ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142858 topics in this forum
-
இலங்கையில்... 10 ஆண்டுகளில் 100 பில்லியன் டொலரினை, முதலீடு செய்ய தயாராகின்றது... இந்திய அதானி குழுமம்? இந்திய அதானி குழுமம் எதிர்வரும் 10 ஆண்டுகளில் 100 பில்லியன் டொலரினை இலங்கையில் முதலீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வலுசக்தி துறைக்கே அதிக முதலீடுகளை மேற்கொள்வதற்கு அதானி குழுமம் எதிர்பார்த்துள்ளதாக குறித்த நிறுவனத்தின் தலைவர் கௌதம் அதானி தெரிவித்துள்ளார். அதானி நிறுவனம் கடந்த 1988 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், தற்போது பல்வேறு நாடுகளிலும் அதானி குழுமம் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றது. https://athavannews.com/2022/1301691
-
- 48 replies
- 1.9k views
- 1 follower
-
-
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் By DIGITAL DESK 5 01 OCT, 2022 | 04:03 PM காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று (01) காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது அலுவலகம் முன்பாக இடம்பெற்றது. இதன்போது, வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிற்கு சர்வதேசம் நீதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது. சிறுவர் தினமான இன்றைய தினம் இடம்பெற்ற போராட்டத்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது உறவினர்களான சிறுவர்களும் கவனயீர்ப…
-
- 0 replies
- 174 views
- 1 follower
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - விசாரணை ஒத்தி வைப்பு! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பில் கைதான பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நவம்பர் மாதம் 11 திகதி வரை மறுவிசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்ற நீதிவான் ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் விசாரணைக்கு கடந்த வியாழக்கிழமை (29) வந்தபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி வழக்கானது விசாரணைக்காக எடுக்கப்பட்ட வேளை, பிரதிவாதி சார்பாக சட்டத்தரணிகளான சஞ்சீப், சப்றீன், என்.எம் சஹீட் மூவரும் ஆஜராகி இருந்தனர். குறித்த விசாரணையின் போது மன்றில் பிரதான பரிசோதகரின் கைது தொடர்பில் ஆட்சேபனை …
-
- 0 replies
- 186 views
-
-
நுரைச்சோலை மின் உற்பத்தி குறித்து பொறியியலாளர்களின் நம்பிக்கை By T. SARANYA 01 OCT, 2022 | 12:50 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் செயலிழந்திருந்த மூன்றாவது மின்பிறப்பாக்கி இன்று மாலை தேசிய மின் உற்பத்தி கட்டமைப்பில் இணைத்துக்கொள்ள முடியும் என மின் உற்பத்தி நிலை பொறியியலாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். கடந்த 27 ஆம் திகதியன்று இந்த மின் உற்பத்தி நிலையத்தில் இடம்பெற்ற தொழில்நுட்ப கோளாறு காரணமாக குறித்த மூன்றாவது மின் பிறப்பாக்கி செயலிழந்தாகவும், அதன் திருத்தப் பணிகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படாது இருக்கும் பட்சத்தில…
-
- 0 replies
- 192 views
- 1 follower
-
-
கொழும்பில் பயணிகளின் கையடயக்கத்தொலைபேசிககளை திருடும் சம்பவம் தொடர்பில் இருவர் கைது By T. SARANYA 01 OCT, 2022 | 02:59 PM (எம்.வை.எம்.சியாம்) கொழும்பு - கொட்டாவை பிரதேசத்தில் பஸ்களில் பயணிகளுடைய கையடயக்கத்தொலைபேசிகளை திருடும் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சந்தேக நபர்கள் நேற்று (30) குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கொட்டாவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் அத்துமீறி நுழைந்து அங்கிருந்து குளியலறைகளில் உள்ள பொருட்கள் மற்றும் கொழும்பில் பயணிக்கும் பல்வேறு பஸ்களில் பயணிகளிடமிருந்து அவர்களின் கையடயக்கத்தொலைபேசி…
-
- 0 replies
- 155 views
- 1 follower
-
-
மாகாண சபை தவிசாளர்களுக்கான கொடுப்பனவுகளை மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானம் By DIGITAL DESK 5 01 OCT, 2022 | 01:04 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) மாகாண சபை தவிசாளர்களுக்கு வழங்கப்படும் எரிபொருள், தொலைப்பேசி உள்ளிட்ட கொடுப்பனவுகளை மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான சுற்று நிரூபமொன்று ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவால், மாகாண ஆளுனநர்கள், மாகாண சபை செயலாளர்கள், ஆளுநரின் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. குறித்த சுற்று நிரூபத்தின்படி, மாகாண சபை தவிசாளருக்கு ஒரேயொரு உத்தியோகபூர்வ மோட்டார் வாகனமொன்றை மாத்திரம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 112 views
- 1 follower
-
-
ஒக்டோபர் மாத இறுதியில் அரசியல் சுனாமி- ஹிருணிகா By RAJEEBAN 30 SEP, 2022 | 04:48 PM ஒக்டோபர் மாத இறுதியில் அரசியல் சுனாமி அனைத்து ஊழல்அரசியல்வாதிகளையும் அழிக்கும் என ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். இந்த கருத்தை தெரிவிப்பதற்காக என்னை சிஐடியினர் விசாரணைக்கு அழைக்கலாம் ஆனால் ஒக்டோபர் மாத இறுதியில் நிச்சயம் இந்த புரட்சி நிச்சயமாக வெடிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் சுனாமி தாக்கும்போது முன்னைய ஜனாதிபதியின் நிலை தற்போதைய ஜனாதிபதிக்கும் ஏற்படும் என தெரிவித்துள்ள ஹிருணிகா எந்த புரட்சியும் முன் அறிவிப்புடன் நிகழ்வதில்லை எனவும் தெரிவித்துள்ளார். கடந்த அரகலயவில் பெண்களே முக்கிய பங்களிப்பை செய்தன…
-
- 3 replies
- 207 views
- 1 follower
-
-
புனர்வாழ்வு பணியகம்:சமூக மற்றும் அரசியல் ஆர்வலர்கள் அச்சம் புனர்வாழ்வு பணியகத்தை அமைப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டமூலம் போராட்கார்களை ஒடுக்குவதற்கு வழி வகுக்கும் என சமூக மற்றும் அரசியல் ஆர்வலர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். போராட்ட செயற்பாட்டாளர்களை புனர்வாழ்வு முகாம்களில் நீண்டகாலம் தடுத்து வைக்க இந்த சட்டமூலம் அனுமதிக்கும் என அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவினால் புனர்வாழ்வு பணியகம் என்ற சட்டமூலத்தை செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. போதைப்பொருள் பயன்படுத்துவோர், முன்னாள் மற்றும் தவறாக வழிநடத்தப்பட்ட போராளிகள், வன்முறை குழுக்களின் உறுப்பினர்களை மறுவாழ்வு அளிப்பதே…
-
- 0 replies
- 138 views
-
-
இன்று முதல் புதிய வரி விதிப்பு அறிமுகம்! சமூக பாதுகாப்புக்கு பங்களிப்பு வழங்கும் வகையிலான புதிய வரி இன்று சனிக்கிழமை முதல் அமுல்படுத்தப்படுகின்றது. இதன்மூலம், 140 பில்லியன் மேலதிக வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. எவ்வாறாயினும், இந்த புதிய வரி விதிப்பினால், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் மேலும் உயரக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவ்வாறான வரிகள் அரசாங்கத்திற்கான வருமானத்தை ஈட்டுவதற்கு தற்காலிகமாக பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்க சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி, 2022 ஆம் ஆண்டுக்கான வரவு…
-
- 0 replies
- 254 views
-
-
யாழில் கடந்த 09 மாதங்களில் கொரோனா தொற்றால் 08 பேர் உயிரிழப்பு! யாழ் மாவட்டத்தில் இவ் வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 2548 கொரோனா நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டதுடன் எட்டு மரணங்களும் பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ் மாவட்ட விசேட நுளம்புக் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், கடந்த சில மாதங்களாக யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன் அதிக மரணங்களும் பதிவாகின்றன. கொரோனா தொற்று காரணமாக. மா…
-
- 0 replies
- 155 views
-
-
சீனாவின் செஞ்சிலுவைச் சங்கம், வடக்கு மக்களுக்கு உதவி! சீனாவின் செஞ்சிலுவைச் சங்கம், இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள பெரும்பாலான ஏழைக் குடும்பங்களுக்கு மேலும் 150,000 அமெரிக்க டொலர் பெறுமதியான உணவுப் பொதிகளை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக வழங்கத் தீர்மானித்துள்ளது. இலங்கைக்கான சீனத் தூதரகம் இதனை தெரிவித்துள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=166158
-
- 14 replies
- 1.2k views
-
-
சவுக்கு மரங்களை வெட்டிக் கடத்த முற்பட்ட இரு பெண்கள் உள்ளிட்ட 7 பேர் கைது! By VISHNU 30 SEP, 2022 | 04:45 PM யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, மணற்காட்டு பகுதியில் சட்டவிரோதமான முறையில் சவுக்கு மரங்களை வெட்டிய குற்றச்சாட்டில் இரு பெண்கள் உள்ளிட்ட 07 பேர் 29 ஆம் திகதி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். மணற்காட்டில் சட்டவிரோதமான முறையில் சவுக்கு மரங்கள் வெட்டப்பட்டு துவிச்சக்கர வண்டிகளில் கடத்தப்படுவதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு இரகசிய தகவல்கள் கிடைக்கப்பெற்றது. அதனை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் , அப்பகுதியில் சவுக்கு மரங்களை வெட்டி துவிச்சக்கர வண்டியில் கடத்த முற்பட்ட இரண்டு பெண்கள் உள்ள…
-
- 4 replies
- 389 views
-
-
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு யாழில் துவிச்சக்கர பேரணி! மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தினை முன்னிட்டு யாழ் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர பேரணி இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) காலை நடைபெற்றது. மகாத்மா காந்தியின் பிறந்த தினம் எதிர்வரும் ஒக்டொபர் 02ஆம் திகதியாகும். அதனை முன்னிட்டு, யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ். போதனா வைத்திய சாலை முன்பாக உள்ள காந்தி சிலையில் முன்றலில் இருந்து, வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி வரை துவிச்சக்கர வண்டி பேரணி சென்றது. யாழ் இந்திய துணைத் தூதுவரின் பங்கு பற்றுதலோடு மும்மதத் தலைவர்களின் ஆசியோடு இந்த பேரணி ஆரம்பமானது. https://athavannews.com/2022/1302026
-
- 10 replies
- 651 views
- 1 follower
-
-
தகவல் அறியும் ஆணைக்குழுவும் அழுத்தங்களை எதிர் நோக்குகிறது : ஆணையாளர் பின்டோ ஜெயவர்த்தன By VISHNU 30 SEP, 2022 | 10:20 PM K.B.சதீஸ் தகவல் அறியும் ஆணைக்குழுவும் அழுத்தங்களை எதிர் நோக்குகிறது என ஆணையாளர் கிசாலி பின்டோ ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளரின் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்துவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சில அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்கள் என்பவற்றால் சில தகவல்களை வழங்கப்படாமை குறித்து ஆணைக்குழுவிற்கும் முறைப்பாடுகள் கிடைத்தன.…
-
- 0 replies
- 154 views
- 1 follower
-
-
போதையில் ஆலய மின் குமிழ்களை உடைத்தவர்களை எச்சரித்தவர்களின் வீடுகள் மீது தாக்குதல்! By VISHNU 30 SEP, 2022 | 04:19 PM யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பகுதியில் உள்ள நான்கு வீடுகள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள ஆலயமொன்றில் நவராத்திரி பூஜையை முன்னிட்டு ஆலய வீதியில் மின் குமிழ்கள் பொருத்தப்பட்டு இருந்தன. அவற்றினை 28 ஆம் திகதி புதன்கிழமை வீதியால் சென்ற இருவர் போதையில் மின் குமிழ்களை அடித்து உடைத்துள்ளனர். அதனை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள் இருவரையும் பிடித்து கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் 29 ஆம் திகதி வியாழக்கிழமை அதிகாலை வேளை மோட்டார் சைக்கிளில் வந்த வன்…
-
- 0 replies
- 222 views
- 1 follower
-
-
சுகாதாரத்துறை வீழ்ச்சியடையவில்லை - அமைச்சர் கெஹலிய By DIGITAL DESK 5 30 SEP, 2022 | 04:31 PM (இராஜதுரை ஹஷான்) மருந்து தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது என குறிப்பிடப்படுகின்ற நிலையில் நாட்டில் சுகாதாரத்துறை வீழ்ச்சியடையவில்லை. சுகாதாரத்துறை அமைச்சும், அதனுடன் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களும் சுகாதார சேவையில் அர்ப்பணிப்புடன் செயற்படுவது மகிழ்வுக்குரியது என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல தெரிவித்தார். கொழும்பில் வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற இலங்கை மருத்துவ சாதனங்களின் தொழிங்சங்கத்தின் 7ஆவது பொதுக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவத…
-
- 0 replies
- 145 views
- 1 follower
-
-
யாழில் வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த வீடு உடைத்து நகைகள் திருட்டு! By VISHNU 30 SEP, 2022 | 04:43 PM யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து குறித்த வீட்டில் இருந்த 12 பவுண் தங்க நகைகளை திருடர்கள் அபகரித்து சென்றுள்ளனர். சுவிஸ் நாட்டில் இருந்து இலங்கை வந்த குடும்பம் ஒன்று உரும்பிராய் கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கி இருந்துள்ளனர். அவர்கள் 29 ஆம் திகதி வியாழக்கிழமை ஆலயம் ஒன்றுக்கு சென்றிருந்த வேளை, வீட்டின் கதவுகளை உடைத்து உட்புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த 12 பவுண் நகைகளை திருடி சென்றுள்ளனர். இது குறித்து வீட்டார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள …
-
- 0 replies
- 215 views
- 1 follower
-
-
வடக்கு, கிழக்கு மக்களின் நிலங்களை தொல்பொருள் திணைக்களம் அபகரிக்கிறது வடமலை ராஜ்குமார் நிலங்கள் சம்மந்தமாக தொல்லியம் திணைக்களம் இது போல வெவ்வேறு சட்டங்களின் கீழ் இயங்கும் திணைக்களங்கள் மக்களுடைய காணிகளை அபகரிக்கும் செயற்பாடு வடக்கிலும் கிழக்கிலும் நீண்ட காலமாக இடம் பெற்று வருகின்றது.என ஜனாதிபதி சட்டத்தரணியுமான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தின் தென்னமரவாடி , திரியாய் போன்ற பகுதிகளில் தமிழ் விவசாயிகளின் பூர்வீக காணிகளில் விவசாயத்தில் ஈடுபட தொல் பொருள் திணைக்களம் தடுப்பதற்கு எதிராக திரு…
-
- 0 replies
- 362 views
-
-
அரசாங்கத்தினை கவிழ்க்க முயற்சித்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் கடந்த ஜூலை மாதம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியமையை அடுத்து, பாராளுமன்றத்தை பலவந்தமாக ஆக்கிரமித்து புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பை தடுப்பதன் மூலம் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்க சில அரசியல்வாதிகள் முயன்றதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்தக் குற்றச்சாட்டு குறித்து பொலிஸாரின் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் விசாரணைகளின் வாயிலாக கிடைக்கப்பெற்ற சில தகவல்களின் அடிப்படையிலேயே அண்மையில் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் …
-
- 0 replies
- 112 views
-
-
இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம்? உலகில் எந்தவொரு நாட்டு மாணவர்களும் கல்வி கற்கக் கூடிய வகையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகமொன்றை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையுடன் இலங்கையில் ஸ்தாபிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை ஒன்றை முன்மொழிந்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவாவிற்கும் (Masatsugu Asakawa) இடையிலான சந்திப்பு இன்று (30) முற்பகல் மணிலாவிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை கவனத்திற்கு கொண்டு வந்தார். ஆசிய அபிவ…
-
- 0 replies
- 171 views
-
-
டிக்டொக், இணைய விளையாட்டுக்கு அடிமையாகும் மாணவர்களின் எண்ணிக்கை வடக்கில் அதிகரிப்பு By T. SARANYA 30 SEP, 2022 | 01:34 PM “டிக்டொக்" மற்றும் "இணைய விளையாட்டு" ஆகியவற்றுக்கு அடிமையாகி, அதில் இருந்து மீள்வதற்கு உளவள சிகிச்சைக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. டிக்டொக் செயலிக்கு அடிமையாகி அதன் மூலம் காதல் வயப்படுதல், அதிக நேரம் டிக்டொக் செயலியுடன் செலவழித்தல் மற்றும் உளவியல் சிக்கல்கள் ஆகியவற்றுக்கு முகம் கொடுத்த 10 பாடசாலை மாணவிகள் உள்ளிட்ட 16 மாணவர்கள் கடந்த 09 மாதங்களில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இவ்வாறான ச…
-
- 0 replies
- 215 views
- 1 follower
-
-
இலங்கை டிசம்பர் என்கின்றது - உறுதியாக தெரிவிக்க முடியாது என்கின்றது சர்வதேச நாணயநிதியம் By RAJEEBAN 29 SEP, 2022 | 03:08 PM (Nikkei - asia) டிசம்பர் மாதத்திற்குள் சர்வதேச நாணயநிதியத்தின் நிதிஉதவி கிடைப்பது குறித்து இலங்கை அரசாங்கம் அதிகளவு நம்பிக்கையுடன் காணப்படுகின்றது எனினும் பல தரப்பு கடனளிப்பவர்கள் டிசம்பர் மாதத்திற்குள் நிதி உதவி கிடைப்பது நிச்சயமற்ற விடயம் என தெரிவித்துள்ளனர். மேலும் அதிகளவு கடன்களை வழங்கிய நாடுகளுடனான பேச்சுவார்த்தைகளை பொறுத்தவிடயம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். கடன் நிவாரணம் குறித்த பேச்சுவார்த்தைகள் நீண்டகாலம் நீடிக்க கூடியவை என்பதால் கால எல்லையை எதிர்வு கூறுவது க…
-
- 1 reply
- 339 views
- 1 follower
-
-
காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 11 வர்த்தகர்களுக்கு தண்டம் By VISHNU 30 SEP, 2022 | 01:36 PM யாழ்ப்பாணத்தில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 11 வர்த்தகர்களுக்கு ஒரு இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் கடந்த 20 ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் பொது சுகாதார பரிசோதகரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது, 10 வர்த்தக நிலையங்களில் காலாவதியான பொருட்கள் மீட்கப்பட்டன. அதேவேளை நல்லூர் பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஒரு வர்த்தக நிலையத்தில் இருந்து காலாவதியான பொருட்கள் மீட்கப்பட்டன. …
-
- 0 replies
- 131 views
- 1 follower
-
-
யாழ் பொது நூலக சிற்றுண்டிச்சாலைக்கு சீல் வைப்பு By T. SARANYA 30 SEP, 2022 | 02:11 PM (எம்.நியூட்டன்) யாழ் பொது நூலக சிற்றுண்டிச்சாலை நீதிமன்ற உத்தரவின் படி சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. செப்ரெம்பர் மாதம் யாழ் மாநகர பொது சுகாதார பரிசோதகரிற்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து கடந்த 09 திகதி யாழ் பொது நூலக சிற்றுண்டிச்சாலை பொது சுகாதார பரிசோதகரால் பரிசோதிக்கப்பட்டது. அதன்போது இனங்காணப்பட்ட குறைபாடுகள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டு நிவர்த்தி செய்ய கால அவகாசம் சிற்றுண்டிச்சாலை நடாத்துனரிற்கு வழங்கப்பட்டது. மீண்டும் பொது சுகாதார பரிசோதகரால் 28 புதன் கிழமை திகதி மீள் பரிசோதனை செய்த போது குறைபாடுகள் எவையும…
-
- 0 replies
- 268 views
- 1 follower
-
-
கொழும்பில் பாரிய தீ விபத்து : 12 தீயணைப்பு இயந்திரங்கள் களத்தில் 27 SEP, 2022 | 08:48 PM கொழும்பு - பாலத்துறை பகுதியில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புப் படைப்பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு - பாலத்துறை கஜிமாவத்தை தொடர்மாடிப் பகுதியிலேயே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புப் படைப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, தீயை கட்டுப்படுத்த சம்பவ இடத்திற்கு 12 தீயணைப்பு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புப் படைப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/136551 பாலத்துறையில் தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குங்கள் - ஜப்பானில் இருந்த…
-
- 3 replies
- 306 views
- 1 follower
-