ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
Published on 2022-05-06 16:54:56 அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தலைநகர் கொழும்பும் முடங்கியது. தலைநகர் கொழும்பின் புறக்கோட்டைப் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் ஆகியன மூடப்பட்டு காணப்படுகின்றன. வத்தளைப் பகுதியில் அமைந்துள்ள பேலியகொட மொத்த மீன் விற்பனை நிலையம் மற்றும் மொத்த மரக்கறி விற்பனை நிலையம் ஆகியன வெறிச்சோடிக்காணப்படுகின்றது. இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கொழும்பு குணசிங்கபுர பகுதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தலைமையில் ஆ…
-
- 3 replies
- 446 views
-
-
ரணவிரு நினைவு மாதத்தைப் பிரகடனப்படுத்தி இன்று (06) ஜனாதிபதி மாளிகையில் தேசிய ரணவிரு கொடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அணிவிக்கப்பட்டது. ரணவிரு சேவை அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர (ஓய்வுபெற்ற), முதலாவது ரணவிரு கொடியை ஜனாதிபதிக்கு அணிவித்தார். மூன்று தசாப்தங்களுக்கும் மேலான பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து, சுதந்திரமான நாட்டிற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த, துணிச்சலான போர் வீரர்களை ரணவிரு மாதம் நினைவுகூருகிறது. ஜனாதிபதிக்கு தேசிய ரணவிரு கொடி அணிவிக்கப்பட்டது முதல் ரணவிரு நினைவேந்தல் மாதம் ஆரம்பமாகிறது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், ரணவிரு சேவை அதிகார சபையின் பணிப்பாளர் மேஜர…
-
- 3 replies
- 399 views
-
-
நாடாளுமன்றில்.... யாருக்கு, பெரும்பான்மை உள்ளது – முக்கிய வாக்கெடுப்பு இன்று! புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது. பிரதி சபாநாயகராக செயற்பட்டிருந்த ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தனது பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவித்திருந்தார். அதற்கு ஜனாதிபதியினால் பதிலளிப்பதற்கு ஏற்பட்ட தாமதம் காரணமாக, புதிய உறுப்பினர் ஒருவரை நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. இந்தநிலையில், ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் பதவி விலகலை ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும், இதற்கமைய, இன்றைய தினம் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்…
-
- 16 replies
- 932 views
-
-
இலங்கை நெருக்கடி: நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் - பாட சாலைகளும் மூடல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை வெளியேறுமாறும் கோரி இன்று (மே 06) நாடு தழுவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்றைய தினம் மூடப்பட்டுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். அத்துடன், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விசேட பிரமுகர்களுக்கான வளாகத்தின் பணிக…
-
- 0 replies
- 232 views
- 1 follower
-
-
வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வந்தவர் மதுபான விடுதியில் ஆங்கிலத்தில் பேசியதால், ஆத்திரமடைந்த இளைஞர் குழுவினர் ஒரு கொலையை செய்துள்ளனர். யாழ் மாவட்டத்தின் நெல்லியடி பொலிஸ் பிரிவில் இந்த சம்பவம் நடந்தது. மதுபோதையின் உச்சத்தில் தமிழ்ப்பற்று பீறிட்ட பச்சைத் தமிழர்களால் அரங்கேற்றப்பட்ட கொடூர கொலை பற்றிய முழுமையான தொகுப்பு இது. யாழ்ப்பாணம்- பருத்தித்துறை வீதியில் வல்லைவெளியில், இமையாணன் பகுதியில் அமைந்துள்ளது யாழ் பீச் ஹொட்டல். அங்கு 2ஆம் திகதி- திங்கட்கிழமை இரவு இளைஞன் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். மதுபான போத்தலால் குத்தப்பட்டதில் இளைஞன் உயிரிழந்தார். https://pagetamil.com/2022/05/04/மது-விடுதியில்-ஆங்கிலம்/
-
- 11 replies
- 729 views
-
-
ரணிலுக்கு... பாதுகாப்பு வழங்குமாறு, சபையில் தினேஷ் கோரிக்கை! முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பாதுகாப்பு வழங்க தலையிடுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். தனது வீட்டை சுற்றி வளைக்கும் திட்டம் இருப்பதாகவும், அப்படியானால், உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தமக்கான பாதுகாப்பை வழங்க தலையிடுமாறும் ரணில் விக்ரமசிங்க கோரியதாக அவர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். எனவே, சபையில் கூறப்படும் அறிக்கைகள் தொடர்பாக எந்தவொரு அரசியல் கட்சியும் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் மிரட்டுவது ஜனநாயக நடைமுறையல்ல என்றும் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். பிரதி சபாநாயகர் வாக்கெடுப்பின்போது அரசாங்கத்…
-
- 1 reply
- 192 views
-
-
இராஜாங்க அமைச்சர்... குணபால ரத்னசேகர, இராஜினாமா. கூட்டுறவு சேவை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1280493
-
- 0 replies
- 207 views
-
-
காலிமுகத்திடல் போராட்டம் – பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை, பரிசீலிப்பதில் இருந்து... நீதிபதி விலகல் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இடம்பெற்று வரும் போராட்டம் தொடர்பில் பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலிப்பதில் இருந்து கொழும்பு நீதவான் ஹர்ஷன கெகுனாவல விலகியுள்ளார். கோட்டை பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை இன்று கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த போராட்டம் தொடர்பாக 102 வழக்குகள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கோட்டை பொலிஸ் தரப்பில் ஆஜரான அரச சட்டத்தரணி ஷவீந்திர விக்ரம தெரிவித்தார். எனவே, கோரிக்கையை பரிசீலிக்கத் தயாராக இருந்தால், அதுதொடர்பான உண்மை…
-
- 0 replies
- 197 views
-
-
கண்ணீர்ப்புகை தாக்குதலை தொடர்ந்து பாராளுமன்றில் அமைதியின்மை! சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவினால் பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தியத உயன பாராளுமன்ற நுழைவு வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸாரினால் கண்ணீர்ப்புகைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து பாராளுமன்றில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக பாராளுமன்றம் இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கண்ணீர்ப்புகை தாக்குதலை தொடர்ந்து பாராளுமன்றில் அமைதியின்மை! (காணொளி) - oosai.lk
-
- 3 replies
- 290 views
-
-
சபாநாயகரின் அறைக்குச் சென்று.. முக்கிய கோரிக்கையை, முன்வைத்தது எதிர்க்கட்சி நாடாளுமன்றத்தில் விரைவில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பிக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரின் அறைக்கு சென்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி, நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை, நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியது குறித்தும் அவர்கள் இதன்போது முறைப்பாடளித்தனர். https://athavannews.com/2022/1280515
-
- 0 replies
- 89 views
-
-
நாட்டில் ஏற்பட்டுள்ள... நெருக்கடி நிலை – விசேட அமைச்சரவைக் கூட்டம் இன்று! நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து கலந்துரையாடுவதற்காக விசேட அமைச்சரவை கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு இடம்பெறும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நாலக கொடஹேவா அறிவித்துள்ளார். இந்தக் கூட்டத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமை தாங்கவுள்ளார். பல தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள 24 மணிநேர ஹர்த்தால் காரணமாக இலங்கையின் பல துறைகள் இன்று ஸ்தம்பிதமடைந்துள்ளன. ஹர்த்தாலில் முக்கிய வர்த்தகப் பகுதிகள் மற்றும் பல முக்கிய நகரங்களில் கடைகள் மூடப்பட்டுள்ளதுடன், ரயில்கள் மற்றும் பேருந்துகள் மற்றும் பொது சேவைகள் உட்பட பல பொது போக்குவரத்துகள் நிறுத்தப…
-
- 0 replies
- 86 views
-
-
ஹர்த்தாலில் ஈடுபடும்... அரச ஊழியர்களின் சம்பளம், குறைக்கப்படும்? – ஜனாதிபதி ஊடகப்பிரிவு விளக்கம் ஹர்த்தால் போராட்டத்தில் ஈடுபடும் அரச ஊழியர்களின் மே மாத சம்பளம் குறைக்கப்படும் என சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் பிரசாரம் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 2022-05-03 திகதியிட்ட ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தலைப்புச் செய்தியைப் பயன்படுத்தி ஹர்த்தால் போராட்டத்தில் ஈடுபடும் அரச ஊழியர்களின் மே மாத சம்பளம் குறைக்கப்படும் என சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரம் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரச நிர்வாக அமைச்சுக்கு அவ்வாறான அறிவித்தல் எது…
-
- 0 replies
- 96 views
-
-
மஹிந்த ராஜபக்ஷவுடன் நான் இருப்பதாக இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். ஆனால், அவர்தான் மஹிந்த சரணம் கச்சாமி என ராஜபக்ஸக்களின் பின்னால் திரிந்தவர் என போட்டுடைத்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க. பாராளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நான் ராஜபக்ஷவர்களுடன் இருப்பதாக சாணக்கியன் குறிப்பிட்டார். ஆனால், நான் அவர்களுடன் இருக்கவில்லை, ராஜபக்ஷ பிரபாகரனுடன் சேர்ந்து என்னை தோற்கடிக்க நினைத்தார். இராசமாணிக்கம் சாணக்கியன் தொடர்பில் ஒரு விடயத்தை இங்கு தெரிவிக்க வேண்டும். 2013ஆம் ஆண்டு பெப்ரவரி 21ஆம் திகதி அருந்திக்க பெர்ணான்டோ மற்றும் சாணக்கியன் ஆகியோரை சுதந்திரக…
-
- 3 replies
- 275 views
-
-
ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக... 100 பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் குழு, நியமனம்? ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாக தீர்மானங்களை மேற்கொள்வதற்காக சிரேஷ்ட அதிகாரிகளின் தரவரிசையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக பல உள்ளூர் பத்திரிகைகளை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, துணைப் பொலிஸ் மா அதிபர் ஒருவர், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவுக்கு உதவியாக ஒரு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரை நியமித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தளம் பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் பெரேரா ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் பொலிஸ் குழுக்களுக்கு பொறுப்பாக நிய…
-
- 0 replies
- 65 views
-
-
5 மணி நேரம் வரை மின்சாரம் தடைப்படும் அறிகுறிகள் -CEB பொறியியலாளர் சங்கம் எச்சரிக்கை -சி.எல்.சிசில்- நுரைச்சோலை அனல்மின் நிலையத்திலிருந்து தேசிய மின் கட்டமைப்பு 270 மெகாவோட் மின்சாரத்தை இழந்துள்ளதாகவும், இதனால் எதிர்காலத்தில் மேலும் மின்வெட்டு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நாட்களில் சுமார் மூன்று மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டாலும், அந்த நேரம் சுமார் ஐந்து மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்படலாம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 270 மெகாவோட் எண்ணெய் இழப்பை ஈடு கட்டுவது நஷ்டம் என்றும், அந்தத் திறனை நீர் மின…
-
- 0 replies
- 94 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளவர்களை கூறப்போனால் கவலையாக உள்ளது. அவர்கள் மக்களை பற்றி கடந்த காலங்களில் சிந்திக்கவில்லை . மக்கள் எழுச்சி போராட்டத்தை பற்றி சிந்தியுங்கள். ஆட்சியாளர்களின் டீல்களை பற்றி சிந்திக்க வேண்டாம். இவ்வாறான டீல்களை பேசுவதை உடனடியாக கூட்டமைப்பினர் நிறுத்த வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தான் இவ்வாறான டீல்களை செய்தவர் என்பது எமக்கு தெரியும் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் உள்ள அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைமைக் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை(1) சர்வதேச தொழிலாளர் தினம் மற்றும் சமகால அரசியல் நிலைமை தொடர்…
-
- 0 replies
- 144 views
-
-
போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு... பொலிஸாரின், விசேட அறிவிப்பு போராட்டத்தில் ஈடுபடும் உரிமையை பயன்படுத்தும்போது, ஏனையவர்களின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படக்கூடாது என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் குறித்து வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலிலேயே அந்தப்ப பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. ஹர்த்தால் காரணமாக, தொழிலில் அல்லது வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என அச்சுறுத்தும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிக் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இன்றைய தினம், நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்க…
-
- 1 reply
- 234 views
-
-
நாடளாவிய ரீதியில்... இன்று ஹர்த்தால் – 2000க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் ஆதரவு! அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (வெள்ளிக்கிழமை) நாடளாவிய ரீதியில், ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கி, பல துறைசார் தொழிற்சங்கங்கள் சேவையிலிருந்து விலக தீர்மானித்துள்ளன. இதேநேரம், இன்றைய ஹர்த்தாலுக்கும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் கூட்டுப் போராட்டத்துக்கும் பதில் கிடைக்காவிட்டால் மே 11ஆம் திகதி முதல் அரசாங்கம் வீட்டுக்குச் செல்லும் வரை தொடர் வேலை நிறுத்தமும் தொடர் ஹர்த்தாலும் தொடரும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது. ஹர்த்தால் போராட்டத்திற்கு 2000க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் ஆதரவளித்துள்ளதாக தேசிய த…
-
- 1 reply
- 275 views
-
-
இலங்கை மக்களுக்கு... உதவும், தமிழக முதலமைச்சர் – நன்றி தெரிவித்தார் மஹிந்த..! இலங்கை மக்களுக்கு உதவுவதற்கு முன்வந்தமை குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக பிரதமரின் கையொப்பத்துடன், தமிழக முதலமைச்சருக்கு நேற்றைய தினம் கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. குறித்த கடித்தத்தில், தமிழக சட்டப் பேரவையில் தாங்கள் கொண்டுவந்த தனித் தீர்மானத்தின்படி, இலங்கையில் தற்போது நிலவிவரும் கடும் பொருளாதார சூழ்நிலையில், கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்துள்ளமை தங்களது நல்…
-
- 0 replies
- 197 views
-
-
நல்லூர் கோவில் குறித்து... அண்ணாமலை, புகழாரம். யாழ்ப்பாணம் – நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தைபோல் தமிழகத்தில் உள்ள ஆலயங்களை நடாத்தவேண்டும் என பா.ஐ.க கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் வைத்து தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த அவர், இலங்கையில் பல்வேறு இடங்களுக்கு விஐயங்களை மேற்கொண்டிருந்தார். அந்தவகையில் யாழ்ப்பாணத்திற்கான விஐயம் ஒன்றை மேற்கொண்ட போது நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்று தரிசனம் மேற்கொண்டு ஆலய நடைமுறைகளை நேரில் பார்வையிட்டிருந்தார். இந்தநிலையில் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “நல்லூர் கந்தசுவாமி கோயில் 13 நூற்றாண்டு பழமை வாய்ந்த கோயிலாகும். இவ்வாலயமானது தனிஒரு அற…
-
- 0 replies
- 251 views
-
-
மாவனெல்லையில்... புத்தர் சிலை உடைப்பு – 3 வருடங்களின் பின்னர், சந்தேகநபர்கள் விடுதலை மாவனெல்லையில் புத்தர் சிலைகளுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 14 சந்தேகநபர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், மேலும் 7 பேரை பிணையில் விடுவிக்கவும் மாவனெல்லை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மாவனல்லை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, விடுவிக்கப்படும் 14 சந்தேகநபர்கள் தொடர்பில் எதிர்காலத்தில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கவில்லை என சட்டமா அதிபர் நீதிமன்றில் அறியப்படுத்தியுள்ளார். சட்டமா அதிபரின் ஆலோசனையின…
-
- 0 replies
- 155 views
-
-
நாடாளுமன்ற வளாகத்தில், உருவானது... “ஹொரு கோ கம“ பல்கலைக்கழக மாணவர்களினால் நாடாளுமன்ற வளாகத்தில் ஹொரு கோ கம உருவாக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தினை அண்மித்து பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று(வியாழக்கிழமை) எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் நடத்தியிருந்தனர். இந்தநிலையிலேயே நாடாளுமன்ற வளாகத்தில் தற்போது ‘ஹொரு கோ கம“ என்ற பெயரிலான மாதிரி கிராமம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1280351
-
- 1 reply
- 214 views
-
-
அம்பாறை மாவட்டத்தில்... பொதுமக்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில்... மோதல் -11 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 16 பேர் காயம்! பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையே ஏற்பட்ட முரண்பாட்டில் 16 பேர் காயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள பொலிஸ் காவலரண் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இரவு 11 .30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த காவலரணில் கடமையில் இருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் பொலிஸார் அப்பகுதி வழியாக தலைக்கவசம் (ஹெல்மெட் ) அணியாமல் மோட்டார் சைக்கி…
-
- 0 replies
- 247 views
-
-
பல்கலைக்கழக மாணவர்களின், போராட்டத்தினை கலைக்கும் வகையில்... பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தினை கலைக்கும் வகையில் பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தினை முற்றுகையிட்டு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். அத்துடன், தடைகளை தகர்த்து முன்னேற முயற்சித்த நிலையில் போராட்டத்தினை கலைக்கும் வகையில் பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். https://athavannews.com/2022/1280346
-
- 0 replies
- 126 views
-
-
நடேசனின் வீட்டில்... சஜித்தின் தாயார், யாரை சந்தித்தார்? – மொஹமட் முஸம்மில் கேள்வி அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தாயார் நடேசனின் இல்லத்தில் யாரை சந்தித்தார் என்பதை வெளியிடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் குறிப்பிட்டார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இந்த விடயம் குறித்து தெரிவித்தார். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஒப்பந்தம் செய்துகொண்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவ்வாறானதொன்றும் நடக்கவில்லை என குறிப்பிட்டார். https://athavannews.com/2022/1280312
-
- 1 reply
- 404 views
-