Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்கா படையினரின் போர் நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்து அவலப்படும் மக்களுக்கு பொருளாதார வளம் கொண்டவர்கள் மற்றும் உதவி அமைப்புக்கள் உதவ முன்வர வேண்டும் என கிளிநொச்சி செஞ்சிலுவைச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 363 views
  2. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துவரும் யுவதிகள்இ இளைஞர்களை கைது செய்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களிலுள்ள யுவதிகள் மீது இராணுவ உயர் அதிகாரிகள் பாலியல் வல்லூறவு மேற்கொண்டுவருவதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் இளம் யுவதிகள் மற்றம் இளைஞர்கள் சுமார் 75க்கும் மேற்பட்டவர்களை இராணுவம் கைது செய்து கிளிநொச்சி வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை இராணுவ வைத்தியசாலையாக செயற்பட்டுவரும் நிலையில் இளைஞர்இ யுவதிகள் தடுத்து வைக்கப்பட்டு பாலியல் வல்லூறவுகள் மேற்கொள்ளப்பட்ட…

  3. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தனில் இடம்பெயர்ந்து கொண்டிருந்த பொதுமக்களின் உழுவூர்தி மீது சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 670 views
  4. இடம்பெயர்ந்து மீளக்குடியமராதோர் பதிவு செய்ய வேண்டுகோள்! யாழ். மாவட்டத்தில் மோதல்களினால் இடம்பெயர்ந்து மீளக்குடியமராத மக்கள் தங்களை உடனடியாக பதிவு செய்ய வேண்டுமென வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தால் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் பாவனையிலுள்ள தனியார் காணிகளில் மீளக்குடியமராத குடும்பங்களின் விபரங்களை பெற்றுக்கொள்வது தொடர்பாக கேட்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார். பகுதியளவில் விடுவிக்கப்பட நகுலேஸ்வரம், காங்கேசன்துறை மேற்கு, காங்கேசன்துறை மத்தி, காங்கேசன்துறை தெற்கு, கட்டுவன், குரும்பசிட்டி இகுரும்பசிட்டி கிழக்கு, வசாவிளான் கிழக்கு, வசாவிளான்…

    • 1 reply
    • 510 views
  5. இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் உள்ள இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள முகாம்களில் வாழும் சிறுவர்களில் 25 விகிதமானவர்கள் போசாக்கு குறைந்தவர்கள் என ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக யுனிசெஃப்பின் பேச்சாளர் ஜேம்ஸ் எல்டர் தெரிவித்துள்ளதாவது: இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களில் தங்கியுள்ள மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் ஐந்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்களில் 25 விகிதமானவர்கள் போசாக்கு குறைந்தவர்களாக காணப்படுகின்றனர். கடந்த மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலேயே இந்த தகவல் பெறப்பட்டுள்ளது. ஆனால், தற்போது அது மேலும் அதிகமாக இருக்கலாம். புதிய ஆய்வுகளின் தகவல்கள் இன்றுவ…

    • 0 replies
    • 420 views
  6. இடம்பெயர்ந்துள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு ஆறு மாதங்களில் தீர்வு; ஜனாதிபதி உறுதி [ Monday,21 December 2015, 03:00:37 ] வட மாகாணத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் பிரச்சினைகளை ஆறு மாதங்களில் தீர்த்துவைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி அளித்துள்ளார். யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம் ஆண்டகையின் தலைமையில், கிறிஸ்தவ மத விவகார அமைச்சின் ஏற்பாட்டில் யாழ். மாநர சபை மைதானத்தில் நடைபெற்ற தேசிய நத்தார் தின விழாவில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இடம்பெயர்ந்துள்ள மக்களின் பிரச்சினைகைளை தீர்ப்பதற்காக விசேட செயலணியொன்றை உருவாக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.…

  7. இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள் - SEDOT தமிழர் தாயகப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்ற சிறிலங்காப் படைகளின் எறிகணை வீச்சினால் இடம்பெயர்ந்து மரங்களின் கீழ் பல்வேறு இன்னல்களுக்கும் மத்தியில் அன்றாட வாழ்வைக்களித்து வருகின்றனர். இவர்களின் இன்னலைப் போக்க புலம்பெயர் வாழ் மக்கள் அவசரமாக உங்கள் கரங்களை நீட்டி பசியோடு இருக்கும் பாலகரையும் உறவுகளையும் காப்பாற்றுங்கள் இதேவேளை இந்த வேண்டு கோளிற்கு இணங்க சமூகப்பொருளாதார அபிவிருத்தி நிறுவனம் (SEDOT) தற்போது இடம்பெயர்ந்து வன்னியில் நிற்கதியாக நிற்கும் எம் உறவுகளுக்கு புலம்பெயர் விடுத்த அவசரக் கரம்கொடுங்கள் என்ற திட்டத்திற்கு அமைவாக பேர்ன் ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர் ஆலயம் அறோ முர…

  8. இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு ஒரு சந்தர்ப்பம்! _ வீரகேசரி இணையம் 10/23/2011 10:34:35 AM சம்பூர் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து தற்போது நலன்புரி நிலையங்களிலும் உறவினர் மற்றும் நண்பர்களுடன் தங்கியுள்ள குடும்பங்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 பேர்ச்சஸ் காணியும் அரை நிரந்தர வீடு ஒன்றும் ஆரம்பத்தில் வழங்கப்படும் என்று திருகோணமலை மாவட்ட செயலகம் 'சம்பூர் பிரதேசத்திலிருந்த இடம்பெயர்ந்த மக்களுக்கான அன்பான வேண்டுகோள்" என்ற தலைப்பிலான அறிவித்தலில் தெரிவித்துள்ளது. அரசினாலும் பிரதேச செயலாளரினாலும் உங்களை மீளக்குடியமர்த்துவதற்காக சீதனவெளி, வேம்படித் தோட்டம், இளக்கந்தை, வீரமாநகர் வடக்கு, தங்கபுரம் குறவன்வெட்டுவான் ஆகிய பகுதிகளே தெரிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பிரதேசங்…

  9. இலங்கையின் போரினால் இடம்பெயர்ந்துள்ள சுமார் மூன்று லட்சம் பேரின் நிலைமை மிகவும் துயரமானதாக உள்ளது எனவும் அவர்கள் விரைவில் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் என யாழ் ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கண்ணிவெடிகள் அகற்றப்படல், வீடுகள் மீண்டும் மீளமைக்கப்படுதல்,, சீர்குலைந்துள்ள உட்கட்டமைப்பைச் சீர்படுத்துதல் போன்ற பணிகள் செய்யப்பட வேண்டியிருந்தாலும் இடம்பெயர்ந்தோரை தங்கள் வீடுகளுக்குத் திருப்பி அனுப்பும் காலக்கெடுவை அரசு தள்ளிப்போடுவதற்குரிய காரணம் புரியவில்லை எனவும் ஆயர் கூறியுள்ளார். இந்த இடம்பெயர்ந்த மக்களில் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் அரசு அமைத்துள்ள ஆறு முகாம்களில் வாழ்வதாகவும், இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள இவர்க…

    • 14 replies
    • 1.2k views
  10. இடம்பெயர்ந்துள்ள வன்னி மக்களுக்காக இந்து சமயப் பேரவை நிவாரணங்கள் கோரிக்கை : யாழ் மாவட்டத்தில் வன்னியில் இடம்பெயர்ந்து தங்கியுள்ள முகாம்களில் அரசினாலும் ஏனைய அரச சார்பற்ற நிறுவனங்களாலும் வழங்கப்படும் உதவிகள் போதாமல் இருப்பதால் அவர்களுக்கு மேலதிக உதவிகள் தேவைப்படுவதாக யாழ்ப்பாணம் இந்து சமயப் பேரவை அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஊடகங்களுக்கு அது செய்திக்குறிப்பினை விடுத்துள்ளது. இதன் பிரகாரம் நல்லை ஆதின முதல்வரும் இந்து சமயப் பேரவையின் காப்பாளருமான ஸ்ரீல ஸ்ரீ ஞானசம்பந்தர் தலைமையில் கடந்த 5ம் திகதி இடம்பெற்ற இந்து சமய அமைப்புக்களின் ஒன்றியக் கூட்டத்திற்கமைவாகவே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தீர்மானத்திற்கமைவாக வன்னியிலிருந்து யாழ் மாவட்டத்திற்கு …

    • 0 replies
    • 584 views
  11. ஞாயிறு 02-12-2007 16:27 மணி தமிழீழம் [மயூரன்] இடம்பெயர்ந்துள்ளவர்களை மீளகுடியமர்த்த அழுத்தம் - கண்காணிப்புக்குழு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுரில் இடம்பெயர்ந்துள்ள பொதுமக்களை தமது சொந்த இடங்களில் மீள குடியமர்த்துவதற்கு அழுத்தங்களை பிரயோகிப்பதாக தெரியவருகிறது. இராணுவ நடவடிக்கை காரணமாக அண்மையில் கைப்பற்றிய பிரதேசங்களில் கடத்தல்கள், கப்பம் அறவீடு, கொலைகள் போன்றவை அதிகரித்துக் காணப்பட்டதையடுத்து மக்கள் தமது சொந்த இடங்களுக்கு செல்ல அச்சம் தெரிவித்து வருகின்றனர். எனினும் சிறீலங்கா அரசு அவர்களது விருப்பத்திற்கு மாறாக அவர்களை மீளகுடியமர்த்த வற்புறுத்தி வருவதாக போர்நிறுத்த கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;uca…

  12. வவுனியா, மன்னார் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் மோதல்கள் உக்கிரமடைந்துள்ள நிலையில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு வழங்குவதற்கு அவசரமாக 11 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 687 views
  13. வவுனியாவிலுள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் வைக்கப்பட்டுள்ள இரண்டரை இலட்சத்துக்கும் அதிகமான மக்களுடைய நடமாடும் சுதந்திரம் மீள வழங்கப்பட வேண்டும் என்பதுதான் தற்போதைய நிலையில் உடனடிக் கவனத்துக்குரிய விடயமாக இருக்கின்றது எனத் தெரிவித்திருக்கும் ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர், முகாம்களிலுள்ள மக்களை விடுவிக்கும் செயற்பாடுகள் மிகவும் மெதுவாக நடைபெறுவதையிட்டு தாம் தொடர்ந்தும் மிகவும் கவலையடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். சிறிலங்காவுக்கான மூன்று நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு இடம்பெயர்ந்த மக்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள முகாம்களையும் நேரில் சென்று பார்வையிட்ட ஐ.நா. செயலாளர் நாயகத்தின் இடம்பெயர்ந்த மக்களின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான பிரதிநிதி வோல்டர் கெலினே தனத…

  14. போரினால் இடம்பெயர்ந்த மக்களைத் துரிதமாக மீளக்டியமர்த்துவதற்கு அரசாங்கம் அதிகளவு முன்னுரிமை கொடுத்துவருவதாகத் தெரிவித்த சிறிலங்காவின் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச, கற்பனை செய்வதைவிட இது மிகவும் கடினமான இலக்கு எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற ஆசிய ஒத்துழைப்பு கலந்துரையாதலின் அமைச்சர்கள் மட்ட மாநாட்டில் பங்குகொண்டு உரையாற்றிய அரசுத் தலைவர், உள்நாட்டில் இடம்பெயர்நத தற்காலிக வசதிகளுடன் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை அவர்களுடைய வீடுகளுக்கு துரிதமாக அனுப்பிவைப்பதே அரசின் முக்கியமான நோக்கம் எனவும் தெரிவித்தார். அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச தனது உரையில் மேலும் முக்கியமாகத் தெரிவித்திருப்பதாவத…

    • 0 replies
    • 354 views
  15. இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு உதவி நிறுவனங்கள் வழங்குகின்ற உதவிகளை பன்மடங்காக அதிகரிக்க வேண்டும் என்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 439 views
  16. இடம்பெயர்ந்தோருக்கு 2,800 மெற்றிக்தொன் உணவு தேவை: உதவி அமைப்பு தெரிவிப்பு [புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2008, 07:46 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்காப் படையினரின் போர் நடவடிக்கை காரணமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இடம்பெயர்ந்து தங்கியுள்ள மக்களுக்கு 2,800 மெற்றிக்தொன் உணவு தேவைப்படுவதாக உதவி அமைப்பொன்றின் புள்ளி விவரம் தெரிவிக்கின்றது. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 2 லட்சத்திற்கு அதிகமான மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள நிலையில் இம்மக்களுக்கான உணவு வழங்கல் நெருக்கடி காணப்படுகின்றது. ஓமந்தை ஊடாக சிறிலங்காப் படையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் உணவுப் பொருட்களை உதவி அமைப்புக்கள் எடுத்து வருவதில் இடர்கள் கா…

    • 0 replies
    • 424 views
  17. இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பாக அனைத்துலக மன்னிப்புச் சபை நேற்றைய நாள் வெளியிட்ட அறிக்கையை நிராகரித்துள்ள சிறிலங்கா அரசு, அது ஆதாரம் அற்றது எனவும் தவறான தகவல்களைக் கொண்டது எனவும் அறிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 289 views
  18. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால் அகதி முகாம்களில் இருந்தே அடுத்த பிரபாகரன் உருவாகக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக சிறிலங்கா அரசுக்கு அந்நாட்டின் கட்சிகளில் ஒன்றான ஜே.வி.பி. எச்சரிக்கை விடுத்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டு இன்று ஒன்றரை மாதங்கள் கடந்துவிட்ட போதிலும், தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காத அரசு, பேச்சுவார்த்தைகளிலேயே காலத்தைக் கடத்திக்கொண்டிருக்கின்றது எனவும் ஜே.வி.பி. குற்றம் சாட்டியிருக்கின்றது. இதனால் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு கிடைத்துள்ள மிகவும் சிறந்த சந்தர்ப்பம் இழக்கப்பட்டு மீண்டும் பிரிவினையை நே…

  19. இடம்பெயர்ந்தோர் முகாம்களிலேயே தொடர்ந்தும் தங்கவைக்கப்பட்டிருக்கும் 26,000 மாணவர்கள் அங்கு அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிகப் பாடசாலைகளிலேயே தங்களது கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்கள் என வட மாகாணக் கல்வித் திணைக்கள அதிகாரி ஒருவர் கூறுகிறார். “தொடர்புடைய அரச அதிகாரிகள், ஆசிரியர்கள், அதிபர்மார் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம் என்பன முழு ஈடுபாட்டுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் செயற்படுவதால் இடம்பெயர்ந்த மாணவர்களால் தங்களது கற்றல் செயற்பாடுகளைத் தங்கு தடையின்றித் தொடர்ந்தும் முன்னெடுக்க முடிகிறது" என கல்வி அமைச்சின் வட மாகாணச் செயலளார் எல். இளங்கோவன் தெரிவித்தார். மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தினமும் இடம்பெற்றுவருதால் இதுவரை 60,000 மாணவர்கள் தங்களது ச…

    • 0 replies
    • 390 views
  20. இலங்கையில் அண்மைய மோதல்களினால் இடம்பெயர்ந்தோருக்கு உதவுவதற்காக 37.5 மில்லியன் டொலர் நிதி உதவி வழங்க ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐ.நா. அமைப்புகள் சார்பில் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. தலைமைச் செயலகம் மற்றும் ஜெனீவா அலுவலகங்களினூடாக இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. "அவசரமான மனிதாபிமான உதவி இது" என்று ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான பிரிவின் ஒருங்கிணைப்பாளர் ரசீத் கலிக்கொவ் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் முதல் 2 மில்லியன் மக்கள் இலங்கையில் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த எண்ணிகையானது மேலும் உயரும்" என்று ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களில் பெரும்பாலானோர் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தங்க…

  21. படையினரின் நடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்ந்து கிளிநொச்சிப் பகுதிகளில் தங்கியுள்ள மக்களுக்கு கிளிநொச்சி அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம் உடனடி உதவிகளை வழங்கி வருகின்றது. சமைத்த உணவுகள் வீட்டுப்பாவனைப்பொருட்கள் என்பன தற்பொது கிளிநொச்சிப்பகுதிகளில் தங்கியுள்ள 100 வரையான குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய மக்களுக்கும் பிற அரசசார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து அவசர உதவிகளை மேறகொண்டு வருவதாகவும் அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம் தெரிவித்தள்ளது. கடந்த சில நாட்களாக இடம்பெயர்ந்த மக்களில் கிளிநொச்சி உருத்திரபுரம் புதுமுறிப்புப் பகுதிகளில் தங்கியுள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. http://www.tamilwin.com/view.php?2aIWnVe0d...d436QV3b02ZLu2e

  22. இடம்பெயர்ந்தோரை மன்னாரில் தங்கவைப்பது குறித்து நடந்த கலந்துரையாடலில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு வீரகேசரி இணையம் 4/23/2009 4:37:01 PM - வன்னியில் இடம்பெற்றுவரும் மோதல் காரணமாக தற்பொழுது பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியான ஓமந்தை மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளுக்கு வந்துள்ளனர். இம்மக்களை மன்னார் மாவட்டத்தில் தற்காலிகமாகத் தங்க வைப்பது தொடர்பான அவசர கலந்துரையாடல் ஒன்று இன்று வியாழக்கிழமை மன்னார் மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில், அரச அதிபர் ஏ. நிக்கலஸ்பிள்ளை தலைமையில் நடைபெற்றது. கலந்துரையாடலில் இராணுவ, கடற்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் சுமார் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இவ்விசேட கலந்துரையாடலின் போது செய்…

    • 1 reply
    • 568 views
  23. இடம்பெயர்ந்து வரும் அப்பாவித் தமிழ் மக்களைச் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்படும் நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டுமென சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.வடக்கில் இடம்பெற்று வரும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த 400க்கும் மேற்பட்ட சிவிலியன்களை அரசாங்கம் நியாயமற்ற ரீதியில் தடுத்து வைத்திருப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. 2008ம் ஆண்டு மார்ச் முதல் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து இடம்பெயரும் மக்களை சமூக நலத்திட்டங்கள் என்ற போர்வையில் பலவந்தமாக தடுத்து வைத்துள்ளது. இலங்கை இராணுவப்படையினர் குறித்த இடம்பெயர்ந்த மக்கள் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக நாளொன்றுக்கு 30 பேருக்க…

    • 0 replies
    • 551 views
  24. புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ் மற்றும் வேற்றின மருத்துவர்களைக் கொண்ட குழுவினர் யாராவது இடம்பெயர்ந்த மக்களின் முகாம்களுக்கு சேவையாற்றச் செல்லவிருக்கின்றார்களா? தயவுசெய்து முடிந்தால் அறியத்தாருங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.