ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
வெளிநாடுகளுக்கு, வேலை வாய்ப்புக்காக... செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு! இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 5 ஆயிரத்து 821 பேர் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளனர். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2021ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களுடன் ஒப்பிடுகையில் 286 சதவீதம் அதிகமாகும் எனவும் குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 25 ஆயிரத்து 224 பெண்களும் 13 ஆயிரத்து 441 ஆண்களும் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மூலம் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளனர். …
-
- 0 replies
- 189 views
-
-
பெற்றோல் மற்றும் மருந்து இன்மையால்... 2 குழந்தைகள் உயிரிழப்பு: ஜனாதிபதி பதவி விலக வேண்டும் – மஹேல ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். பெற்றோல் மற்றும் மருந்து பற்றாக்குறையினால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பாக வைத்தியர் ஒருவரின் பதிவிற்கு மஹேல கருத்துத் தெரிவித்துள்ளார். குறித்த பதிவில், “இதை படித்துவிட்டு கோட்டாபய ராஜபக்ஷ குற்ற உணர்வுடன் இருந்தால் உடனடியாக பதவி விலக வேண்டும். இந்த நிலைக்கு அவரே நேரடிப் பொறுப்பு. அத்தோடு, இந்த நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருமே இதற்கு ப…
-
- 1 reply
- 212 views
- 1 follower
-
-
அமைச்சரவையில்... முன்வைக்கப்பட்டது, 21 ஆவது திருத்தச் சட்டமூலம்! அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம், அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் இன்று(திங்கட்கிழமை) மாலை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடியது. இதன்போதே 21 ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சட்டமூலம் தொடர்பில் கட்சி தலைவர்களின் கருத்துகளை, பெற்ற பின்னர் திருத்தப்பட்ட சட்டமூலத்தை, எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் முன்வைப்பதற்கு இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1283485
-
- 0 replies
- 191 views
-
-
இனப்படுகொலை தொடர்பில் கனேடிய நாடாளுமன்றத்தின் தீர்மானம் – பீரிஸ் கடும் எதிர்ப்பு இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாக கடந்த 18ஆம் திகதி கனேடிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இக்குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்த வெளிவிவகார அமைச்சர், தீர்மானத்தின் உள்ளடக்கம் மற்றும் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்ற கனேடிய அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவித்தார். இலங்கைக்கான பதில் கனேடிய உயர்ஸ்தானிகர் அமண்டா ஸ்ட்ரோஹானுடன் வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பில் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனைத் தெரிவி…
-
- 1 reply
- 318 views
-
-
நோயாளிகளுக்கான... சுமார் 300 அத்தியாவசிய மருந்துகளுக்கு, கடும் தட்டுப்பாடு? நோயாளிகளுக்கான சுமார் 300 அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஆயுட்காலத்தை நேரடியாக பாதிக்கும் 25 அத்தியாவசிய மருந்துகள் எந்தவொரு அரச மருத்துவமனைகளிலும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. தீவிர இதய நோய்க்கான மருந்துகள், புற்றுநோயாளிகளுக்கான மருந்துகள், நீரிழிவு நோய்க்கான தடுப்பூசிகளான இன்சுலின் போன்றவையே இவ்வாறு அரச மருத்துவமனைகளில் இல்லை என கூறப்படுகிறது. இந்த 25 மருந்துகளுக்கும் தனியார்துறை மருந்தகங்களிலும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. டொலர் தட்டுப்பாடு மட்டுமின்றி, தேசிய மருந்து ஒ…
-
- 0 replies
- 143 views
-
-
நாட்டின் பிள்ளைகளுக்காகவே... அமைச்சுப் பதவியை, பொறுப்பேற்றேன் – ஹரின் பெர்னாண்டோ நாட்டின் பிள்ளைகளுக்காகவும் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்காகவும் நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியானவேளையில் தான் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) காலை அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அரசியலமைப்பின் 21வது திருத்தம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், இல்லை என்றால் அரசாங்கத்தில் இருந்து விலகுவேன் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “சுற்றுலாத்துறைக்கு புத்துயிர் அளிக்கும் வேலைத்திட்டத்தில், இலங்கையில் உள்ள அனைத்து அறிஞர்களையும்…
-
- 0 replies
- 195 views
-
-
இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்: ரூபாயின் பெறுமதி கடும் வீழ்ச்சி. இலங்கை மத்திய வங்கியினால் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 225.20 ரூபாயாகவும் விற்பனை விலை 229.99 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. மேலும் ஸ்டெர்லிங் பவுண்டின் கொள்முதல் விலை 294.06 ரூபாயாகவும் மற்றும் விற்பனை விலை 302.92.ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. அவுஸ்ரேலிய டொலரின் கொள்முதல் விலை 163.74 ஆகவும், விற்பனை விலை 170.15. ரூபாயாகவும் கனேடிய டொலரின் கொள்முதல் விலை 174.73 மற்றும் விற்பனை விலை 180.90 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. https://athavannews.com/2022/12710…
-
- 10 replies
- 1.3k views
- 1 follower
-
-
பொருளாதார நெருக்கடியால் கொழும்பில் ஆயிரக்கணக்கான குடுமபங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்-ரணில் விக்கிரமசிங்கவுக்கு மனோ கணேசன் கடிதம் பொருளாதார நெருக்கடியால் கொழும்பில் ஆயிரக்கணக்கான குடுமபங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களது நிலைமையை எடுத்துக்கூறி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கொழும்பு பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கடிதம் ஒன்றை உழுதியுள்ளார். உணவு இல்லை. காஸ் இல்லை. மின்சாரம் இல்லை. இவற்றால் நாட்டிலேயே மிகவும் துன்புறுவது கொழும்பு தொடர்மாடி குடியிருப்புகளில் வாழும் மக்கள்தான். மாநகரத்தில் நாளாந்த வருமானம் பெற்று வந்த குடும்பங்கள், ஒருவேளை உணவுமின்றியும், உணவு சமைக்க வழியுன்றியும் தவிக்கிறார்கள். குறிப்பாக, வடகொழும்பின் பின்தங்கிய நகர தோட்ட குடி…
-
- 0 replies
- 136 views
-
-
மேற்குலக நாடுகள்.... இலங்கைக்கும், உதவிகளை வழங்க வேண்டும் – சீனா வலியுறுத்து! உக்ரைனுக்கு உதவிகளை வழங்குவதற்கு மேற்குலக நாடுகள் முன்வந்துள்ளதை போன்று, கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள இலங்கைக்கும் தமது உதவிகளை வழங்க வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. பொருளாதார நெருக்கடியால் சீனாவின் கடன் வலையில் இலங்கை சிக்கியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் இலங்கைக்கான சீன தூதரகம் தமது ட்விட்டர் கணக்கின் ஊடாக இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது. இலங்கை சர்வதேச சந்தையில் 47 சதவீதம் கடன் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது. அதில் 10 சதவீத கடனையே சீனாவுக்கு செலுத்த வேண்டியுள்ளதாக கொழும்பிலுள்ள சீன …
-
- 1 reply
- 254 views
-
-
இலங்கை நெருக்கடி: "உணவுக்காக மக்கள் மத்தியில் கலவரம் ஏற்பட வாய்ப்பு" - சம்பிக்க ரணவக்க ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,PATALI / FACEBOOK படக்குறிப்பு, பாட்டலி சம்பிக்க ரணவக்க (இன்றைய (மே 23) இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்) இலங்கையில் "எரிபொருள் மற்றும் எரிவாயுவை பெறுவதற்கும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை பெறுவதற்கும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி வரும். இறுதியில் பொருட்களை பெற மக்கள் மத்தியில் கலவரம ஏற்பட வாய்ப்புள்ளது என, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள…
-
- 0 replies
- 155 views
- 1 follower
-
-
ரணில் விக்கிரமசிங்கவால் ஒரு மாத காலத்திற்கு கூட ஆட்சியைக் கொண்டு செல்ல முடியாது - ராஜித சேனாரத்ன (எம்.மனோசித்ரா) இரகசிய ஒப்பந்தம் மூலம் இடைக்கால அரசாங்கத்தினை அமைத்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் ஒரு மாத காலத்திற்கு கூட ஆட்சியைக் கொண்டு செல்ல முடியாது. பிரதி சபாநாயகர் விவகாரத்திலேயே உண்மையான ரணில் விக்கிரமசிங்கவின் சுயரூபம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரகசிய ஒப்பந்தத்தின் ஊடாகவே இடைக்கால அரசாங்கத்தை அமைத்துள்ளார். அவர…
-
- 0 replies
- 150 views
-
-
சர்வக்கட்சி அரசாங்கத்தால் மொட்டு உதிரும் அபாயம் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர், ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டு சர்வகட்சி அரசாங்கமொன்று அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவ்வரசாங்கத்தின் அமைச்சரவை இன்னும் முழுமையாக நியமிக்கப்படவில்லை. அவ்வப்போது புதியவர்களும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக பதவி வகித்தவர்களில் பலரும், சர்வகட்சி அரசாங்கத்திலும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய அரசாங்கத்தில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்கள், ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்தவர்கள், சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள், கடந்த அரசாங்கத்திலிருந்து விலகி, பாராளுமன்றத்த…
-
- 0 replies
- 268 views
-
-
இலங்கை நெருக்கடி: இந்தியா இதுவரை இலங்கைக்காக செய்த உதவித் திட்டங்கள் - ஒரு பார்வை இலங்கை பொருளாதார நெருக்கடியில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள இந்த தருணத்தில், இந்தியா பல்வேறு வகையான உதவித் திட்டங்களை வழங்கி வருகிறது. இலங்கை எதிர்நோக்கியுள்ள எரிபொருள் தட்டுபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில், இந்தியா இதுவரை 12க்கும் அதிகமான கப்பல்களில் சுமார் 4,00,000க்கும் அதிகமான மெட்ரிக் டன் அளவுக்கு டீசல் மற்றும் பெட்ரோல் வழங்கியுள்ளது. இந்திய கடன் திட்டத்தின் கீழ் இந்த எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர் ஆணையரகம் தெரிவிக்கின்றது. இலங்கைக்கு தேவையான ஒரு தொகுதி மருந்து வகைகளை இந்திய தூதர் கோபால் பாக்லே, கடந்த ஏப்ரல் 29ம்…
-
- 0 replies
- 235 views
-
-
பெற்றோலில் கலப்படம் – எரிசக்தி அமைச்சர் எச்சரிக்கை! மூன்றாம் தரப்பினரிடம் பெற்றோல் வாங்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், மக்கள் எரிபொருளைச் சேர்ப்பதும், பெட்ரோலியப் பொருட்களை மற்ற திரவங்களுடன் கலந்து அதிக விலைக்கு விற்பனை செய்வதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டாம் எனவும், அது தொடர்பில் தெரிவிக்குமாறும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். https://athavannews.com/2022/1283332
-
- 0 replies
- 147 views
-
-
மட்டு. வெல்லாவெளியில் இருந்து... மகாஓயாவிற்கு, பெற்றோல் கடத்திய இருவர் கைது! மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசததில் இருந்து அம்பாறை மகா ஓயா பிரதேசத்திற்கு கப்ரக வாகனம், பெற்றோல் கடத்திச் சென்ற பொலிஸ் சாஜன் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உட்பட இருவரை 910 லீற்றர் பெற்றோலுடன் வெல்லாவெளி வீதிச் சோதனைச் சாவடியில் வைத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர். வெல்லாவெளி பிரதேசத்தில் இருந்து அம்பாறை நோக்கி சம்பவதினமான இன்று அதிகாலை 3.30 மணியளவில் சென்ற பிக்கப் ரக வாகனத்தை வெல்லாவெளி பொலிஸ் வீதிச் சோதனைச் சாவடியில் பொலிசார் நிறுத்தி சோதனையிட்டபோது அந்த வாகனத்தில் வெல்லாவெளி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து வியாபாரத்துக்க…
-
- 0 replies
- 153 views
-
-
”யுத்த காலத்திலும் பரீட்சைகளை புலிகள் தடுக்கவில்லை” May 23, 2022 2005- 2010 ஆம் ஆண்டு வரை தான் கல்வி அமைச்சராக பதவி வகித்த போது நாட்டில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்றது. இதன்போது வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பரீட்சைகள் அனைத்தும் தடையின்றி நடத்தப்பட்டன, இதன்போது முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பினர் கூட எந்தவொரு பரீட்சையையும் நடத்துவதற்கு தடையை ஏற்படுத்தவில்லை என்பதையும் என கல்வி அமை்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (22.05.22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், இன்று (23.05.22) ஆரம்பமாகும் க.பொ.த சாதாரண தர பரீட்சைகளில் தோற்றுவதற்காகச் செல்லும்…
-
- 0 replies
- 162 views
-
-
மூன்றாம் தரப்பினரிடம் இருந்து... எரிபொருள் கொள்வனவு – அமைச்சர் விடுக்கும் கோரிக்கை மூன்றாம் தரப்பினரிடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஒருசிலர் எரிபொருளை சேமித்து வைப்பதாகவும் கலப்படங்களை மேற்கொண்டு அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தமக்கு தெரியவந்துள்ளது என கூறியுள்ளார். ஆகவே அவர்களை கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஆகவே இவ்வாறான தொழில்களை ஊக்குவிக்க வேண்டாம் என்றும், இது குறித்து அதிகாரிகளிடம் முறைப்பாடு வழங்குமாறும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். https://athavannews.com/2022/128…
-
- 0 replies
- 101 views
-
-
நகர அபிவிருத்தி, மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ்... பயன்படுத்தப்படாத காணிகளில் விவசாயம்! நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் பயன்படுத்தப்படாத காணிகளில் துரிதமாக விவசாயம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். முதலீட்டுக்கு பயன்படுத்தப்படாத காணிகளை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பயன்படுத்தப்படாத காணிகளில் அப்பகுதிகளுக்குரிய பயிர்களை பயிரிடுவதற்காக பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட…
-
- 0 replies
- 108 views
-
-
உருவங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதே தவிர, கொள்கையளில்.. மாற்றம் ஏற்படவில்லை – அநுர உருவங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதே தவிர கொள்கையளில் மாற்றம் ஏற்படவில்லை என நாடாளமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் சினிசிட்டா மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம் பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ரணிலும், கோட்டவும் ஒரே அணியாக இருப்பது வெளியில் நன்றாக தென்படுகின்றது. ஒருவரை ஒருவர் காப்பாற்றும் செயற்பாடு இதற்கு சான்று. மஹிந்த ராஜபக்ஸ அன்று மக்களின் பணத்தை களவாடியதாலேயே 2015 இல் அவரை தோற்கடித்து மைத்திரி – ரணில் ஆட்சிக்கு மக்கள் வாக்களித்தனர…
-
- 0 replies
- 241 views
-
-
ஜோன்ஸ்டன் உள்ளிட்ட... சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், சி.ஐ.டியில் முன்னிலையாகின்றனர்? நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய இவர்கள் இன்றைய தினம்(திங்கட்கிழமை) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 09ஆம் திகதி அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடலில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இவர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. https://athavannews.com/2022/1283306
-
- 0 replies
- 87 views
-
-
நீதிமன்ற உத்தரவு: பேஜெட் வீதியில் உள்ள இல்லத்தில் இருந்து, வெளியேறினார்... மைத்திரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் பேஜெட் வீதியின் இல்லத்தை விட்டு வெளியேறியுள்ளார். கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதி உயர் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவுக்கு இங்கு அவர் வெளியேறியுள்ளார். இதனை அடுத்து கொழும்பு 7 இல் உள்ள அரசாங்கத்தின் இல்லத்தில் குடியேறியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேஜெட் வீதியில் உள்ள குடியிருப்பை விட்டு வெளியேற தனக்கு நான்கு வாரங்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி வருத்தம் தெரிவித்தார். மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தாக…
-
- 0 replies
- 102 views
-
-
உலகை அச்சுறுத்தும்... குரங்கம்மை நோய் குறித்து, இலங்கை மக்களுக்கு விசேட அறிவிப்பு! உலகை அச்சுறுத்தும் குரங்கம்மை நோய் தொடர்பாக நாட்டு மக்கள் தேவையற்ற பீதியடைய அவசியமில்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. உலகளாவிய ரீதியாக கடந்த 13 ஆம் திகதி முதல் இதுவரை குரங்கம்மை நோய் காரணமாக 92 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை எதிர்ப்பு சக்தி, ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். காய்ச்சல், தலைவலி, உடல்வலி, களைப்பு போன்ற அறிகுறிகள் மூலமே இந்த நோய் ஏற்படக்கூடும் என்பதோடு, இந்த நோய் அறிகுறி தொடர்பில் சாதாரண பி.சீ.ஆர் பரிசோதனை மூலம் கண்டறிய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார…
-
- 0 replies
- 136 views
-
-
அமைச்சுப் பதவிகளுக்காக.... பொதுஜன பெரமுனவின், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் போட்டி? ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் அமைச்சுப் பதவிகளுக்காக கடும் போட்டி நிலவி வருவதாக அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் அவ்வப்போது ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்தும், வேறு தரப்பினர் ஊடாகவும் அழுத்தங்களை பிரயோகித்து இப்பதவிகளை பெற்றுக்கொள்ள முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட அமைச்சரவை 25 உறுப்பினர்களுடன் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், 23 அமைச்சரவை அமைச்சர்களில் 13 பேர் ஏற்கனவே பதவியேற்றுள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு சுமார் 10 அமைச்…
-
- 0 replies
- 178 views
-
-
அரசியலமைப்பின் 21வது திருத்த வரைவு... இன்று அமைச்சரவையில், சமர்ப்பிக்கப்படுகின்றது! அரசியலமைப்பின் 21வது திருத்த வரைவு இன்று(திங்கட்கிழமை) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாத வகையில் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தற்போதுள்ள சுயாதீன ஆணையங்களுடன் கூடுதலாக, தேசிய கணக்காய்வு அலுவலகம் மற்றும் கொள்முதல் ஆணைக்குழு ஆகியன சுயாதீன ஆணைக்குழுக்களாக மாற்றப்படவுள்ளன. தற்போதுள்ள ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்துவதுடன், அவற்றையும் சுயாதீனமாக்குவதற்கு அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் கொண்டுவரப்படு…
-
- 0 replies
- 88 views
-
-
வீடுகளுக்கு தீ வைப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறைப்பாடு! வீடுகளை எரித்தமை உட்பட தமக்கு ஏற்பட்ட பௌதீக மற்றும் உடல் ரீதியான பாதிப்புகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித்தனியாக முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதுதவிர, இன்றும் ஆணைக்குழுவில் மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறைப்பாடு செய்ய தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான முறைப்பாடுகள் அனைத்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் வீடு…
-
- 0 replies
- 110 views
-