ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143355 topics in this forum
-
தானியங்களுக்கு, தட்டுப்பாடு: மூடப்பட்டது ‘திரிபோஷா’ தொழிற்சாலை ! தானியங்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக அரசாங்கத்திற்கு சொந்தமான ‘திரிபோஷா’ தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவே திரிபோஷா ஆகும். சோளம் மற்றும் சோயா விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ள நிலையில் திரிபோஷவை உற்பத்தி செய்வதில் பிரச்சினை எழுந்துள்ளது. இருப்பினும் இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்குள் சோளம் அறுவடை செய்யப்பட்டவுடன் புதிய இருப்புகளை பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர். இதேவேளை நாடு முழுவதும் உள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளை ஊட்டச்சத்…
-
- 0 replies
- 181 views
-
-
குறைந்த வருமானம் பெறும்... 33 இலட்சம் பேருக்கு, நிவாரணம் – அரசாங்கம்! அதிகரிக்கின்ற பொருள் விலையேற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சமூர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் 33 இலட்சம் பேருக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தின் கீழ், இம்மாதம் முதல் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு மாதாந்தம் 5000 ரூபாய் முதல் 7500 ரூபாய் வரையிலான நிதியுதவியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 17 இலட்சத்து 65 ஆயிரம் சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்கள், 7 இலட்சத்து 30 ஆயிரம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் முப்பத்து மூன்று இலட்சம் (3300000) முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளர்களும் இந்த பலனை அனுபவிக்கும் வகையில்…
-
- 0 replies
- 257 views
-
-
கடல் வழியாக... தப்பி செல்ல முயன்ற, 67 பேர் திருகோணமலையில் கைது! சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தப்பிச் செல்ல முயன்ற 67 பேர் திருகோணமலையில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சாம்பல்தீவு மற்றும் திருகோணமலை கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 30 முதல் 40 வயதுடைய 12 ஆண்களுடன் கைது செய்யப்பட்டதோடு அவர்களிடம் இருந்து இரண்டு முச்சக்கர வண்டிகள், ஒரு கெப் மற்றும் ஒரு வேன் கைப்பற்றப்பட்டுள்ளது இதனை அடுத்து சந்தேகத்திற்கிடமான முறையில் பல நாட்களாக இருந்த மீன்பிடி இழுவை படகு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 45 ஆண்கள், 07 பெண்கள் மற்றும் 03 குழந்தைகள் உட்பட 03 …
-
- 1 reply
- 201 views
-
-
கோட்டா கோ கம... தாக்குதல் சம்பவம் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ CIDயில் முன்னிலை! வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 09ஆம் திகதி கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கமவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கடந்த மே மாதம் 09ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக இதுவரையில், ஆயிரத்து 591 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு, கைது செய்யப்பட்டவர்களில் 719 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் …
-
- 0 replies
- 235 views
-
-
எரிசக்தி நெருக்கடியை... சமாளிக்க, வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு ஊக்குவிப்பு! எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க வீட்டிலிருந்து வேலை செய்வது ஊக்குவிக்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிபொருளின் பயன்பாட்டைக் குறைக்கவும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வீட்டிலிருந்து வேலை செய்வது ஊக்குவிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தியாவசியமற்ற ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்குமாறு அரச நிறுவனங்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1283539
-
- 0 replies
- 145 views
-
-
21வது திருத்தத்தை... தாம் விரும்பியவாறு, கொண்டுவர அரசாங்கம் முயற்சி – சஜித் கடுமையான குற்றச்சாட்டு. சர்வஜன வாக்கெடுப்புக்கு மாறாக அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை தாம் விரும்பியவாறு கொண்டுவர இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கவும், 19 ஆவது திருத்தத்தை வலுப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு 20 ஆவது திருத்தத்தை இரத்து செய்யவும், ஆணைக்குழுக்களை சுயாதீனமாக்கும் முயற்சிகளையும் அரசாங்கம் கைவிட கூடாது என எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார். நேற்று சமூக வலைதளத்தில் காணொளி ஒன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ள அவர், அரசாங்கத்தின் மோசடி நடவடிக்கைகள் நி…
-
- 0 replies
- 160 views
-
-
அரசாங்க ஊழியர்களுக்கு... புதிய சுற்றறிக்கை! அத்தியாவசியமான ஊழியர்களை மாத்திரம் பணிக்கு அழைக்கும் அதிகாரத்தை திணைக்களத் தலைவர்களுக்கு வழங்கி புதிய புதிய சுற்றறிக்கை வெளியிடப்படும் என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை (24) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த சுற்றறிக்கை வெளியிடப்படும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த சுற்றறிக்கை பரீட்சைகள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு பொருந்தாது என்றும் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1283526
-
- 0 replies
- 146 views
-
-
21ஆவது திருத்தச் சட்டத்தை... அனைவரது ஒத்துழைப்போடும், நிறைவேற்ற எதிர்பார்ப்பு – ரணில் அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டத்தை முன்வைத்து அனைவரது ஒத்துழைப்போடும் அதனை நிறைவேற்றுவதற்கு எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர், “அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பான குழு கூடியது. அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் வரைபு குறித்து கலந்துரையாடி அமைச்சரவையில் முன்வைக்க தீர்மானிக்கப்பட்டது. மாலையில் இந்த வரைபு அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் இ…
-
- 0 replies
- 130 views
-
-
முச்சக்கர வண்டி, கட்டணத்திலும்... அதிகரிப்பு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை முதல் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், முச்சக்கர வண்டி கட்டணத்தில் அதிகரிப்பு ஏற்படவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் விசனம் வெளியிட்டுள்ளது. இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர, கடந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் எரிபொருள் விலைகள் அதிகரித்தபோது முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். அதன்போது பயணிகளுடன் கலந்துரையாடி கட்டணத்தை தீர்மானிக்குமாறு முச்சக்கரவண்டி நடத்துனர்களிடம் கோரிக்கை விடுத்ததாகவும் தற்போது அந்த பேச்சுவார்த்…
-
- 0 replies
- 110 views
-
-
எரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலி – பேருந்து கட்டணங்களும் அதிகரிப்பு! எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய பேருந்து போக்குவரத்து கட்டணம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கான கட்டணங்களில் திருத்தத்தை ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) நண்பகல் 12.00 மணிக்குப் பின்னர் பேருந்து கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்த அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 5 ரூபாயால் அதிகரிக்கப்படுமென குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2…
-
- 0 replies
- 169 views
-
-
சமையல் எரிவாயு விநியோகம், இடம் பெறமாட்டாது: வரிசையில் காத்திருக்க வேண்டாம் – லிட்ரோ நாட்டில் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) சமையல் எரிவாயு விநியோம் இடம்பெறமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக காத்திருப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் அந்த நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை, இரண்டு எரிவாயு கப்பல்களுக்கான 6.5 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுப்பனவு நேற்று செலுத்தப்பட்டுதாக அந்த நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். குறித்த கப்பல்கள் மூலம் 7 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் எரிவாயு நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளது. இதன் முதலாவது கப்பல் 3 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் எரிவாயுடன் எதிர்வர…
-
- 0 replies
- 226 views
-
-
வடக்கிலும்... 4ஆம் கட்ட தடுப்பூசி, செலுத்தும் பணிகள் முன்னெடுப்பு! வடக்கிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில், 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு 4ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வடக்கிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மூன்றாம் தடுப்பூசியைப் பெற்றவர்கள், 3 மாதங்களுக்குப் பின்னர் நான்காம் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1283503
-
- 0 replies
- 184 views
-
-
டக்ளஸ் தேவானந்தா, உட்பட... மேலும் 08 அமைச்சர்கள், பதவியேற்பு. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அரசாங்கத்தின் மிகுதி அமைச்சர்கள் இன்று திங்கட்கிழமை பதவியேற்றுள்ளனர். ஏற்கனவே 13 அமைச்சரவை அமைச்சர்கள் இருவேறு தினங்களில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்நிலையில் இன்று புதிதாக 10 அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். அதன்படி சுதந்திரக் கட்சியின் நாடளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர விவசாயம், வனவிலங்கு மற்றும் வனத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். கெஹலிய ரம்புக்வெல்ல நீர் வழங்கல், ரொஷான் ரணசிங்க – நீர்ப்பாசனம், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சராகவும் விதுர விக்ரமநாயக்க பௌத…
-
- 14 replies
- 1.1k views
-
-
ரணில் தலைமையிலான... அரசாங்கம், பொருளாதார பிரச்சினைக்கு... தீர்வு காணும் – அசாத் சாலி. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம், நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காணும் என்ற நம்பிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், புலம்பெயர் இலங்கையர்களும் உதவ முன்வர வேண்டுமென தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல்மாகாண முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,“அந்நியச்செலாவணி வருமானத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியை சரிசெய்வதற்கு, நாட்டிற்குள் அதிகளவு டொலர் வரவேண்டும். புலம்பெயர் இலங்கையர்கள், வௌிநாடுகளில் இதைச் சேகரித்து இலங்கை மத்திய வங்கிக்கு அனுப்பும் முயற்சிகளில் இறங்குவது அவசியம். இவ்விடயத்தில், குறுகிய மனநிலையில் செயற்படக்…
-
- 1 reply
- 221 views
-
-
மருந்துகள் பற்றாக்குறையால்... மரணங்கள், நிகழலாம் – மருத்துவர்கள் எச்சரிக்கை! இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மருந்து தட்டுப்பாட்டால் விரைவில் மரணங்கள் நிகழலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். அத்தியாவசிய மருந்துகள் இல்லாததால் மருத்துவர்கள் உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகளை ஒத்திவைக்க வேண்டியிருந்தது என்று மருத்துவர்களை மேற்கோள்காட்டி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 80 வீதமான மருந்துகள் இலங்கையினால் இறக்குமதி செய்யப்படுகின்றன. எனினும், அந்நியச் செலாவணி தட்டுப்பாடு காரணமாக, மருந்து இறக்குமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல மருந்துகளுக்கு சந்தையில் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மஹரகம வைத்தியசாலையில…
-
- 1 reply
- 206 views
-
-
எரிபொருள் விலைகள்... இன்று நள்ளிரவு முதல், அதிகரிப்பு? வெளியாகிறது... அறிவிப்பு? எரிபொருள் விலைகள் இன்று(திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய ஒக்டென் 92 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 420 ரூபாய் என கூறப்படுகின்றது. அத்துடன், ஒக்டென் 95 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 450 ரூபாய் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விற்பனை விலை 400 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறே, சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விற்பனை விலை 445 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தல் இன்னும் சற்று நேரத்தில் வெளியிட…
-
- 0 replies
- 230 views
-
-
மக்கள் ஆதரவளிக்கா விட்டால்... எரிபொருள் விநியோகம், இடைநிறுத்தப்படும் என எச்சரிக்கை! மக்கள் ஆதரவளிக்காவிட்டால் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் உப தலைவர் குசும் சந்தநாயக்க இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று இரவு 10 மணிக்கு மூடப்படவிருந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 2 மணி வரை எரிபொருள் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், வரிசையில் நின்றவர்கள் பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் கீழ்ப்படியாமல் 3.30 மணி வரை எரிபொருளை விநியோகிக்குமாறு பலவந்தமாக கேட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேநிலை நீடித்தா…
-
- 0 replies
- 202 views
-
-
வெளிநாடுகளுக்கு, வேலை வாய்ப்புக்காக... செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு! இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 5 ஆயிரத்து 821 பேர் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளனர். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2021ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களுடன் ஒப்பிடுகையில் 286 சதவீதம் அதிகமாகும் எனவும் குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 25 ஆயிரத்து 224 பெண்களும் 13 ஆயிரத்து 441 ஆண்களும் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மூலம் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளனர். …
-
- 0 replies
- 192 views
-
-
பெற்றோல் மற்றும் மருந்து இன்மையால்... 2 குழந்தைகள் உயிரிழப்பு: ஜனாதிபதி பதவி விலக வேண்டும் – மஹேல ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். பெற்றோல் மற்றும் மருந்து பற்றாக்குறையினால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பாக வைத்தியர் ஒருவரின் பதிவிற்கு மஹேல கருத்துத் தெரிவித்துள்ளார். குறித்த பதிவில், “இதை படித்துவிட்டு கோட்டாபய ராஜபக்ஷ குற்ற உணர்வுடன் இருந்தால் உடனடியாக பதவி விலக வேண்டும். இந்த நிலைக்கு அவரே நேரடிப் பொறுப்பு. அத்தோடு, இந்த நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருமே இதற்கு ப…
-
- 1 reply
- 215 views
- 1 follower
-
-
அமைச்சரவையில்... முன்வைக்கப்பட்டது, 21 ஆவது திருத்தச் சட்டமூலம்! அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம், அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் இன்று(திங்கட்கிழமை) மாலை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடியது. இதன்போதே 21 ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சட்டமூலம் தொடர்பில் கட்சி தலைவர்களின் கருத்துகளை, பெற்ற பின்னர் திருத்தப்பட்ட சட்டமூலத்தை, எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் முன்வைப்பதற்கு இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1283485
-
- 0 replies
- 194 views
-
-
இனப்படுகொலை தொடர்பில் கனேடிய நாடாளுமன்றத்தின் தீர்மானம் – பீரிஸ் கடும் எதிர்ப்பு இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாக கடந்த 18ஆம் திகதி கனேடிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இக்குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்த வெளிவிவகார அமைச்சர், தீர்மானத்தின் உள்ளடக்கம் மற்றும் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்ற கனேடிய அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவித்தார். இலங்கைக்கான பதில் கனேடிய உயர்ஸ்தானிகர் அமண்டா ஸ்ட்ரோஹானுடன் வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பில் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனைத் தெரிவி…
-
- 1 reply
- 320 views
-
-
நோயாளிகளுக்கான... சுமார் 300 அத்தியாவசிய மருந்துகளுக்கு, கடும் தட்டுப்பாடு? நோயாளிகளுக்கான சுமார் 300 அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஆயுட்காலத்தை நேரடியாக பாதிக்கும் 25 அத்தியாவசிய மருந்துகள் எந்தவொரு அரச மருத்துவமனைகளிலும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. தீவிர இதய நோய்க்கான மருந்துகள், புற்றுநோயாளிகளுக்கான மருந்துகள், நீரிழிவு நோய்க்கான தடுப்பூசிகளான இன்சுலின் போன்றவையே இவ்வாறு அரச மருத்துவமனைகளில் இல்லை என கூறப்படுகிறது. இந்த 25 மருந்துகளுக்கும் தனியார்துறை மருந்தகங்களிலும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. டொலர் தட்டுப்பாடு மட்டுமின்றி, தேசிய மருந்து ஒ…
-
- 0 replies
- 146 views
-
-
நாட்டின் பிள்ளைகளுக்காகவே... அமைச்சுப் பதவியை, பொறுப்பேற்றேன் – ஹரின் பெர்னாண்டோ நாட்டின் பிள்ளைகளுக்காகவும் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்காகவும் நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியானவேளையில் தான் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) காலை அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அரசியலமைப்பின் 21வது திருத்தம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், இல்லை என்றால் அரசாங்கத்தில் இருந்து விலகுவேன் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “சுற்றுலாத்துறைக்கு புத்துயிர் அளிக்கும் வேலைத்திட்டத்தில், இலங்கையில் உள்ள அனைத்து அறிஞர்களையும்…
-
- 0 replies
- 199 views
-
-
இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்: ரூபாயின் பெறுமதி கடும் வீழ்ச்சி. இலங்கை மத்திய வங்கியினால் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 225.20 ரூபாயாகவும் விற்பனை விலை 229.99 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. மேலும் ஸ்டெர்லிங் பவுண்டின் கொள்முதல் விலை 294.06 ரூபாயாகவும் மற்றும் விற்பனை விலை 302.92.ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. அவுஸ்ரேலிய டொலரின் கொள்முதல் விலை 163.74 ஆகவும், விற்பனை விலை 170.15. ரூபாயாகவும் கனேடிய டொலரின் கொள்முதல் விலை 174.73 மற்றும் விற்பனை விலை 180.90 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. https://athavannews.com/2022/12710…
-
- 10 replies
- 1.3k views
- 1 follower
-
-
பொருளாதார நெருக்கடியால் கொழும்பில் ஆயிரக்கணக்கான குடுமபங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்-ரணில் விக்கிரமசிங்கவுக்கு மனோ கணேசன் கடிதம் பொருளாதார நெருக்கடியால் கொழும்பில் ஆயிரக்கணக்கான குடுமபங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களது நிலைமையை எடுத்துக்கூறி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கொழும்பு பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கடிதம் ஒன்றை உழுதியுள்ளார். உணவு இல்லை. காஸ் இல்லை. மின்சாரம் இல்லை. இவற்றால் நாட்டிலேயே மிகவும் துன்புறுவது கொழும்பு தொடர்மாடி குடியிருப்புகளில் வாழும் மக்கள்தான். மாநகரத்தில் நாளாந்த வருமானம் பெற்று வந்த குடும்பங்கள், ஒருவேளை உணவுமின்றியும், உணவு சமைக்க வழியுன்றியும் தவிக்கிறார்கள். குறிப்பாக, வடகொழும்பின் பின்தங்கிய நகர தோட்ட குடி…
-
- 0 replies
- 139 views
-