Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாடாளுமன்றத்தில் இன்று 20 ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்ற உயரிய ஜனநாயக முறைமையின் பிரகாரம் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று புதிய வரலாற்றை படைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றது என்று கட்சியின் செயலாளர் நாயகமும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது, "இலங்கை அரசியல் நெருக்கடிகளையும்,பொருளாதார நெருக்கடிகளையும் எதிர்கொண்டுள்ள நிலையில் நாட்டுக்கு தலைமை தாங்கி நாட்டை சரியான திசை வழியில் நடத்திச் செல்லக் கூடியவர், ரணில் விக்ரமசிங்க தான் என்பதை நாம் நேர்மையாகவும், துணிச்சலோடும் அன்ற…

  2. ராஜபக்சக்களை ஒட்டுமொத்தமாக விரட்டியடித்த ரணிலுக்கே வெற்றி! – அடித்துக் கூறுகின்றார் மனோ ராஜபக்சக்களைப் பாதுகாக்கவே ரணில் விக்கிரமசிங்க வருகை தந்தார் என்று கூறினால் அது முட்டாள்தனமான எண்ணப்பாடாகும் என்று தெரிவித்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், ராஜபக்சக்களை ஒட்டுமொத்தமாக விரட்டியடிப்பதற்காகவே அவர் வருகை தந்தார் என்பதே எனது எண்ணப்பாடாகும் என்றும் கூறினார். இதேவேளை, நாளை நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதிக்கான தேர்தலில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே வெற்றி பெறுவார் என்றும், அதற்கான சாதக நிலை தற்போது காணப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் சமகால அரசியல் நிலைவரம் மற்றும் புதிய ஜனாதிபதிக்கான தேர்தல…

  3. யாழில் ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக் கொண்ட 20 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார் . யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் இன்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது . நண்பர்களுடன் இணைந்து ஹெரோயின் போதைப் பொருளை ஊசி மூலம் செலுத்திய இளைஞன், சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார். இதையடுத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இளைஞனின் சடலம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பெறப்பட்ட மாதிரியில் போதைப்பொருள் நேர்மறை அறிக்கை கிடைத்துள்ளது . இந்நிலையில், இளைஞனின் சடலம் நாளை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது . யாழ்ப்பாணத்தில் அண்மைய காலப்பகுதியில் போதைப்பொருள் பாவனையினால் தொடர்ச்சியாக உயிரிழப்புகள் இடம்பெறுகின்றமை குறிப்ப…

  4. இலங்கை நெருக்கடி: "இந்த நாட்டில் பிரசவிக்க பயமாக இருக்கிறது" - கர்ப்பிணிகள் நிலை என்ன? சுனேத் பெரேரா பிபிசி உலக சேவை 4 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, தக்ஷிலாவின் குடும்பம் "நான் ஒரு 8 மாத கர்ப்பிணி. இலங்கையில் என் பிரசவம் குறித்து நினைத்தாலே மரணபயமாக இருக்கிறது". இலங்கை வவுனியாவில் வசித்து வரும் 27 வயதான கர்ப்பிணி தக்ஷிலா நிரோஷினியின் வார்த்தைகள் இவை. "என் இரும்புச்சத்து அளவு குறைவாக இருக்கிறது. என் கருவில் உள்ள சிசுவும் போதுமான அளவுக்கு வளரவில்லை. குழந்தைக்கான ஊட்டச்சத்து மருந்துகள் எல்லாம் எனக்கும் பரிந்துரைக்கபட்டன. ஆனால், இங்கிருக்க…

  5. ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க கடந்த சில நாட்களாக முப்படையினர் மற்றும் பொலிஸாரின் சேவைகளுக்காக தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் பாராளுமன்ற வளாகத்தை விட்டு வெளியேறிய புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி தனது வாகனத்தில் இருந்து இறங்கி பாராளுமன்றத்திற்கு வெளியே கடமையில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை வீரர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, கடந்த சில நாட்களாக பாராளுமன்றத்தை பாதுகாத்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். ஜனநாயகத்தை பாதுகாக்கவும், நிலைநாட்டவும் உழைத்த பாதுகாப்புப் படை வீரர்களுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. முப்படையினர், …

  6. யாழ்.மாநகர சபையினால் உருவாக்கப்பட்ட "காவல் படை" தொடர்பிலான வழக்கில் இருந்து , யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், காவல் படையின் சீருடைகளையும் மீள கையளிக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் , யாழ்.மாநகர சபையினரால் காவல் படை உருவாக்கப்பட்டது. யாழ். மாநகர சுகாதாரத்தை மேம்படுத்துதல், குப்பைகளை பொது இடங்களில் வீசுவார்கள், பொது இடங்களில் துப்புவார்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக தண்டம் விதித்தல், தேவைப்படின் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தல் ஆகிய செயற்பாடுகளை முன்னெடுக்கும் முகமாகவே காவல் படை உருவாக்கப்பட்டது. குறித்த காவல் படையின் சீருடையானது தமிழீழ விடுதலைப்புலிகளின் க…

  7. யாழ்ப்பாணம் காரைநகர் கடற்கரைப் பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சுமார் 575 கிலோ 600 கிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற டிங்கி படகு ஒன்றைக் கைப்பற்றியதோடு 02 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். நாட்டைச் சூழவுள்ள கடல் வழியாக போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏனைய சட்டவிரோதச் செயற்பாடுகளைத் தடுப்பதற்கு கடற்படை எப்போதும் விழிப்புடன் செயற்பட்டு வருகின்றது. இந்த முயற்சிகளின் பயனாக, நேற்று இரவு பழைய கசுவாரினா கடற்கரையில் இருந்து இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையானது, வடக்கு கடற்படை கட்டளையின் கீழ் கடலோர ரோந்துக் கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டன. இதன்போது கடலில் சந்தேகத்திற்கிடமான படகில் இருந்து 17 பொதிகளில் சுமார் 575…

  8. இந்த டளஸ் அழப்பெரும (அழகப் பெருமாள் இல்லை) எனும் ஒப்பாரற்ற நாயகனை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரிப்பதாக நிலையெடுத்திருக்கும் நிலையில், இந்த அழப்பெரும பற்றிய சில விடயங்களை முன்வைப்பது சாலப்பொறுத்தம் என்பதால் இங்கே முன்வைக்கிறேன், 1. சுதந்திரக் கட்சியிலிருந்து பொதுஜன பெரமுனவுக்கு மாறிய அதி தீவிர சிங்கள இனவாதி இவர். மாத்தறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 2005 இல் மகிந்த ராஜபக்ஷெ எனும் இனக்கொலையாளி அரியணை ஏறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்தில் முன்னின்று இனவாதம் கக்கிய ஒருவர். 2. 2009 இல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பத்திரிக்கையாளர் டக்கிளஸ் தேவானந்தாவுடன் ஒரே மேடையில் அமர்ந்து, "மகிந்த உங்களுக்கு ஒரு தீர்வைத் தருவார்" என்று கூறிவிட்டு, டக்கிளஸ் அதே மேடையி…

    • 12 replies
    • 837 views
  9. ரணில்.. பதவி விலக வேண்டும் என, காலி முகத்திடல் போராட்டக்காரர்கள்... மீண்டும் கோரிக்கை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடாளுமன்றத்தில் இன்று(20) இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் போது இலங்கையின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டார். இந்தநிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த காலி முகத்திடல் போராட்டக்களத்தின் பிரதிநிதிகள், ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என்பதே தமது இரண்டாவது முக்கிய கோரிக்கை என குறிப்பிட்டனர். பொது மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஜனாதிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளதால் அவர் பதவி விலக …

  10. தமிழர்களின் கருத்துக்களுக்கு... செவிசாய்க்கும் தலைவருக்கே, ஆதரவு – விக்கி தமிழ் சமூகத்தின் கருத்துக்களுக்கு செவிசாய்க்கும் தலைவருக்கே ஆதரவு என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூலை மாதம் 20ஆம் திகதி நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். சுதந்திரத்தின் பின்னரும் தமிழ் மக்கள் பல பிரச்சினைகளை தொடர்ந்தும் எதிர்நோக்கி வருவதாகவும் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். 30 வருடங்களுக்கு மேலாக நிலவும் இந்த பிரச்சினைகளுக்கு மக்கள் போராட்டத்தின் பின்னராவது தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். ஆகவே தாம் புதிய ஜனா…

    • 54 replies
    • 2.5k views
  11. இடைக்கால ஜனாதிபதி தெரிவிற்கான வாக்களிப்பு நிறைவு : வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம் ! இடைக்கால ஜனாதிபதி தெரிவிற்கான வாக்களிப்பு நிறைவடைந்ததுள்ள நிலையில், தற்போது வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் அதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இன்று சபை அமர்வில் கலந்து கொண்ட 223 பாராளுமன்ற உறுப்பினர்களில் , அகில இலங்கை தமிழ் காங்ரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரைத் தவிர அனைவரும் வாக்களிப்பில் கலந்து கொண்டனர். ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குகள் எண்ணப்படுவதை கண்காணிப்பதற்காக ஹரின் பெர்னாண்டோவும் , டலஸ் அழகப்பெருமவின் வாக்குகள் எண்ணப்படுவதை கண்காணிப்பதற்காக டிலான் பெரேராவும் , அநுரகுமார திஸாநாயக்கவின் …

  12. புதிய ஜனாதிபதியினை... தெரிவு செய்வதற்கான, வாக்கெடுப்பு இன்று! இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு இன்று(புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் நடைபெறுகின்றது. பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடுகின்றனர். இரகசிய வாக்கெடுப்பே நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது. வாக்கு சீட்டை நாடாளுமன்ற உறுப்பினர்கள் படமெடுத்தால்... அவர்களுக்கு ஏழாண்டுகள் வரை நாடாளுமன்றம் வர தடை விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்படுகின்றது. டலஸ் அழகப்பெருமவுக்கான... ஆதரவு வலுத்துள்ளது. 10 இற்கு…

  13. இலங்கை நெருக்கடி: "அன்று சாப்ட்வேர் எஞ்சினீயர், இன்று செருப்புகூட இல்லை" - ஒரு போராட்டக்காரரின் கதை எம்.மணிகண்டன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் நூறு நாட்களைக் கடந்து விட்ட இலங்கையின் காலி முகத்திடல் போராட்டத்தில் அரசுக்கு எதிரான முழக்கங்களைக் கேட்கலாம். ஆனால் தங்களது வாழ்க்கையை இழந்திருக்கும் பலரது வேதனைக் குரல்கள் வெளியே அதிகமாகக் கேட்பதில்லை. அப்படியொரு குரல்தான் ரிஃபாஸ் முகமதுவுடையது. "அன்று நான் சாப்ட்வேர் இன்சினீயர், இன்று உள்ளாடை கூட இல்லாமல் நிற்கிறேன்" என்கிறார் அவர். காலி முகத்திடலில் அதிபர் செயலகத்தை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கும் கூடாரத்தில் …

  14. (நா.தனுஜா) புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவிருக்கும் வேட்பாளர்களால் தமிழ்மக்களின் பிரச்சினைக்கு உரியவாறான தீர்வு கிட்டாது என்பதனால் நாளைய தினம் பாராளுமன்றத்தில் நடைபெறவிருக்கும் புதிய ஜனாதிபதித் தெரிவிற்கான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமலிருப்பதற்குத் தமது கட்சி ஏகமனதாகத் தீர்மானித்திருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார். நாடு பாரிய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு நாளைய தினம் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இதில் வாக்களி…

  15. ஈ.பி.டி.பி. டக்ளஸ் தேவானந்தா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்... ரணிலுக்கு ஆதரவு. ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இன்றைய நாடாளுமன்ற வாக்கெடுப்பின் போது ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இ.தொ.கா.வின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். மேலும் இன்றைய வாக்கெடுப்பின் போது ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக வாக்களிக்க டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி.யும் முடிவு செய்துள்ளது. இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த் குமார், ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளா…

  16. கூட்டமைப்பின், சில எம்.பிக்கள்... ரணிலுக்கு, ஆதரவு வழங்க தீர்மானம்? ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பின் போது பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போதே கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. குறிப்பாக சார்ள்ஸ் நிர்மலநாதன், வினோ, கோவிந்தன் கருணாகரம் ஆகியோரே இவ்வாறு வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்களது அரசியல் எதிர்காலத்தினை கருத்தில் க…

  17. இறுதி நிமிட மாற்றங்களால் இவரே ஜனாதிபதியாகும் சூழல்

  18. முதலாம் தவணை பரீட்சை... நடத்தப்படாது, என அறிவிப்பு! 2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை, செப்டெம்பர் 7ஆம் திகதி வரையில் நீடிக்கப்படவுள்ளது. அத்துடன், இரண்டாம் மற்றும் 3 ஆம் தவணையை நடத்துவதற்கான கால எல்லை தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. முதலாம் தரம் தொடக்கம் 11 ஆம் தரம் வரையில், திருத்தப்பட்ட பாடத்திட்டத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஜூலை 25 ஆம் திகதி முதல் அது தொடர்பான கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன. அத்துடன், முதலாம் தவணை பரீட்சை நடத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், திங்கட்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை வாராந்தம் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய 3 தின…

  19. ரணிலுக்கும், டக்ளஸ் தேவானந்தாவுக்கும்... இடையில் சந்திப்பு! பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஈ.பி.டி.பி. கட்சியின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் தற்போது தடை செய்யப்பட்டுள்ள சில முஸ்லிம் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தொடர்பாக மெத்தனமான கொள்கையை கடைப்பிடிக்குமாறு பதில் ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டுள்ளார். தடை செய்யப்பட்டுள்ள சில அமைப்புக்கள் இலங்கைக்கு முதலீடுகளை கொண்டு வந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக.. செயற்ப…

    • 10 replies
    • 890 views
  20. கே .குமணன் குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் திருத்தத்துடன் புதிய கட்டளையை பிறப்பித்த முல்லைத்தீவு நீதிமன்றம் வழங்கிய திருத்திய கட்டளையில் தொல்லியற் சின்னங்கள் பாதுகாப்பதாக கூறி தொல்லியற் சின்னங்கள் மூடிமறைக்கப்பட்டு புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் 14.07.2022 ஆம் திகதி கட்டளையில் புதிய விகாரைகள் மற்றும் கட்டடங்கள் நீக்கப்பட வேண்டும் என்ற கட்டளையின் பால் அவற்றை நீக்கும் போது தொல்லியற் சின்னங்களும் நீக்கப்படும் என்பதால் தொல்லியற் சின்னங்களை பாதுகாக்க வேண்டிய நிலை காணப்படுவதால் குறித்த புதிய விகாரைகள் கட்டடங்கள் நீக்கப்படவேண்டும் என்ற கட்டளை கை வாங்கப்படுகின்றது. எனவும் தெல்லியற் திணைக்களம் 12.06.2022 இல் இருந்தது போலவே குறித்த பிரதேசத்தை…

    • 2 replies
    • 320 views
  21. நாளை, புதிய ஜனாதிபதி தெரிவு - மூன்று வேட்பாளர்கள் களத்தில்! நாளைய தினம் இடம்பெறவுள்ள புதிய ஜனாதிபதித் தெரிவுக்கான வாக்கெடுப்பிற்கு, மூன்று வேட்பாளர்களின் பெயர்கள் இன்று நாடாளுமன்றில் பரிந்துரைக்கப்பட்டன. நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடிய நிலையில், நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தினால் புதிய ஜனாதிபதி தெரிவுக்கான வேட்புமனுக்கள் கோரப்பட்டிருந்தன. இதன்போது ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலகியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவின் பெயரை முன்மொழிந்தார். இதனை முன்னாள் அமைச்சரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வழிமொழிந்தார். இதனையடுத்து…

  22. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் குறுந்தூர் மலையில் விகாரைகட்டுவதற்கு பாரிய தடையாக இருப்பதாக தேரர் ஒருவர் விசனம் தெரிவிக்கும் காணொளி இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த காணொளியில், “தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு விடுதலை புலிகள் அமைப்பின் கொள்கையினை அடிப்படையாக கொண்டுள்ளது. வடக்கில் சிங்களவர்கள் இருக்க கூடாது, அவர்களுக்கு உரிமையில்லை என்றே இவர்கள் குறிப்பிடுகிறார்கள். இருப்பினும் துரதிஷ்டவசமாக அனைவரும் நாடாளுமன்றில் அழகாக உரையாற்றுகிறார்கள். அனைவரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும் எனவும் குறிப்பிடுகிறார்கள். போராட்டகாரர்களுடன் சுமந்திரன், சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோர் பேச்…

  23. ஜனாதிபதி போட்டியில் இருந்து... பின்வாங்கினார், சஜித்!! புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலில் தான் வேட்புமனுத்தாக்கள் செய்ய போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். அதன்படி வேட்புமனுவை வாபஸ் பெற்ற அவர் டலஸ் அழகப்பெருமாவை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளதாக அறிவித்தார். https://athavannews.com/2022/1291589

    • 1 reply
    • 305 views
  24. ரணிலின், பிரத்தியேக இல்லத்திற்கு தீ வைத்த சம்பவம் : முன்னாள் பிரதி அமைச்சரின் மகன்... நாட்டை விட்டு தப்பி ஓட்டம். ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக இல்லத்திற்கு தீ வைத்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார். முன்னாள் பிரதி அமைச்சர் ஒருவரின் மகனே இவ்வாறு தேடப்பட்டுவந்த நிலையில் அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார் என சி.ஐ.டி தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முன்னாள் பிரதி அமைச்சரின் மகன் டுபாய் சென்றுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2022/1291660

  25. டலஸ் ஜனாதிபதியானால் சஜித் பிரதமர்! ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் டளஸ் அழகப்பெரும ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதமராக நியமிக்கப்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். உடன்படிக்கையின் அடிப்படையில் இது மேற்கொள்ளப்படும் என மத்தும பண்டார தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு போதுமான ஆதரவு உள்ளது. அவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால், சர்வகட்சி ஆட்சி அமைக்கப்படும் என்றும் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். இதேவேளை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.