ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
ஆர்ப்பாட்டங்களை, கலைக்க... துப்பாக்கிகளை, பயன்படுத்த மாட்டோம்: ஆணைக்குழுவில் பொலிஸ்மா அதிபர் உறுதியளிப்பு. பொதுமக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின்போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள தான் அறிவுறுத்தல் வழங்கவில்லை என பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். ரம்புக்கனை சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக பொலிஸ்மா அதிபர் மற்றும் பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நேற்று ஆணைக்குழுவில் முன்னிலையாகினர். எதிர்காலத்தில் ஆர்ப்பாட்டங்களை கலைக்க துப்பாக்கிகளை பயன்படுத்த மாட்டோம் என பொலிஸார் உறுதியளித்துள்ளதாக மனித உரிம…
-
- 1 reply
- 215 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கும், அமெரிக்க தூதுவருக்கும்... இடையில் சந்திப்பு ! முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கிற்கும் இடையில் நேற்று முக்கிய சந்திப்பு நடைபெற்றுள்ளது. இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் சமூக பொருளாதார பிரச்சினைகள் தொடர்பாக இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கை மக்களின் அவல நிலையைக் கருத்தில் கொள்ளுமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் அமெரிக்க தூதுவர் முன்வைத்த வேண்டுகோளுக்கு நன்றியும் தெரிவித்தார். இச்சந்திப்பு குறித்து தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்கத் தூதுவர், தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து கலந்துரையாடியதாக கூறியுள்ளா…
-
- 0 replies
- 296 views
-
-
பொருட்களின்... விலை ஏற்றத்தினை, கண்டித்து... வவுனியாவில் ஆர்பாட்டம் நாட்டில் பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு கண்டனம் தெரிவித்து வவுனியா பூந்தோட்டம் பகுதியில் மாபெரும் ஆர்பாட்டமும் கடை அடைப்பு போராட்டம் ஒன்றும் இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. பூந்தோட்டம் வர்த்தகர் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் பொதுமகள் அயல் கிராமத்தவர்கள் இளைஞர்கள், பெண்கள் என பெருமளவானோர்கலந்துகொண்டிருந்தனர். மேலும் நாட்டில் பொருட்களின் விலைஅதிகரிப்பு காரணமாக இன்று அனைத்து மக்களும் கடும் பாதிப்புக்களை சந்தித்து வருகின்றதோடு குழந்தைகள் பட்டினியால் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுளோம் எனவும் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த பொதுமக்கள் தெரிவித்துள…
-
- 0 replies
- 198 views
-
-
வாக்கெடுப்பு... தேவையில்லாத, அரசியலமைப்பு திருத்தங்கள்... சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிப்பு நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்ப்படுவதாக அறிவித்துள்ள 41 உறுப்பினர்களும் வாக்கெடுப்பு தேவைப்படாத அரசியலமைப்பு திருத்தங்களை நாடளுமன்றில் முன்வைத்துள்ளது. விஜயதாச ராஜபக்ஷவினால் 21வது திருத்தச் சட்டமூலத்தை தனியார் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமூலமாக நேற்று சபாநாயகரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. முன்மொழியப்பட்ட திருத்தங்களில் பெரும்பாலானவை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் கடமைகளை அமைச்சரவைக்கு மாற்றும் என கூறியுள்ளனர். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே விஜயதாச ராஜபக்ஷ மற்றும் …
-
- 0 replies
- 95 views
-
-
பொருளாதார வேலைத்திட்டம், குறித்த தீர்வை.... விரைவில் சமர்ப்பிப்போம் – அமைச்சர் தினேஷ் நாட்டை மீளக் கட்டியெழுப்பும் வகையிலான அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டம் குறித்த தீர்வை விரைவில் சமர்ப்பிப்போம் என, அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நிதியமைச்சர் அலி சப்ரி நாடு திரும்பியதும் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் பொருளாதார பயணப் பாதை வேலைத்திட்டம் சமர்ப்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறினார். நாட்டில் நிலவும் நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது…
-
- 0 replies
- 294 views
-
-
"சதொச" ஊடாக... இன்று முதல், நிவாரணம் இந்திய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 40,000 மெட்ரிக் தொன் அரிசி சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக விநியோகிக்கப்படுவதாக வர்ததக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ கிராம் நாட்டரிசியினை 145 ரூபாவாக்கும் , சிவப்பரிசியினை 145 ரூபாவுக்கும் மற்றும் ஒரு கிலோ சம்பா அரிசியை 175 ரூபாய்க்கும் சதொச ஊடக பெற்றுக் கொள்வனவு செய்ய முடியும் என வர்ததக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை ஒரு வாடிக்கையாளர் அதிகபட்சம் 05 கிலோ மாத்திரமே கொள்வனவு செய்யமுடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2022/1278008
-
- 0 replies
- 193 views
-
-
யாழ் . நகரப் பகுதிகளில்... ஆங்காங்கே, சுவரொட்டிகள் யாழ் நகரப் பகுதியில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கண்டித்து அரசை பதவி விலகுமாறு கோரி தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையினால் ஆங்காங்கே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது . “தடுமாறும் அரசே பதவி விலகு மக்கள் வயிற்றில் அடிக்காதே” எனும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளே இவ்வாறு ஒட்டப்பட்டுள்ளது. யாழ் . பிரதான வீதிகள் மற்றும் யாழ் . மத்திய பேருந்து நிலைய பகுதிகளில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது. https://athavannews.com/2022/1278001
-
- 0 replies
- 206 views
-
-
இன்று, நாளை.... மின் துண்டிப்பு, குறித்த அறிவிப்பு! நாட்டில் இன்றும் நாளையும் மின்சாரத்தை துண்டிப்பதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, இன்று சனிக்கிழமை 3 மணித்தியாலமும் 20 நிமிடமும் மின்சாரம் துண்டிப்படவுள்ளது. A முதல் W வரையான வலயங்களில் இன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலமும் மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடமும் சுழற்சி முறையில் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. அத்துடன் நாளைய தினம் 3 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, காலை 9 மணிமுதல் மாலை…
-
- 0 replies
- 117 views
-
-
14ஆவது நாளாகவும்... தொடரும், மக்கள் எழுச்சிப் போராட்டம்! காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) 14ஆவது நாளாகவும் தொடர்கின்றது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கொழும்பு காலி முகத்திடலுக்கு வருகை தந்து பொதுமக்கள் இந்த போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கி வருகின்றனர். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்குப் பொறுப்பேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவர்கள், சட்டத்தரணிகள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் தொடர்ச்சியாக ஆதர…
-
- 5 replies
- 419 views
-
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து, நீக்கப்பட்டார்.... நஸீர் அஹமட் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்ட அவர், “கட்சியின் நாக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். இது சம்பந்தமாக அவர்களிடம் விளக்கம் கோரப்பட்டது. அவர்கள் அனுப்பியிருந்த விளக்கம் பற்றி ஆராயப்பட்டது. மூவர் அனுப்பிய விளக்கம் தொடர்பில் ஓய்வு பெற்ற நீதியரசர் ஒருவர் தலைமையில் விசாரணை இடம்பெறும். அதுவரை கட்சி உறுப்புரிமையில் இருந்து தற்காலிகமாக நிறுத்தப்படுவர். …
-
- 2 replies
- 319 views
-
-
” கோட்டா கோ ஹோம்” எனக் கூறுவதை.... உடனடியாக, நிறுத்திக்கொள்ளுங்கள்” – போராட்டக் காரர்களுக்கு கீதா குமாரசிங்க எச்சரிக்கை. “கோட்டா கோ ஹோம்“ எனக் கூறுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுங்கள் என போராட்டக்காரர்களுக்கு இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார் 1971 இல் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அவர் வீடு செல்லவில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார். அதன்பின்னர் ஜேஆரை எதிர்த்தனர். அவரும் வீடு செல்லவில்லை. எனவே, கோட்டா கோ ஹோம் என்ற பிரச்சாரத்தை உடன் நிறுத்துங்கள் என அவர் வலியுறுத்தியுள்ளார். காலம் வரும்போது ஜனாதிபதி நிச்சயம் செல்வார். அவர் வீடு செல்ல வேண்டுமா என்பதை தேர்தல் தீர்மானிக்க…
-
- 11 replies
- 980 views
- 1 follower
-
-
கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில்... 60 பேர்கொண்ட குழு, வத்திக்கான் நோக்கி பயணம்! கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில், 60 பேர்கொண்ட குழு வத்திக்கான் நோக்கி பயணமாகியுள்ளது. இன்று(வெள்ளிக்கிழமை) காலை குறித்த குழுவினர் வத்திக்கான் நோக்கி பயணமாகியுள்ளனர். இந்தக் குழுவில், கொழும்பு ஆயர் இல்லத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிசாந்த பெர்னாண்டோ மற்றும் ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்ட 30 பேரும் இந்தக் குழுவில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க வேண்டும் என பாப்பரசர் விடுத்த அழைப்புக்கு அமையவே குறித்த குழுவினர் வத்திக்கான் நோக்கி பயணமாகியுள்ளனர். …
-
- 6 replies
- 416 views
-
-
"என் குழந்தை இந்தியாவில் பிறக்க வேண்டும்" - அகதியாக தஞ்சம் கோரி வந்த இலங்கை கர்ப்பிணி கண்ணீர் பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழ் 5 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, இந்தியாவில் அகதியாக தஞ்சம் கோரி சமீபத்தில் தனுஷ்கோடி வழியாக மண்டபம் அகதிகள் முகாமுக்கு வந்த இலங்கை தமிழர்கள் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் இலங்கையில் வசிக்கும் மக்கள் உணவு பொருட்கள் வாங்க முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாக கடந்த புதன்கிழமை வரை 42 இலங்கை தமிழர்கள் தனுஷ…
-
- 3 replies
- 430 views
- 1 follower
-
-
சமையல் எரிவாயு விலை அதிகரிப்பிற்கு... அனுமதி வழங்கவில்லை என்கிறது, அரசாங்கம்! சமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கு அனுமதி வழங்கவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று நள்ளிரவு முதல் விலை அதிகரிக்கப்படமாட்டாது எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1277969
-
- 1 reply
- 229 views
-
-
எனது இராஜினாமா கடிதத்தினை... ஜனாதிபதி, ஏற்றுக்கொள்ளவில்லை – நாலக்க கொடஹேவா தனது இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் நாலக்க கொடஹேவா தெரிவித்துள்ளார். நிலையான அரசியல் ஸ்திரத்தன்மை ஒன்றை ஏற்படுத்த இடைக்கால அரசொன்றை அமைக்கும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கும் வகையில் பதவி விலகும் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைத்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1277980
-
- 0 replies
- 133 views
-
-
இலங்கை 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியில் இருந்து ஒரு முஸ்லிம் உறுப்பினர் அஸீஸ் நிஸாருத்தீன் விலகல் 12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NISARDEEN படக்குறிப்பு, நிஸாருத்தீன் இலங்கையில் 'ஒரே நாடு. ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியில் இருந்த முஸ்லிம் உறுப்பினர்களில் ஒருவரான அஸீஸ் நிஸாருத்தீன் தனது பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். ரம்புக்கண பிரதேசத்தில் போலீஸ் அராஜகமாக நடந்து கொண்டமைக்கு எதிர்ப்பினை வெளியிடும் வகையிலும், நாட்டில் எழுச்சி பெற்றுள்ள மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியிலிருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.. …
-
- 0 replies
- 207 views
- 1 follower
-
-
திருகோணமலை – கண்டி பிரதான வீதியை மறித்து, ஆர்ப்பாட்டம்: கடைகளுக்கும் பூட்டு! திருகோணமலை – கண்டி பிரதான வீதியானது அபயபுர சுற்று வளைவு சந்தியில் மூன்று பக்கமாகவும் ஆர்ப்பாட்டகாரர்களால் வீதித் தடை போடப்பட்டு மறிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் பேருந்து ஒன்று வீதிக்கு குறுக்கே நிறுத்தப்பட்டுள்ளதுடன், உப்புவெளி பகுதிக்குச் செல்லும் வீதியும் மறிக்கப்பட்டுள்ளது. கடைகள் மற்றும் மத்திய மீன் சந்தை மூடப்பட்டுள்ள அதேவேளை பாடசாலைக்கும் மாணவர்கள் செல்லவில்லை என பாடசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் காலை தொழில் நிமித்தம் சென்ற பலரும் திருப்பி அனுப்பப்பட்டதையும் காணக்கூடியதாக இருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தா…
-
- 2 replies
- 263 views
-
-
இந்த அரசாங்கம், ஒரு கொலைகார... அரசாங்கமாகும் – சஜித் பகிரங்க குற்றச்சாட்டு! புதிய பொருளாதாரப் பாதையை காண்பிக்க ஏன் அரசாங்கம் தயக்கம் காட்டி வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மத்திய வங்கியை சுயாதீன நிறுவனமாக மாற்ற ஏன் இன்னமும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது? கடன் தொடர்பான பல்தரப்பு கலந்துரையாடல் ஏன் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை? இந்தியா, சீனா, ஜப்பானுடன் அரசாங்கம் பேச்சு நடத்தியுள்ளதா? பணவீக்கத்தை குறைக்க அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? உற்பத்திக் கைத்…
-
- 2 replies
- 238 views
-
-
ரம்புக்கனை சம்பவம் – கேகாலை நீதிவான் நீதிமன்றில், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது! ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட விசேட பொலிஸ் குழுவினர் இன்று(வெள்ளிக்கிழமை) கேகாலை நீதிவான் நீதிமன்றில் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளனர். அதில் நான்கு ரி-56 துப்பாக்கிகளை பொலிஸார் பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், இதன்போது, 35 தோட்டாக்களையும் பொலிஸார் பயன்படுத்தியுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 19ஆம் திகதி ரம்புக்கனை பிரதேசத்தில் இடம்பெற்ற போராட்டத்தைக் கலைப்பதற்காக, பொலிஸார் முயற்சித்தபோது, பொலிஸாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டது. இதன்போது மேற்கொள்ள துப்பாக்கிப்…
-
- 0 replies
- 133 views
-
-
13 ஆம் திருத்தச் சட்டத்தினை... விட்டுக்கொடுக்க முடியாது – அமைச்சர் டக்ளஸ் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்ச்சியாக அமுல்ப்படுத்தப்பட வேண்டும் என்பதில் ஈ.பி.டி.பி. உறுதியாக இருப்பதாக கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று( வியாழக்கிழமை) இடம்பெற்ற அரசாங்க கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில், “தற்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவது தொடர்பாக பரவலாகப் பிரஸ்தாபிக்கப்படுகின்றது. இதுதொடர்பாக, அமரர் அ. அமிர்தலிங்கமும், மலை…
-
- 0 replies
- 152 views
-
-
மக்கள் எழுச்சிக்கு எதிரான... அடக்குமுறையை, கண்டிக்கிறோம் – யாழ். பல்கலை ஆசிரியர் சங்கம் மக்கள் எழுச்சிக்கு எதிரான ஆயுதரீதியான அடக்குமுறையை கண்டிக்கிறோம் என யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. ரம்புக்கணையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில், ”எமது நாட்டின் ஆட்சியாளர்களின் நிர்வாக திறமையின்மை மற்றும் ஊழல் ஆட்சி முறைமை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிராகவும் நாடு தழுவிய முழுமையான அரசியல் மாற்றத்தைக்கோரி இன, மத பேதமின்றி ஜனநாயக வழியில் மக்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆ…
-
- 0 replies
- 139 views
-
-
இலங்கையில்... மீண்டும், கட்டாயமாக்கப்பட்டது முகக்கவசம்! பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் பெருந்தொகையான மக்கள் ஒன்றுகூடுவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற கட்டுப்பாட்டை கடந்த 18ஆம் திகதி முதல் நீக்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது. இந்த நிலையில், குறித்த தீர்மானம் தற்போதைய நிலைமையில் ஏற்புடையதல்ல என பல்வேறு தரப்பினரும் தெரிவித்திருந்தனர் என்பதுக் குறிப்பிடத்தக…
-
- 1 reply
- 246 views
-
-
வரியை... அதிகரிப்பதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டும் – நிதியமைச்சர், அலி சப்ரி! தற்போதைய வரி வருமானம் போதுமானதாக இல்லாததால் வரியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடுவதற்காக அமெரிக்கா சென்றுள்ள நிதியமைச்சர் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலின் போதே இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் கடன் மறுசீரமைப்புடன், சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து எதிர்காலத்தை திட்டமிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1277867
-
- 0 replies
- 181 views
-
-
நாட்டிலுள்ள... சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு, நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்! நாட்டிலுள்ள சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக ஐரோப்பிய ஒன்றியத்தினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் கீழ், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறையை புத்துயிர் பெறும் நோக்கில், அத்தகைய தொழில்முயற்சியாளர்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய முதல் மூன்று தொழில்முனைவோருக்கு நேற்று(வியாழக்கிழமை) நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம் மற்றும் சுற்றுலா அபிவிர…
-
- 0 replies
- 115 views
-
-
“கோட்டா கே கம“வில்... உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த, தெரிபெஹே சிறிதம்ம தேரர்... வைத்தியசாலையில் அனுமதி காலி முகத்திடலில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தெரிபெஹே சிறிதம்ம தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரம்புக்கனையில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞருக்கு நீதி கோரி கடந்த 20ஆம் திகதி முதல் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்திருந்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவும் உடனடியாக வௌியேற வேண்டும் எனவும் அவர்கள் வௌியேறும் வரையில், போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் தெரிபெஹே சிறிதம்ம தேரர் குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையிலேயே அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதி…
-
- 0 replies
- 100 views
-