ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
80 சதவீதத்திற்கும் அதிகமான... இலங்கையர்கள், மலிவான உணவை... உட்கொள்கின்றனர் – ஐ.நா. இலங்கையில் உள்ள குடும்பங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் குறைந்த அல்லது மலிவான உணவை உண்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உலக உணவுத் திட்டத்தின் மாதாந்த அறிக்கையில் இது ஊட்டச்சத்து குறைபாட்டின் அபாயத்தை உயர்த்தியுள்ளதைக் காட்டுவதாக அந்த சபை மேலும் கூறியுள்ளது. தொடர்ச்சியாக இரண்டு பருவங்களில் இருந்து நெல் அறுவடை குறைவதால் உணவுப் பாதுகாப்பின்மை அதிகரிக்கும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் விலை 20 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் வழங்கல் பற்றாக்குறை மற்றும் அதிக உற்பத்திச் செலவு காரணமாக உள்ளூர் அரிசி வகைகளின் விலை 6வீதம் அதிகரித்…
-
- 9 replies
- 429 views
-
-
‘பசில் பசில் பசில்’ என்ற, கோசம்தான்... இப்போது, எனது ரிங்டோன் – பசில்! நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்களால் தமக்கு பயன்படுத்தப்பட்ட பிரபலமான கோஷம் குறித்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று நகைச்சுவையாகப் பேசியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் பசில் ராஜபக்ஷ ஆங்கில ஊடகமொன்றுக்கு முன்னதாக வழங்கிய நேர்காணல் ஒன்றில், காகங்களை சிங்கள மொழியில் ‘கபுடாஸ்’ என்று குறிப்பிட்டதை அடுத்து இந்த கோஷம் உருவானது. காலி முகத்திடலில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் சிங்கள வார்த்தையையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷவின் பெயரையும் இணைத்து கோஷம் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் …
-
- 0 replies
- 283 views
-
-
புதிய அரசியல் திருத்தம் ஊடாக... பறிக்கப்பட்ட அதிகாரங்களை, கொடுக்க வேண்டும் – சுரேஸ் புதிய அரசியல் திருத்தம் ஊடாக நாடாளுமன்றம் மாகாணசபை, உள்ளூராட்சிகளிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களை கொடுக்க வேண்டும். இதுவே நாட்டினை பொருளாதார ரீதியிலும் ஐனநாயக ரீதியிலும் முன்னேற்ற பயன்படுமென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ”தற்போது 21 வது திருத்தம் தொடர்பில் பேசப்படுகின்றது இந்த 21வது திருத்தம் என்பது 19ஆம் திருத்தத்தின் ஒத்த ஒன்றே. ஆனால் அதனை முழுமையாக 19ஆம் த…
-
- 1 reply
- 270 views
-
-
ரஷ்யா... 35% தள்ளுபடி விலையில், எரிபொருளை வழங்க... முன்வரவில்லை: மின்சக்தி அமைச்சர் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுவது போன்று 35% தள்ளுபடியுடன் இலங்கைக்கு எரிபொருளை வழங்க ரஷ்யா முன்வரவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். தாம் ரஷ்ய தூதுவரை சந்தித்து இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடியதாகவும் அவ்வாறானதொரு பிரேரணையை தாம் ஒருபோதும் முன்வைக்கவில்லை என அவர் தெரிவித்ததாகவும் அவர் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 35% சலுகை விலையில் எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யா முன்வந்த போதிலும் ரஷ்யாவிடம் இருந்து ஏன் எரிபொருளை கொள்வனவு செய்யவில்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார எழுப்…
-
- 0 replies
- 165 views
-
-
இளைஞர்களின், கனவை கலைத்து விட்டு.. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, புதிய வீடு எதற்கு – சாணக்கியன் கேள்வி மாதாந்தம் 50 ஆயிரம் சம்பளம் பெறும் பட்டதாரி இளைஞர்களின் வீடு கட்டும் கனவை கலைத்துவிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வீடு எதற்கு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘வடக்கு கிழக்கினை பொறுத்தவரையில் 30 வருட யுத்தம் காரணமாக வீடுகளை இழந்து, வீடுகள் இல்லாமல் ஆக்கப்பட்டு, அழிக்கப்பட்டுள்ள ஒரு பிரதேசம். அந்த வகையிலேயே கடந்த நல்லாட…
-
- 0 replies
- 713 views
-
-
இலங்கை மின்சார சபையின்... பொறியியலாளர்கள் சங்கத்தினருக்கு, 14 நாட்கள் தடையுத்தரவு இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அணில் ரஞ்சித் இந்துவர, செயலாளர் தம்மிக்க விமலரத்ன ஆகியோர், எதிர்வரும் 14 நாட்களுக்கு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் மின்சார விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டது. எனினும், இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் பல்வேறு விடயங்களை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தது. எனின…
-
- 0 replies
- 249 views
-
-
நாடாளுமன்ற அரசியலில், ஆர்வம் இல்லை – பதவி விலகல் குறித்து பசில்? ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ இன்று (வியாழக்கிழமை) தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள அவர், தற்போதைய நிலவரத்தை கருத்திற்கொண்டு இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து அவர் விளக்கமளிக்க மறுத்துவிட்டதாகவும் எவ்வாறிருப்பினும் அரசியலில் தொடர்ந்தும் இருப்பேன் என்றும் கூறியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நாடாளுமன்ற அரசியலில் தனக்கு ஆர்வம் இல்லை என்று அவர் மீண்டும் வலியுறுத்தியதாகவும் அந்தச் செய்தி…
-
- 2 replies
- 227 views
-
-
சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவிற்குள் பிரவேசிக்க முற்பட்ட 15 இலங்கையர்கள் இன்று காலை நாடு கடத்தப்பட்டனர் சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவிற்குள் பிரவேசிக்க முற்பட்ட 15 இலங்கையர்கள் அவுஸ்ரேலிய பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டு இன்று வியாழக்கிழமை காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.அதன்படி, இன்று அதிகாலை 4.40 மணியளவில் அவுஸ்ரேலிய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் இந்த குழுவினர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இதேவேளை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் …
-
- 2 replies
- 396 views
- 1 follower
-
-
பிரதமர் பதவியை... இராஜினாமா செய்த பின்னர், மஹிந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை – நாமல் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, எந்த அமைச்சரவைக் கூட்டங்களிலும் அவர் கலந்து கொள்ளவில்லை என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். திங்கட்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில். இந்த விடயம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள நாமல், அமைச்சரவைக் கூட்டங்களில் அவர் கலந்துகொள்ளவில்லை என்றும் அவ்வாறு அவர் கலந்துகொள்வார் என்று தான் நம்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் எப்போதும் நாட…
-
- 0 replies
- 139 views
-
-
21வது திருத்தம் போன்ற விடயங்கள்... ஜூலை மாதத்திற்குள், நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் – சம்பிக்க ரணவக்க பொருளாதார ரீதியில் தான் முன்வைக்கும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் ஆர்வமாக இருந்தால், அதில் இணைந்து செயற்பட முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கட்சியில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படவுள்ளதாக நேற்று அவர் அறிவித்திருந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். 21வது திருத்தம் போன்ற விடயங்கள் எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். தற்போது நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் ஓயவில்லை என்பதைய…
-
- 0 replies
- 270 views
-
-
தொழிற் சங்க நடவடிக்கை காரணமாக... நீர் மின் உற்பத்திக்கு, பாதிப்பு! நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் முழுமையான பங்களிப்பு தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நீர்மின் உற்பத்தி சிலவற்றின் தொழிற்பாடுகள் செயலிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். லக்ஷபான, நவலக்ஷபான, பொல்பிட்டிய, விமலசுரேந்திர மற்றும் கெனியோன் ஆகிய 5 நீர்மின் நிலையங்களின் மின் உற்பத்தி நடவடிக்கைகளே இவ்வாறு தற்காலிகமாக செயலிழந்துள்ளன. இதன்காரணமாக குறித்த நீர்மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து கிடைக்க பெறும் 300 மெகாவொட் மின்சாரம் தேசிய மின்…
-
- 0 replies
- 293 views
-
-
மின்சாரம் தடைப்பட்டமையை... நாச வேலையாகவே, கருத முடியும் – PUCSL தலைவர் நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிகாலை மின்சாரம் தடைப்பட்டமை, நாசவேலையாகவே கருத முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தமது சிறப்புரிமைகளை தவறாகப் பயன்படுத்துகின்றன என்றும் அவர் சாடியுள்ளார். பொது மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தாத வகையில் தொழிற்சங்கங்கள் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையிலும் அல்லது வேலைநிறுத்தத்திலும் ஈடுபடுவதற்கு சுதந்திரம் உள்ளதாக அவர் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்தார். நிலைமை சரியான நேரத்தில் சீராகும் வரை பொதுமக்கள் மற்றும் மின்சார நுகர்வோர் அமைதியாக இருக்க வேண்டும…
-
- 0 replies
- 124 views
-
-
பசில் ராஜபக்சவின் மனைவி... புஷ்பா ராஜபக்ச, அமெரிக்கா பயணம். முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவி இன்று (வியாழக்கிழமை ) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டுபாய் ஊடாக அமெரிக்கா சென்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாலை 3.15 மணியளவில் எமிரேட்ஸ் விமான மூலம் டுபாய் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய் சென்றுள்ளதாகவும் அங்கிருந்து அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன. https://athavannews.com/2022/1286172
-
- 0 replies
- 99 views
-
-
மின்சார விநியோகம் – வைத்தியசாலை சேவை, அத்தியாவசிய சேவைகளாக... பிரகடனம் மின்சார விநியோகம் மற்றும் வைத்தியசாலை சேவை ஆகியன அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. 1979 ஆம் ஆண்டு இலக்கம் 61 இன் கீழான அத்தியாவசிய பொது மக்கள் சேவை சட்டத்தின் இரண்டாவது சரத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவினால் அதிவிஷேட வர்த்தமானி அறிவிப்பில் இதுதொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அரசாங்க கூட்டுத்தாபனம், திணைக்களம் உள்ளூராட்சி மன்றம் அல்லது கூட்டுறவுச் சங்கங்களினால் விநியோகிக்கப்படும் மின் விநியோகம் மற்றும் வைத்தியசாலை சேவை பொது மக்களின் வழமையான வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு அத்தியாவசியம் என கு…
-
- 0 replies
- 73 views
-
-
அடுத்த 4 மாதங்களுக்கு... தேவையான அரிசியை, இறக்குமதி செய்யுமாறு அறிவிப்பு! எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை மாத்திரமே அரிசி கையிருப்பு உள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம், கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார். இதன்காரணமாக அடுத்த 4 மாதங்களுக்கு தேவையான அரிசியை இறக்குமதி செய்யுமாறு விவசாய அமைச்சு, வர்த்தக அமைச்சுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னர் 3 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதாக விவசாய பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் நுகர்விற்கு தேவையான அரிசியின் அளவு மாதாந்தம் 2 இலட்சம் மெட்ரிக் தொன் என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1286121
-
- 0 replies
- 90 views
-
-
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு... வழங்கப்பட வேண்டிய, திரிபோஷா இல்லை! நாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்பட வேண்டிய திரிபோஷா இல்லை என சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார சேவைகள் பணியகத்தின் பணிப்பாளர், வைத்தியர் சித்ரமாலி டி சொய்சா தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் முதல் திரிபோஷாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சோள விளைச்சல் இல்லாமையே திரிபோஷா உற்பத்தி தடைப்படுவதற்கு முக்கிய காரணமாகும். கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷா வழங்குவதற்கு வெளிநாட்டு நிறுவனங்களிடம் உதவி கோரப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர், வைத்தியர் சித்ரமாலி டி சொய்சா தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1286116
-
- 0 replies
- 155 views
-
-
மஹிந்த உட்பட... பல அரசியல்வாதிகள், இதுவரையில்... கடவுச்சீட்டை ஒப்படைக்கவில்லை – சட்டமா அதிபர் நீதிமன்ற உத்தரவுக்கு மத்தியிலும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல அரசியல்வாதிகள் கடவுச்சீட்டை நீதிமன்றக் காவலில் ஒப்படைக்கத் தவறியுள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் அறிவித்தார். அமைதியான போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பிலான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் நேற்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே குற்றப் புலனாய்வுப் பிரிவின் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆயிஷா ஜினசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந…
-
- 0 replies
- 130 views
-
-
கதிர்காம பாத யாத்திரிகளுக்கு... இராணுவத்தினர், உதவி! தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் இருந்து கதிர்காமம் வரை பாதயாத்திரையாக புறப்பட்ட பக்தர்கள் நேற்று (புதன்கிழமை) இயக்கச்சி பகுதியை சென்றடைந்தனர். வருடந்தோறும் பாதயாத்திரையாக செல்லுகின்ற பக்தர்கள் ஒவ்வொரு இடங்களிலும் உள்ள கோவில்கள், மண்டபங்கள் பொது இடங்களில் தங்கி தமது வழிபாடுகளை மேற்கொண்டு கதிர்காமத்தை சென்றடைவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவ்வாறு வருகை தந்த 53 பக்தர்கள் இன்றைய தினம் இயக்கச்சியில் அமைந்துள்ள இராணுவத்தின் 552 இரண்டாவது படைப்பிரிவின் தலைமையகத்தில் தங்கிச் சென்றனர். இதன்போது பக்தர்களுக்கு தேவையான உணவுகள் இராணுவத்தினரால் வழங்கப்பட்டதுடன் பக்தர்கள் நீண்ட நேரம் தங்கி தமது பா…
-
- 0 replies
- 213 views
-
-
பாராளுமன்றம் உடன் கலைக்கப்பட வேண்டும்: சுமந்திரன் பா.நிரோஸ் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ஜனாதிபதியை வைத்துக்கொண்டு நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது. ஆகவே அவரை பதவியில் இருந்து விலகச் செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார். இதேவேளை தற்போதைய பாராளுமன்றம் அதற்கான முறைமையை மீறியுள்ளது என்றும், இதனால் பாராளுமன்றத்தை காலம் தாழ்த்தாது கலைப்பதே சிறந்தது என்றும் தெரிவித்திருந்தார். பாராளுமன்றத்தில் நேற்று (8) நடைபெற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உரை மற்றும் குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இந்த பாராளுமன்றம் ஆரம்பிக்கப்படு…
-
- 0 replies
- 151 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை... இராஜினாமா செய்கிறாரா, பசில்? ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தயாராகி வருவதாக வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ இராஜினாமா செய்யவுள்ளதாகவும் அந்த வெற்றிடத்திற்கு, நாட்டின் பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேராவை நியமிக்க தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. அத்தோடு, நாடு எதிர்நோக்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க நாடாளுமன்றத்திற்கு வந்து பங்களிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தால் அவ்வாறான எந்தவொரு சவாலையும் ஏற்றுக்கொள்ளத் தயார் என அ…
-
- 1 reply
- 212 views
-
-
வெளிநாடு செல்லும் இலங்கை ஆசிரியர்கள்: கேள்விக்குறியாகும் மாணவர்கள் எதிர்காலம் ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கை மாணவர்கள். கோப்புப் படம். இலங்கையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்த்துள்ள அரச ஊழியர்களை, பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரச ஊழியர்களில் பெருமளவினராக இருக்கிற ஆசிரியர்களும் வெளிநாட்டு வேலைக்கு செல்ல தயாராகின்றனர். இந்நிலையில், மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இந்த நடவடிக்கைகளை …
-
- 0 replies
- 254 views
- 1 follower
-
-
இலங்கையில் ரூ.1,500 விலையில் கிடைத்த யூரியா ரூ.42,500 ஆனது: நெல் விளைச்சல் என்ன ஆகும்? யூ.எல்.மப்ரூக் பிபிசி தமிழுக்காக 26 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ள நிலையில், பொறுப்புவாய்ந்த அதிகாரிகளும் அதனை வழிமொழிந்துள்ளதோடு, அந்த நிலையை எதிர்கொள்ளத் தயாராகுமாறு மக்களை உஷார்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வருடம் சிறுபோகத்தில் அறுவடை செய்யப்பட்ட மொத்த நெல் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அளவானதே - தற்போதைய சிறுபோகத்தில் கிடைக்கும் என, விவசாய திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதனால் மக்களின் பிரதான உணவுப…
-
- 4 replies
- 801 views
- 1 follower
-
-
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இலங்கை கடற்படை வீரர் தாக்குவதை படம் பிடித்த பிரபல புகைப்படபிடிப்பாளர் சேன விதானகம அவரது 80 ஆவது வயதில் காலமானார். கடந்த 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொழும்பில் இடம்பெற்ற அணிவகுப்பு மரியாதையின் போது இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இலங்கை கடற்படை வீரர் துப்பாக்கியால் தாக்குவதை சேன விதானகம படம்பிடித்திருந்தமை உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அப்போது சேன விதானகம டெய்லி நியூஸ் பத்திரிகையில் புகைப்பட ஊடகவியலாளராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இலங்கை கடற்படை வீரர் தாக்குவதை படம் பிடித்த புகைப்படபிடிப்பாளர் சேன விதானகம காலமானார் | V…
-
- 0 replies
- 245 views
-
-
கச்சதீவை... பெற்றுக் கொள்ளலாம் என, இந்தியா கனவிலும்... நினைக்க கூடாது – வர்ணகுலசிங்கம். தமிழகத்தில் உள்ள 2000 விசைப்படகுகளை நிறுத்தினால் இந்தியா எங்களுக்கு வழங்கிய உதவியின் இரண்டு மடங்கை நாம் திருப்பி அவர்களுக்கு வழங்குவோம் என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் உபதலைவர் நா. வர்ணகுலசிங்கம் தெரிவித்தார். தொண்டமானாறு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே நா.வர்ணகுலசிங்கம் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் நிவாரண பொதிகளை வழங்கி விட்டு கச்சதீவை பெற்றுக்கொள்ளலாம் என இந்தியா கனவிலும் நினைக்க கூடாது. கச்சதீவை பெறுவதாக இருந்தால் எங…
-
- 1 reply
- 709 views
-
-
மின்வெட்டை அமுல்படுத்தினால்... இந்தியாவிடம் உதவி கோரும்படி, என்னிடம் கேட்க வேண்டாம் – மின்சார சபைக்கு... ரணில் எச்சரிக்கை! இலங்கை மின்சார சபையின் ஊழியர்களை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட வேண்டாமென தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அவ்வாறு செய்தால் இலங்கைக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள இந்தியா உதவுமென உறுதியளிக்க முடியாது என எச்சரித்தார். இலங்கைக்கு எரிபொருள் மற்றும் நிலக்கரி கொள்வனவு செய்வதற்கு இந்தியா மட்டுமே உதவுவதாகவும் இவற்றை இலங்கைக்கு கொள்வனவு செய்வதற்கு வேறு எந்த நாடும் உதவவில்லை எனவும் பிரதமர் இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “எரிபொருள் மற்றும் நிலக்கரி வாங்குவதற்கு எந்த நாடும் எங்களுக்கு உதவவில்…
-
- 1 reply
- 305 views
-