ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
பணம் செலுத்தாமையினால்... கொழும்பு துறைமுகத்திற்கு அருகில், நங்கூரமிட்டுள்ள.. மூன்று எரிபொருள் கப்பல்கள்? பணம் செலுத்தாத காரணத்தினால் தற்போது மூன்று எரிபொருள் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையை வந்தடைந்த ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் மசகு எண்ணெயை ஏற்றிச் வந்த கப்பல் கடந்த 23ஆம் திகதி முதல் கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிடப்பட்டுள்ளது. மேலும் இரண்டு டீசல் கப்பல்கள் பல நாட்களாக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அவற்றில் உள்ள டீசலின் அளவு 76 ஆயிரம் மெட்ரிக் தொன் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த கப்பல்கள…
-
- 1 reply
- 557 views
-
-
இராஜாங்க அமைச்சர்களின் பதவியேற்பு. முழு விபரம்!. – பிள்ளையான்.. கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர். புதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகிறது. இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இடம்பெற்று வருகிறது. அதன்படி 37 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்கவுள்ளனர். இராஜாங்க அமைச்சர்களின் விபரம் வருமாறு 01. ஜகத் புஷ்ப குமார் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் 02. ரஞ்சித் சியம்பலாபிட்டிய – நிதி இராஜாங்க அமைச்சர் 03. லசந்த அழகியவன்ன – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் 04. திலும் அமுனுகம – முதலீடு மற்றும் ஊக்குவிப்பு இராஜ…
-
- 7 replies
- 369 views
-
-
இங்கிலாந்திற்கு சென்ற... கராத்தே அணி, இலங்கைக்கு... திருப்பியனுப்பப் பட்டமை குறித்து விசாரணை! இங்கிலாந்திற்கு சென்ற இலங்கைக்குழு திருப்பியனுப்பப்பட்டமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. பொதுநலவாய கராத்தே சம்பியன்ஷிப் 2022இல் பங்கேற்பதற்காக இங்கிலாந்தில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தை சென்றடைந்தவுடன் இலங்கையின் தேசிய கராத்தே அணி நாடு கடத்தப்பட்டது. தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றிருந்த இலங்கை கராத்தே அணியினரிடம் ஹீத்ரோ விமான நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டதை அடுத்து அவர்களது விசாக்கள் இரத்து செய்யப்பட்டு அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். மூன்றாம் தரப்பினருக்கும் தற்போதைய கராத்தே சம்மேளனத்துக்கும் இடையே ஏற்பட்…
-
- 0 replies
- 247 views
-
-
நாட்டில்... மீண்டும், நிச்சயமற்ற நிலை ஏற்படலாம்? தற்போதைய டெண்டர் நடைமுறைக்கு அமைவாக நிலக்கரியை இறக்குமதி செய்ய முடியாத பட்சத்தில் நாட்டில் மீண்டும் நிச்சயமற்ற நிலை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு டெண்டர் முறையின் மூலம் நிலக்கரியை வழங்குவதற்கு இணங்கிய நிறுவனம் அதற்கு முன்வர தயங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1298303
-
- 0 replies
- 305 views
-
-
எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு... இரங்கல்: தேசியக் கொடியை, அரைக்கம்பத்தில் பறக்க விடவும் – ஜனாதிபதி! இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவின் அரச குடும்பத்தினருக்கும் மக்களுக்கும் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரித்தானியப் பேரரசில் அதிக காலம் மகுடத்தை வைத்திருந்த இரண்டாம் எலிசபெத் மகாராணி தனது 96 வயதில் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை நேற்று அறிவித்தது. மறைந்த ராணி எலிசபெத்தின் உடல் நாளை லண்…
-
- 0 replies
- 163 views
-
-
நாட்டில் தினசரி 8 மணித்தியால மின்தடை ஏற்படும் அபாயம் 2 மணி நேரம் முன் இலங்கையில் எட்டு மணித்தியால மின்விநியோக தடையை அமுல்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர எச்சரித்துள்ளார். நாட்டில் தற்போது கையிருப்பில் உள்ள நிலக்கரி, ஒக்டோபர் 15ஆம் திகதி வரை மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு மட்டுமே போதுமானது. உரிய காலத்திற்கு முன்னர் நிலக்கரி கிடைக்காவிட்டால் தினமும் 08 மணித்தியாலங்கள் மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நிலக்கரிக்கு தட்டுப்பாடு இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார். நிலக்கரிக்கா…
-
- 1 reply
- 225 views
- 1 follower
-
-
வன்னி, கிழக்கு, மலையக பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு யாழ்.இந்துக் கல்லூரியின் உதவிக்கரம் By VISHNU 08 SEP, 2022 | 10:07 PM ( எம்.நியூட்டன்) வன்னி பிரதேசம், கிழக்கு மாகாணம் மற்றும் மலையக பகுதிகளை சேர்ந்த பொருளாதார ரீதியில் பின் தங்கிய உயர்தர விஞ்ஞான பிரிவில் கல்வி கற்க ஆர்வமுள்ள மாணவர்கள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இணைந்து கல்வி கற்பதற்கான ஓர் சந்தர்ப்பத்தினை யாழ் இந்துக் கல்லூரி ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் கல்லூரி நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. வன்னி பிரதேசம், கிழக்கு மாகாணம் மற்றும் மலையக பகுதிகளை சேர்ந்த பொருளாதார ரீதியில் பின் தங்கிய உயர்தர விஞ்ஞான பிர…
-
- 1 reply
- 445 views
- 1 follower
-
-
பயங்கரவாத தடுப்பு பிரிவில் இருந்து தொலைபேசியூடாக அச்சுறுத்தல்: நகுலேஸ் குற்றச்சாட்டு Sri Lankan TamilsSri Lanka PoliticianSri Lanka GovernmentNorthern Province of Sri Lanka 1 மணி நேரம் முன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் இடம்பெறும் தருவாயில் கூட இலங்கை அரசாங்கத்தின் அச்சுறுத்தல்கள் மற்றும் அடக்குமுறைகள் எல்லையில்லாமல் தொடருகின்றன என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத் தடுப்பு பிரிவில் இருந்து தொலைபேசி அழைப்பினூடாக அச்சுறுத்தல் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடுப்பு பிரிவிலிருந்து அழைப்…
-
- 0 replies
- 284 views
- 1 follower
-
-
நடிகை தமிதாவை... விடுவிக்க, நடவடிக்கை எடுக்கவும் – சஜித். கைது செய்யப்பட்டுள்ள பிரபல நடிகை தமிதா அபேரத்னவை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபைத் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றம் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமானபோது விசேட அறிக்கையொன்றை விடுத்து அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். மே மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசித்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் தியத்த உயன வளாகத்தில் வைத்து நேற்று இரவு நடிகை தமிதா அபேரத்ன கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1298157
-
- 8 replies
- 839 views
- 1 follower
-
-
அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை - அதிர்ச்சியில் நாட்டு மக்கள் இலங்கையில் வருடாந்த வருமானம் 1.2 மில்லியன் ரூபாவை மீறும் ஒவ்வொரு நபரிடமிருந்தும் வருமான வரி அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் மாத வருமானம் உள்ள ஒவ்வொரு நபரும் வருமான வரிக்கு உட்பட்டவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் எதிர்வரும் நாட்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்பட திட்டமிடப்பட்டு வருகின்றது. வருமான வரி புதிய தீர்மானத்திற்கமைய, வருடாந்த வருமானம் 1.2 மில்லியனில் இருந்து 06 மில்லியன் ரூபா வரை வர…
-
- 0 replies
- 227 views
- 1 follower
-
-
சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டமூலம் 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் By T YUWARAJ 08 SEP, 2022 | 05:40 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்) பாராளுமன்றத்தில் இன்று காலை முதல் இடம்பெற்ற சமூக பாதுகாப்பு உதவுத் தொகை அறவீட்டுச் சட்டமூலம் மீது ஆளும் எதிர்க்கட்சி கடும் வாத விவாதத்தில் ஈடுபட்ட நிலையில் மாலை 4,50 மணியளவில் விவாதம் முடிவுற்றது. இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் சமூக பாதுகாப்பு உதவுத் தொகை அறவீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புக்கு சபை இணக்கமா என கேட்டபோது, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க சட்டமூலத்துக்கு வாக்கெடுப்பை கோரினார். அதனையடுத்து வாக்களிப்ப…
-
- 0 replies
- 383 views
- 1 follower
-
-
ரணிலின் அமைச்சரவையில் ராஜபக்ஷ உறவினர் - போராட்டக்குழு கோபம் 41 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்க, இலங்கை ஜனாதிபதி இலங்கையில் ராஜாங்க அமைச்சர்களாக இன்று 37 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்தவராவார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் செப்டம்பர் 8ஆம் தேதி காலையில் ராஜாங்க அமைச்சர்களாக 37 பேர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இவர்களில் மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷவின் புதல்வர் சசீந்திர ராஜபக்ஷவும் (வயது 46) ஒருவர். இதற்கு முன்னரும் சசீந்திர ராஜபக்ஷ ராஜாங்க அமைச்சராகப் பதவி…
-
- 0 replies
- 240 views
- 1 follower
-
-
நாட்டின் சனத்தொகையில்... இரண்டு வீதமானோர்கூட, நேரடி வரி செலுத்துவதில்லை – மனுஷ நாட்டின் சனத்தொகையில் இரண்டு வீதமானோர்கூட நேரடி வரி செலுத்துவதில்லை என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) விசேட உரையாற்றியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். வரி வலையை விரிவுபடுத்துவதன் ஊடாக நேரடி வரிகளை அதிகரித்து மறைமுக வரிகளை குறைக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1298216
-
- 3 replies
- 279 views
- 1 follower
-
-
நாட்டில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு... எம்மால், நிரந்தர தீர்வு வழங்க முடியும் – சாணக்கியன்! நாட்டில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு எம்மால் நிரந்தர தீர்வு வழங்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக இல்லாதொழித்து நாட்டு மக்களை மந்தபோசணைக்கு கொண்டு சென்ற தரப்பினர் தற்போது புதிய அரசியல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கு கூற வேண்டியவர்கள் தற்போது மேலவை இலங்கை கூட்டணி என்ப…
-
- 2 replies
- 228 views
-
-
இலங்கை மலையக தமிழ் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு - பிபிசி தமிழின் கள ஆய்வு ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 59 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, தன் மகனுடன் நிரூபா இலங்கையில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாக சிறார்களுக்கான ஐ.நா அமைப்பான யுனிசெப் அண்மையில் வெளியிட்ட தகவல், தற்போது பேசுபொருளாகியிருக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடுடைய சிறார்கள் வாழும் நாடுகள் பட்டியலில், இலங்கை ஆறாவது இடத்தை பிடித்துள்ளதாக யுனிசெப் அமைப்பின் தெற்காசிய வலயத்துக்கு பொறுப்பான பணிப்பாளர் ஜோர்ஜ் லெரி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு வருகை தந்து க…
-
- 0 replies
- 191 views
- 1 follower
-
-
போராட்டம் என்ற போர்வையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 80 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்! ‘அறகலய’ போராட்டத்தின் போது பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன்னணி வர்த்தகர்கள் உட்பட சுமார் எண்பது பேர் பல்வேறு வழிகளில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற இவர்களை தேடும் பணியில் பாதுகாப்பு தரப்பினர் தற்போது ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களை கைது செய்வதற்கு இன்டர்போல் உள்ளிட்ட சர்வதேச பாதுகாப்பு அமைப்புகளின் உதவியும் கோரப்பட்டுள்ளது. பல்வேறு அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறி தூதரகங்களில் தவறான தகவல்களை சமர்ப்பித்து ச…
-
- 14 replies
- 731 views
- 1 follower
-
-
கடும் அழுத்தம் காரணமாக... பசில், விரைவில்... அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல்! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இராஜாங்க அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர், பசில் ராஜபக்ஷ அமெரிக்கா செல்லவுள்ளதாக கூறப்படுகின்றது. இராஜாங்க அமைச்சர்கள் இன்று(வியாழக்கிழமை) பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் அது தாமதமாகலாம் என கூறப்படுகிறது. கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இராஜாங்க அமைச்சர்கள் பதவிகள் தொடர்பாக பின்வரிசை உறுப்பினர்கள் கட்சித் தலைமைக்கு அழ…
-
- 2 replies
- 587 views
-
-
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு புதிய தீர்மானத்தை முன்வைப்பது இன்றியமையாதது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் By VISHNU 07 SEP, 2022 | 08:27 PM (நா.தனுஜா) இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானம் குறித்து இணையனுசரணை நாடுகளிடம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் மீதான கரிசனையை வெளிப்படுத்தவேண்டுமெனில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டுமென்ற விடயத்தை உள்ளடக்கிய புதிய தீர்மானத்தை முன்வைப்பது அ…
-
- 0 replies
- 164 views
- 1 follower
-
-
மாதாந்தம் 15 இலட்சம் குடும்பங்களுக்கு போஷாக்கு பொதியை வழங்க வேண்டும் - ராஜித்த சேனாரத்ன By DIGITAL DESK 5 07 SEP, 2022 | 08:42 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பிள்ளைகள் தாய்மாரின் மந்தபோசணை தொடர்பாக யுனிநெப் நிறுவனம் விடுத்திருக்கும் அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் தற்போது அதிகரித்துவரும் மந்தபோசணை நிலைமையை கட்டுப்படுத்த 15இலட்சம் குடும்பங்களுக்கு போஷாக்கு பொதி மாதாந்தம் வழங்கவேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்திருக்கின்றது. …
-
- 0 replies
- 106 views
- 1 follower
-
-
நாட்டில்... குற்றச்செயல்கள், மற்றும் போதைப்பொருள் கடத்தல்... அதிகரித்துள்ளது – பொலிஸ். நாட்டில் அண்மைக்காலமாக குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் திணைக்களத்தில் விசேட திறமைகளை வெளிப்படுத்திய அதிகாரிகள் குழுவிற்கான பாராட்டு நிகழ்வில் கலந்துகொண்ட போதே சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் பொலிஸாருக்கு சாதாரண பிரஜைகளின் கடமைகளில் ஈடுபடுவதற்கான நேரம் குறைக்கப்பட்டமையே இந்த நிலைக்கு முக்கிய காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், “சமீபகாலமாக சாதாரண பொலிஸ் கடமைகளில் ஈடுபடுவத…
-
- 0 replies
- 197 views
-
-
வாகரை ஆற்றில்... உயிரிழந்த நிலையில், கரையொதுங்கும் நீர்வாழ் உயிரினங்கள்! மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வட்டுவான் ஆற்றில் கடந்த இரண்டு நாட்களாக மீன்கள், இறால்கள், நண்டுகள் மற்றும் பாம்புகள் உள்ளிட்ட உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆற்றில் இறால் பண்ணையின் நச்சுத்தனைமை கொண்ட கழுவு நீர் கலப்பதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு நீதிவேண்டும் என்றும் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் க.கருணேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த ஆற்றில் உள்ள மீன்கள், நண்டுகள், பாம்புகள், உட்பட பல நீர்வாழ் உயிரினங்கள் கடந்த செவ்வாய்கிழமை காலை தொடக்கம் இரண்டு தினங்களாக உயிரிழந்த நிலையில் …
-
- 0 replies
- 156 views
-
-
தாங்க முடியாத.. கடன் சுமையில், இலங்கை உட்பட பல நாடுகள் – IMF இலங்கை உட்பட பல நாடுகளின் கடன் நிலைமை தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் உள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் Kristalina Georgieva தெரிவித்தார். நெதர்லாந்தில் இடம்பெற்ற ஆபிரிக்க உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அந்த நாடுகளுக்கு கடன் சுமை உருவாகி வருவதாகவும் தெரிவித்தார். 60 சதவீத ஏழை நாடுகள் கடனை அடைக்க முடியாத சூழ்நிலையில் இருப்பதால், பொருளாதாரச் செயற்பாடுகளை சாதாரணமாகச் சிந்திக்க முடியாமல் உள்ளன என்றும் கூறினார். கோவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்கள், இந்த பிரச்சனையை எதிர்கொள்ள, வலுவான வங்கி அமைப்பு மற்றும் நிலையான பொருளாதாரத்தின…
-
- 0 replies
- 238 views
-
-
சீனாவின், பங்களிப்பு இல்லாமல்... கடன் மறுசீரமைப்பு செய்யமுடியாது – ரொய்ட்டர்ஸ். சீனாவின் பங்களிப்பு இல்லாமல் நாட்டின் கடன் மறுசீரமைப்பு செயல்முறை கடினமாக இருக்கும் என்று ஜப்பானிய அரசாங்க அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டொலர்களை பெறுவதற்கு இலங்கைக்கு சவாலாக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது. ராய்ட்டர்ஸ் வெளியிட்ட தகவலின்படி, உலக நிதி மேலாளர்களால் இந்த நாட்டில் உள்ள சர்வதேச பத்திரங்களின் அளவு 20 பில்லியன் டொலர்களுக்கு அருகில் உள்ளது. இந்த நாட்டில் வெளிநாட்டுக் கடன் தொகை 85 மு…
-
- 0 replies
- 208 views
-
-
ஜெயராஜ் கொலையை திட்டமிட்டது கருணா, பிள்ளையான் – விமானப்படை அதிகாரி திடுக்கிடும் தகவல் முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலையின் பின்னணியில் ராஜபக்சாக்கள் உள்ளதாக முன்னாள் விமானப்படை அதிகாரியும் ஊடகவியலாளருமான கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த தாக்குதலை நடத்தியவர் நாட்டிலிருந்து தப்பிச் சென்று விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கருணா, பிள்ளையான் கும்பல் தாக்குதலை திட்டமிட்டது ராஜபக்சாக்களின் உத்தரவின் பேரில் கருணா மற்றும் பிள்ளையான் கும்பல் இந்த தாக்குதலை திட்டமிட்டு நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தெரிந்த போதிலும் பெர்னாண்டோபுள்ளேவின் பணத்தை காப்பாற்ற சுதர்ஷனி இதை பேசவில்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார். இணைய ந…
-
- 3 replies
- 374 views
-
-
போதைப் பொருளை வைத்திருந்தால்... மரண தண்டனை : சட்டங்களை கடுமையாக்க, தீர்மானம் ! 05 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தால் பிணை வழங்கப்படாது என்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருளை எதிர்த்துப் போராடுவதற்கான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை வலுப்படுத்த பொது பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி போதைப் பொருள் கட்டளைச் சட்டத்தில் இது தொடர்பில் தேவையான திருத்தங்கள் விரைவில் மேற்கொள்ளப்படும் என பொதுபாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1298079
-
- 7 replies
- 490 views
-