ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
யாழ். காரைநகரில் கடற்படையினருக்கான காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தம் ! யாழ்ப்பாணம், காரைநகரில் கடற்படை முகாம் அமைப்பதற்காக பொதுமக்களின் காணியை சுவீகரிக்கும் முயற்சி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. காரைநகர் ஜே/145 கிராம சேவையாளர் பிரிவில் நீலன்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணியை கடற்படை முகாம் அமைக்கவென அளவீடு செய்யும் முயற்சி 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அதனை அடுத்து அங்கு கூடிய மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் எதிர்ப்பினால் காணி அளவீட்டு பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/130384
-
- 0 replies
- 129 views
-
-
இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் பாரப்படுத்தும் முயற்சிகளிற்கு பாதுகாப்பு சபை ஆதரவளிக்காது - பிரிட்டன் பிரிட்டனின் பொதுநலவாய வெளிவிவகார சர்வதேச அபிவிருத்தி அமைச்சிற்கு இலங்கை மனித உரிமை முன்னுரிமை நாடுகளில் ஒன்று என தெரிவித்துள்ள பிரிட்டிஸ் அமைச்சர் விக்கிபோர்ட் இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் பாரப்படுத்தும் முயற்சிக்கு ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் ஆதரவு கிடைக்காது என மதிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தொழில்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் மோர்கன் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் பிரிட்டனின் பொதுநலவாய வெளிவிவகார சர்வதேச அபிவிருத்தி இணையமைச்சர…
-
- 1 reply
- 200 views
-
-
மூன்று பகுதிகளால் வாகரைப் பிரதேச செயலக நிலங்களைப் பிரித்தெடுக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன - ஜனா By Shana வாகரைப் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட நிலங்களை மூன்று பகுதிகளால் பிரித்தெடுக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இதற்கு எதிராக தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்ற மாவட்டத்தின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருமித்துச் செயற்பட வேண்டும். அரசுடன் இணைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் எடுக்கும் நடவடிக்கைக்கு பூரண ஆதரவு வழங்கத் தயார் என பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார். வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தோணிதாண்டமடு பிரதேசத்தின் ஒரு …
-
- 0 replies
- 298 views
-
-
வெளிநாடுகளுக்கு... அனுப்பப்பட்ட, இலங்கை இளைஞர்களின் பரிதாப நிலை! நாட்டில் நிலவும் கடும் பொருளாதார, அரசியல் நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டு, தொழில் தேடி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு சுற்றுலா விசாவில் சென்ற இளைஞர், யுவதிகள் பலர் தொழில் வாய்ப்பின்றி அனாதரவான நிலைமையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தொழில் வாய்ப்பை இலகுவாக தேடிக்கொள்ளக் கூடிய வெளிநாடு ஐக்கிய அரபு இராஜ்ஜியம் என்று எண்ணும் இளைஞர், யுவதிகள் அந்நாட்டை நோக்கி செல்கின்றனர். இப்படி சென்ற பலர் பல மாதங்களாக தொழில் வாய்ப்பு கிடைக்காது பிச்சை எடுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தொழில் கிடைக்காது, அல்லல் படும் இளைஞர்கள். ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் அபுதாப…
-
- 3 replies
- 301 views
-
-
வழமை போன்று... அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், எரிபொருளை விநியோகம் செய்வதாக... அறிவித்தது Lanka IOC! எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.பெர்னாண்டோ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். டோக்கன் பெற்ற போதிலும், மறு அறிவித்தல் வரும் வரை எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் அவர் பொதுமக்களிடம் கோரியுள்ளார். மேலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் இருப்பு கிடைத்தவுடன், டோக்கன் வைத்திருப்பவர்களுக்கு அதன் இருப்பு குறித்து தெரியப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, எரிபொருள் நிலையங்களுக்கான எரிபொரு…
-
- 0 replies
- 244 views
-
-
நாட்டில்... அரிசி தட்டுப்பாடு, ஏற்படாது... என அறிவிப்பு! நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என வர்த்தகம், வணிகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 25ஆம் திகதி வரை 47 ஆயிரம் மெட்ரிக்தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ்.டி.கொடிகார தெரிவித்துள்ளார். இந்திய கடன் திட்டத்தின் கீழ் நாடு, சம்பா, வெள்ளை அரிசி உள்ளிட்ட 25 ஆயிரம் மெட்ரிக்தொன் அரிசி இந்த மாதத்தில் மாத்திரம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் நெருக்கடி காரணமாக அரிசி விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2022/128…
-
- 2 replies
- 258 views
-
-
பிறப்பு, திருமணம், இறப்பு... மற்றும் காணிச் சான்றிதழ்களை, வழங்கும் நடவடிக்கை மட்டுப் படுத்தப்பட்டது! பிறப்பு, திருமணம், இறப்பு மற்றும் காணிச் சான்றிதழ்களை வழங்குவதை பதிவாளர் நாயகம் திணைக்களம் வாரத்திற்கு இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்தியுள்ளது. அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட பதிவாளர் பிரிவுகளினால் வழங்கப்படும் சேவைகள் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் மட்டுமே வழங்கப்படும் என பதிவாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சேவைகள் காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், திணைக்களத்தின் பத்தரமுல்ல, குருநாகல், கண்டி, மாத்தறை ஆகிய பிரதேச செயலகங்களின் மாவட்ட …
-
- 0 replies
- 134 views
-
-
முல்லைத்தீவு, விசுவமடு... பகுதிக்கு, ஜப்பானிய தூதுவர் விஜயம்! முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடுபகுதியில் அமைந்துள்ள பனை தென்னை கூட்டுறவு சங்கத்தின் தலைமைக் காரியலயத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) ஜப்பானிய தூதுவர் விஜயம் மேற்கொண்டிருந்தார். இலங்கை மற்றும் ஜப்பான் நாடுகளின் கூட்டுறவுவின் அடையாளமாக ஜப்பான் அரசின் நிதிப்பங்களிப்பில் நன்கோடையாக வழங்கப்பட்ட தேங்காய் எண்ணை சுத்திகரிப்பு நிலையத்திற்கு இயந்திரம் ஒன்று 2 மில்லியன் ரூபா பெறுமதியில் கடந்த 2021 ஆண்டு வழங்கிப்பட்டது. அதன் பயன்பாட்டை பார்வையிடுவதற்காக ஜப்பான் நாட்டு தூதுவர் இன்றையதினம் நேரில் சென்றிருந்தார். https://athavannews.com/2022/1288841
-
- 2 replies
- 229 views
-
-
இலங்கை: வடபகுதியை அதானி குழுமத்துக்கு விற்பனை செய்ய சதி.. ஈழத் தமிழ் மீனவர்கள் பகிரங்க குற்றச்சாட்டு யாழ்ப்பாணம்: இலங்கையின் வடக்குப் பகுதியை இந்தியாவின் அதானி குழுமத்துக்கு விற்பனை செய்ய சதி நடப்பதாக ஈழத் தமிழர்களின் மன்னார் மாவட்ட மீனவ சங்க தலைவர் முகமது ஆலம் குற்றம்சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று செய்தியாளர்களிடம் முகமது ஆலம் கூறியதாவது: இலங்கையில் மீனவர்களுக்கு டீசல் கிடைக்கவில்லை. மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் திட்டம் அமைப்பது தொடர்பாக இந்திய குழு ஒன்று ஆய்வு செய்துவிட்டு திரும்பி உள்ளது. இலங்கைக்கான எரிபொருட்களை இந்தியா வழங்கக் கூடிய நிலையில் இல்லை. ஆனால் இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தும் வகையில் இந…
-
- 1 reply
- 230 views
-
-
இலங்கையில் எரிபொருள் நெருக்கடி: பொதுமக்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யத் தடை; அத்தியாவசிய சேவைக்கு மட்டும் விலக்கு 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்க அரசாங்கம் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்களுக்கு எரிபொருள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, போக்குவரத்து, சுகாதாரம், விமான சேவைகள், ரயில், துறைமுகம், முப்படையினர் ஆகிய அடையாளம் காணப்பட்ட சில பிரிவினர் மாத்திரம், அத்தியாவசிய சேவையில் வகைப்படுத்தப்ப…
-
- 1 reply
- 220 views
- 1 follower
-
-
யாழில் சிறுமி கடத்தல் விவகாரம் ; இருவர் கைது யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டதாக உறவினர்களால் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் இரு இளைஞர்களை கைது செய்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்.நகர் பகுதியை அண்மித்த பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.நகர் பகுதியில் வைத்து கடத்தப்பட்டதாக உறவினர்களால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை குறித்த சிறுமி, கிளிநொச்சி பகுதியில் வைத்து கிளிநொச்சி பொலிஸாரினால் மீட்கப்பட்டு , கிளிநொச்சி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேவேளை தமது முறைப்பாட…
-
- 0 replies
- 405 views
-
-
இலங்கையின்... ஏற்றுமதி பொருட்களின் விற்பனைக்கு, உதவ தீர்மானித்தது சீனா! சீனாவில் விற்பனை காட்சியகங்களை நிறுவி இலங்கை ஏற்றுமதி பொருட்களின் விற்பனைக்கு உதவ சீனா முன்வந்துள்ளது. சீனாவின் யுவான், சிச்சுவான், பீஜிங் ஆகிய மாகாணங்களில் இலங்கை ஏற்றுமதி பொருட்களுக்கான காட்சியகங்களை நிறுவுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள், இலங்கைத் தூதுவர் கலாநிதி பாலித கொஹோனாவிடம் உறுதியளித்துள்ளனர். இந்த விற்பனை காட்சியகங்களை நடத்துவதற்கான செலவை சீனாவின் அந்தந்த மாகாணங்கள் ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தனது தயாரிப்புகளுக்கான சீன சந்தையை அணுகுவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என சீனாவிற்கான இலங்கை தூதுவர் கலாநிதி பால…
-
- 1 reply
- 222 views
-
-
இலங்கைக்கு தேவையான... அனைத்து உதவிகளையும் செய்வதாக, மீண்டும் உறுதியளித்தது இந்தியா! இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மற்றும் இந்திய பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சருக்கு இடையில் பெற்றோலியம் மற்றும் எரிசக்தி துறையில் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பிலான பல அவசர விடயங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. புதுடில்லியில் உள்ள வீடமைப்பு மற்றும் நகர விவகார அமைச்சில் நேற்று(திங்கட்கிழமை) மிலிந்த மொரகொட மற்றும் ஹர்தீப் சிங் பூரி ஆகியோருக்கு இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெற்றோலிய உற்பத்தி, விநியோகம் மற்றும் விநியோகத்தில் இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய சவால்கள் மற்றும் சிரமங்கள் குறித்து உயர்ஸ்…
-
- 15 replies
- 1.1k views
-
-
யாழில்... தனது பிரத்தியேகப் பணத்தை, முதலீடு செய்து... "ஒருநாள் கடவுச்சீட்டு" சேவையை, ஆரம்பிக்கின்றார் தம்மிக்க பெரேரா. கடவுச்சீட்டு ஒருநாள் சேவை துரிதப்படுத்தப்படும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். இதற்காக யாழ்ப்பாணம், கண்டி, மாத்தறை ஆகிய பிராந்திய அலுவலகங்களிலும் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்முதல் கட்டமாக, யாழ்ப்பாணத்தில் உள்ள குடிவரவு, குடியகல்வு அலுவலகத்தில் தனது பிரத்தியேகப் பணத்தை முதலீடு செய்து ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா குறிப்பிட்டுள்ளார். தற்போது கடவ…
-
- 8 replies
- 602 views
- 1 follower
-
-
மின் கட்டண திருத்தம், தொடர்பான பரிந்துரைகள்... வெளியாகின! மின் கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கமைய 0 முதல் 30 அலகுகள் வரையிலான வீட்டு மின்சார உபயோகத்திற்கான தற்போதைய மாதாந்த நிலையான கட்டணத்தை 150 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கு இலங்கை மின்சார சபை 430 ரூபாயினை முன்மொழிந்திருந்தது. அத்துடன், 1 தொடக்கம் 30 அலகுகளுக்கு இடைப்பட்ட மின்சார அலகு ஒன்றின் கட்டணத்தை 2 ரூபா 50 சதங்களாலும் அதிகரிப்பதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது. இதேவேளை, 31 தொடக்கம் 60 அலகுகளுக்கு இடைப்பட்ட நிலையான கட்டணத்தை ஆயிரத்து 100 ரூபாவினால் அதிகரிக்க இலங்கை மின்சார சபை மு…
-
- 0 replies
- 172 views
-
-
நாட்டில்... தற்போது போதியளவு மருந்து, கையிருப்பு இல்லை – அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை! நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள் காரணமாக மக்கள் இந்த நேரத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக குழு உறுப்பினர் வைத்தியர் பிரசன்ன கொலம்பகே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், மக்கள் இந்த நேரத்தில் இயலுமான வரை பாதுகாப்பாக இருப்பது முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது நாட்டில் போதியளவு மருந்து கையிருப்பு இல்லை என்று தெர…
-
- 3 replies
- 303 views
-
-
எரிபொருள் விநியோகம் குறித்து அரசாங்கம் வெளியிட்ட பொய்யான தகவல்களே நெருக்கடிக்குக் காரணம் - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (நா.தனுஜா) எரிபொருள் தட்டுப்பாடானது உணவுற்பத்தி மற்றும் விநியோகம் உள்ளடங்கலாக பொருளாதாரத்தின் அனைத்துக் கூறுகள்மீதும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், எரிபொருள் விநியோகம் தொடர்பில் உண்மையான தகவல்களை வெளியிடுவதைவிடுத்து அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய பொய்யான நம்பிக்கை பாரிய பின்விளைவுகளைத் தோற்றுவித்திருப்பதாகவும் கடுமையாச் சாடியுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் மிகக்குறுகிய காலத்தில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்குரிய திட்டங்கள், எரிபொருள் நெருக்கடியிலி…
-
- 1 reply
- 242 views
-
-
நாட்டை... முடக்க, தயாராகின்றது அரசாங்கம்? – அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! எதிர்வரும் ஜூலை 10ஆம் திகதிக்குப் பின்னர் எரிபொருள் மற்றும் எரிவாயு கிடைக்கும் எனவும் நாடு இயல்பு நிலைக்குத் திரும்பும் எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(திங்கட்கிழமை) இரவு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இது நாட்டை முடக்கும் நிலை அல்ல எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த காலகட்டத்தில் மக்களின் ஆதரவு தேவை எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். எந்த நேரத்திலும் முழுமையாக முடங்கும் அபாயத்தில் இலங்கை? இன்று ந…
-
- 4 replies
- 346 views
- 1 follower
-
-
"சாப்பிட எதுவுமில்லை, கடல் நீரை குடித்தோம்" - தனுஷ்கோடியில் இலங்கை தம்பதி கண்ணீர் பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் மயங்கிய நிலையில் இலங்கை வயோதிக தம்பதி இலங்கையில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமாக தனுஷ்கோடி கடற்கரைக்கு வந்து மயங்கிய நிலையில் கடந்த வயோதிக தம்பதியை தமிழ்நாடு மரைன் போலீஸார் மீட்டுள்ளனர். சொந்த நாட்டில் வாழ வழியின்றி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். இலங்கையில் நீடித்து வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர…
-
- 1 reply
- 348 views
- 1 follower
-
-
ஜனாதிபதியை சந்தித்த அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் குழு அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள மற்றும் அமெரிக்க திறைச்சேறி திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு குறித்த குழுவினர் நேற்று காலை இலங்கையை வந்தடைந்திருந்தனர். இன்று காலை அவர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://tamil.adaderana.lk/news.php?nid=162793 அமெரிக்க திறைசேரி, இராஜாங்க திணைக்களத்தின் உயர்மட்ட குழு ஜனாதிபதியை சந்திப்பு! …
-
- 1 reply
- 407 views
- 1 follower
-
-
எரிபொருள் நெருக்கடி குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக அமைச்சர் இருவர் இன்று ரஷ்யா விஜயம் (எம்.மனோசித்ரா) எரிபொருள் இறக்குமதியில் எரிநோக்கியுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று திங்கட்கிழமை இரு அமைச்சர்கள் ரஷ்யா செல்லவுள்ளனர். அத்தோடு இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு கட்டார் ஜனாதிபதியிடமிருந்தும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இதே வேளை நீண்ட நாட்களாக எரிபொருள் வரிசைகளில் காத்திருப்பவர்களுக்கு முறையாக எரிபொருளை விநியோகிப்பதற்காக இன்று திங்கட்கிழமை முதல் இராணுவம் உட்பட பாதுகாப்புபடையினர் ஊடாக டோக்கன்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் , இனிவரும் வர…
-
- 11 replies
- 768 views
-
-
அதிக பணவீக்கம் பதிவாகிய... நாடுகளின் பட்டியலில், இலங்கைக்கு... இரண்டாவது இடம் ! அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஸ்டீவ் ஹான்கி, அதிக பணவீக்கம் பதிவாகிய நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளார். பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கேயின் மதிப்பீட்டின்படி, உலகில் வருடமொன்றுக்கு அதிக பணவீக்கம் விகிதம் பதிவாகிய நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. அறிக்கையின்படி, சிம்பாப்வே முதலிடத்தில் இருக்கும் அதேவேளை, துருக்கி இலங்கைக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்திலும் லெபனான் 4 ஆவது இடத்திலும் உள்ளது. https://athavannews.com/2022/1288651
-
- 2 replies
- 275 views
- 1 follower
-
-
எரிபொருள் நிரப்பு நிலையங்களை... வேறு நிறுவனங்களுக்கு வழங்க, அரசாங்கம் தீர்மானம் ! இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை வேறு நிறுவனங்களுக்கு வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் நாளை (27) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், 1,690 நிரப்பு நிலையங்கள் கூட்டுத்தாபனத்திடம் உள்ளதாகவும் அவற்றை வேறு நிறுவனங்களுக்கு மாற்ற முன்மொழிந்துள்ளதாகவும் கூறினார். அத்தோடு அவ்வாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களை பெற்றுக்கொள்பவர்களுக்கு நிபந்தனைகள் முன்வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். கட…
-
- 0 replies
- 199 views
-
-
பிரதமருக்கு ஆதரவாக இருந்தால்... சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து, சாதகமான பதில் கிடைக்கும் என... ரணில் தரப்பு நம்பிக்கை ! சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக 6 பில்லியன் டொலர்களை சர்வதேச நாணய நித்தியத்திடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார். மேலும் ரூபாயை நிலைப்படுத்த மேலும் ஒரு பில்லியன் டொலரையும் அவர் கோரியுள்ள நிலையில் இதற்கு சாதகமான பதில் கிடைக்க வாய்ப்புள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என விரும்புவோர் பிரதமருக்கு ஆதரவாக இருந்தால், சாதகமான முடிவு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். ச…
-
- 0 replies
- 212 views
-
-
நாட்டை... பொறுப்பேற்கத் தயார் – சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவும்: சஜித். புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு உடனடியாக சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய புதிய கொள்கைகளின் கீழ் நாட்டைப் பொறுப்பேற்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை சந்திக்க வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றபோதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இந்த நாட்டை அழிக்கும் அரசாங்கத்தை ஜனநாயக ரீதியில் அகற்றுவதற்கான தேசிய பிரசாரத்தை …
-
- 4 replies
- 270 views
-