ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142861 topics in this forum
-
காட்டுப்பகுதியிலிருந்து உரப் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசுவொன்று உயிருடன் மீட்பு By T YUWARAJ 25 SEP, 2022 | 08:54 PM பண்டுவஸ்நுவர, பண்டாரகொஸ்வத்தை, உகுருஸ்ஸகம ஏரிக்கரையில் உள்ள காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் சிசுவொன்று உரப் பையில் சுற்றப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந்தை அழும் சத்தம் கேட்டு கால்நடைகளை கட்ட சென்ற பெண் ஒருவர் பை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் இருந்த குழந்தையை கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து அம்பியுலன்ஸ் மூலம் குழந்தை நிகவெரட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், வாரியபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.vir…
-
- 0 replies
- 394 views
- 1 follower
-
-
இலங்கைக்கு, கடன் வழங்குவதில்... இந்தியா முதலிடம். – 4 மாதங்களில், 968மில்லியன் டொலர்கள்! 2022ஆம் ஆண்டின் நான்கு மாதங்களில் மொத்தம் 968 மில்லியன் டொலர்கள் கடனை இந்தியா இலங்கைக்கு வழங்கியதன் மூலம் இலங்கையின் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குனராக இந்தியா உருவெடுத்துள்ளது. இலங்கைக்கு கடன்வழங்கும் செயற்பாட்டில் இந்தியா சீனாவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தினைப் பிடித்துள்ளது. 2017-2021 வரையிலான ஐந்து ஆண்டுகளில், சீனா 947 மில்லியன் டொலர்கள் கடனை இலங்கைக்கு வழங்கியதால் இலங்கைக்கு மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குனராக சீனா முதலிடத்தில் இருந்தது. சீனா வழங்கிய கடனில் 809 மில்லியன் டொலர்கள் சீனா அபிவிருத்தி வங்கியிடமிருந்து சந்தைக் கடனாகப் பெற…
-
- 2 replies
- 186 views
-
-
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிரடி பணிப்புரை க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் முதற்தடவையிலேயே சித்தியடைந்து க.பொ.த உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து புலமைப்பரிசில் பெற்றுக் கொடுக்கும் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கமைய புலமைப்பரிசில் பெறுவதற்காக ஒரு கல்வி வலயத்திலிருந்து தகுதியுடைய 30 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அதன்படி நாடு முழுவதுமுள்ள 99 கல்வி வலயங்களின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் 2970 மாணவர்களுக்கு இப்புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது. புலமைப்பரிசில் வழங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு, அவர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு…
-
- 1 reply
- 290 views
-
-
இன்று இலங்கை வரும் ஐ.நா பிரதிநிதி! ரோமில் உள்ள ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதியான சிண்டி மெக்கெய்ன் இன்று (25) நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் 28ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் அவர், கொழும்பில் உள்ள அரச உயர் அதிகாரிகள் மற்றும் உதவி நிறுவனங்களைச் சந்தித்து கலந்துரையாடவும் திட்டமிட்டுள்ளார். மேலும், அமெரிக்க நிதியத்தால் இயக்கப்படும் மனிதாபிமான உதவித் திட்டங்களின் பயனாளிகள் மற்றும் அவற்றை செயல்படுத்தும் தரப்பினருடன் கலந்துரையாட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=165979
-
- 0 replies
- 182 views
-
-
நிலக்கரி பிரச்சினைக்கான காரணம் யார்? அமைச்சர்களுக்கு இணக்கமான நிறுவனங்களுக்கு டெண்டர்களை பயன்படுத்தி நிலக்கரியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியதன் காரணமாக மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி வழங்குவதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. நொரோச்சோலை நிலக்கரி ஆலைக்கு தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்ய முடியாவிட்டால் எதிர்காலத்தில் மீண்டும் மின்வெட்டு நேரம் அதிகரிக்கலாம் என அதன் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார். ஊவா பரணகம, பலகல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, எரிவாயு நெருக்கடியா…
-
- 0 replies
- 269 views
-
-
நாட்டின் பணவீக்கத்துக்கு மறைமுக வரியின் பாரிய அதிகரிப்பே பிரதான காரணம் -பேராசிரியர் வசந்த அத்துக்கோரள -சி.எல்.சிசில்- நாட்டில் தற்போது நிலவும் பணவீக்கத்துக்கு மறைமுக வரியின் பாரிய அதிகரிப்பே பிரதான காரணம் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பேராசிரியர் வசந்த அத்துக்கோரள தெரிவித்துள்ளார். தற்போது ஒரு குடும்பத்தின் சராசரி வரிச்சுமை 28,000 ரூபாவாக உள்ளது என தாம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது என்றார். நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள வரி முறை மாற்றப்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். “இலங்கையில் இன்னும் அதிக பணவீக்கம் உள்ளது. இந்தப் பணவீக்கத…
-
- 0 replies
- 193 views
-
-
சோலார் சக்தியில் இயங்கும் பயணிகள் படகுச் சேவை; பத்தரமுல்லை முதல் வெள்ளவத்தை வரை 30 நிமிட பயணம் -சி.எல்.சிசில்- பத்தரமுல்லை, தியத்த உயன மற்றும் அக்கொன, ஹீனட்டி கும்புர ஆகிய பகுதிகளிலிருந்து வெள்ளவத்தை வரை சூரிய சக்தியில் இயங்கும் படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நாளாந்தம் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக இந்தச் சேவை அமையும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்தப் படகுச் சேவை கடந்த செப்டம்பர் 23ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டது. அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் அறிவுறுத்தலின் பேரில், நில மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம்…
-
- 0 replies
- 247 views
-
-
தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழா மட்டக்களப்பில் ஆரம்பம் -சி.எல்.சிசில்- 2022ஆம் ஆண்டுக்கான Tamil Para Sports தமிழ் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு விழா இன்று மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமானது. அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகளை மீண்டும் மீண்டும் பேசுபொருளாக்கி, அவர்களின் வாழ்வில் நல்ல மாற்றங்களை உருவாக்க வேண்டுமென்பது இந்த மாற்றுத்திறனாளிகள் விளையாட்டின் நோக்கமாகும். அதேவேளை இந்த விளையாட்டில் பங்குபெறும் விளையாட்டு வீரர்கள் தேசி…
-
- 0 replies
- 297 views
-
-
யுக்ரேனின் லீயம் நகரை மீண்டும் தன்வசமாக்கியுள்ளது அந்நாட்டு ராணுவம். அங்கு ரஷ்ய ராணுவம் ஆக்கிரமித்திருந்தபோது பதிவான பல வகை கொடுமைகள் குறித்த குற்றச்சாட்டுகள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அதில் குறிப்பாக, இலங்கையர்கள் குழுவொன்று மாதக்கணக்கில் சிறைப்பிடிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த மக்களின் கதை இங்கே. நாங்கள் இங்கிருந்து உயிரோடு வெளியேறுவோம் என்றே நினைக்கவில்லை என்கிறார் திலூஜன் பத்தினஜகன். கடந்த மே மாதம் ரஷ்ய ராணுவத்திடம் சிக்கிய ஏழு பேரில் இவரும் ஒருவர். ரஷ்யா, யுக்ரேன் இடையே மோதல் தீவிரம் அடைந்தபோது, யுக்ரேனின் வடகிழக்கில் உள்ள குப்யான்ஸ்க் நகரிலிருந்து 120 கி.மீ தூரத்தில் உள்ள கார்கிவ் நகரம் பாதுகாப்பாக இருக்கலாம் என்…
-
- 35 replies
- 2.1k views
-
-
விவசாயிகளிடம் இருந்து, நெல் கொள்வனவு செய்ய... அரசு, ஐந்து சதம் கூட... வழங்கவில்லை. விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் உடனடியாக தயாரிக்க வேண்டுமென ஆளும் கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஆளும் கட்சிக் கூட்டத்திலும் இவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இரண்டு அரச வங்கிகளிலும் தேவையான நிதி வழங்கப்படாததால் நெல் சந்தைப்படுத்தல் சபை நெல் கொள்வனவு செய்வதை நிறுத்தியுள்ளதாகவும், இது விவசாயிகளுக்கு பாரிய பிரச்சினையாக உள்ளதாகவும் சபை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நெல் கொள்வனவுக்காக இருநூறு கோடி ரூபாயை நெல் சந்தைப்படு…
-
- 1 reply
- 187 views
-
-
ஜனாதிபதி ரணில், சிரிப்பு அரசியல் காட்டுகின்றார் – மனோ தமிழ் கைதிகளின் பெயர் பட்டியலை வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிரிப்பு அரசியல் காட்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில் பிரித்தானியாவில் இடம்பெற்ற புலம்பெயர் தமிழர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் கைதிகளின் பட்டியலை கோரியிருந்தார். இந்நிலையில் தனது டுவிட்டர் பதிவில் அதனை மேற்கோளிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதற்கு பதிலாக 1978 முதல் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்களின் விபரத்தை சிறைசாலை ஆணையாளரிடம் கோர முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள…
-
- 0 replies
- 223 views
-
-
அமைச்சுப் பதவிகள், கிடைக்காதமையினால்... கவலையில், ஆளும்கட்சியினர் ! அமைச்சுப் பதவிகள் கிடைக்காதமையினால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சில உறுப்பினர்கள் கவலையடைந்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுஜன பெரமுனவின் அமைச்சரவை பதவிகளுக்கான 12 உறுப்பினர்களின் பெயர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பட்டிருந்தது. பல வாரங்களுக்கு முன்னர் இந்த பெயர் பட்டியல் அனுப்பப்பட்டிருந்த போதிலும், அவர்களில் பலர் இதுவரையில் அமைச்சர்களாக நியமிக்கப்படவில்லை. அமைச்சரவையில் உள்ள முப்பது அமைச்சர்களில் 18 பேர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் பன்னிரண்டு பேர் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். அதற்காக பொதுஜன பெரமுன 12 பேரின…
-
- 0 replies
- 350 views
-
-
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி By VISHNU 25 SEP, 2022 | 11:25 AM நேர்காணல்: ஆர்.ராம் “நான் மரணிப்பதற்குள் இடைக்காலத் தீர்வொன்றைக் கொண்டுவராது விட்டால் உலகநாடுகள் அனைத்தும் சேர்ந்து எம்மை அழித்துவிடும் என்று அன்ரன் பாலசிங்கம் 2002இல் என்னை சந்தித்தபோது கூறினார்” “ரஜீவ்-மேனன் பாடசாலையின் இராஜதந்திர அணுகுமுறை பின்னடைவுகளைச் சந்தித்துவிட்ட நிலையில் தொப்புள்கொடி உறவு என்ற விடயத்தினை இந்தியா தனது வெளிவிவகார மூலோபாயத்தினுள் உள்ளீர்க்க வேண்டும்” “தமிழ் பேசும் மக்கள் என்ற மாலையில் மூன்று மணிகளான தமிழர்கள், முஸ்லிம்கள், மலைய மக்…
-
- 0 replies
- 275 views
- 1 follower
-
-
கஞ்சா ஏற்றுமதியை... சட்ட பூர்வமாக்கும் நடவடிக்கையை, ஆரம்பித்தது... இலங்கை ! கஞ்சா (Hemp) ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்குவதற்கான சட்டங்களை உருவாக்க அமைச்சரவைப் பத்திரம் அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படும் என சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். கஞ்சா உற்பத்தி மூலம் நாடு பாரிய ஏற்றுமதி வருமானத்தை ஈட்ட முடியும் என்றும் எதிர்வரும் 5ஆம் திகதிக்குள் இதற்கான ஆவணத்தை வகுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு மருத்துவம் மற்றும் ஆயுர்வேத நடைமுறைகளை மேம்படுத்துவதன் மூலம்; இலங்கையினால் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட முடியும் என்றும் இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெர…
-
- 5 replies
- 323 views
- 1 follower
-
-
புலிகளின் கப்பல்கள், நிதி மற்றும் தங்கத்திற்கு என்ன நடந்தது? எஸ்.கணேசன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச பொறுப்பாளரான கே.பியின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த கப்பல்கள், நிதி மற்றும் தங்கம் என்பவற்றுக்கு என்ன நடந்தது? என்று தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தலைவருமான நாமல் கருணாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார். கொத்மலை தேர்தல் தொகுதியில், தேசிய மக்கள் சக்திக்கான தொகுதி சபை அமைக்கும் நிகழ்வு கொத்மலை பகுதியில் நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வா…
-
- 13 replies
- 1.2k views
-
-
முடிந்தால் பலாலி விமான நிலையத்திற்கு ஒரு விமானத்தையாவது கொண்டு வாருங்கள் : விமான சேவைகள் அமைச்சர் கூட்டமைப்பினரிடம் கோரிக்கை By VISHNU 22 SEP, 2022 | 09:10 PM (இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்) இந்தியாவுடன் கலந்துரையாடி பலாலி விமான நிலையத்திற்கு முடிந்தால் ஒரு விமானத்தையாவது கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் வலியுறுத்தினார். அவ்வாறு விமானத்தை கொண்டு வந்தால் அங்கிருந்து விமான சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுக்கின்றோம் என்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் குறிப்பிட்டார். பாராளுமன்றத…
-
- 5 replies
- 343 views
- 1 follower
-
-
சங்கிலியன் தோரண வாயில், புனரமைப்பு பணிகள்... ஆரம்பம்! யாழ்ப்பாணம் சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள் இன்றைய தினம் (வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் திணைக்களமும் யாழ்ப்பாண மரபுரிமை மையமும் இணைந்து புனர்நிர்மாண பணிகளை ஆரம்பித்துள்ளன. இதற்ககா 2.3 மில்லியன் ரூபாய் செலவு மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான நிதி பங்களிப்பினை யாழ்ப்பாண மரபுரிமை மையம் வழங்கவுள்ளது. குறித்த தோரண வாயிலின் பாதுகாப்பு , புனர்நிர்மாணம் மற்றும் நில வடிவமைப்பு ஆகிய செயற்திட்டமே முன்னெடுக்கப்படவுள்ளது. சங்கிலியன் தோரண வாயில் அல்லது சங்கிலித்தோப்பு வளைவு என அழைக்கப்படுவது யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னனான சங்கிலியனின் மாளிகை அமைந்திருந்த இடம் எ…
-
- 3 replies
- 418 views
-
-
யானை தாக்கி குடும்பஸ்தர் மரணம் - மடு பிரதேசத்தில் சம்பவம் By DIGITAL DESK 5 24 SEP, 2022 | 05:00 PM விறகு சேகரிப்பதற்காக வீட்டிலிருந்து சிறிது தூரம் காட்டுக்குள் சென்றவர் யானை தாக்கி ஸ்தலத்திலேயே உயிரிழந்த சம்பவம் மன்னார் மடுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ் சம்பவம் வெள்ளிக்கிழமை (23) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. மடு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சின்னப்பண்டிவிரிச்சான் பகுதியில் வசித்து வந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான பபா என அழைக்கப்படும் கிறிஸ்தோப்பர் ஸ்ரான்லி (வயது 54) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவ்வாறு வீட்டில் இருந்து வெளியே சென்ற கணவர் மாலையாகியும் வீடு வராததால், மனைவி தேடிச் சென்றதாகவும் பின் அயலவர…
-
- 0 replies
- 206 views
- 1 follower
-
-
தாய்ப்பால் புரைக்கேறியதில் 10 மாதக்குழந்தை உயிரிழப்பு 24 SEP, 2022 | 08:36 PM யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் தய்ப்பால் புரைக்கேறியதில் 10 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில் வெள்ளிக்கிழமை (23) குழந்தைக்கு பால் கொடுத்த போது பால் புரைக்கேறியதில் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அதனை அடுத்து பெற்றோர் அம்பன் வைத்தியசாலைக்கு குழந்தையை கொண்டுசென்ற போது , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போது குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/136371
-
- 0 replies
- 276 views
- 1 follower
-
-
சீனாவிடமிருந்து 650 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உதவிகள் By DIGITAL DESK 5 24 SEP, 2022 | 02:06 PM (எம்.மனோசித்ரா) நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளால் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டைக் கருத்திற் கொண்டு , 650 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ பொருட்களை நன்கொடையாக சீனா வழங்கியுள்ளது. குறித்த நன்கொடை பொருட்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. மேலும் 5 பில்லியன் ரூபா பெறுமதியான மருத்து பொருட்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டு , அவை வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. தற்போதைய சிரமங்களில் மக்களுக்கு மேலும் உதவிகளை வழங்குவதற்காக சீனா இலங்கையுடன் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றும் என்று இலங்கையிலுள்ள சீன தூ…
-
- 1 reply
- 152 views
- 1 follower
-
-
கொழும்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 84 பேர் கைது: கண்ணீர் புகை, நீர்த்தாரை பிரயோகம் - இலங்கை நெருக்கடி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, கொழும்புவில் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டவர்கள் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துக்கொண்ட 84 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். கொழும்பு - நகர மண்டப பகுதியில் இன்று (செப்.24) பிற்பகல் சோசலிச இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் சட்டத்தரணிகள், பௌத்த பிக்குகள், மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பல…
-
- 0 replies
- 384 views
- 1 follower
-
-
வடி கானிலிருந்து சிசு உயிருடன் மீட்பு By DIGITAL DESK 5 24 SEP, 2022 | 01:04 PM தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேஷன் வட்டகொட பகுதியிலுள்ள வடிகான் ஒன்றிலிருந்து இன்று சனிக்கிழமை (24) அதிகாலை 5.30 மணியளவில் நிறை மாத சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீதியூடாக சென்ற சிலர் வடிகானில் சிசுவொன்று இருப்பதை அவதானித்த நிலையில், பொலிஸாருக்கு தகவலை வழங்கியுள்ளனர். பின்னர் சிசு பொலிஸாரினால் மீட்கப்பட்டு லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சிசுவை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சிசு உயிருடன் இருப்பதாகவும் வைத்தியசாலையின் அதிகா…
-
- 3 replies
- 210 views
- 1 follower
-
-
நந்திக்கடல், சாம்பல்தீவு, நாயாறு... உள்ளிட்ட பகுதிகளை, வனப் பாதுகாப்பு வலயமாக மாற்ற நடவடிக்கை. திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சாம்பல்தீவு, நாயாறு, நந்திக்கடல் குளங்கள் உள்ளிட்ட பகுதிகளை வனப் பாதுகாப்பு வலயமாக அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் விவசாய மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இடம்பெற்றது. கடற்றொழில், கிராமிய பொருளாதாரம் மற்றும் அரச அமைச்சுகள் உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்களும் இதில் கலந்துகொண்டனர். இதன்போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1300951
-
- 2 replies
- 794 views
-
-
திலீபன் வழியில் வருகிறோம் : ஊர்தி பவனி முல்லைத்தீவு நகரை சென்றடைந்தது By VISHNU 18 SEP, 2022 | 02:23 PM சண்முகம் தவசீலன் திலீபன் வழியில் வருகிறோம் என்ற ஊர்தி பவனி சற்று முன்னர் முல்லைத்தீவு நகரை வந்தடைந்தது. 15.09.2022 அன்று பொத்துவில் பிரதேசத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஆரம்பித்த திலீபன் வழியில் வருகிறோம் என்ற ஊர்தி பவனி சற்று முன்னர் முல்லைத்தீவு நகரை வந்தடைந்தது. முல்லைத்தீவு நகர் பகுதிக்கு வருகை தந்த ஊர்திக்கு முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த மக்கள் பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். …
-
- 3 replies
- 302 views
- 1 follower
-
-
https://www.youtube.com/watch?v=w9Wduu0P1WE உயர் பாதுகாப்பு வலயப் பிரகடனத்திற்கு... எதிராக, போராட்டம் : பொலிஸார் கண்ணீர்ப் புகை தாக்குதல். உயர் பாதுகாப்பு வலயப் பிரகடனத்திற்கு எதிராக மருதானை டீன்ஸ் வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்தாரைப் பிரயோகத்தை மேற்கொண்டதால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1301055
-
- 0 replies
- 161 views
-