Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம், ரஜிவர்மனின் நினைவு தினம் யாழ்.ஊடக அமையத்தில் அனுஷ்டிப்பு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான தராகி சிவராம் மற்றும் ரஜிவர்மன் ஆகியோரின் நினைவு தினம் இன்றைய தினம் யாழ். ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ் ஊடக அமையத்தில் இன்று மதியம் 12 மணியளவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு தராகி சிவராம் மற்றும் ரஜிவர்மன் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் மாலை அணிவித்து , மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள். தராகி என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு 17 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஊடகவியலாளர் தராகி சிவராம் கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி கொழும்பு ப…

  2. சிங்கக் கொடிகளுடனான... மக்கள் கூட்டத்தால், நிரம்பியது... கொழும்பு காலிமுகத்திடல்! கொழும்பு – காலிமுகத்திடல் சிங்கக் கொடிகளுடனான மக்கள் கூட்டத்தால் நிரம்பியுள்ளது. கொழும்பு – காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு ஆதரவாக ஆயிரம் தொழிற்சங்கங்கள் இன்று (வியாழக்கிழமை) ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த வேலைநிறுத்தத்தை முன்னிட்டு, சில தொழிற்சங்கங்கள் கொழும்பு காலிமுகத்திடலில் உள்ள கோட்டா கோ கம வளாகத்தை நோக்கி பேரணியாகச் செல்கின்றன. இதனால் காலிமுகத்திடல் படிப்படியாக மக்கள் கூட்டம் அதிகரித்து நிரம்பி வருகிறது. ஒவ்வொரு தொழிற்சங்கங்களும் தனித்துவம் வாய்ந்த கொடிகள் மற்றும் வண்ணங்களுக்கு பதிலாக சிங்கக் கொடிகளை ஏந்தி போராட்ட…

    • 2 replies
    • 343 views
  3. ஆளுங்கட்சிக்கு... ‘113’ இல்லையேல், புதிய பிரதமரை நியமிப்பேன் – ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு நான் வலியுறுத்தவில்லை. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்குமானால் அப்பதவியில் அவர் நீடிப்பதில் எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. அவ்வாறு இல்லாவிட்டால் பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்புக்கு ஆட்சியை ஒப்படைக்க வேண்டிய நிலை எனக்கு ஏற்படும். இது அரசமைப்பிலுள்ள ஏற்பாடு. அதற்கு கட்டுப்பட்டாக வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்றிரவு(வியாழக்கிழமை) ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் ஆரம்பத்தில் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள …

  4. மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக... பொதுமக்களின், கருத்துக்களை பெற்றுக் கொள்ள... நடவடிக்கை! அரசாங்கத்தின் கொள்கையைப் பெற்றவுடன் மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக்கோரப்படவுள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்டுள்ள விலை அதிகரிப்புக்கான திருத்தம் தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கையை அண்மையில் கேட்டறிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீர் மின் பற்றாக்குறையால் அதிக எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் ஒரு அலகு மின்சாரத்துக்கான செலவு அதிகரித்துள்ளது. இலங்கை மின்சார சபை ஒரு அலகு மின்சார…

  5. திரிபோஷா உற்பத்தி, மூன்று மாதங்களுக்கு... இடைநிறுத்தம்! மூலப்பொருட்கள் பற்றாக்குறையால் திரிபோஷா உற்பத்தி மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன. குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவர் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தினால் திரிபோஷ விநியோகம் செய்யப்படுவதில்லையென குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் திரிபோஷ இன்மையால் சிறுவர்கள் போசாக்கின்மைக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முதல் சில மாதங்களில் மட்டுமே தமக்கு திரிபோஷ கிடைத்ததாக அப்பகுதி கர்ப்பிணித் தாய்மார்கள் குற்றம் சுமத்தியிருந்தனர் என்பத…

  6. IMF உடன்... இரண்டு மாதங்களுக்குள், ஒப்பந்தம்! சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் ஒன்று அடுத்த இரண்டு மாதங்களுக்குள் எட்டப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை வர்த்தக சம்மேளன கூட்டத்தில் உரையாற்றும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்காக, கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன், ஆரம்பநிலை அதாவது, பணிக்குழாம் மட்டத்திலான இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வதற்கு முன்னர், இலங்கை அத்தியாவசியமாக நிறைவேற்ற வேண்டியவை என எதிர்பார்க்கப்படும் செயற்பாட்டை பூரணப்படுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார…

  7. அரசாங்கத்திற்கு எதிரான... நம்பிக்கையில்லா பிரேரணை, 4ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்படும் என தகவல்! அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 4ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது வரை குறித்த பிரேரணையில் சுமார் 125 பேர் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக 11 கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அரசாங்கத்திலிருந்து வெளியேறி சுயேற்சையாக இயங்கி வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1279067

  8. உக்ரேன் மற்றும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின், விசா காலத்தை நீடிக்க தீர்மானம்! ரஷ்யா – உக்ரைன் நெருக்கடி காரணமாக இலங்கையில் தங்கியுள்ள உக்ரேன் மற்றும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் விசா காலத்தை நீடிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதற்கமைய சுற்றுலாப் பயணிகள் குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்தோ அல்லது இணையம் ஊடாகவோ விசாவை நீடித்துக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை முடிவின்படி, 2022.02.28 இற்குள் விசா காலாவதியாகும் சுற்றுலாப் பயணிகளுக்கு 2022.05.22 வரை ஒரு மாத கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1279062

  9. இடைக்கால அரசாங்கத்தினை... அமைப்பது தொடர்பான, முக்கிய கலந்துரையாடல் இன்று! இடைக்கால அரசாங்கத்தினை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மாளிகையில் காலை 10.30 மணிக்கு இந்தக் கலந்துரையாடல் ஆரம்பமாகவுள்ளது. குறித்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, 10 கட்சிகள் அடங்கிய குழு மற்றும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி சுயேச்சையாக செயற்பட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ள தீர்மானித்துள்ளனர். பிரதமர் மற்றும் அவரது அமைச்சரவை இராஜினாமா செய்த பின்னர் அமைக்கப்படும் காபந்து அரசாங்கம் குறித்து இதன்போது பேசப்படவுள்ளது. அத்துடன், இடைக்கால அரசாங்கத்தின் கட்டமைப்ப…

  10. க.பொ.த உயர்தரம் – சாதாரணதரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான... திகதிகள் குறித்த அறிவிப்பு வெளியானது! 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரம் (சா/த), உயர்தரம் (உ/த) மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதிகளை பரீட்சை திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன, 2022 சாதாரண தர பரீட்சை (O/L) மே 23 (திங்கட்கிழமை) முதல் ஜூன் 1 ஆம் திகதி (புதன்கிழமை) வரை ஒன்பது நாட்களுக்கு நடைபெறும் என்று தெரிவித்தார். அதேபோல தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 6ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளதாக குறிப்பிட்டார். மேலும் 2022 உயர்தரப் பரீட்சை (A/…

  11. ஜனாதிபதிக்கு எதிராக... சுமந்திரன், தயாரித்துள்ள பிரேரணை தயார்: ஐ.தே.க. உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு? ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தயாரித்துள்ளதுடன், அது நாடாளுமன்றம் கூடியதும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்தப் பிரேரணைக்கு ஐக்கியத் தேசியக் கட்சி ஏற்கனவே தனது ஆதரவைத் தெரிவித்துள்ளதாகவும் தற்போது ஏனைய எதிர்க்கட்சிகளிடமும் கையொப்பங்களை சேகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த பிரேரனையில் 113 கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டால், ஜனாதிபதியை நீக்குவதற்கான சட்டபூர்வமான தன்மை இருக்காத…

    • 8 replies
    • 518 views
  12. அரசாங்கத்திற்கு எதிராக... குருநாகல் நகரில், பாரிய ஆர்ப்பாட்ட பேரணி அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் அரசாங்கத்திற்கு எதிராக குருநாகல் நகரில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தினர். நான்கு தனித்தனியான எதிர்ப்பு பேரணிகள் குருநாகல் நகரை வந்தடைந்து பின்னர் அருகில் அமைந்துள்ள Gota Go Home கிளைக்குச் சென்றன. இலங்கையின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் மருத்துவத் துறையின் அவல நிலையை எடுத்துரைக்கும் வகையில் சவப்பெட்டி, சக்கர நாற்காலியை தூக்கியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தை உடனடியாக இராஜினாமா செய்யக்கோரி நூற்றுக்கணக்கான அரச மற்றும் தனியார் துறையினர் நாடளாவிய ரீதியில் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்…

    • 1 reply
    • 183 views
  13. சுரேன் ராகவன், சாந்தபண்டார... ஆகியோரை, இராஜாங்க அமைச்சுகளில் இருந்து நீக்கினால் மட்டுமே... நாளை, ஜனாதிபதியுடன் பேச்சு – சு.க அறிவிப்பு! சுரேன் ராகவன், சாந்தபண்டார ஆகியோரை இராஜாங்க அமைச்சுகளில் இருந்து நீக்கினால் மட்டுமே நாளை(வெள்ளிக்கிழமை) ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை ஈடுபடுவோம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் குறித்த கலந்துரையாடலை பகிஷ்கரிக்கவுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1278917

    • 6 replies
    • 337 views
  14. உணவகங்களில்... விலை அதிகரிப்பை, மேற்கொள்வது குறித்த தீர்மானத்தை... எடுக்கும் பொறுப்பு, அதன் உரிமையாளர்களுக்கு? சமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கு அமைய, சிற்றுணவகங்களில் விலை அதிகரிப்பை மேற்கொள்வது குறித்த தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு அதன் உரிமையாளர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் அசேல சம்பத் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டமையால், தேநீர், பால் தேநீர், உணவுப்பொதி, அப்பம், பராட்டா, கொத்து உட்பட சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஆனாலும், உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டால், ச…

    • 27 replies
    • 1.1k views
  15. ரம்புக்கனை... துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது! ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கேகாலை பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்ன குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரம்புக்கனையில் கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள அனுமதி வழங்கியமைக்காக இவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், இந்த துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் மேலும் 3 பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 10 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்பதுக் குறிப்பிட…

  16. நாமலுக்கு எதிரான.... "30 மில்லியன் ரூபாய் பணமோசடி" வழக்கின், விசாரணைகள் ஒத்திவைப்பு! முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அறுவருக்கு எதிராக பணமோசடி சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று (வியாழக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்த வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தார். கோவர்ஸ் கார்ப்பரேட் சர்வீசஸ் (பிரைவேட்) லிமிடெட் ஊடாக 30 மில்லியன் ரூபாய் பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நாமல் உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https:…

    • 1 reply
    • 212 views
  17. ஆயிரத்திற்கும்... மேற்பட்ட, தொழிற்சங்கங்கள்... இன்று, வேலை நிறுத்தப் போராட்டம்! அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (வியாழக்கிழமை) அரசாங்க மற்றும் தனியார் துறை ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ஐக்கிய தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் (UTUMO) அறிவித்துள்ளன. ‘வாக்கெடுப்புக்கு தலைவணங்கும் – அரசாங்கம் வீட்டுக்குச் செல்கிறது’ என்ற தொனிப்பொருளில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை வீட்டுக்கு செல்லுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. கல்வி, போக்குவ…

  18. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களின்... கோரிக்கைக்கு, செவிசாய்க்க வேண்டும் – நாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல், அவர்கள் என்ன கூறுகின்றார்கள் என்பதை கண்டறிய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார். இதேவேளை ஜனாதிபதியை வீட்டுக்குப் போகச் சொல்கிறார்களே, அப்போது பிரதமரும் வீட்டுக்குப் போக வேண்டுமா? என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய அவர் “இது இன்று வந்தவை அல்ல, ஜே.ஆரை கொன்று விடுவோம் என்று பலகையை அடித்தார்கள். இதற்கு குழப்பமடையாமல் அவர்கள் ஏன் அப்படி கூறுகிறார்கள் என்பது தொடர்பில் கண்டறிய வேண்டுவதோடு, தலை வலி இருப்…

    • 1 reply
    • 313 views
  19. ரம்புக்கனை... துப்பாக்கிச்சூட்டுக்கு எதிராக, ஐ.தே.க. சத்தியாகிரகப் போராட்டம்! ரம்புக்கனையில் அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தின்போது உயிரிழந்த சமிந்த லக்ஷானின் படுகொலைக்கு எதிராக ஐக்கியத் தேசியக் கட்சி ரம்புக்கனையில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தியது. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் பலர் இந்த சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். ரம்புக்கனை பிரதேசத்தில் அண்மையில் 12 மணித்தியாலங்களுக்கும் மேலாக ரம்புக்கனை ரயில் கடவையை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து, போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார…

  20. இலங்கையர்கள்... நன்கொடையாளர்களின் உதவியை, எதிர்பார்ப்பதாக அறிவித்தது... இலங்கை மத்திய வங்கி! அந்நிய செலாவணி கையிருப்பு குறைவதால் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை குறைக்கும் வகையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் உதவியை எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இத்தகைய நன்கொடைகள் மருந்துகள், எரிபொருள் மற்றும் உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த அன்னியச் செலாவணி பெறுபேறுகளைப் பேணுவதற்கும் அவற்றை வெளிப்படைத் தன்மையில் பயன்படுத்துவதற்கும் மூன்று சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றையும் மத்திய வங்கியின் ஆளுநர் நியமித்துள்ளார். …

  21. ரம்புக்கனை விவகாரம் – பொலிஸ் அதிகாரிகளை கைது செய்வதற்கான, நீதிமன்ற உத்தரவு இதுவரை கிடைக்கவில்லையாம்! ரம்புக்கனை சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளை கைது செய்வதற்கான நீதிமன்ற உத்தரவு இதுவரை பொலிஸ் மா அதிபருக்கு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். உத்தரவு கிடைக்கப்பெற்ற பின்னர் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். ரம்புக்கனையில் இடம்பெற்ற போராட்டத்தின்போது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட மற்றும் அதற்கு உத்தரவு வழங்கிய சகல பொலிஸாரையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் …

  22. ஜெனிவாவில், ‘ஐக்கிய நாடுகள்... இலங்கைக்கு, உங்கள் கவனம் தேவை’ – ஜெனிவாவில் போராட்டம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு முன்பாகவும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ‘ஐக்கிய நாடுகள் இலங்கைக்கு உங்கள் கவனம் தேவை’ எனும் தொணிப்பொருளில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ‘கோட்டா கோ ஹோம்’ என கோசமெழுப்பியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டங்களுக்கு ஆதரவாக பல உலக நாடுகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1278958

    • 1 reply
    • 186 views
  23. மக்கள், விரைவில்... உணவு நெருக்கடியை, சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை! விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளுர் உணவு உற்பத்தியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்நாட்டு மக்கள் விரைவில் உணவு நெருக்கடியை சந்திக்க நேரிடும் என விவசாய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் நெல் அறுவடை 45 வீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பல்வேறு பகுதிகளில் யூரியா உரத்தின் விலை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடைகளில் 50 கிலோ யூரியா உர மூட்டை 40 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. https://athavannews.com/2022/1278983

  24. அமெரிக்க டொலரின் பெறுமதி... 360 ரூபாயாக, அதிகரிப்பு! இலங்கையில் பல உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் ஒரு அமெரிக்க டொலரின் விற்பனை விலையை இன்று (வியாழக்கிழமை) 360 ரூபாயாக அதிகரித்துள்ளன. இலங்கையில் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விகிதத்தின்படி ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. நாளுக்கு நாள் டொலரின் பெறுமதி உயர்ந்து வருகின்றமையே கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1278963

  25. தண்ணிமுறிப்பில் அபகரிப்புக்குள்ளான காணிகள் தொடர்பில் சாள்ஸ் நிர்மலநாதன் நேரில் சென்று ஆராய்வு ! கே .குமணன் குருந்தூர்மலை பிரதேசத்தை அண்டிய தண்ணிமுறிப்பு கிராமத்தைச் சேர்ந்த மக்களின் பூர்வீக காணிகள் மீள் குடியேற்றத்தின் பின்பு சில வருடங்களாக வனவள திணைக்களத்தின் ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது. அத்தோடு குருந்தூர் மலையை அண்டிய சில மக்களின் காணிகளும் பயிர் செய்கைக்கு குருந்தூர் மலையில் உள்ள பௌத்த பிக்குவால் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த காணிகள் தொடர்பில் ஆராயும் நோக்கோடு பாராளுமன்ற உறுப்பினர் அந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டுள்ளார். பூர்விக காணிகளிலே தமது வாழ்வாதாரம் தங்கி இருப்பதாகவும் தமது பூர்வீக காணிகளை வன வள திணை…

    • 1 reply
    • 181 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.