ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142884 topics in this forum
-
புலம்பெயர் தமிழர்கள், அவர்களின் தாய்நாடான இலங்கையில் முதலீடு செய்யலாம். கடந்த காலங்களில் அவர்கள் இங்கு வந்து முதலீடு செய்ய முயன்று அவர்களுக்கு பாதுகாப்போ அல்லது இதர பிரச்சினைகளோ எதுவும் இருந்து வராமல் போயிருந்தால் அவர்களை இலங்கை வருமாறு நான் அழைப்பு விடுக்கிறேன். அவர்களின் பாதுகாப்பை எமது அரசாங்கம் உறுதி செய்யும். இவ்வாறு நேற்றுத் தமிழன் பத்திரிகையிடம் கருத்துத் தெரிவிக்கும்போது குறிப்பிட்டார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ. தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின்போது, வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான விசேட நிதியமொன்று உருவாக்கம் குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டமை பற்றி கேட்டபோதே மேற்கண்டவாறு கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது, புலம்பெயர்…
-
- 32 replies
- 2k views
- 1 follower
-
-
மீரிஹானையில் இடம்பெறும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, பொது மக்கள் களனியிலும் பொருட்களின் விலை வாசி உயர்வு, தட்டுப்பாடு, மின் வெட்டு போன்றவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஜனாதிபதியை பதவி துறக்குமாறு கோரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. களனி தலுகம பகுதியில் கண்டி வீதியின் குறுக்கே பலகைகளையும் ரயர்களையும் இட்டு கொழுத்தி மக்கள் வீதியின் இரு மருங்கிலும் நின்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் கொழும்பு - கண்டி வீதியூடான போக்குவரத்து களனி தலுகம பகுதியில் தடைப்பட்டுள்ளது. Tamilmirror Online || மீரிஹானையைத் தொடர்ந்து களன…
-
- 0 replies
- 313 views
-
-
ஜனாதிபதி இல்லத்திற்கு முன்பாக தொடரும் போராட்டங்களுக்குப் பின்னர், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கொழும்பின் பல பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு வடக்கு, தெற்கு, மத்திய கொழும்பு, நுகேகொட ஆகிய பிரதேசங்களுக்கு இந்த ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. Tamilmirror Online || உடன் அமலாகும் வகையில்கொழும்புக்கு ஊரடங்குச் சட்டம்
-
- 0 replies
- 253 views
-
-
ஏப்ரல் 15ஆம் திகதி வரை 24 மணிநேர மின்வெட்டு? இலங்கையில் நடைமுறையிலுள்ள முறைசாரா நடைமுறைகள் தொடருமானால் ஏப்ரல் 15ஆம் திகதி வரை 24 மணிநேர மின்வெட்டு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினரான பாட்டலி சம்பிக்க ரணவக்க இந்த எச்சரிக்கையினை அவர் விடுத்துள்ளார். மருந்து, உணவு, எரிவாயு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1274148
-
- 1 reply
- 224 views
-
-
கட்டணம் செலுத்தப்படாததால்... இலங்கை கடற்பரப்பிற்குள், நுழைய மறுக்கும்... டீசல் கப்பல்? இலங்கைக்கு அவசியமான டீசலுடன் கப்பல் ஒன்று சர்வதேச கடற்பரப்பில் தரித்து நிற்பதாகவும் கட்டணம் செலுத்தப்பட்டால் மாத்திரம் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய முடியும் என கப்பலின் கப்டன் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்டணம் செலுத்தப்படாததால் அவர் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய மறுப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கப்பலில் எவ்வளவு டீசல் உள்ளது என்பது தெரியவில்லை என தெரிவித்துள்ள அதிகாரிகள், கட்டணம் செலுத்தப்படும் வரை கப்டன் கப்பலை சர்வதேச கடற்பரப்பில் வைத்திருக்கின்றார் எனவும் தெரிவித்துள்ளனர். கப்பலிற்கு கட்டணத்தை செலுத்துவோம் என ஜனாதிபதி உறுதியளித்…
-
- 2 replies
- 312 views
-
-
வரலாற்றில் முதன்முறையாக வெளிநாட்டு நாணயமான குவைத் தினார் ஒன்றின் பெறுமதி 1000 ரூபாவை கடந்துள்ளது. இதன்படி, தனியார் வங்கிகளில் குவைத் தினார் ஒன்று 1001.70. ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேவேளை ஏனைய மத்திய கிழக்கு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாய் மதிப்பும் சரிந்துள்ளது. பஹ்ரைன் தினார் ஒன்றின் பெறுமதி 797.33 ரூபாவாகவும் ஓமான் ரியால் ஒன்றின் பெறுமதி 785.59 ரூபாவாகவும் கட்டார் ரியால் ஒன்றின் பெறுமதி 83.98 ரூபாவாகவும் சவூதி அரேபிய ரியால் ஒன்றின் பெறுமதி 84.24 ரூபாவாகவும் ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் ஒன்றின் பெறுமதி 84.87 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. முதன்முறையாக வெளிநாட்டு நாணயத்தின் பெறுமதி ஆயிரத்தை கடந்தது | Virakesari.lk
-
- 0 replies
- 204 views
-
-
தமிழ் அரசியல்வாதிகள்... மக்களை காப்பாற்றுவதற்காக, செயற்படவில்லை – எஸ்.ஸ்ரீசற்குணராஜா தமிழ் அரசியல்வாதிகள் அடுத்த மாகாணசபை தேர்தலுக்கு எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் சிந்திக்கிறார்களே தவிர தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காக செயற்படவில்லை என யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.ஸ்ரீசற்குணராஜா தெரிவித்துள்ளார். தந்தை செல்வாவின் 124 வது ஜனன தின நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் பிச்சைக்காரர்கள். கிளிநொச்சி மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகள் காணப்படுகின்றார்கள் ஆனால் எமது அரசியல் வாதிகளிடம் அவர்களுக்கு உதவுவதற்கு எந்த ஒரு திட்டமும் இல்லை நிகழ்ச்…
-
- 1 reply
- 250 views
-
-
ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்ய திட்டம் நாட்டுக்கு தேவையான அளவு நிலக்கரியை ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார். இதற்கான தீர்மானங்கள் அரசாங்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார் எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்கு பின்னரே மீண்டும் நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்படும். ஏப்ரல் மாதம் வரை இறக்குமதி செய்ய வேண்டிய நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கு நாணய கடிதம் விடுவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கான கட்டணம் செலுத்தப்பட்டு வருவதாகவும் மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவ…
-
- 0 replies
- 236 views
-
-
யாழ். கொரோனா சிகிச்சை நிலைய... மோசடி குறித்து, விசாரணை செய்யுமாறு பிரதமர் பணிப்பு! யாழ். கொரோனா சிகிச்சை நிலையங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பணித்துள்ளார். வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அவர்களை இன்று (வியாழக்கிழமை) தொடர்புகொண்டு இவ்விடயம் தொடர்பில் உடனடி கவனம் செலுத்துமாறு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். யாழ். மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மூன்று இடைத்தங்கல் முகாம்களில் காணப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் மாயமாகியிருந்தமை கணக்காய்வு அறிக்கையில் அம்பலமாகியது. வடமாகாண சுகாதார அமைச்சு மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரின் கண்காணிப்பில் …
-
- 0 replies
- 236 views
-
-
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு... மீண்டும் 5,000 ரூபாய்! குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவாக 5,000 ரூபாவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மாதாந்தம் 5,000 ரூபாய் வீதம் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாதங்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. அடையாளம் காணப்பட்ட, குறைந்த வருமானங்களை பெறும் 31 இலட்சம் குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவானது வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1273764
-
- 9 replies
- 1.1k views
- 1 follower
-
-
தங்களுக்கு தாங்களே கைகளை வெட்டிக்கொள்ளும் மாணவர்கள் - கிளிநொச்சியில் சம்பவம் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் சுமார் 20 மாணவர்கள் பிளேட்டினால் தங்களது கைகளை தாங்களே வெட்டிக்கொண்டுள்ளதாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் தரம் ஒன்பதில் கல்வி பயிலும் மாணவர்கள் பலர் பிளேட்டினால் தங்களது கைகளை தாங்களே வெட்டியுள்ளனர். பின்னர் குருதியினை கடதாசி மூலம் துடைத்துவிட்டு கிருமி தொற்று நீக்கி திரவத்தை (சானிடைசர்) காயத்தின் மேல் தெளித்து கொண்டதாக நேரில் பார்த்த சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை குறித்த மாணவர்கள் சாதரணமாக செய்து கொள்வதாகவும், ஒருவருக்கு ஒருவர் பார்த்து வெட்டிக்கொண்டதன் மூலமே வெட்டியவர்களின் எண்ணிக்கை அ…
-
- 0 replies
- 121 views
-
-
ஜனாதிபதி மாளிகை, நாடாளுமன்றம் உள்ளடங்களாக... 191 இடங்களுக்கு மின்வெட்டு இல்லை! ஜனாதிபதி மாளிகை மற்றும் நாடாளுமன்றிற்கு தொடர்ச்சியாக மின்சாரம் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் இன்றைய தினம்(வியாழக்கிழமை) 13 மணித்தியாலங்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது. இந்தநிலையில் சுதந்திர வர்த்தக வலயங்கள், மின்சார நிலையங்களை அண்டிய பகுதிகள், கைத்தொழில் பேட்டைகள் உள்ளிட்ட நாட்டின் 191 இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள பட…
-
- 0 replies
- 190 views
-
-
தொடர் மின்வெட்டு – இணைய சேவைகள் பாதிப்பு! தொடர் மின்வெட்டு காரணமாக சில பகுதிகளில் தொலைத்தொடர்பு கோபுரங்களில் சமிக்ஞை கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது. தொலைத்தொடர்பு கோபுரங்களில் மின்சாரம் தடைப்படும் போது ஜெனரேட்டர்களுக்கு டீசல் கிடைக்காததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார். இதனால், தொலைத்தொடர்பு கோபுரங்கள் செயல்படாமல் இருப்பதுடன், அந்தந்தப் பகுதிகளில் இணைய சேவையைப் பெறுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளன. இந்தநிலையில் ஒவ்வொரு தொலைத்தொடர்பு கோபுரத்திற்கும் டீசல் விநியோகம் செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் …
-
- 0 replies
- 161 views
-
-
பொதுமக்களின் கருத்துகளை... அனுமதிக்காத ஜனாதிபதியாக, கோட்டா காணப்படுவதாக கடும் விமர்சனம்! தற்போது கோபத்தை பிரதிபலிக்கும் வகையில் பேஸ்புகில் அதிகரித்து வரும் பொதுமக்களின் கருத்துகளை அனுமதிக்காத ஜனாதிபதியாகவும் அரசியல்வாதியாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காணப்படுகின்றார் என சமூக ஊடக ஆய்வாரான சஞ்சன கத்தொடுவ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பேஸ்புக் பதிவுகளுக்கு கருத்து தெரிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு மில்லியனுக்கும் அதிக பின்பற்றுனர்களைக் கொண்ட இந்த பேஸ்புக் பக்கத்தில், கருத்து தெரிவிப்பதற்கு நேற்று (புதன்கிழமை) மாலை முதல் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ள பதிவிலேயே அ…
-
- 0 replies
- 133 views
-
-
மின்தடை, டீசலுக்கு தட்டுப்பாடு – பல தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டன! டீசல் தட்டுப்பாடு காரணமாக பல தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. மின்வெட்டு ஏற்படும் பட்சத்தில் ஜெனரேட்டர்கள் மூலம் தொழிற்சாலைகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள போதிலும் டீசல் கிடைக்காததால் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுவாக இலைகளை தொழிற்சாலை கிரைண்டர்களில் போட்டு ஒரே நேரத்தில் அரைக்க வேண்டும். எனினும், அவ்வப்போது ஏற்படும் மின் தடையால் தங்களது பணிக்கு இடையூறு ஏற்படுவதாக தோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் கலந்துரையாடி தேயிலை தொழிற்சாலைகளுக்கு தேவையான எரிபொருளை விஷேட முறையின் கீழ்…
-
- 0 replies
- 133 views
-
-
எரிபொருளை தாங்கிய... மற்றுமொரு கப்பல், இன்று நாட்டிற்கு வருகின்றது! எரிபொருளை தாங்கிய மற்றுமொரு கப்பல் இன்று(வியாழக்கிழமை) இலங்கையை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கடன் எல்லை வசதியின் கீழ், எரிபொருளை தாங்கிய 4 ஆவது கப்பல் இவ்வாறு நாட்டை வந்தடையவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. https://athavannews.com/2022/1274104
-
- 0 replies
- 112 views
-
-
இலங்கைக்கு தேவையான மருந்துகளை... தொடர்ச்சியாக வழங்குமாறு, உலக வங்கியிடம் கோரிக்கை! இலங்கைக்கு தேவையான மருந்துகளை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்வதற்காக ஒத்துழைப்பு வழங்குமாறு இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன உலக வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். உலக வங்கியின் தெற்காசிய வலயம் தொடர்பான பணிப்பாளர் லினோ ஷேர்பன் பென்ஸ் உள்ளிட்ட விசேட பிரதிநிதிகளை நேற்று(புதன்கிழமை) சந்தித்து பேசிய போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். நாட்டிற்கு முன்னுரிமை அடிப்படையில் ஒளடதங்களை வழங்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதாக உலக வங்கியின் பிரதிநிதிகள் இதன்போது தெரிவித்தனர். அத்துடன், இலங்கையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் வெற்றிகரமாக இடம்பெறுவதை உலக வங்கியின் தெற்காச…
-
- 0 replies
- 138 views
-
-
மின்வெட்டு காரணமாக... கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகளிலும் பாதிப்பு! நாளாந்த வர்த்தக காலத்தை 2 மணிநேரமாக மட்டுப்படுத்த கொழும்பு பங்குச் சந்தை தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் நிலவும் மின்வெட்டு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்றும் (வியாழக்கிழமை) நாளையும் காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மாத்திரம் பங்குச் சந்தை நாளாந்த வர்த்தகத்திற்காக திறந்திருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1274106
-
- 0 replies
- 103 views
-
-
தந்தை செல்வாவின்... 124 ஆவது ஜனன தினம், யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிப்பு! இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.ஜெ.வி செல்வநாயகத்தின் (தந்தை செல்வா) 124 வது ஜனன தினம் இன்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவிடத்தில், தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து, நினைவுத் தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தந்தை செல்வா அறக்கட்டளை நிலையத்தின் தலைவரும் தென்னிந்தியத் திருச்சபையின் முன்னாள் பேராயருமான சுப்பிரமணியும் ஜெபநேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.சுகிர…
-
- 0 replies
- 112 views
-
-
இலங்கையில் எரிபொருள் பாவனை... கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 30 – 35 சதவீதம் அதிகரிப்பு! இலங்கையில் எரிபொருள் பாவனை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 30 – 35 சதவீதம் அதிகரித்துள்ளது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார் 2021 ஜனவரிக்குள் 139,000 மெட்ரிக்தொன் எரிபொருள் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், 2022 ஜனவரியில் எரிபொருளின் பயன்பாடு 198,000 மெட்ரிக் தொன்னாக அதிகரித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். வழக்கத்திற்கு மாறான பாவனையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த சுமித் விஜேசிங்க, அவ்வாறு அதிகரிப்பதற்கான காரணத்தை ஆராய வேண்டும் எனவும் கு…
-
- 0 replies
- 106 views
-
-
உணவுகளை... நுகர்வோரின், எண்ணிக்கை 50 சதவீதத்தினால் வீழ்ச்சி! உணவு பொருட்களுக்கான விலை அதிகரித்தமையை அடுத்து உணவுகளை நுகர்வோரின் எண்ணிக்கை 50 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது. உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். மின்சார துண்டிப்பும் இந்த விடயத்தில் தாக்கம் செலுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2022/1274089
-
- 0 replies
- 224 views
-
-
பருப்பு, சீனி என்பவற்றின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளதாக தகவல்! அத்தியாவசிய உணவு பொருட்கள் அடங்கிய 600 கொள்கலன்கள் தொடர்ந்தும் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக அத்தியாவசிய உணவு பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரிசி, சீனி, மற்றும் பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுகளே இவ்வாறு தேங்கியுள்ளதாக அந்த சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். பருப்பு மற்றும் சீனி என்பவற்றின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2022/1274093
-
- 0 replies
- 111 views
-
-
மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த... ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர விடுதலை மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர விடுதலை செய்யப்பட்டுள்ளார். பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மேலும் இருவர் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் பிரேமலால் ஜயசேகரவிற்கு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. இரத்தினபுரி – காஹவத்தை பகுதியில் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசார கூட்டத்தின் போது, துப்பாக்கி சூட்டு சம்பவமொன்றில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.…
-
- 0 replies
- 123 views
-
-
இந்தியாவினால் மீனவர்களுக்கு என வழங்கிய பொதிகளை அரசியல் கட்சி தமக்குள்ள பகிர்ந்ததாக குற்றச்சாட்டு March 31, 2022 இந்திய அரசாங்கத்தால் மீனவர்களுக்கு என வழங்கப்பட்ட உலர் உணவு பொதிகள் மீனவர்கள் பலருக்கு வழங்கப்படாமல் , அரசியல் கட்சி ஒன்றின் பிரதிநிதிகள் , உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுக்கே பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளதுள்ளதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளத்தினர் இது தொடர்பில் தெரிவிக்கையில், இந்திய அரசினால், யாழ்.மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு என தலா 5ஆயிரம் ரூபாய் பெறுமதியான 600 உலர் உணவு பொதிகள் இந்திய உயர்ஸ்தானிகரின் பங்குபற…
-
- 1 reply
- 174 views
-
-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக செந்தில் தொண்டமான், தவிசாளராக ரமேஷ்வரன் தேசிய சபையில் ஏகமனதாக தெரிவு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக செந்தில் தொண்டமானும், தவிசாளராக நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரனும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபைக் கூட்டம் இன்று முற்பகல் கொட்டகலையிலுள்ள சி.எல்.எவ் வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் ஆரம்பத்தில் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் உட்பட உயிரிழந்த கட்சி செயற்பாட்டாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், பிரமுகர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின்னர் காங்கிரஸின் முக்கிய பதவிகளுக்கான தேர்வுகள் இடம்பெற்றன. இதன்போது தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு செய்யப…
-
- 0 replies
- 115 views
-