ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
06 Oct, 2025 | 12:37 PM யாழில் முறையற்ற விதத்தில் காணி உறுதி எழுதப்பட்டதாக தெரிவித்து பெண் சட்டத்தரணி ஒருவர் திங்கட்கிழமை (06) யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொம்மைவெளி பகுதியில் உள்ள காணிகளை எழுதியதற்காக இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் மல்லாகத்தை சேர்ந்த சட்டத்தரணியே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சட்டத்தரணியிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/227014
-
-
- 7 replies
- 467 views
- 1 follower
-
-
நாமல் ராஜபக்ச தலைமையிலான குழுக்கள் இளைஞர்கள் மத்தியில் ஐஸ் போன்ற போதைப்பழக்கங்களை ஏற்படுத்துவதாக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு குற்றஞ்சாட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "உலக குடியிருப்பாளர் தினத்தினை முன்னிட்டு தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட முதல் கட்டமாக 70வீடுகளும் இரண்டாம் கட்டமாக 28வீடுகளும் அமைக்கப்பதற்கான நிதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. முதல்கட்டதாக 70மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட வீடுகளை வீட்டின் உரிமையாளர்களிடம் கையளித்திருக்கின்றோம். அதனைவிட இந்த நாட்டில் இளைஞர்கள் போதைபாவனை தொடர்பான விடயங்களில் உள்ளீர்க்கப்பட்டு அதன்மூலம் அவர்களின் வாழ்க்கை இல்லாமல் செய்யப்பட்டு வருகின்றது" என குறிப்பிட்டுள்ளார்…
-
- 0 replies
- 108 views
-
-
யாழில். சில காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பதவி இறக்கத்துடன் இடமாற்றம்! adminOctober 7, 2025 யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளாக கடமையாற்றி வந்த சிலருக்கு, பதவி இறக்கத்துடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு ஆகிய காவல் நிலையங்களைச் சேர்ந்த பொறுப்பதிகாரிகளுக்கே இவ்வாறு பதவி இறக்கத்துடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த பொறுப்பதிகாரிகள் தொடர்பில் காவற்துறை தலைமையகத்துக்கு வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. https://globaltamilnews.net/2025/221251/
-
- 1 reply
- 171 views
-
-
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுக்கு 18 மில்லியன் ரூபாய் கோரப்பட்டுள்ளது! 07 Oct, 2025 | 02:01 PM இலங்கையில் இரண்டாவது பெரிய மனித புதைகுழியை இன்னும் இரண்டு மாதங்களுக்கு அகழ்வாய்வு செய்வதற்கு கோரப்பட்ட நிதி இரண்டு கோடி ரூபாயை அண்மித்த தொகை என்பது தெரியவந்துள்ளது. எட்டு வார காலத்திற்கு அகழ்வாய்வுப் பணிக்காக தயாரிக்கப்பட்ட பாதீடு யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவனால் கடந்த செப்டெம்பர் மாதம் 18,ஆம் திகதி அன்று நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதோடு, அந்த தொகை சுமார் ஒரு கோடியே என்பது இலட்சம் (18 மில்லியன் ரூபாய்) எனத் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழி தொடர்பான கடந்த ஒக்டோபர் 1, 2025 அன்று யாழ்ப்பாண நீதவான் செல்வந…
-
- 0 replies
- 104 views
-
-
இலங்கையில் இளைஞர்களிடையே தீவிரமடையும் எச்.ஜ.வி இலங்கையில் 15 – 29 வயதுக்குட்பட்டவர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான எயிட்ஸ் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலகில் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் பாலியல் வைரஸ்களில் எச்.ஐ.வியும் ஒன்றாகும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை நேரடியாகத் தாக்கி உடலை பலவீனப்படுத்துகிறது. மேலும் மிகவும் ஆபத்தான சூழ்நிலை என்னவென்றால், இருமல் அல்லது சளி போன்ற ஒரு சிறிய நோய் ஏற்பட்டால் கூட அது மரணத்திற்கு வழிவகுக்கும். எச்.ஐ.வி தொற்றுகள் ஏற்படக்கூடிய மூன்று முக்கிய வழிகளை சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். 1. எச்…
-
- 0 replies
- 126 views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கை மீதான புதிய பிரேரணை இன்று நிறைவேறும் ! 06 Oct, 2025 | 10:41 AM இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இறுதியாக சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை இன்று 6 ஆம் திகதி திங்கட்கிழமை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஏற்கனவே கடந்த மாத ஆரம்பத்தில் இந்தப் பிரேரணையின் முதலாவது வரைபு சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் அதில் பல திருத்தங்கள் செய்யப்பட்டன. அந்தவகையில் திருத்தப்பட்ட இறுதி வரைபு இன்று சமர்ப்பிக்கப்பட்டு, இன்றைய தினமே நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்…
-
- 2 replies
- 328 views
- 1 follower
-
-
இலங்கை தொடர்பில் 2012 இல் இருந்து இதுவரை நிறைவேற்றப்பட்ட ஜெனிவா தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏமாற்றமாக அமைந்திருந்தும் கூட இந்த வருடம் நிறைவேறவுள்ள தீர்மானம் அவை அனைத்தையும் விட மிகவும் மோசமான, பலவீனமான ஒரு தீர்மானம் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். ஜெனீவா தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து ஜெனிவா அமர்வுகளில் நிறைவேற்றப்படுகின்ற தீர்மானங்களும் எடுக்கின்ற நடவடிக்கைகளும் மோசமான ஏமாற்றமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைந்திருந்தும்கூட இந்த வருடம் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானம் 2012 இல் இருந்து இதுவரை நிறைவேற்றப்பட்ட தீ…
-
-
- 3 replies
- 260 views
-
-
என்.பி.பி அரசாங்கம் ஆயிரம் மடங்கு சிறந்தது – ராஜபக்சர்களை குற்றம் சாட்டுகின்றார் சரத் பொன்சேகா October 6, 2025 12:41 pm கடந்த கால அரசாங்கங்களை விட தற்போதை அரசாஙம் ஆயிரம் மடங்கு சிறந்தது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஊழல் செய்பவர்களைப் பாதுகாக்காமல் இருக்க தற்போதைய அரசாங்கம் முதுகெலும்பாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ராஜபக்சக்கள் ஊழல் வலையமைப்பை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்று கட்டுப்படுத்தி வருவதாகவும், இதன் விளைவாக, நாட்டில் ஊழல் எல்லைகளை உடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சிறிய குறைபாடுகள் இருந்தபோதிலும், இந்த அரசாங்கம் முந்தைய அரசாங்க…
-
- 2 replies
- 252 views
-
-
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, நாட்டின் முக்கிய மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களை ஆகாயத்தில் இருந்து காணும் வாய்ப்பை சிறுவர்களுக்கு வழங்கும் நோக்கில் 'தெரண - சிக்னல் ஆகாயத்தில் பயணம்' கடந்த முதலாம் திகதி வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நாட்டின் சிறுவர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விமான பயணத்தில் பங்கேற்ற பிள்ளைகளின் எண்ணிக்கை 250 ஆகும். 'தெரண - சிக்னல் ஆகாயத்தில் பயணம்' தொடர்பான சிறப்பு நிகழ்ச்சியை நீங்கள் தற்போது டி.வி தெரணவில் காணலாம். https://adaderanatamil.lk/news/cmgemvr3e00upo29n4hy1mbv1
-
-
- 6 replies
- 376 views
- 1 follower
-
-
wp-content/litespeed/avatar/2684735edbe524bb22324f0d9738aa29.jpg?ver=1759301393 Madawala News14 hours ago 0 2 minutes read wp-content/uploads/2025/10/Picsart_25-10-06_13-48-50-155-780x993.jpg அம்பாறை மாவட்டம் தமன பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள பன்னல்கம கிராம மக்கள் அனைவரும் பிரமிட் திட்டத்திற்குள் சிக்கி கடனாளிகளாகிவிட்டனர். சில மாதங்களுக்கு முன்பு, பன்னல்கம கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் அருணலு பஹன்சிலு என்ற பெயரில் விளக்கு திரிகளை தயாரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சிறிது காலத்திற்குப் பிறகு, இது ஒரு பத்தி தயாரிக்கும் தொழிலாகத் தொடங்கப்பட்டது, மேலும் கிராம மக்களுக்கும் அதில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டது. ஒருவர் ரூ. 50,000 தொகையை வைப்பீடு செய்யும்போது…
-
- 0 replies
- 176 views
-
-
06 Oct, 2025 | 04:50 PM அகில இலங்கை அமரபுர மகா சங்க சபையின் உச்ச மகாநாயக்கரான மதீஹே பன்னசீஹ மகாநாயக்க சுவாமிந்திரசாவின் தலைமையில் நிறுவப்பட்ட விபாசி பௌத்த மையம், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது. கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு சுமார் இரண்டு கோடி ரூபாய் பெறுமதி கொண்ட மருத்துவ உபகரணங்களும் நன்கொடையாக வழங்கப்பட்டன. தேசிய வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள விபாசி பௌத்த மையத்தை புதுப்பிப்பதற்காக மதிப்பிடப்பட்ட செலவு 68 இலட்சம் ரூபாய். இதற்காக சுகாதார அமைச்சகம் 45 இலட்சம் ரூபாய் நிதியை வழங்கியுள்ளது. மீதமுள்ள தொகையை மருத்துவமனை சேவைகள் சபை செலவிடப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையின் கட்டுமானத்திற்கு கடற…
-
- 0 replies
- 69 views
- 1 follower
-
-
Published By: Digital Desk 3 06 Oct, 2025 | 02:28 PM பௌர்ணமி தினமான இன்று திங்கட்கிழமை (06) வானில் சூப்பர் மூன் (Supermoon) தென்படும். இது வழமையாக தென்படும் முழு சந்திரனை விட சுமார் 7 சதவீதம் பெரியதாக தென்படும் என ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனம் (ACCIMT) தெரிவித்துள்ளது. பௌர்ணமி தினங்களில் வழக்கமாக தென்படும் ஏனைய முழு சந்திரன்களுடன் ஒப்பிடும்போது, இன்றிரவு முழு சந்திரன் பெரியதாகவும் பிரகாசமாக தென்பட இருப்பதால் சூப்பர் மூன் என அழைக்கப்படுகிறது. சந்திரன் அதன் நீள்வட்ட சுற்றுப்பாதையில் பூமிக்கு அருகில் நகரும்போது, சூப்பர் மூன்கள் வருடத்திற்கு பல முறை நிகழ்கின்றன. இந்த நிகழ்வு முழு சந்திரன் மற்றும் பௌர்ணமி ஆகிய இரண்டு கட்டங்களிலும் நிகழலாம் என ஆர்தர் சி. கிள…
-
- 0 replies
- 124 views
- 1 follower
-
-
நேரமுகாமைத்துவத்தில் கடற்புலிகளின் தளபதி சூசை எமக்கு முன்னோடி - துரைராசா ரவிகரன் 06 Oct, 2025 | 10:34 AM நேரமுகாமைத்துவத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின், கடற்புலிகளின் தளபதியாக இருந்த சூசை தமக்கு முன்னோடி எனத் தெரிவித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், அதனால் தற்போதும் தம்மால் சிறப்பாக நேரமுகாமைத்துவத்தைப் பின்பற்ற முடிவதாகவும் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு - மாமடு கற்பகா அறநெறிப்பாடசாலையில் ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்ற சிறுவர்தினம் மற்றும் முதியோர்தினநிகழ்வுடன், சாதனையாளர் மதிப்பளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், சிறார்களுக்கு நேரமுகாமைத்துவம் தொடர்பில் ஆலோசனை வழங்கும் வகையில் கருத்துத…
-
- 0 replies
- 191 views
-
-
சுன்னாகம் பகுதியில் கத்திக்குத்து- ஒருவர் உயிரிழப்பு! சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை கிழக்கு பகுதியில் கடையொன்றில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக கத்திக்குத்துக்கு இலக்காகிய கடை உரிமையாளர் உயிரிழந்துள்ளார். ஏழாலை கிழக்கு பகுதியில் காணப்பட்ட கடையொன்றுக்கு மது போதையில் வந்த இரண்டு இளைஞர்கள் மிக்சர் தருமாறு கேட்டுள்ள நிலையில் கடை உரிமையாளர் மிக்சருக்கு உரிய பணத்தை தருமாறு கேட்டபோது மிக்சரை வாங்க வந்தவர்களுக்கும் கடை உரிமையாளருக்கும் இடையே வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது கடை உரிமையாளர் மீது மிக்சர் வாங்க வந்தவர்கள் கத்திக் குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையில் கடை உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் ஏழாலை கிழக்கு பகுதியை சேர்ந்த 35 வய…
-
- 1 reply
- 310 views
-
-
மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதற்கு யாழ். பல்கலைக்கழகமும் அரசுக்கு துணை போகிறது - அன்னராசா குற்றச்சாட்டு! Published By: Digital Desk 1 05 Oct, 2025 | 02:22 PM அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டு, யாழ்ப்பாண பல்கலைக்கழக கடற்றொழில் பீடமும், கடல் அட்டை பண்ணைகளுக்கு ஆதரவு வழங்குவதாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா குற்றம் சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில், நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சீன கடலட்டை பண்ணை சூழலுக்கு பாதிப்பா? இல்லையா? என்று ஒரு ஆய்வு செய்து தருமாறு நாங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னர் யாழ் பல்கலைக்கழகத்த…
-
- 0 replies
- 121 views
- 1 follower
-
-
05 Oct, 2025 | 04:38 PM தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் இவ்வாண்டு ஓவ்வொரு 10 இலட்சம் பெறுமதியான 88 வீடுகளில் 80 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கும் நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (05) அந்தந்த பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள பயனாளிகளிடம் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது. அந்தவகையில், நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் கோண்டாவில் நாகபூசணி அம்மன் கோவிலடியில் பயனாளிக்கு ஒருவருக்கு நிர்மாணிக்கப்பட்ட வீடு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களால் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலாளர், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர், தேசிய மக்கள் சக்தியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர், அபிவிருத…
-
- 0 replies
- 124 views
- 1 follower
-
-
காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்திற்கும் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை வாரத்தில் அனைத்து நாட்களிலும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த மாதம் 8ஆம் திகதி முதல் இந்த மாதம் 28ஆம் திகதி வரையில் நாளாந்தம் குறித்த கப்பல் சேவை இடம்பெறும் என சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கே.எம்.ஜெயசீலன் தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் செவ்வாய்க் கிழமை தவிர்ந்த வாரத்தின் ஏனைய ஆறு நாட்களும் குறித்த சேவை இடம்பெற்றுவந்தது. இந்நிலையில் பண்டிகை காலத்தில் அனைத்து நாட்களிலும் சேவையை வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் இக்கப்பல் சேவையில் தீர்வை அற்ற கடைத் தொகுதியும் ( Duty free) புதிதாக இணைக்கப்ப…
-
- 0 replies
- 155 views
- 1 follower
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் நகர் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் மனித எலும்பு கூடு ஒன்று நேற்று (4) அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த காணியின் ஒரு பகுதி பற்றைக் காடாக காணப்படுகின்ற நிலையில் அங்கிருந்து இந்த மனித எலும்பு கூடு மீட்கப்பட்டுள்ளது. அந்த பகுதிக்கு சென்ற ஒருவர் இதனை அவதானித்த நிலையில் மாங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மாங்குளம் பொலிசார் குறித்த இடத்தை குற்றப் பிரதேசமாக அடையாளப்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்தவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலையா? என்பது தொடர்பில் கண்டறிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். -முல்லைத்தீவு நிருபர் தவசீலன்- ht…
-
- 0 replies
- 98 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் - உடுவில் மகளிர் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் விளையாட்டு ஒன்றில் முதலிடம் பெற்றதால் அவரது வகுப்பு மாணவிகள் அவரிமிருந்து விலகி இருந்ததால் குறித்த மாணவி 2வது மாடியில் இருந்து குதித்ததால் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவமானது நேற்றையதினம் (02) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவை சேர்ந்த 14 வயதுடைய குறித்த மாணவி உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவிகள் விடுதியில் கடந்த ஒரு வருட காலமாக தங்கி நின்று கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் அவர் விளையாட்டு ஒன்றில் பங்குபற்றி முதலிடம் பெற்றுள்ளார். இதனால் அவரது வகுப்பு மாணவிகள் அவரிடம் இருந்து விலகி இருந்தனர். இதன் காரணமாக மனமுடைந்த மாணவி விடுதியின் இரண்…
-
-
- 9 replies
- 606 views
- 2 followers
-
-
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கேவிலில் இருந்து பருத்தித்துறை நோக்கி புறப்பட்ட அரச பேருந்து நேற்று பலமுறை பழுதடைந்து வீதியின் இடை நடுவில் நின்றததாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நேற்று(3) அதிகாலை கேவிலில் இருந்து பருத்தித்துறை நோக்கி புறப்பட்ட அரச பேருந்து மருதங்ககேணியில் பழுதடைந்து காணப்பட்டது. பழுது நீக்கி மருதங்கேணியில் இருந்து புறப்பட்ட குறித்த பேருந்து ஆனது மீண்டும் இடை நடுவே பழுதடைந்துள்ளது. பயணிகள் சிரமம் பின்னர் அங்கிருந்து பருத்தித்துறை நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு மீண்டும் தனது பயணத்தை ஆரம்பித்தது மீண்டும் அதே பேருந்து கேவில் நோக்கி நேற்று மாலை பருத்தித்துறையில் இருந்து புறப்பட்டது அதிகளவான பயணிகளை ஏற்றி வந்த குறித்த …
-
-
- 13 replies
- 781 views
- 2 followers
-
-
இலங்கைக்கு எதிரான ஜெனிவா தீர்மானம் : வாக்கெடுப்பைத் தவிர்க்க அமெரிக்கா, நோர்வேயிடம் ஆதரவு கோரிய அரசு 05 Oct, 2025 | 09:35 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம் மீது, திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் பரபரப்பான பின்னணியில், அரசாங்கம் சர்வதேச அளவில் ஆதரவு திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் ஆகியோர் தலைமையில் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கைத் தூதுக்குழு, அமெரிக்கா, நோர்வே உள்ளிட்ட முக்கிய மேற்குலக நாடுகள் மற்றும் நட்பு நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்…
-
- 0 replies
- 196 views
-
-
ஹிட்லரின் பாதையில் தேசிய மக்கள் சக்தி அரசு ; நீதித்துறையைக் கட்டுப்படுத்த முயல்வதாக ரணில் சாடல் 05 Oct, 2025 | 11:28 AM (லியோ நிரோஷ தர்ஷன்) எதிர்க்கட்சிகளின் செல்வாக்கு அதிகரிப்பு மற்றும் அவற்றின் ஒன்றிணைவு குறித்து அச்சம் கொண்டுள்ள அரசாங்கம், ஒரு ஹிட்லர் போக்கிலான செயற்பாட்டை வெளிப்படுத்துவதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க கடுமையாகச் சாடியுள்ளார். எதிரணியினருடன் அரசியல் ரீதியான எந்தப் பிரச்சினைகளாக இருந்தாலும், உள்ளூர் அரசியல் மேடைகளில் கருத்து தெரிவித்திருக்க வேண்டும் என்றும், வெளிநாடுகளுக்குச் சென்று இலங்கை குறித்தும் இங்குள்ள அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் விமர்சனங்களை முன்வைப்பது முறையற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.…
-
- 0 replies
- 151 views
-
-
05 Oct, 2025 | 07:07 AM தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் எமது நாட்டின் இறைமையில் உள்ள கச்சதீவை அரசியலுக்காக பயன்படுத்தினால் அவர்கள் இருவருக்கும் எதிராக கடற்றொழில் சமூகம் மிக விரைவில் பாரிய போராட்டத்தை முன்னெடுக்குமென வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடாக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை (4) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கச்சதீவை மீட்பேன் என வடக்கு கடற்றொழில் சமூகத்திற்கு எதிரான ஒரு கருத்தை தொடர்ச்சியாக அரசியல் மேடைகளில் பேசி வருகின்றார். முதலமைச்சரே, …
-
- 0 replies
- 123 views
- 1 follower
-
-
'தேசிய மக்கள் சக்தி செயலால் நிரூபிக்கிறது; வட மாகாணத்தை அவர்களால் அபிவிருத்தி செய்ய முடியும்' - ஆளுநர் நா.வேதநாயகன் நம்பிக்கை Published By: Digital Desk 1 04 Oct, 2025 | 01:23 PM தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது சொல்லில் அல்ல செயலில் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது. இந்த அரசாங்கத்தின் காலத்திலேயே வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என்று நம்புகின்றேன் என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். வட மாகாணத்தில் வீதிகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பொதுமக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி செயற்படுத்தப்படும் 'மறுமலர்ச்சிக்கான பாதை' திட்டத்தின் கீழ் குறிகாட்டுவான் இறங்குதுறைக்கான மறுசீரமைப்பு வீதிக்கட்டுமானத்தின் ஆரம்ப நிகழ்வு மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில…
-
- 0 replies
- 104 views
- 1 follower
-
-
04 Oct, 2025 | 01:12 PM புதிய அரசியலமைப்பு சட்டம் ஒன்று விரைவில் கொண்டுவரப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - சங்கானையில் நிகழ்வு ஒன்றின் பின்னர் வெள்ளிக்கிழமை (03) ஊடகவியலாளர் ஒருவர் "புதிய அரசியலமைப்பு சட்டம் தொடர்பாக உங்களது அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பினார். புதிய அரசியலமைப்பு சட்டம் எமது கொள்கை பிரகடனத்தில் இருக்கின்ற ஒரு விடயம். நாங்கள் ஆட்சிக்கு வந்து ஒருவருடம்தான் நிறைவடைந்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த நாடு எந்த நிலையில் இருந்தது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். இது மக்களுக்கு தெரியும். ஆனால் அரசியல்வாதிகள் தெரிந்து…
-
- 0 replies
- 116 views
- 1 follower
-