Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை பொறுப்பு ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க செயல்படுவார் - நாடாளுமன்ற சபாநாயகர் தகவல் இலங்கை பொறுப்பு ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க செயல்படுவார் என கோட்டாபய ராஜபக்ஷ தன்னிடம் கூறியதாக நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இலங்கை தலைநகர் கொழும்பில் ஜூலை 9ம் தேதி நடந்த போராட்டத்துக்குப் பிறகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று பதவி விலகத் தயார் என தெரிவித்த நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையின் அரசியலமைப்பின் 37வது சரத்தின் முதல் பிரிவின் கீழ் இந்த நியமனம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்ததாக இலங்கை அதிகாரிகள் கூறினார். பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள போராட்டங்களுக்கு மத்தியில…

  2. இலங்கையில் அவசரநிலை பிரகடனம் செய்த ரணில்: பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் 13 ஜூலை 2022, 07:44 GMT புதுப்பிக்கப்பட்டது 38 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையின் பிரதமர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முழுவதுமாக கைப்பற்றியுள்ளனர். பிரதமர் அலுவலகத்திற்குள் நுழைந்த மக்கள் மகிழ்ச்சியில் செல்ஃபி எடுத்து கொண்டனர். பின்னர் ரணில் மற்றும் கோட்டபய ராஜபக்ஷவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர் என்கிறார் கொழும்பில் உள்ள பிபிசி செய்தியாளர் டேசா வாங். இரண்டாம் மாடியில், பிரதமர் அலுவலகம் என்று எழுதி வைக்கப்பட்டிருந்த பலகைக்கு மேலே போராட்டக்காரர்கள் இலங்கையின் கொடியை ஏந்தி நின்றனர். போராட்டக்…

  3. கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மாலைதீவிலும் கடும் எதிர்ப்பு! ShanaJuly 13, 2022 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை மாலைதீவில் இருந்து வெளியேறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாலைதீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தைய்யிப் ஷாஹிம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். மாலைதீவில் கோட்டாபயவுக்கு புகலிடம் அல்லது அகதி அந்தஸ்து வழங்கக்கூடாது எனவும் அவர் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார். இலங்கையில் மக்கள் முன்னெடுத்துள்ள புரட்சிக்கு மாலைதீவு மக்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கோட்டாபயவை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்குமாறு தைய்யிப் கோரியுள்ளார். இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் இருந்து வெளியேறிய நிலையில் ம…

  4. ரணிலை பதவி விலக்குவதற்கும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் - சுமந்திரன் (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகியதை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகாவிடின் அவர் ஓரிரு நாட்களுக்காவது பதில் ஜனாதிபதியாக பதவி வகிப்பதை தவிர்க்க முடியாது. போராட்டகாரர்களின் அழுத்தம் வெற்றிப்பெற்றுள்ளது. ஆகவே இவ்விடயத்திலும் போராட்டகாரர்கள் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். காலி முகத்திடல் போராட்டகாரர்கள் தமது யோசனைகளை பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைக்கும் வகையில் 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு தேசிய புத்தகசாலையில் இடம்பெற்ற நி…

  5. அரசாங்க ஊழியர்களுக்கு... இந்த மாத சம்பளம், வழங்குவதில் சிக்கல்! அரசாங்க ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளம் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். சம்பளம் வழங்குவதற்கு பணம் அச்சிடப்பட வேண்டியிருப்பதாகவும், அதற்கு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் தற்பொழுது நிலவி வரும் சூழ்நிலையினால் அமைச்சரவைக் கூட்டமொன்றை நடத்தக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்குமா என்பது சந்தேகமே என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பிரச்சினைக்கு உடன் தீர்வு வழங்கப்பட வேண்டுமாயின் பதில் ஜனாதிபதி ஒருவரை நியமிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதில…

  6. ஜனாதிபதி கோட்டா மற்றும் பசில்... நாட்டில் இருந்து வெளியேற, நாம் உதவவில்லை – இந்தியா அறிக்கை. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இந்தியா உதவவில்லை என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. மேலும் இவர்கள் நாட்டை விட்டு வெளியேற இந்தியா உதவியது என வெளியாகிய செய்திகள் ஆதாரமற்றவை என கூறி இந்திய உயர்ஸ்தானிகராலயம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஜனநாயக வழிமுறைகள் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் இலங்கை மக்களுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராணுவ ஜெட் விமானத்தில் மாலைதீவ…

  7. கொழும்பு காலி முகத்திடல்... போராட்டக் களத்தில், மோதல் – நால்வர் வைத்தியசாலையில் அனுமதி! கொழும்பு காலி முகத்திடல் போராட்டக் களத்தில் இரண்டு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர். கொழும்பு -15ஐ சேர்ந்த... 15, 17 மற்றும் 20 வயதான இளைஞர்களும் வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவருமே இவ்வாறு காயமடைந்துள்ளனர். குறித்த நால்வரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 72ஆம் இலக்க வார்டில் சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2022/1291020

  8. ஜனாதிபதி பதவி விலகியவுடன்... புதிய ஜனாதிபதி பதவிக்கு, நானும் போட்டியிடுவேன் – சஜித் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதும் வெற்றிடமாக உள்ள ஜனாதிபதி பதவிக்கு தானும் போட்டியிட விரும்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஒரு வெற்றிடம் ஏற்பட்டால், ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட தயார் என பிபிசி இடம் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இதேவேளை சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தில் இணைந்து கொள்ள தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் 2019 ஆம் ஆண்டு இருந்த நிலைக்குத் திரும்ப ஏறக்குறைய ஐந்து ஆண்டுகள் எடுக்கும் என்றும் அவர் கூறினார். தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்க தன…

    • 1 reply
    • 282 views
  9. ஆளும் தரப்பின்... நாடாளுமன்ற குழு, மூன்றாக பிளவு பட்டுள்ளதாக தகவல்? பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற குழு மூன்றாக பிளவுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் பெரும்பாலான குழுவில் 40 இற்கும் மேற்பட்டவர்கள் டலஸ் அழகப்பெரும தலைமையில் முன்னணிக் குழுவாக இணைந்துள்ளனர். மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்சவுடன் இன்னுமொரு குழு செயற்படுவதுடன் இதில் சுமார் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும் இதில் சாகர காரியவசம், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ரோஹித அபேகுணவர்தன உட்பட்டோர் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த இரு குழுக்களைத் தவிர ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட மற்றுமொரு குழு தனியான குழுவாக செயற்படுவதாகவும் …

  10. முக்கிய இரகசியங்களை... வெளியிட்ட, ஜனக ரத்நாயக்கவை பதவி விலக்க முயற்சிக்கும் ஆளும் தரப்பு? பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பிலான யோசனை ஒன்று விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்யுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் ஆளும் கட்சி உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுப்பதாக கூறப்படுகின்றது. இந்தநிலையில் 113 பெரும்பான்மை உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கோரிக்கை கடிதம் ஒன்றினை நாடாளுமன்றத்தில் முன்வைக்குமாறு அவர்களிடம் …

  11. ஜனாதிபதியின்... பதவி விலகல் கடிதம், இதுவரை... கிடைக்கவில்லை என்கிறார் சபாநாயகர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(புதன்கிழமை) தமது பதவியிலிருந்து விலகுவதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவரதன அண்மையில் தெரிவித்திருந்தார். எனினும், ஜனாதிபதியின் பதவிவிலகல் தொடர்பான உத்தியோகபூர்வ கடிதம் இதுவரையில் தமக்கு கிடைக்கவில்லை சபாநாயகர் எனக் குறிப்பிட்டுள்ளார். தமது பதவியிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விலகினால், எதிர்வரும் 15ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது. ஜனாதிபதி பதவி வல…

  12. 13 ஆவது திருத்தச் சட்டம், முழுமையாக... அமுல்படுத்தப்பட வேண்டும் – ரணிலிடம் தெரிவித்தார் டக்ளஸ்! நாட்டை வழிநடத்துவதற்கான சந்தர்ப்பம் உருவாகும் பட்சத்தில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை கவனத்தில் கொண்டு, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துரைத்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைவரங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. …

  13. பசில் ராஜபக்சவை தொடர்ந்து கோத்தாவும் நாட்டை விட்டு ஓட்டம். கோத்தா இராணுவ விமானம் மூலம் நாட்டை விட்டு ஓடியதாக பிபிசி உறுதிப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளது. Sri Lanka's president Gotabaya Rajapaksa has fled the country, the BBC has confirmed, following mass protests over the island's economic crisis. His brother, former Finance Minister Basil Rajapaksa, has also left the crisis-hit country, sources have told the BBC. https://www.bbc.co.uk/news/world-asia-62132271

  14. இலங்கை கோட்டாபய ராஜபக்ஷ: மக்கள் மாளிகையான அதிபர் மாளிகை - 'எங்கள் பணத்தில் அவர் சொகுசாக இருந்திருக்கிறார்' எம். மணிகண்டன் பிபிசி தமிழ் 36 நிமிடங்களுக்கு முன்னர் பதவி விலகப் போவதாக அறிவித்திருக்கும் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது எங்கிருக்கிறார் என்று உறுதியாகத் தெரியவில்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலகத் தயார் என்று அறிவித்துவிட்டார். அனைத்துக் கட்சி அரசு அமையுமானால், அதற்கு வழிவிட்டு ஒட்டுமொத்தமாக ராஜிநாமா செய்யப் போவதாக அமைச்சர்களும் கூறியிருக்கிறார்கள். அதே நேரத்தில் சஜித் பிரேமதாச தலைமையில் புதிய அரசை அமைப்பதற்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கி…

  15. வன்னியில் பிரபாகரன் மகன் உள்பட்ட லடசக்கணக்கான மக்களுக்கு பேரவலத்தினை தந்த ஒரு மனிதனின் அவல நிலை குறித்து சரவதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் என்று அன்று இந்த படுபாவிக்கு புரிந்திருக்க வில்லை. சரி, யுத்தம், சண்டை தமிழர்கள் மரணம், ஓரளவுக்கு சரி என்பவர்கள் கூட, லசந்தா, பிரகதீப், தஜப்டீன் போன்றவர் கொலையில் இவரது நேரடி தொடர்பினால், இவர் சிறைக்கம்பிக்கு பின்னால் இருக்க வேண்டியவர் என்கிறார்கள்.. Sri Lanka's beleaguered President and 14 family members blocked from leaving country by airport staff, senior military source says https://www.cnn.com/2022/07/12/asia/sri-lanka-crisis-gotabaya-rajapaksa-airport-intl/index…

    • 1 reply
    • 715 views
  16. Published by Vishnu on 2022-07-12 19:44:10 (எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால், டபிள்யூ.டி.லக்ஷ்மன் மற்றும் நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் உயர் நீதிமன்றத்தின் முன் அனுமதி பெறாமல் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுத்து இடைக்கால உத்தர்வொன்றினை பிறப்பிக்குமாறு 12 ஆம் திகதி நகர்த்தல் பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி உபேந்ர குணசேகர இந்த நகர்த்தல் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். நாட்டின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்திற்கும், சீரற்ற நிதி நிர்வாகத்திற்கும் காரணமானவர்களுக்கு எதிராக சட்டந…

  17. R.Maheshwary / 2022 ஜூலை 12 , பி.ப. 06:59 - 0 - 0 FacebookTwitterWhatsApp 30 வருடகாலமாக அதிகார பேராசைக்காக காத்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகுவார் என்பதை எதிர்பார்க்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். காலி முகத்திடல் போராட்டக்காரர்களுடன் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “விசேடமாக போராட்டகாரர்கள் முன்வைத்துள்ள யோசனையில் முதலாம்,(கோட்டபய ராஜபக்ஷ ப…

  18. Published by Rajeeban on 2022-07-12 16:54:49 ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இலங்கை விமானநிலையத்திலகுடிவரவு துறை அதிகாரிகளுடன் ஏற்பட்ட அவமானத்திற்கு பின்னர் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு கடற்படையின் ரோந்து படகினை பயன்படுத்துவது குறித்து ஆராய்கின்றார் என அதிகாரபூர்வ வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது. சனிக்கிழமை ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து தப்புவதற்காக ராஜபக்சாக்கள் அவசரமாக ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறியதால் பசில் ராஜபக்ச அங்கு தனது கடவுச்சீட்டை வைத்துவிட்டு வெளியேறிவிட்டார்இதன் காரணமாக அவர் புதிய அமெரிக்க கடவுச்சீட்டை பெறவேண்டிய நிலையேற்பட்டது என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன ஒரு சூட்கேஸ் முழு…

  19. இலங்கையின் ஏஎன்32 விமானம் ஜனாதிபதியுடன் இந்திய விமானநிலையத்தில் இறங்குவதற்கு விடுத்தவேண்டுகோளை இந்தியா மறுத்துள்ளது -- DINESHA DILRUKSHI WIJESURIYA, AMAL JAYASINGHE SBS இலங்கை ஜனாதிபதியும் அவரது குடும்பத்தவர்கள் நண்பர்கள் உட்பட 15பேரும் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் நடைமுறை சிக்கல்கள் காரணமாக தோல்வியடைந்துள்ளன என விமானப்படையின் உயர்மட்ட வட்டாரங்கள் எஸ்பிஎஸ் சிங்களசேவைக்கு தெரிவித்துள்ளன. 9ம் திகதி ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறிய பின்னர் திருகோணமலைகடற்படை தளத்தில் தஞ்சம் அடைந்த பின்னர் அவர் திருகோணமலையிலிருந்து இரத்மலானை விமானநிலையத்திற்கு திங்கட்கிழமை இரண்டு பெல்412 ஹெலிக்கொப்டர்களில் சென்றார். அவர் முப்படை தள…

  20. மஹிந்த, பசில், கப்ரால் உள்ளிட்ட... பலர் நாட்டைவிட்டு தப்பி ஓட, தடைகோரி மனுதாக்கல். மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட பலர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ தமது உத்தியோகபூர்வ கடமைகளை எங்கு செய்கின்றார்கள் என்பது பொது மக்களுக்கு தெரிவதில்லை என மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர். பிரதிவாதிகள் நாட்டை விட்டு வெளியேறலாம் என்றும், அதன் மூலம் மனுதாரர்கள் கோரும் தகவல்களை வழங்குவதைத் தவிர்க்கலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். https://athavannews.com/2022/1290936

  21. சட்டவிரோதமாக... தப்பிச் செல்ல முற்பட்ட 55 பேர், அனர்த்தத்தில் இருந்து மீட்பு. சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு தப்பிச் சென்ற குழுவினரை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று ஆழ்கடலில் தத்தளித்த நிலையில் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. 55 பேர் அந்தக் கப்பலில் இருந்ததாகவும் குறித்த கப்பல் இன்று காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த கப்பல் விபத்துக்குள்ளானதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் கடற்படையினருக்கு அறிவித்ததையடுத்து, கடற்படையின் பராக்கிரமபாகு கப்பல் நேற்று அந்த இடத்தை சென்றடைந்தது. அந்த நேரத்தில் நாட்டின் தென்கிழக்கே 722 கிலோமீற்றர் தொலைவில் குறித்த கப்பல் சூறாவளியால் தாக்கப்பட்டு ந…

  22. 225 பேரையும் மக்கள் நிராகரித்தால் யார் ஜனாதிபதி…! சிரேஸ்ட சட்டத்தரணியின் தகவல் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் 225 பேரையும் மக்கள் நிராகரித்தால் வெளியே உள்ள ஒருவரை ஜனாதிபதியாக நியமிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான கலாநிதி பிரதிபா மஹானாமஹேவா இதனைத் தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி நியமனம் பதவிக் காலம் இருக்கும் போதே ஜனாதிபதி பதவி விலகினால் நாடு அராஜக நிலைக்கு தள்ளப்படுவதனை தவிர்க்க தேர்தல் நடைபெறும் வரையில் அரசியல் அமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி ஒருவரை நியமிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் ஒருவரை இரகசிய வாக…

  23. “சிங்கள மக்களின் கோபத்துக்கான காரணங்களும், தமிழ்மக்களின் கோபத்துக்கான காரணங்களும் வேறானவை” போராட்டக்காரர்கள் அறிவிப்பில், சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடிக்கு காரணிகளில் ஒன்றாக இராணுவச் செலவினங்கள் குறைப்பு பற்றியோ, தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவம் விலக்கப்பட வேண்டும் பற்றியோ பேசவில்லை” ….. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்…. சிறிலங்காவின் ஆட்சிக்கதிரையில் இருந்த இராஜபக்ச தரப்பினருக்கு எதிரான சிங்கள மக்களின் கோபத்துக்கான காரணங்களும், தமிழ்மக்களின் கோபத்துக்கான காரணங்களும் வேறானவை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடி மக்களின் வாழ்வாதார பிரச்சனையாக மாறியநிலையில்…

  24. கட்சியில் இருந்து விலகிய எவரும் மீண்டும் கட்சியில் இணைத்து கொள்ளப் பட மாட்டார்கள் – ஐக்கிய மக்கள் சக்தி ஐக்கிய மக்கள் சக்தி என்பது சலூன் கதவு போலல்ல, கட்சியில் இருந்து விலகிய எவரும் மீண்டும் கட்சியில் இணைத்து கொள்ளப் பட மாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ளப்படுவார்களா என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே ரஞ்சித் மத்தும பண்டார இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கட்சி தீர்மானத்தை மீறி அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட ஹரீன் பெர்ணான்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகிய…

  25. ”அரசியல் நெருக்கடி நாட்டை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும்”: மத்திய வங்கி ஆளுநர் நாட்டில் தற்போது நிலவும் அரசியல் ஸ்திரமின்மை நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இதனால் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை தடைப்படலாம் எனவும் அவர் கூறியுள்ளார். இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை இலங்கை கோரியுள்ளதுடன், அதிகாரிகளும் ஐஎம்எப் பிரதிநிதிகளும் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ராய்ட்டர்ஸ் உடனான ஒரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.