் தலைமறைவாகியிருந்த பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான ஜனித் மதுசங்க எனப்படும் பொடி லெசி, 2024 ஆம் ஆண்டு பிணையில் விடுவிக்கப்பட்டதும் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தார். பிணை வழங்கப்பட்டதை அடுத்து, அவர் சட்டத்தரணி ஒருவரின் காரிலேயே நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறியிருந்தார். இதனையடுத்து, அவர் 2025 ஆம் …

  11. பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்படும் 30 – 50 வயதுக்கு இடைப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு Published By: Vishnu 27 Feb, 2026 | 04:59 AM (செ. சுபதர்ஷனி) பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோயால் பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களே பாதிப்புக்குள்ளாகும் அபாயம் காணப்பட்ட போதிலும், அண்மைக்காலமாக நாட்டில் 30 – 50 வயதுக்கு இடைப்பட்டவர்களிடையே புதிய நோயாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் ஹஸரெலி பெர்னாண்டோ தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் புதன்கிழமை (25) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையி…

  12. பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிர்ப்பு : வடக்கு – கிழக்கில் சேகரிக்கப்பட்ட கையொப்பங்கள் நீதி அமைச்சுக்கு சமர்ப்பிப்பு 27 Feb, 2026 | 11:51 AM தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தையோ அல்லது அரசைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையோ ஏற்றுக்கொள்ள முடியாது என வலியுறுத்தி, வடக்கு - கிழக்கு மாகாணங்களில் திரட்டப்பட்ட ஆயிரக்கணக்கான கையொப்பங்கள் நீதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன. நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் வேலன் சுவாமியிடம் பிராந்திய சேகரிப்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட கையொப்பப் பட்டியல்கள் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டன. அவை நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன கடந்த பெப்ரவரி 14ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையான …

  13. சர்வதேச சிவப்பு அறிவித்தல் இன்றி 14 சந்தேகநபர்கள் நாட்டுக்கு Feb 27, 2026 - 08:28 AM சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள் இன்றி இதுவரை 14 சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க டி சில்வாவை நாட்டிற்கு அழைத்து வந்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில், சர்வதேச சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த 29 சந்தேக நபர்களை நாட்டிற்கு அழைத்து வர முடிந்துள்ளதாக ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்காக…

  14. இலங்கையில் வாழ மாதத்திற்கு எவ்வளவு பணம் தேவை! புதிய அறிக்கை இலங்கை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் 2026 ஜனவரி மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக் கோடு தொடர்பான தரவுகளை வெளியிட்டுள்ளது. ஒரு நபர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மாதமொன்றுக்கு குறைந்தபட்சம் ரூபா 16,730 வருமானம் அவசியமெனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதன்படி கொழும்பில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு நபருக்கு மாதமொன்றுக்கு ரூபா 18,044 தேவைப்படுகிறது. பணவீக்கம் மேலும் மொனராகலை மாவட்டத்தில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு நபருக்கு மாதமொன்றுக்கு ரூபா 15,997 போதுமானதாகும். வறுமைக் கோடு என்பது ஒரு நபர் தனது அடிப்படை உணவு மற்றும் உணவு அல்லாத தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்குத் தேவையா…

  15. சிற்றுண்டிச்சாலையில் இனிப்பு பொருட்களை திருடிய சிறுமிகள் கைது! களுத்துறை வர்ணத் பெர்னாண்டோ விளையாட்டரங்கில் அமைந்துள்ள சிற்றுண்டிச்சாலையை உடைத்து, அங்கிருந்த சுமார் 40,000 ரூபா பெறுமதியான டொபிகள் மற்றும் சொக்லேட்டுகளைத் திருடிய குற்றச்சாட்டில் மூன்று சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தினேஷ் சில்வா தலைமையிலான குழுவினர் முன்னெடுத்த விசாரணைகளின் போதே இந்தச் சிறுமிகள் அடையாளம் காணப்பட்டனர். அப்பகுதியில் உள்ள சிசிரிவி காட்சிகளை ஆய்வு செய்த பொலிஸார், குறித்த சிறுமிகள் தங்கியிருந்த சிறுவர் இல்லத்திலேயே மறைத்து வைக்கப்பட்டிருந்த டொபிகள், சொக்லேட்டுகள், லொலிபொப்கள் மற்றும் சுயிங்கம் ஆக…

  16. ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க முயற்சிக்க வேண்டாம் என அருட்தந்தை சிறில் காமினி கோரிக்கை விடுத்துள்ளார். இன்று (26) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். "இது 300 மனித உயிர்களைப் பலிகொண்ட ஒரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலாகும். இவர்களில் பெரும்பான்மையானோர் உயிர்த்த ஞாயிறுத் திருப்பலியில் கலந்துகொள்ளச் சென்றவர்கள். உயிரிழந்தவர்களில் அனைத்து மதங்களையும், அனைத்து இனங்களையும் சேர்ந்தவர்களும் உள்ளனர். இது ஒரு படுகொலையாகும். இதன் பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிவது என்பது, இந்…

  17. நாமலின் ஆளுமைக்கு முன்னால் நேருக்கு நேர் கேள்வி கேட்க முதுகெலும்பற்ற தமிழ் மாணவர் அமைப்புகள்! - சரத் வீரசேகர விளாசல் 26 Feb, 2026 | 04:02 PM பிரித்தானியாவின் புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் (Oxford) மற்றும் கேம்பிரிட்ஜ் (Cambridge) பல்கலைக்கழக ஒன்றியங்களின் அழைப்பை ஏற்று அங்கு உரையாற்றச் சென்ற நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தமிழ் மாணவர் அமைப்புகள் முன்னெடுத்த எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் இன்றைய தினம் (26) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், நாமல் ராஜபக்ஷவின் ஆளுமைக்கு முன்னால் நேருக்கு…

  18. கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழாவுக்கான ஆரம்பகட்ட பணிகள்; இலங்கை கடற்படை உத்தியோகபூர்வ விஜயம் Published By: Vishnu 28 Jan, 2026 | 11:07 PM கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழா இடம்பெறவுள்ள நிலையில் இலங்கை கடற்படையால் ஆற்றப்படும் ஆரம்பகட்ட பணிகளை அவதானிப்பு செய்வதற்கான உத்தியோகபூர்வ விஜயமானது புதன்கிழமை (28) இடம்பெற்றது. குறித்த விஜயத்தில் நெடுந்தீவில் பிரதேசசெயலர் என். பிரபாகரன், கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல பரிபாலகர் அருட்பணி P.பத்திநாதன் அடிகளார், பிரதேசசபை தவிசாளர் ச.சத்தியவரதன் மற்றும் கடற்படை உத்தியோகத்தர்கள் இணைந்துகொண்டனர். பக்தர்களின் உயரிய நலன்கருதி இலங்கை கடற்படையால் ஆற்றப்படும் ஆரம்பகட்ட பணிகளை பார்வையிட்டார். https://www.virakes…

  19. மடு தேசிய பூங்காவை சரணாலயமாக பேண சத்தியலிங்கம் எம்.பி பிரேரணை 26 Feb, 2026 | 01:57 PM மடு தேசிய பூங்காவை தொடர்ந்தும் சரணாலயமாக பேண அமைச்சரவையின் அனுமதியைப்பெற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் பிரேரணை ஒன்றினை முன்வைத்துள்ளார். மடு பிரதேச செயலாளர் பிரிவிற்கான அபிவிருத்திக்குழு கூட்டம் 25 ஆம் திகதி மடு பிரதேச செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக வனவளத்திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தால் விடுவிக்கப்படவேண்டிய காணிகள் தொடர்பாக நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது. இரணைஇலுப்பைக்குளம் கிராமசேவையாளர் பிரிவில் உள்ள பெரியபண…

  20. வட்டிக்காரர்களிடம் சிக்கிய முன்னாள் போராளி : கடனை அடைக்க சிறுநீரகத்தை விற்ற பரிதாபம்! 18 Feb, 2026 | 10:32 AM யுத்தக் களத்தில் காயப்பட்டு, ஒரு கால் முழுவதும் பாதிக்கப்பட்டு, இன்று வாழ்வாதாரத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் முன்னாள் பெண் போராளி ஒருவர் , கந்துவட்டி கொடுமையால் தனது சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சம்பவம் மன்னாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன்னார், மூர் வீதி பகுதியில் வசிக்கும் இப் பெண்மணி, தனது குடும்ப வறுமையைப் போக்கவும், சிறு தொழில் செய்யவும் 'சீட்டு' முறையில் பணம் கட்டியுள்ளார். ஆனால், சீட்டு ஆரம்பத்தின் கனிவாக நடந்து கொண்ட பெண் குழுக்கள் மற்றும் வட்டி கும்பல்கள்,காலம் செல்ல செல்ல தங்கள் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். அவர் வாங்கிய…

  21. இலங்கையில் 7 வாரங்களில் 44 காட்டு யானைகள் உயிரிழப்பு Published By: Vishnu 25 Feb, 2026 | 10:36 PM யானை மனித மோதலில் இதுவரையான காலப்பகுதியில் 44 காட்டு யானைகளும், 10 மனித உயிர்களும் பலியாகியுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் செவ்வாய்க்கிழமை (24) வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் இந்த மரணங்கள் இடம் பெற்றுள்ளதாக பதிவாகியுள்ளன. நாட்டின் மனித சமூகத்திற்கும் குறைந்து வரும் யானை கூட்டங்களுக்கும் இடையிலான நீடித்த மோதல் தொடர்ந்தும் தீவிரமடைந்து வருவதை வெளிப்படுத்துகின்றன. துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள், பயிர் நிலங்களை பாதுகாக்க சட்டவிரோத மின்சார வேலிகளை அமைத்தல், விஷம்…

  22. சுன்னாகத்தில் பெண்ணின் சங்கிலி அறுப்பு : இராணுவ முகாமில் பணியாற்றியவர் கைது! சுன்னாகம் நகரப் பகுதியில் பட்டப்பகலில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் இன்றையதினம்(25) கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இன்று காலை சுன்னாகம் நகரப் பகுதியில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி இராணுவ முகாமில் பணியாற்றிய ஒருவரால் அறுக்கப்பட்டது. சுன்னாகம் காவல் நிலையத்தில் முறைப்பாடு குறித்த பெண் இது குறித்து சுன்னாகம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார். இந்நிலையில் சந்தேகநபரான, மயிலிட்டி இராணுவ முகாமில் கடமை புரியும் நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். சுன்னாகம் காவல் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக சி.நிதர்சன்…

  23. யாழ். தொல்புரம் வைத்தியசாலையின் மருத்துவரை இடம் மாற்ற வேண்டாம் என கோரிக்கை! தொல்புரம் - பானாவெட்டி வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி வே.குருபரனின் இடமாற்றத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரி சங்கமும், பிரதேசத்திலுள்ள பொது அமைப்புகளும் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று(24.2.2026)வைத்தியசாலைக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜாவிடம் இவ்விடயம் தொடர்பான கோரிக்கை கடிதம் கையளிக்கப்பட்டது. பானாவெட்டி வைத்தியசாலையானது தொல்புரம், சுழிபுரம், மூளாய், பொன்னாலை, பண்ணாகம், சித்தங்கேணி உள்ளிட்ட பல பிரதேசங்களிலுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பயன்பெறும் வைத்தியசாலையாகும். வளப்பற்றாக்குறை இது பல்வேறு…

  24. சுவாமி கைலாஷானந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் மன்னார் திருக்கேதீஸ்வரத்துக்கு விஜயம் 24 Feb, 2026 | 06:08 PM இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த சுவாமி கைலாஷானந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (24) காலை விசேட உலங்குவானூர்தி மூலம் மன்னாருக்கு வருகை தந்தார். மன்னார் தள்ளாடி விமான ஓடு தளத்திற்கு வருகை தந்த குறித்த குழுவினர் மன்னார் மாவட்டத்தில் பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வரம் திருத்தலத்திற்கு விஜயம் செய்தனர். சுவாமி கைலாஷானந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் பிரதம குரு கருணானந்த குருக்கள் மற்றும் திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகத்தினரையும் சந்தித்து கலந்துரையாடி உள்ளனர். பின்னர் இக்…

  25. குண்டுதாரியின் தெமட்டகொடை வீட்டில் கைப்பற்றப்பட்ட தங்கம் குறித்து நீதிமன்ற உத்தரவு Feb 25, 2026 - 07:16 PM உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் போது தெமட்டகொட மஹவில கார்டன்ஸ் வீட்டில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய இரண்டாவது சந்தேகநபரான இப்ராஹிம் இல்ஹாம் அஹமட் என்பவரது வீட்டிலிருந்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் மற்றும் இரத்தினக்கற்கள் உள்ளிட்ட சொத்துக்களை, அவரது சகோதரரான இஃப்லால் அஹமட்டிடம் ஒரு வாரத்திற்குள் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார இன்று (25) உத்தரவிட்டார். முன்னைய நீதவான் இந்தச் சொத்துக்கள் தொடர்பில் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய சி.ஐ.டி-க்கு போதுமான அவகாசம் வழங்கியிருந்தும், அவர்கள் அதனைச் செய்யத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.