ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
மட்டு நாவலடியில்அன்னை பூபதியின் சமாதியில் அஞ்சலி செலுத்த சென்ற அவரது பிள்ளைகளை அஞ்சலி செய்யவிடாது தடுத்தி நிறுத்திய பொலிசார் – ( திருக்கோவில் நிருபர்) மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் சமாதிக்கு அஞ்சலி செலுத்த சென்ற தங்களை விடுதலைப்புலிகளிற்கு அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்து பொலிஸார் தடுத்துநிறுத்திவிட்டனர் என அன்னை பூபதியின் மகள் லோகேஸ்வரன் சாந்தி தெரிவித்துள்ளார். அன்னை பூபதியின் 34 நினைவுதினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தசென்றவேளையே தங்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு சீலாமுனை பகுதியில் …
-
- 11 replies
- 481 views
-
-
இலங்கை போராட்டம்: அரசுக்கு எதிராக ஆடிப்பாடி எதிர்ப்பை வெளிப்படுத்தும் பொதுமக்கள் ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற நிலையில், போராட்டங்களில் தொடர்ந்தும் பெருந்திரளானோர் கலந்துக்கொண்டுள்ளனர். போராட்டம் என்றால், ஆவேசமாக கோஷங்களை எழுப்புதல், தாக்குதல் நடத்துதல், பொருட்களுக்கு சேதம் விளைவித்தல் போன்ற பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது வழக்கமானது. எனினும், கொழும்பு - காலி முகத்திடலில் நடத்தப்பட்டு வரும் ப…
-
- 0 replies
- 238 views
- 1 follower
-
-
எரிபொருள் விலையதிகரிப்பை கண்டித்து திருமலையில் போராட்டம் தொடர்ச்சியாக எரிபொருளுக்கான விலையதிகரிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று நள்ளிரவு இந்தியன் எண்ணெய்க் கூட்டுத்தாபனத்தின் விலைக்கு நிகராக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் விலையதிகரிப்பை மேற்கொண்டதை கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை ( 19 ) மாலை திருகோணமலையின் பல வீதிகளிலும் தடைகளை இட்டு பலர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கண்டி வீதியின் 4ஆம் கட்டை சந்தி, மட்டிகளி பிரதான வீதி, நிலாவெளி வீதியின் சிரிமாபுர, வரோதயநகர் போன்ற வீதிகளில் தடைகளைப் போட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பசில் வெளியேறு,கோத்தா வெளியேறு, மகிந்த வெறியேறு என ஆர்பாட்டக்காரர்கள் கோஷமிட்டபடி பாதைகளை மறித்திருந்தனர். திடீரென மேற்படி போரா…
-
- 0 replies
- 205 views
-
-
அனைத்து பதவிகளில் இருந்தும்... சுரேன் ராகவன், நீக்கம் !! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வகிக்கும் அனைத்து பதவிகளில் இருந்தும் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் நீக்கப்பட்டுள்ளார். இது குறித்த கடிதம் ஒன்றின் மூலம் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர சுரேன் ராகவனுக்கு தெரியப்படுத்தியுள்ளார். கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலின் பேரில், கட்சியின் பிரதிச் செயலாளர், வன்னி மாவட்ட உறுப்பினர் மற்றும் கட்சியின் சர்வதேச விவகார செயலாளர் பதவிகளில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தயாசிறி ஜயசேகரவினால் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்…
-
- 6 replies
- 679 views
-
-
எரிபொருள் விலையேற்றத்திற்கு.. எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது... கண்ணீர்ப்புகை தாக்குதல் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரம்புக்கனையில் முன்னெடுக்கப்படும் போராட்டதில் பொலிஸார் கண்ணீர்ப்புகை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். புகையிரத கடவையை 15 மணித்தியாலங்களுக்கு மேலாக மறித்து ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த பகுதியில் ஏற்பட்ட பதட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப்புகை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். https://athavannews.com/2022/1277386
-
- 23 replies
- 1.2k views
- 1 follower
-
-
பிரதமர் முன்வைத்த அனைத்து திட்டங்களும் பயனற்றவை – ஜேவிபி நாட்டில் நெருக்கடியை ஏற்படுத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது வீண் என ஜேவிபியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அத்தோடு, பிரதமர் முன்வைத்த அனைத்து திட்டங்களும் பயனற்றவை என்றும் அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ஒரு நாட்டில் இயற்கை அனர்த்தம் ஏற்பட்டால் அதற்கு தீர்வு காண அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது அனைவரினதும் பொறுப்பாகும் என பிரதமர் கூறுகிறார். ஒரு நாட்டில் இயற்கை பேரிடர் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. ஆனால் இந்த நெருக்கடி …
-
- 0 replies
- 214 views
-
-
பாண் மற்றும் ஏனைய... வெதுப்பக உற்பத்திகளின் விலைகளும், அதிகரிப்பு! இன்று (19) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பாண் மற்றும் ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளது. அதற்கமைய, ஒரு இறாத்தல் பாணின் விலை 30 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ள நிலையில் பாண் ஒன்றின் புதிய விலை 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. அவ்வாறே, ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலைகளும் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை கொத்து உள்ளிட்ட மதிய உணவுப் பொதிகளின் விலையும் 20 விகிதத்தால் அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1277336
-
- 3 replies
- 278 views
- 1 follower
-
-
சாந்த பண்டார பேசிய போது... வாக்குவாதம் : நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு எதிர்க்கட்சியின் கூச்சல் குழப்பத்தை அடுத்து நாடாளுமன்ற அமர்வை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பாதக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார நாடாளுமன்றில் உரையாற்றியபோது எதிர்கட்சியுடன் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. இதனை அடுத்தே சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பாதக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார். நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சாந்த பண்டார இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1277314
-
- 0 replies
- 130 views
-
-
குறைந்த பட்ச பேருந்து கட்டணம், 27 ரூபாயாக அதிகரிப்பு – நள்ளிரவு முதல் அமுல் நாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்களை 35 சதவீதத்தினால் அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. பேருந்து கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் போக்குவரத்து அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, 20 ரூபாயாக காணப்பட்ட குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 27 ரூபாயாக அதிகரிப்படுமென அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையின் அனை…
-
- 0 replies
- 102 views
-
-
பதவியேற்றார் பிள்ளையான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், இன்றையதினம் இராஜாங்க அமைச்சர்கள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளன. அதன்பிரகாரம், நெசவுக்கைத்தொழில் உள்நாட்டு ஆடை உற்பத்தி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் முஷாரப் நியமிக்கப்பட்டுள்ளார். பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன்.கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். https://www.tamilmirror.lk/செய்திகள்/பதவயறறர-பளளயன/175-294924
-
- 7 replies
- 655 views
-
-
அரசாங்கத்தில் இருந்து விலகிய... 40 சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாக... மைத்திரி அறிவிப்பு! அரசாங்கத்தில் இருந்து விலகிய 40 சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைந்துகொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எவ்வாறிருப்பினும் தாம் உள்ளிட்ட 40 பேர் எதிர்க்கட்சித் தலைவரின் குழுவல்ல என்றும் எதிர்க்கட்சியில் சுயேட்சைக் குழுவாகச் செயற்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசேட அறிக்கையொன்றை விடுத்து உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார, சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள் பல காரணமாக இந்தத் …
-
- 0 replies
- 168 views
-
-
தற்போதைய அரசாங்கம், திட்டமிட்டு... நாட்டை அழித்துள்ளது -சஜித் நாடு இன்று எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பாக கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்திருந்த போதிலும் ஆளும் தரப்பு அவை அனைத்தையும் கேலிக்குள்ளாக்கியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆற்றிய விசேட உரையின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த சஜித், தற்போதைய அரசாங்கம் திட்டமிட்டு நாட்டை அழித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் “நிதி மேலாண்மை குறித்து பிரதமர் பேசுகிறார். இதற்கு சர்வதேச சமூகத்திடம் இருந்து நல்ல பதில் கிடைத்துள்ளதாக பிரதமர் கூறுகிறார். சர்வதேச சமூகத்துடனான…
-
- 0 replies
- 256 views
-
-
கோதுமை மாவின்... விலையும், அதிகரிப்பு ! கோதுமை மாவின் விலையை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கிலோ ஒன்றுக்கு 40 ரூபாயினால் அதிகரிக்க பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளது. இருப்பினும் செரண்டிப் நிறுவனம் விலை உயர்வு குறித்து இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1277301
-
- 0 replies
- 318 views
-
-
2 மில்லியன் டொலர்களை வழங்கியே... புதிய இராஜாங்க அமைச்சர்கள், நியமிப்பு – புதிய தகவலை வெளியிட்ட எதிர்க்கட்சி 2 மில்லியன் டொலர்களை வழங்கியே புதிய இராஜாங்க அமைச்சர்களை அரசாங்கம் நியமித்துள்ளது என எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும்போதே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். வீடுகளுக்கு சென்று நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைபேசும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக விமல் வீரவன்சவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்நிலையிலேயே தமக்கு குறித்த தகவல் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார சபையில் தெரிவித்தார். https://…
-
- 2 replies
- 348 views
-
-
சஹ்ரான் பயன்படுத்திய... வாகனத்தை, பயன்படுத்தவில்லை – நாடாளுமன்றில் சரத் வீரசேகர சஹ்ரான் ஹாசீம் பயன்படுத்திய வாகனத்தை தான் பயன்படுத்தவில்லை என முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாக்குதலை நடத்திய பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீம் Toyota Land Cruiser V8 என்ற வாகனத்தை பயன்படுத்தியிருந்தார். குறித்த வாகனத்தை சரத் வீரசேகரவும் பயன்படுத்தியாதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றது. நீதிமன்ற கட்டுப்பாட்டில் இருக்கும் குறித்த வாகனத்தை அமைச்சர் ஒருவர் பயன்படுத்தலாமா என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அண்மையில் கேள்வியெழுப்பி இருந்தார். இந்நிலையில் இன்று இடமபெற்ற நாடாளுமன்ற அமர்வி…
-
- 0 replies
- 170 views
-
-
இலங்கையில் உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? திடீரென இயற்கை உரத்தை கட்டாயமாக்கியது காரணமா? முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ், இலங்கையிலிருந்து 12 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் ரசாயன உரத்திற்கு தடை விதித்ததன் மூலம் தாம் தவறிழைத்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால், இந்தத் தடை இலங்கையின் உணவுப் பாதுகாப்பிற்கே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. பொருளாதார நெருக்கடி தொடர்பாக கடந்த ஏப்ரல் 12ஆம் தேதியன்று கருத்துத் தெரிவித்த இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, "மே மாதத்துடன் இந்திய கடன் திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெறு…
-
- 0 replies
- 140 views
- 1 follower
-
-
40 நாடாளுமன்ற உறுப்பினர்களும்... எதிர்க்கட்சியில்! நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ளனர். சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களும் பொதுஜன பெரமுனவில் இருந்து சுயாதீனமாக இருக்க தீர்மானித்தவர்களுக்கும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1277286
-
- 0 replies
- 121 views
-
-
நாட்டின், தற்போதைய நிலைமை குறித்து... பிரதமர் நாடாளுமன்றத்தில் விசேட உரை! நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றி வருகின்றார் 20வது திருத்தத்தை நீக்கி 19வது திருத்தத்தை மீண்டும் கொண்டு வருவதே பிரச்சினைகளுக்கு குறுகிய கால தீர்வாக இருக்கும் என அவர் கூறுகிறார். நாட்டு மக்கள் தற்போது பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதை ஒப்புக்கொள்வதாக தெரிவித்த அவர், அரசாங்கம் வேண்டுமென்றே தமது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாது என்றும் கூறினார். தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்றும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார். மேலும் பாரபட்சமின்றி நாட்டைக் கட்டியெழுப்ப வாருங்கள் என எ…
-
- 0 replies
- 171 views
-
-
மக்கள் போராட்டத்துக்கு ஆதரவாக...பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்களும் பேரணி! கொழும்பு – காலி முகத்திடலில் அரசுக்கு எதிராக நடாத்தப்படும் பொதுமக்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அனைத்துப் பல்கலைக் கழகங்களினதும் ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் அடையாளப் பேரணி ஒன்றை நடாத்தவுள்ளது. பொது மக்களின் வாழ்வுரிமைக்காக காலி முகத்திடலில் நடாத்தப்படும் போராட்டத்துக்கான தமது தார்மீக ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 01 மணியளவில் கொழும்பு பல்கலைக்கழக முன்றலில் இருந்து காலி முகத்திடல் நோக்கி இந்த அடையாளப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பல்கலைக் கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளம் அறிவித்துள்ளது. கொழும்பு மற்றும்…
-
- 1 reply
- 157 views
-
-
மக்களுக்கு... நிவாரணங்களை வழங்கவே, புதிய அமைச்சரவை – கனக ஹேரத் புதிய அமைச்சரவையின் நோக்கம் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதும் மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதுமாகும் என புதிய நெடுஞ்சாலைகள் அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை, கொஸ்வத்தையில் அமைந்துள்ள மக நெகும மஹமெதுர வளாகத்தில் அமைந்துள்ள அமைச்சின் காரியாலயத்தில் நேற்று (திங்கட்கிழமை) கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் அமைச்சின் ஊழியர்களிடம் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவித்ததாவது, “எமது வரலாற்றில் முதல் முறையாக, நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நேரத்தில், ஒரு அரசாங்கமாக நாங்கள் பல பெரிய சவால்களை எதிர்கொள்கிறோம். அரசாங்கத்தின் முதன்மையான க…
-
- 0 replies
- 169 views
-
-
கொரோனா தடுப்பூசியின்... நான்காவது டோஸை, செலுத்துவதற்கு திட்டம். இலங்கை மக்களுக்கு எதிர்வரும் காலத்தில் கொரோனா தடுப்பூசியின் நான்காவது டோஸை செலுத்துவதற்கு திட்டமிடப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சராக நேற்று பொறுப்பேற்ற சன்ன ஜயசுமன இதனை அறிவித்துள்ளார். இதேவேளை, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, வளாகம் ஒன்றுக்கு செல்லும் போது உடல் வெப்பநிலையை பரிசோதித்தல் மற்றும் தனிநபர் விபரங்களைத் திரட்டுதல் என்பன கட்டாயம் இல்லை எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1277267
-
- 0 replies
- 123 views
-
-
19 ஐ போன்று, 21 ஐ கொண்டு வர... அரசாங்கம் திட்டம் !! அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை இரத்து செய்வதற்கும் 19 ஆவது திருத்தத்தை 21 ஆவது திருத்தமாக மீண்டும் கொண்டுவருவதற்கும் அரசாங்கம் இணங்கியுள்ளது என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நீதி, நிர்வாகம், நிறைவேற்றுத்துறையை உள்ளடக்கிய அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை அமைச்சரவையில் முன்வைக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ள நிலையில் அவர் இதனை கூறியுள்ளார். சபாநாயகர் தலைமையில் நேற்று இடம்பெற்ற விசேட சந்திப்பில் பொதுநிர்வாக அமைச்சர் தினேஸ் குணவர்தன, கட்சித் தலைவர்களுக்கு இது குறித்து அறிவித்தார் என மனோ கணேசன் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மிகவும் பொறுப்பான அரசாங்கத்தை பொதுமக…
-
- 0 replies
- 141 views
-
-
நாடாளுமன்றம் இன்று கூடுகிறது – அரசாங்கத்திற்கு எதிரான, நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு? நாடாளுமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.00 மணிக்கு கூடவுள்ளது. இன்று முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மொழி விடைகளுக்கான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சபை ஒத்திவைப்பு நேரத்தில் கேள்விகள் மற்றும் பிரேரணைக்கு மாலை 4.30 மணி முதல் 4.50 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி மாலை 4.50 மணி முதல் 5.30 மணி வரை அரசு மற்றும் எதிர்கட்சி தர…
-
- 0 replies
- 103 views
-
-
பாகிஸ்தானில்... கொலை செய்யப்பட்ட, இலங்கையர் – 6 சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை! பாகிஸ்தானின் சியல்கோட் நகரில் இலங்கைப் பிரஜையான பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 06 சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு பாகிஸ்தான் நீதிமன்றத்தினால் நேற்று தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி, 06 சந்தேகநபர்களுக்கு மரண தண்டனையும் 07 சந்தேகநபர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாகிஸ்தானின் சியல்கோட் நகரில் கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் திகதி பிரியந்த குமார எரித்து படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1277225
-
- 0 replies
- 88 views
-
-
எரிபொருள்... விலை அதிகரிப்புக்கு, எதிர்ப்பு – நாட்டின் பல இடங்களில் போராட்டம்! எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு எதிராக இலங்கையின் பல பகுதிகளில் இன்று (செவ்வாய்கிழமை) காலை முதல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, ரம்புக்கனை, ஹிங்குராங்கொட, பத்தேகம, திகனஎ கம்பளை, இரத்தினபுரி, தெல்தெனிய ஆகிய இடங்களில் தற்போது போராட்டங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ரம்புக்கனை ரயில் பாதையை மக்கள் மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால், அந்த வீதியூடான ரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளன. மேலும் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவாக ரம்புக்கனை நகரில் உள்ள பல கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்ட…
-
- 0 replies
- 118 views
-