ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142865 topics in this forum
-
8 ஆவது நாளாகவும்... தொடரும், எழுச்சிப் போராட்டம். கொழும்பு காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக கடந்த 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று ( சனிக்கிழமை ) 8 ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் ‘கோட்டா கோ கம’ என்ற பெயர்ப்பலகையைக் காட்சிப்படுத்தியுள்ள போராட்டக்காரர்கள் அங்கு கூடாரங்களை அமைதது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று போராட்டம் களத்துக்கு ஆதிவாசிகள் குழுவொன்றும் வருகை தந்ததோடு ஆர்ப்பாட்டத்திற்கு பெருந்தொகையான மக்கள் வந்திருந்தமை குறிப்பிடதக்கது . https://athavannews.com/2022/1276790
-
- 0 replies
- 176 views
-
-
வரலாற்றில் நாடு காணாத.... மோசமான அரசாங்கம், ராஜபக்ஷ அரசாங்கம் என்கின்றார் சஜித் வரலாற்றில் நாடு காணாத மோசமான அரசாங்கம் தற்போதைய அரசாங்கம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அழிவுகளுக்கு குடும்ப ஆட்சியே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். இந்நிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அம்பாறையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், பல்வேறு நாடுகளில் திருடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டுள்ள நிதியை மீட்பதற்கு எதிர்க்கட்சிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். நம்பிக்கைய…
-
- 0 replies
- 108 views
-
-
2005 ஆம் ஆண்டு... சிங்கள மக்கள் யோசித்து வாக்களித்திருந்தால், ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்கள் – சுமந்திரன் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருமே அரசில் இருக்கக் கூடாது எனத் தமிழ் மக்கள் அன்றே கூறிவிட்டனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று ( வெள்ளிக்கிழமை ) நடைபெற்ற கருத்தாடல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் “ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருமே அரசில் இருக்கக் கூடாது என 2010 ஆம் ஆண்டு, 2015 ஆம் ஆண்டு, 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல்களில் தமிழ் மக்கள் சொல்லி விட்டனர். 2005 ஆம் …
-
- 0 replies
- 127 views
-
-
ஆட்சி மாற்றம் தேவையில்லை என்ற கஜேந்திரகுமார்... இன்று நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்து, சந்தர்ப்பவாத நடவடிக்கை என்கின்றார் சுரேஷ் ஆட்சி மாற்றம் தேவையில்லை அதனால் தமிழ் மக்களுக்கு எதுவும் நடக்கப் போவதில்லை என கூறியவர்கள் இன்று ஆட்சி மாற்றம்தான் வேண்டும் என கூறுவது சந்தர்ப்பவாத நடவடிக்கை என சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். மனித உரிமை பேரவையில் தமிழர்கள் பிரச்சினை குறித்து பேசியபோது ஆட்சி மாற்றத்திற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவதாக இலங்கை தமிழ் காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் எம்.பி. ஆகியோர் கையெழுத்திட்டமையானது அவர்களும் ஆட…
-
- 0 replies
- 94 views
-
-
போராட்டங்கள்... நடுநிலைமையாக காணப்பட்டால், எதிர்காலத்திற்கு சிறந்த விடயம் – துமிந்த திசநாயக்க காலிமுகத்திடலில் இடம்பெறும் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடுநிலைமையானவையாக காணப்பட்டால் நாட்டின் எதிர்காலம் சிறப்பானதாக காணப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது. அரசாங்கத்துக்கு எதிராக கடந்த 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று (சனிக்கிழமை ) 8 ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்ப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசநாயக்க தெரிவிக்கையில் அரசியல்கட்சிகள் மக்கள் போராட்டத்திற்கு உரிமை கோரமுயல்கின்றன என்பதோடு பொதுமக்களை அரசியல்வாதிகள் ஏமாற்றிய பல தருணங்கள் உள்ளன எனவு…
-
- 0 replies
- 121 views
-
-
இன்றும், நாளையும் மின்வெட்டு – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்றும், நாளையும் இரண்டு மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்தடை அமுலாக்கப்பட உள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, குறித்த இரண்டு நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. A முதல் W வரையான வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப் பகுதியில் இரண்டு மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. https://athavannews.com/2022/1276803
-
- 0 replies
- 105 views
-
-
[TamilNet, Saturday, 09 April 2022, 14:44 GMT] பெரும் பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொள்ளும் இத்தருணத்தில், திடுமென வரலாற்று ஓட்டத்திற்கு மாறான நடத்துமுறை ஒன்றைத் தழுவி, ஈழத்தமிழர் தேசத்தின் கூட்டு உரிமைகளை உறுதிப்படுத்த, அதன் ஆளும் தரப்போ, எதிர்த் தரப்போ இலகுவில் உடன்பட்டுவிடும் என்று எதிர்பார்ப்பது அடிப்படைத் தவறாகும். இலங்கைத் தீவைப் பொறுத்தவரை தமிழர்களுக்கு வரலாற்றுப் பட்டறிவே உற்ற நண்பன்; எதிரியை மட்டுமல்ல விரோதிகளையும் துல்லியமாகக் கணிப்பிடும் நுண்ணறிவே அவர்களின் அருமைத் தோழி. அரசியலமைப்பை இலங்கை அரசு கையாண்டுவந்துள்ள அதன் நடத்துமுறையைப் (modus operandi) புரிந்த நிலையில், நுண்ணறிவோடும் பேரறிவோடும், ஆக்கிரமிக்கப்பட்ட தமிழீழம், தமிழ்நாடு, புலம்பெயர் சூழல் என்று ஒ…
-
- 0 replies
- 400 views
-
-
இன்று முதல்... எரிபொருள் விநியோகத்துக்கு, வரையறை. இன்று ( வெள்ளிக்கிழமை ) முதல் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கையை வரையறுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது. இதேவேளை மோட்டார் சைக்கிளுக்காக 1000 ரூபாவிற்கும், முச்சக்கரவண்டிக்காக 1500 ரூபாவிற்கும் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதோடு கார், வேன், ஜீப் போன்ற வாகனங்களுக்கு அதிகபட்சமாக 5000 ரூபாவிற்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படும் என அந்த கூட்டுதாபனம் அறிவித்துள்ளது. மேலும் வணிக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கைகளில் வரையறை கிடையாது எனவும் பெற்றோலிய கூட்டுதாபனம் தெரித்துள்ளது. https://athavannews.com/2022/…
-
- 0 replies
- 194 views
-
-
ஜனாதிபதி... "மௌனம்" கலைய, வேண்டும் – நாமல் மக்கள் ஏன் அரசாங்கத்தின் மீது கோபமாக உள்ளனர் என்பது தமக்கு புரிகிறது என தெரிவித்த முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி மௌனம் கலைய வேண்டும் என தெரிவித்துள்ளார். இருப்பினும், இப்போது கோபத்திற்கான நேரம் மட்டுமல்ல, தீர்வுக்கான நேரம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகமொன்று வழங்கிய செவ்வியின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் ஜனாதிபதியும் அரசாங்கமும் நாட்டிற்கான திட்டங்கள் குறித்து இன்னும் வெளிப்படையாக குரல் கொடுத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அத்தோடு, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் அதைச் சமாளிப்பதற்கான அவரது திட்டங்கள் குறித…
-
- 1 reply
- 268 views
-
-
தமிழர்களுடைய பிரச்சினையை மட்டும், ஏனைய தரப்பினரிடம்... கோரிக்கையாக முன்வைக்க முடியாது – தர்மலிங்கம் சித்தார்த்தன் தமிழரசுக் கட்சியாக முடிவை எடுப்பதைவிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து முடிவை எடுப்பதே தமிழ் மக்களுக்கு பயனைத் தருமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என பெரும்பாலான மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ள நிலையில் தமிழ் மக்களுடைய பிரச்சினையை மட்டும் ஏனைய தரப்பினரிடம் கோரிக்கையாக வைக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். கந்தரோடையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போத…
-
- 0 replies
- 439 views
-
-
இலங்கை போராட்டத்தில் இணைந்த போலீஸ் அதிகாரி: "என் குழந்தைகளின் உயிரோடு விளையாடுகிறார்கள்" 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (இன்றைய (ஏப்ரல் 15) இலங்கை நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியான சில முக்கியச் செய்திகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம்) இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை எதிர்த்து, கொழும்பு - காலி முகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டத்தில், காவல்துறை அதிகாரி ஒருவர் இணைந்துள்ளதாக 'தமிழ் மிரர்' செய்தி வெளியிட்டுள்ளது. போராட்டக்காரர்களுடன் இணைந்த அவர், அங்கு பேசியபோது, "இந்த அரசாங்கம் இலங்கை காவல்துறையின் முதுகெலும்பை உடைத்து விட்டது. இந்த சீருடை அணிவதை வி…
-
- 2 replies
- 287 views
- 1 follower
-
-
முன்னாள்... கிரிக்கெட் வீரர், உண்ணாவிரதப் போராட்டம்! இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க பிரசாத் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கொழும்பு காலி முகத்திடலில் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கும் நீதி வழங்குமாறு நாட்டின் தலைவர்களை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அவர் அறிவித்துள்ளார். கடந்த வாரம் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தி கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் இருந்து கொச்சிக்கடை தேவாலயத்திற்கு எதிர்ப்பு பேரணி ஒன்றையும் இவர் ஏற்பாடு செய்திருந்தார் என்பது …
-
- 0 replies
- 159 views
-
-
காலி முகத்திடலில்... கூடிய பல்லாயிரக்கணக்கான, மக்கள் – 7ஆவது நாளாகவும் தொடரும் எழுச்சிப் போராட்டம்! கொழும்பு காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக கடந்த 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) 7 ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் ‘கோட்டா கோ கம’ என்ற பெயர்ப்பலகையைக் காட்சிப்படுத்தியுள்ள போராட்டக்காரர்கள் அங்கு கூடாரங்களை அமைதது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்இ சிங்கள புதுவருடப்பிறப்பான நேற்றையதினம் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொழும்பு காலிமுகத்திடலுக்கு வருகை தந்து அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிர…
-
- 0 replies
- 113 views
-
-
அரசாங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் எதிரான.... நம்பிக்கையில்லாப் பிரேரணை – எதிர்க்கட்சி முக்கிய தீர்மானம் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளிப்பதை ஒருவாரம் பிற்போட எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. தற்போதைய பொருளாதார இன்னல்களுக்கு தீர்வு காணும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலுக்கு அது நேரடி தாக்கம் செலுத்தும் என பொருளாதார நிபுணர்கள் முன்வைத்த விடயங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த நாடாளுமன்ற வாரத்தில் சபாநாயகரிடம் கையளிக்க எதிர்க்கட்சி முன்னதாக திட்டமிட்டிருந்தது. அதற்க…
-
- 0 replies
- 88 views
-
-
நாட்டில்... இன்று, மின்வெட்டு இல்லை! நாட்டில் இன்றும் (வெள்ளிக்கிழமை) மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாளைய தினம் மின்வெட்டு அமுலாக்கப்படுவது குறித்து இன்று கூடி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அந்த சபை தெரிவித்துள்ளது. மின்உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் கிடைக்க பெற்றமை மற்றும் நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பதிவாகும் மழை வீழ்ச்சி என்பனவற்றை கருத்திற்கொண்டு தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2022/1276607
-
- 0 replies
- 145 views
-
-
இலங்கையை... ஸ்திரப்படுத்த, உதவும் இந்தியா – ஏ.என்.ஐ. தகவல் இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், இந்தியா கொழும்பிற்கு வழங்கிய நிதியுதவியானது இலங்கையின் பொருளாதாரத்தினை ஸ்திரப்படுத்துவதற்கு உதவி வருகின்றது. இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. நீண்ட மின்வெட்டு, விலைவாசி அதிகரிப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு ஆகியன தொடர்கின்றன. அந்நிய செலாவணியின் பற்றாக்குறையால் இலங்கையின் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது. டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதுடன் வெளிநாட்டுக் கடன்கள் செலுத்த வேண்டிய காலமும் நெருங்கி வருகின்றது. சுற்றுலாத்துறையின…
-
- 0 replies
- 259 views
-
-
-
- 4 replies
- 427 views
-
-
தமிழர்கள்... பேரம் பேசவேண்டிய, தருணம் இதுவே – காணாமல் போனவர்களின் உறவுகள் ! பொது வாக்கெடுப்பு அல்லது தமிழர்களின் சுதந்திர ஆட்சிக்கான பேரம் பேசலை முன்னெடுக்கவேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளதாக வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இன்று ( வியாழக்கிழமை ) 1881 ஆவது நாளாகவும் பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் போராட்டத்தில் ஈடுபடும் நிலையில் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்னர் . மேலும் கொழும்பில் உள்ள தமிழ் இளைஞர்கள், சிங்கள இளைஞர்களின் புரட்சியின் மீது கொண்ட காதல், தமிழர்களுக்கு எந்த விடிவையும் கொண்டு வராது. அது தமிழர்களின் துன்பங்களை ஒழிக்காது, ஒற்றையாட்சியை மேலும் வலுப்படுத்தும். “கொழும…
-
- 3 replies
- 337 views
-
-
விரைவில் மீண்டெழுவோம் : சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் "பொறுமையும் நம்பிக்கையும் அவசியமான பொழுதொன்றில் புலரும் தமிழ், சிங்கள புத்தாண்டு அனைவரின் இடர்களையும, துயர்களையும் போக்குகின்ற ஆண்டாக அமைய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்" இவ்வாறு பிறக்கும் தமிழ்,சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, தேசிய நல்லிணக்கத்தின் பண்டிகையாக தமிழ் சிங்கள மக்களால் கொண்டாடப்படும் சித்திரைப் பண்டிகையின் கொண்டாட்டமானது எதிர்பாராத பொருளாதார நெருக்கடிகளோடும், பொருள் தட்ட…
-
- 7 replies
- 481 views
-
-
இலங்கை பொருளாதார நெருக்கடியால் சிக்கலை எதிர்கொள்ளும் யாழ்ப்பாண மீனவச் சமூகம் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 40 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையின் வட பகுதியில் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பலரது நிலை இதுதான். இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியும் எரிபொருள் தட்டுப்பாடும் யாழ்ப்பாணத்தின் மீன் பிடித் தொழிலையே முடக்கியிருக்கிறது. இலங்கை வடக்கு மாகாணத்தின் பிரதான நகரமான யாழ்ப்பாணத்தில் மீன் பிடித் தொழில் மிக முக்கியமான தொழிலாக இருந்துவருகிறது. 2017ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி சுமார் 21,200 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் …
-
- 0 replies
- 250 views
- 1 follower
-
-
சந்திரிக்காவுடன் பல அரசியல் தரப்புக்கள் சந்தித்து பேச்சு ( எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் ஜனாதிபதி சந்ரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன், பல்வேறு அரசியல் தரப்புக்களும் அவசர சந்திப்பொன்றினை நடாத்தி கலந்துரையாடியுள்ளன. இந்த சந்திப்பு கொழும்பு - பண்டாரநாயக்க சர்வதேச மா நாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான் குமார வெல்கம, சம்பிக்க ரணவக்க, ரஞ்சித் மத்தும பண்டார, ரிஷாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம், எம்.ஏ. சுமந்திரன், அனுர யாப்பா அபேவர்தன, சுசில் பிரேம ஜயந்த, கபீர் ஹாஷிம், எரான் விக்ரமரத்ன, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுடன் இவ…
-
- 0 replies
- 311 views
-
-
இலங்கை நெருக்கடி: அதிகாரத்தைப் பெற எனக்கு ஆர்வமில்லை - எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (இன்றைய (ஏப்ரல் 14) இலங்கை மற்றும் இந்திய நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியான சில முக்கியச் செய்திகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம்) ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளால் தனக்கு எந்தப் பயனும் இல்லை என்றும் அதிகாரத்தைப் பெறுவதில் தனக்கு ஆர்வமில்லை எனவும் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருப்பதாக 'தமிழ் மிரர்' செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று, விசேட அறிக்கையில் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த அவர் மேலும…
-
- 0 replies
- 247 views
- 1 follower
-
-
கோல்பேஸ் போராட்டங்களில் நாட்டில் இஸ்லாமிய தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சலாபிகள், வஹாபிகள் மற்றும் ஜமாத் - இ - இஸ்லாமியர்களை அடையாளம் கண்டுள்ளதாக பொதுபல சேனா (BBS) தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தீவிரவாதத்தின் முழக்கங்களை எதிர்த்துப் போராடுவது என்ற போர்வையில் சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதாக அந்தக் அறிக்கையில் தெரிவித்துள்ளது. https://www.madawalaenews.com/2022/04/blog-post_51.html
-
- 0 replies
- 202 views
-
-
அனைத்து தலைவர்களையும் அழைத்து கலந்துரையாட தீர்மானம் - மல்வத்து பீடம் (இராஜதுரை ஹஷான்) நாட்டில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக்கொண்டு மக்கள் பிரநிதிகள் கடந்த வாரம் பாராளுமன்றில் செயற்பட்ட விதம் கவலைக்குரியதாக அமைந்துள்ளதுடன், கண்டிக்கத்தக்கதாகவும் காணப்படுகிறது. மக்கள் எதிர்க்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் விரைவாக தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும். அரச தலைவர்களையும்,அரசியல் கட்சி தலைவர்களையும் சந்திக்க முப்பீடங்களும் கூட்டாக தீர்மானித்துள்ளதாக மல்வத்து பீடத்தின் செயலாளர் பஹமுன சுமங்கல தேரர் தெரிவித்தார். அஸ்கிரிய பீடம்,மல்வத்து பீடம் மற்றும் அமரபுர நிகாய ஆகிய முப்பீடங்களின் மகாநாயக்கர்கள் சனிக்கிழமை (09.04.2022)…
-
- 6 replies
- 503 views
-
-
விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தவெற்றி - பாடலை எழுதிய சிங்கள பாடலாசிரியர் பகிரங்க மன்னிப்பு கோரினார் யே.ஆர். சுமந்திரன் 38 நிமிடங்கள் முன் #srilanka#Lyricist#Sunil R. Gamage#publicly apologizes தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியின் பின்னர் ‘அயுபோ வெவ மகாராஜனேனி’ (ayubowewa maharajaneni)பாடலை எழுதியமைக்காக பாடலாசிரியர் சுனில் ஆர்.கமகே பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். பாடலை எழுதியதற்காக மக்கள் நீதிமன்றம் தன்னை விடுதலை செய்யும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இன்று தான் இருந்த இடத்தில் இல்லை என்றும், இன்று தன…
-
- 7 replies
- 717 views
-