Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பயங்கரவாத தடைச்சட்டத்தின் பாதகத் தன்மை சிங்கள மக்களுக்குப் புரியாது - ஹர்ஷடி சில்வா (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிங்கள மக்கள் யாரும் கைதுசெய்யப்படாததால் அதன் பாதக தன்மை சிங்கள மக்களுக்கு தெரியாது என எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை 22 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச் சட்டமூல இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், பயங்கரவாத சட்டத்தின் பாதக தன்மை மற்றும் அதன் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள் எவ்வாறான துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர் என்பது தொடர…

  2. இந்தியா வழங்கிய கடனை தேர்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்தத் திட்டம்? இலங்கைக்கு இந்தியா வழங்கிய கடனை தொகையை ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரசாரங்களுக்கு பயன்படுத்தும் ஆயத்தம் இடம்பெறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார். 14,000 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு, ‘ஹோம் சொப்’ என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி, அதற்காக 8 இலட்சம் ரூபாவை வழங்கி, பொதுஜன முன்னணி உறுப்பினர்களுக்கு 2000 ரூபா கூப்பன் மூலம் இந்தியாவினால் வழங்கப்பட்ட ஒரு பில்லியன் கடனை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தும் திட்டமொன்று உள்ளதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டார். http://www…

  3. மூன்று பிரச்சினைகளும் இன்னும் 03 நாட்களில் தீரும் எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார பிரச்சினைகளுக்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் தீர்வு காணப்படும் என கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றிரவு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். Tamilmirror Online || மூன்று பிரச்சினைகளும் இன்னும் 03 நாட்களில் தீரும்

  4. சர்வ கட்சி மாநாட்டில், அரசியல் பேசும் இடமல்ல – கப்ராலை சாடினார் ரணில் – மன்னிப்பு கோரினார் கோட்டா! இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இன்று(புதன்கிழமை) கூடிய சர்வகட்சி மாநாட்டில் அரசியல் பேசியதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடுமையாக சாடியுள்ளார். சர்வகட்சி மாநாட்டினை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய கப்ரால், இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து அரசியல் கட்சிகளுக்கு விளக்கமளித்ததுடன், தற்போதைய நிலைமைக்கு முன்னாள் அரசாங்கம் மீது சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். கப்ராலின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அவரின் குறித்த கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவ…

    • 1 reply
    • 183 views
  5. எரிபொருள் விநியோகத்தை... துரிதப்படுத்துமாறு, நாமல் கோரிக்கை! மக்களை எரிபொருள் வரிசையில் காக்க வைப்பதற்கு இடமளிக்காமல், தேவையான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் விநியோக நிறுவனங்களும் தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். எரிபொருள் விநியோகத்தை துரிதப்படுத்துவதற்கு தேவையான அறிவுறுத்தல்கள் தொடர்பில் ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1272971

    • 3 replies
    • 195 views
  6. நிதியமைச்சரை... நீக்குவது குறித்து, நேற்று ஆளும்கட்சி கூட்டத்தில் கலந்துரையாடப் பட்டதா? நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை பதவியில் இருந்து நீக்குவது குறித்து எவ்வித கலந்துரையாடலும் நேற்று இடம்பெறவில்லை என இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் தெரிவித்தார். பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று ஆளும் தரப்பின் விசேட கூட்டம் இடம்பெற்றது. நிதி அமைச்சரை பதவியில் இருந்து நீக்குவது குறித்து இதன்போது கலந்துரையாடப்படவில்லை என்றும் மாறாக அவரது நடவடிக்கைகள் பாராட்டப்பட்டன என்றும் டி.பி. ஹேரத் தெரிவித்தார். பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்…

    • 1 reply
    • 172 views
  7. அரசின் சர்வகட்சி மாநாடு... பேருந்து போன பிறகு, கை காட்டும் வேலை ஆகும் – வேலு குமார் “அரசின் சர்வகட்சி மாநாடு, பேருந்து போன பிறகு கை காட்டும் வேலை ஆகும்.” என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலு குமார் தெரிவித்தார். கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “இன்றைய அரசாங்கம், ஆரம்பம் முதல் இன்று வரை ஒரு தீர்மானத்தை கூட உரிய நேரத்தில் எடுக்கவில்லை. இன்று நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து நிற்கின்றது. முழு நாடும் கருப்பு சந்தையாக மாறி இருக்கின்றது. மொத்த பொருளாதாரமும்…

  8. ஜனாதிபதிபதி தலைமையில், நடைபெறும் சர்வகட்சி மாநாட்டில்... 26 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதியால் அழைப்பு விடுக்கப்பட்ட சர்வகட்சி மாநாடு தற்போது அலரிமாளிகையில் இடம்பெற்று வருகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட 26 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். எனினும் ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மாநாட்டை புறக்கணித்துள்ளன. https://athavannews.com/2022/1273054

  9. ஜனாதிபதி தலைமையில் சர்வக்கட்சி மாநாடு இன்று – பிரதான கட்சிகள் சில புறக்கணிப்பு! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் சர்வக்கட்சி மாநாடு நடைபெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் குறித்த சர்வக்கட்சி மாநாடு கூட்டப்பட்டுள்ளது. இதற்கமைய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அங்கீகரிக்கப்பட்ட 27 அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், குறித்த மாநாட்டில் பங்கேற்காதிருக்க முக்கியமான சில கட்சிகள் தீர்மானித்துள்ளன…

  10. தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டம் இன்று !! தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு நுகேகொடை நகரில் இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இந்த எதிர்ப்புப் பேரணி நடைபெறவுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளவர்கள் தெல்கந்த முதல் நுகேகொட வரை பேரணியாக செல்ல திட்டமிட்டுள்ளனர். பொதுமக்களுக்கு பாரிய சுமையை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதே தமது நோக்கம் என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கூறினார். அரசாங்கம் மக்களின் இன்னல்கள் தொடர்பாக உணர்வற்ற முறையில் செயற்படுவதாக…

  11. 14 விடயங்களை சுட்டிக்காட்டி... மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்! பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேசிய கொள்கையொன்றை வகுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் எழுதியுள்ளனர். மேலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்களைக் கொண்ட பல தரப்பு மாநாட்டை கூட்டி, நிலையான அபிவிருத்திக்காக திட்டமொன்றை வகுப்பதன் முக்கியத்துவம் உள்ளிட்ட 14 விடயங்களை சுட்டிக்காட்டி இந்த கடிதத்தை அவர்கள் எழுதியுள்ளனர். அந்நியச் செலாவணி நெருக்கடியைத் தணிக்க அடையாளம் காணப்பட்ட முன்னுரிமைகளின் பட்டியலின்படி, அபிவிருத்தித் திட்டங்கள…

    • 4 replies
    • 325 views
  12. உலகளாவிய ரீதியில் முன்னணி சுற்றுலா நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளது. இலங்கையின் அந்நிய செலவாணியை ஈட்டும் துறைகளில் சுற்றுலாத்துறையும் ஒன்றாகும். எனினும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக சுற்றுலாவுக்கு சிறந்த நாடு எனும் சிறப்புரிமையை இலங்கை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொவிட் பெருந்தொற்றுக்கு பின்னர் சுற்றுலாத்துறையினர் வருகை அதிகரித்துள்ளது. பெருமளவு டொலர்களும் வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார். எனினும் நாட்டுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அரசாங்கத்தை கடுமையாக விமர்ச்சிக்க தொடங்கியுள்ளனர். எரிபொருள் தட்டுப்பாடு எரிவாயு நெருக்கடி, மின்சார தடை ஆகிய காரணமாக பெரும் பாதிப்புகளுக்கு உள…

    • 5 replies
    • 443 views
  13. பயங்கரவாதத் தடை... தற்காலிக ஏற்பாடுகள் திருத்த சட்டமூலம் நிறைவேறியது – பிள்ளையான், திலீபன் ஆதரவு !! சிவநேசதுரை சந்திரகாந்தன், திலீபன் ஆகியோரின் ஆதரவுடன் பயங்கரவாதத் தடை தற்காலிக ஏற்பாடுகள் திருத்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு திருத்தங்களுடன் நிறைவேறியது. குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 86 வாக்குகளும் எதிராக 35 வாக்குகளும் நாடாளுமன்றில் கிடைத்தன. இதனை அடுத்து பயங்கரவாதத் தடை தற்காலிக ஏற்பாடுகள் திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 51 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்ததுடன் அச்சட்டம் குறித்து இன்று நாடாளுமன்றில் கடும் அதிருப்தியும் வெள…

    • 4 replies
    • 379 views
  14. ஜி.எல்.பீரிஸின் அமைச்சு பதவியில் மாற்றம் – வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார் ஜனாதிபதி வெளிநாட்டு அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் கையொப்பமிட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 23ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இவ்வாறு வெளிநாட்டு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எவ்வாறாயினும், அவர் மீண்டும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். https://athavannews.com/2022/1272915

  15. பயங்கரவாதத்தின் நவீன அச்சுறுத்தல்களுக்கு தீர்வு காண புதிய சட்டம் வேண்டும் – ரணில் பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இன்றுநாடளுமன்றத்தில் உரையாற்றிய அவர், நவீன பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு தீர்வு காண புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினார். புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டமூலமொன்றை சமர்ப்பிக்கும் போது புலனாய்வு அமைப்பும் நவீனமயப்படுத்தப்பட வேண்டும். புதிய பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உருவாகலாம் என்பதனால் புதிய சட்டத்தை கொண்டுவந்து இவ்வாறான பிரச்சினைகள…

    • 0 replies
    • 195 views
  16. அரசியல் கைதிகளை விடுவிக்க கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் உத்தரவை பெற வேண்டும்! அருட்தந்தை மா.சத்திவேல் நீண்ட காலம் சிறையில் வாடும் அரசியல் கைதிகளை அடுத்த பேச்சு வார்த்தைக்கு முன்னர் விடுவிப்பதற்கான உத்தரவை நடக்கவிருக்கும் ஜனாதிபதிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று (22) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனாத…

    • 0 replies
    • 190 views
  17. வடக்கு கிழக்கு இளைஞர்கள் திட்டமிட்டு திசை திருப்பப்படுகின்றார்கள்… 2009 இற்குப் பின்னர் வடக்கு கிழக்கிலே இளைஞர்களை உரிமை, போராட்ட சிந்தனைகளில் இருந்து மாற்றுவதற்காக திட்டமிட்டு இளைஞர்களைத் திசை திருப்பும் கபடத்தனமான கைங்கரியத்தை அப்போது ஆட்சியில் இருந்த அரசு மேற்கொண்டது. விளையாட்டுகள் மூலம் தான் எமது எதிர்கால சந்ததியை எதிர்கால இளைஞர்களை தப்பான வழியில் இருந்து ஒரு நல்ல வழிக்கு இட்டுச் செல்ல முடியும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார். மட்டக்களப்பு, கொக்குவில் பகலவன் விளையாட்டுக் கழக மைதான பெயர்ப்பலகைக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் நேற்று (21)…

    • 0 replies
    • 204 views
  18. இராஜாங்க அமைச்சரின், வாகனத்தின் மீது... எரிவாயு சிலிண்டரினால், பொதுமக்கள் தாக்குதல்! இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்திற்கு, சமையல் எரிவாயுவுக்காக வரிசையில் காத்திருந்த மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். கேகாலை – ரன்வல புதிய வீதி சந்திக்கு அருகில் இன்று(திங்கட்கிழமை) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கேகாலை மாவட்டத்துக்கான லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் பிரதான விநியோக முகவரான, கனக ஹேரத் இன்று காலை கேகாலை ரன்வல சந்தியின் ஊடாக பயணித்தபோது, எரிவாயுவுக்காக வரிசையில் காத்திருந்த மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் வாகனத்தை செலுத்த முற்பட்டதாகவும், அதன்போது வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் கையில் இருந்த எரிவ…

    • 1 reply
    • 196 views
  19. எரிபொருள் கொள்வனவின் போது... இடம்பெறும் உயிரிழப்புக்கள் : இராணுவத்தை நிறுத்தியது அரசாங்கம் எரிபொருளுக்கான தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்படாததால், அனைத்து பகுதிகளிலும் மக்களும் தொடர்ந்து வரிசையில் இன்றும் காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது. இதுவரை எரிபொருள் வரிசையில் நின்று மூன்று பேரும் தகராறு ஏற்பட்டதால் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதை கண்காணிப்பதற்காக அனைத்து பகுதிகளிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு எரிபொருள் நிலையத்திற்கும் இரு இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்தார். https://athavan…

    • 1 reply
    • 152 views
  20. மகிந்தவிற்கெதிரான போராட்டத்தில் தாக்குதலுக்குள்ளானவா் வைத்தியசாலையில் March 22, 2022 நேற்று முன்தினம் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் வருகைக்கு எதிராக யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது காவல்துறையினாின் தாக்குதலுக்குள்ளான முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். காவல்துறையினருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் இடையில் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்ட போது பேருந்தின் வாசல்படியிலிருந்து காவல்துறை…

  21. பெப்ரவரி மாதம்... நாடாளுமன்ற அமர்வில், கலந்துகொள்ளாத தமிழ் தலைவர்கள் !! கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் ஒருமுறை கூட கலந்துகொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த மாதத்தில் ஒருமுறை கூட கலந்து கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது. அவர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும் அடங்குகின்றனர். மேலும் அமைச்சர் திலும் அமுனுகம, காமினி லொக்குகே ஆகியோரும் குமார வெல்கம ரொஷான் ரணசிங்க, ஜயந்த வீரசிங்க, திரான அலஸ் ஆகியோரும் கலந்துகொள்ளவில்லை. மக்களால் தெரிவு செய்யப்பட்ட குறித்த ப…

  22. இலங்கையில் இருந்து... மீண்டும், இந்தியா நோக்கி... அகதிகள்! இலங்கையில் இருந்து ஆறு பேர் அகதிகளாக இந்தியாவில் அடைக்கலம் கோரியுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் தமிகத்தின் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதிக்கு அருகே உள்ள மணல் திட்டில் இலங்கையைச் சேர்ந்த 6 பேர் இவ்வாறு வந்து இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் ஒரு ஆணும் 2 பெண்களும் 3 குழந்தைகளுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன்,அவர்களை இந்திய கடலோர காவல் படையினர் கரைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1272895

  23. எரிபொருள், எரிவாயு வரிசையில் காத்திருக்கும் மக்களிடம்... மன்னிப்பு கோரினார் இராஜாங்க அமைச்சர்! எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசையில் காத்திருந்து கஷ்டப்படும் மக்களிடம் தாம் மன்னிப்பு கோருவதாக இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். பொலனறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டில் தற்போது பல பிரச்சினைகள் உள்ளன. தற்போது மக்கள் அரசாங்கத்தை தூற்றுகின்றனர். இதுவே உண்மையான விடயம் என்பதோடு அதனை மறைத்து எந்த பயனும் இல்லை. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சரிடம் சென்று எமக்கும் சகல விடயங்களும் சரியாக இடம்பெறுகின…

  24. டிஜிட்டல் தனித்துவ சட்டத்தை.. நடைமுறைப்படுத்த, இந்திய அரசின்... நிதியுதவியைப் பெற்ற தீர்மானம் ! இலங்கைக்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல் தனித்துவ சட்டகத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்திய அரசின் நிதியுதவியைப் பெற்றுக் கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கைக்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல் தனித்துவ சட்டகத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்திய அரசு 300 மில்லியன் இந்திய ரூபாய்களை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது. குறித்த உதவியைப் பெற்றுக்கொள்வதற்காக இருதரப்புக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ள குறித்த புரிந்துணர்வு ஒப்பந்த வரைபுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்…

  25. கடன் மறுசீரமைப்பிற்காக... அமெரிக்காவை, நாடுகின்றது அரசாங்கம் ! கடன் மறுசீரமைப்பிற்காக அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு சட்ட நிறுவனத்தை இலங்கை நாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்திருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. https://athavannews.com/2022/1272879

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.