ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142865 topics in this forum
-
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, கடன் வரம்பு நிர்ணயித்து மனிதாபிமான அடிப்படையில் இந்தியா பெட்ரோல், டீசல் வழங்கி வருகிறது. ஆனால் உறுதியளித்தபடி கடன் வரம்புக்குள் தொகையை செலுத்த முடியாமல் இலங்கை தவிக்கும் நிலையில் இந்தியா மீண்டும், மீண்டும் பெட்ரோல், டீசலை வழங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் இந்திய எண்ணெய் நிறுவனங்களும் கடன் வலையில் சிக்கிக் கொள்ளும் என்பதால் இந்தியா தயக்கம் காட்டுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பல்வேறு காரணங்களினால் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இலங்கையிடம் அமெரிக்க டொலர் கையிருப்பு பெப்ரவரியில் 2.31 பில்லியன் டொலர்களில் இருந்து மார்ச் மாதத்தில் 1.93…
-
- 0 replies
- 128 views
-
-
நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்ற... நிதி அமைச்சராக, இருந்து தேவையானதைச் செய்வேன் – அலி சப்ரி எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும், நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்ற, நிதி அமைச்சராக இருந்து, தேவையானதைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன் என அலி சப்ரி தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் தற்போது இடம்பெற்று வருகிறது. இதன்போது புதிய அமைச்சர்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் நிதியமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கேள்வி எழுப்பினார். அதனை தெளிவுபடுத்திய அலி சப்ரி, தான் நிதியமைச்சராகவே தற்போது உ…
-
- 9 replies
- 498 views
-
-
அடுத்த ஆறு மாதங்களில்... வரி மற்றும் எரிபொருள் விலையை, மேலும் அதிகரிக்க வேண்டி ஏற்படும் – வெளிநாட்டு ஊடகத்திடம் நிதி அமைச்சர் அடுத்த ஆறு மாதங்களுக்குள் இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் டொலர் வெளிநாட்டு உதவி தேவைப்படும் என நிதியமைச்சர் அலி சப்ரி வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். கடுமையான பொருளாதார நெருக்கடியை நிர்வகிப்பதற்கு எரிபொருள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பெற்றுக்கொள்ள இந்த நிதி அவசியம் என கூறினார். எரிபொருளுக்காக இந்தியாவிடம் இருந்து மேலும் 500 மில்லியன் டொலர் கடனை இலங்கை நாடும் என்றும் இது சுமார் 5 வார தேவைகளுக்கு போதுமானதாக இருக்கும் என்று சப்ரி கூறினார். ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் ச…
-
- 0 replies
- 159 views
-
-
ஈஸ்டர் தாக்குதல் சதிகாரர்களால்... ஆட்சியை, தக்கவைக்க முடியவில்லை – கொழும்பு பேராயர் ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான சதிகாரர்கள் யார் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வருகின்றது என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இவ்வாறான சம்பவங்களை முன்னிறுத்தி அதிகாரத்தை பெற்றுக்கொள்பவர்களால் நீண்ட காலம் அதிகாரத்தில் இருக்க முடியாது என்பது நிரூபணமாகிறது என்றும் கொழும்பு பேராயர் சுட்டிக்காட்டினார். தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கட்டுவாப்பிட்டியில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். https://athavannews.com/2022/1276004
-
- 0 replies
- 240 views
-
-
இலங்கையின் நிலைமை குறித்து... கனடா, ஆழ்ந்த கவலை! இலங்கையில் சீரழிந்து வரும் பொருளாதார நிலை மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை குறித்து ஆழ்ந்த கவலை அடைவதாக கனடா தெரிவித்துள்ளது. இந்நிலையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமைக்கு அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும் என கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார். இந்த கடிதமான காலத்தில் இலங்கை மக்களோடு கனேடியர்கள் இருப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தொடரும் போராட்டங்களின் விளைவாக கனடா, அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கான பயண எச்சரிக்கைகளை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1276001
-
- 0 replies
- 232 views
-
-
நம்பிக்கையில்லா பிரேரணை, கொண்டு வரப்பட்டால்... ஆதரவளிப்போம் – கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டால் அதற்கு ஆதரவளிக்க தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஸ்திரமான அரசாங்கம் இல்லாமல் சர்வதேச நாணய நிதியம் போன்ற பொதுக் கட்டமைப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தமுடியாது என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ஆகவே வெகுவிரையில் தேர்தலை நடத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். https://athavannews.com/2022/1275977
-
- 0 replies
- 133 views
-
-
அலரிமாளியை... சுற்றி, பலத்த பொலிஸ் பாதுகாப்பு! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறும், அரசாங்கம் இராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதேவேளை ஈஸ்டர் அன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கட்டுவாப்பிட்டி தேவாலயம் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அலரிமாளியை சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், அப்பகுதி முற்றுகையிடப்பட்டுள்ளமையும் அவதானிக்க முடிந்தது. https://athavannews.com/2022/1275998
-
- 0 replies
- 197 views
-
-
இலங்கை பெரும் சமூககொந்தளிப்பு ஆபத்தை எதிர்கொள்கின்றது- பேராசிரியர் சந்தா தேவராஜன் இலங்கை பெரும் சமூககொந்தளிப்பு ஆபத்தை எதிர்கொள்கின்றது என இலங்கை ஜனாதிபதியின் கடன் ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ள பேராசிரியர் சந்தா தேவராஜன் தெரிவித்துள்ளார். இலங்கையில் சமூக அமைதியின்மை தொடர்வதால் நாடு ஆபத்தான நிலையை எதிர்கொள்கின்றது என அவர் சிஎன்பிசிக்கு தெரிவித்துள்ளார். உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறைகளும் முன்னொருபோதும் இல்லாத பணவீக்கமும் தொடர்ச்சியான மின்வெட்டுகளும் ஆயிரக்கணக்கான இலங்கையர்களை வீதியில் இறங்கச்செய்துள்ளன,1948 இல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் ஒருபோதும் இல்லாத வீழ்ச்சியை நாடு எதிர்கொள்கின்றது. சமூக கொந்தளிப்பே மிகப்பெரும் ஆபத்து இதன…
-
- 0 replies
- 185 views
-
-
விடுதலைப் புலிகளுக்கு... ஆயுதம் வழங்க முயன்ற, ஜப்பானிய... பாதாள உலக தலைவர் கைது! தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தரையில் இருந்து தாக்க கூடிய ஏவுகணைகளை வழங்க முயற்சித்த ஜப்பானிய பாதாள உலகத் தலைவர் ஒருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருடன் சேர்த்து மூன்று தாய்லாந்து நபர்களையும் கைது செய்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்த மூவரும் நியூயோர்க்கில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் போதைப்பொருள் மற்றும் ஆயுத கடத்தல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தானியங்கி ஆயுதங்கள், ரொக்கெட்டுகள், இயந்திர துப்பாக்கிகள் மற்றும் தரையிலிருந்து வான்நோக்கி தாக்…
-
- 1 reply
- 319 views
-
-
இடைக்கால அரசாங்கத்தின்... பிரதமர் பதவி : ரணில், பொன்சேகா உள்ளிட்ட... ஐவரின் பெயர் பரிந்துரை தற்போதைய அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியினரால் முன்மொழியப்பட்டுள்ள இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு ஐந்து பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ரணில் விக்ரமசிங்க, நிமல் சிறிபால டி சில்வா, பாட்டலி சம்பிக்க ரணவக்க, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, ரணில் விக்ரமசிங்க பல ஐரோப்பிய இராஜதந்திர தலைவர்களை சந்தித்து, தற்போது நிலவும் பொருளாதார நிலைமை குறித்து விளக்கமளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதன்போது இடைக்கால அரசாங்கத்தின் தேவை மற்றும் அதன் பதவிக்காலம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக…
-
- 0 replies
- 129 views
-
-
நாணய சபை வட்டி வீதங்களை... இறுக்கப்படுத்த, மத்திய வங்கி நடவடிக்கை! பணவீக்கத்தை குறைக்கும் நோக்கிலேயே மத்திய வங்கி, நாணய சபை வட்டி வீதங்களை இறுக்கப்படுத்தியுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி முருகேசு கணேச மூர்த்தி குறிப்பிட்டார். நாணய சபை வட்டி வீதங்களை இறுக்கப்படுத்துவதற்கு மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, துணைநில் வைப்பு வீதம் 13.50 சதவீதமாகவும், துணைநில் கடன் வீதம் 14.50 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டது. இதன்படி, இந்த இரண்டு வட்டி வீதங்களும் 700 அடிப்படை புள்ளிகளால் அதிகரிக்கப்பட்ட நிலையில் வட்டி வீதம் அதிகரிப்பு குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். மேலும் குறித்…
-
- 0 replies
- 142 views
-
-
அரசாங்கத்திற்கு எதிரான... நம்பிக்கையில்லாப் பிரேரணை: 18 உறுப்பினர்கள் கையொப்பம் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இதுவரை 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக அறிய முடிகின்றது. ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சி நேற்று சபையில் அறிவித்திருந்தது. குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களான நிரோஷன் பெரேராவும், முஜிபுர் ரஹ்மானும் இதனை உறுதிப்படுத்தினர். அத்தோடு அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கையொப்பமிட ஆரம்பித்துள்ளதாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். லக்ஷ்மன் கிரி…
-
- 0 replies
- 111 views
-
-
நிறைவேற்று அதிகாரம் கொண்ட... ஜனாதிபதி முறையை ஒழிக்க, தமிழ்க் கட்சிகள் ஏகமனதாக கோரிக்கை தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பாக பிரதான தமிழ் கட்சிகளின் ஐந்து தலைவர்களும் நேற்று யாழ்ப்பாணத்தில் கூடி கலந்துரையாடினர். இதன்போது நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏகமனதாக விடுக்கப்பட்டது. குறித்த சந்திப்பில் டெலோ, புளொட், தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப். மற்றும் தமிழ் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர். இதேவேளை ஒற்றைக் கோரிக்கையை முன்னிறுத்தும் கூட்டறிக்கை ஒன்றினை தமிழ் மக்கள் சார்பில் வெளியிடுவது பற்றியும் பேசப்பட்டதாக அறிவ…
-
- 0 replies
- 92 views
-
-
போராட்டங்களினால்... சுற்றுலாப் பயணிகளுக்கு, எவ்வித பாதிப்பும் ஏற்படாது – அரசாங்கம் இலங்கையில் இடம்பெறும் சமீபத்திய அமைதியான போராட்டங்கள் மூலம் சுற்றுலா பயணிகள் அல்லது சுற்றுலா தலங்கள் இலக்கு வைக்கப்படவில்லை என வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு வருகைதரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் நாடு முழுவதும் சுதந்திரமாக பயணிக்க முடியும் என்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அமைச்சு, இலங்கை தொடர்பாக கடந்த 6 ஆம் திகதி அமெரிக்கா வெளியிட்டுள்ள பயண வழிகாட்டல்களை மீளாய்வு செய்வதில் கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுடன் , கடந்த ஆண்டு …
-
- 0 replies
- 115 views
-
-
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புக்களைப் பெற தேவையான மாற்றங்களை தாமதமின்றி செயற்படுத்துங்கள் - ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல் (எம்.மனோசித்ரா) சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பினைப் பெறுவதற்குத் தேவையான மாற்றங்களை இலங்கை தாமதமின்றி செயற்படுத்த வேண்டும் என்று உறுப்பு நாடுகளின் கூட்டு அறிக்கையூடாக ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. அத்தோடு இலங்கை மக்களைப் பாதித்துள்ள தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஆக்கபூர்வமான மற்றும் ஜனநாயக வழிமுறைகளை ஆராயுமாறு அனைத்துத் தரப்பினருக்கும் நாம் அழைப்பு விடுப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளாக ஜேர்மன், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ருமேனியா மற்றும் அவுஸ்திரே…
-
- 0 replies
- 106 views
-
-
சதொசவில்... இன்று முதல், நிவாரண பொதி ! தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சந்தை விலையிலும் பார்க்க குறைந்த விலையிலான 5 வகை பொருட்களை உள்ளடக்கிய நிவாரண பொதியை இலங்கை சதொச விற்பனை வலைப்பின்னல் ஊடாக வழங்குவதற்கு வர்த்தக அமைச்சு ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது. இதற்கமைய நிவாரணப் பொதிகளை இன்று ( சனிக்கிழமை ) தொடக்கம் சதொச கிளைகள் ஊடாக விற்பனை செய்யப்படவுள்ளது . இதன்படி அரிசி, பால்மா, சீனி, தேயிலை உள்ளிட்ட பொதி ஒன்றின் விலை 1950.00 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. பொதுவாக சந்தையில் நிலவும் விலையுடன் ஒப்பிடுகையில் இந்த 5 வகை பொருட்களுகளை 700 ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட தொகைக் கழிவுடன் புத்தாண்டு நிவாரணப் பொதியாக நுகர்வோரினால் பெற்றுக்கொள்ள முடியும் எ…
-
- 0 replies
- 188 views
-
-
ஆர்ப்பாட்டங்களால் சுற்றுலாப் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது - வெளிநாட்டலுவல்கள் அமைச்சு (எம்.மனோசித்ரா) இலங்கையில் இடம்பெறும் சமீபத்திய அமைதியான போராட்டங்கள் மூலம் சுற்றுலா பயணிகள் அல்லது சுற்றுலா தலங்கள் இலக்கு வைக்கப்படவில்லை. இலங்கைக்கு வருகை தரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் நாடு முழுவதும் சுதந்திரமாக பயணிக்க முடியும் என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு வெள்ளிக்கிழமை (8) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : இலங்கை தொடர்பில் கடந்த 6 ஆம் திகதி அமெரிக்கா வெளியிட்டுள்ள பயண வழிகாட்டல்களை மீளாய்வு செய்வதில் கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்…
-
- 0 replies
- 105 views
-
-
இலங்கையில்... போராட்டங்கள் மீதான, அடக்குமுறைக்கு... ஐ.நா. நிபுணர்கள் கண்டனம் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் நடத்தப்பட்ட சில போராட்டங்கள் மீதான ஒடுக்குமுறைக்கு ஐ.நா. மனித உரிமை நிபுணர்கள் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. அமைதியான முறையிலான ஒன்றுகூடல் மற்றும் போராட்டங்களின் போது கருத்து தெரிவிப்பதற்காக உரிமைகளை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை அவசரகால பிரகடனம் மற்றும் சமூக ஊடகங்கள் மீதான தடை ஆகியவற்றால் மிகவும் கவலையடைவதாகவும் ஐ.நா. மனித உரிமை நிபுணர்கள் குழு கூறியுள்ளது. மேலும் போராட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகிகத்தை அதிகமாகப் பயன்படுத்துவதையும் கண்டிப்பதாக அறிவித்துள்ளது…
-
- 0 replies
- 121 views
-
-
கொழும்பு: பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ள இலங்கைக்கு கடன் வரம்பு நிர்ணயித்து மனிதாபிமான அடிப்படையில் இந்தியா பெட்ரோல், டீசல் வழங்கி வருகிறது. ஆனால் உறுதியளித்தபடி கடன் வரம்புக்குள் தொகையை செலுத்த முடியாமல் இலங்கை தவிக்கும் நிலையில் இந்தியா மீண்டும், மீண்டும் பெட்ரோல், டீசலை வழங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் இந்திய எண்ணெய் நிறுவனங்களும் கடன் வலையில் சிக்கிக் கொள்ளும் என்பதால் இந்தியா தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இலங்கையிடம் அ…
-
- 6 replies
- 475 views
-
-
தமிழர் விடுதலைக் கூட்டணி... மீண்டும், தலைதூக்க போகின்றது – ஆனந்தசங்கரி இருபது ஆண்டுகளாக நேர்மையாக நியாயமாக அடிப்படையில் செயற்பட்டு வந்தாலும் அடங்கி ஒடுங்கியிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி நாளைய தினம் முதல் மீண்டும் தலைதூக்க போகின்றது என அக்கட்சியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே வீ.ஆனந்தசங்கரி இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு மக்கள் மீண்டும் ஆதரவு தரவேண்டும் நாளை(சனிக்கிழமை) காலை 11 மணிக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழுக் கூட்டம் கூடி தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் என்றார். …
-
- 8 replies
- 544 views
-
-
மக்கள் வரிசையாக நிற்கும் நிலையை உடனடியாக மாற்ற வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா அத்தியாவசியப் பொருட்களுக்காக மக்கள் வரிசைகளில் நிற்கின்ற நிலைமைகளை உடனடியாக மாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ள கௌரவ டக்ளஸ் தேவானந்தா, உணர்ச்சிகளாலோ அல்லது சுயலாப அரசியல் நலன் சார்ந்த சிந்தனைகள் மூலமோ இந்த நிலைமையை மாற்ற முடியாது எனவும் அறிவு ரீதியாக அனைவரும் சிந்தித்துச் செயலாற்றுவதன் மூலமே மாற்றியமைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைப் பற்றிய அறிக்கை தொடர்பாக அரசாங்கக் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும், எமது…
-
- 2 replies
- 291 views
-
-
இலங்கை கிரிக்கெட் வீரர் ரோஷன் மகாநாம: கோப்புப் படம் கொழும்பு: இலங்கையில் நடுத்தர வர்க்கத்தினர் மெல்ல மெல்ல அழிந்து வருவதை உணர்கிறேன், எங்கள் நேரம் கடந்து விட்டது, இந்தியா எங்களுக்கு அண்ணன் போல ஆதரவு காட்டுகிறது என இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஷன் மகாநாம நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அரசுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர…
-
- 4 replies
- 478 views
-
-
ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் மே மாதத்திலிருந்து முன்னர் எடுத்த ஏற்பாடுகள் விமான ஆசன முன்பதிவு (Bookings) என்பனவற்றிற்கான நிதியை மீள வழங்க அறிவித்துள்ளதாக பொருளியல் முகாமைத்துவ முதுமானி பட்டதாரியும், இலங்கையில் இருக்கக்கூடிய பல நிறுவனங்களுக்கான முகாமைத்துவ நிதியியல் ஆலோசகருமான குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்தார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். அதாவது,நாட்டில் தினமும் ஏற்படும் டொலர் மாற்றம் காரணமாக விமான நிறுவனங்களுக்கு முன்பதிவு செய்யப்படும் பணத்தினை வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதன் காரணமாக இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் முன்பதிவு என்பனவற்றில் பிரச்சினை ஏ…
-
- 0 replies
- 219 views
-
-
நாடாளுமன்றத்தில் ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே.... கைகலப்பு – சபாநாயகர் அதிரடி அறிவிப்பு. நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தின்போது ஆளும் கட்சி மட்டும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருவருக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து ஐக்கிய மக்கள் சக்தியின் சமிந்த விஜேசிறி மற்றும் பொதுஜன பெரமுனவின் திஸ்ஸ குட்டியாராச்சி ஆகியோரை அவையில் இருந்து வெளியேற்றுவதற்கு சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற நிலையியற் கட்டளை எண் 79ன் கீழ் அவர்களை வெளியேற்றுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார். குறித்த இரண்டு உறுப்பினர்களையும் அவையில் இருந்து வெளியேற்றுவதற்கு வசதியாக நாடாளுமன்ற அமர்வுகள் சிறிது நேரம் இடைநிறுத்தப்பட்டன. https:…
-
- 3 replies
- 252 views
-
-
இலங்கையின்... தற்போதைய நிதியமைச்சர், அலி சப்ரியே – அரசாங்கம் நிதி அமைச்சர் பதவியில் அலி சப்ரி தொடர்ந்தும் நீடிப்பதாக இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் தற்போது நாடாளுமன்றில் இடம்பெற்று வருகிறது. இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நிதியமைச்சரொருவர் இல்லாதமை தொடர்பாக சபையின் கவனத்திற்கு கொண்டுசென்றபோதே இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்தார். அலி சப்ரியின் பதவி விலகலை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால், அவரே நிதி அமைச்சர் பதவியில் நீடிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2022/1275867
-
- 6 replies
- 396 views
-