ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
நல்லூர் கோவில் குறித்து... அண்ணாமலை, புகழாரம். யாழ்ப்பாணம் – நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தைபோல் தமிழகத்தில் உள்ள ஆலயங்களை நடாத்தவேண்டும் என பா.ஐ.க கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் வைத்து தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த அவர், இலங்கையில் பல்வேறு இடங்களுக்கு விஐயங்களை மேற்கொண்டிருந்தார். அந்தவகையில் யாழ்ப்பாணத்திற்கான விஐயம் ஒன்றை மேற்கொண்ட போது நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்று தரிசனம் மேற்கொண்டு ஆலய நடைமுறைகளை நேரில் பார்வையிட்டிருந்தார். இந்தநிலையில் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “நல்லூர் கந்தசுவாமி கோயில் 13 நூற்றாண்டு பழமை வாய்ந்த கோயிலாகும். இவ்வாலயமானது தனிஒரு அற…
-
- 0 replies
- 252 views
-
-
மாவனெல்லையில்... புத்தர் சிலை உடைப்பு – 3 வருடங்களின் பின்னர், சந்தேகநபர்கள் விடுதலை மாவனெல்லையில் புத்தர் சிலைகளுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 14 சந்தேகநபர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், மேலும் 7 பேரை பிணையில் விடுவிக்கவும் மாவனெல்லை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மாவனல்லை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, விடுவிக்கப்படும் 14 சந்தேகநபர்கள் தொடர்பில் எதிர்காலத்தில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கவில்லை என சட்டமா அதிபர் நீதிமன்றில் அறியப்படுத்தியுள்ளார். சட்டமா அதிபரின் ஆலோசனையின…
-
- 0 replies
- 156 views
-
-
நாடாளுமன்ற வளாகத்தில், உருவானது... “ஹொரு கோ கம“ பல்கலைக்கழக மாணவர்களினால் நாடாளுமன்ற வளாகத்தில் ஹொரு கோ கம உருவாக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தினை அண்மித்து பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று(வியாழக்கிழமை) எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் நடத்தியிருந்தனர். இந்தநிலையிலேயே நாடாளுமன்ற வளாகத்தில் தற்போது ‘ஹொரு கோ கம“ என்ற பெயரிலான மாதிரி கிராமம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1280351
-
- 1 reply
- 215 views
-
-
அம்பாறை மாவட்டத்தில்... பொதுமக்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில்... மோதல் -11 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 16 பேர் காயம்! பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையே ஏற்பட்ட முரண்பாட்டில் 16 பேர் காயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள பொலிஸ் காவலரண் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இரவு 11 .30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த காவலரணில் கடமையில் இருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் பொலிஸார் அப்பகுதி வழியாக தலைக்கவசம் (ஹெல்மெட் ) அணியாமல் மோட்டார் சைக்கி…
-
- 0 replies
- 247 views
-
-
பல்கலைக்கழக மாணவர்களின், போராட்டத்தினை கலைக்கும் வகையில்... பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தினை கலைக்கும் வகையில் பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தினை முற்றுகையிட்டு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். அத்துடன், தடைகளை தகர்த்து முன்னேற முயற்சித்த நிலையில் போராட்டத்தினை கலைக்கும் வகையில் பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். https://athavannews.com/2022/1280346
-
- 0 replies
- 127 views
-
-
நடேசனின் வீட்டில்... சஜித்தின் தாயார், யாரை சந்தித்தார்? – மொஹமட் முஸம்மில் கேள்வி அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தாயார் நடேசனின் இல்லத்தில் யாரை சந்தித்தார் என்பதை வெளியிடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் குறிப்பிட்டார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இந்த விடயம் குறித்து தெரிவித்தார். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஒப்பந்தம் செய்துகொண்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவ்வாறானதொன்றும் நடக்கவில்லை என குறிப்பிட்டார். https://athavannews.com/2022/1280312
-
- 1 reply
- 405 views
-
-
மஹிந்த ராஜபக்ஷ பேட்டி: அழுத்தங்களுக்கு அடிபணிந்து விலக மாட்டேன் 5 மே 2022, 04:50 GMT பட மூலாதாரம்,MAHINDA RAJAPAKSA FB (இலங்கை, இந்திய செய்தித் தாள்கள், இணைய தளங்களில் இன்று வெளியான செய்திகளில் முக்கியமான சில செய்திகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.) நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்தும் தரப்பினரிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்கத்தயார், அதனை விடுத்து அழுத்தங்களுக்கு அடிபணிந்து பதவி விலகப் போவதில்லை என, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கட்சித் தலைவர் கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக, 'வீரகேசரி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், நாட்டின் பொருளாதார, சமூக கூட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள அடிப்ப…
-
- 1 reply
- 258 views
- 1 follower
-
-
65 பேர் மட்டுமே... மக்களுக்காக, நாடாளுமன்றில் உள்ளோம் – 148 பேர்... ராஜபக்ஷக்களுடனேயே தற்போதும் உள்ளனர்: சாணக்கியன் நாடாளுமன்றில் 65 பேர் மட்டுமே மக்களுக்காக உள்ளதாகவும் 148 பேர் ராஜபக்ஷக்களுடனேயே தற்போதும் உள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றிய அவர், நாடாளுமன்றில் நடத்தப்பட்ட, நடத்தப்படும் நாடகங்கள் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக குறிப்பிட்டார். ஏனென்றால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவை தெரிவு செய்வார்களென தான் நினைக்கவில்லை என அவர் தெரிவித்தார். ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவிற்கு வாக்களித்து, அவரை பிரதி சபாநாயகராக தெரிவு செய்த 148 பேரும் தற்போக…
-
- 3 replies
- 529 views
-
-
40 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளை... ஏற்றிய கப்பல், நாட்டினை வந்தடைந்தது! இந்தியாவில் இருந்து 40 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளை ஏற்றிய கப்பல் ஒன்று நேற்று(புதன்கிழமை) இலங்கையினை வந்தடைந்துள்ளது. இந்தியா தனது உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் இதுவரை 4 இலட்சத்து 40 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளினை வழங்கியுள்ளது என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் அதிக எரிபொருள் இருப்புக்கள் வழங்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1280208
-
- 5 replies
- 402 views
-
-
பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான... மாணவர் சம்மேளனத்தின், எதிர்ப்பு ஊர்வலம் ஆரம்பம் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் எதிர்ப்பு ஊர்வலம் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு எதிரில் இருந்து ஆரம்பமாகியுள்ளது. https://athavannews.com/2022/1280323
-
- 0 replies
- 166 views
-
-
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, ஆதரவளித்தால்... என்ன நடக்கும்? – எதிர்க்கட்சியிடம்... அரசாங்கத்தில் இருந்து விலகியவர்கள் கேள்வி ஐக்கிய மக்கள் சக்தி சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளித்தால் என்ன நடக்கும் என, அரசாங்கத்தில் இருந்து விலகி சுதந்திரமாக எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இதன்படி, குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பின்னர், சர்வகட்சி அரசாங்கத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி இணையுமா, அல்லது எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அதில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. https://athavannews.com/202…
-
- 0 replies
- 134 views
-
-
எரிபொருளுக்கான... வெளிப்படையான விலைச் சூத்திரம், அடுத்தவாரம் – எரிசக்தி அமைச்சு எரிபொருளுக்கான வெளிப்படையான விலைச் சூத்திரத்தை அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அறிமுகப்படுத்தவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்படுவது இலாபம் ஈட்டுவதற்காக அல்ல என்றும் நட்டத்தைக் குறைப்பதற்காகவே என்றும் அமைச்சர் தெரிவித்தார். பெரும்பாலான எரிபொருளை ரயிலில் கொண்டு செல்லும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், தற்போது இலங்கையில் போதியளவு பெற்றோல் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மூன்று நாட்களில் பெற்றோல் நிலைமையை வழமைக்கு கொண்டுவர முடியும் எ…
-
- 0 replies
- 132 views
-
-
இன்று, நள்ளிரவு முதல்... சேவையில் இருந்து விலகுவதற்கு, இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தீர்மானம்! இன்று(வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் சேவையில் இருந்து விலகுவதற்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது. தேவையான எரிபொருள் கிடைக்காததன் காரணமாக நாளை முன்னெடுக்கவுள்ள ஹர்த்தால் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1280239
-
- 0 replies
- 81 views
-
-
கோட்டா கோ கம போராட்டக்காரர்கள்... தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவரை, சந்தித்தனர் கோட்டா கோ கம போராட்டக்களத்தில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவாவை சந்தித்துள்ளது. இந்த சந்திப்பில் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடியதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். தற்போதைய நெருக்கடியைத் தீர்ப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு எந்த வகையான நடவடிக்கை அல்லது தலையீட்டை எடுக்கலாம் என்பது குறித்து இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கவலை வெளியிட்டனர். தற்போதைய நிலைமை தொடர்பாக மக்கள் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்ப்பதற்கு தேர்தல்கள்…
-
- 0 replies
- 117 views
-
-
‘அரசாங்கத்தை அகற்றுவோம், ஆட்சியை கவிழ்ப்போம்’ என்ற தொனிபொருளில் பாரிய ஆர்ப்பாட்டம்! அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. ‘அரசாங்கத்தை அகற்றுவோம், ஆட்சியை கவிழ்ப்போம்’ என்ற தொனிப்பொருளில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று(வியாழக்கிழமை) நண்பகல் 12 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகவுள்ளது. திருடப்பட்ட பணத்தை மீட்பது, நிறுவனங்களால் செலுத்தப்படாத வரிகளை மீளப் பெறுதல், கடந்த காலங்களில் இடம்பெற்ற காணாமல் போனோர் மற்றும் கொலைகள் தொடர்பில் மீள் விசாரணை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்தல், இலவசக் கல்வி, இலவச சுகாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்…
-
- 0 replies
- 90 views
-
-
புதிய விமானங்களை... கொள்வனவு செய்வதற்கான முடிவை. ஒத்திவைக்குமாறு... ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது – சரித ஹேரத்! ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் பொது நிறுவனங்கள் தொடர்பான கோப் குழுவின் அறிக்கை இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்தக் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் இதனை சமர்பித்தார். இதேநேரம், புதிய விமானங்களை கொள்வனவு செய்வது குறித்து ரணில் விக்ரமசிங்கவுக்கு பதிலளித்த அவர், புதிய விமானங்களை கொள்வனவு செய்வதற்கான தனது முடிவை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஹேரத் கூறினார். 2022-2025 காலப்பகுதிக்கு 21 விமானங்களை குத்தகைக்கு எடு…
-
- 0 replies
- 78 views
-
-
நாளாந்த மின் துண்டிப்பை... 5 மணி நேரமாக, அதிகரிக்கும் நிலை? நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் கட்டமைப்பு செயலிழந்தமை காரணமாக நாளாந்த மின் துண்டிப்பை 5 மணி நேரமாக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அணில் ரஞ்சித் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தற்போது அமுல்படுத்தப்படும் 3 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு மேலதிகமாக மின் துண்டிப்பு காலத்தை அதிகரிக்க வேண்டாம் என இலங்கை மின்சார சபைக்கு அறியப்படுத்தியுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1280201
-
- 0 replies
- 123 views
-
-
சபாநாயகரின் அறிவிப்பினால்... பிரதி சபாநாயகர் தெரிவில், குழப்பம்! சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் அறிவிப்பு காரணமாக புதிய பிரதி சபாநாயகர் தெரிவில் குழப்பநிலை ஏற்பட்டிருந்ததுடன், அமைதியின்மையும் ஏற்பட்டிருந்தது. இன்று காலை நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகியிருந்த நிலையில், கேள்வி நேரத்தினைத் தொடர்ந்து புதிய பிரதி சபாநாயகர் தெரிவு இடம்பெறவுள்ளமை குறித்த அறிவிப்பினை சபாநாயகர் வெளியிட்டார். இதன்போது கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் பெயர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்மொழியப்பட்டதுடன், சுசில் பிரேமஜயந்தவினால் வழிமொழியப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரஞ்சித் சியம்பலாபிட்டியவிற்கு ஆதரவளிப்…
-
- 0 replies
- 115 views
-
-
2,000 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள், மற்றும் சிவில் சமூக அமைப்புகள்... ஹர்த்தாலுக்கு ஆதரவு! சுகாதாரம், போக்குவரத்து, ரயில்வே, மின்சாரம் மற்றும் கல்வித் துறைகளில் உள்ள நூற்றுக்கணக்கான தொழிற்சங்கங்கள் உட்பட 2,000 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் நாளை (வெள்ளிக்கிழமை) நாடு தழுவிய ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது. நாளை நடைபெறும் ஹர்த்தாலுக்கும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் கூட்டுப் போராட்டத்துக்கும் பதில் கிடைக்காவிட்டால் மே 11ஆம் திகதி முதல் அரசாங்கம் வீட்டுக்குச் செல்லும் வரை தொடர் வேலை நிறுத்தமும் தொடர் ஹர்த்தாலும் தொடரும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரி…
-
- 2 replies
- 186 views
-
-
இலங்கை மக்களுக்கு உதவ நன்கொடை தேவை இலங்கை மக்களுக்கு உதவி செய்ய நன்கொடை அளிக்க முன்வர வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளார். கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கை மக்களுக்கு உதவி செய்ய தமிழகத்திலிருந்து பொருள்களை அனுப்ப மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது: இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக…
-
- 4 replies
- 426 views
-
-
அரசாங்கத்திலுள்ளவர்களுடன் இணைந்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்கத் தயாரில்லை - சரத் பொன்சேகா ( எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) அரசாங்கத்தில் இருக்கும் உறுப்பினர்களுடன் இணைந்துகொண்டு இடைக்கால அரசாங்கம் அமைக்க நாங்கள் தயார் இல்லை. அவ்வாறு இடம்பெற்றால் அது புதிய போத்தலில் பழைய சாராயம் போன்றாகும். அதேபோன்று ஜனாதிபதி, பிரதமரை நீக்கிவிட்டு இடைக்கால அரசாங்கம் அமைத்தாலும் இதனை செய்ய முடியாதது. ஏனெனில் ஜோன்ஸ்டன், மஹிந்தானந்தவை ஜனாதிபதி, பிரதமராக்கினால் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா எனவும் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொ…
-
- 0 replies
- 188 views
-
-
வரவு - செலவு திட்டம் மறுசீரமைக்கபட்டு வரி வருமானம் 15 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட வேண்டும் - அலி சப்ரி (எம்.ஆர்.எம்.வஸீம், இராஜதுரை ஹஷான்) பொருளாதார நெருக்கடிக்கான பொறுப்பினை அரசாங்கம் முழுமையாக ஏற்கிறது. வரிக்குறைப்பு செய்தமை தவறான தீர்மானமாகும். சமூக கட்டமைப்பில் அத்தியாவசிய சேவை விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு இன்னும் 2 வருட காலத்தின் பின்னராவது தீர்வு காண முடியுமா என குறிப்பிட முடியாது. தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். நடைமுறையில் உள்ள வரவு - செலவு திட்டம் யதார்த்த நிலைமைக்கு பொருந்தும் வகையில் அமையவில்லை. தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் வரவு செலவு திட்டம் மறுசீரமைக்கபட்டு வரி …
-
- 0 replies
- 140 views
-
-
நாடாளுமன்ற... நுழைவு வீதிகளுக்கு, பூட்டு – மாற்று வீதிகளை... பயன்படுத்துமாறு அறிவிப்பு நாடாளுமன்ற நுழைவு வீதிகள் முற்றாக மூடப்பட்டுள்ளதால் வாகன சாரதிகள் இன்று மற்றும் நாளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி,நாடாளுமன்றத்தை அண்மித்த தியத்த உயன பொல்தூவ சந்திமுதல் ஜயந்திபுர சந்திவரையான வீதியும் ஜயந்திபுர சந்தி முதல் கியங்ஹேன் சந்திவரையான வீதியும் இன்றும் நாளையும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் பாதுகாப்பு காரணங்களுக்காக பொல்துவ சுற்றுவட்டத்திலிருந்து நாடாளுமன்றம் வரையான வீதி நேற்று இரவு முதல் மூடப்பட்டுள்ளது. இதனால் நாடாளுமன்றத…
-
- 0 replies
- 140 views
-
-
போராட்டக்காரர்களை கைது செய்த.. பொலிஸ் அதிகாரிகளுக்கு, மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு! போராட்டக்காரர்களை கைது செய்த பொலிஸ் அதிகாரிகளை விசாரணைக்கு அழைக்கவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் நேறறு பிற்பகல் ஆர்ப்பாட்டக்காரர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், இது குறித்து தெரிவித்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL), குடிமகனின் அடிப்படை உரிமையான பேச்சு மற்றும் கருத்துரிமைக்கு மதிப்பளிக்குமாறும் அமைதியான போராட்டங்களை நசுக்க மாட்டோம் என்பதை உறுதிப்படுத்துமாறும் பொலிஸாருக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. 14(1) (அ) பிரிவின் கீழ், நாடாளுமன்ற உறுப்பினர்களை விமர்சிப்பது பேச்…
-
- 0 replies
- 184 views
-
-
கோட்டா – மைனா கோ கமவில்.. அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள், தொடர்ந்தும் முன்னெடுப்பு அரசாங்கத்துக்கு எதிராக காலி முகத்திடலில் “கோட்டா கோ கம“ ஆர்ப்பாட்டக்களத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் 27ஆவது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) தொடர்கிறது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தற்போதைய அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகைதந்த மக்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருகின்றனர். அதேநேரம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி அலரி மாளிகைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டமும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தப் போராட்டத்தி…
-
- 0 replies
- 184 views
-