ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142867 topics in this forum
-
இலங்கையில் இந்திய இராணுவம்; இந்தியா மறுப்பு இலங்கையின் தற்போதையை நிலையை கட்டுப்படுத்துவதற்காக இந்திய இராணுவம் இலங்கைக்கு வரவுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவலை இந்திய தூதரகம் மறுத்துள்ளது. இலங்கைக்கு தனது இராணுவத்தை இந்தியா அனுப்பவில்லை என்றும் அவ்வாறு அனுப்பாது என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. அத்துடன், கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், உள்நாட்டு அமைதியின்மைக்கு மத்தியில் இந்திய இராணுவம் இலங்கைக்கு அனுப்பப்பட்டதாக வெளியான தகல்களை நிராகரிப்பதாக ட்வீட் செய்துள்ளது. இவ்வாறான போலியான செய்திகள், இந்திய அரசின் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போவதில்லை என உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. “இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்…
-
- 3 replies
- 292 views
-
-
’தீவைத்தவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை’ கடந்த 9ஆம் திகதிக்குப் பின்னர் தீவைத்தல் உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட அனைவருக்கு எதிராகவும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். https://www.tamilmirror.lk/செய்திகள்/தீவைத்தவர்களுக்கு-எதிராக-கடும்-நடவடிக்கை/175-296230
-
- 0 replies
- 234 views
-
-
வெறுமனே... பதாதைகளை எரித்து, எம் வீர வரலாறை... கொச்சைப் படுத்தாதீர்கள் – அங்கஜன். வெறுமனே பதாதைகளை எரித்து எம் வீர வரலாறை கொச்சைப்படுத்தாதீர்கள் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் மக்கள் தொடர்பு அலுவலக வாயிலில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினரின் பதாகைக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இனம்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டது. அதனால் பதாகை சிறு சேதங்களுக்கு உள்ளானது. குறித்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யாழிலும்…
-
- 1 reply
- 343 views
-
-
எந்தவொரு, வன்முறையையும்... மன்னிக்கமாட்டோம் – குண்டர்களால் தாக்கப்பட்ட பாதிரியார்கள் அலரிமாளிகைக்கு அருகிலுள்ள மைனா கோ கம என்ற இடத்தில் குண்டர்களால் தாக்கப்பட்டதில் காயமடைந்த இரண்டு கிறிஸ்தவ பாதிரியார்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். இந்த கைகலப்பில் அவர்களுடன் பௌத்த பிக்கு ஒருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், தாங்கள் எப்போதும் சமாதானம், இன நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்திற்காக நிற்பதாகவும், எந்தவொரு வன்முறையையும் மன்னிக்கமாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அனைத்து இலங்கையர்களிடையே நிலையான அமைதி மற்றும் ஒற்றுமைக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்றும் இரண்டு பாதிரியார்களும் மீண்டும் வலியுறு…
-
- 6 replies
- 814 views
-
-
அரசின்... பங்காளி கட்சி அந்தஸ்த்திலிருந்து, விலகிக் கொள்கிறோம் – "உலமா" கட்சியின் தலைவர், முபாறக் அப்துல் மஜீத் எமது கட்சி பொதுஜன பெரமுனவுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படும் என்பதை மீண்டும் நாட்டு மக்களுக்கு ஐக்கிய காங்கிரஸ் கட்சி (உலமா கட்சி) அறிவித்துக்கொள்கிறது என அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, மஹிந்த ராஜபக்ச நீண்ட கால அரசியல் அனுபவம் உள்ளவராக இருந்த போதும் தனது அருகில் கள்வர்களையும், கொள்ளையர்களையும் வைத்துக்கொண்டிருந்ததால் நாடு அதள பாதாளத்தில் விழுந்து விட்டது. கடந்த நல்லா…
-
- 6 replies
- 563 views
-
-
வன்முறை சம்பவங்கள் தொடர்பாக... நெருக்கமாக, அவதானித்து வருவதாக... சீனா அறிவிப்பு இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவங்கள் தொடர்பாக நெருக்கமாக அவதானித்து வருவதாக சீனா அறிவித்துள்ளது. எனவே இங்கு பணிபுரியும் சீனப் பிரஜைகளை எச்சரிக்கையாகவும் அவதானமாகவும் இருக்குமாறு சீனா கேட்டுக் கொண்டுள்ளது. தலைநகர் கொழும்பு மற்றும் பிற இடங்களில் இடம்பெற்ற மோதல்கள் ஒப்பீட்டளவில் பெரிய உயிரிழப்புகளை ஏற்படுத்தியது என சீனாவின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வன்முறைகள் காரணமாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாட்டில் சமாதானமும் ஸ்திரத்தன்மையும் ஏற்படும் என நம்புவதாக சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/128129…
-
- 1 reply
- 209 views
-
-
அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை... இணைய வழியில், நடத்த தீர்மானம். அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை இணைய வழியில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3.00 மணிக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பு மெய்நிகர் முறைமை ஊடாக (Zoom) நடைபெறவுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளது. முன்னதாக, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வரை கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட மாட்டாது என சபாநாயகர் அறிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து, கட்சித் தலைவர்கள் கூட்டத்தை…
-
- 0 replies
- 276 views
-
-
கொழும்பின்... பல இடங்களிலும், இராணுவ வாகனங்கள்! கொழும்பின் பல வீதிகளில் இராணுவ வாகனங்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அத்தோடு, சோதனைச்சாவடிகளிலும் அதிகளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு இராணுவத்தினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1281279
-
- 1 reply
- 340 views
-
-
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில்... இன்று, முன்னிலையாகின்றனர் பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி! பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இன்று புதன்கிழமை அழைக்கப்பட்டுள்ளனர். காலை 10 மணிக்கு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அவர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரோஹினி மாரசிங்க அறிவித்துள்ளார். மக்களுக்கும் அவர்களது வீடுகளுக்கும் போதிய பாதுகாப்பை வழங்காமை மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தத் தவறியமை தொடர்பில் இவர்களிடம் விசாரணை நடத்தப்படடவுள்ளது. உரிய நடைமுறை எப்போதும் பின்பற்றப்பட வேண்டும் என்றும் வன்முறைக்கு காரணமானவர்கள் அனைவரும் கைது செ…
-
- 0 replies
- 121 views
-
-
எந்த அரசியல் பிரமுகரும்... இந்தியாவுக்கு, தப்பியோடவில்லை – இந்திய உயர் ஸ்தானிகராலயம்! இலங்கையினைச் சேர்ந்த எந்த அரசியல் பிரமுகரும் இந்தியாவுக்கு தப்பியோடவில்லை என இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. சில அரசியல் பிரமுகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவி வருவதை அவதானிக்க முடிவதாகவும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இவை போலியான மற்றும் அப்பட்டமான தவறான அறிக்கைகள் எனவும், இந்த தகவல்களில் உண்மையில்லை எனவும் உயர் ஸ்தானிகராலயம் க…
-
- 2 replies
- 307 views
-
-
அனைத்து இலங்கையர்களும்... ஒன்றாக, கைகோர்க்க வேண்டிய நேரம் இது – ஜனாதிபதி அனைத்து இலங்கையர்களும் ஒன்றாக கைகோர்க்க வேண்டிய நேரம் இதுவென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், “பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்களை வெற்றிகொள்வதற்கு, அனைத்து இலங்கையர்களும் ஒன்றாக கைகோர்க்க வேண்டிய நேரம் இது. இன மற்றும் மத நல்லிணக்கத்தை நோக்கி உங்களைத் தள்ளும் நாசகார முயற்சிகளை நிராகரிக்குமாறு அனைத்து இலங்கையர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். நிதானம், சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வை ஊக்குவித்தல் இன்றியமையாதது” என அவர் பதிவிட்ட…
-
- 1 reply
- 202 views
-
-
மஹிந்தவின்.... பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு, CID அழைப்பு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் உள்ளிட்ட தரப்பினரை குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமைதிப் போராட்டத்தில் தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பாக வாக்குமூலம் வழங்க அவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களால் கடந்த 9 ஆம் திகதி ‘ மைனா கோ கம ‘ மற்றும் கோட்டா கோ கம’ ஆகிய பகுதிகளில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1281266
-
- 0 replies
- 122 views
-
-
கொழும்பு – கோட்டா கோ கமவில் தொடரும் போராட்டம்! காலிமுகத்திடலில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து தரைமட்டமாக்கப்பட்ட கோட்டா கோ கம மீள உருவாக்கப்பட்டு இன்றும் (புதன்கிழமை) போராட்டம் தொடர்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைதியான முறையில் ஆரம்பமான மக்கள் எழுச்சிப் போராட்டம் ஒரு மாதத்தைக் கடந்த நிலையில், பல எதிர்ப்புகளையும் மீறி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தப் போராட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், வழமைப்போன்று நேற்று இரவும் அரசாங்கத்தை வீட்டுக்குச் செல்லுமாறு கோசமெழுப்பி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்தோடு, நேற்று முன்தினம் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்தவர்களை நினைவுகூரும் வகையில் 5 நி…
-
- 0 replies
- 184 views
-
-
வன்முறைச் செயல்களில்... ஈடுபட வேண்டாம் – பாதுகாப்புச் செயலாளர் வன்முறைச் செயல்களில் ஈடுபட வேண்டாம் என பாதுகாப்புச் செயலாளர் நாயகம் கமல் குணரத்ன அனைத்து மக்களையும் கேட்டுக்கொண்டுள்ளார். விசேட அறிக்கையொன்iற வெளியிட்டுள்ள அவர், ஜனநாயக ரீதியில் போராட்டம் வெற்றிபெற இளைஞர்கள் உழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில், பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவிக்கையில், “இவர்கள் அனைவரும் நமது நாட்டின் குடிமக்கள், இலங்கையர்கள், அதாவது, எங்கள் மக்கள், எனவே அவர்கள் அனைவரும் இலங்கையர்கள். எத்தகைய அரசியல் கருத்துக்களைக்கொண்டிருந்த போதிலும் எத்தகைய அரசியல் கட்சியை சார்ந்திருந்த போதிலும் இவர்கள் அனைவரும் இலங்கையர்கள்.எனவே இன்று இந்த போராட்டத்தில் ஈடு…
-
- 0 replies
- 141 views
-
-
எந்தவொரு தேவாலயத்தின் மீதும்.... தாக்குதல், மேற்கொள்ளப்படவில்லை – நீர்கொழும்பு பதற்றம் குறித்து அருட்தந்தை தகவல்! எந்தவொரு தேவாலயத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை என நீர்கொழும்பு பொலவலனா பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்த விதான தெரிவித்துள்ளார். சிலர் குறித்த பகுதிகளிலுள்ள தேவாலயங்கள் மீது முஸ்லிம்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர் என போலியான செய்திகளை பரப்பி வருவதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். இவ்வாறானா போலியான செய்திகளைக் கண்டு மக்கள் ஏமாறக்கூடாது எனவும் நீர்கொழும்பு பொலவலனா பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்த விதான தெரிவித்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் வகையில் சிலர் இவ்வாறான போலியான செய்திகளை பரப்பி வருவதாகவும் அவர் ச…
-
- 0 replies
- 151 views
-
-
பொதுமக்களை... குழப்பமடையச் செய்யும், எந்தவொரு தரக்குறைவான... செயலிலும் முப்படையினர், ஈடுபட மாட்டார்கள் – சவேந்திர சில்வா பொதுமக்களை குழப்பமடையச் செய்யும் எந்தவொரு தரக்குறைவான செயலிலும் முப்படையினர் ஈடுபட மாட்டார்கள் என பாதுகாப்பு படைகளின் தலைமையதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் முன்னாள் பிரதமர் மற்றும் அவரது ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஆதரவாளர்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் பொதுமக்கள் அவர்களது வாகனங்கள், வீடுகள் உள்ளிட்ட சொத்துக்களை அழ…
-
- 2 replies
- 289 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர்களின்... பாதுகாப்பு உறுதிப் படுத்தப்பட்டதன் பின்னரே, நாடாளுமன்றம் கூட்டப்படும் – சபாநாயகர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை விசேட நாடாளுமன்ற அமர்வுகளை கூட்டாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அத்துடன், நாளை(புதன்கிழமை) நடைபெறவிருந்த கட்சித் தலைவர்களின் கூட்டமும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே நாடாளுமன்றம் கூட்டப்படும் எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1281234
-
- 0 replies
- 242 views
-
-
நாட்டை... யுத்தகளமாக மாற்றியதன் பொறுப்பை... மஹிந்த, ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் ஏற்க வேண்டும் – ஓமல்பே சோபித தேரர்! நாட்டை யுத்தகளமாக மாற்றியதன் பொறுப்பை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் ஏற்க வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பதவி விலகலை தொடர்ந்து சர்வமத தலைவர்கள் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்தநிலையில் குறித்த சந்திப்பு தொடர்பாக கருத்து வெளியிடும் போதே ஓமல்பே சோபித தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் காலி முகத்திடல் அமைதி வழி போராட்ட…
-
- 0 replies
- 110 views
-
-
மோதல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களினால்.... இதுவரை 8 பேர் உயிரிழப்பு – சேத விபரங்களும் வெளியாகின! நாடளாவிய ரீதியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற மோதல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். பொலிஸ் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 41 வாகனங்களும், 65 வீடுகளும் சேதமடைந்துள்ளன. அத்துடன், நேற்றைய வன்முறை சம்பவங்களால் 38 வீடுகளும், 47 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த 8 பேரில் ஆறு பேர் மேல் மாகாணத்திலும், இருவர் தென் மாகாணத்தில் நடந்த வன்முறையின்போதும் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. அத்துடன். மேல் மாகாணத்தில் மாத்திரம் …
-
- 0 replies
- 150 views
-
-
மீண்டும்... நீடிக்கப்பட்டது, ஊரடங்கு உத்தரவு! நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 12ஆம் திகதி காலை 7 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது https://athavannews.com/2022/1281212
-
- 1 reply
- 184 views
-
-
இன்றும்... 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு, மின்வெட்டு! நாட்டில் இன்றும்(புதன்கிழமை) 03 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய A முதல் W வரையான வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதிக்குள் 2 மணித்தியாலங்களும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. https://athavannews.com/2022/1281254
-
- 0 replies
- 147 views
-
-
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மட்டக்களப்பு மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான வியாழேந்திரன்,பிள்ளையானின் ஆதரவுடன் பாதுகாப்பான இடத்தில் தங்கியிருக்க வாய்ப்புள்ளதாக அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார். எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது குடும்பத்துடன் திருகோணமலை இராணுவ முகாமில் பதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர்கள் இன்றிரவு கடல் மார்க்கமாக நாட்டை விட்டு வெளியேற உள்ளதாகவும், ஜெட் விமானம் ஒன்றின் மூலம் நாட்டை விட்டு வெளியேற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பில் மக்கள் வெளியிட்ட பலத்த எதிர்ப்புக்கு மத்தியில்…
-
- 1 reply
- 383 views
-
-
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய்யில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அலுவலகமும் போராட்டகாரர்களால் தீவைக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக கடந்த ஒரு மாத காலமாக அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் போராட்டத்தில் குண்டர்கள் புகுந்து குழப்பம் ஏற்படுத்தினர். இதனால் நாடு முழுவதும் வன்முறை வெடித்த நிலையில், அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள் மீது கடும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன், மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்களின் வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன. இன்றைய தினமும் நாடு முழுவதும் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், நடைமுறையில் இரு…
-
- 7 replies
- 739 views
-
-
களுவாஞ்சிகுடியில் பொதுஜனப் பெரமுன கட்சியின் பதாகைகள் உடைத்து தீயிட்டு எரிப்பு By Sayanolipavan ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன கட்சியின் களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் அமைந்திருந்த பட்டிருப்புத் தொகுதிக் காரியாலயத்தின் பதாகைகள் அப்பகுதி மக்களால் உடைத்து எரியூட்டப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புத் தொகுதிக்குரிய ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன கட்சியின் காரியாலயம் ஒன்று களுவாஞ்சிகுடியில் தனியார் வீடு ஒன்றில் வாடகைக்கு பெறப்பட்டுச் செயற்பட்டு வந்துள்ளது. அதில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச, உள்ளிட்டோரின் புகைப்படம் தாங்கிய பதாகைகள் வைக்கப்பட்டிரு…
-
- 1 reply
- 302 views
-
-
பொதுமக்களின்... சொத்துக்களுக்கு, சேதங்களை விளைவிப்போர் மீது... துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவு! பொதுமக்களின் சொத்துக்களை திருடுவோர், சேதங்களை விளைவிப்போர் மீது முப்படையினர், துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கான உத்தரவு பாதுகாப்பு அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்றைய தினம்(திங்கட்கிழமை) மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் முன்னாள் பிரதமர் மற்றும் அவரது ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஆதரவாளர்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் பொதுமக்கள் அவர்களது வாகனங்கள், வீடுகள் உள்ளிட்ட சொத்துக்களை அழித்து பதிலடி …
-
- 0 replies
- 217 views
-