ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
உயிரிழந்தவர்களில்... புலஸ்தினி? அனைவரது சடலங்களையும் தோண்டி எடுக்க நீதிமன்றம் அனுமதி. 2019 ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் பூதவுடல் கள் நாளை (27) தோண்டி எடுக்கப்படவுள்ளது. தற்கொலை தாக்குதலில் உயிரிழந்த 17 பேரில் சாரா ஜாஸ்மின் என்கிற புலஸ்தினி மகேந்திரன் உள்ளாரா என்பதை அறியவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சஹரான் ஹாஷிமின் சகோதரர் மொஹமட் ரில்வான் தற்கொலை அங்கியை வெடிக்கச் செய்ததில் குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் அறிவித்தனர். இருப்பினும், அந்த நேரத்தில் டி.என்.ஏ. சோதனைகள் சம்பவ இடத்தில் சாரா ஜாஸ்மின் இருப்பதை உறுதிப்படுத்தவில்லை. முந்தைய இரண்டு முறை மேற்கொள்ளப்பட்ட சோதனையில…
-
- 0 replies
- 242 views
-
-
உள்நாட்டு எரிவாயு விநியோகம், நாளை முதல் ஆரம்பமாகும் – லிட்ரோ நிறுவனம் 3 ஆயிரத்து 600 மெட்ரிக் தொன் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு கொண்ட கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கப்பல் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணியளவில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், உள்நாட்டு எரிவாயு விநியோகம் நாளை முதல் ஆரம்பமாகும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1278613
-
- 0 replies
- 73 views
-
-
ஆளும்கட்சியின்... முன்னாள் மாகாண சபை, உள்ளூராட்சி உறுப்பினர்கள் அலரிமளிகைக்கு அழைப்பு ஆளும்கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும் அலரிமாளிகையில் அழைக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்காக இவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இக் கலந்துரையாடலில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1278590
-
- 0 replies
- 79 views
-
-
மின் கட்டணத்தை... உயர்த்துவது குறித்து, இதுவரையில்... தீர்மானிக்கவில்லை – மின்சக்தி அமைச்சு மின் கட்டணத்தை அதிகரிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், நுகர்வுக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. இந்த நிலையில், இன்று டுவிட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர், மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட கட்டணத் திருத்தங்களுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது இது முதல் தடவை அல்ல என தெரிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டிலிருந்து பல தடவைகள்…
-
- 0 replies
- 111 views
-
-
யாழில்... தந்தை செல்வாவின், 45ஆம் ஆண்டு நினைவு தினம்! இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 45 ஆவது நினைவு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பிரதான வீதியிலுள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஓய்வு நிலை ஆயரும் தந்தை செல்வா நினைவு அறங்காவற்குழு தலைவருமான கலாநிதி சு.ஜெபநேசனின் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நினைவுத் தூவிக்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்யப்பட்டது. அஞ்சலி நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்…
-
- 0 replies
- 133 views
-
-
ராஜபக்சக்களுக்கு இடையில்... கலந்துரையாடல்? – போராட்டம் உள்ளிட்ட, பல விடயங்கள் குறித்து ஆராய்வு! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ராஜபக்ஷ குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களுக்கும் இடையிலான விஷேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் நேற்று (திங்கட்கிழமை) இரவு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கலந்துரையாடலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோரும் கலந்துகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் நிலவும் பாரிய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்ட…
-
- 0 replies
- 95 views
-
-
சஜித் பிரேமதாச: இலங்கையை மீட்போம்; 13-ஆவது திருத்தத்தை அமலாக்குவோம் - பிபிசிக்கு அளித்த முழுமையான பேட்டி எம். மணிகண்டன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையின் தற்போதைய அரசியல், பொருளாதார நெருக்கடி, வருங்காலத் திட்டம், தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக பிபிசி தமிழுக்கு இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பேட்டி அளித்துள்ளார். அதன் உரை வடிவம் இது. கே: இந்த நெருக்கடிக்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்? பதில்: இது மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது. தற்போதைய நிர்வாகம், கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சி, மற்றும் நா…
-
- 0 replies
- 128 views
- 1 follower
-
-
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 போ் விடுதலை April 26, 2022 பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 போ் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவானினால் நேற்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனா். கடந்த வருடம் மட்டக்களப்பு கிரான் கடற்கரையில் முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவேந்தலை நினைவு கூர்ந்தமைக்காக இவா்கள் கைது செய்யப்பட்டிருந்தனா். இந்த நினைவேந்தலை நினைவு கூர்ந்த வடக்கு கிழக்கு முன்னேற்றகழக தலைவர் வி.லவக்குமார் உள்ளிட்ட 10 பேரையும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்திருந்த கல்குடா காவல்துறையினா் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்ததனை தொடர்ந்து அவா்கள்…
-
- 0 replies
- 244 views
-
-
தந்தை செல்வாவின் 45ஆம் ஆண்டு நினைவு தினம் April 26, 2022 இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 45 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பிரதான வீதியிலுள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஓய்வு நிலை ஆயரும் தந்தை செல்வா நினைவு அறங்காவற்குழு தலைவருமான கலாநிதி சு.ஜெபநேசனின் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நினைவுத் தூவிக்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்யப்பட்டது. அஞ்சலி நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், உள…
-
- 1 reply
- 208 views
-
-
எங்களுக்கு... சிறிது கால, அவகாசம் வழங்குங்கள் – ஜனாதிபதி கோரிக்கை! தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக் கூறவேண்டியுள்ளதுடன் தற்காலிக மற்றும் நிலையான தீர்வுகளை வழங்குவதற்கான முறையான அணுகுமுறையை எங்கள் அரசாங்கம் தற்போது மேற்கொண்டுள்ளதால், பலன்களை பெற்றுக்கொள்ள எங்களுக்கு சிறிது கால அவகாசம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மூன்று நிக்காயாக்களினதும் தலைமை பீடாதிபதிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று(திங்கட்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில், “நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதா…
-
- 31 replies
- 2.9k views
-
-
அரசாங்கத்துக்கு எதிரான, ‘ஐக்கிய மக்கள் பேரணி’ கண்டியில்... இருந்து. இன்று ஆரம்பம்! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி கண்டியிலிருந்து கொழும்பிற்கு ஏற்பாடு செய்துள்ள பேரணி இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகிறது. ‘ஐக்கிய மக்கள் பேரணி’ என்ற தொனிப்பொருளிலில் ஆரம்பமாகின்ற இந்த பேரணி, 5 நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கமைய இன்றைய தினம் கண்டி – தலதா மாளிகையில் ஆரம்பமாகும் பேரணி மாவனெல்ல வரையில் பணயிக்கவுள்ளதுடன், நாளை மாவனெல்லையிலிருந்து கலிகமுவ வரையும் 28ஆம் திகதி கலிகமுவையிலிருந்து தனோவிட வரையும் பயணிக்கவுள்ளது. தொடர்ந்து, 29 ஆம் திகதி தனோவிடவிலிருந்து யக்கல வரையும் …
-
- 0 replies
- 152 views
-
-
மக்கள் எழுச்சிப் போராட்டம், 18ஆவது நாளாகவும் தொடர்கிறது – அலரிமாளிகைக்கு முன்பாகவும்... இரவிரவாக போராட்டம்! ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு வலியுறுத்தி காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) 18ஆவது நாளாகவும் தொடர்கிறது. இந்த போராட்டத்தில் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான அதிபர் ஆசிரியர்களும் கலந்து கொண்டிருந்தனர். அது மாத்திரமின்றி நாட்டின் பல பிரதேசங்களிலிருந்தும் வருகை தந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மாத்திரமின்றி மேலும் பல தொழிற்சங்கங்களும் மதங்களை பிரதிநிதித்துவப்படுத…
-
- 0 replies
- 141 views
-
-
அரசாங்கத்துக்கு எதிரான... நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, ஆதரவு – சி.வி.விக்னேஸ்வரன் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அத்துடன் 20ஆவது திருத்தச்சட்டத்தை நீக்குவதற்கு ஆதரவை வழங்குகின்ற போதிலும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் அவர் குறிப்பிட்டார். அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1278535
-
- 0 replies
- 173 views
-
-
இலங்கைக்கு... அவசர உதவியாக, 125 மில்லியன் ரூபாயினை... வழங்குகின்றது இத்தாலி! இலங்கைக்கு அவசர உதவியாக 125 மில்லியன் ரூபாயினை வழங்க இத்தாலி அரசாங்கம் முன்வந்துள்ளது. இலங்கைக்கான இத்தாலிய தூதரகம் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிதியானது மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு வழங்கப்படவுள்ளது. https://athavannews.com/2022/1278521
-
- 0 replies
- 142 views
-
-
21ஆவது திருத்தச்சட்டத்தை... அறிமுகப்படுத்துவதற்கான. யோசனைக்கு... அமைச்சரவை அனுமதி. புதிய சீர்திருத்தங்களுடன் 20வது மற்றும் 19ஆவது திருத்தச்சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு 21ஆவது திருத்தச்சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், இதற்காக அமைச்சரவை உப குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1278519
-
- 0 replies
- 122 views
-
-
சீமெந்தின் விலை... அதிகரிக்கப் படுகின்றது. இலங்கையில் 50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து பக்கற் ஒன்றின் விலை நாளை(செவ்வாய்கிழமை) முதல் அமுலாகும் வகையில் 400 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. சீமெந்து உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். இதற்கமைய 50 கிலோ சீமெந்தின் புதிய விலையாக 2 ஆயிரத்து 750 ரூபா நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1278517
-
- 0 replies
- 239 views
-
-
மின்வெட்டு... அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த, அறிவிப்பு! நாட்டில் இன்றைய தினமும் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. இதன்படி, A முதல் I மற்றும் P முதல் W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் முற்பகல் 9.30 முதல் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதியில் சுழற்சி முறையில் 2 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அத்துடன், குறித்த வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 வரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதேநேரம், கொழும்பு நகர் பகுதியில் காலை 6 மணிமுதல் 9 மணிவரையான காலப்பகுதியில் 3 மணி நேரம…
-
- 0 replies
- 266 views
-
-
தமிழ்நாடு வந்த இலங்கை அகதிகள்: “ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ. 1,000க்கு விற்றால் எப்படி வாழ்வது?” 5 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இலங்கையில் இருந்து 60 இலங்கை தமிழர்கள்; தமிழகத்திற்கு வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அதிகாலை 9 மாத கை குழந்தை உட்பட 5 குடும்பத்தை சேர்ந்த மேலும் 15 பேர் தனுஷ்கோடி வந்துள்ளனர். இலங்கை உள்நாட்டுப் போரின்போது இலங்கைத் தமிழர்கள் தங்கள் உயிர்களை காப்பாற்றி கொள்ள அகதிகளாக தனுஷ்கோடி வழியாக தமி…
-
- 10 replies
- 1.1k views
- 1 follower
-
-
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு... 2.5 பில்லியன் டொலர், கலந்துரையாடலை பாதித்துள்ளது – சீனா குறிப்பிட்ட கட்சி அல்லது அரசாங்கத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கைக்கு சீனா ஆதரவளிக்கவில்லை என சீன தூதுவர் தெரிவித்துள்ளார். எவர் ஆட்சியில் இருந்தாலும் இலங்கை மக்களுக்கே சீனாவின் ஆதரவு இருக்கும் என்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார். மேலும் சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் தற்போதைய பேச்சு, சீனாவுடனான 2.5 பில்லியன் டொலர் பெறுவதற்கான கலந்துரையாடல்களை பாதித்துள்ளது என்றும் குறிப்பிட்டார். சீனா கடந்த ஆண்டு ஜூலை முதல் 2022 ஜனவரி வரை 500 மில்லியன் டொலர் மதிப்பில் 730,000 மெட்ரிக் தொன் எரிபொருளை இலங்கைக்கு வழங்கியுள்ளது என தெரிவித்துள்ளார். …
-
- 6 replies
- 491 views
-
-
பிரதமர், பதவி விலகமாட்டார் – பிரதமர் அலுவலகம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்னும் பெரும்பான்மையான நாடாளுமன்ற ஆசனங்களைக் கொண்டிருப்பதால், பிரதமர் பதவியில் இருந்து விலகப் போவதாக எந்தவொரு குழுவிற்கும் அறிவிக்கவில்லை என பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளனர். SLPP கட்சி உறுப்பினர்கள் மற்றும் சுயேச்சை மற்றும் மதக் குழுக்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதமர் ராஜினாமா செய்வது பற்றி விவாதிக்கவில்லை என்றும், இந்த கூற்றுக்கள் தவறானவை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிப்பதாகவும் பிரதமர் பதவி விலகவுள்ளதாக சில குழுக்களுக்கு அறிவித்துள்ளதாகவும் …
-
- 2 replies
- 349 views
-
-
சீனத் தூதுவர்... அடுத்த மாதம், கிழக்குப் பகுதிகளுக்கு விஜயம். இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த சீனத் தூதுவர் Qi Zhenhong அடுத்த மாதம் நாட்டின் கிழக்குப் பகுதிக்கும் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து ஊடகவியலாளர்கள் குழுவுடனான கலந்துரையாடலில்போது சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார். மேலும் திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற மாவடங்களில் இருந்து மக்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்தும் கோரிக்கைகள் கிடைக்கபெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1278492
-
- 7 replies
- 463 views
-
-
ஜனாதிபதி தலைமையில்... புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் இன்று !! புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெறவுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்க பிரதமர் தீர்மானித்துள்ளார். இந்நிலையில் அதற்கான பிரேரணை இன்று (25) இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் முன்வைக்கவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பிரேரணை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1278497
-
- 0 replies
- 283 views
-
-
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள், சிறிதளவு குறைய வாய்ப்பு – அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் சிறிதளவு குறைய வாய்ப்புள்ளதாக அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்திய கடன் திட்டத்தின் கீழ் பொருட்களை இறக்குமதி செய்வது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு எதிர்பார்ப்பதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இந்திய கடன் திட்டத்தின் கீழ் பொருட்களை இறக்குமதி செய்வதை ஆரம்பிக்க முடியும் என அதன் பேச்சாளரான நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1278487
-
- 0 replies
- 179 views
-
-
பிரதமர், பதவி விலகத் தயார்.. என அறிவித்துள்ளார் – கம்மன்பில பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பௌத்த பிக்குகள் மற்றும் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட சில குழுக்களுக்கு தான் பதவி விலகத் தயார் என அறிவித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சிக்கு 120 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1278470
-
- 5 replies
- 299 views
-
-
அரிசிக்கு, வரிசையில் நிற்கும் நிலை – மக்கள் கவலை! அரிசிக்கு வரிசையில் நிற்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். நாட்டில் ஏற்ப்படடுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தற்பொழுது அரிசிக்கும் வரிசையில் நிக்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர். தற்பொழுது கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள சதோச விற்பனை நிலையத்தில் ஒரு கிலோ 140 ரூபாவிற்கும், தீட்டல் அரிசி ஒரு கிலோ 110 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனைப் பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு பகுதிகளிலுமிருந்து மக்கள் சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து அரிசியினை பெற்று வருகின்றனர். https://athavannews.com/2022/1278464
-
- 0 replies
- 219 views
-